மூடைசுமக்கும் கல்லூரி மாணவர்கள்
ஒழுங்காக படிக்காவிட்டால் மூடை துாக்கத்தான் லாயக்கு என்று பெற்றோர் திட்டுவது வழக்கம் ஆனால் ஒழுங்காக படிப்பதற்காக மூடை துாக்குகின்றனர் கல்லுாரியில் படிக்கும் சில மாணவர்கள். விஷயத்தை கேள்விப்பட்டதும் சிவகங்கை மாவட்டம் திருப்புத்துார் வட்டம் கீழச்சீவல்பட்டியில் நடக்கும் ஞாயிற்றுக்கிழமை வாரச்சந்தைக்கு நண்பர் அன்பானந்தனின் துணையுடன் சென்றேன்
விடிந்ததும் விடியாத காலை வேளையிலேயே கீழச்சீவல்பட்டி வாரச்சந்தை களைகட்டி காணப்பட்டது. பலவிதமான காய்கறிகள் சிறிய, பெரிய லாரிகளில் வந்து சேர்கின்றன. லாரிகளில் வந்த காய்கறி மூடைகளை இறக்கி அந்தந்த கடைகளுக்கு கொண்டு சேர்க்கும் பணியினை மூடை துாக்கும் தொழிலாளிகள் சுறுசுறுப்பாக செய்து கொண்டிருக்கின்றனர்.
ஒட்டமும் நடையுமாக மூடையை சுமந்து சென்று சேர்ப்பித்து முடித்த பிறகுதான் அவர்களால் நின்று பேசவே முடிந்தது. மூடை சுமக்கும் தொழிலாளர்களின் நான்கு பேர் மாணவர்கள்.
வெங்கடேஷ் (8675668722)மெக்கானிக்கல் என்ஜீனிரிங்,விக்னேஷ் (9047372571)எம்எஸ்சி விலங்கியல்,சண்முகம்(9787620271) பிஎஸ்சி ஐடி,சூர்யா((9500988518) மெக்கானிக்கல் என்ஜீனிரிங் படித்துக்கொண்டிருக்கின்றனர்.
எங்க குடும்பம் கஷ்டப்படுற குடும்பம், பள்ளிக்கல்வியை தாண்டி படிக்கவைக்க முடியாதுன்னு சொல்லிட்டாங்க, ஆனா எங்களுக்கு கல்லாரியில் சேர்ந்து விருப்பப்பட்ட படிப்பை படிக்கணும் ஆசை, படிப்பையும் தொடரணும் அதற்கான செலவையும் நாமே பார்த்துக்ணும் என்ன செய்யலாம்னு யோசிச்ச போதுதான் மூடை சுமக்கும் கூலி வேலை இருக்குன்னு நண்பர்கள் மூலம் தெரிய வந்தது. சரின்னு இந்த கூலி வேலையை செய்யறோம் இதில் எந்த சங்கடமும் இல்லை மாறாக உழைச்சு படிக்கிறோம்ங்ற பெருமைதான் இருக்கு என்றனர் ஒரே குரலில்.
திருப்புத்தார், காரைக்குடி, கிழச்சீவல்பட்டின்னு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஊரில் வாரச்சந்தைகூடும். காலை 4 மணிக்கு வந்தாச்சுன்னா 8 மணிவரை வேலை இருக்கும். வேலையை பொறுத்து ஒரு நாளைக்கு இருநுாறு ரூபாயில் இருந்து நானுாறு ரூபாய் வரை கிடைக்கும். நாங்க இங்க வரணும்ணுங்ற கட்டாயம் இல்லை வந்தா எங்களுக்கு வேலை இல்லாம இருந்தது இல்லை. எங்க படிப்பு உடை மற்றும் எங்கள் செலவிற்கு போக வீட்டிற்கும் கொடுக்கமுடியுது, காலையில ஒரு உடற்பயிற்சியாகவும் இருக்கு என்றும் குறிப்பிட்டனர்.
இவர்களை அறிமுகப்படுத்திய மூடை சுமக்கும் தொழிலாளர் அமைப்பின் தலைவராக இருக்கும் ரமேஷ்பாபு(9865403868), இது போல இன்னும் சில மாணவர்கள் இருக்கின்றனர் படிப்பு முடிச்சு வேலைக்கு போகும் போது சொல்லிட்டு போவாங்க பெருமையா இருக்கும், அவர்கள் போவதும் புதுசாய் மாணவர்கள் வருவதும் நடந்துகிட்டேதான் இருக்கு, நல்லா படிக்கணும்பா அதுதான் முக்கியம் என்று சொல்லித்தான் இங்கே வரச்சொல்லுவோம் அதே போல இந்த மாணவர்கள் யாருமே அரியர்ஸ் இல்லாமல் நன்றாக படித்துக்கொண்டிருக்கின்றனர், இவர்களது படிப்பிற்கு எங்களால் இந்தளவிற்காகவது உதவ முடிகிறதே என்பதில் திருப்தி என்றார்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro