39
எழில் சொன்னதைக் கேட்ட அன்புவுக்கு கோவம் வர "ஆனா அவங்க ஒன்னும் அப்படி நடந்துக்கல எழில்" என்க
அவளோ "ம்ம்ம்ம் ஆனா ஒரு டைம் மனிக்கலாமே டா.. பாவம் அபி ( மகாலட்சுமியோட பேத்தி) , அவ ரொம்ப ஃபீல் பண்றா, அத்தைய மனிக்கலனாலும் அபிகிட்ட பேசலாமே டா அவ என்ன பண்ணா? " என்று உலற
அவனோ அவளிடம் இருந்து வார்த்தையை வாங்க "அபி என்ன ஃபீல் பண்ணா, அவ ஃபீல் பண்ணானு உனக்கு எப்படி தெரியும்" என்க..
அவன் கேள்வியிலேயே தான் மாட்டிக்கொண்டதை உணர்ந்தவள் "அபி வ...வந்து...." என்று இழுக்க அவனோ "ம்ம்ம்ம் சொல்லு" என்க
அவளோ "அது இனியா ன்ஸ்டாகிராம்ல அவ பேபி போட்டோ, அப்றம் என் சீமந்தம் போட்டோ, பாப்பா போட்டோ எல்லா போட்டுருக்கா, அத பாத்துட்டு அபி எனக்கு ஃபோன் பண்ணா, நம்ம வீட்ல எந்த ஃபங்சன்னாலும் அபி தானே கடைக்குட்டி அவ இல்லாம இருந்ததே இல்லல. அவ நம்மல ரொம்ப மிஸ் பண்றா டா, பாவம் சின்ன பொன்னு அவளுக்கு என்ன டா தெரியும் ஏன் இந்த சண்ட வந்துச்சுனுகூட அவளுக்கு தெரியல டா" என்க
அன்புவோ " என்ன சொல்லற அபிக்கு தெரியாதா??" என்க..
அவளோ " ம்ம்ம்ம் ஆமா டா, நம்ம கல்யாணத்தப்போ +2 படுச்சனால லீவ் இல்லனு அன்னைக்கே போயிட்டா, அப்றம் காலேஜ் போனவ ஃபோன்ல தான் பேசுனா அப்றம் இனியா டெலிவரி அப்போ செம் லீவ்க்கு வரும்போது ஊருக்கு வரனு வீட்ல கேட்டப்போ இங்க வரக்கூடாதுனு சொல்லீருக்காங்க, அவ அடம்பிடுச்சு அழுகவும் திட்டீருக்காங்க, பாவம் அவளுக்கு ஏன் சண்டனுகூட தெரியல டா, கொழந்தைய பாக்கனும்னு ரொம்ப ஆசையா இருக்காமா " என்க.
அன்பு "ம்ம்ம்ம் எப்போ சொன்னா உன்கிட்ட" என்க
எழில் " இரண்டு நாளுக்கு முன்னாடி கால் பண்ணி 'இவங்க யாரும் வர வேண்டா நா மட்டு பாப்பாவ பாக்க வர கா, என்ன விட சொல்லுங்க எனக்கு உங்க எல்லாரையும் பாக்கனு' னு அழுதா" என்க
அன்பு "ரெண்டு நாள் ஆச்சு, ஏன் உடனே சொல்லல" என்க
அவளோ "இல்ல டா நீ திட்டுவனுதான் பயந்துட்டு இருந்த சாரி, வேணும்னு சொல்லாம இருக்கல" என்க
அன்பு "உடனே என்கிட்ட ஏன் சொல்லல, அவ அழுதா உடனே நம்புவையா? அவங்க என்ன பண்ணாங்கனு மறந்துருச்சா, ஒருவேல அபி கிட்ட சொல்லி நடிக்க சொல்லலாம்ல, உன்மேல செம கோவம் வருது எழில்" என்க
எழிலோ "அபிலா நடிக்கமாட்டா டா, கொழந்த டா அவ " என்க
அன்பு " நீ என்ன அவங்களுக்கு சப்போர்ட்டா" என்க.. இப்படியே பேசப்பேச வாக்குவாதம் சண்டையாகிப் போனது.
கடைசியாக அன்பு " உனக்கு அவதா முக்கியம்னா அவகிட்டயே பேசு, என்கிட்ட பேசாத" என்று கூறிவிட்டு அறையைவிட்டு சென்றான்.
இரவு பத்து மணியாகியும் அன்பு அறைக்கு வரவில்லை, கோவம் தீர்ந்ததும் வந்துவிடுவான் என எண்ணி எழில் தூங்கிப்போனாள் ஆனால் அன்புவோ அறைக்கு வரவேயில்லை. விடிந்து எழுந்து பார்க்க அன்பு அறையில் இல்லாமல் இருக்க எழிலிற்கு பதற்மாக வெளியில் வந்து தேடியவள், தாத்தாவுடன் அன்பு தூங்கிக்கொண்டிருப்பதைக் கண்டபின்தான் நிம்மதியடைந்தாள்.
எழுந்து அன்பு தன் அறைக்கு குளிக்கவர அவனிடம் " மாமா சாரி டா, ப்ளீஸ் கோச்சுகாத டா, பேசு..." என்க அவளிடம் எதுவும் பேசாமல் குளிக்கச்சென்றான். அவன் உணவு உண்ணும் போது, குழந்தையை எடுக்கும் போதெல்லாம் அவள் பேசச்செல்ல அவன் அவளிடம் பேசவில்லை. அன்றைய பொழுது அப்படுடியே செல்ல தாத்தாவுடன் அன்பு தூங்கச் செல்ல
தாத்தாவோ ஏதோ சண்டை எனப் புரிய அவனிடம் " டேய் ஏதோ ஒரு நாள் என்கூட தூங்குனா சரி, தினமும் தூங்காத, போ உனக்கு தான் ரூம் இருக்குல அங்க போயி தூங்கு" என்க
அவனோ " தாத்தா... நா அங்க போகல.." என்றவனை முறைத்து அவனது அறைக்கு அனுப்ப, அங்கு எழில் அவனைக் கண்டதும்
" மாமா என்கிட்ட பேசமாட்டயா, ப்ளீஸ் டா..." என்னும் போதே அவளது கண்களில் நீர் தேங்க அதை அவன் கண்டுகொல்லாமல் குழந்தையை பார்த்தபடி இருக்க, எழில் அவனது தோள்களில் கை வைத்து "அன்பு பேசாம இருக்காத எனக்கு அழுக அழுகையா வருது. உன்கிட்ட மறைக்க நெனைக்கல டா, புருஞ்சுக்கோ" என்றவளின் கையை தட்டிவிட்டு
"என்ன தொடாத அப்றம் கெட்ட கோவம் வரும், பேசாம போயி தூங்கு எதாவது திட்டீரப்போர" என்க..
"சாரி டா.... ப்ளீஸ்..." என்றவளை எதுவும் கண்டுகொல்லாமல் தூங்க ஆரமித்தான். அவளோ "என்கிட்ட பேசமாட்டயா போ இனி நீயா பேசுனாலும் நா பேசமாட்ட, என்ன சொல்ல வரனு புருஞ்சுக்காம கோவப்பட்றல போ" என்று அழுது கொண்டு தூங்கினாள்.
மறுநாள் காலை அன்பு டி குடிக்கும் போது எழில் அவனை கண்டுகொல்லாமல் செல்லவதைக் கண்ட தாத்தா அன்புவிடம் " டேய் என்ன பிரச்சண, ஏன் நீ என்கூட தூங்க வந்த, ஏன் எழில் உன்ன பாத்தும் பாக்காத மாதிரி போறா" என்க
அன்பு நடந்ததைக்கூற தாத்தாவோ "ம்ம்ம்ம் பாவம் அபிகுட்டி பெரியவங்க சண்டைல அவள பத்தி யாருமே கண்டுக்கல பாரு" என்க..
அன்புவோ " தாத்தா புரியாம பேசாதீங்க, ஒருவேல அவ எதாவது ப்ளானோட பேசுனா என்ன பண்றது" என்க.
தாத்தாவோ " டேய் இனியா, எழில் மாதிரி அபியும் என் பேத்தி டா, அவ அப்படிலா பண்ணமாட்ட, அதுவும் இல்லாம அவ எழில்கிட்ட பேசுனதுக்கு நீ எழில் மேல கோவப்பட்றது என்ன ஞாயயம். விடு சின்ன பொன்னு அவங்க பேசிக்கட்டும் நம்ம எதுவும் கண்டுக்க வேண்டாம், எதாவ்து பிரச்சணனா பாத்துக்கலாம், எப்பவும் ஆடு பகைனா குட்டி உறவா இருக்கும்ல அது மாதிரி தான் இதுவும், பாத்துக்கலாம் டா விடு நீ போயி எழில சமாதானம் பண்ணு பாவம் நேத்துல இருந்து அவ மொகமே சரி இல்ல, சரியா சாப்டல" என்க, அவனுக்கு சரி என்று எழில் இருக்கும் அறைக்கு செல்ல
அங்கு எழில் தன் பக்கத்தில் குழந்தையை படுக்க வைத்துக் கொண்டு குழந்தை தன் ஒற்றை விரலைப் பிடித்து விளையாட அதைகூட ரசிக்காமல் சுவற்றையே பார்த்தபடி படுத்திருக்க, அன்பு "எழில்" என்று அழைக்க காதில் விழாததைப்போல் அவள் அப்படியே இருக்க.
கீழே மண்டியிட்ட அன்பு குழந்தையின் கையில் இருந்த அவளது விரலைப்பிடிக்க அவளோ விரலை உருவிக் கொண்டு மருபக்கம் திரும்பி படுத்துக்கொண்டாள். குழந்தையை தொட்டிலில் போட்டவன் "அப்பா அம்மாவ சமாதானம் பண்ற நீங்க சமத்தா தூங்குங்க" என்று கூறிவிட்டு
அவளின் " ஹேய் பொண்டாட்டி.. சாரி டி கொஞ்சம் கோவம்" என்க அவன் நின்று பேசப்பேச எழில் கண்களில் நீர் தேங்க அவனிடம் எதுவும் பேசாமல் கண்களை மூடியபடி இருக்க அவனோ " எழில், எழில்....." என்று அழைத்து கொண்டே இருந்தான்.
திடீரென்று குழந்தை படுத்திருந்த இடத்தில் அவனருகில் சென்று அவளை பின்னிருந்து அணைத்துக்கொண்டு " என்கிட்ட பேசமாட்டயா,,, டேய் செல்லோ.." என்று கொஞ்ச அவளோ
"இப்போ எதுக்கு என்கிட்ட பேசுறீங்க, நேத்து கைய தட்டிவிட்டீங்கல இப்போ ஏன் என்கிட்ட பேசுறீங்க" என்று அழுகையுடன் கூற அவள் அழுவதை உணர்ந்தவன்
" சாரி டா, எனக்கு கோவம் வந்தா இப்படி தான் பண்ணுவனு உனக்கு தெரியும்ல மாமாவ மனிக்கமாட்டாய " என்றவனை மாட்ட என்றாள் அழுகையுடன் அவளை சமாதானம் செய்ய இடையில் கிச்சுகிச்சு மூட்ட
அவளோ "இப்படி பண்ணாத எனக்கு சிரிப்பு வரும் ப்ளீஸ்" எனக் கெஞ்ச
அவனோ " என்கிட்ட பேசுற வரைக்கும் இப்படி தான் பண்ணுவ பேசு,," என்று கிச்சுகிச்சு மூட்ட அவனோ முதலில் முறைக்க பின்பு குழந்தைகள் சிரிப்பதைப் போல் சிரிக்கத்தொடங்கினாள்.
திரும்பி அவனை கோவம் தீரும்வரை அடிக்க அவனோ 'எருமை மாட்டின் மீது மழை பெய்ந்ததைப் போல்' சொறனையே இன்றி சிரித்துக்கொண்டே அடி வாங்கினான்.
அவளோ அடிப்பதை நிருத்திவிட்டு " டேய் இனிமே என்ன கோவம்னாலும் என்கிட்ட பேசாம மட்டும் இருக்காத, எனக்கு அழுகையா வருது, பைத்தியம் ஆகீருவன் டா" எனக்கூற
அவனோ "ம்ம்ம்ம் நானும் தான் டி, ஆனா கோவம் வந்தா மட்டும் என்னால கோவத்த கன்டோல் பண்ண முடியாது, அப்றம் திட்டீட்டு உன்கிட்ட வந்து சாரி கேப்பேன்" என்க
அவளோ "ஆமா டா ரொம்ப கோவம் வருது உனக்கு, அடிக்கடி என்ன ரொம்ப அழுக வெக்கற. சரியான கோவக்காரன்" என்க.
அவனோ " ம்ம்ம்ம் கோவக்காரன்னு தெருஞ்சு தானே கட்டிகிட்ட, லவ் பண்ண சோ அப்போ அந்த கோவத்த இந்த மாதிரி அடிக்கடி போக்கனும்" என்று அவன் கூற அவளோ " ஆமா ஆமா தெருஞ்சு தான் கட்டிகிட்ட,,,, ஆமா எப்படி போக்கனும்" என்க..
அவனோ இதோ இப்படி தான் என்று நெற்றியில் முத்தமிட அவளோ வெட்கத்துடன் அப்போ அடிக்கடி கோவப்படு என்று கூறிவிட்டு முகத்தை மூடிக்கொண்டாள்.
அபி பேசுவது நன்மையா?? உண்மையாக அவள் பாசத்திற்காக ஏங்கிதான் பேசினாலா???
Next part la pakkala ta ta👋
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro