Episode 15
பெண்கள் என்றாலே ஓடும் ஒருவன் கல்யாணத்தின் மீது நாட்டம் கொள்ளாத ஒருவன் தன் தங்கையை மணக்க கேட்டதை நம்ப முடியாமல் பார்தான் விஷ்.
"என்ன தேடுற விஷ்."
"இல்ல இங்க பிரபா னு ஒரு நல்லவன் இருந்தானே நீ பாத்தியா?"
"போடா என்ன கேளி பண்ணாத."
"டேய் மச்சான் எப்ப இருந்து டா நீ வெக்கப்பட ஆரம்பிச்ச ?என்னடா நடக்குது இங்க ?உனக்கு எப்படி டா மலர தெரியும்"
"நிப்பாட்டு,நிப்பாட்டு , ஒவ்வொரு கேள்வியா கேளுடா.எனக்கு பதில் சொல்ல சந்தர்பம் தராம நீயே பேசுனா என்ன அர்த்தம்."
"சரிடா நான் பேசல நீயே என்ன நடந்துச்சுன்னு சொல்லு "
" நேத்து ஒரு ப்ரெண்ட பார்க்க போயிருந்தேன்,அவன் ஒரு காலேஜுக டான்ஸ் ப்ரோகிராமுக்கு ஜட்ஜா போக கெளம்பிக்கிட்டு இருந்தான்,என்னையும் கூப்பிட்டான்,அதனால நானும் போனேன்."
அங்க ஒரு பொண்ணு ஆடுன டா பாரு நான் அசந்து போய்டேன்,அப்படி ஒரு உணர்ச்சிய முகத்துல கொண்டு வந்தாபாரு சான்சே இல்லைடா. அப்பவே அவ தான் என் மனைவி னு முடிவு பண்ணிட்டேன்.அப்பறம் அவள பத்தி தெரிஞ்சுக்க அவளை ஃபாலோ பண்ணி வந்தேன்,அப்ப தான் அவ உங்க வீட்டுக்குள்ள போறத பாத்தேன்.
அவ உன் தங்கச்சின்னு தெரிஞ்சு ரொம்ப சந்தோஷபட்டேன் மச்சான்.
இப்ப உங்கிட்ட அத மத்தி பேச வந்திருக்கேன்.போதுமா இல்லை இன்னும் எதாவது டீரடெய்ல்ஸ் வேணுமா?
"ரொம்ப சந்தோஷம் பிரபா ,உன்னை மாதிரி ஒருத்தன கல்யாணம் பண்ணிக்க என் தங்கச்சி கொடுத்து வச்சிருக்கனும்.நான் இத பத்தி இன்னைய்கே அப்பாகிட்ட பேசுறேன்.நீ எதுக்கும் தயாரா இரு ,உனக்கு நான் கால் பண்றேன்."
( மிக சாமர்தியமாக அவள் வேறு ஒருவனை பார்த்து ஆடியதை மறைத்து விட்டான் அவன்.)
இருவரும் சந்தோஷமாக விடைபெற்றனர்
அன்று இரவு மலர் தனது அறையில் குருவுடன் சந்தோஷமாக பேசிக்கொண்டிருந்தாள் அப்போது வந்த பணியாள்,"சின்னமா ,உங்களை ஐயா கூட்டிட்டு வர சொன்னாங்க,"
"சரி நீ போ நான் வரேன்."
"குரு அப்பா கூப்பிட்றாங்க,நான் போய் கேட்டுட்டு வரேன் ."
"சரி டா சீக்கிரமா வந்துரு."
மலரின் வருகைக்காக தனது அலுவலக அறையில் காத்துக்கொண்டிருந்தார் ராமநாதன்.
மலர்,"அப்பா வர சொன்னீங்களா பா"
"ஆமா மலர் நாளைக்கு ரொம்ப முக்கியமான விருந்தாளிங்க வராங்க ,அதனால நீ காலேஜுக்கு லீவ் போட்று .மத்தத நான் உனக்கு காலைல சொல்றேன் ."
அத்துடன் பேச்சு நிறைவடைந்தது என்ற கூறாமல் கூறிய தந்தை யை பார்த்து வறட்டு புன்னகை சிந்திவிட்டு சென்றாள்.
குரு,"என்னடா சொன்னாங்க அப்பா?"
"நாளைக்கு யாரோ கெஸ்ட் வராங்களாம்.ரொம்ப முக்கியமானவங்களாம் அதனால என்ன லீவ் போட சொன்னாங்க."
"அப்ப நீ நாளைக்கு வர மாட்டியா?"
"இல்லை செல்லம் அப்பா சொன்னதுக்கு அப்பறம் எப்படி வற்றது."
"நாளைக்கு உனக்கு ஒரு சர்ப்ரைஸ் காட்டலாம் னு நினைச்சேன்டா.ப்ளீஸ் மதியத்துக்கு மேல யாவது வர முடியுதா பாருடா."
"அது என்ன சர்பரைஸ் இப்பவே சொல்லுங்க என் செல்லகுட்டி ல."
"உன் செல்ல குட்டி தான். ஆனா நான் நாளைக்குதான் சொல்லுவேன்.நீ மதியத்துக்கு மேல காலேஜ் க்கு வர அவ்ளோதான்."
இப்படி யாக அவர்கள் கெஞ்சல்,கொஞ்சல் நள்ளிரவு வரை தொடர்ந்தது.
அடுத்த நாள் பலருக்கும் பல அதிர்ச்சிகளை வைத்துக்கொண்டு மிக அழகாகவே விடிந்தது.
காலையில் மலரிடம் வந்த ,மலரின் தாய் சாரதா,"மலர் இதுல புது புடவையும் நகையும் இருக்கு அத போட்டுக்கிட்டு வா."
"எதுக்கு மா இதெல்லாம்."
"வரவங்க நமக்கு ஈக்வல் ஸ்டேடஸ் உள்ளவங்க ,அதனால நீ எப்பவும் பண்ற மாதிரி சாதாரணமா பண்ணுவணு தான் நான் நேத்தே போய் உனக்காக வாங்கிட்டு வந்தேன்."
தாய் கூறியதை மீற முடியாமல் தனது அறைக்கு சென்ற மலர் புடவையை கண்டு அதிந்தாள்.அது உடல் முழுக்க தங்க நிற ஜரிகைகள் நெய்த மெரூன் வண்ண பட்டுப்புடவை அதற்கு ஏற்ற வைர நகைகள்.
முதல் முறையாக நெஞ்சில் நடுக்கத்துடன் அவைகளை அணிந்து வெளியே வர,அங்கு வந்த சாரதா ,"என் பொண்ணுக்கு கல்யாண கலை வந்துருச்சு ,இந்தா திரும்பு இந்த மல்லிகை பூவ வச்சு விடுறேன்." என்று கூறினார்.
மலர்," அம்மா இங்க என்ன நடக்குது,யாரு வர்ராங்க மா."
"எனக்கும் ஒன்னும் தெரியாது மா கெஸ்ட் வர்ராங்க நம்ம ஸ்டேடஸுக்கு ஏத்த மாதிரி மலர அலங்காரம் பண்ண சொல்லு னு தான் அப்பா சொன்னாங்க மா.சரி வா அவங்க வந்துட்டாங்க கீழ போகலாம்."
கீழே சென்ற சாரதா மலருடன் ஹால் நோக்கி சென்றார்.
ராமநாதன்,"இவ தான் என் பொண்ணு மலர்வதனி."
மலர் அனைவருக்கும் பொதுவாக வணக்கம் சொல்லிவிட்டு அங்கு அமர்ந்தாள்.யாரையும் அவள் நிமிர்ந்து கூட பார்க்கவில்லை.
அந்த அறையில் திடீரென ஒரு கம்பீரக்குரல் ஒலித்தது,"உங்க பொண்ண எங்களுக்கு ரொம்ப புடுச்சிருக்கு நம்ம முதல்லயே பேசுன மாதிரி இப்ப தட்ட மாத்திக்களாம்.ஜோசியர் கிட்ட கேட்டுடோம் அவரு இன்னும் ஒரு மாசத்துல நல்ல முகூர்தம் இருக்குனு சொன்னார் உங்களுக்கு சம்மதம் னா அன்னைக்கே கல்யாணத்த வச்சுக்களாம்."
இதைகேட்டுக்கொண்டிருந்த மலர் சோஃபாவில் சரிய தொடங்கினாள்.மலர் என்று கூறிக்கொண்டு அவளை தாங்கிப்பிடித்தான் விஷ்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro