♣2♣
மறுநாள் காலை எதுவும் பேசாமல், சீக்கிரமாக அலுவலகத்துக்கு கிளம்பி விட்டான் நவிலன்.
வருணை கிளப்பி பள்ளி வேனில் ஏற்றி விட்டு, வீட்டை ஒதுங்க வைத்து விட்டு ரிலாக்ஸாக அமர்ந்தாள் இனியா.
அவள் மொபைல் ராகம் பாடியது. கிரீன் பட்டனை ஸ்வைப் செய்து காதில் வைத்தாள்.
"ஹலோ! எப்படி இருக்கீங்க...?"
"-----------------"
"ம்ம்... இங்கு அனைவரும் நலம்!" என்றாள் புன்னகைத்தபடி.
"-------------------"
"என்ன விஷயம்? எனக்கு தெரியாதே... என்னிடம் யாரும் எதுவும் சொல்லலையே..." என்றாள் நெற்றியைச் சுருக்கி குழப்பத்துடன்.
"------------------"
அவள் முகம் சிவந்து கண்கள் கலங்கியது.
"நீங்க சொல்றது உண்மையா...? கன்பார்மா அப்படி தான்னு தெரியுமா?"
"-------------------"
"ச்சீ.. ச்சீ... இப்படியா? சரி நான் அவரிடம் பேசிக்கிறேன்!" என்றாள் கோபமாக.
"-------------------"
"இல்லை... இல்லை... நீங்கள் சொன்னதாக யாரிடமும் சொல்ல மாட்டேன், அவரிடம் கூட. நீங்கள் ஒர்ரி பண்ணிக்காதீங்க... பை!" என்று போனை கீழே வைத்தாள்.
மனம் எரிமலையாய் குமுறிக் கொண்டிருந்தது.
மாலை ஏழு மணி அளவில் நவிலன் வீடு வந்தான். இனியா எதுவும் பேசாமல் கிச்சனுக்குள் சென்று விட்டாள். வருண் டிவியில் கார்டுன் பார்த்துக் கொண்டிருந்தான்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro