episode 3
ஸ்டாஃப்ரரூமில் முகிலன் பயங்கர கோபத்தில் இருந்தான். "இந்த கௌதம் வரட்டும் இருக்கு அவனுக்கு எனக்கு அந்த ஸ்டாஃபோட பேரு கூட தெரியலை ," என்று தனக்குள் புலம்பிய வேளை ,
"எக்ஸ்கியூஸ் மீ சார் ,"என்ற மென் குரல் கேட்டு "யெஸ் ப்ளீஸ் " என்று திரும்பியவன் அங்கு நின்றிருந்த மலரை கண்டு உரைந்து நின்றான்.
அப்படி உரைந்து நின்றது ஒரு நொடி தான் மிக வேகமாக தன்னை மீட்டெடுத்த இருவரும் இயல்பு நிலை அடைந்தனர்.
"நீங்க மிஸ்...? " என்று கேட்ட முகிலனை இடைமறித்து முறைத்த மலர்," மலர்வதனி ,இங்க புதுசா சேர்ந்திருக்கிற ஃபிசிக்ஸ் லெக்சரர்,"என்று அலட்சியத்துடன் கூறினாள்.
"ஓ...சரி..சரி ,ம..ல..ர்..வ..த..னி..,"ஒவ்வொரு எழுத்தாக அவளது பெயருக்கு வலிக்குமோ என்பதுபோல மிருதுவாக கூறியவன் மேலும் தொடர்ந்து,"வெல்கம் டூ தி ஃபிசிக்ஸ் டிபார்ட்மென்ட்,"என்று கூறி புன்னகைத்து கைநீட்ட, அவனது கைகளை பற்றாமல் அவற்றை வெறித்து பார்த்த மலர் ,"மிக்க நன்றி ஐயா,"என்று நாடக பாணியில் சிறு முறுவலிப்புடன் கைகள் கூப்பி முடித்துக்கொள்ள முகிலனின் முகம் கோபத்தில் இறுகியது.
இறுகிய முகிலனை ஓரக்கண்ணால் கண்ட மலர் மனதிற்குள் குதூகலம் கொள்ள அவளது எண்ண ஓட்டத்தை புரிந்து கொண்ட முகிலனோ மேலும் தொடர்ந்து ,"நீங்க எந்த சேப்டர்ஸ் எடுக்கனும் உங்களோட டைம்டேபில் எல்லாம் கௌதம் அப்படீங்கிறத ஸ்டாஃப்கிட்டருந்து வாங்கிக்கோங்க," என்று கூற அதற்கு பதில் சொல்லாமல் தலையாட்டிய மலரை பார்த்தவன் மேலும் ஏதும் கூறாமல் தன் இருக்கையில் அமர்நது கொண்டான்.
அங்கே நிலவிய மயான அமைதியை குழைக்க வந்ததுபோல ,"ஹாய் குட் மார்னிங் மச்சி இந்தாடா உன்னோட ஃபைல் ,"என்று கௌதம் உள்ளே நுழைந்தான்.
உள்ளே நுழைந்த கௌதம் மலரின் அழகில் ஒரு நிமிடம் லயித்து நிற்க
பின் தன்னை சமாளித்துக்கொண்டு,"
ஹலோ மலர் நான் தான் கௌதம் சந்திரன் உங்களோட கொலீக் ," என்று நட்பு கரம் நீட்ட ஒரு நிமிட தயக்கத்திற்கு பிறகு தன் கையை நீட்டினாள் மலர்.
வழக்கமான அறிமுகபடலத்தை முடித்த இருவரும் முகிலனை பார்க்க அவனது பார்வையோ மலரிடம் இருந்தது.அதில் அவளை பஸ்பமாக்கிவிடும் கொதிப்பு தெரிய அமைதியாக தன் இடம் சென்று அமர்ந்தாள் மலர்.
இந்த இருவரையும் கவனித்த கௌதமிற்கோ ,என்னமோ சரியில்லை என்று மட்டும் புரிந்தது, மேலும் தனக்குள்ளே,"மலர் நம்ம கிட்ட பேசினதுக்கு இவன் ஏன் காண்டாகுறான். அத பார்த்து மலரும் அமைதி ஆகிட்டாங்க. என்னமோ இருக்கும்போலயே டேய் கௌதமு உன்னோட டிடெக்டிவ் மூளைக்கு வேலை வந்துடுச்சுடா. நீ கண்டு பிடி டா," என்று தனக்கு தானே கூறிக்கொண்டான்.
"டேய் கௌதம்....கௌதம்.... அடேய் ஏன்டா நின்னுகிட்டயே தூங்குரியா? " என்ற முகிலனின் குரலில் தெளிந்த கௌதம் முகிலனிடம் ,"என்னடா கூப்டியா?" என.கேட்டான்" உனக்கு இப்ப கிளாஸ் இருக்கானு கேட்டேன்," என்றான் கடுப்புடன்.
"இல்லடா ஆனா உனக்கு ஃபைனல் இயர் இருக்குள்ள நீ கிளம்பு லேட் ஆயிடுச்சு ," என்று கூறிய கௌதமை நோக்கிவிட்டு மலரை ஒரு முறை முறைத்து விட்டு வேகமாக வெளியேரினான் முகிலன்.
"ஏங்க மலர் உங்களுக்கு முகிலன முன்னாடியே தெரியுமா?" என்று தன் சந்தேகத்தை மறையாமல் மலரிடம் கேட்டான் கௌதம்.
அதிர்ந்த மலர் பின்பு தன்னை சமாளித்து கொண்டு ,"ஏன் கேட்குறீங்க கௌதம் ,"என வினவினாள் .
"சும்மா தான் கேட்டேன்," என்ற கௌதமின் பதிலை கண்டுகொள்ளாத மலர் அவனிடம்," என்னோட டைம் டேபில் போர்ஷன்ஸ் எல்லாம் குடுத்தீங்கனா நான் என்னை தயார்பண்ண வசதியா இருக்கும் ," என்று கூறினாள்.
" ஓ இதோ தர்றேன்," என்று அவளுக்கு தேவையான எல்லாவற்றையும் கொடுத்துவிட்டு தன் இருக்கையில் அமர்ந்தான் கௌதம்.
தன் கேள்விக்கு ஆம் என்றோ இல்லை என்றோ சொல்லாத மலரின் செய்கையை கௌதம் மனம் குறிக்க தவறவில்லை.
இறுதியாண்டு வகுப்பில் நுழைந்த முகிலன் தன் வழக்கமான மிடுக்குடன் எந்த சலனமுமின்றி பாடங்களை நடத்திக்கொண்டிருந்தான்.
தனது மாணவர்களை என்றும் போல் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தான் முகிலன். அவன் வகுப்பு தொடங்கி விட்டால் அங்கே குண்டூசி விழுந்தாலும் கேட்கும் அளவிற்கு அமைதி நிலவும். பாடம் நடத்துவதில் அவனை மிஞ்ச அவனே தான்.
புல்லாங்குழல் இசைக்கு கட்டுப்பட்ட எலிகள் கூட்டமென மதிமயங்கி பாடத்தை கவனிப்பர்.அதே போல் இன்றும் மாணவர்கள் அமைதியாக அவனின் வகுப்பை கவனித்துக்கொண்டிருந்தனர்.
ஸ்டாஃப் ரூமில் இருந்த மலரின் மனதோ பல நாட்களுக்கு பிறகு அமைதி அடைந்திருந்தது. பல தேசம் சுற்றும் நாடோடி தாய்நாடு திரும்பினால் ஏற்படும் அமைதி அது என்பதை பாவம் அந்த பேதை மனம் அறியவில்லை.
மௌனமாக கண்மூடி அமர்திருந்த மலரை பார்த்து கௌதமின் முகத்தில் யோசனை ஓடியது.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro