நாக்குமுக்க 1
ஹாய்.. வணக்கம், வந்தனம், நமஸ்தே, நமஸ்காரம்... நான் தாங்க உங்க நாக்குமுக்க சுந்தரி... என கூறிக்கொண்டிருந்தவளை இடித்தப்டியே வந்து நின்றாள் அவளைப் போல் ஒருவள்.. ச்ச தப்பா சொல்லிட்டேன் கொஞ்சம் வேற மாறி தான் இருப்பா (சுந்தரி அத்தை பொண்ணு...)
"ஹாய்ய்... ஹலோ..ஹீலோ.. கிலோ.. எவ்ரி ஒன்.. நான் தாங்க உங்க மூக்குனாக்க சிந்திரி..." என கூறியவளின் இடையை தன் இடையால் இடித்து அவளை தள்ளிவிட்டு நின்றவள்..
"ஹாய்ங்க.. நான் சுந்தரி... இதோ இங்க இருக்காளே இவ சிந்தரி..."என சத்தமாக அறிமுகம் செய்தவள் ஹஸ்கி வாய்ஸில் "ஓவர் ஸீன் பார்ட்டிங்க.. இவ தமிழே தெரியாத மாதிரி பண்ணும் பாருங்க..." என ஹஸ்கி வாய்ஸில் கூறியவளின் பக்கத்தில் வந்து அவளின் வாய் அருகில் தன் காதை வைத்து கேட்ட சிந்தரிக்கு சுந்தரியின் சொல்லில் கோபம் தலைக்கறே
"இந்தம்மா சுந்தரி.. யாருக்கு யாருக்கு தமிழ் தெரியாது.. நாங்கெல்லாம் தமிழை தப்பா எழுதனாலும் தமிழ்ல மட்டுமே எழுதற ஆளுங்க தெரியும்ல.." என தய்யா தாக்கவேன குதித்த சிந்தரியை தள்ளிவிட்ட சுந்தரி
"இதோடா... ஏம்மா.. போறயா அந்த பக்கம். நீ தமிழை தப்பா எழுதறதுக்கு எழுதாமலே போகலாம். சும்மா வந்துட்டா நாங்களும் பேசறோம், எழுதறோம்னு.. போ மா.. போ.."என அசைட்டாய் பதில் கூறியவளை முறைத்த சிந்திரி..
"இதோட... உனக்கு மட்டும் என்னாமா தமிழ் தெரியும்.. சொல்லேன் கேட்போம்.." என ஏளன சொல்லுடன் கேட்ட சிந்தரியை பார்த்து சிரித்த சுந்தரி
"வா டி.. என் மூக்குணாக்க சிந்திரி.. எனக்கு முன்னாடியே முந்திக்கிட்டு பொறந்த முந்திரி.. யார் கிட்ட தமிழை பத்தி கேட்கற.. நாங்களெல்லாம் தமிழ் பேசனாவே தாறுமாறு தெரியும்ல. போனாப் போகுதுன்னு வேணா ஒரு இரண்டு எழுத்து சொல்றேன்.. அதுக்கு பதில் சொல்லேன் பாப்போம்..." என அவள் கட்டியிருந்த சேலையை வெட்டிப் போல் கட்டியவாறே கேட்டவளைப் பார்த்தவள்
"இதோட.. கேளு டி என் சுந்தரி பருப்பு..
அப்படி என்னத்தக் கேட்கறன்னு நானும் பாக்க தானேப் போறேன்.. எங்களுக்கு தெரியாத தமிழா.." என சிலாகித்து கொண்டவள் சேலை முந்தானையை இடுப்பில் எடுத்து சொருகியவாறேக் கேட்க
"தேவாங்கு..." என ஆரம்பித்த நாக்குமுக்க சுந்தரியை பேச விடாமல் கத்த ஆரம்பித்தாள் மூக்குணாக்க சிந்தரி..
"அடிங்க என் பிச்சுப் போட்டப் புரோட்டா.. யாரை டி தேவாங்குன்னு சொல்ற... விட்டானா பாரு ஒன்னு மூஞ்சி தேஞ்சு பஞ்சர் கடை டயர் மாதிரி ஆயிடும் சொல்லிட்டேன்.. யாரைப் பாத்து என்ன வார்த்தை சொல்லிட்ட நீனு.. அடியே நாக்கு சுந்தரி இனிமே நான் தான் டி மந்திரி..." என கைகளால் கட்டம் கட்டி கால் இரண்டையும் முன்னுக்கும் பின்னுக்கும் வைத்து குத்தாட்டம் ஆடுவதைப் போல் செய்தவளைப் பார்க்க பார்க்க சிரிப்பு தான் வந்ததது.
"அடியே மூக்கு சிந்திரி நிறுத்து டி நிறுத்து.. நான் சொல்ல வந்ததே முழுசா கேளு டி..."
"என்னத்தம்மே சொல்லுவ என்னத்த சொல்லுவ.. என்னை திட்டத் தேவாங்குன்னு என்னமோ ஆர்பிச்சீயே அத்தயாக் கேட்க சொல்ற. இதுக்கு மேல ஏதாவது சொன்ன சங்கம் தன் கடமையை செய்யும் பாத்துக்க.. ஒத்தைக்கு ஒத்த நிக்கறையா..." என மல்லுக்கு நின்றவளை பார்த்து தலையில் அடித்துக் கொண்டாள் சுந்தரி
"அடிங்க.. கொஞ்சம் வாய மூடிக்கிட்டு கம்ன்னு கிடைம்மா.. இல்லைன்னா எனக்கு தெரிஞ்ச தமிழையும் சொல்ல மாட்டேன் பாத்துக்கோ..." என சுந்தரி மிரட்ட
"அட ஆமா.. என்னத்தையோ சொல்றன்னு சொன்னல்ல மறந்துட்டேன்.." என சிந்தரி சொல்ல
"அதான் நான் சொல்ல வந்தேன்.. கொஞ்சம் கேளு.."நாக்கு சுந்தரி சொல்ல
"என்னத்தை அப்படி சொல்ல போற.." என மும்மரமாக கேட்டாள் சிந்திரி..
"அதான் மா..தேவாங்கு இருக்குல்ல தேவாங்கு.."
"ஒரு தேவாங்கா இரண்டு தேவாங்கா.." என தன் சந்தேகத்தை கேட்டாள் சிந்திரி
"எத்தனையோ தேவாங்கு மொத்ததுல ஒரு தேவாங்கு வைச்சுக்கோ..' என நாக்கு சுந்தரி சொல்லவும்
"அப்போ ஒரு தேவாங்கு தான்..." என கூறியவளை பார்த்து முறைத்தாள் சுந்தரி
"முறைக்காதம்மே.. சும்மா சொன்னேன்.." என மூக்கு சிந்தரி சொல்லவும்..
"ஹிம்மம்ம் என கூறியவள் அடுத்து ஆரம்பித்தாள்
"இந்த தேவாங்கு பேரு.." என சுந்தரி ஆரம்பிக்க
"தேவாங்கு.." என முடித்தாள் மூக்கு சிந்தரி..
"ஐயோ... நான் சொல்றேன்..கொஞ்சம் பேச விடு..." என நாக்கு சுந்தரி சொல்ல தன் வாய் மேல் கைவைத்து கொண்டாள் சிந்திரி.
"இந்த தேவாங்கு இருக்குல்ல தேவாங்கு..
"ஏன் அதுக்கு மேல வராதா.. இல்லை தெரியலையா..இவளுக்கு எதுவும் தெரியல சிந்தரி.. சமாளிக்கறா.."என நினைத்த சிந்திரி மெல்லியதாக சிரத்து கொண்டாள்
"இந்த தேவாங்கு பேரு முழு பேரு.. என்னன்னு தெரியுமா உனக்கு.. அதாவது இந்த தேவாங்கு பேரு மருவிய சொல்ல இருந்து வந்துச்சு இதோட முழு பேரு வேற..." என்ற சுந்தரியை புரியாமல் பார்த்தாள் சிந்திரி
"ஏக்கா எனக்கு புரிலக்கா..."
"இப்போ மாலினி அப்படிங்கற பேர நீ எப்படி கூப்பிடுவ சொல்லு.."
"மாலினின்னு கூப்பிடுவேன். அப்படி இல்லைன்னா மாலி, மாலு, நாலு, குளு இப்படி ஏதாவது சொல்லுவேன்..இது ரொம்ப முக்கியம் நீ தேவாங்க சொல்லு.." என சலித்துக் கொண்டவளின் தலையில் அடித்த சுந்தரி "அதாங்க வென்று நானும் சொல்ற.. இந்த தேவாங்கு பேரையும் இப்படி தான் சுருக்கி வைச்சுட்டாங்க தேவாங்குன்னு..." என சுந்தரி சொல்லவும்
"அடியாத்தே... அப்படியா சங்கதி... அப்போ இதோட முழு பேரு என்ன கா..." என கேட்ட சிந்தரியிடம்
"அது வந்து..." என ஆரம்பிக்கும் முன்பே
"அடியே சிறுக்கி மவளே என்க டி இருக்க. வீட்டை வீடு மாதிரியே வைச்சு இருக்க.." எனக் கத்தல் சத்தம் கேட்டு அடித்து பிடித்து சுந்தரி அங்கிருந்து நகர
"கருமம் டா.. இன்னும் ஆத்தாளுக்கு பயந்துட்டு இருக்கு...இனி நமக்கு என்ன வேலை போவோம்..." என திரும்பி சென்றவள் மீண்டும் வந்து
"ஐயோ.. ஐயோ.. சாரி..சாரிங்க சுந்தரி அம்மா திட்டிங்.. அவப் போயிங்.. நானும் போயிங்.. நாளைக்கு வரீங்..." 🏃🏃🏃🏃🏃🏃🏃🏃😝😝
****
Haii drs summa daily ud poda oru idea so நம்ம தமிழ்ல மருவிய சொற்கள் என்னன்னு சொல்ல நாக்குமூக்க சுந்தரி கூடவும், மூக்குணாக்க சிந்திரி கூடவும் வந்தேன்.... இனிமே அடிக்கடி வாறேன்.. எப்படி இருக்குன்னு சொல்லுங்க.. இதை அப்படியே தொடரலாமா வேண்டாமான்னு சொல்லிட்டு போங்க...😂😂😂😂
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro