8
உடைகளை வாங்கிய இனியா அதற்கு பணம் செலுத்த செல்லும் போது இசை " நீ இரு நா பே பண்ற" என்று சென்றவனை...
இனியா " நோ தேக்ஸ்... நீங்க யாரு எனக்கு பே பண்ண??" என்க...
இசை " ம்ம்ம்ம் உன் புருசன்" என்று முறைக்க...
அதற்கு இனியா "அது எங்க அம்மாக்காக பண்ணது.... எப்போ நமக்கு ப்ரேக்கப் ஆச்சோ அப்பவே நீங்க யாரோ... நா யாரோ" என்று கூறிவிட்டு பணம் செலுத்தினாள். இசைக்கு கோவம் வந்தாலும் தவறு அவன் மீது இருந்ததால் அமைதி காத்தான்.
உடைகளை வாங்கிக்கொண்டு வந்த அன்புவும், எழிலிலும் அங்கு வர... அன்பு இனியாவிடம் " உனக்கு புடுச்சதெல்லா வாங்கிட்டயா டா?? சாப்ட போலாமா??" என்க
அதற்கு இனியா " ஏன் அன்புணா அம்மாக்கு நாளைக்கு ஆப்ரேசன் வெச்சுக்குட்டு இப்டி வந்து ஊரு சுத்தரது சரியா..." என்க..
அதற்கு அன்பு " தப்புதான் ஆனா அம்மா ஆசப்பட்ற மாதிரி நடந்துக்கணும்ல டா... அதான்" என்றான்.
கடையில் இருந்து வெளியில் வந்த அனைவரும் பக்கத்தில் இருக்கும் உணவகத்திற்கு நடந்து செல்ல.. இசை ரோட்டின் ஓரமாக பார்க்க அவனுக்கு கடந்த கால நினைவுகள் தோன்றியது.. பெண்கள் இருவரும் முன் நடக்க அன்புவை தன்புறம் இழுத்தவன் அவனிடத்தில்
"டேய் மச்சா ஞாபகம் இருக்கா இதே கடவீதில தான் ஒரு சாயங்கால நேரம் நம்ம எல்லாரும் குடும்பத்தோட துணி எடுக்க வந்தோம்... அன்னைக்கு செம கூட்டமா இருந்துச்சு... அப்போ இனியா, எழில் 1வது படுச்சுட்டு இருந்தாங்க.. ரெண்டு பேரும் க்யூட்டா பொம்மகுட்டி மாதிரி இருப்பாங்க... ஒரே மாதிரி கலர்ல பட்டுபாவடை சட்டை போட்டு, ரெட்ட குடுமி போட்டு அழகா வெலாடீட்டே வந்தாங்க..." என்றான்
அதற்கு அன்பு "எனக்கு ஞாபகம் இல்ல டா... எப்போனு??" என்க
அதற்கு இசை "நா அப்போ 7வது , நீ 6வது படுச்சுட்டு இருந்த... துணி எடுத்துட்டு வெளிய வர எடத்துல கொரங்கு வித்தை காட்டீட்டு இருந்தாங்க... இனியா அத பாத்துட்டே நின்னுட்டா.. எல்லாரும் அவளவிட்டுட்டு போயிட்டாங்க... திடீர்னு ஞாபகம் வந்த அவ அழுக ஆரமுச்சுட்டா... அப்றம் எல்லாரும் அவள காணோம்னு தேடீட்டு இருந்தோம்..." என்க
அதற்கு அன்பு "ம்ம்ம்ம் லைட்டா ஞாபகம் இருக்கு டா" என்றான்..
உடனே இசை " நானும் நீயும் தேடீட்டு வரும்போது அவ ரோட்ல ஒரு ஓரமா நின்னு அழுதுட்டு இருந்தா... சின்ன வயசுல உனக்கும் இனியாக்கும் அடிக்கடி சண்ட வந்து அடுச்சுக்குவீங்க.... அதுநால இனியா எப்பவும் மாமா மாமானு என்கூடையே தான் இருப்பா... நாம அவள பாத்துட்டு அவகிட்ட போனோம் நம்மள பாத்ததுட்டு வேகமா ஓடிவந்து
இனியா என்கிட்ட அழுதுகிட்டே "மாமா நா கூட்டத்துல தொலஞ்சு போயிட்டேன்... காணாம போயிட்டேன்... பயமா இருந்துச்சு... எல்லாரும் என்ன விட்டுட்டு போயிட்டாங்கனு அழுதுட்டே இருந்தேன்.... ஆனா என்னோட இசை மாமாக்கு தான் என்ன ரொம்ப பிடிக்குமே.... அதான் என்ன தேடி கண்டுபுடுச்சிட்ட.." னு விக்கி விக்கி அழுகற குரல்ல அழகா கண்ண சிமிட்டி சொன்ன..." என்றான் ரசனையாக
அதற்கு அன்பு "ம்ம்ம்ம் ஞாபகம் வந்துருச்சு டா... மாமா நா தொலஞ்சு போயிட்டேனு அழுதா ரொம்ப நாள் அத சொல்லியே ஓட்டுவோம்ல " என்றான்.
அதற்கு இசை " ம்ம்ம்ம் ஆமா டா அப்றம் அழுதுட்டு இருந்த அவள நான் தூக்கி (அதான் மாமா வந்துட்டன்ல குட்டி அழுகாதீங்க... மாமா எப்பவும் உங்ககூட இருப்பேன் பயப்படாதீங்க) னு சமாதானம் சொன்னேன்." என்றான்
அதற்கு அன்பு "டேய் மச்சா அப்போவே எவ்லோ டைலாக் பேசீருக்க... கேடி டா நீ" என்று கூற
அதற்கு சோகமாக இசை " நா பண்ண முட்டாள் தனத்துனால இவ்லோ பாசமா இருந்தவள எழந்துருவனோனு பயமா இருக்கு டா." என்க..
அதற்கு அன்பு " பீல் பண்ணாத டா.. ஏன் டா இப்டி பொலம்பற" என்றான் காதலின் ஆழம் அறியாதவன்
அதற்கு இசை பெருமூச்சுடன் " என்ன டா பண்றது... உன் தங்கச்சி என்ன இப்படி பொலம்ப வெச்சுட்டா " என்று கூறிக்கொண்டு இருக்க உணவகம் வந்தது.
அனைவரும் உணவகத்தின் உள் சென்று கை கழுவ ஆண்கள் இருவரும் மேசைக்கு சென்று அமர இனியா, எழில் கை கழுவும் போது..
எழில் " அண்ணாகிட்ட பேசு டி... பாவம் அவன் " என்க...
இனியா " என்ன உங்க அண்ணனுக்கு சப்போர்ட்டா...?? என்னால பேச முடியாது டி" என்க
அதற்கு எழில் " ஏன் டி அண்ணா போயிட்டான்னு அவன நெனச்சு சாகரனு சொன்ன... இப்போ அவனையே கல்யாணம் பண்ணதுக்கு அப்றம் பேசகூட மாட்டீற என்ன டி இது" என்றாள்
அதற்கு இனியா " அதெல்லா உனக்கு புரியாது எழில்....லவ் பண்ணீருந்தா தான் தெறியும் அந்த வலி.... பேசாம இரு...." என்று கூறிவிட்டு நகர்ந்து செல்ல எழில் அவள் கூறிய வார்த்தைகளை எண்ணி அழத்தொடங்கினாள்...
எழில் மனதிற்க்குள் தனக்கு தானே பேசிக்கொள்கிறாள் " நானும் லவ் பண்ணி அந்த வலிய எல்லாம் அனுபவுச்சு இருக்கன்டி.... அதநெனச்சு என்னோட இதயம் சுக்குநூறா ஒடங்சு இருக்கு தெறியுமா... என்னோட லவ் ஊமை கண்ட கனவுபோல யாருகிட்டையும் சொல்ல முடியாம போச்சு... மனசுல இருந்தத அவன்கிட்ட கூட சொல்லல உன்கிட்டையும் சொல்லல... நான்தா இப்டி டெய்லியும் அழுகறன் நீயாவ்து சந்தோசமா இருக்கனும் இனியா... நீ அண்ணாகூட சேந்து நல்லா இருக்கனும் அது மட்டும் தான் இப்போ என்னோட ஆச... எனக்கு லைப்ல வேற எதுவும் வேண்டா" என்று கண்களை துடைத்துக்கொண்டு சாப்பிட வந்தாள்.
அங்கு இனியாவின் பக்கத்தில் அமர்ந்த எழில் எதுவும் கூறாமல் அமைதியாக இருக்க அவளிடம் இசை "எழில் என்ன சாபட்ற... என்ன ஆர்டர் பண்றது உனக்கு??" என்க..
அதற்கு அன்பு "லட்டு......." என்க எழில் முறைக்க..... அன்பு இசையிடம் "டேய் இந்த ஹோட்டல்ல லட்டு நல்லா இருக்குமாமே... எனக்கு ஒரு லட்டு ஆர்டர் பண்ணு" என்க...
அதற்கு இசை "சரி சரி டா... ஹேய் எழில் உனக்கு என்ன டா வேணும் சொல்லு..." என்க.. மனதிற்க்குள் அழுதுகொண்டு தொண்டை வறண்ட நிலையில் எச்சிலை விழுங்கும் போதும் ரனமாக இருக்கும்,, அவளோ என்ன உண்ண நினைப்பாள் பாவம்..
எழில் " எனக்கு பசி இல்ல... நீங்க சாப்டுங்க... " என்க... இனியா கூறியதற்குதான் இவள் உணவு வேண்டாம் என்கிறாள் என எண்ணிய இனியா அவளிடம்
"எழில் சாரி டா.... யாரோ மேல இருந்த கோவத்த உன்கிட்ட காட்டிடன்... சாரி டா" என்க...
அதைக்கேட்ட இசைக்கு கோவம் வந்து " ஹேய் என்மேல கோவம்னா என்ன திட்டு தேவைஇல்லாம என் தங்கச்சிய திட்டாத " என்க
அதற்கு எழில் " ஹே கூல் கூல் உண்மையா பசிக்கல பா.... ப்ப்ச்ச் விடுங்க உங்களுக்காக சாபட்ற.. தயிர்சாதம் போதும் வேற எதுவும் வேண்டா" என்க..
அவளுக்கு தயிர்சாதம் கூறிவிட்டு மற்றவர்கள் அசைவ உணவுகளை வெளுத்துக்கட்டினர். அன்பு (பட்டர் சிக்கன்) கொஞ்சம் எடுத்து எழிலின் தட்டில் வைத்துவிட்டு..
" டேஸ்ட் பண்ணி பாரு எழில்... சூப்பரா இருக்கு... " என்றான்.
எழில் அதையும் சேர்த்து உண்டாள்.
சாப்பிட்டு முடித்த அனைவரும் நகை கடைக்கு செல்ல... அன்பு தன் தங்கைக்கு ஆபரணங்களை தேர்வு செய்து ஒவ்வொன்றாக அவளிடம் கொடுத்தான்... இசையும் இனியாவிற்கு ஆபரணங்களை தேர்வு செய்ய அன்புவிற்கு உதவினான்... எழிலிற்கு அங்கு என்ன நடக்கிறது என்று பார்க்கும் நினைவுகூட இல்லாமல் எதையோ இழந்ததைப்போல் அமர்ந்து கொண்டு இருந்தாள்...
அவளைக் கண்ட அன்பு அவளிடம் " ஹேய் என்ன உனக்கு நகை எடுக்கலனு சோகமா??? " என்க...
'இவன் ஒருத்தன் நேரங்கெட்ட நேரத்துல கடுப்பு ஏத்தறான்' என நினைத்தவள் அவனிடம் " இல்ல பா இனியாக்கு எடுத்தா என்ன எனக்கு எடுத்தா என்ன ரெண்டும் ஒன்னு தான்... எப்டியும் நாங்க ரெண்டு பேரும் தான் அத யூஸ் பண்ண போறோம்... சோ நோ ப்ராப்ளம் " என சிரித்தாள்...
அன்புவிற்கு அவள் எதையோ மறைக்கிறாள் என்று தோன்றியது... அவளுக்காக ஒரு வளையல் தேர்வு செய்தவன் அவளிடம் வந்து " கைய நீட்டு " என்க
எழில் எதுக்கு என்ற கேள்வியோடு கையை நீட்ட,,, அவளின் இடது கையில் அன்பு வளையலை போடப்போக அவள் கையில் எதோ ஒரு குறியீட்டை பச்சை குத்திஇருந்தால் (அதான் பா இனியா அவளோட ஆள் இசைக்கு மியூசிக் சிம்பள் போட்டமாதிரி இது ஒரு சிம்பள் அது எழிலோட லவ்வர் நேம் சிம்பள் ஆனா இனியாக்கு கூட அந்த சிம்பளோட அர்த்தம் புரியல . அது என்னமோ டிசைன்னு நெனச்சுகிட்டா)
(அது என்ன டிசைன்னு சொல்லமாட்ட )
அதைக்கண்ட அன்பு " என்ன பட்டிக்காடு டேட்டூ டிசைன்லா மாஸ்ஸா இருக்கு... ஆமா இதுக்கு என்ன மீனீங்" என்க...
அதற்கு எழில் " மீனீங்லா தெறியல பா டிசைன் பிடுச்சுது அதான் " என்று பொய்யுறைத்த அவள் மனதிற்க்குள் " it's my love யாருக்கும் தெறியாம ஒன்சைடா லவ் பண்ண..." என நினைத்துக்கொண்டாள்...
அதற்கு அன்பு " ஓஓஓ செமையா இருக்கு" என்று கூறிவிட்டு வளையலை போட்டுவிட்டவன் அவளிடம் " இங்க பாரு எழில் இது என்னோட கிப்ட்... எப்பவும் இத நீ பத்தரமா வெச்சுக்கோ உன்னோட அத்த பையனா நான் உனக்கு தர கிப்ட் " என்க...
அதற்கு எழில் " டிசைன் நல்லா இருக்கு,, இத நான் எப்பவும் வெச்சுகலாமா" என்க..
உடனே அன்பு "ம்ம்ம்ம் உனக்கு தான்... நம்ம டிவர்ஸ் ஆனதுக்கு அப்றம் என்னோட ஞாபகமா இத வெச்சுக்கோ" என்றான் அறியாப்பிள்ளையாக..
அதற்கு எழில் சிறு சிரிப்புடன் " கண்டிப்பா மாமா.... இத உன் ஞாபகமா வெச்சுக்கற... " என்றாள்...
பின்பு சிறிது நேரத்தில் அனைவரும் கிலம்ப இனியா, இசை வழக்கம் போல் அமைதியாக பயணிக்க... அன்பு, எழில் வண்டியில் வந்து கொண்டு இருக்க திடீர் என்று எழில் " எனக்கு தூக்கம் வருது " என்றாள்..
அதற்கு அன்பு "சரி அப்டியே தோள்ள சாஞ்சு தூங்கு.... நா ஸ்லோவா ஓட்ற " என்றான்... எழில் எதுவும் கூறாமல் சிறிது இடைவெளியில் அவள் தலையை அவன் தோளில் வைத்து உறங்கினால்...
வழியில் இனியா பானிபூரி கடையைப் பார்க்க அதை உணர்ந்த இசை வண்டியை நிறுத்தி " வா பானிபூரி சாப்டலா" என்று கூறிவிட்டு செல்ல இனியாவும் சென்றாள். அங்கு அவன் "ஒரு ப்ளேட் பானிபூரி" வாங்க அவள் "இரண்டு ப்ளேட் பானிபூரி" வாங்கி உண்டாள்.
சாப்பிட்டு முடித்த இனியா தன்னிடம் இருந்த 2000 தாளை நீட்டி "அண்ணா ரெண்டு ப்ளேட் பானிபூரி " என்று அவள் உண்டதிற்கு மட்டும் பணம் கொடுக்க,,,
கடைக்காரர் "ஏன் மா 20 ரூபாய்க்கு 2000 தாள நீட்ற.. என்கிட்ட சில்லறை இல்ல 20 தா " என்றார்.. அவளிடமோ கார்ட் தான் இருந்தது..
அவளின் செயலைக்கண்ட இசை "இந்தாங்கண்ணா" என்று பணத்தை குடுத்துவிட்டு இனியாவை அழைத்து சென்றான்.
Next part la pakkala bye👋
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro