Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

3

லட்டை சாப்பிட்டு முடித்த எழில் கட்டிலில் படுத்து உறங்கப்போக அவளைக் கண்ட அன்பு " ஹேய் நீ இங்க தூங்குனா நான் எங்க தூங்க?" என்றதற்கு, எழில் " நீ கீழ தூங்கு,,, எனக்கு பெட்ல தூங்குனா தான் தூக்கம் வரும்" எனக்கூற அதற்கு அன்பு " இது என்னோட ரூம்,, என்னோட பெட்,, நான்தா தூங்குவ,, நீ எந்திரி" என கோவமாக கூற,

அதற்கு எழில் " நீங்க யாரு??,, ஏன் நான் தூங்கும் போது கத்தறீங்க,," என்றதற்கு அன்பு "எனக்கும் பெட்ல படுத்தாதான் தூக்கம் வரும்,, இப்போ நீ இறங்கல,, நா உன்ன தள்ளிவிட்டுருவ" எனக்கூற அதற்கு எழில் "ஓஹோ நீ தள்ளிவிட்டா நா மணிகிட்ட சொல்லுவேன், நீ என அடுச்சு ரூம்மவிட்டு தள்ளிவிட்டுட்டனு,, எப்டி வசதி" என்று சிரிக்க

அதைக்கண்ட அன்பு " இங்க பாரு எழில் ப்ளீஸ் எனக்கு டையர்டா இருக்கு என்ன நிம்மதியா தூங்கவிடு"  என பாவமாக கூற அதைகேட்ட எழில் "சரி போனாபோகுது நீயே தூங்கிக்கோ, பட் ஒரு கண்டிசன்" எனக்கூற என்ன என்பதைப்போல் அன்பு பார்க்க அதற்கு எழில் "ஒரு நாள் நீ பெட்ல நா கீழ,, இன்னொரு நாள் நா பெட்ல நீ கீழ,, மாத்தி மாத்தி தூங்கிக்கலாம் டீலா" என்றதற்கு, அன்பு "ஓகே டீல்" என்றான்.

அன்பு மேலையும் எழில் கீழேயும் படுத்திருக்க,, எழிலுக்கு தூக்கம் வராமல் தன் நிலையை எண்ணி அழுகை வந்தது,, கண்ணீர் சிந்திக்கொன்டே மனதிற்க்குள்
" எல்லா இந்த மணினால வந்தது. மணிமட்டும் அப்படி ஒரு சத்தியத்த வாங்காம இருந்தா நமக்கு இப்டி ஆகீருக்காது,, லைப்ல மொதல் தடவையா அப்பா நேத்து என்ன அடுச்சுட்டாரு" என்று தனக்குள் புலம்பித்தீர்த்து அப்படியே உறங்கிப்போனால் அவளைப்போலவே வானமும் மழையை பொழிந்தது.

இங்கு இவர்கள் இப்படி இருக்க,, அங்கு இசை மற்றும் இனியா...

இனியா உள்ளே நுழைந்ததும் இசை அவளை பின்னிருந்து அணைத்துக்கொண்டு "சாரி டி,,, மாமா பண்ணது தப்புதான் சாரி...என்ன மன்னுச்சுறேன் டி ப்ளீஸ்" எனக்கெஞ்ச, அடங்கி இருந்த கோவம் எரிமலைபோல் வெடித்தது இனியாவிற்கு,, இசையை விட்டு விலகி நின்ற இனியா அவனைப் பார்த்து " மாமா அது இதுனு சொல்லீட்டு என் பக்கத்துல வந்த மறியாத கெட்டுரும் ஜாக்கரத" என தன் ஆள்காட்டி விரலை நீட்டி எச்சரிக்க.

அதற்கு இசை சிரித்துக்கொண்டே "டேய் நீ மாமா மேல கோவமா இருக்கனு தெறியுது டா,, ஒரே ஒரு டைம் நா சொல்லறத கேளேன்" என்றான் கொஞ்சலாக,, அவன் கொஞ்சலில் கடுப்பான இனியா "நா எத்தன தடவ கேட்டேன் உனக்கு என்ன ப்ராப்ளம்னு ஒரே ஒரு டைம் சொன்னயா?? நீ போனப்போ மாமா மாமானு எப்டி உன்பின்னாடியே வந்தன் எனக்கு பதில் சொன்னயா?? பேசாத என்கூட" என்று கூறி முடிக்கையில் அவளுக்கு அழுகை வந்தது.

அவளது கண்ணைத்துடைத்து விட்ட இசை அவளிடம் "இப்போ சொல்லற கேளு" என்றான் அதற்கு இனியா "தேவையில்ல நீங்க எதுவும் சொல்ல தேவை இல்ல,, நீங்க உங்க இஷ்டத்து பேசுனு சொன்னா பேசனும்,, பேசாதனு சொன்னா பேசக்கூடாதா?? எனக்கும் வலிக்கும்.. உங்களுக்கு மட்டும் மனசு இருக்குனு நெனக்கறீங்கலா இங்கையும் மனசு இருக்கு" என்றாள் அழுது கொண்டே.

அவளை சமாதானம் செய்ய இசை " சாரி டா,, என்ன மன்னுச்சுரு... ப்ளீஸ் நா சொல்லறத ஒரு டைம் கேளேன்" என்று அவள் தோள்மேல் கைபோட்டுகூற அதற்கு இனியா "இங்க பாருங்க இசை,, நா உங்கல எவ்லோ லவ் பண்ணனோ அதே அளவுக்கு வெறுக்கற... அது என்ன காரணமா வேணாலும் இருக்கட்டும்.. அதுக்காக லவ் பண்ண என்னவிட்டு அப்போ போனீங்க,, இனி நம்ம சேந்துவாழ்ந்தாலும் இதே மாதிரி இன்னொரு காரணம், இன்னொரு ப்ராப்ளம்னா என்னவிட்டுட்டுதான் போவீங்க,, லவ்னா எந்த ப்ராப்ளம் வந்தாலும் விட்டுகுடுக்காம நிக்கனும் இப்டி பாதீலையே விட்டுட்டு ஓடக்கூடாது."என்று தன் மனதில் இருந்ததைக் கொட்டினாள்.

அதற்கு இசை " தப்புதான் தப்புதான்,, அதா இப்போ கல்யாணம் ஆகீருச்சுல இனி உன்னவிட்டு எங்கையும் போகமாட்ட" என்றான். அதற்கு இனியா "நம்ம கல்யாணம் எங்க அம்மா ஆசைக்காக பண்ணது, எங்க அம்மா அப்டி கேக்கலனா நீங்க என்ன கல்யாணம் பண்ணீருப்பீங்கலா?" எனக்கூறினாள்.

அதற்கு இசை "சாரி டி" என்றான்,, அதற்கு இனியா "என்ன சாரி?? ஒருவேல எனக்கு வேற பையன கல்யாணம் பண்ணிவெச்சுருந்த என்ன பண்ணீருப்பீங்க?? ஒருவேல நா செத்துபோயிருந்தா என்ன பண்ணீருப்பீங்க?? என்ன பொதச்ச எடத்துல வந்து உங்க காரணத்த சொல்லீருப்பீங்கலா??" என்றாள்.

இதைக்கேட்ட இசை " என்ன ஆனாலும் உன்னவிட்டு போகமாட்ட டி என்ன நம்பு. ப்ளீஸ் இந்த ஒரு டைம் மன்னுச்சுரு..." என்றான். அதற்கு இனியா "உங்கள எப்டி நம்பறது? மருபடியும் எதாவ்து ப்ராப்ளம்னா என்னவிட்டு போகமாட்டீங்கனு என்ன நிட்சயம்?? உங்கள நம்பி நம்பி நான் அழுதது போதும் என்ன விட்டுருங்க ப்ளீஸ்" என்று கூறிவிட்டு அவன் பதிலை எதிர்பார்க்காமல் சென்று உறங்கினாள்.

அவள் உறங்கியதும் ஜன்னலின் வழியில் மழையைப் பார்த்த இசைக்கு இனியா காதலை சொன்னது தன் மனதில் ஓடியது. (என்ன ஓடுது நம்மலும் எட்டிப்பாக்கலாம் வாங்க)

Kutty Flash back

இனியாவும், எழிலும் கல்லூரிக்கு போகும் வழியில் இசை நின்றுகொண்டு இருக்க அதைக்கண்ட எழில் " அண்ணா என்ன டா இங்க நிக்கற?? எப்போ ஊருல இருந்துவந்த? " என்றாள் அதற்கு இசை " மார்னிங்தான் வந்த.. எப்டி இருக்க??" என்றான். அதற்கு எழில் " நாங்க சூப்பரா இருக்கோம் டா,, நீ ஏன் வீட்டுக்கு வராம இங்க நிக்கற" என்றாள்.

அதற்கு இசை "நா இனியாகிட்ட பேசனும்" என்றான்.. அதற்கு எழில் " ஓஓஓ அப்போ என்ன அந்தபக்கம் போக சொல்லற அப்டி தானு " என்றாள்.. உடனே இசை " அப்டி இல்ல டா.. ப்ளீஸ்" என்றான்... அதைஉணர்ந்த எழில் " ஐயோ கெஞ்சாத... அசிங்கமா இருக்கு நா போற" என்று எழில் விலகிப்போய் நிற்க்க.

அவள் சென்றதும் இசை இனியாவிடம் " ஹேய் நா ஒன்னு கேட்டனே அதுக்கு இன்னும் நீ பதிலே சொல்லல??" என்றான். அதற்கு இனியா " நா உங்கல லவ் பண்ணல" என்று பொய்யுரைக்க அதை உணர்ந்த இசை " நீ என்ன லவ் பண்ணல, இத நான் நம்பனும்,, அப்டிதானு" என்றான். இனியா " ஆமா அப்டிதான்" என்றாள்.

அதைக்கேட்ட இசை " நம்பீட்ட நீ சொல்லறத நம்பீட்ட... " என்று குரும்பு சிரிப்புடன் கூற... அதற்கு இனியா "சிரிக்காதீங்க நா ஒன்னும் உங்கல லவ் பண்ணல" என்றாள்.. உடனே இசை " சரி ஒரு கேம் வெச்சுக்கலாம்,, நா சொல்லற மாதிரி ஆகலனா இனிமேல் உன்கிட்ட இப்டி கேக்கமாட்ட" என்றான்.

அதற்கு தவிப்புடன் இனியா " என்ன கேம்?? யாருக்கு யாருக்கு கேம்??" என்றாள். அதற்கு இசை "நமக்கும் மழைக்கும்" என்றான் அதைக்கேட்ட இனியா புரியாமல் முழிக்க அதைக்கண்ட இசை அவளிடம் " நீ என்ன லவ் பண்ற இது ட்ரூனா இன்னைக்கு நைட்க்குள்ள மழை வரும்.. அப்டி மழை வந்தா நீ ஒத்துக்கனும் லவ் பண்றனு.. ஒருவேல மழை வரலனா நீ லவ் பண்ணலனு நான் ஒத்துக்கற" என்றான்.

இதைக்கேட்ட இனியா " என்ன கேம் இது.. நா இதுக்கெல்லா வரல.. நா போற"  என்று எழிலிடம் வந்து அவளை அழைத்துக்கொண்டு கல்லூரிக்கு சென்றாள். இனியாவின் மனதெல்லாம் மழைக்காக ப்ராத்தனை செய்து கொண்டு இருந்தது. மாலை கல்லூரிவிடும் நேரம் வெயில் பலமாக இருக்க..

அதனால் கடுப்பான இனியா எழிலிடம் "என்ன டி இப்டி வெயிலா இருக்கு.. இன்னைக்கு மழை வராதா?? " என்றாள் அதற்கு எழில் " ஏன் டி மழைவராதானு கேக்கற???  இது மழைவர சீசன் இல்ல டி " என்றாள்.. அதற்கு பாவமாக " சீசன் இல்லனா மழை வராதா... இன்னைக்கு மட்டும் மழை வரனும் டி " என்றாள். அதற்கு எழில் " ஏன் டி இப்டி சொல்லற?? மழை வந்தா என்ன?? எனக்கு ஒன்னு புரியல டி " என்றாள்.

அதற்கு இனியா " இதெல்லா உனக்கு புரியாது. நீ சின்ன பிள்ள" என்று சிரித்துக்கொண்டாள், எதுவும் புரியாமல் எழில் முழித்துக்கொண்டு இருந்தாள். கல்லூரி முடிந்து வெளியில் வரும் போது மழைவர மகிழ்ச்சியில் இனியா மயில் போல் மழையில் ஆடிக்கொண்டே " ஐஐஐ மழை வந்துருச்சு ஜாலி ஜாலி" என்று ஆடினாள்.

அந்த நேரம் ரோட்டின் மருபக்கம் நின்றிருந்த இசை " மழை வந்தா ஏன் சந்தோசப்பட்ற இனியா " என்று கத்த.. அவன் பக்கம் ஓடிவந்த இனியா " மழை வந்தாலும் வரலனாலும் நா உன்ன லவ் பண்ற அது உண்மை தான் மாமா " என்றாள்.

அதைக்கேட்ட எழில் " இது எப்போல இருந்து நடக்குது. எனக்கு ஒன்னும் தெறியலையே" என்று குலம்ப.. அதைக்கண்ட இசை, இனியா இருவரும் " ரொம்ப நாளா நடக்குது மக்கு " என்று கூறினார்கள். பின்பு இசை இனியாவிடம் " ஐ லவ் யூ " என்றான் அதற்கு இனியா " லவ் யூ டூ மாமா " என்றாள்.

Flash back over.

இதை நினைத்து சிரித்துவிட்டு உறங்கினான்.

காலை விடிந்ததும் எழில் முதலில் விழித்து கதவைதிறக்க முயல அவளால் முடியவில்லை (கதவு கொஞ்சம் டைட்). எழிலின் மனதிற்க்குள் " கதவ எப்டி தெறக்கறது.. ஒருவேல வெளிய லாக் பண்ணீருப்பாங்கலோ,, ச்சே ச்சே நம்ம வீட்ல இப்டிலா பண்ணமாட்டாங்க " என்று நினைத்துக்கொண்டு கதவை திறக்க முயற்சி செய்து கொண்டிருந்தாள்.

ஆனால் பாவம் அவளுக்கு அதை திறக்க தெறியவில்லை. இழுத்து இழுந்து சோர்ந்து போயிருந்தாள். அப்போது முழித்த அன்பு இவள் செய்வதைப்பாத்து மனதிற்க்குள் " கதவகூட தெறக்க தெறியல.. இவள போய் நம்ம அம்மா நமக்கு கட்டி வெச்சுருக்கு" என்று நினைத்துக்கொண்டு

அவளிடம் சென்று " தள்ளு நா ஓபன் பண்ற இது கொஞ்சம் டைட்"  என்றான். அவனுக்கு வழிவிட்டு நின்ற எழில் அவன் திறப்பதைப்பார்த்துக் கொண்டு இருந்தாள். அன்புவால் கதவைத்திறக்க முடியவில்லை இழுத்து இழுத்து பார்த்தான் அவனாலும் முடியவில்லை. அன்புவும் சோர்ந்து போக எழிலிடம் " ரெண்டு பேரும் சேந்து இழுத்து பாக்கலாமா??" என்க.

இரவு அவன் கூறியது நினைவுக்கு வர எழில்  " அட்வான்டேஜ்ஜா எடுத்துக்க மாட்டல " என்று குறுகுறுப்புடன் கூற அதற்கு அன்பு "ஹலோ கதவ தெறந்து வெளிய போகனும்னா புடுச்சு இழு" என்றான். அதற்கு எழில் " நீ தானு நைட் கேட்ட அத தான் சொன்ன... சரி சரி மொறைக்காத இழுக்கலாம் " என்று முதலில் இருவரும் ஒவ்வொரு இடத்தில் பிடித்து இழுக்க கதவு திறக்கவில்லை.

பின் அன்பு எழிலிடம் " நா புடுச்சு இழுக்கற நீ என்பின்னாடி இருந்து என்ன புடுச்சு இழு " என்க அவளும் சரி என்று அதே போல் பின்னால் அவனைபிடித்து இழுக்க அன்புவுக்கு திடீரென்று சிரிப்பு வந்தது " ஐயோ விடு விடு எனக்கு சிரிப்பா வருது... நீ இழு நான் உன்ன புடுச்சு இழுக்கற " என்றான். அதற்கு எழில் " போ அதெல்லா முடியாது எனக்கு சிரிப்பு வந்துரும்... இப்டியே இழுக்கலாம் " என்று அவள் கூற...

அவளை இழுத்து கதவின் கைப்பிடியை பிடிக்கவைத்து அவனும் பின்னாலிருந்து கைப்பிடியை பிடித்துக்கொண்டு " ரெடி ஸ்டெடி... இழு " என்று இருவரும் ஒன்றாக இழுக்க கதவு திறந்தது. கதவு திறந்த வேகத்தில் எழிலின் மூக்கில் கதவு இடித்துவிட்டது. உடனே அன்பு " யாருக்கும் குடுக்காம திண்ண இப்டிதான் நடக்குமாம் " என்றான்.

அவன் கூறியதைக்கேட்ட எழில் " சதிவேல பாத்துட்டு டைலாக் பேசறையா... பொரு உனக்கு சாபம் விட்ற have a bad day.." என்றாள்.

(ஆனால் அவளுக்கு தெறியவில்லை அவர்களுக்கு அது குட் டே என்று... பின் நாட்களில் அன்பு அவளிடம் வேண்டி have a bad day.. என்ற வார்த்தையை கேட்பான் என்று...அவ கெட்டது சொன்னா இவனுக்கு நல்லது நடக்குதாம் )

Next part la pakkala bye

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro