Episode 16
பிரபாகரனை சந்தித்த பிறகு வீட்டிற்கு வந்த விஷ் பிரபாகரனை பற்றி சிந்தித்துகொண்டிருந்தான்.
அவன் வெளிநாட்டில் படித்துக்கொண்டிருக்கும்போது தான் பிரபாவின் அறிமுகம் கிடைத்தது.பிரபாகரன் நல்லவன் நேர்மையானவன்,எந்த விதமான கெட்ட பழக்கங்களும் இல்லாதவன்.ஆனால் நினைத்ததை நடத்தி முடிப்பவன்.அவன் தன் தங்கையை திருமணம் செய்து கொள்வதில் விஷ் மகிழ்ச்சியே அடைந்தான்.
பிரபாகரனை பற்றி தன் தந்தையிடம் கூறுவதற்கு தகுந்த சந்தர்பத்திற்காக காத்துக்கொண்டிருந்தான் விஷ்.
ராமநாதன் அன்று சீக்கிரமாகவே வந்துவிட்டார்.தனது அலுவலக அறையின் வாசலில் நிழலாட நிமிர்ந்து நோக்கினார்.
" வா விஷ்வா ஏன் அங்கே நிக்குற?"
"அப்பா உங்ககிட்ட கொஞ்சம் பேசனும்."
"தயங்காம சொல்லுபா."
"என் ப்ரெண்ட் பிரபாகரன் மலர கல்யாணம் பண்ணிக்க ஆசைபடுறான்."
"எந்த பிரபாகரன் அந்த பிரபா கன்ஸ்ட்ரெக்ஷன்ஸ் ஓட சேர்மனா.
நம்ம ஸ்டேடஸுக்கு ஈக்வலான இடம் தான்.நீ என்ன பண்ற கால் பண்ணி நாளைக்கு பொண்ணு பார்க்க வர சொல்லிடு,அவங்க அப்பா நம்பர் இருந்தா வாங்கு நான் நாளைக்கு பேசிக்கிறேன்."
தன் அறைக்கு வந்த விஷ் மிகவும் யோசனையுடனே காணப்பட்டான்.அவனது எண்ணங்கள் அவன் தந்தையின் வார்தைகளையே சுற்றி வந்தது.
பையன் நல்லவனா கெட்டவனா நம்ம பொண்ணுக்கு பொருத்தமா இருப்பானா?நம்ம பொண்ண கடைசிவரை கண்கலங்காம வச்சிருப்பானா? இப்படி எந்த கேள்வியும் கேக்காம வெறும் ஸ்டேடஸ் பார்த்து எப்படி அப்பா கல்யாணத்துக்கு சம்மதிச்சாங்க? முதல்முறையாக தன் தந்தையின் வார்தைகளை ஏற்றுக்கொள்ளமுடியாமல் தடுமாறினான்.
மலர் நீ கவலைபடாதடா உனக்கு அண்ணன் இருக்கேன் உனக்கு எது நல்லதோ அத தான் செய்வேன்.ஒரு வேளை உனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லைனா கண்டிப்பா நான் உனக்கு துணையா இருப்பேன் என்று தன் மனதில் தன் தங்கையிடம் கூறினான்.
அதனால் அடுத்த நாள் மலர் இறங்கி வரும்போதிருந்தே அவளின் ஒவ்வொறு அசைவையும் கவனிக்க தொடங்கினான். மலரின் முகத்தில் கலவரம் மட்டுமே இருந்தது ,அது அவனை யோசிக்க வைத்தது.பின் நிச்சயம் பற்றி கூறும்போது அதிர்ச்சி தெரிந்தது.பின் மெதுவாக தன் இருக்கையில் சரிய தொடங்கிய தன் தங்கையை தாங்கி பிடித்தான்.
அங்கு கூடியிருந்த அனைவரின் முகத்திலும் கலவரம் தெரிந்தது ஒருவனை தவிர ஆம் பிரபாகரன். இது அவன் எதிர்பார்து தான் வந்தான்.
அவன் கலவரமற்ற முகத்தை கவனிக்க தவறவில்லை விஷ்.
விஷ்,"மலர் இங்க பாருடா,என்னாச்சு டா,கண்ண திறமா.அம்மா கொஞ்சம் தண்ணீர் கொண்டு வாங்க சீக்கரம்."
என்ன முயன்றும் முடியாமல் அவளை மருத்துவமனைக்கு தூக்கி சென்றான். அனைவரும் மருத்துவமனையில் கலவரத்துடன் காணப்பட்டனர்.
மலரை பரிசோதித்த மருத்துவர் மலர் மிகுந்த மண உளைச்சலால் மயங்கியிருப்பதாக தெரிவித்தார்.
மேலும் சுயநினைவு திரும்பவில்லையென்றும்,சுயநினைவு திரும்பியாலே மேலும் கூற முடியும் என்றும் தெரிவித்தார்.
நேரம் சென்றுகொண்டேயிருந்தது ஆனால் மலர் சுயநினைவு அடையவில்லை,மருத்துவர்கள் கவலையாயினர்.
பிரபாகரனின் குடும்ப உறுப்பினர்கள் சென்றுவிட்டிருக்க பிராகரன் மற்றும் விஷ் குடும்பத்தினர் மட்டுமே காத்துக்கொண்டிருந்தனர்.அப்பொழுது அங்கு வந்த தலைமை மருத்துவர்,
"அவங்களுக்கு ஏன் சுயநினைவு வரல னு தெரியல,வைடெல்ஸ் எல்லாம் நார்மலா தான் இருக்கு,ஒருவேளை அவங்க ஆள் மனசு சுயநினைவுக்கு வர எந்த முயர்ச்சியும் செய்யாம இருக்களாம்.இல்லைனா அவங்க சுயநினைவு வந்தா தனக்கு விருப்ப மில்லாதது நடந்துரும் அப்படீங்கிற பயத்துனாளையும் இருக்களாம்."
விஷ் குடும்பத்தினற்கு ஒன்றுமே புரியவில்லை ஆனால் எல்லாவற்றையும் அமைதியாக உள்வாங்கிய பிரபாகரன் மனதிலோ வன்மம் உருவாகியது."டேய் உன்னை உயிரோட விட்டாதான நீ மலர என்கிட்ட இருந்து பறிப்ப .நான் யாருனு உனக்கு காட்டுறேன்டா."என்று மனதில் சூள்உறைத்துக்கொண்டான்.
இதை எதையும் அறியாத குரு தான் கூறிய சர்ப்ரைஸுடன் கல்லூரியில் காத்துக்கொண்டிருந்தான்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro