22
அன்பு கோவமாக பேசிவிட்டு வெளியேற அங்கு இருந்த அனைவரும் எழிலிடம் அவன் கூறியதற்க்கான பதிலை எதிர்பார்க்க... கௌதமோ அவளிடம்...
" அன்பு சார் என்ன சொல்லீட்டு போறாரு எழில்... நெஜமாவே நீ..." என்க...
எழில் முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லாமல் " ஆமா ... நா அவறோட வைஃப் தான்.... இசையண்ணா வோட சித்தப்பா பொண்ணு " என்க...
அனைவரின் முன்னிலையில் கௌதம் எழிலை " கல்யாணம் ஆகீருந்தா மொதல்லயே சொல்ல வேண்டியதுதானு இப்படி கல்யாணம் ஆகாதவ மாதிரி என்கிட்ட ஏன் நடிக்கனும்... உனக்கு கல்யாணம் ஆகலனுதானு நா உன்ன லவ் பண்ண... ச்சீ நீயெல்லா ஒரு பொண்ணா..." என்க...
எழில் " ஹலோ நா எப்போ உன்கிட்ட எனக்கு கல்யாணம் ஆகலனு சொன்ன... என் குடும்பத்த பத்தி உன்கிட்ட எதாவது சொல்லீருக்கனா?? இல்ல உன்ன புடுச்சுருக்குனு சொன்னனா... உன்கிட்ட போன் பேசீருக்கனா.... இல்ல உன்ன மட்டு தனியா பாத்துருக்கனா... உன்மேல எப்பவாச்சும் அக்கறையா பேசீருக்கனா.. எதுவுமே இல்ல அப்றம் எதவெச்சு நா நடுச்சனு சொல்லற... " என்க..
அவனோ மௌனம் காக்க எழில் " ஒரு பொண்ணு யாரு எங்க இருந்து வரானுகூட தெரியாமதான் வந்து லவ்வ சொல்லுவயா??? ரெண்டு நாள் என் வீடு எங்க இருக்குனு தெருஞ்சுக்க ட்ரை பண்ணீருந்தாலே உனக்கு எல்லாமே புருஞ்சுருக்கும்... " என்க..
சலசலப்பைக் கண்ட இசை அங்கு வர " என்ன ஆச்சு ? ஏன் எல்லாரும் இப்படி நின்னுட்டு இருக்கீங்க ? " என்க...
அங்கு இருந்த ஒருவன் இவை அனைத்தையும் கூற கௌதமின் சட்டையைப்பிடித்தவன் " இனி உனக்கு இங்க வேல இல்ல வெளிய போ " என்க...
அவனோ பதரி " ஐயோ சார் ஏதோ தெரியாம பண்ணீட்ட மன்னுச்சுருங்க... என்னோட ஒருத்தன் சம்பளத்துல தான் எங்க குடும்பமே சாப்பிடுது... இனி எழில் மேடம்கிட்ட எந்த வம்பும் பண்ணமாட்ட ஒரு சின்ன மிஸ்அன்டர்ஸ்டேன்டிங் சார்... சாரி " என்க...
எழில் இசையிடம் " அண்ணா விடு... தப்பு நம்ம மேல தான் .. கல்யாணம் ஆனவனு சொல்லீருந்தா அவன் ஏன் இப்படி பண்ணீருக்க போறான் " என்க அவளது பேச்சைக்கேட்ட இசை அமைதியானான்....
அப்பொழுது தான் கௌதமிற்கு நினைவு வந்தது முதல் முறை எழிலைப் கண்ட போது இசை அவனை அடிக்க வந்தது. மனதில் சினத்தை அடக்கிக்கொண்டு அவர்களிடம் மன்னிப்பு கேட்டான்...
நிறுவனத்தில் நடந்த அனைத்தையும் நினைத்து எழில் கோவமாக வீட்டிற்கு வர... இசை, இனியா இருவரும் அவளை சமாதானம் செய்ய எழிலிற்கு கோவம் குறையவே இல்லை...
இனியா " அன்புண்ணா அப்படி என்ன டி சொல்லீருச்சு... நீ அண்ணாவோட பொண்டாட்டிகரது உண்மை தானு " என்க...
எழிலோ " அவன் தானு யாருகிட்டையும் சொல்ல வேண்டானு சொன்னா... நா பட்டிக்காடுனு சொன்னா.. அப்றம் எதுக்கு எல்லாரு கிட்டையும் சொன்னான் " என்க...
ஒருவாறு பேசி எழிலை சாப்பிட வைத்துவிட்டு இனியா, இசை இருவரும் அவர்களது வீட்டிற்கு சென்றனர்... இரவு 1மணிக்கு வீட்டிற்கு வந்த அன்பு கதவைத்தட்ட....
எழில் வந்து கதவைத்திறந்து எதுவும் பேசாமல் போகவே அன்பு அவளிடம் " அவ உன்ன டிஸ்டப் பண்ணுவானு தான் சொன்ன.. " என்க...
அவளோ " அவன் என்கிட்ட ப்ரோப்போஸ் பண்ணது உனக்கு எப்படி தெரியும்... அதுவும் இல்லாம அவன் அப்படி சொன்னனால உனக்கு என்ன வந்துச்சு ? " என்க...
அன்பு " அவ எப்படி கல்யாணம் ஆனா பொண்ணுகிட்ட அப்படி சொல்லலாம்... அதா நா கேட்ட " என்க...
எழில் " எனக்கு எதாவதுனா கேக்க நீ யாரு மொதல்ல... என்ன பாத்துக்க எனக்கு தெரியும்... " என்க
அன்புவும் கோவத்தில் பேச எழிலும் பேச சண்டை வலுவானது... எழில் " எனக்கு ஒன்னுனா கேக்க உனக்கு உரிமை இல்ல .. இனிமேல் இப்படி ஓவர் அட்வான்டேஜ் எடுத்துக்காத... உனக்கு தான் என்ன புடிக்காதுல அப்படியே இரு... " என்க...
கோவமாக பேசிக்கொண்டிருந்தவள் கண்களைப் பார்த்தவன் அடுத்த என்ன பேசுவது என்று மறந்து நின்றான்... கண்களையே பார்த்தவன் தன்நிலை மறந்து அவளது அருகில் செல்ல...
அவளோ " இப்போ எதுக்குகிட்ட வர.. குடுச்சுருக்கயா " என்க...
அவனோ " இல்ல " என்று மேலும் ஒரு அடி எடுத்து வைக்க எழில் பின்னோக்கி நடக்கும் முன் அவளது இடையைப்பற்றி தன்பக்கம் இழுத்துக்கொண்டு மேலும் அவளது கண்களையே பார்த்திருந்தான்...
அவளோ அவனைத்தள்ளிவிட முயற்ச்சித்து அவனை அடித்துக்கொண்டே " ஹேய் விடு... என்ன பண்ற விடு... கொன்னுருவன் விடு... ச்சீ... விடு " என்று கோவமாக கூற அவனுக்கோ அது கொஞ்சலாகவே கேட்டது...
" விடு " என்று மிகவும் சிரமப்பட்டு அவனைத்தள்ள முயற்ச்சிக்க,, அவனோ அவளது கண்களில் இருந்து மீண்டு வரவே இல்லை... அவன் அவளது இதழை சிறைபிடிக்க...
அவளால் வலிமையான அவன் பிடியில் இருந்துவிடுபட முடியவில்லை... அவனாகவே அவளைவிட்டு " எழில் நா..." என்பதற்குள் 'பளார்' என்று ஒரு அறை அவனிற்கு விழுந்தது...
கன்னத்தில் கை வைத்தவன் தெழியும் முன் இன்னொரு கன்னத்திலும் அறை விழுந்தது.... " என்ன பாத்தா உனக்கு எப்படி தெரியுது...?" என்று ஆத்திரமாக எழில் கேட்க...
அவன் பேச வாயெடுக்கும் முன் அவள் " என்ன புடிக்காது, என்ன ப்ரண்டாகூட ஏத்துக்க மாட்ட, என்ன டிவர்ஸ் பண்ண போற... என்ன லவ்வும் பண்ணல அப்றம் எந்த உரிமைல என்ன கிஸ் பண்ண... தாலி கட்டீட்டா எல்லா உரிமையும் வந்துருச்சா உங்க அம்மாக்காக தானே இத கட்டுன, நல்லா இருக்க மாதிரி எல்லாரு முன்னாடியும் நடுச்ச... என்ன பாத்தா... ****** மாதிரி இருக்கா??? " என்க...
அடுத்த நொடி அவன் அவளை அப்பவர அவனது கையை தடுத்தவள் " உனக்கு எந்த உரிமையும் இல்ல என்ன அடிக்க " என்று கூறவும் அவனோ
" எனக்கு மட்டும் தான் எல்லா உரிமையும் இருக்கு " என்று மீண்டும் இதழை சிறைபிடிக்க...
எழில் அழுகத்தொடங்கினாள்... கண்ணீர் இழலை நனைக்க அவளைப்பார்த்தவன் " ஹேய் அழுகாத நா.." என்பதற்குள்
அவள் கைகூப்பி அழுகையுடன் " ப்ளீஸ் என்ன விட்டுருங்க.. எதுவும் பண்ணீராதீங்க.... ப்ளீஸ்... நா உங்கள அடுச்சது எதிர்த்து பேசுனது எல்லாம் தப்புதான் அதுக்காக கோவத்துல எதுவும்..." என்று அடக்கமுடியாத அழுகையுடன் தரையில் அமர..
அன்புவோ " ஐயோ இல்ல இல்ல மா.. நா உன்ன ஒன்னும் பண்ணமாட்ட பயப்படாத.. அழுகாத சாரி.." என அவளது தோள்மேல் கை வைக்க..
அவளோ " ப்ளீஸ் என்ன விட்டுரு... எதுவும் பேசாத.. நா எங்க அம்மா, அப்பா கிட்டையே போற ப்ளீஸ் என்ன விட்டுருங்க... என்னால இதுக்கு மேல நடிக்க முடியாது... எனக்கும் ஒரு மனசு இருக்கு... எல்லாரும் அவங்க அவங்க இஷ்டத்து என் மனச காயப்படுத்தாதீங்க.. " என்று அழுதவள் எழுந்து உள்ளே சென்று தன் அறையை பூட்டிக்கொண்டாள்...
கதவின் மீது சாய்ந்து கீழே தரையில் அமர்ந்து கால்களில் முகத்தைப்புதைத்து அழுதவள் " எல்லாரும் அவங்க அவங்க பான்ட் ஆப் வ்யூல பாக்கறாங்க... அவனுக்கு என்ன தெரியும் என்னோட லவ்வ பத்தி அவனா வந்து கிஸ் பண்றா... இல்ல இனி இங்க இருக்க வேண்டா அம்மா, அப்பா வந்ததும் அவங்ககூட ஊருக்கு போயிரலாம்" என கூறிக்கொண்டு இருக்க...
அது தெரியாத அன்பு வெளியில் நின்று கொண்டு " எழில் ப்ளீஸ் கதவ தெற... ஐயோ நா உன்ன ரொம்ப லவ் பண்ற டி... ப்ளீஸ் கதவ தெற... உன்னோட முழு பாசமும் எனக்கு மட்டும் தான் வேணும் உன்மேல எல்லா உரிமையும் எனக்கு மட்டும் தான் இருக்கு... லவ் யூ எழில் கதவ தெற.." என்று அவன் கூறிய எதுவும் கதவைத்தாண்டி அவளிடம் செல்லவில்லை...
" இனி உன்ன டிஸ்டப் பண்ண மாட்டா .. ப்ளீஸ் வெளிய வா.. நா பண்ணது தப்புதான்... இனி இப்படி பண்ணமாட்ட கதவ தெற டி ப்ளீஸ் பயமா இருக்கு.. " என்க அவளிடம் பதிலே வரவில்லை அவனும் வெளியில் இருந்த நாற்காலியில் அமர்ந்து அவள் அறையையே பார்த்துக்கொண்டு இருந்தான்..
காலை விடிய அங்கு இசை, இனியா வர , அன்பு அமர்ந்திருந்தைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த இசை " மச்சா என்ன ஆச்சு..." என்க... அவனோ எழில் உள்ளே தன்மேல் கோவமாக இருப்பதாகக்கூற
இனியா எழிலிற்கு தொலைபேசியில் அழைக்க எழில் கதவைத் திறந்தாள்.. அன்புவிற்கு குற்றவுணர்ச்சி ஏற்ப்பட்டு வெளியே செல்ல அவன் பெயரை அழைத்துக்கொண்டே இசை பின்தொடர்ந்தான்...
கீழே வந்த அன்புவிடம் என்ன நடந்தது என வினவ அன்புவோ அவனை அணைத்து அழுதுகொண்டே " மச்சா நா எழில ரொம்ப லவ் பண்ற டா.. எனக்கு எப்படி சொல்லறதுனு தெரியாம நேத்து அவகிட்ட ரொம்ப கீழ் தரமா நடந்துகிட்ட.. பாவம் டா அவ... ரொம்ப அழுதுட்டா.. என்ன ரொம்ப ஒரு மாதிரி பாத்துட்டா டா ... இல்ல இனி அவள டிஸ்டப் பண்ண மாட்டா.." என்று வாய்க்கு வந்த அனைத்தையும் கூறினான்...
அறையினுள் சென்ற இனியாவை அணைத்து எழில் அழுக இனியா " ஏன் டி இப்படி அழுகற... என்ன ஆச்சூ?? எழில் என்ன டா ஆச்சூ... " என்க...
எழில் அழுது கொண்டே இருக்க இனியா " என்ன தான் ஆச்சூ... சொல்லு டி சொன்னா தானு எனக்கு தெரியும்... அண்ணா அடுச்சுட்டானா " என்க இல்லை என்று தலையசைத்தாள்...
இனியா " உன்ன ரொம்ப ஹார்ஸ்ஸா திட்டீட்டானா... ஹர்ட் பண்ணீட்டானா ?? " என்க அதற்கும் அவள் இல்லை என்று தலையசைத்துவிட்டு...
எழில் " அன்பு என்ன கிஸ் பண்ணீட்டான் டி.... " என்க இனியாவிற்கு சிரிப்பு வர..
சிரித்துக்கொண்டே " சரி இதுக்கு ஏன் டி அழுகற... லூசூ.." என்க...
எழிலோ " இல்ல டி அவனுக்கு என் லவ் பத்தி எதுவுமே தெரியாது ... " என்க..
அவள் கூறியதில் அதிர்ச்சியான இனியா " லவ்வா யார டி லவ் பண்ண?? எனக்கு எதுவும் தெரியாதே... யாரு டி... ஏன் டி மேரேஜ் அப்போ ஒன்னுமே சொல்லல ... எப்போல இருந்து " என்க...
எழில் " 11வது படிக்கும் போதுல இருந்து..." என்று அழ..
இனியா " யார??? "
எழில் கூறிய பதிலில் இனியா அதிர்ச்சியடைந்தாள்...
Sorry friends unga comments Ku reply panna mudiyala enakku enda 15days aaa romba wrk, so ennala Sariya reply panna mudila sorry..
Next part la pakkala ta ta 👋
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro