Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

39 கீர்த்தியின் செயல்

39 கீர்த்தியின் செயல்

அழைப்பு மணியின் ஓசை கேட்ட கீர்த்தி, வரவேற்பறையில் யாரும் இல்லாததால், கதவை திறந்தாள். அங்கு ஒருவன் நின்று கொண்டிருந்தான்.

"நீங்க யாரு?" என்று அவள் கேட்க,

"நான் எம்எம் ஆஃபீஸ்ல இருந்து வரேன். மலரவன் சார் கிட்ட கொடுக்க சொல்லி, மித்திரன் சார் இதை குடுத்து அனுப்பினார்" என்றான்.

"நான் அதை அவர்கிட்ட குடுத்துடுறேன்" என்று தன் கையை அவனிடம் நீட்டினாள் கீர்த்தி.

அதே நேரம் அங்கு வந்த மின்னல்கொடி,

"இது யார் கீர்த்தி?" என்றார்.

கீர்த்தியிடம் கூறிய அதே விவரத்தை அவரிடமும் கூறினான் அவன். அவனிடம் இருந்த உரையை பெற்றுக் கொண்ட மின்னல்கொடி,

"இது என்ன?" என்றார்.

"மிஸ்டர் அண்ட் மிஸஸ் மலரவனோட லண்டன் டிக்கெட், மேடம்" என்றான்.

"அப்படியா?" என்று மின்னல்கொடி மகிழ்ச்சியுடன் கேட்க, கீர்த்திக்கு வயிறு பற்றி எரிந்தது.

"லண்டனா?" என்றாள்.

"அவங்க ரெண்டு பேரும், அங்க நடக்க இருக்கிற ஒரு ஈவென்ட்க்காக லண்டன் போறாங்க" என்று கூறியபடி அங்கிருந்து மலரவனின் அறைக்கு சென்றார் மின்னல்கொடி.

அதை கேட்ட கீர்த்தி, வெறி பிடித்தவள் போல் ஆனாள். இங்கு, அவளது திருமண வாழ்க்கை, திருசங்கு சொர்க்கம் போல ஊசலாட்டம் போட்டுக் கொண்டிருக்கும் வேளையில், பூங்குழலி தேனிலவுக்காக லண்டன் செல்கிறாளா? அப்படி என்றால் அவர்கள் தங்கள் திருமண வாழ்வை துவங்கி விட்டு இருக்க வேண்டும். அதனால் தான், லண்டனில் நடக்கும் ஈவன்டை ஒரு சாக்காக  வைத்துக்கொண்டு, அங்கு செல்ல துடிக்கிறார்கள். அப்படி என்றால், அவள் இங்கு எதற்காக இருக்கிறாள்? இங்கே நடக்கும் இந்த கருமத்தை எல்லாம் பார்ப்பதற்காகவா? நிச்சயம் இல்லை... மகிழன் அவளது கட்டுப்பாட்டிற்குள் வருவதாக தெரியவில்லை. மகிழன் மீது தன் கவனத்தை செலுத்துவதை விட, மலரவன் பூங்குழலியை சேரவிடாமல் தடுப்பதுதான் இப்போதைக்கு முக்கியம். அவர்கள் சந்தோஷமாய் இருக்கவே கூடாது... நரகத்தை அனுபவிக்க வேண்டும் என்று பல்லை கடித்தாள் கீர்த்தி.

அந்த டிக்கெட்டுகளுடன் மலரவனின் அறைக்கு வந்த மின்னல்கொடி, அதை மலரவனிடம் கொடுத்தார்.

"மல்லு, உங்க டிக்கெட் வந்துடுச்சி"

"ஓ, வந்திருச்சா தேங்க்யூ மா" அதை அவரிடம் இருந்து சந்தோஷமாய் பெற்றுக் கொண்டான் மலரவன்.

"எவ்வளவு நாளைக்கு லண்டன்ல இருக்க போறீங்க?"

"நீங்க என்ன நினைக்கிறீங்க?" என்று அவரை திருப்பி கேட்டான் மலரவன் புன்னகையோடு.

"நான் எதுவும் நினைக்கலையே...!"

"முதல் அஞ்சு நாள், ஈவண்ட்ல  ரெண்டு பேரும் பிஸியா இருப்போம். அதுக்கப்புறம் அங்க ஒரு வாரம் தங்குவோம்"

"சரி, எது எப்படி இருந்தாலும், எனக்கு அங்க போயிட்டு கால் பண்ணு"

"பண்றேன் மா..."

"அங்க போன பிறகு என்னை மறந்துட மாட்டியே?" என்றார் கிண்டலாக.

"மா..." என்று தலையை சாய்த்து அவரை பார்த்து சிரித்தான் மலரவன்.

அங்கிருந்து சிரித்தபடி சென்றார் மின்னல்கொடி.

குளியலறையில் இருந்து, தன் ஈர முகத்தை துடைத்தபடி வெளியே வந்தாள் பூங்குழலி. அந்த டிக்கெட்டுகளை அவளை நோக்கி நீட்டினான் மலரவன். கேள்விக்குறியுடன் புருவம் உயர்த்தினாள் பூங்குழலி.

"நம்ம ஹனிமூன் டிக்கெட்ஸ்" என்றான்.

லேசாய் சிரிக்கும் கண்களோடு அவனை ஏறிட்டாள் பூங்குழலி.

"நான் விளையாட்டுக்கு சொல்லல,, பூங்குழலி. சீரியசா தான் சொல்றேன்" என்றான் சிரித்தபடி.

ஒன்றும் கூறாமல் அவனைக் கடந்து சென்றாள் பூங்குழலி.

"போலி நம்பிக்கையோட இருக்காத. நம்ம போறது லண்டனுக்கு. அங்க வெதர் கண்டிஷன் எவ்வளவு சில்லுனு இருக்கும்னு தெரியுமா? உனக்கு அங்க நிச்சயம் என்னோட உதவி தேவைப்படும்" என்றான் சீரியஸாக.

"இதைப் பத்தி பேசாம உங்களால அமைதியா இருக்க முடியாதா?"

"எதுக்காக நான் அமைதியா இருக்கணும்னு கொஞ்சம் சொல்றியா?"

"என்னை கம்ஃபர்டபிளா வைக்கிறதுக்காக"

"இப்போ நான் அதைத்தானே செஞ்சுக்கிட்டு இருக்கேன்...! உன்னை என்கிட்ட கம்ஃபர்டபிளா வைக்கத்தான் முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கேன்... எல்லா விதத்திலும்..."

"போதும் நிறுத்துங்க" என்றாள் ஏளன நகைப்போடு.

"என் கூட முழுசா கம்ஃபர்ட்டபிளா உணர, உனக்கு இன்னும் ரெண்டு நாள் தான் இருக்கு... கெட் ரெடி"

அவனை கூரிய பார்வை பார்த்தாள் பூங்குழலி.

"நெஜமா தான் சொல்றேன் பூங்குழலி. நம்ம லண்டனுக்கு போனதுக்கு பிறகு நீ இப்படியெல்லாம் இருக்க முடியாது"

"நம்ம லண்டனுக்கு போறது ஒரு ஈவண்டுக்காக..."

"கரெக்ஷன்... ஒரு ஈவண்டுக்காக மட்டும் இல்ல... இன்னொரு ஈவண்ட்க்காகவும்..."

முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு கட்டிலில் அமர்ந்து கொண்டாள் பூங்குழலி.

"அப்செட் ஆயிட்டியா?" என்றான் மலரவன்.

முகத்தை உம்மென்று வைத்துக் கொண்டு ஒன்றும் கூறாமல் இருந்தாள் பூங்குழலி.

"ஒன்னும் பிரச்சனை இல்ல. நீ அப்செட்டா இருந்துக்கோ" என்று சிரித்தான்.

"என்ன்னனது?"

"நம்ம ஹனிமூன்ல மத்த விஷயத்தை பேசிக்கலாம்" என்றான்.

"அப்படின்னா நான் ரெண்டு நாள் வரைக்கும் அப்செட்டா இருந்தா உங்களுக்கு பரவாயில்லையா?" என்றாள் உதட்டை சூழித்து.

"நீ சொல்றதை பார்த்தா, நீ நம்ம ஹனிமூனுக்கு ரெடி ஆயிட்ட போல இருக்கு... அதுக்கு இன்னும் ரெண்டு நாள் தான் இருக்குன்னு கரெக்டா சொல்றியே"

"நான் போறேன்... உங்ககிட்ட பேசமாட்டேன்"

"இப்போதைக்கு நீ இங்க இருந்து போகலாம். ஆனா ரெண்டு நாள் கழிச்சு உன்னால முடியாது. லண்டன் கிளைமேட், நமக்குள்ள இருக்கிற இடைவெளியை அழிச்சிடும். குளிர் தாங்காம நீ என்னை கட்டிப்பிடிக்க போற, அதுக்கப்புறம் எதுவும் என்னை தடுக்க முடியாது"

கட்டிலின் மீது இருந்த தனது கைபேசியை எடுத்துக்கொண்டு அங்கிருந்து விடுவிடுவென நடந்தாள் பூங்குழலி.

"இவர் இப்படி ஒவ்வொன்னத்தையும் வெளிப்படையா விளக்கி சொல்றதை விட, இவர் என்னை தொடுறதே பரவாயில்ல" என்று முணுமுணுத்தாள்.

"அதையே தான் நானும் சொல்றேன்" என்றான் அவளை பின்தொடர்ந்து வந்த மலரவன்.

பின்னால் திரும்பி, அவனை பார்த்து முறைத்தாள் பூங்குழலி.

"எப்படியோ நீ கரெக்ட் ட்ரக்குக்கு வந்துட்ட. உன் மனசை மாத்திக்காத..."

அவனை பிடித்து தள்ளிவிட்டு, அறையை விட்டு வெளியேறினாள் பூங்குழலி.

இதற்கிடையில்,

தனக்கு முன்னால் நின்றிருந்த மகிழனை பார்த்து, சங்கடத்துடன் சிரித்தான் ராகேஷ்.

"எப்படி இருக்க மகிழா?" என்றான் தட்டுதடுமாறி.

"நான் எப்படி இருப்பேன்னு உனக்கு தெரியாதா?

"ஆங்..."

"தெரியுமா? சரி சொல்லு, நான் எப்படி இருப்பேன்?

"நீ எந்த அர்த்தத்துல கேக்குறேன்னு எனக்கு புரியல"

"நான் புதுசா கல்யாணம் ஆனவன். என்னோட வாழ்க்கை எப்படி இருக்கும்?"

அவனுக்கு பதில் சொல்ல திணறினான் ராகேஷ்.

"சரி விடு... மோசமானவங்களை எல்லாம் என் வாழ்க்கையில நான் டீல் பண்ணனும்னு என்னோட விதி" என்றான் சீரியஸான முகபாவத்துடன்.

ராகேஷின் முகம் பயத்தில் வியர்த்தது.

"சரி வா போகலாம்" என்றான் மகிழன்.

"எங்...க?

"பாருக்கு?"

"பாருக்கா?"

"ஆமாம், வா போய் குடிச்சிட்டு வரலாம்"

"இல்ல மகிழா, இப்போ எனக்கு குடிக்கிற மூடு இல்ல"

"மூடா? நீயா மூடை பத்தி பேசுற? ஆஃபீஸ் நேரத்திலேயே குடிக்க தயங்காதவன் ஆச்சே நீ..."

"அது வந்து..."

"வா போகலாம்"

"குடிக்கிறது உடம்புக்கு நல்லது இல்ல மகிழா"

அதைக் கேட்டு சிரித்தான் மகிழன்.

"இதோ பாருடா... யார் எதை பத்தி  பேசுறதுன்னு... எங்க அண்ணன் கல்யாணம்னு கூட பாக்காம, என்னை கட்டாயப்படுத்தி குடிக்க வச்சிட்டு, இன்னைக்கு நீ தத்துவம் பேசுறியா?" பைத்தியக்காரனை போல் சிரித்தான் மகிழன், ராகேஷுக்கு பதற்றத்தை தந்து.

"நீ எதுக்காக மகிழா இப்படி சிரிக்கிற?"

"ஏன்னா, உன்னை பார்த்து சிரிக்கிற சந்தர்ப்பம் எனக்கு மறுபடி கிடைக்காமலேயே போகலாம்...! உன்னோட கதை சீக்கிரமே முடிய போகுது. உன்னை மாட்டி விட தேவையான எல்லா ஏற்பாட்டையும் மலரவன் ஏற்கனவே செஞ்சிட்டான். அந்த கேடுகெட்ட குமரேசன் கிட்ட இருந்து நீ வாங்குன இருபத்தஞ்சு   லட்சத்தை வச்சி நீ நாக்கு கூட வழிக்க முடியாது" மீண்டும் சிரித்தான் மகிழன்.

"மகிழா நீ என்னை தப்பா புரிஞ்சுகிட்டு இருக்க" என்றான் நடுக்கத்துடன்.

"தப்பா தான் நெனச்சுக்கிட்டு இருந்தேன்... நீ என்னோட நண்பன்னு உன்னை நான் தப்பா நினைச்சுட்டேன். ஆனா நீ என்னோட நண்பன் இல்ல. நீ நண்பனா இருக்கவும் முடியாது... நீ ஒரு துரோகி"

"என்னைப் பத்தி உன்கிட்ட யாரோ தப்பா சொல்லி இருக்காங்க. நான் உனக்கு எதிரா எதுவும் செய்யல"

"அப்படின்னா நீ குமரேசன் கிட்ட வாங்கின இருபத்தஞ்சு  லட்சத்தை பத்தி என்கிட்ட நீ ஏன் சொல்லல?"

"அவர் எனக்கு குடுப்பாரா மாட்டாரான்னு எனக்கு தெரியல"

"நான் உன்கிட்ட கேட்டுகிட்டே இருந்தா, நீயும் விதவிதமா ஜோடிச்ச பதிலை சொல்லிக்கிட்டே தான் இருப்ப. நீ யாருன்னு எனக்கு தெரிஞ்சு போச்சு. ஆனா நான் யாருன்னு உனக்கு தெரியாது... நீ என்னை ரொம்ப குறைச்சி எடை போட்டுட்ட..."

"தயவு செஞ்சு நான் சொல்றதை கேளு மகிழா"

"நீ இவ்வளவு செஞ்சதுக்கு பிறகும் நீ சொல்றதை நான் கேட்பேன்னு நெனச்சியா?"

"நீ நினைக்கிற மாதிரி நான் எதுவும் செய்யல மகிழா"

"வாயை மூடு... உன்னுடைய எந்த வார்த்தையும் என்னை சமாதானப்படுத்தாது. உன்னை மாதிரி ஒரு நம்பிக்கை துரோகியை நம்புன நான் ஒரு முட்டாள். உனக்கும், அந்த கேடுகெட்ட குமரேசனுக்கும் நல்ல பாடத்தை சொல்லி தர்ற வரைக்கும் நான் ஓய மாட்டேன். நீ எங்க போனாலும் உன்னை நான் நிம்மதியா இருக்க விட மாட்டேன். எந்த பணத்துக்காக நீ கீழ்த்தரமா இறங்குனியோ, அந்த பணம் உனக்கு எந்த விதத்திலும் உதவ போறதில்ல" என்று சீறி விட்டு அங்கிருந்து நடந்தான் மகிழன்.

என்ன செய்வதென்றே புரியாத ராகேஷ் திகைத்து நின்றான்.

........

தங்களது அறையை விட்டு வெளியே வந்த பூங்குழலி, அவளது தோழியிடமிருந்து வந்த குறுஞ்செய்தியை பார்த்தாள்.

*உனது சமீபத்திய புகைப்படத்தை எனக்கு அனுப்பி வைக்கவும்*

அதைக் கண்ட பூங்குழலி, புன்னகை புரிந்தாள். அவள் எதற்காக பூங்குழலியின் புகைப்படத்தை கேட்கிறாள் என்று அவளுக்கு தெரியும். வரவிருக்கும் அவளது பிறந்தநாளுக்கு வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைக்க கேட்கிறாள். அப்படியே தன்னை ஒரு செல்ஃபி எடுத்து அதை தன் தோழிக்கு அனுப்பி வைத்தாள் பூங்குழலி. அடுத்த நிமிடமே அவளது தோழியிடம் இருந்து பதில் வந்தது.

*நான் கேட்டது உனது சமீபத்தைய புகைப்படம். அப்படி என்றால், அந்த புகைப்படம் உன் கணவனோடு இருக்க வேண்டும். அவருடன் இணைந்து புகைப்படம் எடுத்து எனக்கு அனுப்பு*

ஆம். அதுவும் சரிதான். பூங்குழலியின் புகைப்படங்கள் ஏற்கனவே அவளது தோழியிடம் நிரம்ப இருக்கிறது. வரப்போகும் பிறந்தநாள், அவளது திருமணத்திற்கு பிறகு வரும் முதல் பிறந்தநாள். ஆனால் மலரவனுடன் இணைந்து அவள் எப்படி புகைப்படம் எடுப்பது? கிடைத்த சந்தர்ப்பத்தை எல்லாம் பயன்படுத்தி அவளை *ஓட்டிக் கொண்டிருக்கிறான்* மலரவன். தன் இடுப்பில் கை வைத்துக் கொண்டு என்ன செய்வதென்று யோசித்தாள்.

அப்போது அவள் கவனத்தை ஒன்று கவர்ந்தது. திருட்டுத்தனமாய் இங்கும் அங்கும் பார்த்தபடி மெல்ல வரவேற்ப்பறைக்கு வந்தாள் கீர்த்தி. அவளுடைய சேலை முந்தானையில் அவள் எதையோ மறைத்து வைத்திருந்தாள். அவள் இங்கு என்ன செய்கிறாள்? பூங்குழலிக்கு ஏதோ தவறாய் பட்டது. ஏனென்றால் கீர்த்தி எப்போதும் சாதாரண பெண்களின் வரிசையில் அடங்கக் கூடியவள் அல்ல. ஒரு தூணுக்கு பின்னால் மறைந்து நின்று அவளை கவனித்தாள் பூங்குழலி.

தான் மறைத்து வைத்திருந்த பொருளை வெளியே எடுத்தாள் கீர்த்தி. அது ஒரு தேங்காய் எண்ணெய் பாட்டில். இதில் மறைப்பதற்கு என்ன இருக்கிறது என்று முகம் சுருக்கினாள் பூங்குழலி. அவளது புத்தியில் ஏதோ உரைக்க, தன் கையில் இருந்த கைபேசியின் மோடை, வீடியோவுக்கு மாற்றி கீர்த்தியை படம் பிடித்தாள். அந்த பாட்டிலில் இருந்த தேங்காய் எண்ணெயை கீழே கொட்டிவிட்டு, அங்கிருந்து ஓடி சென்றாள் கீர்த்தி. அது பூங்குழலிக்கு குழப்பத்தை விளைவித்தது.  அடுத்த சில நொடிகளில் பூஜை அறையில் இருந்து வெளியே வந்த மின்னல்கொடி, அந்த தேங்காய் எண்ணெயில் காலை வைத்தார். அந்த வீடு அதிரும் வண்ணம் கூக்குரல் எழுப்பியவாறு, வழுக்கி விழுந்தார் மின்னல்கொடி. அதை கண்ட பூங்குழலி அதிர்ச்சியில் உறைந்து நின்றாள்.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro