Episode 12
குருவும் மலரும் தங்களது தனி உலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்தாலும் நாட்கள் யாருக்காகவும் நிற்காமல் வேகத்துடன் சென்று கொண்டிருந்தது.
மலர் தன் இளநிலை இறுதியாண்டிலும் குரு முதுநிலை இறுதியாண்டிலும் அடிவைத்த வேளை கல்லூரிகளுக்கிடையிலான கலைநிகழ்சி போட்டி துவங்கி இருந்தது.போட்டிக்கு ஒரு வாரமே இருந்தநிலையில்.
குரு,"என் செல்லம்ல,அம்முகுட்டில ப்ளீஸ்டா, இந்த ஒரே ஒரு தடவை மட்டும் டா " என மலரிடம் கெஞ்சிக்கொண்டிருந்தான்.
மலர்,"முடியாது நான் சொன்னா சொன்னது தான் "
"ஏன்டி படுத்துற ப்ளீஸ்டி நீ கலந்துக்குறனு தெரியும்,ஆனா என்ன பாட்டுக்கு ஆடபோற னு தான கேக்குறேன்,"
"இல்லை குரு இன்னும் ஒரே ஒரு வாரம் தான் இருக்கு அதுவரைக்கும் வெயிட்பண்ணுங்க ப்ளீஸ் " என்று நாடியை பிடித்து செல்லம் கொஞ்சினாள்.
அப்போழுது வேகமாக வந்த கோகுல் பரபரப்பாக ஏதோ தேடினான்,"டேய் என்னடா தேடுற?" என்று கேட்ட குருவிடம்
"இல்லை குரு குரு னு ஒரு மானஸ்தன் இருந்தானே நீபாத்த.?அவனை கொஞ்ச நாளா ஆளை காணோம்."என்று கூறி சிரித்த கோகுலிடம் திரும்பிய குரு, "நீ அடி வாங்க போற,சிவ பூஜையில கரடி மாதிரி வந்துட்டு நக்கல் வேறையா பண்ற,உனக்கு குளிர்விட்டு போச்சுடா."
"எது இது சிவ பூஜை நான் கரடியா டேய் நீங்கெல்லாம் லவ் பண்றதே வேஸ்டுடா நீங்க ரெண்டு பேறும் பேசுறத கேட்டா லவ்வர்ஸ் பேசுற மாதிரி இல்லை ஏதோ ரெண்டு குட்டி பாப்பா பேசுற மாதிரி தான் இருக்கு"என்று நக்கலுடன் தன் நண்பனை பார்தவன் திகைத்தான்.
மலர் வேகமாக ,"நான் அப்பறம் வரேன் குரு ,"என்று கூறி அவ்விடம் விட்டு அகல
குருவோ கோபத்துடன் அவனை பார்த்துக்கொண்டிருந்தான்,"டேய் காதல் னா ஹக் பண்ணிக்கிறதும்,கிஸ் பண்ணிகிறதும் மட்டும் இல்லை,ஒருத்தறுக்கு ஒருதர் ஆறுதலா பேசுறது கூட காதல் தான்,ஆதரவுக்கு தோல் சாயுரதும் காதல் தான்.துவண்டு தோத்து போகும் போது உனக்காக நான் இருக்கேன் சொல்ற ஒரு பார்வை போதும் டா காதல உணர்த்த.நாங்க ரெண்டு பேரும் எங்களோட காலம் முடியுரை வரை சேர்ந்து தான் இருக்க போறோம் எங்களோட உணர்ச்சிகளை
வெளிப்படுத்த இந்த மாதிரி பொது இடத்துள எதுக்கு அவசர படணும்,ஒன்னு நல்லா தெரிஞ்சுக்க நம்ம காதல் நம்மளை வாழ வைக்கனுமே தவற ஒரு நாளும் தலை குனிவை ஏற்படுத்த கூடாது."என்று கூறி முடித்தான்.
"சாரி டா நான் தான் இவ்வளவு நாளும் தப்பா புரிஞ்சு இருந்திருக்கேன்."
"உன் மேல எந்த தப்பும் இல்லை டா இப்ப வர சினிமா வால தான் ஒட்டு மொத்த சமுதாயமே சீர்குலைந்து இருக்கு. காதலை வெறும் காமம் சார்ந்த ஒன்றாகவே காட்றாங்க. நான் சொன்னது ஏதாவது உன் மனச காயப்படுத்தியிருந்தா சாரிடா".உண்மையான வருத்தத்துடன் கூறினான் குரு.
"நீ யேன்டா சாரியெல்லாம் கேக்குற நானும் மத்தவங்க மாதிரி தான் நினைச்சுகிட்டு இருந்தேன் இப்ப நீ சொன்னதுக்கு அப்பறமா தான் இதுல இவ்வளவு விஷயம் இருக்குன்னே எனக்கு தெரியுது.ஒரு வேலை எனக்கும் காதல் வந்துச்சுன்னா கண்டிப்பா நானும் உன்ன மாதிரி தான் இருப்பேன்."
சரி வா நம்ம போய் கலைவிழா ஏற்பாடெல்லாம் எப்படி பண்ணிருக்காங்கன்னு பாத்துட்டு வந்தர்லாம் என்று கூரி கோகுலை அழைத்துக்கொண்டு அவ்விடம் விட்டு நகர்ந்தான்.
நாட்கள் வேகமாக நகர கலை நிகழ்ச்சி நடைபெறும் நாளும் வந்தது.
எல்லா போட்டிகளும் இனிதே துவங்கின. இரண்டாம் நாள் டான்ஸ் காம்படீஷன் தொடங்கியதும் மலரின் வருகையை எதிர்நோக்கி ஆவலுடன் காத்துக்கொண்டிருந்தான் குரு.
எல்லோரும் மிகவும் நன்றாக ஆடினர் அதனால் குரு சிறு பதட்டத்துடனே காணப்பட்டான்.
அடுத்த நடனத்திற்கான அறிவிப்பு வரவும் தடதடக்கும் இதயத்துடன் காத்திருந்தான்.
தக தக தக
தின தின தின
நாக நாக
என்று பாடல் தொடங்கியதும் 7 பெண்கள் வரிசையாக அரங்கத்திற்குள் நுழைந்தனர்.
அனைவரும் வெள்ளை நிறத்தில் வெள்ளி ஜரிகைவைத்த அனார்களி சுடி அணிந்திருந்தனர் நடுவில் ஆடிய மலர் மட்டும் தங்க ஜரிகையில் தேவதையென மின்னினாள்.
உன்னை காணாமல்
நான் இங்கு நானில்லையே
விதையில்லாமல்
வேர் இல்லையே
என்ற வரிகளுக்கு ஆடும்போது மலரின் கண்களில் அந்த கூட்டத்தில் தன்னவனை காணாமல் தேடும் ஏக்கம் தெரி்ந்தது.உடனே குரு மறைந்து நின்று கொண்டான்.
கண்கள் அவனை தேடினாலும் கால்களும் கைகளும் அந்த பாடலுக்கு ஏற்ப ஆடிக்கொண்டிருந்தன.
தூன் மறைவிலிருந்த குருவை கண்ட மலரின் விழிகள் சூரியனை கண்ட தாமரை போல் மலர்ந்தது.
இது நேராமலே....நான்
உன்னை பாராமலே..........நான்
இந்த முழு ஜென்மம் போய்யிருந்தால்.
என்று அதையென்னி
வீண் ஏக்கம் ஏங்காமலே
உன்னை மூச்சாகி வாழ்வேனடா.
பாடலிற்கேற்ப நளினமாக முகத்தில் உணர்சிகள் தான்டவமாட ஆடிக்கொண்டிருந்த மலரிடம் இருந்து கண்களை பிரித்தெடுக்க முடியாமல் தடுமாரினான் குரு.
மலரின் கண்களுக்கோ குருவை தவிற வேறெதுவும் தெரியவில்லை.
பாடல் முடிந்தும் ஒரு நிமிடம் அந்த அரங்கமே அமைதியாக இருந்தது.
பிறகு கரகோஷம் எழுந்தது.குருவோ தனக்கு கிடைத்த மலரின் காதலை நினைத்து பெருமைபட்டான்.
மலரை காதலுடன் பார்த்தது குருவின் கண்கள் மட்டுமல்ல வேறு இரு கண்களும் காதலுடன் மலரை பார்தது.பின்பு மலரின் கண்கள் சென்ற திசையில் குருவை பார்தததும் குரோதத்துடன் சபதம் எடுத்துக்கொண்டது.
இது எதையும் அறியாத அந்த இருவரும் தங்கள் காதல் வானில் சிறகில்லாமல் பறந்து சந்தோஷமாக உளா வந்தனர்.தங்களுக்கென்ற தனி உலகில் வாழ்ந்த அந்த சின்னஞ்சிறய பறவைகள் வாழ்வில் சோதனையும் வந்தது,அதில் தாங்கள் அடித்து செல்லப்படுவோம் என்று அறியாத அவர்கள் மிகவும் சந்தோஷமாக சுற்றி திரிந்தனர்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro