Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

ஒரு 'மாற்றம்' உருவாகட்டும்.

இன்றிலிருந்து ஒரு பத்து நாளைக்கு ஒரு உன்னத பணிக்காக நீங்கள் இரண்டு நிமிடம் ஒதுக்குங்கள். அது என்ன பணி என்பதுதானே உங்கள் அடுத்த கேள்வி.

நீங்கள் அன்றாடம் வீட்டு வேலை செய்பவர்கள், காய்கறி விற்பவர்கள், ஆட்டோ ஒட்டுபவர்கள், கார் டிரைவர்கள், பூ விற்பவர்கள், குப்பை அள்ள வருபவர்கள் என்று பலரை சந்தித்துக் கொண்டு இருக்கிறீர்கள்.  

அப்படி சந்திக்கும் போதெல்லாம் ஒரு புன்னகையோடு கடந்து சென்று விடுவீர்கள்.

ஆனால் இன்றிலிருந்து ஒரு பத்து நாளைக்கு அப்படிச் செய்யாதீர்கள், உங்களுக்கு பிளஸ் டூ படித்து முடித்த மகனோ மகளோ இருக்கிறார்களா? அவர்களை படிக்கவைக்க சிரமப்படுறீங்களா? கவலையே படாதீங்க இந்தாங்க ஒரு நம்பர், இந்த நம்பருக்கு போன் செய்யுங்க, மத்ததை அவுங்க பார்த்துக்குவாங்க என்று சொல்லி 95510 14389 என்ற எண்ணைக் கொடுங்கள். 

இந்த எண்ணின் பின்னனி பற்றி தெரிந்தால் உங்கள் இரண்டு நிமிட விசாரிப்பை உடனே துவக்கிவிடுவீர்கள்.

சுஜித்குமார் 

ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் உயர்பதவியில் இருப்பவர். பிளஸ் டூ படிக்கும் மாணவர்களுக்கான வழிகாட்டி நிகழ்வில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு இடையே தன்னம்பிக்கையை விதைப்பது இவரது வழக்கம். இப்படி ஒரு முறை ஒரு இடத்தில் பேசிவிட்டு மேடையைவிட்டு இறங்கும் போது அண்ணா நீங்கள் சொன்னபடி நான் நல்லா படிச்சு நல்ல மார்க்கு வாங்கிவிடுவேன் ஆனால் எங்கம்மா வீட்டு வேலை செய்யறாங்க அவுங்களால என்னை மேற்கொண்டு படிக்கவைக்க முடியாதே? அப்ப நான் என்ன செய்யட்டும் என்று கேட்டு இருக்கிறார்.

அந்த மாணவியின் கேள்வி சுஜித்குமாரை உலுக்கிவிட்டது,பிளஸ் டூ மார்க் கைக்கு வந்த உடன் எனக்கு போன் செய்யுங்கள் என்று சொல்லிவிட்டார்.நல்ல மார்க்குடன் அந்த மாணவியும் மறக்காமல் போன் செய்துவிட்டார். மாணவி உயர்கல்வி படித்து முடிக்க இரண்டு லட்சத்தில் இருந்து நான்கு லட்சம் வரை படிப்பிற்கு செலவாகும், இந்த செலவை ஏற்றுக்கொள்ளும் நன்கொடையாளரை தேடுவதற்கு பதிலாக நேரடியாக கல்லுாரியிலேயே போய் இலவச சீட்டை கேட்டு விடுவது என்ற முடிவோடு ஒரு கல்லுாரியில் போய் மாணவியின் நிலமையைச் சொல்லி சீட்டு கேட்டு இருக்கிறார்.

விஷயத்தைக் கேள்விப்பட்ட கல்லுாரி நிர்வாகம் ஒன்றல்ல உங்களுக்கு இருபது சீட் கொடுக்கிறோம் என்று சொல்லிவிட்டனர் இப்போது மீதமுள்ள 19 சீட்டுக்கு தகுதியான மாணவர்களைத் தேடவேண்டிய சூழ்நிலை. நண்பர்களின் துணைகொண்டு மாற்றம் என்ற அறக்கட்டளையை உருவாக்கி மீதம் தேவைப்பட்ட 19 மாணவர்களைக் கண்டுபிடித்து கல்லுாரியில் சேர்த்த பிறகு சுஜித்குமாருக்கும் அவரது நண்பர்களுக்கு ஏற்பட்ட மனநிறைவிற்கு அளவேயில்லை. இதை ஏன் ஒவ்வொரு வருடமும் தொடரக்கூடாது என்று முடிவு செய்தனர், இவர்களது நல்ல எண்ணத்திற்கு மேலும் சில கல்லுாரிகள் துணை நிற்கின்றன.

பிளஸ் டூ மதிப்பெண் வந்துவிட்ட இந்த சீசனில் சோஷியல் மீடியாவில் தகவல் போடுகிறார்கள், பார்ப்பவர்களிடம் எல்லாம் இப்படி ஒரு விஷயம் இருக்கிறது என்று சொல்கிறார்கள்,பொறியியல் கல்லுாரியில் சேர்வதற்கு கட்ஆப் 175க்கு மேல் இருக்கவேண்டும் கலைக்கல்லுாரியில் சேர்வதற்கு 75 சதவீதத்திற்கு மேல் மார்க்குகள் இருக்கவேண்டும்,பெற்றோர் ஏழைகளாக இருக்கவேண்டும்.

இந்த தகுதியின் அடிப்படையில் வரக்கூடிய விண்ணப்பங்களை நேரடியாக விசாரித்து பின் மாணவர்கள் விருப்பப்படி உயர்கல்வி படிக்க ஏற்பாடு செய்துவிடுகின்றனர்.கடந்த நான்கு வருடங்களாக இந்த தொண்டு தொடர்கிறது இதுவரை 337 குழந்தைகள் படித்துள்ளனர் படிப்பை முடித்வர்களில் 87 சதவீதம் பேருக்கு வேலையும் கிடைத்துவிட்டது.

மாணவர்கள் வாழ்வில் மாற்றத்தை கொண்டுவர பாடுபடும் 'மாற்றம்' அமைப்பினர் இந்த வருடத்திற்கு தகுதியான மாணவர்களை தேடுகின்றனர், உங்கள் இரண்டு நிமிட அக்கறையான அன்பான விசாரிப்பின் காரணமாக சேரும் மாணவர் வாழ்நாள் முழுவதும் இதற்கு முதல் காரணமான உங்களை மறக்கமாட்டார்கள்.

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro