12
கதையாக எழுதப்பட்ட உண்மை!!
இயற்கை வளங்கள் அதிகம் நிறைந்த ஊர் அது , பார்க்கும் இடமெல்லாம் பச்சையாகவும் அது கண்களுக்கும் இதமாகவும் இருந்தது.
பார்க்கவே வியப்பாக இருந்தது. என் திருமண அழைப்பிதழை என் உறவினருக்கு கொடுப்பதற்காக அங்கு சென்றிருந்தேன். தேன் கூடு போல வீடுகள் அனைத்தும் ஒரே இடத்தில் காணப்பட்டது.போகும் வழியில் பழைய கதைகளில் வருவது போல, பெரிய ஆலமரமும், அதன் கீழ் வயதான பாட்டியையும் கண்டேன்.
பஸ்டாப்பில் இருந்து நடந்து வந்ததில் சற்று களைப்பாக இருந்தது. பாட்டியிடம் ஏதாவது இருக்குமா என்று பார்ப்பதற்காக அவர் அருகில் சென்றேன், அப்போது அந்த பாட்டி சொன்ன வார்த்தை என் காதில் காய்ச்சிய எண்னெயை ஊற்றியது போல இருந்தது.
டேய் ஓடுகாளி மவனே ரோட்டு பக்கம் போகாம பார்த்து விளையாடு, என்று அவர் கூறினாலும் அந்த வார்த்தைக்கு அர்த்தம் புரியாத வயதில் அச்சிறுவன் இருந்தான். சற்றும் யோசிக்காமல் அவரிடம் ஏன் பாட்டி உங்க பேரனை இப்படி திட்டுறீங்க என்று கேட்டேன்.
அட நீ வேரப்பா ,அந்த வார்த்தைக்கு அர்த்தம், அவனுக்கும் புரியாது, அவனோட முழுக்கதை யாருக்கும் தெரியாது என்று கண் கலங்க அச்சிறுவனையே பார்த்து கொண்டிருந்தார்.
மூன்று வருடத்துக்கு முன்னால, என்று அவனின் கதயை சொல்ல ஆரம்பித்தார். என்னோட தூரத்து சொந்தமான என் தங்கையின் மகன் இளவரசு.நல்ல வேலக்காரன், கடுமையா உழைப்பான்.
திருமண வயதை எட்டிய அவனுக்கு,அப்பா அம்மா கிடையாது. எல்லாமே நான்தான். அவனுக்கு பெண் பார்க்க நாங்க எல்லாரும் பக்கத்து ஊருக்கு புறப்பட்டோம்.
தெரிஞ்சவங்கள நாலு பேர விசாரித்ததில்,மூன்றாவது தெருவில் ஒரு நல்ல பெண் இருப்பதாக சொன்னாங்க. போய் பார்த்ததில், இளவரசரனுக்கு அந்த பெண்னை மிகவும் பிடித்திருந்தது. ஆம் அவள் பார்பதற்கு லட்சனமாய் இருந்தாள். அழகென்பது அவளிடம் சற்று அதிகமாக காணப்பட்டது. அவ்வபோது நாங்கள் நினைத்திருக்க மாட்டோம்,அழகில் பல ஆபத்து இருக்கும் என்று.
திருமணம் நல்லபடியா முடிஞ்சது. சில சில பிரச்சனைகளுடன் வாழ்க்கைச்சக்கரம் உருண்டோடியது. இதற்கிடையில் ஒரு அழகான ஆண் குழந்தையும் பிறந்தது. [அந்த குழந்தைதான் பாட்டி வளர்க்கும் சிறுவன்].
ஒருநாள் இளவரசு, வேலை விசயமாக வெளியூர் சென்றிருந்தான். வீட்டில் அவன் மனைவியும், குழந்தையும் இருந்தனர்.
இளவரசனுக்கும் அவன் மனைவிக்கும் அப்பப்போ சில பிரச்சனைகள் நடப்பதற்கு காரணமான, அந்த நபர் நல்ல படித்த இளைஞன் இவளைத்தேடி இவள் வீட்டிற்கு வந்திருந்தான்.
இருவரும் கல்லூரி படிக்கும்போது இனை பிரியாத காதலர்கள். சந்தர்ப்ப சூழ்நிலையால் பிரிய வேண்டிய நிலமை ஏற்ப்பட்டது. இருப்பினும் தொடர் சந்திப்பின் மூலம் இன்னமும் காதல் நீடித்து வந்தது. அவளிடம் அந்த இளைஞன் கூறினான், நாளைக்கு டிக்கெட் கன்பார்ம் ஆயிடும் காலையில நாலு மணிக்கு ஏர்போர்ட்டுல இருக்குனும். அவர் நாளைக்குத்தான் திரும்பி வராரு,என்று அவள் கூறினாள். அப்பன்னா இப்ப கிளம்பினாத்தான் சரியா இருக்கும், என்பது போல் இருவரின் விழிகளும் அசைந்தன.சிறிது நேரம் வீடு அமைதியாக இருந்தது.
தொட்டிலில் உறங்கிய குழந்தை பசியால் அழத்தொடங்கியது.பசியை தீர்க்க யாரும் வருவது போல் தெரியவில்லை. குழந்தை வேகமாக அழுவியதும் பக்கத்து வீட்டு அம்மா ஒருவர் வந்து குழந்தையை தூக்கினாள். அன்று காலை பொழுது விடிந்தது. ஊரிலிருந்து வீட்டை நோக்கி இளவரசு வந்து கொண்டிருந்தான். வீடு முழுக்க ஒரே கூட்டமாய் இருந்தது.
விசாரித்ததில், இவன் மனைவியும்,அந்த இளைஞனும் ஓடி........,
என்ற செய்தியை கேட்டதும், இவன் கண்களில் கண்ணீர் ஆறாய் பெருக்கெடுத்து ஓடியது...பின்பு ஓரிரு நாட்களும்.
ஒரு சில மாதங்களும் இவனையும் இவன் குழந்தையையும் சந்தித்து சென்றன. குழந்தையை அவன் பார்க்கும் போதெல்லாம் அவள் முகம் தெரிவது போல இவன் உணர்ந்தான். ஒரு நாள் இவன் தன் தூரத்து சொந்தமான தன் பெரியம்மா வீட்டிற்கு தன் குழந்தையோடு வந்திருந்தான். ஆனால் பாட்டியோ வீட்டில் இல்லை. அக்கம் பக்கம் விசாரித்தான், பாட்டி கடைக்கு போய் இருப்பதாக சொன்னார்கள்.
பெரியம்மாவிடம் குழந்தையை பார்த்துக்கொள்ளுங்கள் என்று எப்படி சொல்வது என்று யோசித்தான்.அவன் முகத்தில் குழப்பம் தெரிந்தது.பிறகு பக்கத்து வீட்டு அம்மாவிடம்,இந்த குழந்தையை கொஞ்சம் பார்த்துக்குங்க இதோ வந்து விடுகிறேன் என்று கூறினான்.பாட்டியின் சொந்தகாரன் தானே என்று அவர்களும் அந்த குழந்தையை வாங்கி கொண்டனர்.
அன்று சென்றவன்தான் இன்று வரை திரும்பவில்லை. என் தங்கச்சி மகன், வெளியூரில் திருமணம் முடித்து, குழந்தையுடன் இருப்பதாக, டவுனுக்கு போய் வரவுங்க என்னிடம் சொல்வாங்க.
அவர்கள் சொல்வதை எதையும் நான் காதில் போட்டுக்கொள்வதில்லை. இப்படியே மூன்று வருடங்கள் கடந்து விட்டது என்று கண்களில் கோபத்தோடு கலந்த கண்ணீருடன் கதையை முடித்தார்.
இதை கேட்ட எனக்கு நாடி துடிப்புகள் தாறுமாறாய் ஓடியது.அந்த சிருவனின் தலையில் செல்லமாக வ்ருடிவிட்டு, திரும்பி ஊருக்கு புறப்பட்டேன். வ்ருங்கால மனைவியிடம் பல முறை மனம் விட்டு பேசியதன் மூலம் என்னோட மனகுழப்பம் தீர்ந்தது.
''காதலிப்பது தவறல்ல, சந்தர்ப்ப சூழ்நிலையால் பிரியும் நிலை ஏற்பட்டால், உண்மையை கூறிவிடுவது நல்லது.
இல்லையேல், பிரியும் போது தன் காதலையையும் மறந்து விடுவது அதை விட நல்லது'.'
மேலும்.., தெய்வத்திற்க்குச்சமமான குழந்தைகளை, அல்ப இச்சைகளுக்காக அனாதையாக்கி விடாதீர்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro