Episode 13
ஆடிட்டோரியம் விட்டு வெளியே வந்த மலரின் கண்கள் குருவை யே தேடின,தூரத்தில் நின்றுகொண்டிருந்த குருவோ மலரை காண கையில் பூங்கொத்துடன் வந்துகொண்டிருந்தான்.
"இந்த அழகு தேவதைக்கு அடியானின் அன்பு காணிக்கை."கையில் மலர்களை வாங்கிய
மலர்,"எப்படி இருந்துச்சு நான் ஆடுனது எதுவுமே சொல்லல."
" மலர் ப்ளீஸ் எங்கயாவது போலாமா?"
தன்தலைமுடியினை கோதி உணர்ச்சிகளை அடக்கினான்.இதை கண்ட மலரின் முகம் செவ்வானமென சிவந்தது.பதில் கூறாமல் அனிதாவிடம் கூறிவிட்டு குருவுடன் கிளம்பினாள்.
குருவை காதலிக்க தொடங்கியது முதல் இருவரும் கல்லூரியை தவிற வேறு எங்கும் சந்நித்தது இல்லை, முதல் முறையாக அவன் பின்னால் அமர்ந்து கர்வத்துடன் பயணித்தாள்.
குரு மலரை அழைத்து சென்றது ஓர் கடற்கரை. வாகனத்தை பார்க் செய்துவிட்டு இருவரும் கைகோர்த்து கடல் வரை சென்றனர்.இருவரது மனமும் அமைதியிலும் காதலிலும் திளைத்திருந்ததால் அங்கே வார்த்தைகள் தேவைப்படவில்லை.கடலை நோக்கி அமர்ந்து கொண்ட பின் மெதுவாக குருவின் தோளில் தன் தலைசாய்த்த மலர்.
"குரு நான் உங்ககிட்ட மனசு விட்டு பேசனும்.நம்ம ரெண்டு பேரும் நம்மோட அன்ப வெளிப்படுத்தி கிட்டதட்ட மூனு வருஷம் ஆகப்போகுது ஆனா நீங்க என் குடும்பத்த பத்தி எதுவுமே கேட்டதில்லை ,நானும் உங்க கிட்ட பேசும் போது தான் சந்தோஷமா உணருவேன் அதுனால அந்த மனநிலைய மாத்த முயற்ச்சி எடுக்கல.ஆனா இப்ப உங்க கிட்ட சொல்லனும் னு தோனுது."
மலரின் கைகளை எடுத்து தன் கைகளுக்குள் வைத்துக்கொண்டான்.
குரு வின்.இந்த செயல் மலரிற்கு தன்னம்பிக்கை யும் தைரியமும் கொடுத்தது.தன் குடும்பத்தை பற்றி கூற தொடங்கினாள்.
"எங்க அப்பா பேரு ராமநாதன்.நாதன் குரூப் ஆப் கம்பனீஸோட சேர்மன்.சாதாரனமா தொடங்கி இப்ப இந்த அளவுக்கு அவரு உயர்திருக்காருனா அதுக்கு காரணம் அவரோட அயராத உழைப்பு மட்டும் இல்லை அடுத்தவங்கள எப்படி கவுக்களாம்,ஒருத்தர முன்னேற விடாம எப்படி தடுக்களாம் அப்படி னு யோசிக்கற நரி குணத்தாலயும் தான். அவரு வீட்டுக்கு வெளிய எப்படியோ ஆனா வீட்ல மருந்துக்கு கூட சிரிக்க மாட்டாங்க.
அப்பா வீட்ல இருக்குறது ரொம்ப கொஞ்ச நேரம்தான் ,ஆனா அவங்க இருந்தா வீடே மயான அமைதில இருக்கும்."
மலரின் கண்களில் இருந்து கண்ணீர் வந்து கொண்டே இருந்தது.
குரு,"வேண்டாம் டா நீ எதுவும் சொல்ல வேண்டாம்,இவ்வளவு ஃபீல் பண்ணாத டா எல்லாம் சரி ஆகிடும்,அப்பா கண்டிப்பா ஒரு நாள் மாறுவாறுடா."
"இல்லை குரு எனக்கு அந்த நம்பிக்கை இல்லை எங்க அப்பா வால எத்தனையோ குடும்பம் நடுதெருவுக்கு வந்துருக்கு.அப்பறம் எங்க அம்மா அவங்க ஒரு நவநாகரீக மங்கை அக்மார்க் உயர்தட்டு பெண், லேடீஸ் க்ளபுக்கு போறதுக்கே அவங்களுக்கு நேரம் பத்தாது இதுல என்னை எப்படி பாத்துக்க முடியும்.
அதுனால என்னை எங்க தாத்தா வீட்ல விட்டுடாங்க.10 வயசு வரை என்ன வளர்தது என்னோட தாத்தா பாட்டி தான்.தாத்தா ஒரு ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி. அதனால என்னையும் நீதி நேர்மை நியாயம்னு தான் வளர்தாங்க. எனக்கு 10 வயசா இருக்கும்போதே ரெண்டு பேரும் இறந்துட்டாங்க.அதுக்கப்புறமா நான் இங்க யே வந்துட்டேன்.நான் சந்தோஷமா இருக்குறது வீட்டுக்கு வெளிய தான் . "
"கவல படாத மலர் நான் இருக்குர வரைக்கும் நீ இப்படிலாம் நினைக்க கூடாது.அதான் உனக்கு நான் இருக்கேன்ல அப்பறம் என்ன"
"நீங்க இருக்குறது எனக்கு யானை பலம் தருது குரு. அப்பறம் எங்க அண்ணண்,அப்பாவுக்கு தப்பாத புள்ள.நான் ரொம்ப வருஷம் பாட்டி வீட்லயே இருந்ததால அவ்வளவா பேசிக்க கூட மாட்டோம்.இப்ப நம்ம காதல எப்படி வீட்ல சொல்றது னு தான் நான் யோசிக்கறேன் குரு."
"அத பத்தி கவலை படாதடா எனக்கு இந்த வருஷத்தோட படிப்பு முடியுது .அதுக்கப்பறம் நான் வேலைக்கு போக ஆரம்பிச்சுடுவேன். .நான் இரண்டு வருஷம் வேலை பார்த்தாகனும் அதுவரை நீ மேல படி அதுக்குள்ள எல்லாம் சுமூகமா முடிஞ்சிடும் அதனால நீ கவல படாத டா.
உங்க வீட்ல நீ தான் முதல்ல பேசனும் டா . உன்னால முடியும் தைரியமா இரு.அப்பறமா நான் எங்க குடும்பத்தோட வந்து உன்னை பொண்ணு கேக்குறேன்."
அவனது வாரத்தைகள் அவளுக்கு மிகுந்த ஆறுதலை கொடுத்தது.மன நிம்மதியுடன் அவன் கைகள் பற்றியே மீண்டும் நடந்தாள்.
பின்பு குரு மலரை அழைத்துக்கொண்டு அவளை வீட்டில் drop செய்தான்.
(நம்ம போன அத்தியாயத்தில மலர காதலோட இரு கண்கள் பாத்துச்சுல அவரு பேரு தெரியுர வரைக்கும் நம் மிஸ்டர்.எக்ஸ் னே கூப்பிடலாம்.)
அரங்கத்திலிருந்து வெளியேரிய மலரை தொடர்ந்து வந்தான் மிஸ்டர்.எக்ஸ், குருவுடன் பேசும்போது சிவந்த மலரின் முகத்தை கண்ட அவன் குரு வின் மேல் கொலை வெறி கொண்டான்.
பின்பு குருவின் பைகை பின்தொடர்ந்து சென்று கடற்கரையில் சிறிது இடைவெளிவிட்டு அமர்ந்தவனால் அவர்கள் பேசியதை கேட்க இயலவில்லை என்றாலும் பொறுமையாக காத்திருந்தான்.பின்பு குருவை தொடர்ந்து மலரின் வீட்டை கண்டுகொண்டு வெற்றிச்சிரிப்பு சிரித்தான்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro