Episode 21
குரு வுடன் விஷ் சந்தோஷமாக சிரித்துப்பேசி கொண்டே உள்ளே நுழைவதை கண்ட மலரின் முகம் தன்னவனை நினைத்து பெருமிதம் கொண்டது.
யாரையும் வெகு சீக்கிரத்தில் நட்பு கொள்ள செய்யும் அவனுடைய குணத்தை எண்ணி வியந்தாள் அந்த பேதை பெண்.
மலரின் தந்தை யை நோக்கிய குரு,"அங்கிள் நான் வதூவ இப்ப என் கூட கூட்டிட்டு போறேன்.மத்ததெல்லாம் நாம அப்பறமா பேசிக்கலாம். இப்ப அவளுக்கு தேவை அமைதி அது உங்க வீட்டில கண்டிப்பா கிடைக்காது. அதனால நான் அவளை எங்கூட கூட்டிட்டு போறேன்."
அவரின் பதிலிற்காக காத்திராமல்
விஷ்ஷிடம் திரும்பிய குரு," மச்சான் நான் மலர கூட்டிட்டு போறேன் . மத்ததெல்லாம் ஃபோன்ல பேசிக்கலாம்." என்று கூறினான்.
விஷ்,"சரி மாப்பிள்ளை பாத்து பத்திரமா போய்டு வா."
மலர்,"அண்ணா என் மேல கோபமா?"
"இல்லை டா நம்ம இரண்டு பேருக்கும் இடைல நம்மல அறியாமலே இடைவெளி வந்துருச்சுடா,ஆனா இனிமே அப்படி இருக்க நான் விட மாட்டேன்.உனக்கு எந்த பிரச்சனை இருந்தாலும் உனக்காக இந்த அண்ணண் பாத்துக்குவான் அப்படீங்கிறத மறந்துடாத. நாங்களே தேடியிருந்தாலும் குரு வ மாதிரி ஒருத்தரை கண்டு புடிச்சிருக்க முடியாது. வாழ்த்துக்கள் டா."
தனது தமையன் தன் கணவனை பற்றி கூறியதை கேட்ட மலர் மிகவும் மகிழ்ச்சியாக தன் தாய் தந்தை மற்றும் தமையனிடமிருந்து விடைபெற்று தன்னவனின் தோல்களில் சாய்ந்த வண்ணம் அந்த அறையிலிருந்து வெளியேறினாள் திருமதி மலர்வதனி கார்முகிலன்.
ஹாஸ்டல் பார்கிங்கை(Hospital parking )வந்தடைந்த குரு அங்கே நின்றுகொண்டிருந்த தன் silver நிற Benz யை பார்த்து ஒரு நிமிடம் வியந்தாலும் மறு நொடி தன் தந்தை யின் நேர்த்தியான செயல்முறை யை கண்டு பெருமிதம் கொண்டான்.அப்பொழுது அவனிடம் வந்த ஒரு நடுத்தர வயது மனிதர்," சின்னையா அய்யா உங்ககிட்ட சாவியை கொடுக்க சொன்னாங்க." என்று சாவி யை அவனிடம் கொடுத்து விட்டு விடை பெற்றார்.
மலரை முன் பக்கமாக அமர வைத்துவிட்டு ஒட்டுனர் இருக்கையில் ஏறி அமர்தந்தான் குரு.
தன் மணம் கவர்ந்த மனைவியுடன் தனது வாகனத்தில் பயணிக்க போகும் எண்ணமே குரு வை சிறகில்லாமல் வானத்தில் பறக்க செய்தது.
சீட்டி அடித்துக்கொண்டே மெதுவாக காரை ஸ்டார்ட் செய்தான் குரு.குரு வை நெருங்கி அமர்ந்து அவன் தோள்களில் சாய்ந்து அந்த நிமிடத்தை ரசித்துக்கொண்டே வந்தாள். காரின் குளுமையுடன் அவன் ஒடவிட்ட பாடல் ஒலிமட்டுமே அங்கே கேட்டுக்கொண்டிருந்தது.
சின்ன சின்ன அத்துமீறல் புரிவாய்.
என் செல்களெல்லாம் பூக்கள் பூக்க
செய்வாய்....
மலர்களில் மலர்வாய்.................
பூப்பறிக்கும் பக்தன் போல
மெதுவாய் நான் தூங்கும்போது
விரல் நகம் களைவாய்
சத்தமின்றி துயில்வாய்............
ஐ விரல் எடுத்து olive எண்ணெய்
பூசி சேவகம் செய்ய வேண்டும்.....
நீ அழும்போது நான் அழ நேர்ந்தால்
துடைக்கின்ற விரல் வேண்டும்.
சிநேகிதனே.......சிநேகிதனே.........
ரகசிய சிநேகிதனே........
சின்ன சின்னதாய்.....
கோரிக்கைகள் செவிகொடு
சிநேகிதனே.......
இதே அழுத்தம்.....அழுத்தம்.....
இதே அனைப்பு....அனைப்பு......
வாழ்வின் எல்லை வரை வேண்டும்
வேண்டும் வாழ்வின் எல்லை வரை
வேண்டும் வேண்டும் நீ........
(சிநேகிதனே)
அந்த இருவரின் மனநிலையையும் அந்த பாடல் அழகாக ஒளிபரப்ப தன் முகத்தை மேலும் குருவின் மார்பில் புதைத்தாள் அவன் மனையாள்.
ஒரு நிமிடம் கார் குரு வின் கைகளில் தடுமாரியதால் சுய நினைவு பெற்ற இருவரும் சட்டென விலகி அமர்ந்தனர்.குரு வின் கைகள் வேகமாக பாட்டை மாற்ற அதை பார்த்த மலர் கட கட வென சிரித்தாள்.
அவளை திரும்பி பார்த்து முறைத்த குரு வேகமாக தனது காரை ஓரமாக நிறுத்தினான்.
சிரித்துக்கொண்டிருந்த மலரின் சிரிப்பு நின்றது.இப்பொழுது சிரிப்பது குரு வின் முறையாக இருந்தது.அவன் சிரிப்பதை பார்த்த மலர் அவனை வேகமாக அடிக்கத் துவங்கினாள்.
" ஏய் வலிக்குது டா , இப்ப நான் என்ன பண்ணே ணு என்னை இந்த அடி அடிக்குற?"
"ஆமா நீங்க ஒன்னும் தெரியாத பாப்பா பாரு.பண்றதெல்லிம் பண்ணிட்டு, சிரிக்காத டா."
" செல்லம் புருஷன டா போட்டு பேச கூடாது டா."
" நான் அப்படி தான் பேசுவேன் என்ன டா பண்ணுவ?"
" வேண்டாம் வதூ நான் exam முடியர வரை நல்ல பையனா இருக்கனும் னு நினைக்கறேன்.என்னை சீண்டாத அப்பறம் அதோட ஆஃப்டர் எஃபெக்ட்ஸ்கு நான் காரணமில்ல சொல்லிட்டேன் ."
ஸ்விட்ச் ஆப்(Switch off )செய்தது போல் அவள் சிரிப்பு நின்றது.அதற்கு பதில் கண்ணங்கள் இரண்டும் நாணத்தால் சிவக்க தலை குனிந்து அமைதியானாள்.
" வதூ என்ன பார்தா உனக்கு பொறுக்கி மாதிரி தெரியுதா? ஏன் எப்பவுமே நான் ஏதாவது சொன்னா உடனே என்னை விட்டு தள்ளி போய் அமைதி ஆகிடுற.என் மேல இன்னும் உனக்கு நம்பிக்கை வரலையா?" என்று வருத்தமாக கேட்டான்.
பதறிய மலர் வேகமாக அவன் வாயின் மேல் தன் விரலை வைத்து, " உங்கமேல நம்பிக்கை இல்லை னு நான் எப்ப சொன்னேன் குரு. உங்களை நம்பலனா நான் என்னை யே நம்பாத மாதிரி.உங்கள பத்தி நல்லா தெரியும்.இருந்தாலும்.............."
"இருந்தாலும்....."
"இருந்தாலும்....... வெக்கமா வருதுடா மர மண்டை."என்று கூறி அவன் மார்பில் சாய்ந்து கண்கள் மூடினாள்.
அவளது நிலை புரிந்த குரு சிறு அமைதிக்கு பின் மலரின் முகத்தை தன் இரு கைகளால் ஏந்தி அவள் முகம் நோக்கி குனிந்தான்,அவனின் செயல் புரிந்தது போல் மலர் கண்களை மூடினாள்,அவளின் முகத்திற்கு வெகு அருகில் சென்ற குரு மென்மையாக " என் கண்ணியத்து மேல உனக்கு இருக்குற நம்பிக்கை யை நான் எப்பவும் இழக்க விரும்பல மை ஸ்வீட் ஹார்ட்( my sweet heart) " என்று கூறி அவளது நெற்றியில் முத்தமிட்டு தன்னுடன் அணைத்துக்கொண்டான்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro