5
தன் மகள் பேசிய அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்த மணிமேகலை கண்களில் கண்ணீருடன் தன் மனதிற்க்குள் " இனியா யார லவ் பண்ணீருப்பா??? என்ன பிரச்சணயா இருக்கும்,,, ஐயோ அவன் நல்லவனோ? கெட்டவனோ? ஒன்னுமே தெறியலையே எப்டி கண்டு புடிக்கறது" என்று குலம்பியபடி தன் அறைக்கு சென்று அங்கும் இங்கும் நடந்துகொண்டு இருந்தார்.
மணிமேகலை மனது முழுவதும் இனியா, எழில் பேசியதே படமாக ஓடிக்கொண்டு இருந்தது. மணிமேகலைக்கு எழில் என்றால் தனிபிரியம் எழில் பிறந்ததும் அவளை கையில் ஏந்திக்கொண்டு தன் மகன் அன்புவுக்கு தான் இவள் என்று கூறினார், அப்பொழுது யாரும் அதை பெரிதாக எண்ணவில்லை. பிள்ளைகள் வளர்ந்தபின் யாரை பிடித்திருக்கிறதோ அவரையே திருமணம் செய்து வைக்கலாம் என்று விட்டுவிட மணிமேகலைக்கு மட்டும் தன் மகனுக்கு இவள்தான் என்ற எண்ணம் இருந்து கொண்டே இருந்தது.
எழில் எதுகூறினாலும் " என் மருமகள் சொன்னா சரியாதான் இருக்கும்" என்று அவள் கூறியதையே செய்வார். எழிலிற்க்கும், மணிமேகலைக்கும் நிறைய விஷயங்கள் ஒத்துப்போகும். "மணி மணி" என்று அவளும் மிகவும் பாசமாக இருப்பாள்.
மணிமேகலையின் மனதிற்க்குள் " இனியாவும், எழிலும் எவ்லோ ப்ரண்ஸ்ஸா இருக்காங்க... பெத்த அம்மாவவிட இனியா அவகிட்ட தான் பாசமா இருக்கா... ஒருவேல எழில் கல்யாணம் ஆகி வேற வீட்டுக்கு போயிட்டா இவங்க பிறுஞ்சுருவாங்க... அன்புக்கு எழில் மட்டும்தான் பொருத்தமா இருப்பா... அன்புக்கு கோவம் வந்தாலும் இவ எதாவ்து பேசி அத சமாதானம் பண்ணீருவா... அவன் இப்டி குடும்பத்துகூட ஒட்டாம இருக்கான் ஆனா நம்ம எழில கல்யாணம் பண்ணிகிட்ட பொருப்பு வந்துரும். கண்டிப்பா ரெண்டு பேருக்கும் நல்லா பொருத்தமா இருக்கும்.
எழிலவிட நல்ல பொன்ன நான் எங்கனு தேடுறது,,, என்ன ஆனாலும் எழில் தான் என் மருமகள் ஆனா இனியா யார லவ் பண்றா??? எப்டி கண்டு புடிக்கறது??" என்று யோசித்துக்கொண்டு இருந்தார். அடுத்த நாள் காலை இனியாவின் அறைக்கு சென்றவர் அவளது கணினியை ஆன் செய்து தேடிப்பார்த்தார். ஆனால் அதில் அனைத்தும் பாஸ்வேட் போட்டு வைக்கப்பட்டு இருந்தது.
5 நிமிடத்திற்கு மேல் கணினியை இயக்காததால் ஸ்கிரீன் சேவரில் I love my isai என்று வந்தது. அதைக்கண்ட மணிமேகலை மனதிற்க்குள் " ஒருவேல நம்ம இசையரசன லவ் பண்றாலோ??" என்று குலம்பிப்போய் இருக்க அப்போது இனியாவை பார்க்க அவளது இடது கையில் இசைக்குறியீடு "🎵" (music symbol ) பச்சை குத்தப்பட்டு இருந்தது. அதைக்கண்ட அவர் மனதிற்க்குள் " அன்னைக்கு என்ன இதுனு கேட்டதுக்கு க்ளாஸ்ல எல்லாரும் குத்தீருக்காங்க மா இதுதான் இப்போ ட்ரண்டு னு சொன்னாலே... ஆனா எழில் வேற டிசைன் குத்தீருந்தாலே ஒருவேல இசையதான் இப்டி குறியீட்டால சொல்லறாலா? " என்று எண்ணியபடி
இனியாவின் புத்தமூட்டைகள், பழைய பொருட்கள் என அனைத்தையும் தேடிப்பார்க்க அதில் சில புத்தகங்களில் இசைக்குறியீடு இடப்பட்டிருந்தது. லேசான சந்தேகத்துடன் இருந்த மணிமேகலை அதை உறுதி செய்ய எண்ணி தன் அண்ணன்வீட்ற்கு கிலம்பி சென்றார். (ஞாயிறு விடுமுறைக்காக இசை ஊரிலிருந்து வந்திருந்தான்)
அங்கு சென்றதிலிருந்து மணிமேகலை இனியாவைப் பற்றி கூறும் போதெல்லாம் இசையின் கண்ணில் ஒரு ஏக்கத்தைக் கண்டார். இசை வெளியில் சென்ற நேரத்தில் அவன் அறையை நோட்டமிட அங்கு அவருக்கு எதுவும் கிடைக்கவில்லை. அறையைவிட்டு வெளியேரும் போது இசையின் அளமாறியைக் கண்ட அவர் அதை திறந்து பார்க்க அவன் ஆடைகளுக்கு நடுவில் ஒரு கீ செயின் இருந்தது.
அது ஒரு சிறிய கீ செயின்,, ஒரு சிறிய கண்ணாடி குமிழிற்குள் ஒற்றை அரிசியில் பெயர் எழுதி ஒரு திரவத்திற்க்குள் போடப்பட்டிருந்தது. அரிசின் ஒரு புறம் இசை மற்றொரு புறம் இனியா என்று இருந்தது. (அட அதாங்க அரிசில பேர் எழுதி குடுப்பாங்கள்ள 20 ரூபா கீ செயின்,, திருவிழால விப்பாங்கலே அதுதான்)
அதைக்கண்ட மணிமேகலை இசையும், இனியாவும் காதலிப்பதை உறுதி செய்து கொண்டார். மணிமேகலை தன் மனதிற்க்குள் "இதுங்க ரெண்டும் லவ் பண்ணுதுங்கலா... ஆனா ஏன் பிறுஞ்சுட்டதா அழுகறாங்க... எதாவ்து சண்டையா இருக்குமோ.... ஐயோ இனியாவோட அப்பாக்கு தெறுஞ்சா அவ்லோ தான்...
இனியாக்கு அவங்க அப்பா சொந்தத்துல மாப்ள இருக்கே... இப்போ லவ்னு சொன்னா குடும்பத்துக்குள்ள சண்ட வந்துரும். ஆனா என் பொன்னு ஆசப்படி அவளுக்கு எல்லா கெடைக்கனும்... என்ன பண்ணலா?" என தீவிரமாக யோசித்தவருக்கு ஒரு நல்ல திட்டம் கிடைத்தது.
அதன்படி தன் தோழிக்கு அழைப்புவிடுத்து சில உதவிகளை கேட்டார். தன் அண்ணன்களிடம் " புல் மாஸ்டர் செக்கப் பண்ணிக்கற... எனக்கு அடிக்கடி நெஞ்சு வலிக்குது. என்னமோ மூச்சுவிட கஷ்டமா இருக்கு" என்று கூறிவிட்டு தன் தோழி மருத்துவராக இருக்கும் அதே மருத்துவமனைக்கு சென்றார்.
தன் தோழியிடம் தன் திட்டத்தைக்கூறி வீட்டிற்கு தொலைபேசியில் அழைத்து பேச சொன்னார். அதைக்கேட்ட அவர் தோழி மணிமேகலையின் கணவருக்கு போன் செய்து " சார் உடனே ஹாஸ்பிட்டல்க்கு வாங்க ஒரு முக்கியமான விஷயம் சொல்லனும்" என்று கூற அவரின் கணவரும் பதரிக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றார்.
அங்கு மருத்துவர் அவரின் கணவரிடம் " சார் மணிமேகலைக்கு ஹார்ட்ல கொஞ்ச நாளா ப்ராப்ளம் இருக்கு, அடிக்கடி மூச்சுவிட முடியாம, நெஞ்சு வலிக்கும். ஆப்ரேசன் பண்ணனும் இல்லனா கண்டிப்பா காப்பாத்த முடியாது. நல்ல வேல இவங்க வலுச்சதும் செக்கப்க்கு வந்துட்டாங்க" எனக்கூற பதரிய அவர் கணவர் "இவ்லோ செலவு ஆனாலு பரவால உடனே ஆப்ரேசன் பண்ணுங்க" என்க.
அதற்கு மணிமேகலை " இல்லங்க நான் ஆப்ரேசன் பண்ணா செத்துபோயிருவேன், எனக்கு பயமா இருக்கு... ஆப்ரேசன் வேண்டா..." என்று பயந்ததுபோல் நடிக்க, அதில் பயந்த அவர் கணவர் " இல்ல மா ஒன்னும் ஆகாது ஆப்ரேசன் பண்ணிக்கோ அப்போதான் நல்லா ஆகும்" என்று கூற
மணிமேகலை அதற்கு "இல்லங்க ஆப்ரேசன் பண்ணா நான் செத்துருவேன் வேண்டா" என்க அதற்கு அவர் " நீ இப்டி சொன்னா கேட்க மாட்ட பொரு உன் அண்ணங்ககிட்ட சொல்லற " என்று அவளது மூன்று அண்ணன்களுக்கும் அழைப்பு விடுக்க.
அடுத்த 30 நிமிடத்தில் மொத்த குடும்பமும் அங்கே இருந்தது. இனியா தன் தாயை அணைத்துக்கொண்டு அழுக எழிலும் "மணி டாக்டர் சொன்னா கேக்கனும் ஆப்ரேசன் பண்ணிக்கோ ப்ளீஸ்" என்று அழுது கொண்டே கூற அப்பொழுது அங்கு வந்த இசை மணிமேகலையிடம் மட்டும் பேசிவிட்டு இனியாவின் முகம் கூட பாராமல் தன் தந்தையின் பக்கத்தில் நின்று கொண்டான்.
மணிமேகலையை சுற்றிலும் அவளது மூன்று அண்ணன்களும் அமர்ந்து கொண்டு கெஞ்ச அதற்கு மணிமேகலை " என்னோட புள்ள, பையன கர சேக்காம நா போயி சேரப்போற " என்று அழுக.. பாசம் கொண்ட அண்ணன்களின் கண்களிலும் கண்ணீர் ஆறாக ஓடியது. இன்பா (இன்பராஜன்) " ஒன்னும் ஆகாது மா ஆப்ரேசன் பண்ணிக்கோ நல்லா ஆகீரும்" என்க
அதற்கு மணிமேகலை "இல்லண்ணே ஆப்ரேசன் பண்ணாலும் நான் பொழைக்க மாட்ட " என்று அழுக அதற்கு செல்வா (செல்வராஜன்) "உனக்கு ஒன்னும் ஆகாது மா பயப்படாத " என்க... அதற்கு மணிமேகலை " எனக்கு என்ன ஆனாலும் கவலை இல்ல.. என் கொழந்தைகளுக்கு நல்ல காரியம் பண்ணாம கண்ணமூடிருவனோனு பயமா இருக்கு" என்க..
அதற்கு ராஜ் (ராஜராஜன்) "இப்டிலா சொல்லாத மா.. நீ ஆப்ரேசன் பண்ணிக்கோ போதும்" என்று அழுக உடனே மணிமேகலை தன் அண்ணன்களின் கைகளை பற்றி " அண்ணே நா ஆப்ரேசன் பண்றதுக்கு முன்னாடி எனக்கு ஒரு கடைசி ஆச,, அத நெறவேத்துவீங்கலா" என்க அண்ணங்கள் மூவரும் "உசுரகுடுத்து கூட நெறவேத்துறோம் சொல்லு மா " என்க..
இன்பாவின் கை பற்றிய மணிமேகலை "என் பொன்ன உன் பையனுக்கு கட்டிவெச்சரலாமா... நா போனதுக்கு அப்றம் என்புள்ளைக்கு அம்மாவழி பாசம் வேணும் என்ன சொல்ற அண்ணே..." என்க அதற்கு அவர் கணவர் "மணி இனியாகிட்ட கேக்காம நீயா கேக்கற" என்க..
அதற்கு மணிமேகலை "என் புள்ள என் பேச்ச கேக்கும்,, " என்க அதற்கு இன்பா " சரி மா உன் பொன்னு தான் எங்கவீட்டு மருமகள்.. நீ ஆப்ரேசன்க்கு சரினு சொல்லு மா" என்க...அடுத்ததாக மணிமேகலை ராஜ்ஜின் கையைப் பற்றி " அண்ணே அன்பு இப்டியே விட்டா நம்ம குடும்பத்துகூட ஒட்டாம போயிருவான்... அவன் நல்லவன் தான் ஆனா கொஞ்சம் கோவக்காரன்" என்க...
அதற்கு ராஜ் "நம்ம அன்பு பாசக்காரன் மா.... அவனுக்கு என்ன ராஜா போல நல்லா இருப்பான் " என்க உடனே மணிமேகலை " நம்ம எழில அன்புக்கு கட்டிவெச்சறலாமா??? எழில் பொறந்ததும் பேசிகிட்டதுதானு" என தயங்கி தயங்கி கூற.... அதற்கு ராஜ் "அன்பு இதுக்கெல்லா ஒத்துக்கமாட்டா மா" என்க...
செல்வா " எழில் கொழந்த மா... அன்பு ரொம்ப கோவக்காரன்... நம்ம இசைபோல பொருமை இல்ல மா அவன்... இசை, இனியா கல்யாணம் நடக்கட்டும் அன்பு, எழில்க்கு வேண்டா மா" என்க... மணிமேகலை கோவம் கொண்டு "என் பையன் கோவப்படுவான் ஆனா ரொம்ப பாசக்காரன்... யாரையும் எப்பவும் விட்டு குடுத்துது இல்ல அவன்... எந்த கெட்ட பழக்கமும் இல்ல அப்றம் என்ன " என்க...
அதற்கு ராஜ் "இல்ல மா பொன்னு, பையன கேக்காம எப்டி" என்க... மணிமேகலை "என் பையன் என் பேச்ச மீறமாட்டான்... அதே மாதிரி கட்டுன பொண்டாட்டிய நல்லா பாத்துக்குவான் " எனக்கூற அனைவரும் அமைதி காக்க மணிமேகலை " எழிலவீட நல்ல பொன்னு என் பையனுக்கு கெடைக்காது... எழில் நா தூக்கி வளத்துன பொன்னு அவள நா பத்தரமா பாத்துக்குவ... அண்ணே என்ன ஒன்னும் பேசமாட்டீரீங்க... இந்த ரெண்டு கல்யாணம் முடுஞ்சா தான் நா ஆப்ரேசன் பண்ணிக்குவ... இல்லனா நா..." என முடிப்பதற்க்குள்
ராஜ் " எழில் அன்புவுக்கு தான்... அன்ப வர சொல்லு.... நாளைக்கே கல்யாணம்" என்க....
மணிமேகலை " ரொம்ப நன்றி" என்று கூற... அங்கு இருந்த மற்ற அனைவரும் அதிர்ச்சியில் உரைந்திருந்தனர்.
அன்புவிற்கு தொலைபேசி அழைப்பு விடுக்க அவன் விடிந்தால் கிராமத்தில் இருப்பேன் என்று கூறினான்... அவனை எப்படி கல்யாணத்திற்கு சமதம் வாங்கி இருக்ப்பார்... எழில் எப்படி சமதித்து இருப்பாள்...
Bore aducha sollunga pa please
Next part la pakkala bye 👋
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro