Episode 26
அறை முழுவதும் இருள் சூழ்ந்திருக்க கைகள் இரண்டும் நாற்காலியில் முரட்டு கயிரால் பிணைக்கப்பட்டிருக்க வாயில் ப்ளாஸ்டர் ஒட்டி மயக்கத்தில் இருந்த மலரை நோக்கி ஒரு ஜோடி கால்கள் நகர்ந்து வந்தன.
மயங்கிய நிலையில் இருந்த மலரின் அழகிய முகம் அவனை வசீகரித்தது. அவன் மனதினுள் உறங்கிக்கொண்டிருந்த மிருகம் மெல்ல எட்டிப்பார்தது.
அந்த மிருகத்தின் அடுத்த செயலை தடுப்பதுபோலவே அவன் மொபைல் அலற , வெறுப்புடன் அதை வெளியே எடுத்தவன் பயத்துடன் அந்த அறையை விட்டு வெளியேறி வேறு அறைக்குள் நுழைந்தான்.
அந்த பக்கம் ஒரு குரல் கர்ஜித்தது," டேய் சொன்னது மாதிரி வேலையை முடிச்சிட்டியா?"
" ஐயா நீங்க சொன்ன மாதிரியே செஞ்சிட்டேங்க ஐயா?"
"சரியான பொண்ண தானே தூக்குன?"
"ஆமாங்கய்யா நீங்க சொன்ன மாதிரியே தான் அவங்க இருந்தாங்க. குரு வோட கார் ல வீட்டுக்குள்ள போனாங்க, கொஞ்ச நேரத்துல தனியா நடந்து வெளியே வந்தாங்க, அவங்கள அங்க இருந்து கடத்திட்டு வந்துட்டேன்."
"என்னடா சொல்ற? நான் சொன்ன மாதிரியா, அப்ப நீ நான் அனுப்புன ஃபோடோவ பார்கலை யா? "
" எனக்கு எந்த ஃபோடோவும் வரலையே ஐயா?"
" நீ சொல்றத வெச்சு பார்த்தா, வேற யாரையோ தூக்கிட்டு வந்திருக்க னு நினைக்கிறேன். இரு நான் அவங்க வீட்ல என்ன நிலைமை னு கேட்டு சொல்றேன்."
" சரிங்க ஐயா."
"டேய் ஞாபகம் இருக்கட்டும். அந்த பொண்ணு மேல உன் விரல் நுனி பட்டாலும் தோலை உரிச்சு தோரணம் கட்டிருவேன்."
"சரிங்க ஐயா, அப்படிலாம் செய்ய மாட்டேங்க ஐயா "
அவன் தன்னுடைய மொபைலை ஆப் பண்ணிவிட்டு திரும்பி தன் சகாவிடம் "டேய் யாரும் வராம பார்த்துக்க நான் கொஞ்சம் வெளிய போய்டு வந்தர்றேன்"
என்று கூறிவிட்டு அந்த பெரிய வீட்டிலிருந்து வெளியே வந்தான்.
அதே நேரம் ஷியாமின் அலுவகத்திலிருந்த குரு வோ அடுத்து என்ன செய்வதென்றே தெரியாத நிலையில் தவித்திக்கொண்டிருந்தான்.
பிராபாகரனை பற்றி ஷியாமிடம் கூறிய குரு , அவன் இந்த செயலை செய்யதிருக்க வாய்ப்பில்லை என்று தனது கருத்தை தெரிவித்தான்.
குருவின் கருத்தை ஏற்றுக்கொண்ட ஷியாம். "நீ சொல்றது சரியா இருந்தாலும் , அந்த ஒரு சந்தேகத்தையும் நம்ம தெளிவுபடுத்திக்கறது நல்லது. ஆனால் அவனும் பெரியபுள்ளிதான் சும்மா சந்தேகம் னு சொல்லியெல்லாம் போய் விசாரிக்க முடியாது. நான் மட்டும் போய் ப்ரான்க் கால் னு சொல்லி விசாரிச்சுட்டு வரேன். நீ அதுவரை இங்கேயே காத்திரு ," என்று கூறி அவன் சென்று ஒரு மணி நேரமானதை எண்ணிப்பார்தான் குரு.
ஒரு பேனாவையும் பேப்பரையும் எடுத்த குரு கைகள் நிதானத்துடனும், பழைய தெளிவுடனும் காலையிலிருந்து நடந்த சம்பவங்களை எழுத தொடங்கினான். அப்பொழுது அந்த இன்னோவா கார் ஓனர் கூறிய தகவல் அவன் நினைவிற்கு வந்தது.
" நான் ரொம்ப நாள் ஆசைபட்டு போன வாரம் தான் அந்த வண்டியை வாங்குனேன்.ஆனால் அதுக்குள்ள எவனோ அத திருடிட்டான்.அதுல என்ன என்ன இருக்குன்னு கூட எனக்கு சரியா தெரியல." இதுவே அவர் தெரிவித்த கருத்து.
இந்த வாசகத்தை நினைவு கூர்ந்த குரு ," எப்படி இப்படி ஒரு விஷயத்தை கவனிக்க தவறினோம்" என்று தன்னைத்தானே நொந்து கொண்டு வேகமாக ஷியாமை அழைத்து தன் சந்தேகத்தை தெரிவித்தான். குரு வின் சந்தேகத்தை மிகவும் சரியானதே என்று கூறிய ஷியாம் தான் இன்னும் அரைமணி நேரத்தில் அங்கு வருவதாக கூறி அழைப்பை துண்டித்தான்.
சரியாக அரைமணி நேரத்தில் இருவரும் தங்கள் வாகனத்தில் தாங்கள் செல்ல வேண்டிய இடத்தை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
அந்த அமைதியை கலைத்த ஷியாமின் குரல்," பிரபாகரன பார்க போனேனே என்னாச்சு னு எதாவது கேட்டியா?"
குரு," இல்லை ஷியாம் , எனக்கு பிரபாகரன் மேல எந்த சந்தேகமும் இல்லை. ஏன்னா அந்த இன னோவா கார் எங்க வீட்டு முன்னாடி மதியத்திலிருந்தே நிக்குது ,அந்த நேரத்துல நான் மலரோட கழுத்துல தாலி கட்டவேயில்லை. சோஎன்னோட சந்தேகம் என்ன அப்படீனா அவங்க மலர கடத்ததான் வந்தாங்களா? இல்லை வேற யாரோனு நினைச்சு மலர கடத்திட்டாங்களா? அப்படீங்கிறது தான்.
இதுல எனக்கு ஒரு பயமும் இருக்கு , அது ஒரு வேலை அவங்க கடத்த நினைச்சது மலரை இல்லாம இருந்து அதை அவங்க கண்டுபுடிச்சிட்டா அப்ப மலரோட நிலைமை , அவங்க மலர எதாவது செஞ்சுட்டா?" இவ்வாறு பேசிய குருவின் புத்திசாலித்தறத்தையும் அதே நேரம் அவனின் காதலையும் எண்ணி வியந்த ஷியாம்," கவலைபடாத குரு அப்படியெல்லாம் எதுவும் நடக்காது.நீ தைரியத்தை கைவிட்டுடாத."
இவ்வாறு தேற்றிய பின் தன் நண்பனின் மனநிலை யை மாற்ற ரேடியோவை ஆன்செய்தான் ,அதில் ஒளித்த பாடல் அவனின் வேதனை யை அதிகமாக்கும் என்றறியாத அவன் உயிர் தோழன்.
ஓ... எனக்கே நான் சுமையாய் மாறி என்னை சுமந்து வந்தேனே
உனக்கே நான் நிழலாய் மாறி உன்னை தேடி வந்தேனே
விழி நனைந்திடும் நேரம் பார்த்து இமை விலகிவிடாது
உயிர் துடித்திடும் உன்னை எந்தன் உயிர் ஒதுக்கி விடாது
உலகம் ஓர் புள்ளி ஆகுதே,
நெஞ்சம் எங்கோ மிதந்து போகுதே
உயிரில் ஓர் பூ வெடிக்குதே,
சுகமோ வலியோ எல்லை மீறுதே.
சிறகுள் வந்தது எங்கோ செல்ல
இரவுகள் தீர்ந்தது கண்ணில் மெல்ல
நினைவுகள் ஏங்குது உன்னை காணவே
ஒரு இமை எங்கிலும் தேனில் மூழ்க
மறு இமை மாத்திரம் வலியில் நோக
இடையில் எப்படி கனவும் காணுமோ
உன்னை உன்னை தாண்டிச் செல்ல
கொஞ்ச காலம் கொஞ்ச தூரம் கொஞ்ச நேரம்
கூட என்னால் ஆகுமோ?
உன்னை உன்னை தேடிதானே
இந்த ஏக்கம் இந்த பாதை இந்த பயணம்
இந்த வாழ்கை ஆனதோ !
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro