மூக்குணாக்க 2 😉😉😉
"ஏய்.. ஏய்.. நாக்கு.. எழு டி.. அடியே.." என மெல்லிய குரலில் அவளை அழைக்க..
"கண்ணை கசக்கிக் கொண்டே எழுந்தவள் தன் அருகில் போர்வையைப் போர்த்தித் தடவாயில் டார்ச்லைட்டை அழுத்தி வைத்தவாறு நின்றுக் கொண்டிருந்த சிந்தரியைப் பார்த்துக் கத்த ஆரம்பித்தாள். (இப்படி பண்ணி பாருங்க நிஜமாவே பயமா இருக்கும் 😝😝😝😝)
"ஐயோ ஐயோ பேய்.. ஐயோ பேய்...என்னை காப்பாத்துங்க.. என்னை காப்பாத்துங்க..." எனக் கத்த ஆரம்பித்தவளின் வாயை அடைக்கப் போக சிந்தரி கையில் வைத்திருந்த டார்ச்லைட் இடைஞ்சலாக இருக்க அதைப் படுக்கையில் வைத்துவிட்டு அவளின் வாயை அவரசம் அவரசமாக அடைத்தாள் சிந்தரி.
முதலில் பயந்தாலும் சிந்தரி என அறிந்துக் கொண்ட "இவ எங்க இங்க.." என நினைத்தப்படியேத் திருத்திருவென முழித்தாள்..
"ஏய் சுந்தரி எதுக்கு இப்படி முழிக்கற..ஏதாவது பேசு.." எனக் கேட்டவளை முறைத்தவள்
கண்ணால் அவளின் கையை காட்ட..
"ஈ என இழித்தவள் சாரி டி.. என கூறியவாறே அவளின் கையை எடுக்க
"அறிவுக்கெட்ட கூவம்.. இப்படியா வந்து நிப்பாங்க...மூதேவி.. மூக்கானங்கயிறு.." என ஆரம்பித்து சிலபல வார்த்தைகளில் அவளை திட்டிய பின்னரே ஓய்ந்தாள் சுந்தரி..
"அப்பாடி.. திட்டி முடிச்சுட்டா.. சரி இப்போ சொல்லு... அதுக்கு என்ன வரும்..." என கேட்க
"எதுக்கு என்ன வரும்.. ஒழுங்கா ஓடி போயிரு... கடுப்பக் கிளப்பிட்டு இருக்காத.." என கோபத்தை காட்டிட
"ஏய் நாக்கு சுந்தரி.. ப்ளீஸ் டி சொல்லு டி.. அதுக்கு என்ன வரும்னு..." என கேட்டவளை முறைத்தவள்
"எதுக்குன்னு சொல்லு.." என்றாள் கோபத்துடன்
"அதான் தேவாங்குக்கு சொல்லு..." என ஆர்வ மிகுதியில் கேட்க
"ஒஹ் பகவான் அதுக்கு இந்த நேரமா கிடைச்சது சனியனே.. எனத் திட்டியவள் அதற்கான விடையை கூற ஆரம்பித்தாள்
"தெய்வ வாக்கு விலங்கு.." இப்படி தான் சொல்லுவாங்களாம். ஆனா காலம் மாற மாற மனிதர்களோட சேர்ந்து நம்ம தமிழ் எழுத்துக்களும் மருவி போயிருச்சு.. அதுல இந்த விலங்கோட பெயரும் ஒன்னு.. அதே மாதிரி இந்த விலங்கு எப்பவும் வடக்கு திசையை பார்த்து தான் உட்காருமா.. அப்பறம் இது மேலே ஏதோ துர்நாற்றம் வருமாம்..."
" ஒஹ்.. செம.. அது ஏன் வடக்கு பாத்து சிட் பண்ணுது.. வேற திசை ஏதும் தெரியாதா என்ன...தென் ஏன் அது குளிச்சதே இல்லையா மழையில நனைஞ்சா போதுமே.. என தடவாயில் கைவைத்து கேட்டவளிடம்
"ஙங்... போயி கேளு போ... கடுப்ப கிளப்பிட்டு.. இவ்ளோ தான் எனக்கு தெரியும். எனக்கு தெரிஞ்ச தமிழை சொல்லிட்டேன்.. ஆள விடு..." எனத் திட்டிப் படுக்கையில் விழுந்தவளிடம்
"ஏய்.. இதெல்லாம் போங்கு.. எங்கிட்ட இப்படி கேட்டு என்னை தூங்க விடாம பண்ண தானே.. அப்போ நானும் கேட்பேன் நீ பதில் சொல்லு..." என கேட்டவளிடம்
"இதோ பாரு.. ஒழுங்கா ஓடியே போயிடு... எனக்கு தமிழ் தெரிஞ்சுக்க வேண்டாம்...என்னை தூங்க விடு.. காலையில நீ கேட்கற அந்த கேள்விக்கு பதில் சொல்றேன்.." என தூக்க கலக்கத்தில் சொன்னவளிடம்
"அப்படியா சொல்ற.. ஆனா. நான் இப்ப வரைக்கும் தூங்காம இருந்தனே சோ நீயும் தூங்க கூடாது ஒரு மணி நேரமாவது முழிச்சுட்டு இருக்கணும்.." என கூறியவளின் அருகில் சென்றவள் அவள் எதிர்பாராத நேரம் அவளின் கையை பல் பதியும் அளவிற்கு கடித்து வைத்துவிட்டு ஒரே ஜம்பில் அங்கிருந்து சென்றாள்..
"ஐயோ..அம்மா.. இப்படி கடிச்சுட்டாளே சரியான சோத்துக்கு செத்தவாள இருப்பா போலயே.. நாளைக்கு காலையில இடுப்ப சுத்தி எத்தனை ஊசி போடனுமோ..." என புலம்பியவளின் குரல் வாசல் வரை கேட்டது...
*******
நாளைக்கு...எனக்கு தெரிஞ்ச தமிழோட நான் வரங்க.. ட்டாடா..
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro