கனவு நனவானது.
ஒருவரை ஊக்குவித்தால் அவர் ஊக்குவித்தால் கூட விரைவில் தேக்கு விற்பார். தன் அடையாளம்தான் ரமேஷ். வாசகர்கள் கொடுத்த ஊக்கம், உற்சாகம், அன்பு, ஆதரவு காரணமாக அவரது முதல் நுாலான 'நம்ம ஊரு கதைகள்' என்ற குழந்தைகளுக்கான நுால் தற்போது வெளியாகி சென்னை புத்தக திருவிழாவில் விற்பனையாகிக்கொண்டு இருக்கிறது.
மடியில் இருக்கும் கைகளை எடுத்து கம்ப்யூட்டர் பட்டன்கள் மீது வை என்று மூளை ஆணையிட்டால் கூட அதை செயல்படுத்த கைகள் நீண்ட அவகாசம் எடுத்துக்கொள்ளும், பிறகு கம்ப்யூட்டர் பட்டன்கள் மீதான விரல்களுக்கு ஆணையிட்டு அது கொஞ்சம் கொஞ்சமாக செயல்பட இன்னும் கொஞ்சம் அவகாசம் எடுத்துக்கொள்ளும், இந்த அவகாசத்திற்கு மனமும் உடலும் ரொம்பவே அவஸ்தைப்படும். ஆனாலும் அதைப்பொருட்படுத்தாமல் ஏதாவது சாதிக்கவேண்டும் என்று எண்ணி தான் எண்ணியபடியே இப்போது சாதித்து நிற்பவர்தான் ரமேஷ்.
இப்போது 36 வயதாகும் ரமேஷ் 27 வயது வரை சராசரியாக சந்தோஷமாக பழநியில் வாழ்ந்த பட்டதாரி இளைஞர்தான். சொந்தமாய் வியபாரம் பார்த்து வந்தவருக்கு 27 வயதில் 'மஸ்குலர் டிஸ்ட்ரபி' எனப்படும் தசை சிதை நோய் பாதிப்பு ஏற்ப்பட்டது. தனது சிரமங்கள் எதையும் வெளிக்காட்டாமல் நகைச்சுவையாக பேசுவதிலும் எழுதுவதிலும் வல்லவரான இவரிடம் உங்களுக்குள் ஒர அருமையான எழுத்தாளர் இருக்கிறார் அவரை உபயோகப்படுத்துங்கள் வெற்றி நிச்சயம் என்று சொல்லி உற்சாகப்படுத்தினேன், இவர் நிஜக்கதை பகுதியில் அறிமுகம் செய்யப்பட்டதும் உலகம் முழுவதும் உள்ள வாசகர்கள் இவரோடு தொடர்பு கொண்டு பலவிதங்களில் உதவினர், உற்சாக மூட்டினர்.
இதன் காரணமாகவும், காகிதம் பதிப்பகத்தாரின் உதவி காரணமாகவும் இப்போது ரமேஷ் நுாலாசிரியர் ரமேஷாகிவிட்டார். இதோ 'நம்ம ஊரு கதைகள்' என்ற அற்புதமான குழந்தைகளுக்கான பதினைந்து கதைகள் தொகுக்கப்பட்ட சுவராசியமான புத்தகம் வெளிவந்துவிட்டது. ரமேஷின் கனவு நனவாகிவிட்டது. எழுத்தாளர் என்ற அங்கீகாரம் கிடைத்துவிட்டது. குழந்தைகளுக்கு எழுதுபவர்கள் குறைந்துவிட்ட இடத்தை நிரப்ப ரமேஷ் வந்துவிட்டார். அவரை மீண்டும் ஒருமுறை பாராட்டுவோம் அந்தப் பாராட்டு அவர் வாழும் நாட்களிலேயே அவரை உச்சத்திற்கு கொண்டு செல்லட்டும்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro