Episode 29
மலரின் அருகே இருந்த அந்த இருவருக்கும் முத்துராஜின் வீட்டில் நடந்த நிகழ்ச்சிகள் அனைத்தையும் அவர்களுடைய செல்பேசி மிக தெளிவாக ஒளிபரப்பியது.
முத்துராஜின் மூலமாக பலதடவை அவர்கள் குருவைப்பற்றி கேட்டிருந்தாலும் இன்று அவனுடைய ஆக்ரோஷமான கர்ஜனையில் அரண்டு போயிருந்தார்கள்.
முதலில் தெளிந்த முதலாமவன்," அண்ணே நம்ம இப்ப என்ன பண்றது?" என்று வினவினான்.
அதற்கு மற்றவன்," டேய் இப்பவே அரைமணி நேரமாச்சு இந்நேரத்துக்கு நம்ம முத்துராஜ் அய்யாவை அவனுங்க விசாரிச்சுட்டு இருப்பானுங்க ,அதுக்கு அப்பறம் நம்ம இருக்குர இடத்தை கண்டுபிடிச்சு இங்க வர எப்படியும் 2 மணி நேரமாவது ஆகும். நம்ம ஏன் கைல கிடைச்ச பூவை அனுபவிச்சுட்டு விட்டுட்டு போக கூடாது?" என்று அவன் கூறியது தான் தாமதம்," உனக்கு பூ தான மாப்பிள்ளை வேணும் ஒரு பூந்தோட்டத்தை யே உன் பாடைல வச்சு உன்னை வழியனுப்புறேன்." என்று பேசிக்கொண்டே சரமாரியாக அடிக்கத்துவங்கிய குரு வை புரியாத பார்வைபார்த்தான் அவன்.
அவனது பார்வையின் அர்த்தம் புரிந்த குரு," என்னடா இவன் வர எப்படியம் இரண்டு மணி நேரம் ஆகும் னு நினைச்சோமே அப்படி னு தான பார்கிற? சொல்றேன் கேழு உங்க இரண்டு வீட்டையும் முதல்லயே கண்டு பிடிச்சிச்சு ரவுன்ட் அப் பண்ணிட்டு தான் நான் அந்த முத்துராஜ அரெஸ்ட் பண்ண சொன்னேன்." என்றான் மிடுக்காக.
அந்த இருவரையும் போலீஸிடம் ஒப்படைத்துவிட்டு வேகமாக தன்னவளை தேடி உள்ளறைக்குள் சென்றான்.அங்கு பாதி மயங்கிய நிலையில் இருந்த மலரை கண்ட குருவின் மனம் வேதனையில் வாட கைகளோ அவளை கட்டுகளிலிருந்து வேகமாக விடுவித்தது. கண்களை திறக்க முடியாத நிலையிலும் குருவின் தொடுகையை அடையாளம் கண்ட மலர் நிம்மதியுடன் தன்னவனின் மீது மயங்கி சரிந்தாள்.
தன் மனைவியை தன் கைகளில் ஏந்திக்கொண்டு காரின் பின்னால் அவளை கிடத்தி அவளின் மயக்கத்தை தெளிய வைத்த குரு அவளை தன் கையனைப்பில் கொண்டுவந்து அவளிடம்," ஏன்டா இப்படி செஞ்ச? என் கிட்ட சொல்லாம ஏன் போன?" என்று வினவினான்.
மறந்திருந்த சம்பவம் மீண்டும் நினைவுக்கு வர அவனின் அனைப்பிலிருந்து திமிறிய மலர்," விடுடா என்னை , இப்ப எதுக்கு என்னை பார்க்க வந்த , போ போய் உங்க அம்மாகிட்ட . அவங்க மனசுக்கு பிடிச்சமாதிரியே நடந்துக்கோ "என்று கத்தினாள்.
"வதூ கொஞ்சம் அமைதியா நான் சொல்றத கேளுடா"
"முடியாது போ உங்க அம்மா பேசுனதுக்கு என் சார்பா, எனக்காக ஒரு வார்த்தையாவது நீ பேசுனியா?"
"தப்புதான் வதூ .ஆனால் நீ நினைக்கிற மாதிரி அவங்க சொன்னத நான் ஆமோதிச்சதால அமைதியா நிக்கலை, அவங்ககிட்ட இருந்து இப்படி ஒரு பதில நான் எதிர் பார்கலை.அந்த அதிர்ச்சில நான் என்னையும் அறியாம அமைதியாகிட்டேன்."
குருவின் விளக்கத்தை கேட்ட மலர்," அப்ப நிஜமா என்னை நீங்க வெறுக்க மாட்டீங்களே? என்று பயத்துடன் வினவிய மலரை பார்த்த குரு விற்கு நெஞ்சம் பதற அவளை தன்னுடன் சேர்ந்து அனைத்துக்கொண்டான்.
" இல்லைடா உன்னை நான் வெறுக்க மாட்டேன். என் உயிர் இருக்குற வரை உன்னை மறக்கவும் மாட்டேன்."
தங்களை மறந்து அமர்ந்திருந்த இருவரின் மோன நிலையை கலைத்தது , ஷியாமின் குரல்," டேய் இது பப்ளிக்டா கொஞ்சம் அடக்கிவாசி, நாங்களும் இங்க இருக்கோம், சீக்கிரம் சிஸ்சரை வீட்டுக்கு கூட்டிட்டு போகனும்."
அசடு வழிய தன் நண்பனை நோக்கிய குரு," சாரி மச்சான் கொஞ்சம் இமோஷனல் ஆகிட்டேன்.சரி வா நம்ம கிளம்பலாம் ." என்று கூறினான்.
முன் இருக்கையில் அமர எத்தனித்த குருவை தடுத்த ஷியாம்," நீ சிஸ்டர் பக்கத்துலயே இரு. நான் காரை ஒட்டுறேன்." என்று கூறினான்.
தன் நண்பனை நன்றியுடன் பார்த்த குரு மீண்டும் தன்னவளின் அருகே அமர்த்தான்.
முன்னிருக்கையில் ஷியாம் அமர்ந்து காரை செலுத்து பின்னால் சோர்வுடன் குருவின் தோல்களில் சாய்ந்து கண்களை மூடியபடியே வந்த மலர் திடீரென்று ஞாபகம் வந்தவளாய்," ஆமா என்னை கடத்துனது யாரு?என்னை ஏன் கடத்துனாங்க "என்று கேட்டாள்."
"உனக்கு ஆரம்பத்துல இருந்தே சொன்னாதான் புரியும் ," என்று கூறி விவரிக்க தொடங்கினான்.
"என் தங்கை நிறைமதிக்கு முத்துராஜ் னு ஒரு பையன் ப்ரபோஸ் பண்ணிருக்கான். அதுக்கு நம்ம மதி நீங்க எதுவா இருந்தாலும் எங்க அப்பாகிட்ட பேசிக்கோங்கன்னு சொல்லிருச்சு.உடனே அவன் வந்து எங்க அப்பாகிட்ட பேசி இருக்கான், அதுக்கு அப்பா அவனை முதல்ல படிச்சு முடிப்பா , அதுக்கப்பறமா நம்ம இதபத்தி பேசுவோம்னு சொல்லிருக்காரங்க,இவன் நல்ல பையன் மாதிரி வெளிய வந்துட்டான். அவன் பண்ண முதல் தப்பு தன்னோட அட்ரஸ நம்ம ஆபிஸ்ல குடுத்துட்டு வந்தது தான்."
"அதுக்கப்பறம் நம்ம வீட்டில வேலை பார்க்கிற டிரைவர்கிட்ட காசு கொடுத்து நம்ம வீட்டில நடந்த விஷயத்தை அப்பப்ப கேட்டு தெரிஞ்சிகிட்டு இருந்திருக்கான் .
இப்ப அம்மாவும் அப்பாவும் மதியை கூட்டிட்டு சென்னை க்கு வர்றதா இருந்தாங்க, அந்த விஷயத்தை கேள்விபட்ட முத்துராஜ் மதியை கடத்த திட்டம் போட்டு இருக்கான்.ஆனா கடைசி நிமிஷத்துல மதி வரலை இது அந்த டிரைவருக்கு தெரியாததால அவன் முத்துராஜுக்கு தகவல் சொல்லலை. நீ நம்ம வீட்டில இருந்து வெளிய வரவும் உன்னை மதினு தப்பா நினைச்சிட்டாங்க."
இதை கேட்ட மலரிற்கு என்ன கூறுவதென்றே தெரியவில்லை. ஷியாமின் மனமோ மீண்டும் அன்று மாலை நடந்த நிகழ்ச்சிகளை எண்ணத்தொடங்கியது.
அன்று மாலை அவர்கள் அந்த கார் ஷோரூமிலிருந்து பெற்ற முத்துராஜின் முகவரியை அடைந்த போது ஷியாமின் மொபைலிற்கு கன்ட்ரோல்ரூபிலிருந்து கால் வந்தது.அதை எடுத்த
ஷியாம்," ஹலோ ஏ.சி.பி.ஷியாம் ஹியர்(hello acp shyam here)."
கான்ஸ்டபிள்," சார் நீங்க கொடுத்த ஜி.பி.எஸ் நம்பர் ட்ரேஸ் பண்ணியாச்சு . இப்ப அந்த கார் பாண்டிச்சேரிக்கு போற பைபாஸ்ல நிக்குது."
ஷியாம்," ஓ..அப்படியா . சரி நான் அங்க உடனே போறேன்."
தன்னுடைய ஸ்டேஷனிற்கு அழைத்த ஷியாம் வேகமாக அந்த குறிப்பிட்ட முகவரிக்கு வருமாறு உத்தரவுகளை பிறப்பித்தான்.பின் குரு விடம் திரும்பி," மச்சான் அந்த கார் நிக்குர இடம் தெரிஞ்சிடுச்சு, நம்ம இங்க நின்னு நேரத்தை கடத்தாம,அங்க போய் மலர பார்களாம் வா."
குரு," இல்லை ஷியாம் அந்த இடத்துக்கு போலீஸ் ஃபோர்ஸ் அனுப்பிட்டு நாம இந்த வீட்ல யாரு இருக்காங்க னு பார்களாம்." என்று கூறினான்.
குருவின் உறுதியான முடிவை மாற்ற முடியாததால் மேலும் சில காவலர்களை அந்த வீட்டு முகவரிக்கு வருமாறு பணிந்த ஷியாம் , குருவுடன் இணைந்து அந்த வீட்டை சுற்றி ஆராய்ந்தான்.அந்த வீட்டின் பின்புறமிருந்த சுவற்றின் மேல் ஏறி குதித்து சென்ற இருவரும் வீட்டின் உள்ளே சென்றனர்.
அப்பொழுது குருவின் மொபைலில் மெசேஸ் டோன் கேட்க இருவரும் நின்று அந்த மெசேஜை பார்தனர்,அதை அனுப்பியது குரு வின் கோயம்புத்தூர் ஜி.எம் . அதில் முத்துராஜின் புகைப்படமும் முகவரியும் வந்திருந்தது.அதில் உள்ள புகைப்படம் மும் ,கார் ஷோரூமில் வாங்கிய புகைப்படமும் ஒத்துப்போனது.
இருவரும் தங்களின் யூகம் சரிதான் என்ற நம்பிக்கையில் இருந்த போது வீட்டின் உள்ளே பேச்சு சத்தம் கேட்டது.இருவரும் அதை கவனிக்கத்தொடங்கினர்.
முத்துராஜ்," " ஐயா அப்ப இந்த பொண்ண நான் முடிச்சுடவா? " குரலில் வக்கிரம் எட்டிப்பார்க்க கேட்டவனை வேகமாக தடுத்த அவன்," டேய் நீ கடத்திட்டு வந்திருக்குறது குரு வோட மனைவியை அந்த பொண்ணு மேல உன் சுண்டு விரல் பட்டாலும் குரு உன் குடலை உருவி மாலை யா போட்டுருவான். இப்பவே அடிபட்ட புலியா தன் மனைவிய தேடிட்டு இருக்கான். அவன் கைல நீ மாட்டுன மவனே உனக்கு சங்கு தான்."
அதன் பின்பு நடந்த அனைத்தையும் மலரிடம் கூறினான். அவன் கூறிவற்றை கேட்ட மலர் ," அப்ப கார் காணாம் னு கம்லெயின்ட் பண்ண முத்துராஜ் யாரு?"
"அது அவனோட friend.இவனுக்காக வந்து கம்லெயின்ட் மட்டும் குடுத்திருக்கான்.நம்ம வீட்டில உள்ள சிசிடிவில கார் ரெக்கார்ட் ஆகும் னு முன்னாடியே அவனுக்கு தெரிஞ்சிருக்கு,அதனால தன்னோட புது காரை தன் நண்பன் மூலம் காணவில்லை னு போலீஸ் கம்லெயின்ட் குடுக்க வச்சிருக்கான்.ஒரு வேலை நம்ம இந்த காரை பத்தி விசாரிச்சா ஏற்கனவே காணாம போனமாதிரி செட் பண்ணிருக்கான்."
" இதுல அவனோட கெட்ட நேரம் நம்ம ஷோரூம்ல போய் விசாரிச்சது,அவனுக்கே தெரியாம ஜி.பி.எஸ் கார்ல இருக்குறதும் தான்.இதுனால தான் அவன் மாட்டிக்கிட்டான்." என்று நீண்ட விளக்கத்தை கூறி முடித்தான்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro