4
இருவரும் கீழே இறங்கி வர அங்கு இனியா தன் அன்னையிடம் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தாள். இனியா "நீ சொன்னபடி நாங்க எல்லாரும் கேட்டோம்ல மா,, இப்போ நாங்க சொல்றபடி நீயும் போயி ஆப்ரேசன் பண்ணிக்கனும் சரியா" என்று இருகைகளிலும் தன் அன்னையின் கை பற்றி கேட்டாள். அதற்கு மணிமேகலை "சரி டா கண்டிப்பா போயி ஆப்ரேசன் பண்ணிக்கற,, என் ரெண்டு பிள்ளைகளையும் கரசேத்தாச்சு இனி நான் என்ன ஆனாலும் நிம்மதியா கண்ண மூடுவேன்" என்க.
அப்பொழுது சரியாக கீழே வந்த அன்புவின் காதில் அதுவிழ,, தன்தாயிடம் சென்ற அவன் " ஏன் மா இப்டி பேசறீங்க?? அதெல்லா உனகளுக்கு ஒன்னும் ஆகாது பயப்படாம ஆப்ரேசன் பண்ணிக்கோங்க" என்று கூற சரி என்பதைப்போல் மணிமேகலை தன்தலையை அசைத்தார். எழில் சமையலறைக்குள் இருந்த தன் அன்னையிடம் சென்று பேசிக்கொண்டு இருந்தால்.
அப்பொழுது தொலைபேசியில் பேசியபடி வந்த இசை தன் தொலைபேசியை வைத்துவிட்டு அன்புவிடம் வந்து "டேய் மச்சா... செம குட் நியூஸ் டா" என அதற்கு அன்பு "என்ன குட் நியூஸ்??" என்று கேட்க அதற்கு இசை "அவர் ட்ரீம் ப்ராஜெட்" என்று கூறவர அதற்குள் அன்பு " கெடச்சுருச்சா மச்சா " எனக்கேட்க கட்டை விரலை உயர்த்தி சிரித்துக்கொண்டே "ஆமா" என்றான் இசை.
அங்கு நாளிதழில் மூழ்கி இருந்த இன்பா (இன்பராஜன்) இவர்களைப்பார்த்து "ரொம்ப சந்தோசம் பா,, ஏதோ சின்ன பசங்க சும்மா கம்பெனி அது இதுனு சொல்லீட்டு இருக்கீங்கனு நெனச்ச பரவால டா சாதுச்சுட்டீங்க... நல்ல நேரம் ஆரமுச்சுருச்சு " என்க அதற்கு தாத்தா " எல்லாம் என் பேத்திகள கல்யாணம் பண்ணிகிட்ட யோகம் தான் " என்று கூற
இசை சிரித்துக்கொண்டு " ஆமா இனியா மை லக்கி சார்ம் டா" என முனுமுனுக்க அதைக்கண்டு இனியா முறைத்துவிட்டு சமையலறைக்குள் சென்றாள். தாத்தா கூறியதில் கடுப்பான அன்பு "அது எப்டி தாத்தா இத்தன நாள் நாங்க கஷ்டப்பட்டு வேல பாத்து ப்ராஜெட் வாங்குனா இவங்க யோகம்னு சொல்லறீங்க,, இது டூ மச் தாத்தா" என்று கூறிவிட்டு வேகமாக படியேறி தன் அறைக்குச்சென்றான்.
சமையலறையில் பல் துளக்காமல் இனியாவும், எழிலும் தேனீர் பருக அதைக்கண்ட மகாலட்சுமி அவர்களிடம் " இன்னும் சின்ன பிள்ள மாதிரி பல்லுகூட வெளக்காம டீ குடிக்கறீங்க.. என்ன பழக்கம் இது" என்க அதற்கு தாமரை "விடுங்க அண்ணி இதுங்க ரெண்டும் எப்பவும் சின்ன பிள்ளதான் " என்றார். அமைதியாக இருந்த பார்வதி "அக்கா இவங்களுக்கு சப்போர்ட் பண்ணி பண்ணி ரொம்ப கெடுத்துவெச்சுருக்கோம்,, சுடுதண்ணிகூட சுமாராதான் வெக்கறாங்க என்னதான் பண்றதோ" எனப்புலம்ப
அதற்கு சரஸ்வதி "ஆமா எப்டி சமைக்க போறீங்க ?? " எனக்கேட்க இனியா "அதெல்லா நாங்க YouTube பாத்து சமச்சுக்குவோம்,,, ஏன் டி" என எழிலைப் பார்த்து சொல்ல எழில் "ஆமா YouTube பாத்து சமச்சுக்கலா டி " எனக்கூறினாள். அவர்களை பார்த்த பார்வதி " இங்க பாருங்க மா,, ஆப்ரேசன் முடுஞ்சதும் இரண்டு நாள்ள நீங்க அவங்ககூட சென்னை போயிருவீங்க.. எதபத்தியும் யோசிக்காம சந்தோசமா இருங்க ரெண்டு பேரும்" என இருவருக்கும் கூற
எழில் தன் மனதில் "ஆமா இனியா அண்ணாகூட சந்தோசமா இருக்கனும்.. அதுக்கு இப்டி தனியா இருக்கறதுதான் சரி" என யோசித்துக்கொண்டு இருக்க பார்வதி இருவரின் கையிலும் தேனீரைக் கொடுத்து "போயி உங்க வீட்டுக்காரனுக்கு டீ குடுங்க மொதல்ல" என முறைக்க இனியா " நாங்க என்ன இவனுகளுக்கு வேலக்காரியா " எனக்கூற...
அதைக்கேட்ட மகாலட்சுமி "இனியா என்ன இது... கொஞ்சம் மறியாதையா பேசு.. என்பொன்னெல்லா இப்டி பேசீருந்த அப்பீருப்ப" எனக்கூற அதற்கு எழில் "இல்ல அத்த நாங்க போயி குடுக்கறோம்" என இனியாவை வெளியில் அழைத்து வந்து "ஏன் டி நீ வேற அத்த காலைலயே அவங்க பொன்னு புராணம் பாட்ற மாதிரி பண்ற,, இருக்கற கடுப்புல இதுவேறயா டி " எனக்கூற
இனியா " எழில் நீ உங்க அண்ணனுக்கு டீ குடு,, நா எங்க அண்ணனுக்கு டீ குடுக்கற... கடுப்பு ஆகாது... எப்டி ஐடியா" எனக்கேட்க அதைக்கேட்ட எழில் தன் மனதிற்க்குள் " இல்ல அண்ணாவையும் இவளையும் எப்டியாவ்து பேச வெக்கனுமே... இவ டீ கொண்டு போனா எதாவ்து பேசிக்க சேன்ஸ் இருக்கு பட் இவ போகமாட்டாலே என்ன பண்ணலா " என சிந்திக்க...
இனியா " ஏன் டி இப்டி நிக்கற?? போயி குடுக்கலா வா " எனக்கேட்க அதற்கு எழில் " ஹேய் போ டி நானே எங்க அன்பு மாமாக்கு டீ கொண்டு போறேன்.. மாமா என் கையாலதான் டீ சாப்டனும்னு சொல்லீருக்கு" என பொய்கூற....
அதற்கு இனியா " என்ன டி கடுப்புனு சொல்ற... இப்போ மாமானு சொல்லற ஒன்னும் புரியல" எனக்கேட்க அதை கேட்ட எழில் தன் மனதிற்க்குள் " உன்ன அனுப்ப வேற வழி தெறியல என்ன டி பண்றது அதான் பொய் சொல்லற" என நினைத்துவிட்டு இனியாவின் முகம் பார்த்து " இதெல்லா சொன்னா உனக்கு புரியாது நீ சின்ன பிள்ள,, என் மாமாக்கு நான் தா கொண்டுபோவேன்" எனக்கூறிவிட்டு அன்புவின் அறைக்குள் புகுந்தாள்.
இனியா மனதிற்க்குள் " நேத்துதானு லைப்பே போச்சுனு அழுதா.. அதுக்குல்ல எப்டி... அதுக்குல்ல பேசி புருஞ்சுகிட்டாங்கலா... ரொம்ப ஸ்பீடா இருக்கே..... என்னமோ நல்லா இருந்தா சரி " என நினைத்துக்கொண்டு இசையின் அறைக்கு சென்றாள். அங்கு அவன் தன் கணினியில் எதோ பார்த்துக்கொண்டு இருக்க இவளைப் பார்த்ததும்..
"குட் மார்னிங்" எனக்கூற அதை காதில் வாங்காத இனியா மேசையின் மீது தேனீரை வைத்துவிட்டு வேகமாக வெளியேறினாள். அங்கு எழில் உள்ளே நுழைந்து அன்புவைத் தேட அவன் பல் துளக்கிவிட்டு வெளியில் வந்தான்... இவள் தேனீருடன் நிற்பதைக்கண்ட அன்பு "என்ன இப்டி டீ கொண்டு வந்து, கெலம்பும் போது எதாவ்து ஹெல்ப் பண்ணி என்ன கவுக்கலாம்னு பாக்கறயா???" எனக்கோவமாக கூற...
அதற்கு எழிலுக்கு சிரிப்பு வந்தது சிரித்துக்கொண்டே " ஆமா இவரு நாட்டாமை படத்துல வர சரத்க்குமாரு நாங்க குஷ்பு கெலம்பும் போது வந்து துண்டு குடுக்கறமாதிரி கவுக்கரதுக்கு... காலைலயே காமெடி பண்றனு கடுப்பு ஏத்தாத... அப்றம் சாபம் விட்டுறுவ.. " எனக்கூற அவள் சாபம்விட்டது நினைவுக்கு வர அன்பு அவளிடம் "ஆமா நீ சாபம்விட்டனாலதா என் ட்ரீம் ப்ராஜெட் என்கையவிட்டு போச்சு " என சோகமாக கூற (ப்ராஜெட் கெடச்சது எழிலுக்கு தெறியாது)
அதற்கு எழில் "நல்லவங்க சாபம்லா பழிக்குமாம் பெரியவங்க செல்லீருக்காங்க " என்கூட அதைக்கேட்ட அன்பு " ஆமா நல்லவங்க சாபம் தான் பழிக்கும்... உன் சாபம் பழிக்காது... எனக்கு பேட் டே இல்ல இது குட் டே" என்று சிரித்துக்கொண்டே தேனீரை வாங்கிக்குடித்தான்.
எழில் அசிங்கப்பட்டதை வெளியில் காட்டிக்கொள்ளாமல் " சரி அண்ணாகூட இனியாவ சேத்து வெக்கனும் எதாவ்து ப்ளான் பண்ணு, நானும் ப்ளான் பண்ற" எனக்கூறிவிட்டு கீழே சென்றாள். கீழே மணிமேகலையின் தோளில் தலைவைத்து படுத்துக்கொண்டிருந்தாள் இனியா. அவள் தலையை கோதியபடி மணிமேகலையின் நினைவு ஓட்டங்கள் கடந்த காலத்திற்க்கு செல்கிறது. (நம்மலும் போலாம் வாங்க)
Flash back (rendu perum ore veetula illa pa... Mrge kaga village la irukkanga... Iniya, Ezhil vera vera uru)
4 நாட்களுக்கு முன் இனியா எழிலிடம் தொலைபேசியில் பேசிக்கொண்டு இருந்த நேரம் மணிமேகலை எதேர்ச்சையாக அதை கேட்டார். அப்பொழுது இனியா கையில் மருதாணி போட்டிருந்ததால் தொலைபேசியை சத்தமாக (speaker) வைத்து கதவை சாத்திவிட்டு பேசிக்கொண்டு இருந்தாள்.
இனியா "என்னால முடியல டி... நா ஏன் அவன லவ் பண்ண?? ரொம்ப வலிக்குது டி,,, பேசாம செத்து போயறலாம் போல இருக்கு" என்க அதற்கு எழில் " லூசூ மாதிரி பேசத டி.. அத எல்லாத்தையும் மறந்துரு... எதபத்தியும் நெனைக்காத ப்ளீஸ்.. பொறுமையா இரு டி... " என்க அதற்கு இனியா " எப்டி மறக்கறது நீயே சொல்லு... ஒவ்வொரு செகன்டும் அவன் நியபகமா இருக்கு,, நா பைத்தியம் ஆகீருவன் போல... இல்ல டி சாகரது ஒன்னு தான் எனக்கு நிம்மதிய தரும்" என்று கூற
அதற்கு எழில் " மூனு வருசம் பாசம் வெச்சு பழகிட்டனு சாகர அளவுக்கு பேசற... நீ இல்லாம நா எப்டி இருப்ப என்ன பத்தி யோசுச்சயா?? சின்ன வயசுல இருந்து என் நிழல் மாதிரி என்கூடவே தானு இருப்ப.. எனக்கு தெறுஞ்சு நீயும் நானும் 18வருசமா ப்ரண்ட்ஸ் டி என்மேல கொஞ்சம்கூட பாசம் இல்லயா டி.... சொல்லு...." என்றாள்...
அதற்கு இனியா " எழில் உன்மேல பாசம் இல்லனு சொல்லல... உனக்கு புரியாது டி லவ் பண்ணாதான் அந்த பெயின் புரியும் " என்றாள் அதற்கு எழில் " அத்த, மாமாவ பத்தி உனக்கு கொஞ்சம்கூட நெனப்பு இல்லையா பாவம் டி லவ்க்காக பெத்தவங்கல விட்டுட்டு செத்துபோறது முட்டாள்தனம்" என்றாள் அதற்கு
இனியா " நா முட்டாள் தான் டி.... இந்த உலகத்துலையே பெரிய முட்டாள்.... அவன் நடிக்கறானுகூட தெறியாம லவ் பண்ணன்ல நா முட்டாள் தான்... நா செத்தாலும் எனக்கு அண்ணா இருக்கா அவன் அப்பா,அம்மாவ பாத்துக்குவான்... கடைசியா உன்கிட்ட பேசனும் போல இருந்துச்சு அதா பேசுன வெக்கறன்டி லவ் யூ எழில்" என்றாள் அதற்கு
எழில் " சரி டி நானும் லவ் யூ தான்... நீ செத்துரு நானும் செத்தர,, சொர்க்கத்துல போயி ஜாலியா ப்ரண்ட்ஸா சுத்தலா ஓகேவா" என்றதும் இனியா " லூசூ நான் என் லவ்க்காக சாகற... நீ ஏன் டி சாகறனு சொல்லற " என்றாள் கோவமாக அதற்கு எழில் " நா என் ப்ரண்டுக்காக சாகற உனக்கு என்ன... பட் பாவம் என்னோட அப்பா, அம்மா உனக்கு கூட பெறந்த அண்ணா இருக்கா.. எனக்கு தான் யாரும் இல்ல... சரி பரவால எனக்கு என் ப்ரண்ட் தான் முக்கியம்... சரி சொல்லு வாட் இஸ் தி ப்ளான்??" என்றாள்...
பதிலுக்கு இனியா "ப்ரண்ட்காக பேரன்ட்ஸ்ஸ விட்டுட்டு போறது என்ன நியாயம் டி?" என்க அதற்கு எழில் " லவ்வர்க்காக பேரன்ட்ஸ்ஸ விட்டுட்டு போறது நியாயம்னா இதுவும் நியாயம் தான்... சரி சொல்லு என்ன ப்ளான்.. ஹேய் வலிக்காம சாகனும் டி... அந்த மாதிரி சொல்லு" என்றாள்.
பதிலுக்கு இனியா " ஏன் டி இப்டி பண்ற??" என்றாள் அதற்கு எழில் " நீ ஏன் டி இப்டி பண்ற..." என்றதற்கு இனியா " சரி எழில் நா ஒன்னும் பண்ணிக்கல போதுமா??" என்றாள் உடனே எழில் " இப்போ பண்ணிக்கமாட்டனு செல்லீட்டு அப்றம் எதாவ்து ப்ளான் பண்ண அப்றம் நானும் வந்துருவ... எதுவும் யோசிக்காத எல்லாம் நன்மைக்கே" என்றாள்.
இனியா " ம்ம்ம்ம் சரி டி... லூசூ என் ப்ளானையே கெடுத்துட்ட.." என்றாள் அதற்கு எழில் " இனியா மா நீ எப்பவும் ஹேப்பியா இருக்கனும் டி... அதுக்கா நா என்ன வேணாலும் பண்ணுவ... கோ அன்ட் ஸ்லீப்....." என்றாள். போனை வைத்துவிட்டு இனியா கண்ணைதுடைத்து கொண்டு தூங்க சென்றாள், தன் அன்னை இவை அனைத்தையும் கேட்டதை அறியாமல்.
Next part la pakkala bye👋
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro