41
அனைவரும் அழுது கொண்டிருக்கும் நிலையில் வாசலோரத்தில் ஒரு பெரிய கார் ஒன்று வந்து நிற்க அதிலிருந்து மகாலட்சுமி, அவரது மகள், மருமகன் மற்றும் அபி நால்வரும் இறங்கினர். அவர்களைப் பார்த்து ஒவ்வொருவர் ஒவ்வொரு விதமாக பேச, கண்ணீருடன் வாசலில் வந்து நிற்பவர்களை யாரும் உள்ளே வரும் படி அழைக்கவில்லை.
இரண்டு நிமிடங்கள் நின்றவர்கள் மாலையுடன் உள்ளே வந்து தாத்தாவிற்கு மகாலட்சுமி மாலையை போட இன்பா அவரை சுட்டெரிக்கும் பார்வையில் பார்த்தார். தாத்தாவின் நிலையைக் கண்ட அபி தேம்பித்தேம்பி அழுது கொண்டே மணிமேகலையை அணைக்க ஓரிரு நொடிகள் தயங்கியவர் அவளை அணைத்து சமாதானம் செய்தார்.
அதைத்தொடர்ந்து குடும்பத்தில் அனைவரும் அபியை அணைத்து அழுகவும் மகாலட்சுமியின் மகளும் அனைவரையும் அணைத்து அழுக, மகாலட்சுமியிடம் யாரும் எதுவும் பேசவில்லை.
மகாலட்சுமி யாரிடமும் பேசாமல் அமைதியாக ஒரு நாற்காலியில் அமர்ந்து இருக்க இன்பாவோ செல்வாவின் காதில் "அதான் வந்து பாத்தாச்சுல, ஏன் இங்க உட்காந்து இருக்காங்க போக சொல்லு" என்க
செல்வா பதிலுக்கு "அண்ணே இப்போ சொல்லி ஊரு முன்னாடி பிரச்சண ஆகும், நம்ம குடும்ப சண்டைய ஊரே பாக்கும்" என்க,
அதைக்கேட்டுக்கொண்டிருந்த ராஜா "ஆமா அண்ணே, நாளபின்ன ஊரே பேசும் பெரியவரு சாவு அன்னைக்கு எல்லாரும் சேந்து மொத பொன்ன வெரட்டீட்டாங்கனு" என்க.
இன்பாவோ "அதுக்கு அவ்லோ பண்ண இவள மன்னிக்கனுமா, அப்பா சொன்னது ஞாபகம் இருக்குல" என்க அவர்களும் ஆம் என்று அமைதியாக தலையசைவுடன் கூற,
ஊர் பொதுமக்களுடன் ஒருவராக தன் தந்தையின் இறுதி சடங்கில் அமர்ந்திருப்பதை எண்ணி குற்றவுணர்ச்சியில் மகாலட்சுமியோ தவிக்க அந்த நேரம் "பூக்கூடை எடுக்கனும் மகளும், மகள்வழி வாரிசுகளும் வாங்க" என்க
அதைக்கேட்ட மணிமேகலை, இனியா, அன்பு, அகில், அனு என ஐவரும் வர சிறு தயக்கத்துடன் மகாலட்சுமி மற்றும் அவரது வாரிசுகள் வரவும் இன்பா வர வேண்டாம் என்பதைப்போல் அபிக்கு சைகை காட்ட அவளோ அழுதுகொண்டே அங்கையே நின்றாள். அப்பொழுது இறுதிசடங்கு வழிமுறை சொல்லும் பெரியவர் அன்புவைப் பார்த்து "தம்பி பெண் கொழந்தைங்க தான் பா பூக்கூடை எடுக்கனும், ஆம்பள பசங்க எடுக்கக்கூடாது, நீங்க உங்க பாப்பா, அப்றம் இந்த பையன்(அகில்) போயி உட்காருங்க" என்க.
அங்கு இருந்த இன்னொருவர் " அஞ்சு பேரு வேணும்லங்க ரெண்டு பேரு தான் இருக்காங்க, அஞ்சு இல்ல மூனு பேர் எடுக்கனும்" என்க
எழில் " நா எடுக்கலாமா" என்க அவரோ " இல்ல மா, நீ பையனோட வாரிசு எடுக்ககூடாது" என்க அவளும் அமைதியாக அங்கு இருந்த இன்னொருவர் " பெரிய பொன்னு, அவங்களோட வாரிச கூப்டுங்க" என்க
எல்லோரும் ஒருவரை ஒருவர் பார்க்க இன்பா " அபி நீ மட்டு பண்ணு, மூனு பேரு கணக்குக்கு வெச்சுக்கலாம்" என்று கூறவும் மகாலட்சுமியின் மனமோ சுக்கு நூறாக அவரோ அழுக அதை பொருட்படுத்தாமல் சடங்குகள் நடக்கத்துவங்க,
அதைக்காண இயலாமல் வேகமாக எழுந்து மாடிக்கு அழுது கொண்டே செல்ல அதைக்கண்ட எழில் அவரை பின் தொடர்ந்து செல்லவும் மாடியில் தனியாக நின்று அழுதவரை "அத்த" என்று தோள்மேல் கை வைக்க
அவரோ கண்ணீருடன் திரும்பவும் எழிலோ " அழுகாதீங்க அத்த " என்க அவரோ இரு கை கூப்பி " அம்மாடி உனக்காச்சும் என்ன அழுகாதனு சொல்ல தோணுச்சே, என்ன மன்னுச்சுரு மா பெரிய தப்பு பண்ணீட்ட, அந்த தப்புக்கு தண்டனையா தான் பெத்த அப்பாக்கு செய்ய வேண்டிய கடமையகூட செய்யவிடல அந்த கடவுள்" என்று கூறவும்,
அவளோ என்ன கூறுவதென்று தெரியாமல் அமைதி காக்கவும் எழிலிலைத் தேடி மாடிக்கு வந்த அகில், அனு இருவரும் அவளிடம் ஏதோ குறைகூற வர அங்கு மகாலட்சுமியுடன் அவளைக்காண அகிலோ எழிலிடம் " அத்த இந்த பாட்டி அபிக்காவோட பாட்டி தானே" என்க
அனுவோ " ஆமா டா நம்ம போட்டோல பாத்தோம்ல" என்க, மகாலட்சுமியோ சிறுபுன்னகையுடன் அவர்கள் உயரத்திற்கு குனிந்து
"கண்ணுகளா என்ன தெரியுமா உங்களுக்கு? " என்க
அவர்கள் இருவரும் தெரியும் என்பதைப்போல் தலையாட்ட அகிலோ " ஆனா உங்ககூட எங்க 1தாத்தா (இன்பா) டூ விட்டாங்கலாம், நீங்க சும்மா குடும்பு பண்ணீங்கலாம், சண்ட போட்டீங்களாம் அதுனால எங்க பெரிய தாத்தா உங்க கூட பேசக்கூடாது சொல்லீட்டாங்கலாம்" என்க
அவரோ கண்ணீருடன் " இத உனக்கு யாரு சொன்னா பா " என்க அவனோ எங்க குணா தாத்தா என்றான்.
அவரோ " ஆமா பா, பெரிய தப்பு பண்ணீட்ட அதுனால தான் " என்று அதற்கு மேல் குழந்தையிடம் என்ன பேசுவதென்று அறியாமல் தவிக்க
அனுவோ " தப்பு பண்ணா சாடி (சாரி) கேக்கனும்ல, நீங்க சாடி (சாரி) கேட்ட எல்லாரும் பலம் விட்டுருவாங்க, நாங்க பலம்" என்று இரு விரல் நீட்ட
'உன்னையா நா கொல்ல நெனச்ச, ஐயோ எவ்லோ பெரிய முட்டாள் நான், எனக்கு மன்னிப்பே இல்ல' என்று மனதில் நினைக்க அகிலோ " இப்போ எல்லாருகிட்டையும் சாரி சொல்லி பலம் விட்டுக்கோங்க பாட்டி எங்க தாத்தாலா ரொம்ப நல்ல தாத்தா" என்க
மகாலட்சுமியோ "உங்க தாத்தா நல்லவரு தான் நான் தா.." என்றவரை தடுத்த எழில் " குட்டி கீழ போங்க டா, நா வர" என்க,
இருவரும் முறைத்துக்கொண்டே அகில் அனுவின் காதில் ஏதோ கூற இருவரும் "அம்மா........................" என்று கத்த அந்த சத்தத்தைக் கேட்ட இன்பா வேகமாக மேலே வர அங்கு குழந்தைகளை பார்த்து
" என்ன டா ஆச்சூ, கீழ எதாவ்து விழுந்துட்டீங்கலா? அடி எதாவ்து பட்டுருச்சா? " என்க
அகிலோ " தாத்தா உங்களுக்கு இந்த பாட்டிக்கு சண்டையாமே,, சண்ட போட்றது தப்புதானே தாத்தா பலம் விட்டுக்கோங்க " என்க
அவரோ அகிலிடம் " சரி டா குட்டி நீங்க கீழ போங்க, தாத்தா பலம் விட்டுக்கற " என்று எழிலைப் பார்த்து " கொழந்தைகள எதுக்கு இவகூட பேச விட்ற,, கீழ கூட்டீட்டு போ " என்று முறைக்க
எழில் அகில், அனுவை கீழே போகும் படி கூறிவிட்டு இன்பாவிடம் " பெரியப்பா அத்த தப்பே பண்ணீருந்தாலும் பரவால தாத்தாக்கு பண்ண வேண்டிய எல்லாத்தையும் பண்ணட்டும் ப்ளீஸ் பெரியப்பா..." என்க
அவரோ " அதெல்லா எங்களுக்கு தெரியும் நீ பேசாம கீழ போ " என்க
மகாலட்சுமியோ " என்ன மன்னிச்சுரு பா, நா பண்ண தப்புக்கு மன்னிப்பு இல்ல ஆனா எனக்கு மனசு உருத்துது. பழைய மாதிரி உங்க பாசம் கெடைக்கலனாலும் பரவால அப்பாக்கு பண்ண வேண்டியதையாவது நான் பண்றனே,, உங்க கால்லகூட விழுகற என்ன ஒதுக்கி வெக்காதீங்க இத பண்ணீட்டு நானே போயற உங்கள எந்த டிஸ்டப்பும் பண்ண மாட்டா " என்க
அந்த நேரம் அன்புவை குழந்தைகள் அடம்பிடித்து அழைத்து வர அவனும் இதையெல்லாம் கேட்க நேர்ந்தது. மகாலட்சுமி இடைவிடாது கெஞ்ச எழிலும் அவர் பாவம் என்று பரிந்து பேச இன்பாவிற்கு கோவம் அதிகமானது. அன்புவும் " மாமா பெரியம்மா மேல கோவம் இருக்கு ஆனா பண்ண தப்ப உணர்ந்து மன்னிப்பு கேக்கறாங்கலே இப்போ நம்ம மன்னிக்கலனா இன்னும் அவங்க தப்பான வழியதா தேடுவாங்க, தாத்தாக்கு பண்ணவேண்டியத பண்ணட்டும், தாத்தா இருந்தாலும் இதேதா சொல்லுவாரு " என்க
அவரோ சிறிது நேரம் யோசித்த பின் ராஜா, செல்வா இருவரையும் அழைத்து பேசிவிட்டு அன்புவிடம் " சரி பா பண்ண வேண்டியத பண்ணட்டும், ஆனா காரியம் முடுஞ்ச அடுத்த நிமிசம் இவங்க இந்த வீட்டவிட்டு போயிரனும் " என்க
மகாலட்சுமி எதுவும் பேசாமல் தலையை மட்டும் அசைத்தார். சடங்குகள் ஒவ்வொன்றாக நடத்தப்பட்டது. பூக்கூடை எடுப்பதை அடுத்து தாத்தாவின் தலைக்கு எண்ணெய், அரப்பு, சீவக்காய் போன்றவற்றை அவரது பிள்ளைகள் ஐவரும் சேர்ந்து அவருக்கு வைத்தனர்.
அதைத்தொடர்ந்து தாத்தாவிற்கு புத்தாடை அணிவிக்கப்பட்டு தேரில் அமர்த்தினார்கள். பின்பு பேரன், பேத்திகள் அனைவரும் நெய்ப்பந்தம் ஏந்தி தாத்தாவை மூன்று முறை சுற்றி வந்து வணங்கினர். இறுதியாக தரை, தப்பட்டை சத்தத்துடன் 1000 சீனி வெடிகள் வெடிக்க தாத்தாவின் உடலை எடுத்துச்சென்றனர்.
தாத்தாவின் உடலை மண்ணில் புதைத்துவிட்டு அதன் மீது ஒரு மரக்கன்றை நட்டுவைத்தனர். அதன் பின்பு அனைத்து காரியங்களும் ஒன்றன்பின் ஒன்றாக முடிந்தது.
விடிந்தால் ஊருக்கு செல்ல வேண்டும் என்ற நினைவில் மகாலட்சுமி அவரது அறையில் இருக்க ஏதேதோ யோசித்துக்கொண்டு இருந்தார். தீவிர யோசனைக்குப் பின் வீட்டின் பின்புறம் இருக்கும் செயற்கை உரங்கள் அடுக்கி இருக்கும் அறைக்குச் சென்று அங்கு இருந்த பூச்சி மருந்து பாட்டிலை கையில் எடுத்து " நல்லா யோசுச்சுட்ட இது தப்பு தான், ஆனா இத தவர வேற வழி இல்ல " என்று....
Next part la pakkala ta ta 😉
- - - - -
Hi frnds...
Ud poda konjam late agiruchu ellaraium romba wait panna vechutta and enda informationum sollama poitta sorry 🙏 next ud odha story mudunjurum... Evlo naal wait panna ellarukkum thanks... 2 days la next ud pottara ok vaa 😊... Take care all
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro