Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

Episode 19

குருவின் இந்த செயலை அங்கு இருந்த யாரும்  எதிர்பார்காததால் அனைவரும் அதிர்ந்தனர்.

ஆனால் அதைபற்றி கவலை கொள்ளாமல் ஏன் சிறிது கூட வருத்தப்படாமல் மிக கம்பீரமாக எழுந்து தன் மனைவியை நோக்கிய குரு அழகாக புன்னகைத்து,"  மலர் இப்ப   நீ எங்கூட வரத யாராலும் தடுக்க முடியாது." என்று கூறினான்.

மலரின் முகத்தில் அமைதியும் சந்தோஷமும் கலந்து இருந்தது.

"ஒரு மஞ்சள் கயித்தை கழுத்துல கட்டிடா அவளை உங்கூட அனுப்ப நான் சம்மதிச்சுருவேனா?இது என்னோட கோட்டை என்னை மீறி எதுவும் நடக்காது,இதோ இங்க நிக்குறாறே மிஸ்டர். பிரபாகரன் இவர்தான் என் மாப்பிள்ளை. இத யாராலயும் மாத்த முடியாது.அது மட்டும் இல்லை முதல்ல உன்னால  இங்க இருந்து வெளியே போக முடியுதானு பாரு அப்பறமா என் மகள கூட்டிட்டு போறத பத்தி யோசிக்கலாம்."
ஆக்ரோஷமாக தொடங்கி நக்கலாக முடித்தார் ராமநாதன்.

அவர் கூறியவற்றை அமைதியாக கேட்டுக்கொண்டிருந்த குரு சத்தமாக சிரித்தான்.அங்கு இருந்த அனைவரும் அவன் சிரிப்பதை புரியாமலும்,ஆச்சரியமாக பார்தனர்,ஆனால் அவனை பற்றி நன்கு தெரிந்த மலரோ புன்னகை மாறாத முகத்துடன் அவனை காதலுடன் பார்த்துக்கொண்டிருந்தாள்.

குரு,"இத்தனை பேரு முன்னாடி வச்சு உங்க பொண்ணு கழுத்துல  தாலி கட்டுன எனக்கு இங்க இருந்து என் மனைவிய கூட்டிட்டு போக தெரியாதா என்ன? மலர் வாடா நாம போலாம்."

"டேய் வேண்டாம் என்னோட பவர் தெரியாம என் கூட விளையாடாத, இந்த  ஹாஸ்பிட்டல சுத்தி என்னோட ஆளுங்க நிக்கறாங்க நீ அவ்வளவு சுலபமா இங்க இருந்து போக முடியாது."

பேசிக்கொண்டிருக்கும் போதே 10 பேர் வேகமாக அந்த அறைக்குள் நுழைந்தனர் அவரை தொடர்ந்து வந்த மனிதரை பார்த்த அனைவரும் சிலையாக உறைந்து நின்றனர்.

ராமநாதனின் மனமோ,"இவரு எதுக்கு இங்க வந்துருக்காரு ,ஐய்யோ நம்மை இவருக்கு வேண்டியவங்க யாரையாவது ஏதாவது செஞ்சுடோமா" என சிந்தித்தது.

(நீங்க ஒருத்தரு ரெண்டு பேருக்கு துரோகம் பண்ணிருந்தா ஞாபகத்துல இருக்கும் நீங்க பண்ண தப்போட கணக்கு தான் நீண்டுக்கிட்டே போகுதே பாஸ் அப்பறம் எப்படி உங்களுக்கு ஞாபகம் இருக்கும்.)

அங்கே நடக்கும் அனைத்தையும் நம்ப முடியாமல் பார்த்துக்கொண்டிருந்த மலரின் தாய் தன் மகன் விஷ்ஷிடம் ,"இங்க என்ன நடக்குது ? இங்க வந்திருக்குறது யாரு ஏன் அவர பார்த்து எல்லாரும் இப்படி அமைதியாகிட்டீங்க."

விஷ்,"அம்மா அவரு பேரு ராஜகுமார பூபதி,பெரிய ஜமீன் வம்சத்த சேர்தவரு,அவர் செய்யாத பிசினஸே  இல்லை, அவரோட வார்த்தைக்கு எதிர்த்து  பேச யாருக்கும் தைரியம் இருக்காது,கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி அப்பா சொன்னாங்கல்ல இது என்னோட கோட்டைனு, ஆனா இவரோட சொல்லுக்கு  சௌத் இந்தோ ஃபுல்லா பவர் இருக்கு."

"சரி விஷ் அவரு எதுக்கு இங்க வந்துருக்காரு,உங்க அப்பா  அவருகிட்ட ஏதாவது பிரச்சனை பண்ணாறா?எனக்கு பயமா இருக்கு விஷ்.'

"அம்மா அப்படி இருக்க வாய்பே இல்லை, அப்பா தன்னவிட தாழ்ந்தவங்க கிட்டதான் தன்னோட வீரத்த காட்டுவாரு, சோ ஒரு வேளை குரு அவருகிட்ட போய் உதவி கேட்டாறோ என்னமோ தெரியலை,ஆனா குருவுக்கு எப்படி இவர தெரியும் ஒரே குழப்பமா இருக்கு"

அங்கிருந்த அனைவரின் மனநிலையும் கிட்டதட்ட விஷ்ஷின் மனநிலையையே ஒத்திருந்தது.

குரு அவர் முன் மரியாதையாக வந்து நின்றான். அவர் குரு வையும் மலரையும் மலரின் கழுத்தில் தொங்கிக்கொண்டிருந்த தாலியையும் மாறி மாறி பார்த்தார்.

ராஜகுமார்," நான் தான் கொஞ்சம் பொறுமையா போகலாம் னு சொன்னேன் ல அதுக்குள்ள ஏன் அவசரபட்டீங்க தம்பி. இப்ப இங்க இருக்குரவங்க நம்மை பத்தி என்ன நினைப்பாங்க.நீங்களே நான் சொல்றத கேக்கலைனா மத்தவங்க என்னை எப்படி மதிப்பாங்க."

(என்னது இது இவரு போய் குருவுக்கு மரியாதை குடுக்குறாரு என்று அங்கிருந்த அனைவரும் நினைத்தனர்.மலரை தவிர ஏனென்றால் மலரிற்கு அவர் யாரென்றே தெரியாது.)

குரு" அது வந்து நானும் இப்படி செய்யனும் னு நினைக்கலை,  எனக்கு அவளை இங்க இருந்து உடனே காப்பத்தி கூட்டிட்டு போகனும் னு தோனுச்சு அதான் வேற வழியில்லாம ஒரு ஆத்திரத்துல இப்படி செஞ்சுட்டேன்.உங்க பேச்சை மீறனும்னு நான் கனவு லயும் நினைக்க மாட்டேன்."

"இவ்வளவு பணிவாக அமைதியாக பேசுறது என் குரு தானா?இவங்க பார்க்க பெரிய மனுஷர் மாதிரி தெரியுராரு ஆனா யாருனு தெரியலையே"என பலவாறு எண்ணியது மலரின் நெஞ்சம். 

"சரி  ஆனது ஆச்சு அடுத்து என்ன பண்றது னு நீங்களே யோசிச்சு இருப்பீங்களே நீங்களே சொல்லுங்க,"என்ற கூறிய ராஜகுமாரின் குரலில் அடக்கப்பட்ட கோபம் அப்பட்டமாக தெரிந்தது.

"இல்லை நீங்க சொல்றதுக்கு நான் கட்டுபடறேன்."
என்று கூறிய குருவை நம்ப முடியாமல் பார்த்த மலர் ,வேகமாக குருவின் அருகே வந்து நின்றாள்.

மலரின் முகத்தில் தெரிந்த பயத்தை பார்த்த ராஜ்குமார் அவளை ஆராய்ச்சி பார்வை பார்த்தார்.மெரூன் நிறத்தில்  பட்டுடுத்தி மிகவும் எளிமையான அழகுடன் நின்ற மலரை பார்த்தவுடன் ,அவரின் கோப முகம் சாந்தமாக மாறியது,தன்னருகே வருமாரு கூப்பிட்டார்,குருவை திரும்பி நோக்கிய மலர் குருவின் கண்ணசைவை புரிந்து கொண்டு  அவரின் அருகே சென்றாள்.

குருவின் சம்மதத்தை பெற்றபிறகே தன் வருகே வந்த மலரை கண்ட அவருக்கு அவர்களகன் காதலின் ஆழப் தெரிந்தது. வாஜ்ஜையுடன் அவள் தலை யை தடவி, "நான் யாரு னு உனக்கு தெரியுமா ?"என்று கேட்டார். 

மலர் தெரியாது என்று இட வலமாக தலையை ஆடடினாள்.

"நான் உன்னோட மாமனார்,இதோ நிக்குறாரே கார்முகிலன்  இவரோட அப்பா." 

புரியாமல் பார்த்த மலரின் அருகே வந்த குரு,"யாரும் என்னை பேர் சொல்லி கூப்பிட மாட்டாங்க குருனு தான் கூப்பிடுவாங்க "என்று கூறினான்.

அவரின் கம்பீர முழக்கம் கேட்டு அங்கிருந்த அனைவரின் இதயமும் இயங்குவதை ஒரு நிமிடம்  நிறுத்தியது.

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro