episode 23
கார்முகிலனும் மலர்வதனி யும் தங்களின் திருமணத்திற்கு பிறகு கார்முகிலனின் சென்னை ஈ.சி.ஆர்கெஸ்ட் ஹவுஸ் முன்பு தங்கள் வாகனத்தை நிறுத்தி வீட்டின் உள்ளே நுழைய முற்படுகையில் " அங்கயே நில்லுடா" என்ற அதட்டலை கேட்டு ஒரு நிமிடம் தாமதித்த குரு சிரித்துக்கொண்டே மேலே நிமிர்ந்து நோக்கினான் , அங்கு நின்றுகொண்டிருந்த வரை பார்த்து "ஹாய் ஸ்வீட்டி வாட் எ ஸ்வீட் சர்ப்ரைஸ் ( hi sweety, what a sweet surprise)? " என்று குரலில் மகிழ்ச்சி பொங்க வினவினான்.
அவனை நோக்கி வந்தவரோ சிரிப்பு துடைத்த முகத்துடன், "டேய் யாரை கேட்டு இப்படி ஒரு காரியத்தை பண்ணிட்டு வந்து நிக்கிர?" முகத்தில் கோபம் கொப்பளிக்க கேட்ட தன் தாயை குழப்பத்துடன் நோக்கினான் குரு, " ஏன் மா உங்களுக்கு இதுல விருப்பம் இல்லையா?" குழப்பம் குறையாமலே கேட்டான்.
"சுத்தமா எனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டமில்லை."
"ஆனால் நான் உங்ககிட்ட இதுவரை எதையும் மறைச்சது இல்லையே மா,மலரோட அறிமுகமானதுல இருந்து எல்லாமே உங்ககிட்ட சொன்னேனே."
" ஆமா நீ எதையும் மறைச்சது இல்லை தான், ஆனா நான் உனக்கு இந்த விஷயத்துல எந்த பதிலுமே குடுக்கலையே?"
தன்னுடைய கூற்றிற்கு தன் தாயிடமிருந்து எந்த விதமான பதிலும் வரவில்லை என்று மிகவும் தாமதமாகவே உணர்ந்தான் அவன்.
" நீ அந்த பொண்ண பத்தி சொல்லும் போதெலாம் இது வயசு கோளாறு கொஞ்ச நாள்ள சரியாகிடும் அப்படீ னு நினைச்சேன். ஆனா நீ இப்படி ஒரு காரியத்தை பண்ணிட்டு வந்து நிப்பனு சத்தியமா நான் எதிர்பாக்கலை."
" அம்மா நான் என்னை சின்ன குழந்தையா, இல்லை முடிவெடுக்க தெரியாத முட்டாளா?" குரலில் சிறு கோபம் துளிர்விட கேட்ட குரு வை முறைத்த அவன் தாய் ," என்னடா என் முன்னாடி யே குரலை உயர்த்தி பேசுற?
அந்த அளவுக்கு மரியாதையெல்லாம் மறந்து போக வைச்சுடாளா?
"அம்மா ப்ளீஸ் நான் மலரை லவ் பண்ணது உங்களுக்கு நல்லா தெரியும் , நான் அவளை கல்யாணம் பண்ணிண சூழ்நிலையும் தெரியும், ஒரு வேளை இப்ப அப்படி ஒரு சூழ்நிலை வரலை னா , அவனை பேச விடாமல் இடை புகுந்த அவன் தாய்," போதும் நிருத்து முகில் , நீ சொன்னதெல்லாம் எனக்கு தெரியும் ஆனா நீ இவளை கல்யாணம் பண்ணிக்கனும் னு நான் ஆசை படலை. என் அண்ணோட பொண்ணு மாலினி ய உனக்கு கல்யாணம் பண்ணிவைக்கிறதா நான் வாக்கு குடுத்திருக்கேன் அப்படி இருக்கும் போது நீ இப்படி ஒரு அசிங்கமான காரியத்தை பண்ணிட்டு வந்து நிக்கிரியே? அவர் மேலும் தொடர்ந்தார்," நம்ம அந்தஸ்த்து, மரியாதை ,உங்க அப்பாவோட கௌரவம் இப்படி எதையாவது நீ யோசிச்சயா?, எவளையோ லவ் பண்ணி திடீர்னு திருட்டு தனமா தாலி கட்டிட்டு ,தைரியமா வீட்டுக்கே கூட்டிட்டு வந்து நிக்கரயே உன்னை என்ன பண்ணா தகும்?
குரு தன் தாயை நோக்கி அமைதியாக நின்றான்,இதுவரை தன்னை எதற்காகவும் திட்டாத தன் அன்னை,தன்னை நினைத்து பெருமையடையும் தன் அன்னை, முதன் முதலாக தன்னால் வருத்தமடைந்து தன்னை கடித்துக்கொண்டதை அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை, அதனால் அவர் கூரிய வார்தைகளை சரியாக கேட்காமல் விட்டுவிட்டான், எப்பொழுதும் தன்னை சுற்றி நடைபெறும் அனைத்து விஷயங்களிலும் கவனமாக இருக்கும் அவன் முதன் முதலாக தன்னுடைய தவறை நினைத்து வருந்தியதால் தன்னவளை பற்றி தன் தாய் கூறியதை கவனிக்க தவறியது யார் குற்றம் ,ஒரு வேளை அவன் அதை கவனித்து இருந்தால் பின்னால் நடக்க இருக்கும் பலவற்றையும் தடுத்து இருக்கலாமோ? அப்படி அவன் கவனிக்க தவறியது விதியின் செயலோ?
குருவின் அமைதியை சரியாக பயன்படுத்த நினைத்த அவன் தாய் ,"இப்பவாவது நான் சொல்றத கேளு மா அவ போய்டா நீ முதல்ல உன் ரூம் ல போய் அவளை தலை முழுகிடு."
வேகமாக திரும்பி மலரை நோக்கிய குரு அங்கு அவள் நின்றுகொண்டிருந்த இடம் காலியாக இருப்பதை பார்த்த குரு கோபமாக ," அவ எங்க போனா? ஏன் மா, என்று தாய் மீது அதிருப்தி வெளிப்படுத்தி விட்டு வேகமாக தன்னவளை தேடி சென்றான்
குருவின் கைகோர்த்து சந்தோஷமாக வலது காலை எடுத்து வைத்து உள்ளே நுழைய முயன்ற மலர் "அங்கயே நில்லுடா" என்ள கம்பீர அதட்டலை கேட்டு அதிர்ந்து மேலும் குருவுடன் ஒன்றினாள்.
அங்கிருந்த மலரின் மனமோ " யாரை இவங்க ஸ்வீட்டினு கூப்புட்றாங்க? ஒரு வேலை இவங்களோட முறைப்பொண்ணு னா இருக்குமோ ,உரிமை யோட வந்து இவங்களை கட்டிப்பிடிக்குமோ? ஏன் இப்படி பண்ணீங்க னு கேக்குமோ? அதுக்கு இவங்க எப்படி ரியாக்ட் பண்ணுவாங்க ? அந்த குரலிற்கு சொந்தமானவர் அங்கு வர எடுத்துக்கொண்ட அந்த 5 நிமிடங்களில் மலரின் மனம் 500 விதமான எண்ணங்களினாள் குழப்பமடைந்தது.
கீழே இறங்கி வந்த குருவின் தாயை நோக்கி புன்னகைத்த மலரிற்கு அவரின் கண்டனபார்வையே பதிலிற்கு கிடைத்தது. வாடிய மலரை போன்று முகம் சுருங்க நின்றாள் அந்த பேதை.
மீண்டும் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு அவரை நோக்கினாள் மலர். ஆனால் இப்பொழுது அவரின் பார்வையில் அருவருப்பு தெரிய , தன்னிலை நோக்கினாள், குருவை நெருங்கி அவன் கைகளை இறுக்கமாக தன் பாதி உடல் அவன் மேல் பட நின்றுகொண்டிருந்தாள்.
முள்மேல் நின்று கொண்டிருக்கும் நிலையில் மெதுமாக குருவிடமிருந்து தன்னை விடுவித்துக்கொண்டாள்.
குரு தன் தாயுடன் பேசிக்கொண்டிருக்க மலரை கவனிக்க தவறினான். மலரோ குரு வின் பதில் களில் உறுதியின்மை இருப்பதாகவே நினைத்தாள், அவள் அறியாத ஒன்று என்னவென்றால் குரு மலரின் பக்கம் பேச முயன்ற ஒவ்வொறு முறையும் அவன் தாய் மிக சாதுர்யமாக அவன் பேச்சை வெட்டியது தான்.
தன் தாய் தன் காதலுக்கு எதிரியாக நினைத்தும் பார்காத குரு அந்த அதிர்ச்சியில் இருந்ததால் தன் தாயின் திட்டத்தை கவனிக்கவில்லை.
குருவுடன் காரில் வரும்போது அழகாக தெரிந்த தோட்டம் இப்பொழுது நடக்க நடக்க நீண்டுகொண்டிருப்பதாகவே தெரிந்தது மலரிற்கு.
பூத்துக்குளுங்கும் மலர்செடியாக ஆசையுடனும் காதலுடனும் உள்ளே நுழைந்த பாதையில் இப்பொழுது வாடிய மலரென நிராசையுடனும் ஏமாற்றத்துடனும் சென்றாள் மலர்வதனி.
அவள் வெளியே இருந்த பெரிய கேட்டை சில நிமிடத்திலே அடைந்தாள்.அவளில் வெளியேரவும் அங்கு அவளின் வரவிற்காகவே காத்திருந்தது போல வேகமாக வந்த கருப்பு இன்னோவா கார் அவளை வேகமாக உள்ளிழுத்து அவ்விடம் விட்டு புயலென பறந்து சென்றது.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro