Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

6

சென்னையில் இருந்த அன்புவிற்கு தகவல் சொன்னதால் அவன் இரவோடு இரவாக தன் தாயைக்காண வந்தான். விடியற்காலையில் அவன் தாத்தா வீட்டிற்கு வந்து சேர்ந்தான். அனைவரும் அங்கு கூடி இருந்தனர். வீட்டினுள் நுழைந்த அன்பு வேகமாக ஓடிவந்து தன் தாயை அணைத்து அழுகத்தொடங்கினான்.

தாய்மையின் பாசத்தினால் பாறையிலும் நீர் கசியும் என்னும்போது அன்புவுக்கு மட்டும் கண்கள் கசியாமலா இருக்கும்.

அன்பு தன் தாயிடம் " என்ன மா ஆச்சூ" என்க

அதற்கு மணிமேகலை " நா சாகப்போறன் அன்பு... எனக்கு இதயத்துல என்னமோ பெரிய நோய் டா அன்பு" என்று பாவமாக நடிக்க..

அதைக்கேட்ட அன்பு " அம்மா அப்டியெல்லா ஒன்னு ஆகாது மா... பெரிய பெரிய ஹாஸ்பிட்டல் இருக்கு மா... அங்க பாத்துக்கலா .. வாங்க சென்னைல போயி ஒரு டைம் செக் பண்ணிக்கலா" என்க

சென்னை சென்றால் இது பொய் என்று தெறிந்துவிடும் என அவசரமாக மணிமேகலை " இல்ல இல்ல பா ஒரு ஆப்ரேசன் பண்ணா சரி ஆகீருமாம்... ஆனா எனக்கு தா ஆப்ரேசன் பண்ணா செத்துருவனோனு பயமா இருக்கு" என்றதற்கு

அன்பு " அம்மா இப்போல ஆப்ரேசன் பண்றது ரொம்ப ஈசி....  சாதாரணமான ஒன்னு... இதுக்கு பயப்படாதீங்க மா... ஒன்னு இல்ல..." என சமாதானம் கூற

அதற்கு மணிமேகலை " எனக்கு ஆப்ரேசன்னால பயம் இல்ல பா... ஒருவேல நா செத்துட்டா உங்களுக்கு யாரு இருக்கா அதான் கவலை" எனக்கூற... அனைவரும் தாய், மகனின் உரையாடலை பார்த்த வண்ணம் இருக்க...

அன்பு " உங்களுக்கு ஒன்னு இல்ல மா" எனக்கூற...

மணிமேகலை " அம்மாக்கு ரெண்டு ஆச இருக்கு பா... ஒரு மகனா நீ அத நெறவேத்துவயா " எனக்கேட்க..

அதற்கு அன்பு " சொல்லுங்க மா... கண்டிப்பா பண்ற" எனக்கூற..

அதைக்கேட்ட மணிமேகலை " என்மேல கோவபடக்கூடாது... அப்றம் அந்த ஆசைய நெறவேத்துவனு சத்தியம் பண்ணு என்மேல" என்க..

சிறிது தயங்கிய அன்பு " நா ஏன் மா கோவப்படப்போற... அப்றம் ஏன் சத்தியம் கேக்கறீங்க நா கண்டிப்பா பண்ணுவன் மா" என அப்பாவியாக கூற அதைக்கேட்ட

மணிமேகலை " இல்ல அம்மாமேல சத்தியம் பண்ணு" என்க,, அவர்கூறி முடிக்கும் முன் அன்பு தாயின் தலைமேல் கை வைத்து சத்தியம் என்று கூறி மாட்டிக்கொண்டான்.

தயங்கிய மணிமேகலை " நம்ம இனியாக்கும், இசைக்கும் கல்யாணம் பண்ணிவெக்க போறோம் அதுவும் இன்னைக்கு" என்னும் போது அன்புவின் முகம் கோவத்தில் சிவக்க

அன்பு " இனியா சின்ன பொன்னு மா.. இப்போதா படுச்சுமுடுச்சுருக்கா... அவளுக்கு இவ்லோ நாள் வீடு, ஸ்கூல், காலேஜ் தவர வெளி உலகம் தெறியாது... ஒரு ரெண்டு வருசம் போகட்டு" என்றான்.

மணிமேகலை " இல்ல ஆப்ரேசன் பண்ணா நான் செத்துருவ அதுக்கு முன்னாடி என் பொன்னு கல்யாணத்த பாக்கனும்" என்க

அதற்கு அன்பு "அம்மா ஆப்ரேசன் பண்ணா செத்துருவோம்னு நெனைக்கறதே முட்டாள் தனம்,, இதுல இப்டி அவசரக் கல்யாணம் ரொம்ப முட்டாள் தனம்" என்க அவ்வளவு நேரம் அமைதி காத்த தாத்தா

"டேய் அவ நல்ல விஷயம் தானு கேக்கறா... எங்க எல்லாருக்கும் சம்மதம்... முக்கியமா இசை, இனியாக்கு சம்மதம் " என்றார்.

அதற்கு அன்பு இசையிடம் " டேய் இவ்லோ நாள் என் தங்கச்சிகிட்ட நா பாசமாகூட பேசுனது இல்ல... இப்போதான் டா கொஞ்ச நாளா அண்ணா அண்ணா னு அவ என்கூட பேசறா... என்னோட குட்டி தங்கச்சி டா அவ... கொஞ்ச நாள் போகட்டுமே.. அதுக்குல்ல இப்டி கல்யாணம்னு என்கிட்ட இருந்து பிரிக்கபாக்கறீங்கலா  எல்லாரும்..." எனகூறி முடிக்கையில் கண்ணில் ஒரு சோகம் தெறிந்தது.

அதற்கு மணிமேகலை "யாரு உன் தங்கச்சிய பிரிக்கல... நம்ம குடும்பத்துகுள்ள தான் குடுக்கறோம்... அதுவும் கல்யாணம் முடுஞ்சதும் அவ சென்னை வந்துருவா நீ பக்கத்துல இருந்து பாத்துக்கோ" என்க...

அதற்கு அன்பு "இல்ல எனக்கு இது சரியா படல... " என முகம் சுழிக்க.. இனி இவனை யோசிக்கவிட்டால் அவனும் குலம்பி அனைவரையும் குலப்பி இனியாவின் காதல் கைகூட கடவுளாக கொடுத்த வாய்ப்பை இழக்க நேரிடும் என எண்ணிய

எழில் அன்புவிடம் " இதுல உங்களுக்கு என்ன சரியா படல" என்க...

அதற்கு அன்பு "இது எங்க குடும்ப விஷயம் நீ யாரு" என்க ( எப்பொழும் இருவருக்கும் பேசிக்கொண்டால் சண்டைவரும்)

மணிமேகலை "என்ன டா இது... நம்ம எழில் டா... " என்க அதற்கு

அன்பு "இனியா என் தங்கச்சி மா" என்க....

எழில் " இனியா என் ப்ரண்ட்... ஆமா இவ்லோ நாள் எங்க இருந்த அன்பு... எத்தன நாள் இனியாவா உன்கிட்ட பேசுனா நீ அவள கண்டுகாம எப்டி அழுக வெச்ச...இப்போதா அக்கற வந்துச்சா? இப்போதா இவஉன் தங்கச்சினு ஞானஉதயம் வந்துச்சா" எனக்கூற...

அதற்கு அன்பு "எனக்கு பாசம் இல்லனு நீ பாத்தயா...  என் தங்கச்சி படுச்ச ஸ்கூல்ல இருந்து அவ படுச்ச காலேஜ், நீங்க தங்கி இருந்த வீடு, அங்க வேலசெஞ்ச பாட்டி எல்லாமே ஒவ்வொன்னும் பாத்து பாத்து பண்ண... எனக்கு மத்த அண்ணனுக மாதிரி பேசத்தெறியாது ஆனா பாசம் ரொம்ப இருக்கு... ஏன் நீ கூட நான் செலக்ட் பண்ணி சொன்ன காலேஜ்ல தான் படுச்ச எழில்..." என்றான்..

அதற்கு எழில் " எங்க அண்ணனுக்கு என்ன கொரச்சல்... நல்லா படுச்சு இருக்கான், நல்ல பையன்,, உன் தங்கச்சிய நல்லா பாத்துக்குவான் அப்டியே இவன் எதாவ்து தப்பு பண்ணா நீ உரிமையா சட்டைய புடுச்சு கேக்கலாம்..."என்க...

அதற்கு மணிமேகலை "டேய் அன்பு நாங்க முடிவு பண்ணீட்டோம் அவ்லோ தான்" எனக்கூற

அதற்கு அன்பு "அதான் முடிவு பண்ணீட்டீங்கல்ல விடுங்க" எனக்கூறி நகரப்போக அவனை தடுத்த

மணிமேகலை " உனக்கும் எழில்க்கும் கல்யாணம் இன்னைக்கு " எனக்கூற

அதற்கு அன்பு "வாட்.... " என்றான்...

மணிமேகலை " உனக்கும் எழில்க்கும் இன்னைக்கு கல்யாணம்..." என்று அழுத்தமாக கூற...

அதற்கு அன்பு "எனக்கு இதுல இஷ்டம் இல்ல சாரி" என்றான்...

அதற்கு மணிமேகலை " ஏன் டா எழில் ரொம்ப நல்ல பொன்னு, ரொம்ப பாசமான குணம் டா... இப்டி ஒரு பொன்ன தேடுனாலும் கெடைக்காது டா" எனக்கூற

அன்பு " அம்மா எழில் நல்ல பொன்னுதான், பாசமான பொன்னுதான் பட் எனக்கு அவள பிடிக்காது, அவளுக்கும் என்ன பிடிக்காது... கல்யாணம் பண்ணனும்னா ஒரு லவ் பீல் இருக்கனும்ல அது இல்ல மா" என்றான்.

அதற்கு மணிமேகலை " அதெல்லா முடியாது நீ எனக்கு சத்தியம் பண்ணீருக்க... " என்க

அதற்கு அன்பு " எனக்கு இஷ்டம் இல்ல மா ப்ளீஸ் கம்பல் பண்ணாதீங்க.. கண்டிப்பா ரெண்டு பேருக்கும் செட் ஆகாம டிவர்ஸ்னு வந்து நிக்கற மாதிரி இருக்கும்... வேண்டா மா...." என்றான்..

அதைக்கேட்ட மணிமேகலை அழுது கொண்டே " என்னோட கடைசி ஆசனு கேட்டு கூட நீ பண்ணல... இதுக்குமேல நா இருந்து என்ன பண்ண போற... நா பெத்த பையனே என்மேல பாசம் இல்லாம இருக்கா" இன்னும் 15 நிமிடத்திற்க்கு மேலாக பல வசனங்களை பேச அதற்கு அன்புவும் எதிர்த்து பேச கடைசில் தன் அன்னையிடம் தோற்றான். சம்மதம் தெறிவித்தான் விருப்பம் இல்லாமல்.

அப்பொழுது எழில் " எனக்கும் இஷ்டம் இல்ல...  எனக்கு அன்பு வேண்டா... அன்புவ இவ்லோ கம்பல் பண்ணீறீங்க அவனுக்கு இஷ்டம் இல்லனா விடவேண்டியதுதானு.... " எனக்கூற

அதற்கு ராஜ் " போக போக புடுச்சுரும் டா " என்க...

உடனே எழில் " எனக்கு இது சரியா வரும்னு தோனல பா வேண்டா... " என்றாள்...

அதற்கு ராஜ் " அப்பா உன் நல்லதுக்கு தான் சொல்லற டா... அப்பா சொன்னா கேப்பயா மாட்டயா " என்க...

எழில் ஒரு 15 நிமிடம் வசனம் பேச அதில் கோவமுற்ற ராஜ் பளார் என்று ஒரு அரை விட்டு "உனக்கு அன்பு தான் புருசன்" என்று கூறிவிட்டு சென்றார்.

அதன்பின்பு காலை 10மணி அளவில் திருமணம் நடந்து முடிந்தது.

Flash back over

இவை அனைத்தையும் நினைத்து கொண்டு இனியாவின் தலையை கோதியவர் திடீர் என்று இனியாவிடம்  "ஏன் மா உனக்கு கல்யாணத்துக்கு புது துணிகூட எடுக்கல... நகை எதுவும் போடல இருக்கறத வெச்சு அவசர அவசரமா பண்ணீட்டோம்... நீ இன்னைக்கு கடைக்கு போயி உனக்கு புடுச்சதெல்லா வாங்கிக்கோ " என்றார்.

அதற்கு இனியா " இல்ல மா எதுவும் வேண்டா " என்றாள்...

இதைக்கேட்ட மணிமேகலை எழிலை அழைத்து " டேய் இன்னைக்கு நீயும் , இனியாவும் ஷாப்பிங் போயி உங்களுக்கு பிடுச்சதெல்லாம் வாங்கிக்கோங்க " என்க...

அதற்கு எழில் " இல்ல மணி ஷாப்பிங் போற மூட் இல்ல இன்னொரு நாள் போயிக்கறோம்" என்க அப்பொழுது அங்கு வந்த அன்புவுக்கு அதைக்கேட்டதும் ஒரு யோசனை வர

அன்பு எழிலிடம் " எழில் வா ஜாலியா நீ, நான், இசை, இனியா எல்லாரும் போயிட்டு வரலாம் " என்றான் அவன் கூறியதில் இசை, இனியாவை அழுத்தி கூறியதிலேயே எழிலிற்கு அவன் ஏதோ திட்டத்துடன் இருக்கிறான் என்பதை உணர்ந்து கொண்டாள்.

எழில் அன்புவிடம் " சரி அன்பு... போகலா... " என்றுவிட்டு இனியாவை பார்த்து " வா டி போலா... ரொம்ப நாள் ஆச்சு... ப்ளீஸ்" என்க...

அதற்கு இனியா " நீங்க 3 பேரும் போங்க... நா வரல " என்றாள்

உடனே எழில் முகத்தை சோகமாக வைத்துக்கொண்டு " எனக்கு வீட்ல இருந்தா மனசு கஷ்டமா இருக்குனுதான் வெளிய போலானு கூப்ட சரி விடு இனியா" என்க...

அவள் முகம் வாடியதைக் கண்ட இனியா " சரி போலாம் டா... உனக்காக வர" என்றாள்... எழில் அன்புவை பார்த்து கண்ணடித்து "ஓகே" என்க அன்பு தலை அசைத்து "ம்ம்ம்ம்" என்றான்.

வெளியில் செல்ல தயாராகி வர அன்பு அவன் அறைக்கு செல்ல, அவனை தொடர்ந்து சென்ற எழில் அறைக்குள் புகுந்ததும் கதவை சாத்திவிட்டு அன்புவை பார்த்து " என்ன ப்ளான் ?" என்க..

அன்பு " ஐயோ மருபடியும் கதவ ஏன் சாத்துன கதவ தெறக்கறது கஷ்டம் " என்க...

அதற்கு எழில் " ஐயயோ ப்ளான் கேக்கற இன்ட்ரஸ்ட்ல இத மறந்துட்ட... சரி பரவால அப்றம் பாத்துக்கலா... நீ ப்ளான் சொல்லு" என கேட்க

அன்பு அவளிடம் "இங்க பாரு இங்க இருந்து பைக்ல போலாம்.. இசை, இனியா தனியா வரட்டும் அப்போதான் அவங்க பேசிக்க சேன்ஸ் இருக்கும்.. அப்றம் கடைல தனியா விட்டரலாம்.. இன்னைக்கு நாள் புல்லா அவங்கல தனியா இருக்க வெக்கலாம் கண்டிப்பா லவ் பண்ணும்போது ஊரு சுத்துனது ஞாபம் வந்து சமாதானம் ஆகீருவாங்க" என்க

அதற்கு எழில் "ஐஐஐ சூப்பர் ப்ளான் ஆனா நா எப்டி வரது" என்க

அன்பு " என்கூட பைக்ல வா " என்றான்.

அதற்கு எழில் " ஐயே உன்கூட நா வரல பா... நீ போற ஸ்பீடுக்கு உன்கூட வந்தா நா கீழ விழுந்துருவேன்... அப்றம் நா உன்கூட வந்தா என்ன கரெக்ட் பண்ணதா கூட வரயானு நீ கேப்ப எனக்கு இந்த அசிங்கம் தேவையா... நா வரல" என்றாள்..

அதற்கு அன்பு "ஹேய் இது சூப்பர் ப்ளான் எழில் ப்ளீஸ் கொஞ்சம் ஹெல்ப் பண்ணு... நம்ம ரெண்டு பேரும் ஒட்டுக்கா பைக்ல போனா அவங்கலும் வருவாங்க.. இல்லனா கார்ல போக சொல்லீருவாங்க அப்றம் ப்ளான் கெட்டுரும் ப்ளீஸ்" என்றான்.

அதற்கு  எழில் " சரி சரி ஹெல்ப் பண்ற... இப்போ கதவ தெறக்கனும் நீ கொஞ்சம் ஹெல்ப் பண்ணு" என்க...

அன்பு சிரித்துக்கொண்டே " ம்ம்ம்ம் வா " என்று கதவை திறக்க செல்ல அதே போல் எழிலின் பின்பு புறம் சென்று நிற்க,, எழிலிற்கு காலையில் அடிப்பட்டது நினைவிற்கு வந்து

" ஹேய் காலைல பண்ண மாதிரியே இப்பவும் பண்ணா எனக்கு அடி பட்டுரும்... நீ இழு "  என்று அவள் கூற..

அதற்கு அன்பு " இல்ல நீ எனக்கு ஹெல்ப் பண்ண போறல சோ உனக்கு அடிபடாம கதவ தெறக்கற... புடி" என்று கதவை பிடித்து இழுக்க கதவு அதே போல் திறந்து அவள் மூக்கில் முட்டும் முன்னாப அன்பு அவளை தன்புறம் இழுத்துக்கொண்டான்.

அன்பு "ஹேய் லட்டு இப்போ ஓகே வா" என்க....

அதற்கு எழில் " ஹலோ லட்டு எங்க அம்மா கூப்பட்ற பேர்... அத நீ கூப்டாத... தென் தேக்ஸ்
அப்றம்
ப்ளீஸ் கதவ மாத்து என்னால டெய்லியும் இப்டி அடி வாங்க முடியாது..." என்றாள்..

அதற்கு அன்பு " ஓகே லட்டு " என்க

உடனே எழில் " டோன்ட் கால் மீ லட்டு " என்று முறைக்க அதற்கு

அன்பு " அப்போ இனிமேல் உன்ன லட்டுனுதான் கூப்ட பேற நம்ம டிவர்ஸ் வரைக்கும்" என்றான்.

அதற்கு எழில் " ம்ம்ம்ம் சீக்கரம் இவங்கல சேத்திவெச்சுட்டு டிவர்ஸ் பண்ணிகனும்... கடுப்பா இருக்கு" என்றாள்

அதற்கு அன்பு " ம்ம்ம்ம் மீ டூ..."

Next part la pakkala bye👋

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro