Epilogue
3 வருடங்களுக்கு பிறகு...
செங்கதிரோன் தன் செங்கதிர்களை புவியில் பரப்பி விட்டு கொண்டு ஆவலாய் எழ... ஏதோ அதன் வரவை எதிர்பார்த்து காத்திருந்ததை போல விடியற்காலையிலே தலை குளித்து ஈரம் காயாத கூந்தலை கொண்டையிட்டு புடவையின் முந்தானையை இடுப்பில் சொருகி கொண்டு வீடு முழுவதும் சாம்பிராணி மணம் வீச நடந்து கொண்டிருந்தாள் நம் நாயகி உத்ரா...
முன்பிருந்த அழகையும் மிஞ்சி மூன்று வருடத்தில் கணவனின் காதலிலும் மகன்களின் சேட்டைகளிளும் பேரழகாகியிருந்தாள் பெண்ணவள்... சாம்பிராணியை ஓரமாய் வைத்து விட்டு காலை வெயிலில் தலை துவட்டி கொண்டிருந்தவளின் இடையில் அவளவனின் கரங்கங்கள் ஊர்வலம் போக.. அவன் இதழ்கள் அவளின் முதுகில் முத்திரை பதிக்க... தன் மனையாளின் கூந்தலில் இருந்த வீசிய சியக்காய் நறுமணத்தை வாசம் பிடித்து கொண்டு... அவள் இடையை வளைத்த அவன் கரங்ளால் இருக்கி அணைத்தான் நம் நாயகன் ஆதித்...
அவன் ஈர தலையிலிருந்து சொட்டிய நீர் துளிகளில் மோன நிலையிலிருந்து வெளியான நாயகி திரும்பி அவன் அணைப்பிலிரிருந்தவாறே அவன் தலையை துவட்டி விட்டாள்...
உத்ரா : இரெண்டு புள்ளைங்களுக்கு அப்பாவாயாச்சு... ஊருக்கு தலைவர் பொருப்பு கிட்ட வந்தாச்சு... பிஸ்னெஸ்ல கிங்காயாச்சு... ஆனா இன்னும் தலை குளிச்சிட்டு தானா தலை துவட்ட தெரியல.... என புலம்பி கொண்டே துவட்டி கொண்டிருந்தவளின் கைகளை இடையில் பிடித்து அதில் இதழை பதித்த ஆதித் அவள் சினுங்குவதை கண்டு சிரிக்க....
அவன் நெஞ்சில் இரு கைகளையும் வைத்து தள்ளி... சமையலறைக்குள் ஓடினாள் உத்ரா... இவன் பின் தொடர்ந்து போக... சமையலறையின் வாயிலில் நின்று கொண்டு தோசை கரண்டியை கைகளால் வைத்து அவனை புருவமுர்த்தி பார்க்க...
ஆதித் : உன் எல்லைக்குள்ள போய்ட்டேன்னு ரொம்ப பெரும பட்டுக்காத டி... திரும்ப என் கிட்ட தான வரனும்... அப்போ வச்சிக்கிறேன்...
உத்ரா : வச்சிக்க வச்சிக்க... இப்போ போய் உன் சீமந்த புத்திரன்கள எழுப்பு போ... என கரெட்டை தூக்கி எறிந்தாள்... அதை லாவகமாய் கட்ச் பிடித்தன் வாயில் வைத்து கடித்தவாறு மாடி ஏறினான்...
அங்கு இரண்டாவது மாடியில்.... நான்காம் கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றான்.... ஊதா நிற சாயம் பூசிய அறை... அங்கங்கு பட்டாம் பூச்சிகள் அழகாய் வரையப்பட்டிருக்க... சில இடங்களில் வரையபட்டிருந்த ஓவியங்கள் தனித்துவமாய் தெரிந்தது... அங்கங்கு ஆதித் உத்ராவின் புகைபடம்... அதை சுற்றி அவர்கள் மகன்களின் புகைபடங்கள்... என அவர்கள் குடும்பத்தின் புகை படமெல்லாம் இருக்க.... அறையின் மையத்தில்.... குழந்தைகள் இரசித்து விளையாட கூடிய கார்டூன் பொம்மைகள் வரைபடமெல்லாம் வரைந்து அழகாய் அலங்கரிக்கப்பட்டிருந்த வெள்ளை கட்டிலருகில் சென்றவன்.... ஊதா நில போர்வையை இழுக்க.... அவன் உதிரத்தில் உதிர்ந்த இரு இளஞ்சிட்டுக்களும் அவர்களின் தாயை போலவே கட்டை விரலை சப்பி கொண்டு... தந்தையை போல் தூக்கத்திலும் விரைப்பாய் உறங்கி கொண்டிருந்தனர் நம் நாயகன் மற்றும் நாயகியின் இரெட்டை மகன்கள் ஆதர்ய தீக்ஷித்தன் மற்றும் ஆதர்ஷ்ய தீக்ஷித்தன்....
ஆதித் : டேய் ஆர்யா... ஆதர்ஷ் எந்திரிங்க டா... என இருவரையும் ஒரே நேரத்தில் தூக்க... ரப்பர் போல் சரிந்து கொண்டே சென்ற இருவரும் மீண்டும் கட்டிலிலே விழ.... மீண்டும் அவர்களை தூக்கியவன் எழுந்து நிற்க வைக்க... அவன்களோ அவன்களின் அம்மாவின் ஜெராக்ஸ் காப்பியை போல் உறக்கத்திலிருந்து எழ சண்டி தனம் செய்து கொண்டிருந்தனர்...
ஆதித் : டேய் எந்திரிங்க டா...
ஆர்யா : போப்பா அண்ட பட்க்கம்... ஊக்கம் வடுது... என முகத்தை சுருக்கி வைத்து கொண்டு கூறினான் அந்த மழலையன்...
ஆதித் : டேய்... நைட்டு வந்ததும் தூங்குகங்க டா.. இப்போ கெளம்ப வேணாமா...
ஆதர்ஷ் : இம்டி காலைல கெடம்பி எண்ட போனும்... என பாவமாய் தூக்கத்திலே கேட்டான் அந்த இரண்டாம் மழலையன்...
ஆதித் : டேய் கிஷு சித்தாக்கும்... மேகா சித்திக்கும் இன்னைக்கு கல்யாணம் டா..
ஆர்யா : ஆம்ல்ல... என கண்களை மெல்லமாய் திறந்தவன் மீண்டும் இருக்கி மூடி கொண்டான்....
ஆதித் : அடேய்... எந்திரி டா...
ஆதர்ஷ் : ப்பா... வண்டு ஊங்குப்பா நீயும்... என இருவரும் அவனையும் சேர்த்திழுத்து அவர்களருகில் படுக்க வைத்து விட்டு ஒருவன் அவன் கழுத்து மேல் கால் போட்டு தூக்கத்தை தொடர... மற்றொருவன் அவன் மண்டை போல் கால் போட்டு கொண்டு உறக்கத்தை தொடர்ந்தான்...
தீரா : ஓ மை காட்... எதிரிகளுக்கு ஹிட்லரா இருந்த என் ஒன்னன் ஒன்லி ஹீரோ இப்டி கவலை கிடமாய்ட்டானே...
ஆதித் : அடப்பாவிங்களா... உங்கள நா எழுப்ப வந்தா என்னையும் படுக்க வச்சிட்டானுங்களே... டேய் ஆதர்ஷ்... கால எடுரா என் கழுத்துல இருந்து...
ஆதர்ஷ் : ச்சும்மாட்டு ஊங்கு பா... என இரு கையையும் அவன் வாய் மீது வைத்து அடைத்து விட்டான்...
ஆதித் : இது சரிபட்டு வராது... எழுந்திரு டா ஆதித்தா... என கத்தி கொண்டே... தன் இரு மகன்களையும் ஒரு ஒரு கையில் பிடித்து கொண்டவன் ஒருவனை தன் தோளில் பிடித்து கொண்டு இன்னோறுவனை இடுப்பில் பிடித்து கொண்டு குளியல் அறைக்குள் நுழைந்து இருவரையும் தண்ணீர் நிறப்பி வைத்திருந்த பாத் டப்பில் தூக்கி போட்டான்....
ம்மா என கத்தி கொண்டே எழுந்த மகன்கள் இருவரும் தண்ணீரை தூக்கி ஊற்ற.... ஆதித்தோ சிரித்து கொண்டு நின்றிருந்தான்.... உடல் முழுவதும் ஏதோ கோட் அனிந்து பாதுகாப்பு கவசம் போல் வைத்து கொண்டு நிற்க... மகன்கள் இருவரும் அவனை பார்த்து தங்கள் வண்டு கண்களை சுருக்க.... என்ன ஆச்சு என கேட்டு கொண்டே உள்ளே வந்தாள் உத்ரா...
மூவரின் நிலையையும் கண்டவள் வாய் விட்டு சிரிக்க... தந்தையும் தனையன்களும் ஒருவரை ஒருவர் பார்த்து விட்டு... கண்ணசைக்க... பாத் டப்பிலிருந்து ஒரே போல் தாவி குதித்த சகோதரன்கள் இருவரும்... " ம்மா ப்டீஸ் (ஃப்ரீஸ்) " என கத்தி கொண்டே வர.... உத்ரா சுதாரித்து வெளியே போகும் முன் ஆதித் கதவை அடைத்து அவளை பார்த்து விஷமமாய் புன்னகைக்க... உத்ரா பேந்த பேந்த முளிக்க... ஒரே நேரத்தில் ஆர்யாவும் ஆதர்ஷும் பக்கெட்டிலிருந்த நீரை உத்ராவின் மேல் ஊற்ற... " டேய் புருஷா காப்பாத்து டா " என உத்ரா கத்தி கொண்டே கண்களை மூடி கொள்ள... இரண்டு நொடி கடந்தும் தன் மேல் நீர் படாமலிப்பதையும் ஆர்யா ஆதர்ஷின் " ப்பா இடு போங்கு " என்ற சினுங்களையும் கேட்டு உத்ரா கண்களை திறக்க... அவளுக்கு அரணாய் சிரித்த படி நின்றான் நம் நாயகன்....
உத்ரா : ஹாஹா என்ன டா போங்கு....
ஆதர்ஷ் : போ மா... எப்பொம் இம்டி ப்பன் போத்துட்டு... இண்ணி ஊட்டும் மோது அப்பா வண்டு உண்ண காப்பாட்டீடுராரு... என முகத்தை சுருக்க...
ஆதித் : வருங்காலத்துல நீயும் இப்டி தான் டா உன் பொண்டாட்டிய காப்பாத்துவ..
ஆதர்ஷ் ஆர்யா : பொன்னாட்டின்னா... என கோரசாய் கேட்க...
உத்ரா : டேய் மாமா... சும்மா இரு டா...
ஆர்யா : ம்மா... கடச்சியா கேக்குறோ... நீ எங்க தீமா... இல்ல அப்பா தீமா...
ஆதர்ஷ் : நா அப்பா தீம்..
ஆர்யா : தேய்... நாம தான் டா தீமு... நம்ள டான அப்பா ஊங்க வுடாம ஊக்கீட்டு வந்தாரு...
ஆதித் : டேய் இப்பவே போட்டீல இறங்காதீங்க டா... பாவி பசங்களா.. வந்து குளிங்க டா... என இருவரையும் பிடித்து டப்பில் அமர வைத்து எப்படியோ அரும்பாடு ட்டு ஒரு வழியாய் குளிக்க வைத்து டவலை சுற்றி இருவரையும் வைக்கோல் கட்டை தூக்கி வருவது போல் இரண்டு தோளிலும் வைத்து தூக்கி வந்தான்... அவன் மகன்களோ ஏதோ சூப்பர் மேன் ஆகாயத்தில் பறப்பதை போல் ஃபீல் பன்னி கொண்டு.... இரு கைகளையும் முன்னோக்கி உயர்த்தி " ச்சொய்ன்..... ச்சொய்ன் " என சத்தமிட்டு கொண்டிருந்தனர்....
இவை அனைத்தையும் உத்ர புன்னகையுடன் பார்த்து கொண்டிருக்க... இருவருக்கும் வாங்கி வந்த வேட்டி சட்டையை விழாமல் கட்டி விட்டவன் பெருமூச்சு விட... ஆர்யாவும் ஆதர்ஷும் மாடிக்கு விளையாட ஓடினர்....
ஆதித்தின் அருகில் வந்த உத்ரா தன் சேலை முந்தானையினால் அவன் முகத்தை துடைத்து விட... இரண்டு நிமிடம் உறைந்த புன்னகையுடன் இருந்த ஆதித் அவளை இழுத்து மடியில் அமர வைத்தான்....
ஆதித் : அக்ஷாமா...
உத்ரா : சொல்லு ஆதன்...
ஆதித் : மூணு வர்ஷம் எப்டி போச்சுன்னே தெரியலல்ல...
உத்ரா : ம்ம் ஆமா... நம்ம பசங்க பொறந்து... தவழ்ந்து நடந்து இப்போ ஓடவே ஆரம்பிச்சிட்டாங்க...
ஆதித் : ஒரு காலத்துல நீ இந்த மாரி சைசுல இருந்துட்டு என் தல மேல உக்காந்து சுத்தீட்டு இருந்த... இப்போ நம்ம பசங்க அந்த மாரி சுத்தி கிட்டு இருக்காங்க... என உத்ராவின் கழுத்தில் முகத்தை புதைத்தவாறு கூற.... கூச்சத்தில் அவள் நெழிய....
" இன்னும் கொஞ்சம் நீ நேரத்த கடத்துனன்னா.... நம்ம பேரன்பேத்திங்க அந்த மாரி சுத்துவாங்க டா மச்சான் " என்ற குரலை கேட்டு இருவரும் திரும்ப... உத்ரா உடனே எழுந்து கொண்டு புன்னகையுடன் உள்ளே வந்த ரித்திக்கை வரவேற்த்து விட்டு ஆதித்திற்கு பலுப்பு காட்டி விட்டு வெளியே ஓடினாள்....
ஆதித் எப்பொழுதும் போல.... " கரடியா பொறந்தவனே " என தன் ஆருயிர் நண்பனை அர்ச்சித்தவாறு அவனுடன் வெளியே வந்தான்....
தியா புத்துணர்ச்சியுடன்.... பச்சை ஜரிகை பட்டில்... ஒற்றை பின்னல் பின்னி... அதை முன்னிட்டு... காதில் ஜிமிக்கி ஆட.... உத்ராவுடன் உரையாடி கொண்டிருந்தாள்... தன் தோழியுடன் உரையாடி கொண்டே... தியா மற்றும் ரித்திக்கின் இரண்டாம் வாரிசான அவர்களின் ஒரு வயது மகள் விந்தியா குட்டியை தூக்கி வைத்து கொஞ்சி கொண்டிருந்தாள் உத்ரா....
வெள்ளை மற்றும் சிவப்பு நிற ஃப்ராக்கில் முட்டை கண்களை விரித்து... கொலு கொலு கன்னத்துடன்... வீட்டை கண்ணை மூடி மூடி சுற்றி பார்த்து கொண்டிருந்தாள் விந்தியா...
மாடியிலிருந்து ஆதர்ஷ் ஆர்யாவுடன் ஓடி வந்தான் ரித்திக் மற்றும் தியாவின் மூன்று வயதான மகன் நிலமாறன்
நம் ஆர்யா ஆதர்ஷ் மற்றும் மாறனிற்கும் ஒரே வயது தான்... இரெட்டையர்கள் பிறந்த நான்கு மாதத்தில் மாறன் பிறந்தான்...
தூர்தேஷ் மற்றும் அகல்யாவிற்கும் இரண்டரை வயதில் இவர்களின் செட்டான மகன் இருக்கிறான்... அவன் இளங்கர்ணன்... இவர்கள் மூவரும் பிறந்து மூன்று மாதத்தில் பிறந்தவன்...
நாழ்வரும் அவன் தந்தைகள்... தாத்தாக்கள்.. மற்றும் கொள்ளு தாத்தாக்களை போல இணை பிரியாத தோழர்கள்... ஷியாம் அன்கிதா மற்றும் விஷ்வா மிருவிற்கு நான்கு வாரங்கள் முன்பே இனிதாய் திருமணம் முடிந்திருந்தது...
இன்று கிஷோர் மற்றும் மேகாவின் திருமணம் முடிவு செய்யப்பட்டு... விமர்சையாகவும் தொடங்கியது... ஆதித்தும் ரித்திக்கும் அவரவர் மனைவியையும் குழந்தையையும் தூக்கி கொண்டு வெளியே வர.... ஆதித்தை கண்டதும் அவனிடம் தாவினாள் அவன் மருமகள் விந்தியா...
மாறன் உத்ராவுடன் ஒட்டி கொண்டு... அவளை கொஞ்சி கொண்டிருக்க... அவர்களின் குழந்தைகளை போலவே ஆதர்ஷ் ரித்திக்கின் கழுத்தில் அமர்ந்திருக்க... ஆர்யா தியாவை கொஞ்சி கொண்டு வந்தான்... இடையே தூர்தேஷும் அகல்யாவும் இணைந்து கொள்ள... அவர்களின் மகன் கர்ணனும் நம் மற்ற வாண்டுகள் மூவரும் இணைந்து நாழ்வர் கூட்டணியாய் விளையாடி கொண்டே செல்ல... தோழிகள் மூவரும் கூட்டணி கூடி விட... தோழன்கள் மூவரும் கூட்டணி கூடினர்....
இன்னும் விந்தியா ஆதித்திடம் தான் இருந்தாள்... தூர்தேஷ் அவளை கொஞ்சி கொண்டே தூக்கி விளைளாட... விந்தியாவோ மா என அழுது கொண்டே ஆதித்திடமே தாவினாள்...
தூர்தேஷ் : ம்ம் நா என்ன டி மருமகளே உனக்கு கொறை வச்சேன்... எனக்கு மட்டும் இப்டி ஓரவஞ்சம் பன்றியே...
ஆதித் : நீ தாடிய எடுத்துட்டு மனுஷனா மாறு டா... அப்போ தா குழந்தை பயப்புட மாட்டா...
தூர்தேஷ் : ம்க்கும்... இருந்தாலும் உன் மகளுக்கு ஓவர் செல்லம்டா மச்சான்... என கூற... விந்திா ஏதோ புரிந்ததை போல் அவனை பார்த்து முறைக்க... ஆதித்திடமிருந்து தூர்தேஷிடம் அதிசயமாய் தாவியவள்... தன் பிஞ்சு கரங்களால் அவன் கன்னத்தில் ஒரு அடி போட்டு தன் ரோஜா இதழ்களை அவன் கன்னத்தில் ஒற்றி எடுத்து பொக்கை வாயை காட்டி சிரிக்க... அதை கண்ட மூவரும் நெகிழ்ந்து சிரித்தனர்...
தூர்தேஷ் : என் தங்கமே... வா டி என் செல்லம்... என கன்னத்தை வருடி முத்தமிட்டான்...
தியா : என்ன டா அண்ணா ரொம்ப உன் மருமகள கொஞ்சுர...
தூர்தேஷ் : என் மருமகள நா கொஞ்சிரேன் உனக்கென்ன...
உத்ரா : நீ போற போக்க பாத்தா... மாறன் ஆதர்ஷ் ஆர்யாவுக்கு தங்கச்சியும்... மாறான்கு ஒரு அத்த பொண்ணையும் ரெடி பன்னீடுவ போலயே அத்தான்... என நக்கலாய் கேட்டு அகல்யாவை பார்க்க... அவளோ தூர்தேஷை ார்த்து முளித்து விட்டு... உத்ராவின் தோளிளே ஒரு போடு போட்டாள்...
அகல்யா : சும்மா இரு டி...
தியா : அஹென்... அஹென்... என்ன அண்ணி வெக்கமோ...
அகல்யா : ச்சி போங்க டி லூசுங்களா... என குழந்தைகளிடம் ஓடி விட்டாள்... எப்படியோ பேசி கொண்டே இவர்கள் வீட்டை அடைய... அங்கோ அனைத்தும் அலங்கரிக்கப்பட்டு தயாராய் இருக்க... ஓடோடி சென்ற மாறன் மேடையில் நின்று கொண்டிருந்த கிஷோரிடம் தாவ... அவனுக்கு அருகிலே அவனை கலாய்த்தவாறு இருந்த ஷியாம் மற்றும் விஷ்வாவின் மீது ஆர்யாவும் கர்ணனும் தாவ... ஆதர்ஷ் அமைதியாய் நின்று கொண்டான்....
அவன் அமைதியாய் நிற்பதை கண்ட ஆதித்... குழப்பத்துடன் அவன் பார்வை சென்ற புறம் பார்க்க.... அங்கோ எதுவுமில்லை... எதை பார்க்கிறான் இவன் என அவனருகில் சென்ற ஆதித் அவனை தன் இடது கரத்தால் தூக்க.... ஆதித்தின் கழுத்தில் தன் இரு கரங்களையும் மாலையாய் போட்டு கொண்ட ஆதர்ஷ் இன்னும் தன் பார்வையை அகற்றாமல் அமைதியாய் அமர்ந்திருக்க... விந்தியா அவன் கன்னத்தில் தன் குட்டி விரலால் குத்தவும் அவள் புறம் திரும்பியவன் தன் இதழை விரித்து புன்னகைக்க... அப்புன்னகையை கண்ட ஆதித் உள்ளூர அதிர்ந்தான்...
அதே புன்னகை... ஆதித் எப்பொழுதெல்லாம் குழப்பத்திலோ அல்லது எதோ ஒரு தீவிரமான விஷயத்தின் யோசனையில் இருக்கிறானோ அப்போது உத்ராவோ தியாவோ அல்ல அன்கி மிரு எவரேனும் அழைத்தால் அவன் பதிலுக்கு தரும் புன்னகை... இதை தன் மகனிடம் எதிர்பார்க்காத ஆதித் அதிர.... அவனை இன்னும் அதிர்ச்சியாக்கும் நோக்குடன்... விஷ்வாவின் மண்டையை பிடித்து ஆட்டி விளையாடி கொண்டிருந்த ஆர்யாவும் ஆதர்ஷ் பார்க்கும் இடத்தையே எதர்சையாய் பார்த்து விட்டு கூர்ந்து கவனிக்க துவங்கினான்...
அந்த இடத்தை கூர்ந்து கண்ட ஆதித்தின் கண்கள் அதிர்ச்சியில் விரிய... ஆதர்ஷ்ஷை கீழே இறக்கி விட்டவன் அவ்விடத்தை நெருங்கும் போதே அந்த முக்காடிட்ட உருவம் அங்கிருந்து நகர பார்க்க.... " ஏய் நில்லு " என பிடிக்க போன ஆதித்தை தாண்டி சென்ற ஒரு பொம்மை அந்த முக்காடிட்டவரின் பின் மண்டையை பதம் பார்க்க... வேகமாய் வந்த குண்டூசி ஒன்று அந்த முக்காடில் குத்தீட்டு நிற்க.... அந்த குண்டூசியில் கட்டப்பட்டிருந்த கையிறை யாரோ இழுக்கவும்... அந்த முக்காடு தானாகவே அவிழ.... தன் முன் இருந்தவரை அதிர்ச்சியாய் பார்த்தான் ஆதித்....
அவன் பின் ஆதர்ஷும் ஆர்யாவும் குண்டூசியை கட்டியிருந்த கையிறையும் சில விளையாட்டு பொருட்களையும் பிடித்து கொண்டு நிற்க.... ஆதித்தை கண்டு பயத்தில் நடுநடுங்கி போய் அங்கிருந்து தப்பி ஓடினாள் ரேகா....
இவள் எப்போது விடுதலையானாள் என சிந்தித்த ஆதித்திற்கு இரண்டு மாதம் முன் அவள் மனநலம் பாதிக்கப்பட்டு மனநில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது நினைவு வர... மேகாவிற்கு இப்போதைக்கு இருக்கும் ஒரே இரத்த பந்தமென தான் தான் அந்த மருத்துவமனையின் மேளாலரிடம் அவளை கூட்டி வர ஒரு மாதம் முன் கூறியதும்... அதை அவர் மறுத்ததும் நினைவு வர.... தன் கண்களை சுழல விட்டவனுக்கு அந்த மேளாலரும் கண்ணில் பட.... பின்னே மூச்சு வந்தது ஆதித்திற்கு...
பின் திரும்பிய ஆதித் தன் மகன்கள் செய்தவையை கண்டு அதிர்ச்சியோடே... அவன்கள் முன் தன் இடது காலை முட்டு கொடுத்து அமர்ந்தவன்... இருவரின் தலையையும் கோதி...
ஆதித் : என்ன டா பாத்தீங்க...
ஆர்யா : அவ்ங்க... பால்ல ஏடோ போத்தாங்க ப்பா...
ஆதர்ஷ் : கட்டி(கத்தி) வச்சு மொச்சி (மொறச்சு ) மொச்சி பாட்டாங்க ப்பா... என கூற... ஆதித்தின் புருவங்கள் சுருங்க... அவன் கண்கள் உடனே அவ்விடத்தை அலச.... முக்காடிட்டு கொண்டு மேடையை நோக்கி கத்தியை மறைத்தவாறு சென்று கொண்டிருந்தாள் ரேகா.... அதை கண்டு அதிர்ந்த ஆதித் சிறுவர்கள் இருவரையும் திசை திருப்பி விட்டு அங்கு ஓட... அவன் வரும் முன்னே ரித்திக் ரேகாவை அங்கிருந்து இழுத்து கொண்டு சென்றிருந்தான்...
ஆதித்தின் ஃபோன் திடீரென அடிக்க... தேடி கொண்டே காதில் வைத்தவன்.... ரித்திக் பேசவும் தீவிரமாக...
ரித்திக் : தயா... அந்த ரேகா ஹாஸ்பிட்டல்லல இருந்து தப்பிச்சு இங்க வந்துக்கா டா... நா அவள புடிச்சிட்டு ஹாஸ்பிட்டல் போறேன்...
ஆதித் : நீயும் பாத்துட்டியா...
ரித்திக் : ம்ம் அப்போ நீயுமா...
ஆதித் : ஆமா டா நானும் பாத்தேன்.. நீ அவள விட்டுட்டு வா... நா இங்க பாத்துக்குறேன்...
ரித்திக் : ம்ம் சரி டா என வைத்து விட்டான்...
அடுத்த சில மணி நேரங்களிலே ரித்திக்கும் வீட்டிற்கு வந்து விட... ஆதித் சகஜமானான்... திருமணமும் இனிமே முடிந்தது.... பல சடங்குகளும் விளையாட்டுகளும் நடக்க... அவை அனைத்திலும் கிஷோர் மேகா இருவரும் ஒன்றிணைந்து குதூகலமாய் விளையாடினர்....
குடும்பபே மகிழ்ச்சியில் திலைக்க... தன் கணவனின் முகமே சரியில்லை என்பதை மதியத்திலிருந்தே கண்டு கொண்ட உத்ரா... இனிதே அனைத்து விருந்துகளும் முடிந்ததும் கிளம்பி கூடத்திற்கு வர... அங்கு தன் மகன்கள் இருவரையும் தன் இரு தோள்களிலும் போட்டு கொண்டு தட்டி கொடுத்து கொண்டிருந்தான் நம் நாயகன்....
அவன் அருகில் சென்றவள் இருவரில் ஒருவரை வாங்கி கொள்ள... உறக்கத்திலே அவளிடம் வந்த ஆதர்ஷ் ம்மா என முனகியவாறே அவள் கழுத்தை கட்டி கொண்டு உறக்கத்தை தொடர்ந்தான்... இருவரும் அந்த இரவு நேரத்தை ரசித்தவாறு பொடி நடையாய் தங்களின் வீட்டை நோக்கி சென்றனர்....
உத்ரா : மாமா...
ஆதித் : ம்ம்
உத்ரா : என்ன ஆச்சு உனக்கு...
ஆதித் : ஒன்னும் இல்லையே அக்ஷாமா...
உத்ரா : நீ ஏதோ சரியில்ல டா மாமா... மதியத்துல இருந்து நா உன்ன பாத்துட்டு தா இருக்கேன்..
ஆதித் : அப்டிலாம் ஒன்னும் இல்ல பொண்டாட்டி...
உத்ரா : ம்ம் அப்டியா...
ஆதித் : ஆமா...
உத்ரா : ஹ்ம்... சரி சாவிய கொடு... என சாவியை வாங்கி கொண்டு வீட்டிற்குள் நுழைந்தாள்... முதலில் ஆதர்ஷை சென்று கட்டிலில் படுக்க வைத்து விட்டு வந்தவள் ஆர்யாவையும் தூக்கி கொண்டு போய் படுக்க வைத்து இருவருக்கும் போர்வையை போர்த்தி நெற்றியில் முத்தம் கொடுத்து விட்டு கீழே வந்தாள்....
சோபாவில் கண்களை மூடி ஏதோ யோசனையிலே நிம்மதியில்லாமல் தலை வலியுடன் அமர்ந்திருந்தான் ஆதித்தன்... அவன் அருகில் சென்ற உத்ரா... தன் வெண்டை விரல்களை அவன் கேசத்தில் ஊர்வலம் விட்டவாறு " ஆதன் " என மிருதுவாய் அழைக்க.... மெல்ல கண்களை திறந்தவன் அவள் மடியில் படுத்து கொண்டு அவள் இடையை கட்டி கொள்ள...
உத்ரா : என்ன ஆச்சு ஆதன்... என அவள் கேட்டதும்... நடந்த அனைத்தையும் அவன் கூற....
அதை அவன் கேசத்தை கோதியவாறே உண்ணிப்பாய் கேட்டவள்....
உத்ரா : இவ்வளவு தானா... இதுக்கு தான் இப்டி அப்செட்டா இருக்கியா...
ஆதித் : என்ன டி பொசுக்குன்னு இவ்ளோ தானான்னுட்ட... என அதிர்ச்சியாய் கேட்டு கொண்டே எழுந்தமர்ந்தான்...
உத்ரா : பின்ன என்ன டா இதுல யோசிக்க என்ன இருக்கு... உன் புள்ளைங்க உன்ன மாரி தான இருப்பானுங்க...
ஆதித் : அதுக்குன்னு எல்லாத்துலையூம் என்ன மாரி இருக்குரது அநியாயமா இல்லையா டி...
உத்ரா : டேய் இதெல்லாம் இயர்கைநியதி டா... உன்ன மாரியே தோற்றத்துல இருக்கானுங்க... உன்ன மாரியே யோசிக்கிறானுங்க... உன்ன மாரியே கலமிறங்குறானுங்க... உன்ன மாரி கோவம் வரலையே டா....
ஆதித் : வந்துட்டா....
உத்ரா : வந்தா எனோன... இப்போ அவனுங்காளுக்கு என்ன வயசாச்சு... மூணு தான... இன்னும் வளர எவ்ளோவோ இருக்கு டா.... அதுக்குள்ள அவனுங்கறே பக்குவமாய்டு வாங்க மாமா..
ஆதித் : உண்மையா தானா....
உத்ரா : உண்மையா தான்...
ஆதித் : ஆனாலும் இவனுங்க இப்டி என்னோட ஜெராக்ஸ் காப்பியா இருக்க கூடாது டி...
உத்ரா : சரி அப்போ என்ன மாரி ஒரு பாப்பா பெத்துப்போமா...
ஆதித் : போடி அந்த நிலமைல திரும்ப உன்ன பாத்தா நா தாங்க மாட்டேன்...
உத்ரா : அட என்ன மாமா... இது எல்லாமே பொண்ணுங்க நாங்க வாழ்கைல அனுபவிக்கிர ஒரு ஸ்டேஜு டா... ரொம்ப வலிக்கும்னு இந்த உலகத்துக்கு வர போற ஒரு உயிர நாம தடுக்கலாமா சொல்லு...
ஆதித் : ம்ச்... உனக்கு பாப்பா வேணும்னா நாம நம்ம ஹோம்ல ஆல்ரெடி வளக்குர பாப்பாஸ்ல ஒரு பாப்பாவ எடுத்துக்கலாம்...
உத்ரா : ஆல்ரெடி அவங்களுக்கு நான் தான் அம்மா... ஆனா... எனக்கு என் ஆதனோட மக தான் வேணும்...
ஆதித் : நா முடியாதுன்னு சொன்னா...
உத்ரா : இனியே சொல்ல முடியாது... சும்மா இவ்ளோ நேரம் உன் ரியக்ஷன் நாக்க கேள்வி கேட்டேன்....
ஆதித் : ஏன் முடியாது...
உத்ரா : மாங்கா வாங்க வேண்டிய டைம் திரும்ப வந்துருச்சு டா மாமா... என நக்கலாகவும் அதே நேரம் வெட்கத்துடனும் கூற.... ஆதித் அதிர்ச்சியில் ப என அமர்ந்திருக்க.... அவனை போட்டு உலுக்கியவள் அவன் கரத்தை எடுத்து அவள் வையிற்றில் வைக்க.... தன் மடியில் அவளை தூக்கி அமர வைத்தவன்... கண்ணீருடன் அவள் வயிற்றில் இதழ் பதித்து.... " பாப்பா அம்மாக்கு வலிக்காம அப்பா கிட்ட வந்துரு டா " என கூற.... அவன் முகத்தை ஏற்றி நெற்றியில் மிருதுவாய் இதழ் பதித்தாள் உத்ரா...
உத்ரா : நான் தான் ஃபர்ஸ்ட்டு பாப்பா நியாபகம் இருக்கட்டும்...
ஆதித் : எப்பவுமே நீ தான் டி என் முத உயிர்... என அவளின் பிறை போன்ற நெற்றியில் இதழ் பதித்து மென்மையாய் தன் நெஞ்சோடு அணைத்து கொண்டான்....
அவர்களின் அழகான காதலை கண்டு... தானும் நாணத்தில் இன்னும் பிரகாசமாய் சிவந்தவாறு மேகதேவதையினுள் நுழைந்து கொண்டான் சந்திரன்....
என்ன.... லுக்கு... கதை முடிஞ்சு டாட்டா👋👋👋👋
தீராதீ
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro