மனங்கவர் கள்வன்
நெஞ்சம் சிறகடிக்க ....
கண்கள் படபடக்க ...
உன்பார்வை வீச்சை உணர்ந்த கால்கள் தள்ளாட ...
பிடிமானத்திற்காக தோழியின் கரம் பற்ற ...
அவள் கேள்விக்கோ என் கன்னங்கள் சிவப்பாய் பதில் அளிக்க ...
அவன் முகம் காணும் ஆவலில் என் முன் நோக்க ...
அத்தனை நேரம் கண்முன் இருந்தவன்
மாயமாய் மறைந்து போனான்
அந்த மாய கண்ணன்...
இப்பேதையின் தவிப்பை தீர்க்க
கண்முன் வந்து விடடா ....
என் காதல் கண்ணா ...!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro