Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

7

இனியா மற்றும் எழில் வெளியில் செல்ல தயாராகிக் கொண்டு இருக்க இசை மற்றும் அன்பு மாடியில் நின்று பேசிக்கொண்டிருந்தனர். அப்பொழுது அன்பு இசையிடம் "டேய் மச்சா இன்னைக்கு உனக்கு செம சேன்ஸ் டா,, எப்டியாவ்து சமாதானம் பண்ணீரு" என்க

அதற்கு இசை " டேய் இனியாவ சமாதானம் பண்றது இருக்கட்டும் உன்கிட்ட ஒரு விஷயம் கேப்பேன் மறைக்காம உண்மைய சொல்லனும் " என்க

அதற்கு அன்பு "கேளு டா.."  என்றதற்கு

இசை " எழில உண்மையாவே பிடிக்கலயா இல்ல வேற யாராவ்த லவ பண்றயா டா" என்றாள்

அதைக்கேட்ட அன்பு " யாரையும் லவ்லா பண்ணல டா.. அப்டி பண்ணீருந்தா தைரியமா சொல்லீருப்பேன்.. அப்றம் எழில பிடிக்காதுனு இல்ல டா.. ஒரு மாமா பொன்னா இனியா ப்ரண்டா பிடிக்கும் ஆனா மத்தபடி வேற எதுவும் இல்ல டா..." என்றான்...

அதற்கு இசை " மாமா பொன்னா அவள புடிக்கும்னா அப்போ அவள புடிக்கும்னு தானு அர்த்தம்,, அப்போ லவ்???" என்க..

அதற்கு அன்பு " மாமா பொன்னா பிடிக்கும்னா நம்ம குடும்பத்துல ஒருத்தி.. அந்த லெவல்லதான் பிடிக்கும் லவ் பண்ற அளவுக்கு இல்ல.. அப்றம் எனக்கு இந்த கல்யாணம் பிடிக்கல... ஏன்னா எனக்கு லவ் பண்ணி கல்யாணம் பண்ணனும்னு ரொம்ப ஆச டா... ஒரு பொன்ன பாத்து.. அவ கேரக்டர் புடுச்சுபோயி அவ என்கிட்ட பேசமாட்டாலானு ஏங்கி அப்றம் தயங்கி தயங்கி பேசி லவ்வ சொல்லி... டேய் பைத்தியமா லவ் பண்ணனும் டா... ப்ப்ச்ச் பட் இப்போ பாரு எல்லா போச்சு என் ஆச எல்லா நாசமா போச்சு" என்று நொந்துகொண்டான் ஆனால் எழிலை பைத்தியமாக காதலிக்க போகிறான் என்பதை உணராமல்.

அதற்கு இசை "எனக்கு என்னமோ உனக்கும் அவளுக்கும் நல்லா செட் ஆகும்னு தோனுது டா" என்க அன்பு முறைப்பதை பார்த்து பேச்சை மாற்றினான்.

கீழே இனியா, எழில் தயாராகி வர அதைக்கண்ட அன்பு, இசை அவரவர் இருசக்கர வாகனங்களை தயார் செய்ய அப்பொழுது இனியா " கார்ல போலாம்.. பைக் வேண்டா" என்க

அதற்கு எழில் " போ டி... கார் போர் அடிக்கும் பைக் தான் சூப்பரா இருக்கும்.." என்க

அப்பொழுது வந்த தாத்தா " ஆமா டா எழில் பைக் தான் நல்லா இருக்கும்.. நா அந்த காலத்துல சைக்கிள்ள உங்க பாட்டிய உட்காரவெச்சு எம்.ஜி.ஆர் படத்துக்கு போவன் பாரு..." என இழுக்க

இசை " போதும் தாத்தா நெரையா டைம் கேட்டுட்டோம் போர் அடிக்குது" என்றான்.

வீட்டில் உள்ள அனைவரிடமும் கூறிவிட்டு வண்டியில் அமர வந்த இனியா அடிக்கடி வண்டில் சென்ற பழக்கம் இருப்பதால் சீக்கிரமாக ஏறி அமர்த்தாள். ஆனால் எழிலிற்க்கு இதுவே முதல் முறை.. வண்டியையே உற்று நோக்கிக்கொண்டிருக்க அதைக்கண்ட

அன்பு " என்ன?? ஏறு டைம் ஆகுது" என்க

அதற்கு எழில் " இல்ல... எப்டி ஏறது?? அப்றம் எங்க புடிக்கனும்.. ??புடுச்சுக்க எதுவும் இல்ல..." என்றாள்...

அதைக்கேட்ட அன்பு " லூசூ லூசூ என்தோள புடுச்சு ஏறி உட்காரு... அப்றம் விழுந்துருவனு பயமா இருந்தா என்ன புடுச்சுக்கோ " என்றான்...

சரி என்று அவள் அமரப்போக அவளைத்தடுத்த அன்பு "ஹேய் இரு.. ஷால பின்னாடி பறக்கவிட கூடாது.. கட்டு இல்லனா பறந்துரும்" என்க..

அவளும் ஷாலை கட்டிக்கொண்டு ஏறி அமர்ந்தாள்.. அன்பு எழிலிடம் அக்கறையாக பேசியதைக் கண்ட அனைவரும் பூறித்துப்போனார்கள்..

செல்லும் வழியெல்லாம் இசை இனியாவிடம் பேச்சு கொடுக்க... அவளே மௌனத்தை மட்டும் பரிசளித்தாள்..... அன்புவின் பின் அமர்ந்த எழில் கீழே விழுந்துவிடுவோம் என்ற பயத்தில் அவன் தோள்களில் கை வைத்தபடி வேடிக்கை பாத்துக்கொண்டு வந்தாள்.

கடைவரவும் இறங்கியவர்கள் உள்ளே நுழைய அன்பு தன் திட்டத்தின் படி இசையிடம் " டேய் மச்சா நீங்க இங்க பாருங்க நாங்க மேல எழில்க்கு சேரி பாக்கறோம்" என்று பதிலை எதிர்பார்க்காமல் எழிலை அழைத்து சென்றான். (போறமாதிரி போயிட்டு லாஸ்ட் ரோ கிட்ட ஒழுஞ்சு நிக்கறாங்க ரெண்டு பேரும்)

அவர்கள் சென்றதும் இனியா சுடிதார்களை தேடிக்கொண்டிருக்க இசை சிலபல சுடிதார்களை எடுத்துகாட்ட அதை விட்டு விட்டு மற்ற அனைத்தையும் இனியா பார்த்துக்கொண்டு இருந்தாள்.. இசைதான் பாவம் அவன் எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வியையே தழுவியது.

தூரத்தில் ஒழிந்து கொண்டு அவர்களை பார்த்த அன்பு, எழிலிற்கு பாவமாகவும் இருந்தது, சிரிப்பாகவும் இருந்தது. எழில் அன்புவிடம் " ஹேய் இப்போ நம்ம என்ன வேல பாக்கறோம்னு தெறியுதா" என்றாள் சிரித்துக்கொண்டே.

அதற்கு அன்பு " என்ன வேல புரியல?" என்றான்..

உடனே எழில் " அட லூசூ இப்போ நம்ம என்ன வேல பாக்கறோம்னு தெறியுதா" என்று இசை, இனியாவை காட்டி சொல்ல..

அன்புவிற்கு புரிந்தது "ஷ்ஷ்ஷ் வெளிய சொல்லக்கூடாது ஓகே" என்றான் சிரிப்புடன்.

இனியாவின் பின்னேயே இசை சுற்றிக்கொண்டு "இனியா மா இது... இனியா மா அது..." என்று காட்டிக்கொண்டு இருந்தான். அங்கு அன்பு "ஹேய் சரி டைம் ஆச்சூ நம்ம டிரஸ் எடுக்கலனா சந்தேகம் வந்துரும் இனியாக்கு,, நீ மேல போயி உனக்கு சேரி எடு,, நான் 2ன்ட் ப்ளோர்ல எனக்கு ட்ரஸ் எடுத்துட்டு வர.. அப்றம் இங்க வந்து ஒட்டுக்கா எடுத்த மாதிரி வந்துக்கலா " என்றான்..

இருவரும் தனித்தனியே செல்ல எழில் அன்புவிடம் ஓடி வந்து " பர்ஸ், போன் எல்லாத்தையும் வீட்டுலையே வெச்சுட்டு வந்துட்ட.. நீ உனக்கு ட்ரஸ் எடுத்துட்டு வா.. நா இங்க வைட் பண்ற" என்றாள்.

அதற்கு அன்பு அவன் கார்டை கொடுத்து "இதுல வாங்கிக்கோ" என்றான்...

எழில் "இல்ல வேண்டா.. அப்றம் இதுக்கு எதாவ்து அசிங்கமா கேப்ப எனக்கு தேவையா... வேண்டவே வேண்டா"  என்றாள்.

அதற்கு அன்பு "ஹோ சரி வீட்ல போயி உன்காச குடு... இப்போ வாங்கிக்கோ ப்ளீஸ் நா ஏன் சொல்லறனா இனியாக்கு டவுட் வந்துரும் அதான்" என்க.

எழில் யோசித்துவிட்டு கார்டை வாங்கிக்கொண்டு செல்ல மருபடியும் அன்புவிடம் வந்து " வாங்கீட்டு வந்து எங்க வைட் பண்ணனும் " என்றாள்.. 2 நிமிடம் யோசித்த அன்பு

"உன்கிட்ட போன் வேற இல்ல.. எதாவ்து எமர்ஜென்சினா கூப்ட முடியாது... சோ பெட்டர் நீ என்கூட வா.. ஒட்டுக்கா போலா" என்க... சிறிது தயங்கிய எழில் பின்பு சம்மதம் தெறிவித்து அவனுடன் நடந்தாள்.

முதலில் அன்புவிற்கு உடை எடுக்க சென்றவர்கள் ஒவ்வொரு உடையாக தேட... அன்புவோ "ட்ரெண்ட்" என்ற பெயரில் வித்தியாசமான உடைகளையே எடுத்தான்.. அதைக்கண்ட எழிலிற்கு குமட்டிக்கொண்டு வந்தது. ஒவ்வொரு உடையாக அன்பு அணிந்துவந்து கண்ணாடியின் முன் ஒத்திகை பார்க்க எழிலிற்கு சிரிப்பு வந்தது.

அன்பு ஒரு உடையை அணிந்துவர அதைக்கண்ட எழில் " ஹேய் இந்த ட்ரெஸ் கிழுஞ்சு இருக்கு பா..." என்க அதற்கு அன்பு " இது டிசைன்,, அதெல்லா உனக்கு தெறியாது பட்டிக்காடு" என்றான்...

எழிலிற்கு கோவம் வர முகம் மாறியது அதைக்கண்ட அன்பு " ஆமா இது என்ன ஹேர் ஸ்டைல்... இப்டி நீளமா முடிய வளத்தி ப்ரச்பேளட் போட்டுருக்க.. இப்போல எவ்லோ ஹேர் ஸ்டைல் இருக்கு... நீ இன்னும் அப்டேட்டே ஆகல பட்டிக்காடு" என்றான்.

அதற்கு எழில் " நீ என்னோட ஹேர் ஸ்டைல்ல ஓட்டரயா... ஆமா நீ என்ன முடி வெட்ட வெட்ட பாதிலையே எந்திரிச்சு ஓடி வந்துட்டயா... ஒரு சைட்கட்டே பண்ல... அப்றம் இது என்ன டிசைன் டிசைனா தாடி காமெடியா இருக்கு" என்று சிரிக்க அன்பு அவன் முகத்தை கண்ணாடியில் பாத்துக்கொண்டு

"காமெடியாவா இருக்கு... ட்ரெண்டா இல்லையா" என்றான் சோகமாக

அதற்கு எழில் "ட்ரெண்ட்தான் பட் இதெல்லா காலேஜ் படிக்கும் போதுதான் பண்ணனும்... இப்போ பண்ணனுவை லூசூனு நெனைப்பாங்க.. வயசுக்கு தகுந்த மாதிரி ட்ரஸ் பண்ணனும்..." அதற்கு அன்பு முழிக்க..

எழில் " இப்பிடியெல்லா லூசூ மாதிரி ட்ரஸ் பண்ணா அப்றம் எப்டி பொன்னுக உன்ன பாக்கும்.... ம்ம்ம்ம் அதான் இவ்லோ நாள் நீ சிங்கிள்ளாவே இருந்துருக்க" என்றாள்.

அதற்கு அன்பு " வேற எப்டி பண்ணனும் ??" என்க..

எழில் சென்று "கருப்பு சட்டை, சந்தன நிற கால்சட்டை " (my fav soo Ella storylaium enda combination use pannuven eee) எடுத்துவந்து அன்புவிடம் கொடுத்து அணிந்துவர சொல்ல அவனோ "டக்கின் செய்து..  முழுக்கை பட்டன்போட்டு" வந்தான்.

அவனைப்பார்த்த எழில் "ஐயோ ராமா" என்று தலையில் அடித்துக்கொண்டு அவனிடம் சென்று " கைல பட்டன் கழட்டி முட்டி வரைக்கும் மடுச்சுவிடு அப்றம் டக் அவுட் பண்ணு... கழுத்துகிட்ட பர்ஸ்ட் பட்டன் போடாத" என்றாள்..

அவள்கூறியபடி அன்பு செய்ய அதைக்கண்ட எழில் " ம்ம்ம்ம் இப்டி இருந்தாதான் கெத்தா இருக்கும்..." என்க..

அவள் வசமே அவனும் உடைகளை தேர்வு செய்தான். உடைகளை வாங்கிக்கொண்டு புடவை எடுக்க செல்ல அங்கு அன்பு " ஹேய் ரெட் கலர் சேரி வாங்கு செமையா இருக்கு " என்க..

அவளும் அதை எடுத்து தோள் மீது வைத்து " நல்லா இருக்குமா.. செட் ஆகுதா " என்று கேள்வியாக கேட்க..

அதற்கு  அன்பு "ம்ம்ம்ம் செம... அள்ளுது....  சூப்பர் " என்க சிரித்துக்கொண்டே மற்ற உடைகளை எடுக்க..  அங்கு ஒரு பெண் அன்புவையே பார்க்க அதை கவனித்த எழல் அன்புவிடம்

" ஓய்ய் அந்த பொன்னு உன்னையே பாக்குது பா..." என அன்புவை ஓட்டித்தள்ளினாள். பிடிக்கவில்லை என்று கூறிக்கொண்டாலும் அவர்களை அறியாமல் நட்பு உண்டானது...

இசை, இனியா எதுவும் பேசிக்கொள்ளாமல் பரம அமைதியாக இருந்தனர். எழிலைவிட சுட்டித்தனம் இனியாவிற்கு தான் அதிகம்... ஆனால் கோவமாக உள்ளேன் என்று கூறிக்கொண்டு இனியா எதுவும் பேசவில்லை... இந்த கோவம் எவ்வளவு நாள் நீடிக்கும்....

Next part la pakkala bye👋

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro