42 பூங்குழலியின் யோசனை
42 பூங்குழலியின் யோசனை
அவ்வளவு எளிதாய் மலைத்துவிடக் கூடியவன் அல்ல மலரவன். ஆனால் பூங்குழலி அவனை முதல் முறையாக அணைத்த போது, அவனால் மலைக்காமல் இருக்க முடியவில்லை. தான் கனவு காணவில்லை என்பது அவனுக்கு நிச்சயமாக தெரியும். ஏனென்றால், அவள் அணைத்த உடன் அவனுக்குள் நிகழ்ந்த மாற்றத்தை அவன் நன்றாகவே உணர்ந்தான். அவனது உடலில் ஜிவ்வென்று ரத்தம் பாய்ந்தது. ஆனால் இதில் பூங்குழலியுடைய மனநிலை என்ன?
"பூங்கு....ழலி..." தடுமாறினான் அவன்.
"ம்ம்ம்?"
"இப்போ நான் என்ன செய்யணும்?"
அவனது நெஞ்சில் சாய்ந்தபடி சிரித்த அவள்,
"ஒன்னும் செய்யாதீங்க" என்றாள்.
"இல்ல, நானும் உன்னை கட்டிப்பிடிச்சுக்குவேன்" என்று அவனும் அவளை இறுக்கமாய் அணைத்துக் கொண்டான்.
அவளும் அவன் நெஞ்சில் ஆழமாய் முகம் புதைத்தாள்.
"பூங்குழலி, நீ நிஜமாவே சீரியஸா தான் இருக்கியா?" என்றான் தாழ்ந்த குரலில்.
அவள் இல்லை என்று தலையசைக்க,
"எனக்கு தெரியும், நீ சீரியஸா தான் இருக்க" என்றான் மலரவன்.
"நீங்க ரொம்ப குழம்பி போய் இருக்கிற மாதிரி தெரியுது...?"
"ஏன் நான் குழம்ப மாட்டேன்? நீ என்னை கட்டிப்பிடிச்சுக்கிட்டு இருக்கியே..."
"அப்படின்னா நான் விலகி போகட்டுமா?" என்றாள் தன் தலையை உயர்த்தி அவனை பார்த்து.
"தேவையில்ல... நான் குழப்பமாவே இருந்துட்டு போறேன்..." அவளை மேலும் இறுக்கமாய் அணைத்துக் கொண்டு கண்களை மூடிக்கொண்டான்.
"மலர்..."
"ம்ம்ம்?"
"ஐ லவ் யூ"
திடுக்கிட்டு கண்ணை திறந்தவன், தன்னை மறந்து அவன் நெஞ்சில் சாய்ந்திருந்த அவளை ஏறிட்டான். தன் கையால் அவள் முகத்தை உயர்த்தினான். அவனை மருட்ச்சியுடன் பார்த்தாள் பூங்குழலி.
"நீ என்ன சொன்ன?" என்றான் நம்ப முடியாமல்.
"என்ன சொன்னேன்?"
"நீ சொன்னதை திரும்ப சொல்லு"
அவள் முடியாது என்று தலையசைத்து மீண்டும் அவனை அனைத்துக் கொள்ள விழய, அவளைத் தடுத்த அவன்,
"நீ சொன்னதை ரிப்பீட் பண்ண சொன்னேன்" என்றான்.
"கோல்டன் வேர்ட்ஸ் ஆர் நாட் ரிப்பீட்டட்" என்றாள் பூங்குழலி.
அவள் முகத்தையே சிறிது நேரம் பார்த்திருந்த மலரவன்,
"நீ என்ன நினைக்கிற? நீ அதை திரும்ப சொல்லலைன்னா, நான் ஒன்னும் செய்ய மாட்டேனா?"
"நான் அதை திரும்ப சொல்லலைன்னா நீங்க ஒன்னும் செய்ய மாட்டீங்களா?" அதே கேள்வியை அவளும் திரும்ப கேட்டாள்.
மீண்டும் மலைத்தான் அவன். பூங்குழலி அவனைப் பார்த்து சிரிக்க, அவளது நெற்றியில் முத்தமிட்டான் மலரவன். பின் அவளது கண்கள்... அவளது இதழ்களில் அவனது பார்வையை சில நொடி நிலைக்க விட்ட பின், தன் இதழ்களை அவள் இதழ்களின் மீது ஒற்றி எடுத்தான்... மீண்டும் ஒற்றினான்.... மீண்டும்... மீண்டும் மீண்டும்... இந்த முறை சற்று அழுத்தமாக... ஒற்றியது ஒற்றியபடி, விலக மனம் இல்லாமல் அப்படியே நின்றான். மேலும் யோசிக்க ஒன்றுமில்லை... அவள் இதழ் பற்றி முத்தமிட்டான். அவளது இடையை வளைத்து அவளை தூக்கிக் கொண்டான், அவன் கழுத்தை வளைத்து இறுக்கிக் கொண்டாள் பூங்குழலி. 'பொன்னான வார்த்தைகளை மீண்டும் கூறுவதற்கு இல்லை' என்று அவள் கூறினாள். ஆனால் அதன் அர்த்தத்தை செயலில் வெளிப்படுத்தினாள் அவள். பிரியமான முத்தத்திற்கு பின்,
"எத்தனை நாள்... நான் செத்திருக்கேன் தெரியுமா...?" என்றான் அவளைக் கீழே இறக்கி விடாமல். மீண்டும் அவள் கன்னத்தில் முத்தமிட்டான்.
"என்னை கீழ விடுங்க"
"ஏன்?"
"விடுங்கன்னா விடுங்க"
"முடியாது" மேலும் இறுக்கிக் கொண்டான்.
"நம்ம ஹனிமூனை லண்டன்ல தானே பிளான் பண்ணிங்க? அங்க போக போறது இல்லையா?"
"நான் பிளான் பண்ணது நம்ம ஹனிமூனை தான். ஃபர்ஸ்ட் நைட்டை இல்ல. இந்தியாவுல நம்ம ஃபர்ஸ்ட் நைட்டை முடிச்சிட்டு, ஹனிமூனுக்கு லண்டன் போகலாம்"
"இதை எப்போ பிளான் பண்ணீங்க?"
"இப்போ தான்"
"என்னை இப்படியே லண்டனுக்கு தூக்கிட்டு போக போறீங்களா?"
"இல்ல இப்படியே கட்டிலுக்கு தூக்கிக்கிட்டு போக போறேன்..."
"அவ்வளவு என்ன அவசரம் உங்களுக்கு?"
"அவசரமா? விளையாடுறியா? ஒரு வருஷம் காத்திருந்திருக்கேன்"
"அதனால?"
"அதனால..." அவள் கன்னத்தைக் கடித்தான்.
"உங்களுக்கு ரொம்ப தைரியம் தான்"
"இல்லன்னு நினைச்சுகிட்டு இருந்தியா?"
"இவ்வளவு தூரத்துக்கு இருக்கும்னு நினைக்கல"
"அப்படின்னா என்ன அர்த்தம்?"
"உடனே ஆரம்பிக்கணும்னு நினைச்சா எப்படி?"
"நான் இன்னும் ஆரம்பிக்கவே இல்லையே"
சிரித்தபடி தன் நெற்றியை அவன் நெற்றியுடன் இணைத்தாள்.
"பூங்குழலி..."
"ம்ம்ம்?"
"ஏதாவது சொல்லு"
"என்ன சொல்லணும்?"
"ஏதாவது கிரேஸியா..."
"உங்க உதட்டை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு"
அதை கேட்டு சிரித்த அவன்,
"இது எப்போதிலிருந்து?" என்றான்.
"இப்போ ஒரு அஞ்சு நிமிஷமா தான்"
இருவரும் சிரித்தார்கள்.
"என்னை இறக்கி விடுங்க"
"ஏன்?"
"சங்கடமா இருக்குல்ல..."
"அப்படி எல்லாம் ஒன்னும் நீ ஃபீல் பண்ண வேண்டியதில்ல"
"ஏன்?"
"ஏன்னா நான் மலரவன்"
"அதனால?"
"பூங்குழலி பிறந்தது, மலரவன் கைக்குள்ள இருக்கத்தான்"
"ஓஹோ... அப்படின்னா அதை ஏன் நீங்க முன்னாடியே சொல்லலையாம்?"
"உன்னை பயமுறுத்த வேண்டாம்னு நெனச்சேன்"
"இப்போ நான் பயப்படலைன்னு நினைக்கிறீங்களா?"
"பயப்படுறியா?"
"நீங்க என்ன நினைக்கிறீங்க?"
"இல்லன்னு நினைக்கிறேன்"
"எப்படி?"
"நீ தானே என் உதடு புடிச்சிருக்குன்னு சொன்ன..."
"அய்யய்யோ... நான் உளறிட்டேனா?"
சிரித்தபடி, ஆம் என்று தலையசைத்தான் மலரவன். அவனது சிரித்த முகத்தை சில நொடி கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்த பூங்குழலி அவன் நெற்றியில் முத்தமிட்டாள்.
"ஐ லவ் யூ சோ மச்" என்றாள்.
"தேங்க்ஸ்"
"ஏன்னா, நீங்க ரொம்ப நல்லவரு"
"தேங்க்ஸ்"
"பார்க்கவும் அழகா இருக்கீங்க"
"தேங்க்ஸ்"
"என்னை இறக்கி விடுங்க"
"தேங்... ( மீண்டும் தேங்க்ஸ் என்று கூறப்போனவன், நிறுத்திவிட்டு) முடியாது" என்றான்.
"எப்பவும் எப்படி உங்களால பேலன்ஸ்டா இருக்க முடியுது?"
புன்னகையை பதிலாய் தந்தான் அவன்.
"உங்களுக்கு கை வலிக்கலையா?"
"இல்ல"
"பொய் சொல்லாம என்னை கீழே விடுங்க"
"சரி, எனக்கு ஒரு முத்தம் கொடு. உன்னை கீழே விடுறேன்"
அவன் கன்னத்தில் முத்தமிட்டாள்.
"நான் என்ன குழந்தையா? இந்த குழந்தை முத்தம் எல்லாம் எனக்கு வேண்டாம்"
"இப்படியெல்லாம் என்னை டார்ச்சர் பண்ணா உங்களை கடிச்சிடுவேன்"
கடித்துக்கொள் என்பது போல் தன் கன்னத்தை காட்டி சிரித்தான் மலரவன். அவளும் கடிப்பது போல் பாவனை செய்ய, வாய்விட்டு சிரித்தான் அவன்.
"என்னை இப்போ கீழ விட போறீங்களா இல்லையா?"
தன் உதடுகளை அழுத்திக் கொண்டு முடியாது என்று தலையசைத்தான்.
அப்பொழுது யாரோ கதவை தட்டும் சத்தம் கேட்க, எரிச்சல் அடைந்தான் மலரவன். பூங்குழலியோ கலகலவென சிரித்தாள்.
"இப்போ என்ன செய்வீங்க? இப்போ என்ன செய்வீங்க?" அவனை கிண்டல் செய்தாள்.
அவளைக் கீழே விடாமல், தூக்கிக் கொண்டு கதவை நோக்கி நடந்தான் மலரவன்.
"நீங்க என்ன பண்றிங்க மலர்?" என்றாள் பதற்றத்துடன்.
"கதவை திறக்கப் போறேன்"
"இப்படியேவா?"
"ஆமாம் இப்படியே தான்"
"மலரா..." என்று மீண்டும் கதவைத் தட்டினார் மணிமாறன்.
"கதவை தட்டறது அங்கிள்..." பரிதவித்தாள் பூங்குழலி.
"ஆமாம், அப்பா தான்"
"மலர்..."
"ம்ம்ம்?"
"இப்போ உங்களுக்கு என்ன வேணும்?"
"இன்னைக்கு நமக்கு ஃபர்ஸ்ட் நைட்... என்ன சொல்ற?"
"நான் எனக்கு டைம் வேணும்னு கேட்டேன் இல்ல?"
"ஓகே..." மீண்டும் கதவை நோக்கி நடந்தான்.
"மலர் ப்ளீஸ்..."
அவள் கெஞ்சலுக்கு செவி சாய்க்காமல், கதவை சென்றடைந்தான் மலரவன். அவளை ஒரு கையால் பிடித்துக் கொண்டு ஒரு கையால் கதவை திறக்க முயன்றான்.
"மல்...லர்...."
"சொல்லு, இது தான் கடைசி சான்ஸ் நான் கதவை திறக்க போறேன்"
"சரி"
"என்ன சரி?"
"இன்னைக்கு நமக்கு ஃபர்ஸ்ட் நைட்"
வெற்றி புன்னகையுடன் அவளை கீழே இறக்கி விட்டான் மலரவன். அவனை பட்டென்று அவள் ஒரு அடி போட்ட அதே நேரம், மலரவன் கதவை திறந்தான். பூங்குழலி மலரவனை அடித்ததை பார்த்த மணிமாறன், தன் புருவம் உயர்த்தினார்.
"வந்து அங்கிள்..."
"நான் அவளை லண்டனுக்கு கூட்டிக்கிட்டு போறேன்னு என் மேல அவ அப்சட்டா இருக்கா பா... அவ அம்மா கூடயே இருக்க விரும்புறா" நிலைமையை சமாளித்தான் மலரவன்.
"இல்லடா மா... நீ அப்செட் ஆகாத. லண்டன் ப்ரோக்ராமுக்கு, வேற சரியான ஆள் கிடையாது. ஆனா மின்னலை பார்த்துக்க நாங்க எல்லாரும் இருக்கோம்"
"சிவகாமி ஆன்டியும், அத்தையும் இங்க வந்தா, அம்மாவுக்கு ஹெல்ப் ஃபுல்லா இருக்கும்னு பூங்குழலி நினைக்கிறா"
"சிவகாமியும், அக்காவுமா? நம்ம ஏம்மா அவங்களை டிஸ்டர்ப் பண்ணனும்?"
"இதுல என்ன டிஸ்டர்பன்ஸ்?" என்ற குரல் கேட்டு அவர்கள் பின்னால் பார்க்க, அங்கு சிவகாமியும் வடிவுகரசியும் நின்று இருந்தார்கள்.
அவர்களைப் பார்த்த மலரவனின் புருவம் மேலே உயர்ந்தது. பூங்குழலி அவர்களை இங்கு வரவழைப்பது பற்றி ஏற்கனவே அவர்களிடம் பேசி விட்டாளா? அவன் பூங்குழலியை பார்க்க அவனை பார்த்து அவள் புன்னகைத்தாள்.
"வாங்க அக்கா, வாமா சிவசாமி" அவர்களை வரவேற்றார் மணிமாறன்.
"மின்னல் கீழ விழுந்ததை பத்தி என்கிட்ட சொல்லணும்னு கூட உங்களுக்கு தோணல. குழலி தான் எங்களுக்கு சொன்னா" என்றார் வடிவுக்கரசி.
"அப்படி இல்லக்கா. நானே அவளை பாத்துக்கலாம்னு நினைச்சேன்"
"நீங்க என்ன செய்வீங்க? குழலி மலரவன் கூட லண்டன் போறா. அவங்க இங்க இருக்க மாட்டாங்க. தனியா நீங்க என்ன செய்வீங்க?"
பதில் சொல்லாமல் சிரித்தார் மணிமாறன்.
"நாங்க இங்க இருக்கிறது உங்களுக்கு சங்கடமா இருந்தா நாங்க போறோம்"
"அய்யய்யோ அப்படியெல்லாம் ஒன்னும் இல்லக்கா" என்றார் மணிமாறன்.
"நாங்க போய் மின்னலை பார்க்கிறோம்"
"வாங்க கா" என்று மணிமாறன் நடக்க, அவர்கள் அவரை பின்தொடர்ந்தார்கள்.
பூங்குழலியும் அவர்களுடன் செல்ல முயல அவள் கரத்தைப் பற்றி நிறுத்தினான் மலரவன். விழி விரித்து அவனை பார்த்தாள் பூங்குழலி.
"இன்னைக்கு என்னன்னு மறந்துடாத... தயாரா இரு" என்றான்.
அவன் கையை உதறிவிட்டு ஓடிப்போனாள் பூங்குழலி.
அவர்கள் மின்னல்கொடி இருந்த அறைக்கு வந்தார்கள். அவர்களை பார்த்த மின்னல்கொடி பரவசமானார். கீர்த்தியோ எரிச்சலானாள். அதை கவனிக்க தவறவில்லை பூங்குழலி
"வா சிவகாமி. வாங்க அக்கா" என்றார் மின்னல்கொடி.
"அவங்க உன்னை கவனிச்சுக்க தான் இங்க வந்திருக்காங்க" என்றார் மணிமாறன்.
மின்னல்கொடி திகைத்தார்.
"இதுல அதிர்ச்சியாக எதுவும் இல்ல. இப்படிப்பட்ட நேரத்துல உதவி செய்யலன்னா, அப்புறம் நாங்க எதுக்கு இருக்கோம்?" என்றார் சிவகாமி.
"ஆனா..."
"ஆனா, ஆவன்னாவெல்லம் வேண்டாம்... பூங்குழலி லண்டன்ல இருந்து திரும்பி வர வரைக்கும் நாங்க இங்க தான் இருக்க போறோம்"
"நீ தான் இவங்களை வர சொன்னியா பூங்குழலி?
ஆம் என்று தலையசைத்தாள் பூங்குழலி.
"நீங்க என்னை லண்டன் போக சொன்னீங்க. இப்படிப்பட்ட நிலைமையில உங்களை விட்டுட்டு, எப்படி ஆன்ட்டி நான் போக முடியும்? அதனால் தான் அவங்களை வர சொன்னேன்"
"நீ ஏன் பூங்குழலி அவங்கள டிஸ்டர்ப் பண்ற? நான் தான் இருக்கேனே" என்றாள் கீர்த்தி.
சிவகாமியும் வடிவக்கரசியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
"நீ பாத்துக்குவ தான் கண்ணு... நீ சின்ன பொண்ணு இல்லையா? உனக்கு ஒன்னும் தெரியாது. அதுக்காகத் தான் உனக்கு எல்லாத்தையும் சொல்லிக் கொடுக்க நாங்க இங்க வந்திருக்கோம். உங்க மாமியாருக்கு சேவை செய்றதை நாங்க தடுக்க மாட்டோம் கவலைப்படாதே" என்றார் வடிவுக்கரசி.
இல்லாத புன்னகையை வலிய வரவழைத்து சிரித்தாள் கீர்த்தி.
"நீங்க கீர்த்தியை குறைச்சி எடை போடாதீங்க அத்தை. அவ எல்லாத்தையும் கத்துக்கணும்னு ரொம்ப ஆர்வமா இருக்கா. எல்லாத்துக்கும் மேல, ஆன்ட்டியை பார்த்துக்கிட்டே தீருவேன்னு ஒத்த கால்ல நிக்கிறா. நீங்க என்ன செய்யணும்னு மட்டும் அவளுக்கு சொல்லுங்க. அவ எல்லாத்தையும் செய்வா. நான் சொல்றது சரி தானே கீர்த்தி?" என்றாள் பூங்குழலி.
செயற்கை புன்னகையுடன் ஆம் என்று தலையசைத்தாள் கீர்த்தி. அவள் இந்த பெண்களுடனா இருக்க போகிறாள்? என்ன கஷ்ட காலம் இது? பூங்குழலி லண்டனுக்கு சென்ற பின் ஒரு செவிலியயை பணியமரத்தலாம் என்றல்லவா அவள் நினைத்துக் கொண்டிருந்தாள்...! நடப்பதை பார்க்கும் போது, இந்த பூங்குழலி அவளை நிம்மதியாய் இருக்க விடமாட்டாள் போலிருக்கிறது.
அவளது முகம் போன போக்கை பார்த்த மலரவன், சிரிப்பை அடக்கி கொண்டான்.
பூங்குழலிக்கு அவன் மனதிற்குள் நன்றி கூறினான். சிவகாமியும் வடிவக்கரசியும், மின்னல்கொடியை மட்டுமல்ல, அகங்காரம் பிடித்த கீர்த்தியையும் கவனித்துக் கொள்வார்கள் என்றெண்ணினான். எல்லாவற்றிற்கும் மேலாக அவனை மகிழ்வடைய செய்தது, வரவிருக்கும் இரவு... அவர்களது முதல் இரவு...!
தொடரும்...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro