Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

57 நீ... நான்...

ஆதித்தின் அமைதியுடன் குறும்பு கலந்த காதலுடனும்... உத்ராவின் தாயன்பு நிறைந்த குழந்தை தனமும் கலந்த புனிதமான காதலுடன் அந்த நாட்கள் களிய.... இரண்டு நாட்களில் இருவரும் ஜோடியாய் வந்தனகுரிச்சியை நோக்கி சென்றனர்...

அன்னம் மற்றும் ரேகா செய்த குற்றங்களை ஃபோன் கால் டீட்டெய்ல் முதற்கொண்டு இறுதியாய் ரேகா உலறி கொட்டிய வாக்கு மூலம் வரை அனைத்தும் ஒப்படைக்கப்பட... தயாவின் பேச்சு திறனில் எதிர் கட்சிக்கு பேசவே வாய்ப்பில்லாமல் போக.... குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு அன்னத்திற்கு ஆயுள் தண்டனையும் ரேகாவிற்கு ஆறு வருட தண்டனையும் அளித்தனர்.... அன்னத்தின் உடன் குற்றம் செய்த மருதவேலும் கைது செய்யப்பட்டார்.... ராஜேஷ் இரண்டு வருடம் சிறையில் அடைக்கப்பட்டான்....  குற்றங்களுக்கு துணை போன சசிக்கலாவிற்கு பத்தாயிரம் ரூபாய் அபராதமும் ஆறு மாத சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது...

நாட்களும் ஓடியது... இருவரும் அவர்களின் பன்னை வீட்டில் மிக மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தனர்... வீட்டினர் நண்பர்கள் தோழிகள் என அனைவரும் அதே நிம்மதியுடன் வாழ்ந்து வர.. உத்ரா தியா அன்கி மிரு நாழ்வரும் மருத்துவதுறையில் ஐந்தாம் வருடத்தை அடைய.... மேகா தன் பொறியியல் படிப்பை முடித்து விட்டு ஆதித்திடம் கெஞ்சி கெஞ்சி எப்படியோ கிஷோரின் பிஏவாக வேலைக்கு சேர்ந்தாள்...

கிஷோர் மற்றும் மேகாவின் காதல் கல்லூரி காலங்களிலிருந்து வளர்ந்தது... மேகாவின் அமைதியான குணத்தில் ஈர்க்கப்பட்ட கிஷோர் அவளுக்கு நெருக்கமானவர்களுக்கு ஒன்றென்றால் வரும் கோபத்தில் காதலில் விழுந்தான்... கிஷோரின் கண்ணியமான குணத்திலும் அவன் இவளிடம் பழகும் நடவடிக்கையிலும் ஈர்க்கப்பட்ட மேகா தன் உணர்வை காட்டாது அமைதியாகவே இருக்க.... அன்னமும் ரேகாவும் ஷியாமிற்கு இவளை கட்டி கொடுக்கலாம் என முடிவெடுக்கும் போதே கிஷோரின் மீதான அவள் காதலை உணர்ந்தாள்...

இருவரும் கான்ட்டெக்ட்டில் இருந்ததால் உடனே தெரிவித்தும் விட்டாள்.... அன்றிலிருந்து காதல் விதை செடியாக தொடங்கியது...

ஆதித் மற்றும் உத்ராவின் காதல் அழகாய் வளர்ந்து கொண்டே தான் இருந்தது... கணவன் என்ற உரிமை இருந்தாலும் அணைப்பு நெற்றி முத்தத்தை தாண்டி தன் உரிமையை தேடவில்லை அவன்... உத்ரா தினம் தினம் அவள் ஆதனின் காதலில் மூழ்கி முத்தெடுத்தாள்...

அவளின் படிப்பில் எந்த வித குறையும் இல்லாது கச்சிதமாய் பார்த்து கொண்டே... தன் வேலைகளிலும் பக்காவாய் இருந்தான்.... வருடம் ஒரு முறை வீட்டீல் வல்ட் டூர் என கூறி விட்டு உத்ராவை ஒரு வாரம் விடுப்பில் இழுத்து கொண்டு லண்டன் செல்வான்.... அங்கு இவன் அவன் கன்ட்ரோலில் இருக்கும் ஒவ்வொரு நிறுவனத்தையும் ஆராய்ந்து சில மாற்றங்களை கூறி திருத்தம் செய்து விட்டு ஒரு நாள் முழுக்க உத்ராவுடன் லண்டனை சுற்றி விட்டு ஊரிற்கு அழைத்து செல்வான்...

நாட்களும் வேகமாய் ஓட... உத்ராவின் படிப்பு முடிந்த கையோடு அவளுக்கு ப்ரக்ட்டிக்கலும் தொடங்கியது... இவையனைத்திலும் உத்ரா ஆதித் இருவருக்கும் இருவருக்காய் நேரம் செலவளிப்பது கடினமாயிற்று... உத்ரா மிக கடினமாய் பயிற்சி எடுத்து கொண்டே கவனமாய் படித்து வந்தாள்... தன் வேலையையும் பார்த்து கொண்டு அவளையும் காதலுடன் பார்த்து கொண்டான்...

காலை ஆதித் ஊர் வேலையில் கிளம்பி விடுவான்... உத்ராவை அவள் காலேஜில் இறக்கி விட்டு விட்டே அவன் வேலையை பார்க்க செல்வான்... அதே போல் மாலை அழைத்து வந்து விட்டு போவான்... இரவு இருவரும் ஒன்றாய் உணவு உட்கொள்வர்... ஆனால் உத்ரா படிக்க செல்ல... ஆதித் மடிக்கணினியில் இறங்கி விடுவான்.... அவள் படித்து கொண்டிருக்கும் போதே உறங்கி விட... தன் வேலையை முடித்து விட்டு வரும் ஆதித் புத்தகத்தையெல்லாம் அடுக்கி வைத்து விட்டு அவளுக்கு என்றும் போல் நெற்றியில் மிருதுவாய் முத்தம் கொடுத்து விட்டு மென்மையாய் அவளை அணைத்து கொண்டு உறங்குவான்.... அரை தூக்கத்தில் புரண்டு கொண்டே இருக்கும் உத்ராவும் அப்போதே நிம்மதியாய் உறங்குவாள்...

இப்படி இருந்த நாட்களில் நம் தோழிகள் அனைவருக்கும் ஒரு வாரம் விடுப்பு விட... அடம்பிடித்து ஆதித்தை இழுத்து கொண்டு பெரிய வீட்டிற்கு வந்தாள் உத்ரா....

அனைவரும் பேசி சிரித்து கொண்டிருக்க... பல நாள் களித்து தன் அக்ஷாவின் அருகாமை கிடைத்ததில் ஆதித் மகிழ்ச்சாயோடு இருக்க.... அவர்களின் நிம்மதியை குழைக்கவே விருவிருவென உள்ளே வந்தான் இரண்டு வருடம் களித்து நேற்று செல்லில் இருந்து வெளியான ராஜேஷ்....

ராஜேஷ் : டேய் எங்கள குடும்பமா கூண்டுல தள்ளீட்டு நீ சந்தோஷமா இருக்கியா... என கத்த.... அவனை இங்கு எதிர்பார்க்காத அனைவரும் எழுந்து நிற்க...

ஆதித் : ராஜேஷ்... உன் தண்டனை முடிஞ்சிது... நீ திருந்தனும்ங்குரதுக்காக தான் ஜெயில்ல போட்டதே... நீ கோவபடுரதுலையே தெரியிது... நீ இன்னும் திருந்தலன்னு...

ராஜேஷ் : ம்ச் நா ஏன் டா திருந்தனும்.. நா இப்டி தா இருப்பேன்...

ரித்திக் : டேய் ஒழுங்கா போய்டு... அப்ரம் என் கை தான் பேசும்.

ராஜேஷ் : நல்லா இருக்குடா... முன்னாடி நீங்க இரெண்டு பேரும் அடிச்சிட்டு இருந்துட்டு இப்போ ஒருத்தர் ஒருத்தருக்காக அடிச்சிக்க ஆரம்பிசிட்டீ.க...

தூர்தேஷ் : உண்மை தெரியாமையே உலறி கொட்ட வாங்கி கட்டிக்காத டா... போய்டு ஒழுங்கா...

ராஜேஷ் : என்ன டா பன்னீடுவிங்க... ஹான்... என்ன பன்னீடுவீங்க...

ஆதித் : டேய் போறியா இல்லையா நீ.... என அடிக்க செல்ல

உத்ரா : மாமா நோ...

ராஜேஷ் : வா மா வா... நீ மட்டும் அன்னைக்கு இதே மாரி மாமான்னு கத்தாம இருந்துர்ந்தன்னா இவன் கழுத்த அந்த அறுவா வெட்டிருக்கும்... மொத்த சொத்தும் கை மாறியிருக்கும்... ரேகா இவன மயக்கி அவன வலைக்கு கொண்டு வந்துருப்பா... பத்து வர்ஷம் களிச்சு இவன் மனுசனாகாமையே இருந்துர்ப்பான்.... எல்லாம் உன்னால தான்...

ஆதித் : டேய் வாய மூடு... என் பொண்டாட்டிய பத்தி உனக்கு என்ன டா தெரியும்..

ராஜேஷ் : எல்லாம் தெரியும் டா... இந்த குறை உள்ளவளுக்காக தான என் தங்கச்சிய நீ வேணாம்னு சொல்லி கல்யாணம்னு வேற சொல்லி ஏமாத்துன... என கூறும் போதே அவன் கழுத்தை பிடித்திருந்தான் ஆதித்...

உத்ரா : மாமா விடு.... அச்சோ மாமா... ஆதன் விட போறியா இல்லையா... என இவள் கத்திய கத்தில் அவன் தானாய் கையை எடுக்க...

குறை உள்ளவள் என அவன் கூறியது அங்குள்ள அனைவரின் காதுகளிலும் எதிரொலிக்க... அவளின் தோழிகளை தவிர்த்து வயதில் பெரிய பெண்கள் அனைவரும் இப்போது உத்ராவை ஒரு மாதிரியாக பார்த்து கொண்டிருக்க... அவர்களை கூனி குருகி போய் பார்த்த உத்ரா ஆதித்தை நிமிர்ந்து தேதோக்க.... அவன் வலிகள் நிறம்பிய கண்களை கண்டவள் கண்களை மூடி திறந்து தெளிவாய் நோக்கினாள்.... அவளின் கண்களில் தெரிந்த தெளிவில் ஆதித் அமைதியாகினான்...

மேகா : கூட பொறந்த பாவத்துக்காக சொல்றேன்... ஒழுங்கா இங்க இருந்து போய்டு... தேவையில்லாதத பேசாத...

ராஜேஷ் : ஏ நா என்னடி தேவையில்லாம பேசன... இவ குறை உள்ளவ தான்.... அத இதோ நிக்கிறானே இவ புருஷன்ட்ட சொன்னாளா... இல்ல... தன்னால குழந்தை பெத்துக்கவே முடியாதுன்னு தெரிஞ்சும் இவன் வாழ்க்கைய அழிச்சிட்டு இருக்கா... அத தடுக்க இவன கல்யாணம் பன்னிக்க வந்த என் தங்கச்சி கெட்டவளா....

ஆதித் : ப்லடி ஹெல்... அவ என் பொண்டாட்டி.... அவள பத்தி எல்லாமே எனக்கு தெரியும்... நீ மூடிக்கிட்டு போ டா... என் வாழ்க்கைய பாத்துக்க எனக்கு தெரியும்... அக்ஷா வா... என அவளை பிடித்திழுக்க...

உத்ரா : ஒரு நிமிஷம் இரு மாமா... எனக்கு குறை இருக்குன்னு உங்க அத்த சொன்னாங்க ரைட்... ஆமா எனக்கு குறை இருக்கு... நா என் புருஷன எவளுக்கும் விட்டு குடுக்க மாட்டேன்... அதனால தான் அவன் கூடவே இருக்கேன்.... அவன் என்ன விட்டு இருக்க மாட்டான்... இப்டி ஊர் முழுக்க என்ன பத்தி பேசுனாலும்.... அது தர வலிய விட என் புருஷன் நா இல்லன்னா அனுபவிக்கிர வலி அதிகம்.... அத நா இனிமேலும் என் புருஷன அனுபவிக்க அனுமதிக்கவே மாட்டேன்... அதுக்கு நா அவமானப்பட்டாலும் எனக்கு கவலை இல்ல.... என அழுத்தம் திருத்தமாய் கத்தி விட்டு அவளை ஆச்சர்யமாய் பார்த்து கொண்டிருந்த ஆதித்தை இழுத்து கொண்டு பன்னை வீட்டிகு சென்றாள்....

அங்கு சென்றவள் கீழே அமர்ந்து அழ தொடங்கினாள்.... அவள் கத்தி அழுவதை தாங்கி கொள்ள இயலாது உள்ளே ஓடிய ஆதித் கீழே அமர்ந்து அவளை தன்னோடு சேர்த்து அணைத்து கொண்டான்....

அவனோடு ஒன்றி போன உத்ரா கதறி அழுதாள்... அவள் அழுது தீர்த்தால் தான் வலி குறையுமென அவன் அவளுக்கு ஆதரவாய் தலை கோதி விட்டு கொண்டிருந்தான்...

அவன் அணைப்பில் மெல்ல மெல்ல அழுகையை நிறுத்திய உத்ரா...

உத்ரா : ஏன் மாமா யாருமே புரிஞ்சிக்க மாற்றாங்க... நா உன் வாழ்க்கைல வந்தது அவ்ளோ பெரிய தப்பா.. ஏன் எல்லாரும் நம்மள பிரிக்கிரதுலையே குறியா இருக்காங்க... இன்னைக்கு ராஜேஷ் அண்ணா பேசுனதுல பாட்டிங்க அத்தங்கல்லாம் என்ன ஒரு மாரி வித்யாசமா பாக்கும் போதே தெரிஞ்சிடுச்சு... என்ன உன்ன விட்டு ஒதுக்கி வச்சிடுவாங்களா...

ஆதித் : கண்டதையும் யோசிக்காத டி... என்ன விட்டு நீ போக நா அனுமதிச்சிருவேணா... அவங்க எதாவது பன்னீட்டு போறாங்க... நீ ஏன் டா அத யோசிக்கிர.... உனக்கு நா இருக்கேன்... எனக்கு நீ இருக்க... அவன் சொன்னதெல்லாம் பெருசா எடுத்துக்காத டி...

உத்ரா : இல்ல மாமா... அவங்க சொன்னது எதுவும் எனக்கு நினைவுல இல்ல... எனக்கு உன்ன என் கிட்ட இருந்து பிரிச்சிருவாங்களோன்னு தான் பயமா இருக்கு.... நீ இல்லனா என்னால வாழவே முடியாது மாமா... நா செத்துருவேன்... என கூறி முடிக்கும் முன்னே அவள் இதழுக்கு தன் இதழால் முற்றுகை இட்டிருந்தான் அவளவன்...

முதலில் அதிர்ந்த உத்ரா பின் கண்களை மூடி அவனுக்கு அசைந்து கொடுத்து அத்தருணத்தை அனுபவித்தாள்... எவ்வளவு நேரம் நீடித்ததோ அந்த இதழ் யுத்தம் அவர்களே அறிவர்... பல நிமிடங்கள் களிந்த பின் இருவரும் மூச்சு விடுவதற்காய் பிரிய.... உத்ரா செவ்வாணமாய் சிவந்த தன் கன்னங்களை மறைக்க அவன் நெஞ்சில் தன் முகத்தை புதைத்து கொண்டாள்...

அவள் இடையை அழுத்தி பிடித்த ஆதித் தன் கரங்களில் ஏந்தி கொண்டு அண்டர் குரௌண்டை திறந்து கொண்டு கீழே சென்றான்.... அவர்களின் பெட்ரூமில் அவளை கிடத்தியவன்.... கழுத்தில் கை கொடுத்து தூக்கி நெற்றியில் அழுந்த இதழ் பதித்தான்.... கண்களை மூடி அமைதியாய் இருந்த உத்ராவின் கன்னங்களில் கண்ணீர் வழிய.... அங்கிருந்து நகர போனவனை  கை பிடித்து நிறுத்தினாள்....

அவளை நோக்கி திரும்பிய ஆதித் கண்கள் மூடி படுத்திருந்தவளை நெருங்கி தன்னோடு அணைத்து கொள்ள.... அவளது கண்ணீர் அவன் மார்பில் சுட... அவள் முகத்தை ஏந்தியவன் அவளின் வேல் கண்கள் இரண்டிலும் இதழை பதித்தான்....

அவன் இதழ்கள் அவளது இதழ்களையும் தாண்டி முன்னேற.... சம்மதமாய் கண்களை மூடி தன்னவன் என்ற எண்ணதில் அவள்.... அவர்களின் அந்த மோன நிலையை கண்டு வெட்கி கொண்ட கதிரவன் நிலமகள் மடி சாய.... உலகினை இன்னும் இரம்மியமாக்க தன் வெண்கதிர்களை பரப்பி விட்டு வெளிவந்தான் சந்திரன்....

மறுநாள் காலை மிக விரைவிலே விடிய.... விடியற்காலையை தன் மன்னவன் மார் மீது தலை வைத்தவாறு இரசித்து கொண்டிருந்த பெண்ணவள் தன்னையே வைத்த கண் வாங்காமல் பார்த்திருந்தவனை கண்டு செங்கதிரோனையும் மிஞ்சி அந்திவனமாய் சிவந்தாள்....

ஆதித் : பொண்டாட்டி... மரியாததா பாத்ரூம் உள்ள ஓடி போய்டு... அப்ரம் நீயும் தூங்க முடியாது நானும் தூங்க மாட்டேன்... என காதில் கிரக்கமாய் கூற.... இதில் இன்னும் தக்காளி பழமாய் சிவந்தவள் அவன் கரங்கள் அவளை வளைப்பதை உணர்ந்து விற்று டா சாமி என ஓடியே விட்டாள்....

அரை மணி நேரத்தில் தலை குளித்து விட்டு நன்கு உளர்த்திய கூந்தலை கன்னாடி முன் நின்று துவட்டி கொண்டிருந்தவளை பெட்டில் படுத்து கொண்டு இடது கையை தலைக்கு முட்டு கொடுத்து இவளை இரசித்து கொண்டிருந்தவனை கன்னாடி வழியே பார்த்தவள் புருவமுயர்த்தி என்ன என வினவ... அவனோ எழுந்து வந்து அவளின் இரு கைகளையும் பின் மடக்கி தன்னோடு இழுத்து பிடித்து அவளின் கழுத்தில் முகம் புதைத்தான்....

உத்ரா : என்ன பாஸ் பன்றீங்க...

ஆதித் : இல்ல.... நேத்து இந்த மூஞ்சியா இங்க ஒப்பாரி வச்சதுன்னு யோசிச்சு பாத்தேன்... என கழுத்தித் அவன் தலையை வைத்து... கன்னாடியில் அவளை பார்த்து கூறினான்....

உத்ரா : ம்க்கும்... அழ விட்டா தான....

ஆதித் : ஏன் டி ஒரு மணி நேரம் அழுதது பத்தலையோ...

உத்ரா : அட போ மாமா... நீ வேற...

ஆதித் : சரி சரி புருஷனுக்கு ஸ்ற்றாங்கா காஃபீ போடு.... குளிச்சிட்டு வந்துர்ரேன்... அவளை விட்டுவிட்டு டவலுடன் குளியலறைக்குள் புகுந்தான்....

பின் ஆதித்தின் சில்மிஷங்களிலும் உத்ராவின் சினுங்களிலும் அன்றைய காலை நகர.... மதியம் பெரிய வீட்டிற்கு அழைத்து சென்றான்.... தயங்கி கொண்டே வந்த உத்ராவை அணைத்து கொண்ட லீலா....

லீலா : ஏன் டி நேத்து வீட்டுக்கு ஓடுன...

உத்ரா : அது அத்த...

லீலா : இந்த விஷயத்த எங்க கிட்ட சொன்னா உன்ன நாங்க என்ன மா பன்ன போறோம்...

தியா : அட நீ வேற பெரி... அவ எங்க கிட்ட கூட சொல்லல...

லீலா : நீயும் நானும் ஒன்னா டி...

தியா : இல்ல தான்... ஆனா நா அவ ஃப்ரெண்டு... நீ அவ அத்த தான... எவ்ளோ டிஃப்ரென்ஸ் இருக்கு...

லீலா : வாயி... வாயி... என அவள் காதை பிடித்து திருகினார்...

அம்ருதா : உத்ரா மா சாப்ட்டியா...

உத்ரா : அ... சாப்ட்டேன் த்த...

மரகதம் பாட்டி : ஏன் டா நடுங்கிக்கிட்டே இருக்க... நீ எங்க பேத்தி டா... உன்ன யாராவது இங்க எதாவது சொல்லுவோமா... நீயும் எங்க பேரனும் சந்தோஷமா இரூந்தாலே போதும் டா... வா வந்து எங்களுக்கு டீ போட்டு குடு... என அன்புடுன் அழைத்து சென்றார்....

உத்ரா பயந்ததை போல் அங்கு எதுவும் நடக்கவில்லை... அவளோ மகிழ்ச்சியோடு பார்க்க.... எப்புடி என கண்ணடித்து அவன் கேட்க.... சிரித்து கொண்டே சமையலறைக்குள் நுழைந்தாள்.... அரை மணி நேரத்திலே தூர்தேஷுடன் ரித்திக் பேசியவாறு நடந்து வர... ஆதித்தின் கண்ணசைவில் புரிந்து கொண்ட உத்ரா டீயை கொடுத்தவாறே பேச்சை தொடங்கினாள்...

உத்ரா : ஏன் அத்த.... பர்ஸ்ட்டு எனக்கும் மாமாக்கும் கல்யாணம் ஆய்டுச்சு ஓக்கே.. பட் தங்கச்சிய வச்சிட்டு இவரு கல்யாணம் பன்னது தப்பு தான....

" அது உனக்கு இப்போ தான் தெரியிதா " என்பதை போல் அனைவரும் பார்க்க...

லீலா : அதனால என்ன டி...

உத்ரா : ஊர்ல என் புருஷன் அவசரக்காரன்னு பேச மாட்டாங்க....

தீரா : இல்லனா மட்டும் உன் புருஷன் அவசரக்காரன் இல்லையா டி ....

ஆதித் " ப்லன சரியா பன்னுன்னா என்ன டமேஜ் பன்றாளே என் பொண்டாட்டி " என தலையிலடித்து கொண்டான்...

ஷியாம் : சரி இப்போ அதுக்கு என்னங்குர உரு மா...

உத்ரா : தியாக்கு கல்யாணம் பன்னி வைக்காலாம் ... என குண்டை தூக்கி போட.... ரித்திக் தியா இருவருக்கும் ஒரே நேரத்தில் புரை ஏறியது.... அதை கண்டு ஆதித் நமட்டு சிரிப்பு சிரித்து கொண்டே.... " மச்சான் பொருமையா குடி டா " என குறும்பாய் கூற... ரித்திக் அதை கவனிக்க தவறினான்....

தியா : ஏது கல்யாணமா.. என அதிர்ச்சியாய் கேட்க...

அம்ருதா : கரெக்ட்டா சொன்ன டா உத்ரா மா... ஆமா டி... உனக்கும் வயசு ஏறீட்டே போகுது...

தியா : எம்மோய்... 22 வயசு தான் ஆகுது எனக்கு....

அம்ருதா : எனக்குலாம் 20 வயசுலையே கல்யாணம் பன்னிட்டாங்க தெரிருமா...

தியா : நீ பன்னிக்கிட்டா நானும் பன்னிக்கனுமா...

தேவராயன் : பின்ன... காலம் நெருங்கி கிட்டே இருக்ககுல்ல தியா மா.... நா மாப்பிள்ளை பாக்க ஆரம்பிச்சிர்ரேன்...

ஷியாம் : சீக்கிரம் இந்த குட்டிபிசாச கட்டி கொடுத்து தொலைங்க.... அப்போ தான் என் ரூட்டு க்லியர் ஆவும்... நா இன்னும் எத்தன வர்ஷத்துக்கு சாமியாரா இருக்குரது...

ரித்திக் ம.வ : மச்சான்னு பாக்க மாட்டேன் டா நானு... என உள்ளுக்குள் மருகி கொண்டான்...

தீரா : இப்போ உள்ள பொலம்பீட்டு கொஞ்ச நாள் களிச்சு வட போச்சேன்னு உக்கார போரு பாரு...

ரித்திக் : அப்டி எதாவது ஆச்சு மொத டெட் பாடி நீ தான்...

தீரா : அடப்பாவி... நீ பேசாததுக்கு நா என்ன டா பன்ன முடியும்...

ஆதித் : என்ன தியாகுட்டி... கல்யாண வேலைய ஆரம்ச்சிரட்டா... ரித்திக்கை ஒரு முறை கண்டவள் பின் என்ன நினைத்தாளோ...

தியா : ஓக்கே டா அண்ணா... எப்போ கல்யாணம்...

ரித்திக் ம.வ : அடிப்பாவி...

ஆதித் : எப்போ வக்கலாம்னு நீயே சொல்லு...

தியா : எனக்கு எப்பவா இருந்தாலும் ஓக்கே அண்ணா...

ஆதித் : அப்போ ராஜேஷ்க்கு ஃபோன் போற்றுவோமா... என ஃபோனை எடுக்க...

ரித்திக் : கொன்னுடுவேன் டா மவனே... உன் ஃபோன்லேந்து அந்த எருமைக்கு ஃபோன் போச்சு... அப்ரம் நீ கைமை தான்... என அவன் கழுத்தை நெறித்து கொண்டு கூற....

ஆதித் : அப்போ சீக்கிரம் ப்ரொப்போஸ் பன்னு போ...

ரித்திக் : அடியேய் யது... உன் அண்ணன் சதிகாரன்.. அந்த எருமைக்கு உன்ன கட்டி வச்சாலும் வச்சிடுவான்... மரியாதையா வந்துரு...

தியா : அதெல்லாம் முடியாது... நா என் அண்ணன் காற்றவன தான் கட்டிப்பேன்...

ரித்திக் : அடிப்பாவி... என்ன பழிவாங்க உனக்கு வேற நேரம் கிடைக்கலையா... இரெண்டு வர்ஷத்துக்கு முன்னாடி இத தான் பாத்துக்குவேன்னு சொன்னியா டி....

தியா : நீ தான் என் வழிக்கு வரவே மாற்றியே... அதான் நா கல்யாம் பன்னிக்க போறேன்....

ரித்திக் : சரி சரி ஒத்துக்குறேன்... மொதல்ல கல்யாணம் பன்னிக்க முடியாதுன்னு சொல்லு டி...

தியா : நா சொல்ல மாட்டேன் ப்பா... நீ வேணா நா கட்டிக்கிறேன்னு சொல்லு...

ரித்திக் : நானே உன்ன கட்டிக்கிட்டு காலம் பூரா வச்சு காப்பாத்துறேன் டி..

தியா : இன்னும் சொல்ல வேண்டியத சொல்லலையே...

ரித்திக் : இன்னும் என்ன இருக்கு...

தியா : யோசி யோசி...

ரித்திக் : அட போடி நீ அந்த எருமையையே கல்யாணம் பன்னிக்க... நா வேற ஒருத்திய கட்டிக்கிறேன்... என அவன் திரும்பி நடக்க...

தியா : அடேய்... கொஞ்ச நேரம் நா வேணாம்னு சொன்னாஒரே தடியா போய்டுவியா நீ... என அவன் பின்னே ஓடி போய் அடித்தாள்....

ரித்திக் : நீ தான் முடியாதுன்னுட்டல்ல போ...

தியா : அச்சோ ஐ லவ் யு டா... சும்மா விளயாடுனேன்...

ரித்திக் : நானும் சும்மா தான் விளையாடுனேன்... லவ் யு டூ டி...

தியா : அத நேராவே சொல்லீர்க்கலாமா...

ரித்திக் : போலீஸ் காரன ரொம்பத்தான் கெஞ்ச விடுர... அதான் நான் கொஞ்சம் விளையாடுனேன்....

ஆதித் : டேய் மச்சான்.... நாங்கல்லாம் இருக்கோம் டா...

ரித்திக் : தெரியும் டா மமச்சான்.... மாமா... நானும் உங்க பொண்ணும் விரும்புறோம்... அவள உங்க அளவு பாத்துக்க முடியுமான்னு தெரியல... ஆனா என் உயிர குடுத்து அவள வாழ வைப்பேன்... நீங்க என்ன சொல்றீங்க... என அவளின் கரத்தை கோர்த்து கொண்டு கூற....

தேவராயன் : நா என்னப்பா சொல்றது அடுத்து என்ன கல்யாணம் தான்....

குடும்பத்தினர் : ஆரம்பிச்சட வேண்டியது தான் கல்யாணத்த...

தூர்தேஷ் : இந்த பூனையும் பால் குடிக்குமான்னு இருந்துட்டு நீ பீரே குடிச்சிர்க்கியே டா... என ரித்திக்கின் தோளில் கை போட...

ரித்திக் : ச்சி போடா...

ஆதித் : டேய் வெக்கம்லாம் படாத... கொமட்டிக்கிட்டு வருது....

ரித்திக் : எரும... போடா....

ரித்திக் வீட்டிலும் அனைவரும் மகிழ்ச்சியுடன் சம்மதிக்க அடுத்த நான்கு மாதத்தில் திருணத்தை குறித்தனர்.... நாட்களும் ஓடியது... வீட்டில் அனைத்து ஜோடிகளும் காதலுடன் சந்தோஷமாய் வளம் வர... தூர்தேஷ் மாத்திரம் சிங்கிளாகவே சுற்றி கொண்டாருந்தான்...

அவன் சிங்கிளாய் சுத்துவதை காண பொருக்காத அவன் தோழன்கள் இருவரும் சேகரநாநெனிடம் பேசி அனுக்கே தெரியாமல் அவன் சிறு வயது பப்பி லவ்வான அவனின் அத்தை மகள் அகல்ய வர்ஷினியுடன் நிச்சயத்தையே முடித்து விட்டனர்....

இரண்டு நாட்கள் பித்துபிடித்ததை போலவே சுற்றியவன் பின் அகல்யாவின் குணத்தில் மயங்கி அவளிடமே வாழ்கை துணையாய் சிக்கினான்... அதை கண்ட அவன் தோழன்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி.... " நாங்க மட்டும் மாட்டிக்கிட்டு முளிக்கும் போது நீ மட்டும் தனியா சுத்தலாமா " என்ற பொறாமை தான் அவன்களுக்கு....

மூன்றரை மாதம் கடந்த நிலையில் தோழிகள் அனைவருக்கும் அன்று பட்டம் அளிப்பு விழா நடந்து முடிந்தது... காலையிலிருந்தே சோர்வாய் உணர்ந்த உத்ரா மேடையில் தட்டு தடுமாறி பட்டைத்தை வாங்கி விட்டு வந்து ஆதித்தின் தோளில் சாய்ந்து கொண்டாள்... இரவு தூங்காததால் இப்படி இருக்கிறாளென நினைத்து நீரை அருந்த கூற.... தான் ஏதோ ஜுஸ் குடித்ததாகவும் தண்ணீர் வேண்டாமெனவும் கூறினாள்...

மாலை ஆனதும் அனைவரும் அங்கிருந்து கிளம்ப... புல்லட்டில் சென்று கொண்டிருந்த போது உத்ராவின் நிலை மோசமாக... பைக்கை நிறுத்த கூறி உடனே கீழே இறங்கி நின்றாள்.... ஆதித் என்னவோ ஏதோ என பயந்து போக.... தான் குடித்த ஜுசில் யாரோ ஏதோ கலந்து விட்டனர் என்பதை உணர்ந்து கொண்ட உத்ரா.... கண்கள் மங்க.... ஆதித்தை தேடினாள்... அவன் தண்ணீர் வாங்க சென்றிருக்க... கண்களை தேய்த்து தேய்த்து பார்த்தவள்... ஒரு லாரி தன்னை இடிக்க வருவதை கண்டு ஆதன் என கத்தி கொண்டே நகர.... அவளை இடிக்க தவறிய லாரியிலிருந்து சில குண்டு குண்டான ரௌடிகள் இறங்க... அவர்களிடமிருந்து தப்பி ஓட தொடங்கினாள்....

அவளின் ஆதன் என்ற அலரலில் திரும்பிய ஆதித்... அக்ஷா என்றவாறே அவளை பின் தொடர்ந்து ஓடினான்.... அவளை கொல்ல அறுவாளை எடுத்து கொண்டு சிலர் ஓட... உடனே தன் பிஸ்ட்டலை எடுத்து முன் ஓடிய ரௌடிகளின் காலில் குறி வைத்து சுட்டான்... அதில் ஒருவன் கீழே கல் தடுக்கி விழ... அவன் கையிலிருந்த அறுவாள் சரியாய் உத்ராவின் முதுகை பதம் பார்க்க போக... அதற்கு முன்னே உத்ரா ஓட முடியாமல் கீழே விழ... பின் கழுத்தில் வெட்டி விட்டு சென்றது அறுவாள்....

அக்ஷா என பெருங்குரலெடுத்து கத்தி கொண்டே அவள் கீழே விழும் முன் தாங்கினான் ஆதித்.... பித்து பிடித்ததை போல் கத்தியவன் உடனே அவளை தன் தோளில் தாங்கி கொண்டு மருத்துவமனையை நோக்கி ஓடினான்..... இடையில் ரித்திக் காரை எடுத்து கொண்டு வந்தான்... அதில் ஏறிய அடுத்த நொடி மருத்துவமனைக்கு சீரி பாய்ந்தது வண்டி...

பத்தே நிமிடத்தில் இவர்கள் மருத்துவமனையை அடைய.... உத்ராவை தூக்கி கொண்டு டாக்டர் என கத்தி கொண்டே உள்ளே ஓடினான்... மருத்துவர்கள் மாரடைப்பு வராத குறையாக ஓடோடி வர.... உடனே அவளை தள்ளி கொண்டு ஆப்பரேஷன் தியேட்டரிற்குள் நுழைந்தனர்.... அடுத்த ஐந்து நிமிடத்தில் மொத்த குடும்பத்தினரும் அங்கு கூடினர்....

ஆதித் கோவத்தில் ருத்ரமூர்த்தியையும் தாண்டி தகதகவென எரிந்து கொண்டிருந்தான்... உத்ராவின் நிலையறியாமல் அவன் பயத்தில் தவித்து கொண்டிருக்க.... அவளின் உதிரம் படிந்த அவன் சட்டையை காண காண பத்தி கொண்டு விர... ரித்திக் அருகில் வரவும் எழுந்து நின்றவன்... அவனை கேள்வியுடன் நோக்க...

ரித்திக் : கந்தர்வனோட அடியாள் செல்வாவ வச்சு தான் ராஜேஷ் இந்த விபத்த பன்னீர்க்கான் தயா... என கூறி முடித்த அடுத்த நொடி.... ஆதித்தின் கோவத்தை விவரிக்க அங்கு ஆளில்லை.... கோவத்தை அடக்க பெரும்பாடு பட்டவன் ராஜேஷ் என கத்தி கொண்டே தன் கரத்தை முருக்கி கன்னாடியில் குத்த போக..... சட்டென தன் கையை கீழே குத்தி கொண்டான்...

அவன் காதுகளில் " யார வேணா அடி... எத வேணா தூக்கி போட்டு உட... ஆனா உனக்கு அதுல ஒரு கீறல் கூட பட கூடாது " என காட்டமாய் கூறிய உத்ராவின் குரல் எதிரொலிக்க.... கோவத்தை தன்னுள்ளே அடக்கியவன்....

ஆதித் : திரும்ப திரும்ப நா சொல்றத கேக்காம என் வழியில வந்துட்டாங்க.... நா அவ்ளோ சொல்லியும் என் அக்ஷாவ கொல்ல ஆள் அனுப்பீர்க்காங்கல்ல.... இனிமேலும் சும்மா இருக்க மாட்டேன்.... இந்த ஆதித்தன மட்டுமே பாத்தவங்க இனிமே ஆதித்ய தர்ஷன அவங்க எமனா பாப்பாங்க..... என் அக்ஷாவ பாத்துக்குரது உங்க பொருப்பு... என விரைப்பாய் கர்ஜித்து விட்டு அங்கிருந்து வெளியேறினான்.... ஆதித்ய தர்ஷனா என அனைவரும் அதிர்ந்து போய் அமர்ந்திருக்க... லீலாவும் மற்ற இளைஞர்களும் அவர்களை சமாதானம் செய்தனர்....

விருவிருவென வெளியே சென்ற ஆதித் அவன் ஃபோனின் வழி கட்டளை விதித்து கொண்டே போக.... அடுத்த இருவது நிமிடத்தில் அவன் முன் வந்து நின்றது ஒரு கார்.... அதில் தனியாக பயணித்தவனின் கோவம் அதன் வேகத்தில் பிரதிபலிக்க.. அரை மணி நேரத்தில் சந்தேகத்தின் பேர்வழி என ஜெயிலில் இருந்து கஸ்டடியில் எடுக்கப்பட்ட மன்ஸூர் கந்தர்வன் முன் நின்றான் அவன்....

இவனின் கோவத்தை கண்ட அவர்கள் அதிர.... அவர்கள் ஆதித்தை பார்த்து கொண்டு வரும் போதே அவர்கள் வந்த வண்டியில் எவரும் இல்லாததை கவனிக்க.... அங்கிருந்து பதட்டத்தில் அவர்கள் தப்பிக்கும் முன்னே வெடித்து தூள் தூளாய் சிதறியது அந்த வண்டி....

அங்கு சுற்றியிருந்த அனைவரும் ஆதித்தை கண்களை விரித்து பிரம்மிப்புடன் பார்த்து கொண்டிருக்க.... அவன் முகத்தில் தெரிந்த இருக்கம் அனைவரையும் நடுநடுங்க வைத்தது....

ராஜேஷ்ஷின் நிலை அந்தோ பரிதாபம்.... நட்ட நடு காட்டில் உண்ண உணவில்லாமல்... குடிக்க நீரில்லாமல் கண்ணை கட்டி விட்டதை போல் சுற்றி கொண்டிருந்தான்....

தன் ஃபோனை காதில் வைத்த ஆதித் அப்புறம் கூற பட்டத்தை கேட்டு பதறி போய் உடனே மருத்துவமனைக்கு சீரி பாய்ந்தான்... வேர்த்து விருவிருக்க அறையுள் நுழைந்தவனை கட்டிலில் படுத்திருந்த உத்ரா மெல்ல திரும்பி பார்க்க.... அவளை சில எட்டுக்களில் நெருங்கியவன்... அவள் கரத்தை பிடித்து கொண்டு அழ தொடங்கினான்..... உத்ராவின் கண்ணசைவில் அங்கிருந்த அனைவரும் வெளியேறி விட..... தன் வெண்டை விரல்களால் அவன் கேசத்தை கோதி விட்டவள்.... அவன் கண்ணீரை துடைத்து...

உத்ரா : மிஸ்டர் ஆதித்ய தர்ஷன் வீர தீர சாகசங்கள செஞ்சிட்டு வந்து இப்போ குழந்தை மாரி அழறீங்களே.... என புன்முறுவலுடன் கூற....

ஆதித் : ஏன் அக்ஷாமா... என்ன இப்டி பயமுறுத்துர.... நா அழரத பாக்க உனக்கு அவ்ளோ சந்தோஷமா நா எவ்ளோ பயந்துட்டேன் தெரியுமா...

உத்ரா : நீ அழுரது உலக அதிசயத்துல ஒன்னு டா மாமா...

ஆதித் : கிருக்கி.... நீ எதுக்கு டி அங்க ஓடுன... என் கிட்ட வர வேண்டியது தான....

உத்ரா : மயக்கத்துல நீ எங்க நிக்கிரன்னு சரியா பாக்க முடியல மாமா.... விடு டா.. நா அவ்ளோ சீக்கிரம் உன்ன விட்டு போய்ர மாட்டேன்...

ஆதித் : லூசு லூசு... உன் இம்சை எனக்கு வாழ்க்க முழுக்க வேணும்டி... இனிமே இப்டி என்ன விட்டு போற வேலைலாம் வச்சுக்காத...

உத்ரா : இனிமே தான் மாமா பல சேட்டைய பாக்க வேண்டியதா இருக்கும்.... அதுவும் ஒன்னுக்கு மூணா இம்சை இருக்கும் பாரு....

ஆதித் : ஹான்... என்ன டி சொல்ற....

உத்ரா : ஆமா டா... மாமா... நீ எவ்ளோ இம்சை பன்ன... இப்போ இது என் டர்ன்... பத்து மாசத்துக்கு என் கட்டளை தான்..

ஆதித் : அடியேய் என்ன டி சொல்ற... ஒன்னுயே புரியல...

உத்ரா : இனிமே உன் கூடவே தான் இருப்பேன்... அது ஒரு இம்சை.... நீ என் கூடவே தான் இருக்கனும்... அது ஒரு இம்சை.... அப்ரம் சிலர வரவேற்க போறதால... நீ டென்ஷன்லயே சுத்த போற... அது ஒரு இம்சை....

ஆதித் : அக்ஷாமா.... சத்தியமா ஒன்னும் புரியல...

தலையிலே அடித்து கொண்ட உத்ரா அவன் கையை எடுத்து அவள் வயிற்றில் வைத்து கண்கள் ஜொளிக்க அவனை பார்க்க.... ஆதித்திற்கு ஏதோ பொறி தட்டினாலும்...

ஆதித் : என்ன டி சொல்ல வர...

உத்ரா : மக்கு மாமா... நீ வேஸ்ட்டு டா... உன்ன போய் கட்டிக்கிட்டேன் பாரு... இதுல நீ வல்ட் பெஸ்ட் பிஸ்னஸ்மேன்... என தலையிலே அடிக்க...

ஆதித் : சொல்லு டி...

உத்ரா : டேய் மாமா.... நம்ம வீட்டு அண்டர் குரௌண்ட்ல இருக்க தொட்டி கிட்டையே இன்னோறு குட்டி தொட்டி கட்ட போறோம்... இன்னுமா புரியல... என் குட்டி ஆதன் வர போறான் டா மண்டூஸ்...

ஆதித் : ஹே பொண்டாட்டி... என்ன டி சொல்ற... உண்மையாவா...

உத்ரா : சத்தியமா டா...

ஆதித் : எவ்ளோ நாளாச்சு....

உத்ரா : 42 நாளு... என தலை குனிந்து கூற.... அவளின் முகத்தை ஏந்தி இதழோடு இதழ் சேர்த்து தன் மகிழ்வை தெரிவித்தான்.... அவள் அவனை கட்டி கொள்ள... நெற்றியில் இதழ் பதித்து மென்மையாய் அணைத்து கொண்டு.... லவ் யு அக்ஷா என மெல்லமாய் கூற.....

பின் மருத்துவரும் பரிசோதித்து அதே விஷயத்தை கூற... குடும்பமே சந்தோஷத்தில் திலைத்தது... உத்ரா தன் ரிப்போர்ட்டுகளை பற்றி கூற.... அதற்கு மருத்துவரோ... " அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை... யு ஆர் ஃபர்பெக்ட்லி ஆல் ரைட் " என கூறி அனுப்பி வைத்தார்....

சும்மாவே உத்ராவை தலை மேல் வைத்து தாங்கும் ஆதித் இப்போது அவளது காலை கூட கீழே வைக்க விடவில்லை.... தினம் கொஞ்சி கெஞ்சி மிஞ்சி என அனைத்தையும் அனுபவித்து வாழ்க்கைய கடத்தினர்....

விரைவிலே தியா ரித்திக்கிற்கும் திருமணம் நடந்தது... அதில் உத்ரா கால் கட்டப்பட்ட பொம்மை போல் ஆதித்தின் கண் பார்வையை விட்டு நகரவும் இயலாமல்... இருக்கவும் இயலாமல் தடுமாறினாள்....

ஆதித் ஒரேதடியாய் மொத்த பொருப்பையும் கிஷோர் மற்றும் ரித்திக்கின் தலையிலே கட்டி விட்டு உத்ராவுடனே இருந்து விட்டான்.... அதை தான் உத்ரவும் விரும்பினாள்.....

தினம் உத்ராவை எழுப்பி உண்ண வைத்து ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை பலச்சாறை அருந்த வைப்பான்.... தக்க நேரத்தில் ஓய்வெடுக்க வைப்பான்.... அவளுடனே சேர்ந்து மெல்லிசை கேட்பான்.... அந்த அமைதியான நேரங்களில்... வயிற்றில் உத்ரா பல விதமான உணர்ச்சிகளை உணர்வாள்.... கை கோர்த்து கொண்டு பூந்தோட்டத்தினை மாலை வலம் வருவர்... பல நேரம் இருவரும் நடப்பர்... சில நேரம் உத்ராவை தூக்கி கொண்டு ஆதித் நடப்பான்.... இரவு கதை கதையாய் அவன் உயிரிடம் பேசுவான்.... அதில் உத்ரா தான் அவன் தட்டி கொடுக்காமலே அவன் கையை அணைத்தவாறு உறங்கி விடுவாள்..... அவளை மென்மையாய் அணைத்து கொண்டு தான் இரவு இவன் உறங்குவான்....

இப்படியே நாட்கள் செல்ல.... உத்ராவிற்கு ஐந்தாம் மாதம் தொடங்க.... அவள் மேடிட்ட வயிறை வருடி வருடி அநியாயத்திற்கு எதாவது பேசி கொண்டே இருப்பான்..... ஆவளுக்கு ஒன்றும் புரியாது.... " என்ட்ட பேசுடா " என அவனிடம் குழந்தையை போல் சண்டையிடுவாள்....

அவள் வலிகள் அனைத்தையும் புரிந்து கொண்டு அதற்கேற்றார் போல் அவளை அன்புடன் பார்த்து கொண்டான்.... ஆதித்தின் கவனிப்பு ஏறி கொண்டே போக... உத்ராவிகு அவன் மீதான காதலும் வளர்ந்து கொண்டே போனது.... நடு இரவில் தூங்கும் அவனை எழுப்பி " தூங்குரியா " என வெகுளியாய் கேட்பாள்.... ஆதித்திற்க்கே சிரிப்பு வந்து விடும்.... சில நேரம் தூங்காமல் கதை கூறும் அவனை தூங்கியே சாவடிப்பாள்... அவன் தூங்கினால் எழுந்து கொண்டு அது வேண்டும் இது வேண்டுமென நச்சரிப்பாள்....

அவள் மேடிட்ட வயிற்றில் கை வைத்து அவன் பேசும் போதெல்லாம் உள்ளிருக்கும் சிசு அமைதியாய் கேட்பதை போல் இருந்து விட்டு அவன் கையை எடுத்ததும் உதைக்கும்.... எப்பொழுதெல்லாம் மடிக்கணினியில் மெயிலை பார்த்து விட்டு சோர்வாய் வருகிறானோ அப்பொழுதெல்லாம் உத்ரா அவனை தாயாய் மடியில் தாங்குவாள்...

ஆனால் உள்ளிருக்கும் அவன் உயிர் " நான் தான் என் அம்மா மடியில படுப்பேன் " என அடம்பிடிப்பதை போல் காலால் உதைக்கும்.... அதை அவள் மடியில் படுத்து கொண்டே உணரும் ஆதித் " உங்கள விட எனக்கு தான் டா முதல் உரிமை " என இவனும் சண்டைக்கு செல்வான்...

ஏழு மாதத்தில் வளைகாப்பு வைத்தால் தன்னை பிறந்த வீட்டிற்கு அழைத்து சென்று விடுவர் என பயந்து ஒன்பதாம் மாதத்தில் வைக்க வைத்தாள்.... அதே போல் ஒன்பதாம் மாதத்தில் வளைகாப்பும் வைக்க.... தாய்மையின் பூரிப்பில்.... மங்களகரமாய் சிவப்பு நிற பட்டு புடவையில் தங்க நகைகளுடன் அழகு பதுமையென வந்த தன்னவளை காதல் பொங்கும்  விழிகளுடன் கண்டான் ஆதித்....

அடம் பிடித்து அவனே முதலில் வளையல் போட்டு விட்டான்... ரித்திக் இரண்டு தங்க வளையல் போட... அடுத்து ஷியாம் இரண்டு தங்க வளையல் போட... விஷ்வா இரண்டு தங்க வளையல் போட... தூர்தேஷ் இரண்டு தங்க வளையல் போட... கிஷோர் இரண்டு தங்க வளையல் போட்டான்.....

ஆதித் : டேய் நானே என் பொண்டாட்டிக்கு கை வலிக்கும்னு தான டா கன்னாடி வளையல் போட்டேன்... நீங்க என்னன்னா தங்க வளையலா அடுக்கிக்கிட்டு போறீங்களே டா....

தியா : டேய் அண்ணா... பின்னாடி நாங்க இருக்கோம் என அவன்களின் பின்னிருந்து எக்கி கூற....

உத்ரா : அடிப்பவிங்களா....

மிரு : உனக்கு பன்னாம எப்டி டி.... என ஆடராய் வந்து வளையல் போட்டு விட்டாள்கள்.... பின் சந்தனத்தை குலைத்து அவள் கன்னத்தில் தேய்த்து... பூ போட்டனர்....

ராமானுஜமும் கார்த்திகாவும் உத்ராவை அழைத்து செல்ல கிளம்ப.... ஆதித் தயங்கி தயங்கி உத்ராவை பார்த்து கொண்டிருக்க.... கார்த்திகா " வா டா உத்ரா மா போவோம் " என்க.... அவ்வளவு தான்..... ஓஓ என ஒப்பாரி வைத்து மாமா என அழ தொடங்கி விட்டாள் அவள்.... வெளியே நின்றிருந்த ஆதித் பதறியடித்து உள்ளே ஓடி வர..... அவன் ஓடிய ஓட்டத்தில் கூடத்தில் அமர்ந்திருந்தவர்கள் அரண்டு போயினர்....

ஆதித் : அக்ஷா என்ன டி ஆச்சு... என பதறி போய் அவளிம் ஓட...

உத்ரா : நா போ மாட்டேன்.... என அவள் கண்களை தேய்த்து கொண்டு அழ.... இப்போது அனைவருக்கும் புஸ்ஸென்று ஆனது.... ஆதித் அவளை பதட்டம் நீங்கி புன்முறுவலுடன் அணைத்து ஆறுதல் படுத்த.... என்ன ஒரு சத்தத்தையும் காணொம் என உத்ராவே கண்களை திறந்து பார்க்க...

தியா  : அண்ணியாரே... ரொம்ப கண்ண தேய்க்காத... மை கலஞ்சிர போகுது...

உத்ரா : மை கலஞ்சிருச்சா மாமா... என அப்பாவியாய் கேட்க...

ஆதித் : இல்லடா தங்கம்.... என லைட்டாய் சிலிப்பி இருந்தமையை தன் கட்டை விரலால் எடுத்து விட்டு கூற....

அன்கி : பெரிய தங்கம்... நீங்க குடுக்குர செல்லாம் தான் அத்தான்.... ஏ உரு வா டி...

உத்ரா : நா வர மாட்டேன்.. தலையை இடவலமாய் ஆட்டினாள்...

விஷ்வா : விட்டா இவ ஸ்கூல் போ மாட்டேன்னு அடம் புடிச்ச மாரி போய் கட்டில் மேல உகாந்துர போறா....

மிரு : அதான் இறக்கி விட எங்க அண்ணன் இருக்காரே....

தியா : வரியா இல்லையா டி நீ..

உத்ரா : வர மாட்டேன்னா வர மாட்டேன் தான்... மாமா நா போ மாட்டேன்... என்ன அனுப்பாத... என அவன் இடையை கட்டி கொள்ள...

ஆதித் : அத்த... நானே பாத்துக்குறேனே.... இங்கையே இருக்கட்டுமே.... என பாவமாய் கேட்க...

ராமானுஜம் : சரி மாப்பிள்ளை.... நீங்களே பொண்டாட்டிய பாத்துக்கோங்க.... என சிரித்தவாறு கூறி விட்டு அங்கிருந்து நகர்ந்தனர்....

அடுத்து நாள் போக போக உத்ராவின் சேட்டை அதிகமாக.... இருவரும் விளையாடி விளையாடியே வீட்டை ரனகலமாக்கினர்.... இப்பொழுதெல்லாம் வீட்டில் ஆதித் கோவப்பட்டால் தூக்கி போட பல பொருள் இருந்தும்... உடையும் பொருள் ஒன்று கூட இல்லை....

இரண்டு வருடம் முன்னே.... ஆன்லைனில் மர ஜாமான்கள் அனைத்தையும் ஆர்டர் செய்திருந்தாள் உத்ரா.. அந்த வீட்டில் கன்னாடி என்ற பெயருக்கு முகம் பார்க்கும் கன்னாடியும்.... அண்டர் குரௌண்டில் இருக்கும் கன்னாடி ஊஞ்சல் மட்டும் தான்.... மற்ற அனைத்தையுமே மரத்தாலான பொருட்களால் இடம் மாற்றி விட்டாள்... அவன் உடைப்பதற்கு ஒரு பொருள் கூட இல்லை.... அதனாலே கோவத்தில் எதை தூக்கி போட்டு உடைத்தாலும் பின் அவனே பெருக்கி அடுக்கி வைப்பான்...

நாட்களும் ஓட... அன்று நள்ளிரவு உறக்கத்திலிருந்த உத்ரா தன்னை பின்னிருந்து அணைத்திருந்தவனை பார்த்து கொண்டு உறங்காமிலிருக்க.... இரண்டு நொடியில் கண்களை திறந்தவன்.... அவளின் கூந்தலை வருடி விட்டு கொண்டு

ஆதித் : என்ன அக்ஷாமா...

உத்ரா : மாமா உனக்கு என்ன பாப்பா வேணும்...

ஆதித் : எனக்கு என் பாப்பா அவ பாப்பாவோட நல்லபடியா என் கிட்ட வந்துட்டா போதும்....

உத்ரா : ம்ம்ம் அதெல்லாம் வந்துடுவேன் சொல்லு... என்ன பாப்பா வேணும்...

ஆதித் : தோ பாரு பொண்டாட்டி... எனக்கு நீ இருந்தா போதும்... நம்ம உறவுக்கு அடையாளமா பொறக்க போற நம்ம குழந்தை பொண்ணா இருந்தாலும் பையனா இருந்தாலும் எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல...

உத்ரா : ம்ச்... ஓகே சும்மா சொல்லு...

ஆதித் : நீ டாக்டர்.... நிச்சயமா உனக்கு என்ன குழந்தை பிறக்க போகுதுன்னு தெரியும்... நா எதிர்மறையா சொல்லிட்டா நல்லாவா இருக்கும்...

உத்ரா : உனக்கு எப்டி டா தெரியும்...

ஆதித் : உன்ன பத்தி எனக்கு தெரியாதா...

உத்ரா : ம்ம்ம் சரி இரெண்டு பேருக்கும் இரெண்டு பேரு யோசிச்சிர்க்கேன்.... அது என்னன்னு சொல்லு பாக்கலாம்....

ஆதித் : இரெண்டா.... ஏன் இரெண்டு...

உத்ரா : அதெல்லாம் அப்டி தான் சொல்லு...

ஆதித் : சொல்லிட்டா சஸ்பென்ஸ் இருக்காதே...

உத்ரா : சரி புள்ள பொறந்ததும் என்ன மறந்துர மாட்டியே...

ஆதித் : நீ என் உயிரு டி... உன்ன மறப்பேனா...

உத்ரா : லவ் யு மாமா.... என கூறிய அடுத்த நொடி அவள் வயிற்றில் சுல்லென்ற வலி எடுக்க..... சட்டென எழுந்தமர்ந்தவளை ஆதித் பதறி போய் பார்க்க.... பல்லை கடித்து பொருத்து கொண்ட உத்ரா ஆதித்தை ஹாஸ்பிட்டல் அழைத்து போக கூற..... அடுத்த பத்து நிமிடத்தில் இருவரும் மருத்துவமனையில் இருந்தனர்.....

ஸ்றெக்ச்சரில் அவளை அழைத்து கொண்டு செல்ல.... தன் கரத்தை இருக்க பிடித்து கொண்டு தவிப்புடன் வந்தவனை புன்னகையுடன் கண்டவள்.....

உத்ரா : டேய் மாமா.... பயப்புடாத.... நா சொன்னதுக்கு பதில் சொல்லு டா....

ஆதித் : பயமாயிருக்கு டி...

உத்ரா : கொஞ்ச நேரத்துல வந்துருவேன் மாமா.... உன் பசங்க உன்ன மாரியே என்ன காயப்படுத்த மாட்டாங்க... நீ எனக்கு பதில் சொல்லு...

ஆதித் : லவ் யு டூ டி.... உனக்காக நா காத்திருப்பேன்னு மறந்துராத....

உத்ரா : நீ அழாத.... என கூறயதோடு உள்ளே அழைத்து சென்றனர்.....

வீட்டில் அனைவருக்கும் இவன் தெரிவிக்க.... உடனே அவர்களும் அரக்கபறக்க ஓடோடி வந்தனர்..... ஆதித் நகத்தை கடித்து கொண்டு படபடப்புடன் அமர்ந்திருந்தான்... ரித்திக்கும் தூர்தேஷும் அவனுக்கு ஆறுதல் கூறி அமைதி ஆக்கி கொண்டிருந்தனர்..... உத்ராவின் ஒவ்வொரு அலரலுக்கும் இங்கு இவனின் இதயம் எகிரி எகிரி அடங்கியது...

ஒரு வழியாய் அரை மணி நேரத்தில் தங்களின் தாயையும் தந்தையையும் மிகவும் காயப்படுத்தாமல்..... தந்தையை போலவே " சீக்கிரம் லைட்ட போட்டு தொலைங்க டா நாங்க வந்துட்டோம்னு... அப்பாக்கு தெரிஞ்சா தான் அவன் பயம் போகும் " என அவர்களின் பாஷையில் வீரிட்டு கத்தி கொண்டே பிறந்தனர் ஆதித் மற்றும் உத்ராவின் சீமந்த இரெட்டை புத்திரன்கள்.....

சில நிமிடங்களிலே ஆதித் உள்ளே ஓடி வர.... வாடிய கொடியாய் புன்னகையுடன் வரவேற்த்தவளின் அருகில் சென்று அவளை பிடித்து கொண்டு அழ தொடங்கி விட்டான்....

உத்ரா : டேய் மாமா... ஏன் டா இப்போ நீ அழர.... உன் பசங்க ஆல்ரெடி அழுதுட்டு இருக்கானுங்க... இதுல நீ வேறையா....

ஆதித் : அக்ஷாமா இனிமே எனக்கு பாப்பாவே வேணாம் டி.. என்னால உன்ன இப்டி பாக்க முடியாது...

உத்ரா : என்ன டா மாமா... இப்டி சொல்லீட்ட.... நா நெக்ஸ்ட்டு பொண்ணு பெத்துக்க போறேனே...

ஆதித் : கொன்னுடுவேன்... இனிமே பாப்பாலாம் வேணாம்...

உத்ரா : போ மாமா... எனக்கு பொண்ணு வேணும்.... டேய் பசங்களா... உங்களுக்கு தங்கச்சி வேணும்ல.... என தொட்டிலை பார்த்து கேட்ட உடனே தொட்டிலில் கிடந்த அவன் மகன்கள் வீரிட்டு அழுதனர்....

ஆதித் : அடப்பாவிங்களா...

உத்ரா : பாத்தியா... எங்க பக்கம் தான் ஓட்டு ஜாஸ்த்தி..

ஆதித் : பாத்தேன் பாத்தேன் புன்முறுவலுடன் அவளின் நெற்றியில் இதழ் பதிக்க....

உத்ரா : மாமா.... பசங்கள தூக்கி காட்டேன்...

ஆதித் : இன்னும் நானே பாக்கல டி... இரு.... என தொட்டிலின் அருகில் சென்றவன்.... சிவந்த நிறத்தில் தன்னை உரித்து வைத்த தோற்றத்தில் ரோஜா இதழ் போல்.... குவித்திருந்த இதழுடன்.... சொப்பு கண் மூடி சிறு துளி கண்ணீருடன் படுத்திருந்த குழந்தைகளை கண்களில் கண்ணீருடன் பார்த்தான் நம் நாயகன்..... இருவருமே தோற்றத்தில் ஆதித்தின் உருவத்தை ஒத்திருக்க.....

முதலாமவனை தூக்கிய ஆதித்.... " ஆதர்யதீக்ஷித்தன் " என கூறினான்..... உத்ரா அவனை அதிர்ச்சியோடு பார்க்க.... இரண்டாமவனை தூக்கியவன் " ஆதர்ஷ்யதீக்ஷித்தன் " கூறி புன்னகையுடன் திரும்ப....

உத்ரா : எப்டி டா மாமா....

ஆதித் : நா உன் புருஷன் டி... என அவளருகில் சென்றான்... அவன் குழந்தையை தூக்கும் விதத்தை கண்டு இவள் பிரம்மிக்க... தன் மகன்களை இரு கைகளிலும் தூக்கி கொண்டவள்....

உத்ரா : மாமா உன்ன மாரியே இருக்கானுங்க டா..

ஆதித் : ம்ம்ம் பத்து மாசம் சுமந்து.... வலியெல்லாம் பொருத்து கஷ்டப்பட்டு பெத்தது நீ... ஆனா இரெண்டு பேரும் என்ன உரிச்சு வச்சு பொறந்துருக்கானுங்க...

" எங்களுக்கு தெரியும் நீ மூடுப்பா " என்பதை போல் முந்தி கொண்டு இருவரும் கத்த....

உத்ரா : பாத்தியா எனக்கு சப்போர்ட்டுக்கு ஆளு வன்ட்டாங்க....

ஆதித் : இல்லனா மட்டும் உனக்கு சப்போர்ட்டுக்கு ஆளிருக்க மாட்டாங்க பாரு... என முகத்தை திருப்ப....

உத்ரா : அச்சோ குழந்தைங்க டா மாமா... என கன்னத்திலே இதழ் பதித்தாள்....

தூர்தேஷ் : மச்சான் இன்னும் ஹாஸ்பிட்டல்ல தான் இருக்கீங்க டா....

ஆதித் : எங்களுக்கு தெரியும் நீ போ டா... என்கும் போதே அனைவரும் உள்ளே வர.... உத்ராவை நலம் விசாரித்து குழந்தைகளை கொஞ்சினர்.....

குழந்தையை தூக்கி கொஞ்சி விளையாடி கொண்டிருந்த ஆதித்தை உத்ரா கண்ணிமைக்காமல் பார்த்து கொண்டிருக்க.... அவளின் நினைவுகள் இரண்டு வருடம் பின் பயணமானது...

அன்று ரித்திக்கின் வீட்டில் ரிப்போர்ட்டை கண்டு கதறி அழுத உத்ரா.... அந்த ரிப்போர்ட்டை அங்கேயே வீசிவிட்டு அவள் வீட்டிற்கு ஓடினாள்.... அங்கு அவள் கண்டு கதறியது உண்மையில் ஆதித்தின் மெடிக்கல் ரிப்போர்ட்டை கண்டு தான்....

அங்கு வந்தவள் அது உண்மையாய் இருக்காதென அவன் சம்மந்தப்பட்ட அனைத்தையும் தேட தொடங்க... எதிர்பாராத விதமாய் அவள் தடுமாறியதில்.... அங்கிருந்த கேமரா ஒன்று கீழே விழுந்தது... ஏதோ ஒரு உள்ளுணர்வு ஊந்த அதை எடுத்தவள் அதிலிருந்த வீடியோவை கண்டு உள்ளூர அதிர்ந்தாள்.... அன்று ரித்திக் தூர்தேஷ் விஷ்வா ஷியாமிற்கு ஆதித்தை பற்றி கூறிய அனைத்தும் அதில் வீடியோவாய் தெரியாமல் பதிவாகியிருந்தது...

அதை கண்ட உத்ரா ஆதித் எவ்வளவு வலிகளை கடந்து வந்தான்... என்பதையெல்லாம் கேட்டதும் அவள் குறையை எண்ணி அவனை விட்டு விலகி போக வேண்டும் என்ற எண்ணத்தை தூக்கி போட்டுவிட்டு என்ன நடந்தாலும் அவனுடன் இருக்க வேண்டுமென்ற முடிவை எடுத்தாள்....

அவன் தான் இதை பற்றி அறிந்தால் காயப்படுவேன் என்று தான் மறைத்தான் என்பதை அறிந்த உத்ரா அதை பற்றி தெரிவிக்காமலே இருக்க... இன்று நோய் முழுதாய் குணப்படுத்தப்பட்டு.... மகிழ்ச்சியுடன்.... எந்த வலியுமின்றி அவன் உதிரித்தில் உதிர்ந்த மலர்களை ஆசை தீர கொஞ்சும் அவனை காதலுடன் கண்டவள் கண்ணில் வலிந்த கண்ணீரை துடைக்க.... குழந்தையை மேகாவிடம் கொடுத்து விட்டு எழுந்து அவளருகில் வந்த ஆதித் அவள் கண்களில் இதழ் பதித்து....

ஆதித் :  எனக்கு என்னைக்குமே ஒன்னும் ஆகாது டி பொண்டாட்டி.... என கூற..... அவனை பார்த்து புன்னகைத்தவள்.... அவன் தோளை கட்டி கொள்ள.... இவை அனைத்தையும் பார்த்து கொண்டிருந்த ரித்திக் அவனை இழுத்து கொண்டு வெளிளயே வந்தான்...

ஆதித் : என்ன டா....

ரித்திக் : உனக்கு தலவலி இரத்த வாந்தி வருதா மச்சான்...

ஆதித் : இல்லையே டா...

ரித்திக் : உத்ராக்கும் உனக்கு என்ன பிரச்சனை இருந்துச்சுன்னு தெரியாது.... அப்ரம் ஏன் அவ உனக்கு எதாவது ஆய்டுமோன்னு பயப்புட போறா....

ஆதித் : அவளுக்கு தெரியாதுன்னு உனக்கு யாரு டா சொன்ன..

ரித்திக் : ங... அப்போ தெரியுமா....

ஆதித் : ம்ம்ம்

ரித்திக் : அவ தெரிஞ்ச மாரி காமிச்சிக்கவே இல்லையே டா...

ஆதித் : ம்ம் நா கஷ்டப்பட கூடாதுன்னு அப்டி இருக்கா டா... மத்த படி அவளுக்கு எல்லாம் தெரியும்னு எனக்கும் தெரியும்....  அவளுக்கு எல்லாம் தெரியும்னு எனக்கு தெரியும்னும் அவளுக்கு தெரியும்....

ரித்திக் : எப்டி டா...

ஆதித் : எப்பவும் சொல்றது தான் டா... அவளுக்கும் எனக்கும் வேறுபாடு கிடையாது.... என கூறிவிட்டு அவளின் அருகில் போய் அமர....

படுக்கையில் உத்ராவின் அருகில் படுத்திருந்த ஆதர்யனும் ஆதர்ஷ்யனும் அவர்களின் கையை பிடித்து ஆட்டி கொண்டிருக்க..... ஆதர்ஷ்யன் ஆதித்தின் விரலை தன் ஒரு கரத்தால் பிடித்து கொள்ள.... ஆதர்யன் உத்ராவின் ஒரு விரலை தன் முழு கையால் பிடித்து கொண்டு ஆட்ட.... அதை கண்ட உத்ரா அழகாய் சிரிக்க.... இருவரும் ஒரே நேரத்தில் இருவரின் நெற்றியிலும் இதழ் பதிக்க.... அதை அழகாய் ஒரு புகைபடமெடுத்தான் ரித்திக்.....

தீரா : கங்ராட்ஸ் லவ்லி கப்பில்ஸ்...

உத்ரா : வா டி...

தீரா : வரேன் வரேன்....

ஆதித்  : ஹ்ம்... அடுத்த முறை பாத்தா உன்ன ஓட விடலாம்னு தான் இருந்தேன்... இருந்தாலும் என் பொண்டாட்டி சொன்னதால உன்ன சும்மா விடுறேன்...

உத்ரா : டேய் மாமா... நா எப்போ டா சொன்னேன்....

ஆதித் : அப்போ ஓட விற்றுவோமா...

தீரா : அது எப்டி டா என்ன எல்லாம் ஓட விடுரதுலையே குறியா இருக்கீங்க....

அன்கி : நீ செஞ்ச வேலைக்குலாம் உன்ன சும்மா விடுரதே பெருசு டி....

தீரா : ஏன் டி உன்ன தா உன் கருவாயன் கூட சேத்து வச்சிட்டேன்ல...

மிரு : அவள சேத்துவிட்ட உருவையும் ஆது அண்ணாவையும் எவ்ளோ வர்ஷம் பிரிச்சு வச்ச....

தீரா : அது நா இல்ல டி...

மேகா : பின்ன யாரு டி....

தீரா : அவன் வீராப்பா ஊருக்கு போனதுக்கு நா என்ன டி பன்ன முடியும்....

தியா : நீ ஊருக்கு வர வச்சருக்கனும்.

தீரா : அவன் அப்டியே வந்து கிழிச்சிருப்பான்...

விஷ்வா : நீ இப்டி வாய்க்கு வாய் டயலாக் பேசாம மூளைய வச்சு யோசிச்சிருந்தா அத்தான வர வச்சிருக்கலாம்...

தீரா : ஏன் டா நீ சென்னைல தான இருந்த.... அவன வர வச்சிருக்கலாம்ல...

ஷியாம் : நீ பேச்ச மாத்தாத...

தீரா : டேய் நீ தான டா அவன வரவே விடாம அங்கையே இருக்க வச்ச....

ரித்திக் : அவன் சொன்னான்னு தான அவன் செஞ்சான்....

தீரா : டேய் மச்சானுக்கு சப்போர்ட்டா வரியா...

தூர்தேஷ் : பின்ன வராமையா...

கிஷோர் : நீ அப்பவே அண்ணாக்கு உண்மையெல்லாம் சொல்லிருந்தா இவ்ளோ ஆய்ருக்குமா....

தீரா : அனைத்தும் விதி டா.....

ஆதித் : விதி மேல பழிய தூக்கி போடுரா பாரு அவள புடங்க டா...

தீரா : மீ எஸ்கேப்.....

அங்கு ஒருங்கே சிரிப்பொலி எழ... சிரித்து கொண்டே திரும்பிய ஆதித் உத்ராவின் கண்களை பார்க்க.... அவனை நேருக்கு நேர் பார்த்த உத்ராவும் அவனுடனே காதலுடன் கூறினாள்... " நீ என்பதென்றும் நான் என்கிற நீய டி (டா) " அதை கேட்ட அவர்களின் மகன்கள் ஏதோ புரிந்ததை போல் இதழை விரித்து சிரித்தனர்....

அப்புகைபடத்தில் உறைந்திருந்த அவர்களின் புன்னகையுடன்.... அளவில்லா காதலுடன்..... என்றும் மாறா இதே புரிதலுடன் அவர்களின் குழந்தைகளுடன் நலமாய் வாழ வாழ்த்திவிட்டு விடை பெருவோம்....

நன்றி!!!

கதை
கற்பனை
வசனம்

தீராதீ

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro