Episode 27
தன்னுடைய வேலைகள் அனைத்தையும் வெகு சீக்கிரமாக முடித்துக்கொண்டு வீடு திரும்பிய ராஜகுமாரபூபதியை கண்ட அவர் மனைவி ஒரு நிமிடம் தடுமாறி பின்பு தன்னை மீட்டுக்கொண்டார்.
தன் கணவரின் வருகையை அவர் இவ்வளவு சீக்கிரம் எதிர்பார்காதது அவரின் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது. அந்த உணர்வினை படித்த பூபதி ," என்னமா அப்படி பாக்குற?"என்று வினவினார்.
"இல்லைங்க நீங்க பொதுவா சென்னைக்கு வந்தா வீட்டுக்கு வர எப்படியும் 12 மணிக்கு மேல ஆயிடும் ஆனா இன்னைக்கு 8 மணி கூட ஆகலை அதுக்குள்ள வந்துட்டீங்களே னு பார்த்தேன்."
" ஓ அதுவா ஆமா மா இன்னைக்கு எல்லா மீட்டிங்கையும் சீக்கிரம் முடிச்சுட்டு என் மகனையும் , மருமகளையும் பார்களாம் ன வந்தேன்.எங்க அவங்க ரெண்டுபேரும். ரூம்ல இருக்காங்களா?"
"இல்லை அவங்க ரெண்டு பேரும் வீட்ல இல்லை."
"ஓ வெளிய போயிருக்காங்களா?"
"வெளிய தான் போயிருக்காங்க ஆனா திரும்பிவருவாங்களா னு தெரியலை."
" லெஷ்மி நீ கொஞ்சம் புரியுரமாதிரி பேசுனா நல்லா இருக்கும்னு நினைக்கறேன்." இம்முறைஅவரின் குரலில் கடினம் கூடியிருந்தது.
குருவின் அன்னை நடந்தது அனைத்தையும் ஒன்றுவிடாமல் கூறி முடித்தார்.அவர் பேசுவதை அமைதியாக கேட்டுக்கொண்டிருந்த பூபதி ," என்னோட முடிவை மாத்தி அமைக்குற அளவு நீங்க பெரியவுங்க ஆகிட்டீங்களா?"
தன் கணவன் தனக்கு துணையிருப்பார் என்ற அசட்டுத்தனத்தால் தான் செய்த காரியம் தன் கணவனின் கோபத்திற்கு தன்னை ஆளாக்கும் என்று அறியாதவர் அவரிடம் என்ன கூறி சமாதானம் செய்வதென்று புரியாமல் நின்றார்.
" லெஷ்மிமா, உனக்கு ஏன்டா புரியலை, மலர்வதனி நம்மளோட மருமகள்.நம்ம முகிலனோட காதல் மனைவி.அவனோட சந்தோஷமே அவதான்."
"என்னால ஏத்துக்க முடியலங்க. நம்ம அவனோட கல்யாணத்தை எப்படிலாம் பண்ணணும் னு ஆசை பட்டோம்.இப்படி யாரோ ஒருத்திய திடீர் னு கூட்டிட்டு வந்து இவ தான் என் மனைவி னு சொன்னா எப்படீங்க?"
"இல்லைமா அவன் இத வேணும்னே பண்ணல, சந்தர்ப்பமும் சூழ்நிலையும் தான் அவன இந்த முடிவு எடுக்க வச்சிருக்கு,அதுக்காக நம்ம நம்பி வந்த பொண்ண வெளிய அனுப்பலாமா? இதே உன்னோட பொண்ணா இருந்தா நீ போக விட்ருப்பியா?"
தன் கணவனின் வார்த்தைகளை கேட்ட லெஷ்மி தன் மீதுள்ள தவறை உணர்ந்தவராய்," இப்ப அவங்க இரண்டு பேரும் எங்க இருக்காங்க னு கால் பண்ணி கேளுங்க. எனக்கு கொஞ்சம் பயமா இருக்கு."
அவர் கூறி கொண்டு இருக்கும்போதே பூபதியின் மொபைலை ஒளித்தது.அதில் மின்னிய குருவின் எண்ணை கண்டு சிறு ஆசுவாசம் கொண்ட பூபதி கால் ஐ அட்டென்ட் செய்தார் ," சொல்லு மா என்னாச்சு?"
"அப்பா இதுவரைக்கும் கிடைச்ச தடயத்தைவச்சு பார்க்கும் போது ,அவங்க கடத்த நினைச்சது மலர இல்லை நிறைமதி னு தெரியுதுபா."
"என்ன சொல்ற நிறைமதியவா?"
"ஆமா பா அதுனால தான் உங்களுக்கு கூப்பிட்டேன். சமீபத்துல உங்களுக்கு எதாவது மிரட்டல் வந்துசா? இல்லை யாரு மேலயாவது உங்களுக்கு சந்தேகம் இருக்கா?"
" இல்லை முகில் எந்த மிரட்டலும் வரலை. என் பொண்ண கடத்த துணிஞ்சவன் யாரா இருக்கும் னு தெரியல.ஆனால் ஒரு 10 நாளைக்கு முன்னாடி ஒருத்தன் என்னை பார்க்க வந்தான். நிறைமதிய எனக்கு பிடிச்சிருக்கு அவளை கல்யாணம் பண்ணிக்கிறனும் னு ஆசைபடறேன் அப்படீனு சொன்னா. நான் இப்ப அவளுக்கு கல்யாணம் பண்ற எண்ணம் இல்லை ஒரு வேளை அப்படி ஏதாவது எண்ணம் தோனுச்சுனா கண்டிப்பா உன்னை கூப்பட்றேன் னு சொல்லி அனுப்பிட்டேன்."
"ஓ அப்ப அவனோட வேலையா கூட இருக்களாம். அவன் உங்களை எங்க சந்திச்சான்?"
"கோயம்புத்தூர் ல நம்ம லோட கன்ஸ்ரெக்ஷன் ஆஃபிஸ்ல ."
"சரிபா நான் உங்கள திரும்ப கூப்பட்றேன்." என்று கூறி மொபைலை வைத்தான்.
"முகில் என்ன சொன்னான்? இப்ப எங்க இருக்கான்? நிறைமதிய பத்தி என்ன சொன்னீங்க? அந்த பொண்ணு மலர் இப்ப நம்ம முகில் கூடதான இருக்கா?"
அவர் மொபைலை வைக்கும் வரை பொறுமையாக இருந்த லெஷ்மி மேலும் பொறுக்க முடியாதவராய் கேள்விகளை அடுக்கினார்.
" சொல்றேன் ,சொல்றேன், கொஞ்சம் அமைதியா ஒவ்வொறு கேள்வியா கேளு."
என்று கூறி குரு இங்கிருந்த சென்றதிலிருந்து இப்பொழுது குரு கூறியவை வரை அனைத்தையும் கூறினார்.
"என்னங்க சொல்றீங்க யாரோ கடத்திட்டாங்களா? அதுவேம் நம்ம மதிக்கு பதிலா வா.? ஆனால் மதி நம்ம கூட வர விஷயம் அவங்களுக்கு எப்படி தெரியும். அது திடீர் னு தான முடிவு செஞ்சோம் கடைசி நிமிஷத்துல தான் மதி வரலை னு சொன்னா?"
தன் மனைவி கூறியவற்றில் இருந்த நிதர்சனம் அவரையும் உலுக்கியது. அவர் மூளை வேகமாக செயல்பட்டது.
அதே நேரத்நில் குருவும் ஷியாமும் அந்த கார் ஷோரூமை வந்தடைந்தனர்.
இருவரும் உள்ளே சென்று அதன் மேனேஜரை சந்திக்க காத்துக்கொண்டிருந்த நேரத்தில் தான் குரு தன் தந்தையை அழைத்து தனது சந்தேகத்தை தெரிவித்து அவரது விளக்கங்களையும் பெற்றான்.
அவர்களை சந்தித்த அந்த மேனேஜர்," சொல்லுங்க சார் . நான் உங்களுக்கு எப்படி உதவ முடியும்?"என்று வினவினான்.
ஷியாம்," டி என்.456 7,ப்ளாக் இன்னோவா இந்த வண்டியை உங்ககிட்ட இருந்து யாரு வாங்குனது னு நாங்க தெரிஞ்சுக்களாமா?"
"ஓ , தாராளமா எனக்கு ஒரு 5 நிமிஷம் தாங்க நான் பார்துட்டு சொல்றேன்." என்று கூறி தன் முன்னே இருந்த சிஸ்டமில் தேடினார்.
" சார் முத்துராஜ் அப்படீனு ஒருத்தர் தான் இத வாங்கிருக்காரு.அவரோட அட்ரெஸ், இதான்."என்று கூறி ஒரு பேப்பரில் எழுதி கொடுத்தார்.
"என்ன இந்த அட்ரஸா ?நல்லா பாத்து சொல்லுங்க."ஷியாம்.
"ஆமா சார் ,அவரு இந்த அட்ரெஸ் தான் குடுத்துருக்காரு, ப்ரூஃப் கூட இந்த டிரைவிங் லைசன்ஸ் குடுத்திருக்காரு பாருங்க."
அவரிடமிருந்த அந்த லைசன்ஸை பார்த்த இருவரும் திகைத்தனர்.
குரு,"சார் நல்லா யோசனை பண்ணி கொஞ்சம் சொல்லுங்க ப்ளீஸ்.இவரா வந்து உங்ககிட்ட கார் வாங்குனாரு? "
மேனேஜர்," சார் எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு சார். இந்த முத்துராஜ் தான் ப்ளாக் இன்னோவாவ போன வாரம் வந்து வாங்கிட்டு போனாரு."
ஷியாமும் குருவும் குழப்பமடைந்தனர் ஏனென்றால் அவர்கள் சந்நித்த முத்துராஜ் வேறு இப்பொழுது லைசென்ஸில் இருக்கும் இந்த நபர் வேறு. ஆள் மட்டுமில்லாமல் அவரின் முகவரியும் வேறாக தான் இருந்தது.
(தொடரும்.....)
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro