56 நீ... நான்...
ஆதித் : யாரு டா இவங்க...
ரித்திக் : உன் கார்டியன் ரமலா... அதே நேரம் உன் அம்மா ராம்லீலா...
ஆதித் : உண்மையாவா....
ரித்திக் : ம்ம்ம்
லீலா : நம்பமாட்டியா ஆதி....என அவனின் கன்னத்தை தொட.... அந்த தொடுகையில் ஆதித்தின் உடல் சிலிர்க்க... அவரை கண்களில் நிறம்பிய ஆனந்தத்துடன் கண்டவன்...
ஆதித் : உண்மையாவே நீங்க தான என் அம்மா... என்ன விட்டு இனிமே போகலல்ல...
லீலா : போ மாட்டேன் பா... போ மாட்டேன்... ஒரு முறை அவ கிட்ட உன்ன விட்டுட்டு போய் பெரிய தப்பு பன்னிட்டேன்... மன்னிச்சிருபா...
ஆதித் : என்ட்ட மன்னிப்புலாம் கேட்டுக்குட்டு அழாதீங்க...
லீலா : அம்மான்னு கூப்ட மாட்டியா ஆதி.... என ஏக்கத்துடன் கேட்க...
ஆதித் : அம்மா.... என மனநிறைவுடன் அழைத்தவனை கட்டி கொண்டு அழுது தீர்த்தார்... மா... என் இப்போ அழர நீ... என இவன் சாதரணமாகவே கேட்க...
லீலா : அழுவாம என்னடா பன்ன சொல்ற...
ஆதித் : மா ... மா... உன் மகன தேடி வர உனக்கு இத்தன நாளா... நான் தான் லண்டன விட்டு கிளம்பும் போதே ஹின்ட் குடுத்தேன்ல நீ யாருன்னு எனக்கு தெரியும்னு... அங்கேந்து இங்க வர உனக்கு மூணு வாரமா... என சண்டை பிடிக்க....
ரித்திக் : அடேய்... என்ன டா அதிர்ச்சியாவனு பாத்தா சண்ட போட்டுற்றுக்க...
ஆதித் : மிஸ்டர் ஐபீஎஸ்... எனக்கு முன்னாடியே உன் அத்த உயிரோட தான் இருக்காங்கன்னு தெரியும் டா... என இவன் அவனை அதிர்ச்சியாக்கினான்...
ரித்திக் : அடம்மாவி... என்னடா சொல்ற... அப்போ ஏன் டா முதல்ல அவ்ளோ அதிர்ச்சியான
ஆதித் : உனக்கு எப்டி தெரியும்னு தான் அதிர்ச்சியானேன்...
லீலா : அப்போ ஏன் டா என்ன பாக்க வரல...
ஆதித் : நா உங்கள பாத்ததில்லல மா... நீங்களா தான் வரனும்னு நா அமைதியா இருந்தேன்...
லீலா : எப்டியோ என் பையன் எனக்கு கெடச்சிட்டான்... என அவன் நெற்றியில் முத்தம் கொடுக்க... அனைவரும் அவர்களை இன்னும் அதிர்ச்சியோடு பார்ப்பதை பின்னே கண்டனர்...
தேவராயன் : அண்ணி... நீங்க..
லீலா : எப்டி தம்பி இருக்கீங்க... என்ன 25 வர்ஷத்துக்கு முன்னாடி இருந்தமாரிரே தான இருக்கேன்...
தேவராயன் : அப்டியே தான் அண்ணி இருக்கீங்க.... ஆனா அண்ணன்....
லீலா : ஹ்ம்... தெரியும் தம்பி.. அவருக்கு தா கடைசி வர உண்மைய தெரிவிக்க முடியாம போய்டுச்சு... என கண்ணீருடன் கூற...
மரகதம் பாட்டி : என்ன மன்னிச்சிடு தாயி... அன்னைக்கு நா உன்ன புள்ள இல்லன்னு என் மகன் கூட பட்டனத்துக்கு அனுப்பாம இருந்துர்ந்தா இந்நேரம் உங்க எல்லாரோட நிலையும் வேற மரி இருந்துருக்கும்... எல்லாமே என்னால தான் தாயி... என லீலாவின் காலில் விழுந்து கதறி அழுதார்.... அவரை பதறி போய் தூக்கிய லீலா...
லீலா : அச்சோ அத்த அப்டீலாம் ஒன்னும் இல்ல... அன்னத்த விஷப்பாம்புன்னு தெரிஞ்சும் நா சும்மா இருந்தது தான் தப்பு... உங்க யாரு மேலையும் தப்பு இல்ல...
நாராயனன் தாத்தா : என்னாச்சு மருமகளே... நீ எப்டி மா இருக்க...
லீலா : நல்லா இருக்கேன் மாமா... எல்லாம் விதி மாமா.. அன்னைக்கு விபத்துல இறந்தது நா இல்ல... என் கல்லூரி தோழி ரமலா... அன்னைக்கு தா என்ன பாக்க வந்தா... எதிர்பாராத விதமா அவ இறந்துட்டா... நா கோமாக்கு போய்ட்டேன்... நா எழும் போதே ஊட்டில இருந்தேன்... நா இங்க வர ட்ரை பன்னும் போதே இங்க எல்லாரோட நிலமையும் வேற மாரி இருந்துச்சு... அன்னம் அவர சதி பன்னி கல்யாணம் பன்னிக்கிட்டான்னு தெரிஞ்சது... இனிமே நா வந்து நின்னா குடும்பத்துக்கு தா கெட்ட பேருன்னு நா ஒதுங்கி போனேன்... ஆனாலும் ஆதிய பாக்காம என்னால இருக்க முடியல... அதான் அவன தூரத்துல இருந்தே பாத்துக்குட்டேன்...
தியா ஷியாமை லீலா அன்புடன் அணைத்து கொண்டார்... அவ்விருவரும் அவர்களின் பெரியம்மாவை கண்டு மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர்... அனைவரும் அவரை அன்புடன் வரவேற்க்க... கிஷோர் இன்னமும் எதுவும் புரியாமல் நின்று கொண்டிருந்தான்...
அவனை மேகா வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டிருக்க... அதை கண்டு ஆதித் தொண்டையை செரும... கிஷோரை கண்ணால் காட்டி விட்டு மேகா திரும்பி கொண்டாள்...
ஆதித்தின் செருமலில் திரும்பிய அனைவரும் இப்போது கிஷோரை பார்க்க... அவனோ என்ன செய்ய வேண்டுமென்றே தெரியாது முளிக்க... அவனருகில் சென்ற லீலா...
லீலா : இவன் தான் என் இரெண்டாவது மகன்... கிஷோர்...
கிஷோர் : ஏன் மா பொய் சொல்றீங்க... நா உங்க ப்ரெண்டு ரமலாவோட பையன் தான....
லீலா : எனக்கு என் ரமலாவும் நானும் வேற வேற இல்ல டா கண்ணா... அந்த மாரி அவ பையன் நீ எனக்கு பையன் தான்... என எசபிசகில்லாமல் தெளிவாய் கூற....
கிஷோர் : இருந்தாலும்...
ராஜேந்திரன் தாத்தா : டேய் பேராண்டி... அதான் எங்க மருமக சொல்லிட்டால்ல நீ ஏன் டா இழுக்குர... நீ எங்க பேரன் டா...
கிஷோர் : தாத்தா.. என இவன் அதிர்ச்சியில் இருக்க...
ஆதித் : டேய் ரொம்ப அதிர்ச்சியாகாத.... நீ என் தம்பி தான டா... எனக்கு ஷியாம் விஷ்வா எப்டியோ அப்டியே தான் நீயும்... சும்மா சீன் போடாம இரு...
கிஷோர் : அண்ணா... எனக்கு இதெல்லாம் தெரியாதுண்ணா... எனக்கு இனினே யாரும் இல்ல போலன்னு தா பயந்துட்டேன்.... என அவனை கட்டி கொண்டு அழுதான்... அவன் தலையை கோதிவிட்ட ஆதித்...
ஆதித் : கூல் கிஷு... உனக்கு இதெல்லாம் தெரியாதுன்னு எனக்கு தெரியும்... இவ்ளோ வர்ஷம் நீ எப்டி இருந்தியோ அப்படியே இரு...
கிஷோர் : ம்..
ஷியாம் : டேய் இருவத்திநாழு வயசாச்சு டா உனக்கு... கொழந்த மாரி அழாதடா..
கிஷோர் : ம்க்கும் போடா டேய்...
விஷ்வா : சரி டா மச்சான்... என் சிஸ்டர் வேற உன்ன முறைக்கிறா... ஓவர் அக்ட் பன்னாத... என மெல்லமாய் எச்சிரிக்க... அகண்ட விழியுடன் சுற்றி முற்றி பார்த்த கிஷோர் மேகா தன்னை முறைப்பதை கண்டு ஈஈஈஈ என இளித்து விட்டு கப்சிப்பென வாயை மூடி கொண்டான்....
தீரா : இந்த ட்ரக்க எப்போ போட்டானுங்க....
அம்ருதா : இனிமே எல்லாரும் ஒன்னா சந்தோஷமா இருக்கலாம் ... எனக்கு இப்போ தான் நிம்மதியா இருக்கு....
ஆதித் : கண்டிப்பா மா...
அன்கி : திடீர்னு எப்டி அத்த வந்தீங்க....
கிஷோர் : இப்டி கல்யாணம் பன்ன போறாங்கன்னு சொன்னதும் அம்மா தான் போயே தீருவேன்னு வந்தாங்க மா... நான் கூட வந்தேன் அவ்வளவு தான்....
தூர்தேஷ் : அதெல்லாம் சரி.... உனக்கு எப்டி டா பெரியம்மாவ பத்தி தெரியும்.... என ஆதித்திடம் கேட்க...
ஆதித் : ம்ம் என்ன அங்க சில பேர் ஃபாலோ பன்ன ஆரம்மமிச்சப்பவே நா அவங்கள அவங்களுக்கே தெரியாம ஃபாலோ ன்ன ஆரம்பிச்சிட்டேன்.... அதோட அம்மா கேஸ்க்கு டீட்டெய்ல்ஸ் கலெக்ட் பன்னும் போது அம்மாவோட பாடிய ஹாஸ்பிட்டல்ல காமிக்கவே இல்லன்னு தெரிய வந்துச்சு... அப்ரம் ஜவுளி கடைல நடந்த தீ விபத்து... அதுல அவங்க ( அன்னம் ) செஞ்ச கோல்மால்னு கொஞ்ச கொஞ்சமா ஆதாரம் கிடைக்கும் போது அக்ஸிடென்ட்டான கார்ல ட்ரைவர் அப்ரம் அம்மாவோட சேர்த்து வேற யாரோ இருந்ததும் தெரிஞ்சிக்கிட்டேன்... அப்டியே தேட தேட அம்மா உயிரோட இருக்காங்கன்னு தெரிஞ்சிக்கிட்டேன்...
லீலா : ம்ம்ம்ம் நான் தான் சுதாரிக்கல....
அம்ருதா : விடுங்கக்கா... முடிஞ்சத பத்தி பேசி பிரயோஜனம் இல்ல....
லீலா : சரிமா..
ஆதித் : நாங்க இன்னைக்கு நைட்டே சென்னை போகனும்..
தேவராயன் : ஏன் டா... உன் கூட யாரு
ஆதித் : கேஸ் விஷயமா ப்பா... வேற யாரு என் பொண்டாட்டி தான்....
பிருந்தா பாட்டி : சரி பா நீ பாத்து போய்ட்டுவா... என அனுப்பி வைத்ததோடு அங்கிருந்து இங்கு வந்திருந்தனர்....
உத்ரா : அத்த உயிரோட தான் இருக்காங்களா... ரியலி...
ஆதித் : ஆமா அக்ஷா... இப்போ ஊர்ல தான் இருக்காங்க...
உத்ரா : வா ஊருக்கு போவோம்...
ஆதித் : நோ அக்ஷா... நாளைக்கு என் கேஸ் ஹியரிங்க்கு வருது... சோ நாழு நாள் இங்க தான்...
உத்ரா : சரி நீ என்ன ப்லன்லாம் போட்ட... எல்லாத்தையும் எனக்கு சொல்லு..
ஆதித் : ம்ம் நா சும்மா தா இருந்தேன்... நீ உன் ரிப்போர்ட்ட பாத்துட்டன்னு தெரிஞ்சதும்... எங்க கிருக்கு தனமா என்ன விட்டு போய்டுவியோன்னு பயந்து தான் இந்த ப்லன போட்டேன்... நீ நம்ம அண்டர் குரௌண்ல தூங்குனதும் மறுநாள் உன்ன விஷ்வா வந்து அழச்சிட்டு போற வரைக்குமே நா அங்க தான் இருந்தேன்.... ரேகா வந்து செய்ன எடுத்ததும் எனக்கு தெரியும்... காலைல நீ பொடவ கட்டீட்டு ஓடி வரும் போது நடிக்கிரது எவ்ளோ கஷ்டம்னு அப்போ தா தெரிஞ்சிது... அப்ரம் என்ன... ரெஜிஸ்ற்றேஷன் ஆரம்பமாச்சு... ரேகாவ அவ செஞ்ச தப்பலாம் ஒத்துக்குர மாரி தான் சைன் போட வச்சேன்... உன்ன எப்டி சைன் போட வக்கிறதுன்னு ராவ்வும் தூர்தேஷும் யோசிச்சப்ப தான் நான் முன்னாடியே சொன்ன மாரி நீயே வந்து சைன போட்ட... ஆனா அப்போ அட்டக் நடக்கும்னு நானே எதிர்பாக்கல....
உத்ரா : ஹ்ம்....
ஆதித் : சரி இப்போ நா என் பொண்டாட்டிய கட்டி புடிச்சிக்கலாமா...
உத்ரா : ம்.. பெரிய இவனாட்டம் அந்த கொரங்கு கோட்டான கட்டிக்க மேடை வர போனல்ல... அவளையே போய் கட்டிக்க...
ஆதித் : சரி அவளையே போய் கட்டிக்கிறேன்... என அசால்டாய் கூறி விட்டு எழுந்தவனை அதிர்ச்சியோடு பிடித்திழுத்து கட்டிலில் தள்ளி... அவன் மீதே அமர்ந்து கொண்டு.... அடிக்க தொடங்கினாள்...
உத்ரா : வாயி வாயி வாயி... என்ன வாயி... அவள போய் கட்டிப்பியா... அவள கட்டிப்பியா... நா இருக்கும் போது அவ கேக்குதா டா உனக்கு... என சராமரியாய் அடிக்க...
ஆதித் : ஏ சண்டகாரி... விடு டி... ஆ... நீ தான டி கட்டிக்க சொன்ன...
உத்ரா : நா சொன்னா நீ கட்டிப்பியா...
ஆதித் : அதான் நீ சொன்னா உயிரையும் குடுப்பேன்னு சொல்லீர்கேனே..
உத்ரா : வாய மூடு மாமா... என அவனை கட்டி கொண்டாள்... அவளின் கண்களில் இருந்து கண்ணீர் கசிய...
ஆதித் : சும்மா பொண்டாட்டி... நீ அழுதா எனக்கு சுத்தமா புடிக்காது... முதல்ல கண்ண தொட... என கோவமாய் கூற...
உத்ரா : இதுக்கு ஒன்னும் கொரச்சல் இல்ல... உனக்கு பனிஷ்மென்ட் இருக்கு... நா ஒரு நாள் உன் கூட பேச மாட்டேன்...
ஆதித் : நல்லது நீ இன்னைக்கு புல்லா பேசாத... நான் கேஸ் விஷயத்தலாம் முடிச்சிடுவேன்.... என மூச்சை இழுத்துவிட்டு கூற... அவனை பார்த்து முகத்தை சுலித்து விட்டு அங்கிருந்து கீழே இறங்கினாள்... ஆதித்தும் சிரித்து கொண்டே அவளை பின் தொடர.... கடலினருகில் இருந்த அந்த வீட்டை கண்டு பிரம்மித்து போனவள் வெளிளே ஓட போக.... அவளை பிடித்திழுத்து ஃபோனை அவளிடம் கொடுத்தான்...
வீடியோ காலில் ராம்லீலா இருந்தார்... அவரிடம் வம்பிழுத்து பேசிவிட்டு... குடும்பத்தினர் அனைவரிடமும் பேசினாள்... லீலா மனம் நிறைந்து போய் ஃபோனை அணைத்தார்...
ஆதித்தின் பேச்சை கேட்காமல் வீட்டை விட்டு ஓடிய உத்ரா அலைகளில் காலை நனைத்து பூரித்து போனாள்... ஆதித் இரு கைகளையும் தன் பன்ட் பாக்கெட்டில் வைத்தவாறு அவள் பின் நிற்க.... ஆசை தீற அவள் ஓடி விளையாடுவதை கண்டு புன்முறுவலுடன் நின்றான் அவன்... ஒரு மணி நேரத்திற்கு மேலாக அவள் கடலில் விளையாட... அதற்கு மேலும் அனுமதிக்காவதன் வீட்டிற்குள் அழைக்க... அதற்கோ அவள் வர மாட்டேனென வீம்பாய் அங்கேயே விளாயாட... பின் இருவரும் ஓடி பிடிச்சு தான் விளையாடினர்... தப்பி ஓடிய உத்ராவை சில எட்டில் பிடித்த ஆதித் அவளை இரு கைகளிலும் தூக்கி கொண்டு உள்ளே சென்றான்....
முகத்தை தூக்கி கொண்டு அமர்ந்திருந்தவளுக்கு ஒரு ஆடையை கொடுத்து விட்டு வெளியே சென்றான்.... பத்து நிமிடத்தில் வெளியே வந்த உத்ரா கீழே வந்து அமர்ந்தாள்... இவ்வளவு நேரம் பார்த்து கொண்டிருந்த டாக்குமென்ட்டை கீழே வைத்து விட்டு டவலை எடுத்து தொவட்டாத அவளின் ஈர கூந்தலலை துவட்டி உளர்த்தி விட்டான்....
மீண்டும் அவன் டாக்குமென்ட்டில் மூழ்க.... உத்ரா அவனை சுற்றி கிருக்கு தனம் செய்து கொண்டிருந்தாள்... மாடி படியின் பிடியில் அமர்ந்து கொண்டு முடிவு வரை சருக்கி கொண்டு வருவது.... ஜன்னலை பிடித்து கொண்டு அதில் ஏறி கதவில் தாவுகிறேனென் என கீழே குதிப்பது... ஆதித் அமர்ந்திருந்த சோபாவில் குதித்து குதித்து விளைளாடுவது... தலையணை இரண்டை எடுத்து கொண்டு தன்னையே தாக்கி கொண்டு விளைளாடுவது... இல்லையேல் ஆதித் முன் அமர்ந்து கொண்டு அவனைனே வைக்க கண் வாங்காமல் பார்ப்பது... அவன் தலை முடியுடன் விளையாடுவதென பல கிருக்கு தனங்களை பார்த்து கொண்டிருந்தாள்...
வேண்டுமென்றே அவனுக்கு தான் கோபமாய் இருப்பதாய் காட்ட அவன் முன் முகத்தை திருப்பி திருப்பி காட்டுவது... அவன் எங்கேனும் எழுந்து சென்றால் அவன் கவனிக்காத நேரம் காலை கீழே விட்டு அவனை கீழே விழ வைப்பது... தண்ணியை மேலே தூக்கி ஊற்றி பழி வாங்கி விட்டேனென சிரிப்பதென இருக்க.... இவை எதையும் ஆதித் கண்டுகொள்ளவே இல்லை என்பதாய் காட்டி கொண்டு உள்ளுக்குள் இரசித்து கொண்டான் அவன்.... மதியம் அவள் பின் கெஞ்சி கொஞ்சி ஊர் வலம் போய் எப்படியோ உணவை ஊட்டி முடித்தான்....
மாலை போல் இவனை எப்படியாவது காண்டாக்க வேண்டும் என திட்டம் தீட்டி கொண்டிருந்த உத்ரா எதற்சையாய் டீபாயில் காலை நீட்டி வைக்க... சட்டென ஏதோ கீழே விழுந்து நொருங்கும் சத்தம் கேட்டு இவள் எழுந்து பார்க்க... ஆதித் பதறி போய் கீழே ஓடி வந்தான்...
கீழே கிடந்ததை கண்ட உத்ரா ஆதித்தை ஈஈஈ என இளித்து விட்டு அங்கிருந்து நழுவி வெளியே ஓடினாள்.... ஏன் இப்போ இப்டி இழிக்கிது இந்த லூசு என சிந்தித்து கொண்டே கீழே பார்த்த ஆதித்.... " அடிபாவி சண்டாளி... " என நினைத்தவாறே வெளியே ஓடி வர.... அவள் இவனிடம் போக்கி காட்டி ஓடி கொண்டிருந்தாள்...
ஆதித் நாளை சமற்பிக்கப்கோகும் வழக்கின் ஏதோ ஒரு டாக்குமென்ட் தான் அது.... அதை இவன் தெரியாதனமாய் கீழே வைத்து விட்டு போயிருக்க.... உத்ராவின் கால் பட்டு கீழே விழுந்த கன்னாடி ஜக் சரியாய் அதன் மேல் விழுந்ததும் நீரிலே ஊரிபோன பிஸ்கட் போல் ஆனது...
ஆதித் : அடி கிராதகி... நில்லு டி.... என் வாழ்க்கை உல வக்கி பாக்குரியே... இப்போ நிக்க போறியா இல்லையா நீ.... என கத்தி கொண்டே துறத்த...
உத்ரா : சாரி டா மாமா.... வேணும்னு பன்னல டா டேய் என சிரிப்பை அடக்கி கொண்டு ஓட.....
ஆதித் : ஒழுங்கா நின்னுட்டா இரெண்டு கொட்டோட விற்றுவேன் டி.....
உத்ரா : இல்ல மாமா நீ அடிப்ப...
ஆதித் : நிக்கலன்னாலும் அடிப்பேன் டி... என ஒரே எட்டில் அவளை பிடித்தவன் நிற்க இயலாமல் தடுமாறி அவளுடனே மண்ணில் விழ... இருவரையும் கரைக்கு வந்த அலை அணைத்து விட்டு செல்ல.... வாயெல்லாம் மண் போய் விட... சிரித்து கொண்டிருந்த ஆதித்தை இன்னும் கீழே தள்ளி அவன் மேல் ஏறி அமர்ந்து மண்டையிலே குத்துவிட்டாள் உத்ரா... அவளை பிடித்து தீழே தள்ளிவிட்டு இவன் எழ... இருவரும் மாற்றி மாற்றி விளையாடி கொண்டே மணி ஆறானதும் கலைத்து போய் உள்ளே சென்றனர்...
அன்றைய நாள் உத்ராவின் கிருக்கு தனம் கலந்த சிறுபிள்ளை தனமான கோபத்திலும் அவை எதிலும் கோவப்படாமல் அவளை குழந்தை போலே பாவித்த ஆதித்தின் உணர்வுகளுடன் முடிந்தது.... இரவு அந்த பெட்டில் பபடத்து கொண்ட உத்ரா அவளுக்கும் ஆதித்திற்கும் நடுவில் நான்கு தலையணையால் அணை கட்டி விட்டு அவனை முறைத்து விட்டு திரும்பி படுத்து கொண்டாள்.... இவை எதையும் கண்டும் காணாமல் இதழோர புன்னகையுடன் மடிக்கணினியை தட்டி கொண்டிருந்த ஆதித் அவள் திரும்பி படுத்து கொண்டு இரண்டு மணி நேரம் கடந்தும் இன்னும் புரண்டு புரண்டு படுத்து கொண்டிருந்தவளை உத்ரா கட்டிய க்ரேட் வாலையும் தாண்டி தன் மடியில் போட்டு கொண்டு தன் வேலையை பார்த்தான்... அரை தூக்கத்தில் இருந்த உத்ரா அவன் மடியிலே அழகாய் உறங்கினாள்.... அரை மணி நேரம் கடந்ததும்... மடிக்கணினியை மூடி வைத்த ஆதித் அவளை மெத்தையில் படுக்க வைத்து தன்னுடன் அணைத்து கொண்டு அவள் தூங்கும் அழகை கண்டு நெற்றியில் இதழ் பதித்து விட்டு கண்களை மூடி கொண்டான்....
மறுநாள் விரைவிலே தன் செங்கதிர்களை அலையோசையுடன் அவ்வறையில் பரப்பிய செங்கதிரோன் ஆசையாய் மேகதேவதை பின் எட்டி கொண்டு உலகை ஏறிட.... விடியற்காலையிலே மொட்டை மாடியில் உடல் பயிற்சி செய்து கொண்டிருந்த நாயகனை கண்டு வெட்கி போய் மறைந்து கொண்டதும்.... சில நிமிடங்களிளே... " என் புருஷன நீ எப்டி பாக்கலாம் " என்பதை போல் முருக்கி கொண்டே எழுந்தமர்ந்த நாயகியை கண்டு ஒரு காலை வணக்கத்தை போட்டு விட்டு தனக்கான உலக ரசிகர்களை பார்க்க மேற்கின் திசை ஓடியது சூரியன்...
கண்களை கசக்கி விட்டு எழுந்த உத்ரா தன் மாமா அறையில் ஏதோ ஜாகிங் போவதை போல் சுற்றி கொண்டிருப்பதை கண்டு அவனையே பார்த்து கொண்டிருக்க...
ஆதித் : என்ன பாத்தது போதும்... போய் கிளம்பு டி... கோர்ட்டுக்கு போனும்...
உத்ரா : நானுமா...
அதித் : நீயும் தான் வா... பத்து மணிக்கு அங்க இருக்னும்...
உத்ரா : ஹோ... சரி என சலிப்புடனே குளியலறைக்குள் சென்றாள்.... ஆதித் அவளுக்கு தேவையான அனைத்து பொருளையும் எடுத்து வைத்து விட்டு கீழே சென்று விட்டான்...
குளித்த பின்னே தான் எதையும் கொண்டு வரவில்லை என கவனித்த உத்ரா கதவை லைட்டாய் திறந்து தலையை மட்டும் வெளியே விட்டு எட்டி பார்க்க.... அங்கு அவனில்லாததையும் தன் உடைகளிருப்பதையும் கண்டு அதை குடுகுடுவென ஓடி சென்று எடுத்து கொண்டு மீண்டும் குளியலறைக்குள்ளே தஞ்சம் புகுந்தாள்...
அரை மணி நேரத்தில் கீழே வந்தவளை அமர வைத்து காலை உணவை ஊட்டி விட்டு கொண்டிருந்தான்.... உத்ரா விடாமல் அவனை திட்டி கொண்டே வாய் வாங்கி கொண்டிருந்தாள்... ஒவ்வொரு வாய்க்கும் " நீ பட் பாய் நா உன் கூட பேச மாட்டேன்... " என முகத்தை திருப்ப... இவன் கெஞ்சி ஊட்ட... கடைசியாய் எப்படியோ கெஞ்சி மிஞ்சி ஊட்ட... " நீ குடுத்தா நா சாப்டவே மாட்டன் " என முழுதையும் உண்டு விட்டு சண்டை பிடித்தாள்..
எப்படியோ ஒன்பதறை மணிக்கு அவளை அழைத்து கொண்டு வெளியே வந்தான்... அங்கு ஒரு கருப்பு நிற பென்ஸ் நிற்க.... அதில் இருவரும் ஹை கோர்ட்டை நோக்கி பயணமாகினர்....
அங்கு உயர்நீதிமன்றத்தில் மன்ஸூரும் கந்தர்வனும் எங்கள் சொத்தையும் பறிகொடுத்து விட்டோம் என்று அமர்ந்திருக்க.... வழக்கும் தொடங்கியது... நீதிபதியும் வந்தமர்ந்தார்... கந்தர்வன் சார்பாய் இருந்த வழக்கறிஞர் இவர்களை பார்த்து " தான் அனைத்தையும் பார்த்து கொள்கிறேன்.... தயாதிரன் வரவில்லை... நிச்சயம் வெற்றி நமக்கு தான் " என கூறிவிட்டு சென்றார்....
அவர்களும் குதூகலமாய் அமர்ந்திருக்க.... வழக்கும் தொடங்கியது... ரித்திக்கும் அங்கு தான் இருந்தான்... மன்ஸூரும் கந்தர்வனும் இவனை காக்கி சட்டையில் கண்ட போதே அதிர்ந்திருந்தனர்.... இன்னும் தயா வரவில்லையே என இவன் படபடப்பாய் அமர்ந்திருந்த நேரமே மக்களுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் முன் சீட்டில் அமர்ந்திருந்த தங்கையை கவனித்தான் அவன்....
உத்ரா அவனை பார்த்து " சூப்பர் அண்ணா " என செய்கை காட்ட.... " தயா எங்கே " என இவன் கேள்வி எழுப்ப.... அதற்குளே எதிர் கட்சி வழக்கறிஞர்.... " மதிப்பிற்குரிய கோட்டார் அவர்களே... எனது கட்சி காரர் திரு கந்தர்வநாதன் இது வடநாட்டிலிருந்து வனிகம் பார்க்க வந்தவர்கள் செய்த சதி தான் என்றும் அவரின் இரண்டு ஏக்கர் நிலத்தை தாரை வார்க்க கூறி கொலை மிரட்டல் விடுத்தாகவும் கூறியிருக்கிறார்... இன்றளவும் இதை யார் செய்கிறார் என்ற ஆதாரம் இல்லாததாலே வழக்கு முடிவு பெறாமலிருந்தது... இன்று ஆதாரம் கிடைத்து விட்டது.... திரு கந்தர்வனை விசாரிக்க அனுமதி வேண்டுகிறேன் " என்க.... நீதிபதி அனுமதியளித்ததும்.... கந்தர்வனின் பெயர் மூன்று முறை ஒலிக்க பட... அவர் சாட்சி கூண்டில் வந்து நின்றார்...
கந்தர்வனும் வழக்கறிஞர் கூறியதையே கூற.... தலைவலிக்க அமர்ந்திருந்த ரித்திக் அவன் ஃபோனை காண... அதில் ஒன்பதரைக்கே உத்ராவை இங்கு விட்டுவிட்டதாகவும்... தான் ஆதாரமொன்றை எடுக்க சென்ற நேரம் சிலர் வழி மறித்து தாக்குதல் நடத்துவதாகவும் ஆதித்திடமிருந்து குறுஞ்சிசெய்தி வந்திருந்தது.... ரித்திக் என்ன செய்வதென தெரியாமல் அமர்ந்திருக்க.... உத்ரா " அவன் வருவான் அண்ணா " என சாதாரணமாய் அமர்ந்திருக்க... சாட்சி கூண்டிலிரிருந்து இறங்கிய கந்தர்வன் அப்போதே உத்ராவை கவனிக்க.... தன்னை பார்த்து மென்மையாய் சிரித்தவளை கண்கள் விரிய பார்த்தார் அவர்...
மன்ஸூரும் அவளை பார்த்து விட்டு அதிர.... உத்ராவோ " சங்கு தான் மவனே " என கழுத்தை அறுப்பதை போல் பாவனை காட்டினாள்.... நேரம் செல்ல செல்ல சொத்தை பறி கொடுத்த மற்ற விவசாயிகளிடம் விசாரனை மேற்கொள்ள பட.... அவர்களும் தங்களுக்கு தெரிந்ததை கூறி கொண்டிருக்க.... நீதிபதியும் அவரின் காகிதத்தில் எழுதி கொண்டே போனார்...
வழக்கு மெல்ல மெல்ல இவர்கள் புறம் திரும்ப... மன்ஸூர் உத்ராவின் புறம் திரும்பி ஏளனமாய் புன்னகைக்க.... கர்வமாய் புன்னகைத்த உத்ரா தன் விரல்களை காட்ட.... " மூனு இரெண்டு ஒன்னு " என அவள் வாயசைத்ததும் ஒன்னு என முடிக்கும் முன்னே நீதிபதி ஏதோ பேச ஆரம்பிக்க.... " அப்ஜெக்ஷன் யுவர் ஹானர் " என்ற கம்பீர குரலை கேட்டு அனைவரும் திரும்ப.... அங்கோ கருப்பு கோட்டும்... வெள்ளை சட்டையும்... இடது கையில் டாக்குமென்ட்டுகளுடனும்.... வலது கை கேசத்தை கோத நிமிர்ந்து நடந்து வந்தான் ஆதித்தனாகிய தி க்ரேட் க்ரிமினல் லாயர் தயாதிரன்....
கந்தர்வனும் மன்ஸூரும் இதயத்தில் கை வைத்து கொண்டு அதிர்ச்சியில் அமர்ந்திருக்க... அவனின் நடையில் வேஷ்டி சட்டையில் கம்பீரமாய் நடந்து வரும் ஆதித்தனும்.... நீட்டான வெள்ளை சட்டையிலும் கருப்பு பன்ட்டிலும் கட்டுமஸ்த்தான உடல் இருக நடந்து வரும் ஆதித்தன் என நினைக்கும் ஆதித்ய தர்ஷனும்... கருப்பு கோட்டிலும் வெள்ளை சட்டையிலும் நிமிர்ந்து நடந்து வரும் தயாதிரனும் ட்ரிபில் அக்ஷன் போல் வந்து போக.... உத்ரா அவனை பார்த்து கன்னத்தில் குழி விழ அழகாய் சிரித்தாள்....
அதிரடியாய் உள்ளே வந்தவன் எதிர் கட்சி வழக்கறிஞர் முன் போய் கம்பீரமாய் நின்று.... " ஐம் தயாதிரன் பீஏபீஎல்... " என்க.... ஏன் தாமதமென நீதிபதி வினவ...
தயா : சாரி யுவர் ஆனர்... ஆதாரங்கள எடுக்க போன இடத்துல தாக்குதல் நடந்தது... அதனால தான் தாமதாமிகிடுச்சு... நா என் வழக்க தொடங்கலாமா
நீதிபதி : ஓக்கே... ப்ரொசீட் யுவர் டால்க்...
தயா : தன்க்யு யுவர் ஆனர்... இந்த வழக்கின் படி குற்றவாளிகள் வந்தனக்குரிச்சி என்னும் கிராமத்தை சார்ந்தவர்கள் தானென்பதற்கான ஆதாரங்களும்.... அந்த குற்றவாளிகள் சிறிது நேரத்திற்கு முன்பு இங்கு சாட்சி கூண்டில் சாட்சி கூறிய திரு கந்தர்வநாதன் மற்றும் அவரின் மகன் திரு மன்ஸூர் பரண் ஆவர்... குறுக்கு விசாரணைக்கு அவசியமில்லை.... இது அவர்களின் ஃபோன் கால் டீட்டெய்ல்ஸ்... எங்கு வந்தக்குரிச்சியில் அணை திறந்தால் விவசாயிகள் விவசாயத்திகு திரும்பி விடுவரோ என்ற எண்ணத்தில் ஊர் ஜமீந்தாரின் வீட்டில் தாக்குதல் நடத்த உத்திரவிட்டிருக்கிறார் அந்த அடியாளின் வாக்கு மூலம் என ஒரு கெமராவை தூக்கி வைத்தான்... அதில் அந்த இரண்டு ரௌடிகளும் செய்த குற்றத்தை ஒத்துக் கொண்டிருந்தனர்....
இவ்வளவு நேரம் ஒளிமையமாய் இருந்த அவ்விருவரின் முகமும் கரி பூசியதை போலாகி விட.... தயாவின் பேச்சில் அங்கிருந்த அனைவரும் அசைந்து போக... பத்தே நிமிடத்தில் அனைத்தையும் வெளி வர வைத்து குற்றவாளிகள் வடநாட்வர்களெல்லாம் இல்லை இவ்விருவர் தான் என நிரூபித்தான்...
உத்ரா அவனின் பேச்சு திறனை அசந்து போய் பார்த்து கொண்டிருக்க..... அவன் இடையே அவளை பார்த்து கண்ணடித்ததில் நிலையடைந்து நாணத்தில் உடனே தலை குனிந்து கொண்டாள்....
தயா : தட்ஸ்ஸால் யுவர் ஆனர் என அவன் பின் வர..... அனைத்து குற்றங்களும் நிரூபிக்கப்பட்டு சொத்தை இழந்த விவசாயிகளுக்கு என்பதாயிரம் நஷ்ட ஈடும்.... அவர்களின் சொத்துக்களும் அதே நேரம் மன்ஸூர் கந்தர்வனுக்கும்பதினைந்து ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கப்பட்டது...
மகிழ்ச்சியுடன் உத்ரா அழைத்து கொண்டு ஆதித்தாய் அவர்களை வீட்டை நோக்கி சென்றான் தயாதிரன்.....
நீ... நான்...
எப்பா கடைசியா ஒரு அக்ஷன் சீன் வைக்கலாம்னு நெனச்சேன்... அதான் ஹாஸ்பிட்டல்ல படுக்குரது... வீட்ல இன்னும் எவ்ளோ நேரம் அலௌவ் பன்றாங்களோ அவ்ளோ நேரம் டைப் பன்றேன்... இப்போ டைம் பத்தலன்னா... என்னால முடிக்க முடியாது... நாளைக்கு முடிப்பேன்... பட் நா ட்ரை பன்றேன்.... டாட்டா
DhiraDhi❤
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro