21
நாட்கள் அதன் போக்கில் போக ஒரு நாள் மாலை நேரத்தில் இனியா வீட்டிற்கு செல்ல ஆயத்தமாகும் வேலை அவளிற்கு மயக்கம் ஏற்பட்டது... மயங்கி கீழே விழ அனைவரும் அவளை சுற்றி நின்று கொண்டு இருந்தனர்... இசையும், அன்புவும் தண்ணீர் தெளித்து அவளை எழுப்பி மருத்துவமனைக்கு கூட்டி சென்றனர்... அவளை பரிசோதித்த மருத்துவர் அவள் தாயாகப் போகிறாள் என்னும் நற்செய்தியை இசை, அன்புவிடம் கூற இருவரும் வானத்திற்கும் பூமிக்கும் குதித்தனர்..
ஆனால் இனியாவோ இசையிடம் புலம்பித்தள்ளினாள் " அதுக்குல்ல பேபியா மாமா... எனக்கு த்ரீ இயர்ஸ் பேபி வேண்டா..." என்க...
இசை " என்னம்மா இப்படி சொல்லற... எனக்கு பேபி வேணும் ப்ளீஸ்..." என்க... அவளோ ஏனோ குழப்பத்துடன் இருந்தாள்... மூவரும் வீட்டிற்கு வர... நிறுவனத்தில் இருந்து எழிலும் வீட்டிற்கு வந்தாள்...
வந்தவள் இனியாவிடம் " என்ன டி ஆச்சு?? மார்னிங் சாப்டலயா??? ஃபிபரா??" என்று அவளது கழுத்தில் கை வைத்து கேட்க ..
இனியா " இல்ல டி... நா கன்சீவா இருக்க..." என்றதும் எழில் அவளைக்கட்டிக்கொண்டு வாழ்த்து கூற இனியாவோ " பேபி வரது சந்தோசமாதான் இருக்கு... ஆனா அதுக்குல்ல பேபியா டி..." என்க..
எழில் சிரித்துக்கொண்டே " விடு டி நீ பேபிய பெத்து என்கிட்ட குடுத்துறு நா வெச்சுக்கற... " என்க...
அவளோ " ம்ம்ம்ம் அஸ்க்குபுஸ்க்கு மை பேபி... யாருக்கு தரமாட்ட... " என்றாள்... இந்த சந்தோசத்தை தொலைபேசி வாயிலாக ஊருக்கு கூறினர்... ஒரு வாரத்தில் மொத்த குடும்பமும் சென்னை வரப்போவதாக கூறினர்...
அடுத்த நாள் நிறுவனத்தில் எழில் அவளது பணியை பார்த்துக்கொண்டு இருக்க அன்பு அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டு இருந்தான்... அப்பொழுது கௌதம் எழிலுடன் சிரித்து சிரித்து பேச அன்புவிற்கு கோவம் தலைக்கு ஏறியது ஆனால் எதுவும் கூற முடியாத நிலையில் இருந்தான்...
அவர்கள் இருவரையே கவனித்துக்கொண்டும், பின் தொடர்ந்து கொண்டும் இருந்தான்... எழில் கௌதமை கடந்து சொல்லும் போது "ஹே ஹாய்... குட்டி வெர்க் பா.. முடுச்சுட்டு சமோசா சாப்ட போலா" என்று கூறிவிட்டு நகர, கௌதம் கட்டைவிரலை உயர்த்தி சரி என்க... இதையெல்லாம் கவனித்த அன்பு
மீயுடைமையில் (possasiveness) கைகள் நடுங்க என்ன செய்கிறோம் என்று உணராமல் காகிதங்களை கையில் வைத்திருந்து அவற்றை இணைப்பதற்கு தாள் தைப்பு முள்கருவியில் (athan pa - stabler) தெரியாமல் கையில் அடித்துக்கொண்டான் (stabler la theriyama kai vechu pin pannikitta)
இரத்தம் வர அதையும்கூட கவனிக்காமல் அவர்களையே வலி மறந்து பார்த்துக்கொண்டு இருக்க அங்கிருந்த ஒருவர் " ஐயோ அன்பு சார்,, கைல என்ன இவ்லோ ப்ளட்... " என்றுகூறி அவன் கையில் இருந்த காகிதங்களை வாங்கி " சார் பாத்து பின் பண்ணலாம்ல... இப்போ இரத்தம் வருது..." என்று முதலுதவி பெட்டியை எடுத்து வந்து கட்டு போட்டுவிட்டார்...
அன்பு தன்னிடம் ஒரு வார்த்தைகூட அவள் பேசவில்லை என்ற வருத்தத்தில் இருக்க... அப்பொழுது அறையின் கதவைத்தட்டிவிட்டு எழில் உள்ளே வர... "சார் இந்த ஃபைல்ல.. இது என்ன சார் எனக்கு புரியல?" என்று சந்தேகம் கேட்க...
அவன் பேனாவை எடுக்க வரும்போது கையைப்பார்த்தவள் " என்னது விரல்ல கட்டு போட்டுருக்கீங்க சார் என்ன ஆச்சு?" என்க...
அவனோ " பின் பண்ணும்போது கைல பட்டுருச்சு வேற ஒன்னும் இல்ல..." என்க...
எழில் " ஒரு பின்கூட பாத்து பண்ணதெரியாதா சார்... " அவள் பேசுவதில் அந்த 'சார்' என்ற சொல்லை மட்டும் அழுத்தி அழுத்தி சொல்ல அன்புவிற்கு மாரடைப்பே வருவது போல இருந்தது...
அன்பு " ஏதோ டென்சன் மிஸ்.எழில்... " என்றான் கோவமாக...
அவளோ பதிலுக்கு " ஓகே எம்.டி. சார்..." என்று அவன் கூறியதைப் போலவே கூறினாள்...
பணியை முடித்துவிட்டு வீடு திரும்ப இசை, இனியா இருவரும் உணவகத்திற்கு செல்வதாக கூறி வெளியில் செல்ல எழில் இருவருக்கு மட்டும் சமைத்தாள்...
தோசை சுட்டு அவனிடம் கொடுத்துவிட்டு சென்றவள் ஒரு நிமிடம் திரும்பி அவனிடம் " ஆமா உனக்கு கைல காயம்ல எப்படி சாப்புடுவ... தோசை ஸ்பூன்ல சாப்ட முடியாது..." என்க..
அவனோ " அதெல்லா நா சாப்ட்டுக்குவ" என்று சாப்பிடப்போக அவனைத் தடுத்தவள்
" நீ எதுவும் தப்பா நெனைக்கலனா நா ஊட்டி விடட்டா" என்க.... அவனோ ஆயிரம் பட்டாம்பூச்சிகள் பறப்பதைப்போல் உணர்ந்தான்... சரி என்று தலையசைத்தான்...
அவள் ஊட்டிவிட அவனும் உண்டான்... மனதிற்க்குள் " இதுக்காக டெய்லியும் அடி பட்டாலும் சந்தோசப்படுவன்டி" என எண்ணினான்... உணவை ஊட்டி விட்டு எதுவும் பேசாமல் எழுந்து சென்றவளை ...
" எழில்....." என்க அவளும் திரும்ப
" தேக்ஸ்..." என்றான் ...
பதிலுக்கு லேசாக சிரித்துவிட்டு சென்றாள்....
ஒரு வாரம் கடந்த நிலையில் ஊரில் இருந்து மொத்த குடும்பமும் வந்திருக்க எழில், அன்பு இருவரும் முதலிலேயே பேசிக்கொண்டவாறு ஒரே அறையில் இருந்தனர்...
தாத்தாவிடம் இனியா ஆசீர்வாதம் வாங்க... அவளை தாத்தா வாழ்த்தினார்... அதைத்தொடர்ந்து அனைவரும் ஆசி வழங்கினர்... அப்பொழுது மகாலட்சுமியோ அனைவரின் முன்னிலையில் எழிலிடம் " ஏன் மா ரெண்டு பேருக்கும் ஒரே மேடைல தானு கல்யாணம் ஆச்சூ... இவ உண்டா இருக்கா... உனக்கு ஒன்னும் விஷேசம் இல்லயா... உங்களுக்குள்ள எதாவது பிரச்சணயா?" என்று பிரச்சணையாக இருக்க வேண்டும் என மனதில் எண்ணிக்கொண்டே கேட்க...
முதலில் முந்திக்கொண்ட அன்பு " அப்படி இல்ல பெரியம்மா... நாங்க ரெண்டு வருசம் லவ் பண்ணலாம்னு இருக்கோம்... எங்களுக்குள்ள அவ்லோ லவ்வு.... அதெல்லா உங்கள மாதிரி பெருசுகளுக்கு புரியாது..." என்றான் நக்கலாக... பின்பு எழிலைப் பார்த்து " அப்படி தானு பேபி..." என்க...
அவளும் " ஆமா பேபி" என்றாள் நடிப்பாக....
அனைவரிடமும் பேசிவிட்டு அறைக்கு வந்த அன்பு எழிலிடம் " இங்க பாரு புடிக்குதோ இல்லையோ எங்க அம்மாக்காக கொஞ்சம் நடிக்கனும் ஓகே வா..." என்க...
அவளும் சரி என்றாள்... இரவு உணவு உண்டுவிட்டு அனைவரும் ஒன்றாக அமர்ந்து "வானத்தைப்போலே" படத்தை அன்றுதான் முதன்முதலாக பார்ப்பதைப்போல் பார்க்க.. எழிலின் பக்கத்தில் இருந்த அன்பு அவளது தோள்மேல் கை போட,,, அவள் அவனை முறைக்க...
அவனோ கண்ணால் " பெரியம்மா (மகாலட்சுமி) " என்க... அப்பொழுது தான் எழில் கவனித்தால் மகாலட்சுமி அவர்கள் இருவரையும் அடிக்கடி கவனிப்பதை... அவரை வெறுப்பேத்த எண்ணிய எழில்...
அன்புவின் இன்னொரு கையை இவளது கைகளுசன் கோர்த்துக்கொண்டாள்.... அன்புவோ மனதிற்க்குள் " ஆஹா.... பெரியம்மா இங்க இருந்தா ஒன் வீக்ல எனக்கு லவ் ஓகே ஆகீரும் போலையே..." என எண்ணினான்....
அடுத்த நாள் பெரியவர்கள் அனைவரும் திருப்பதி செல்ல... இவர்கள் நால்வரும் நிறுவனத்திற்க்குச் சென்றனர்....
கௌதம் எழிலிடம் தன் காதலைக்கூற அவளோ " இல்ல கௌதம் எனக்கு உங்க மேல லவ் இல்ல... நா உங்ககிட்ட எப்போவாவ்து அந்த மாதிரி பேசீருக்கனா... இல்லல.... சரி சாரி உங்க மனசுல இப்படி ஒரு எண்ணம் வர நா காரணம் ஆகீட்ட... இனி உங்ககிட்ட பேசல... " என்க...
அவனோ " இல்ல எழில்... நம்ம ப்ரண்ட்ஸ்ஸா இருக்கலா... உனக்கு எப்போ புடிக்குதோ அப்போ லவ் பண்ணு... இல்ல என்ன புடிக்கலயா ப்ரண்டா பேசு..." என்க...
அவளோ " இல்ல கௌதம் இனி என்கிட்ட பேசாதீங்க ப்ளீஸ்... நீங்க லவ்வ சொல்லி நான் லவ் பண்ணாம உங்ககிட்ட பேசுனா உங்க மனசு எப்போ சேன்ஸ் கெடைக்கும்னுதான் யோசிக்கும்... இல்ல நா இனி பேசமாட்ட என்ன டிஸ்டப் பண்ணாதீங்க ப்ளீஸ்..." என்க...
அவனோ " இல்ல நீ என்ன லவ் பண்ணிதான் ஆகனும்... என்னால நீ இல்லாம வாழ முடியாது... நீ என்ன லவ் பண்ற வரைக்கும் நா உன்னவிட மாட்ட..." என்க...
அவளோ " நா லவ்லா பண்ணமாட்ட.... என்ன ஃபோர்ஸ் பண்ணா நான் போலீஸ்கிட்ட போவேன்..." என்க..
அவனோ " நீ எங்க போனாலும் சரி நா உன்ன விடமாட்ட... நா ஒன்ன ஆசப்பட்டா அத அடையாம விடமாட்ட..." என்க...
எழில் எதுவும் பேசாமல் சென்றுவிட்டாள்... இதை அனைத்தையும் அன்பு பார்த்துக்கொண்டு இருந்தான்...
கௌதமை தன் அறைக்கு அழைத்த அன்பு அவனிடம் " மிஸ்டர்.கௌதம் ஆபீஸ்க்கு வந்தா உங்க வேலைய மட்டு பாருங்க" என்று கூற...
எதற்காக இப்படி பேசுகிறான் என யோசித்தவன் " வேலையதான் பாக்கர சார்" என்க...
அன்புவோ " இல்ல வேல பாக்காம ஏதோ பொன்னு பின்னாடி சுத்தரதா கேள்வி பட்ட...இனி அந்த வேலைய விட்டுட்டு உங்க வேலைய பாருங்க." என்க...
அவனோ " நான் வொர்க்லா கரெக்ட்டா தான் பண்ற சார்.... பொன்னா யாரு ..." என்று மலுப்ப ..
அன்புவோ நேராக விஷயத்திற்கு வந்தான் " எழில் பின்னாடி சுத்தாத..." என்க...
அவனோ " அது என்னோட பர்சனல்... உங்களுக்கு வேலை ஆகலனா கேளுங்க... இதெல்லா கேக்காதீங்க..." என்க...
அன்புவோ " அவ என்னோட எம்ப்ளாயி ... நான் கேப்பேன்...." என்க...
அவனோ " அப்போ சரி ஆபீஸ் டைம் முடுஞ்சதும் அந்த விஷயத்த டீல் பண்ணிக்கற.... இனி உங்க ஆபீஸ்ல உங்க எம்ப்ளாயிய டிஸ்டப் பண்ணமாட்ட..." என்க...
அன்புவோ " இல்ல இனி எப்பவும் அவள டிஸ்டப் பண்ணாத அவதா உன்ன லவ் பண்ணலல..." என்க...
அவனோ " ஹலோ அது என் இஷ்டம் அத சொல்ல நீங்க யாரு.... நா அப்படிதான் அவள டிஸ்டப் பண்ணுவ... நா ஒன்ன ஆசப்பட்டா அத அடையாம விடமாட்ட..." என்பதற்குள் அவளை பளார் என்று ஒரு அறைவிட்ட
அன்பு " அவ என் பொண்டாட்டி... அவள டிஸ்டப் பண்ண உன்ன கொன்னுருவ..." என்க...
அவனோ " ஹலோ சார்... என்ன வெளையாடுறீங்கலா... யாராவ்து கட்டுன பொண்டாட்டிய வேலைக்கு வெப்பாங்கலா... பொய் சொல்லாதீங்க..." என்க...
அன்பு " நான் ஏன் பொய் சொல்லனும்.. அவள வேலைக்கு வெக்கறதும் வெக்காததும் என் இஷ்டம்... இது என் கம்பெனி... அவ என் பொண்டாட்டி.. இது எங்க பர்சனல்.." என்க...
அவனோ நம்பாமல் " அவளுக்கு கல்யாணம் ஆகல... மிஸ்.எழில் னு தான் இருக்கு ஐ.டி கார்ட்ல... நா நம்ப மாட்ட... ஷீ இஸ் மை ஏஞ்சல்...." என்க...
அவன் கூறியதில் கடுப்பான அன்பு அவன் கையை பிடித்து இழுத்துக்கொண்டு அறையின் வெளியில் வந்து சத்தமாக " எழில்.... எழில்...." என்க ... அங்கு இருந்த அனைவரும் அந்த சத்ததில் அவனைப்பார்க்க...
எழிலோ " எஸ் சார்... " என்க....
அன்பு " ஹேய் நான் உன் புருசன் தானு டி.... நீ எனக்கு பொண்டாட்டி தானு.... சொல்லு"என்க...
அவளோ முழிக்க... அன்புவோ அவளது தோள்மேல் கை போட்டு " இவ என்னோட பொண்டாட்டி... இசையோட தங்கச்சி.... இனி இவள ஏஞ்சல் அது இதுனு டிஸ்டப் பண்ண உங்க அப்பனுக்கு கொள்ளிபோட நீ இருக்க மாட்டா சொல்லீட்ட..." என்று கூறிவிட்டு அங்கிருந்து வேகமாக வெளியேறினான்....
3days aaa romba work 😕 athan update podala...Aprom ena da isai, iniya scenes varalanu yosikkaringala epothaikku Ezhil, anbu Ku konjam neraiya scenes varum aprom isai , iniyaa Ku poduvan....
Ok G.nyt 😴....
Next part la pakkala ta ta👋
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro