54 நீ... நான்...
அலங்கரிக்கப்பட்டிருந்த வீட்டையே மந்திரித்து விட்டதை போல் சுற்றி கொண்டிருந்தான் ஷியாம்... எதையோ சிந்தித்து கொண்டே உளாத்தி கொண்டிருந்தவனை யாரோ திடீரென இழுக்கவும் தடுமாறியவன் கதைவை பிடித்து கொண்டு நிற்க... பச்சை மற்றும் பின்க் கலந்த பட்டு புடவையில் அவனை முறைத்தவாறு நின்று கொண்டிருந்தாள் அன்கிதா...
ஷியாம் : ஓய் கருவாச்சி... இங்க என்ன டி பன்ற...
அன்கி : நா கேக்க வேண்டிய கேள்விய நீ கேக்குறியா... வைபவத்துல இல்லாம நீ இங்க என்ன டா பன்ற...
ஷியாம் : அங்க தா இருந்தேன்... முடியிர நேரத்துல ஆது அண்ணா வீட்ல எல்லா வேலையும் முடிஞ்சிடுச்சான்னு போய் பாருன்னு அனுப்பி வச்சிட்டான்... இங்க வீடே வித்யாசமா இருக்கு...
அன்கி : அது புரியாம தான் டா நாங்களும் சுத்திகிட்டு இருக்கோம்...
ஷியாம் : ஒருவேளை இப்டி இருக்குமோ...
அன்கி : எப்டி...
ஷியாம் : ஆது அண்ணாக்கு நம்ம லவ் மட்டர் தெரியும்... சோ கல்யாணம் பன்னி வைக்க போறானோ..
தீரா : இருந்தாலும் உனக்கு இந்த கனவுலாம் ஓவரு மகனே...
அன்கி : உனக்கே ஓவரா இல்ல... தியா இருக்கும் போது உனக்கெப்டிடா கல்யாணம் பன்னுவாங்க....
ஷியாம் : அதுவும் கரெக்ட்டு தான்.... அப்போ வேற எதுக்கா இருக்கும்....
அன்கி : ஒருவேளை தியாக்கு நிச்சயம் எதாவது பன்ன போறாங்ளோ...
ஷியாம் : அண்ணன்காரன் என்ட்ட ஒன்னுமே சொல்லலையே...
அன்கி : பின்ன எதுவா இருக்கும்...
ஷியாம் : அது எதுவா வேணா இருந்துட்டு போது விடு...
அன்கி : அது சரி.... ஒருவாரமா என் கண்ல படாம தப்பிச்சு ஓடிக்கிட்டே இருக்க... என்ன அலைய விட்ரியா டா.. என இரண்டு கைகளையும் அவன் கழுத்தில் மாலையாய் போட்டு கொண்டு கேட்க....
ஷியாம் : ஏன் எப்பவுமே பசங்க தான் பொண்ணுங் பின்னாடி அலையனுமா... ஒரு முறை பொண்ணுங்க நீங்க அலஞ்சு பாருகங்ளேன்... என சுற்றி முற்றி பார்த்தவாறே கூற....
அன்கி : ம்ம்ம் அது நீ நா வவ் ஒத்துக்குரதுக்கு முன்னாடியே அலைய விற்றுக்கனும்.. இப்போ இல்ல
ஷியாம் : ம்க்கும்... நா வந்து உன் பின்னாடி அலஞ்சதுனால தான பத்து வர்ஷம் களிச்சு ஒத்துக்குட்ட... இதுல எங்க நா உன்ன அலைய விட்ரது....
அன்கி : ம்ம்ம் உடனே ஒத்துக்குட்டா எங்க கபேசிட்டி என்ன ஆகுரது... உங்களுக்கு டெஸ்ட் வச்சு நீங்க பாசானா தான ஒத்துக்குவோம்... அது வர அலைஞ்சல் தான்....
ஷியாம் : ஹ்ம்... அப்போ எனக்கு டெஸ்ட் வச்சியா....
அன்கி : பின்ன.. வக்காமையா வந்தப்பவே நீ பாசாய்ட்டியே...
ஷியாம் : மாமா எவ்ளோ மார்க்கு...
அன்கி : ம்ம் பத்துக்கு நாழ்ர மார்க்கு... ஜஸ்ட் பாஸ்...
ஷியாம் : ஆஹான்...
அன்கி : ஆன் தான்...
ஷியாம் : ம்ம் யூனிவெர்சிட்டி ரன்க் ஹோல்டர் உன் டெஸ்ட்டுல ஜஸ்ட்டு பாசாய்ர்க்கேன்... என் தெய்வபிதா ஹெச்சோடியே... இந்த கொடுமைய கேளுங்க...
அன்கி : டேய் டேய் ரொம்ப சீன் போடாத... ரன்க் ஹோல்டர்க்கு ஸ்பெல்லிங் தெரியாத நீ யூனிவெர்சிட்டி ரன்க் ஹோல்டரு... தூ...
ஷியாம் : ரொம்ப டமேஜ் பன்றாளே... உன்ன விட மாட்டேன் டி...
அன்கி : நீ புடிச்சா தான டா என்ன விடனும்... நா தான் முன்னாடியே ஓடீட்டேனே... என மாடி படியில் நின்று கத்தி விட்டு ஓடினாள்... ஷியாம் அவளை பார்த்து தலையிலடித்து கொண்டு சிரித்தான்...
திருவிழாவும் ஊரில் தொடங்கியது... வந்தனக்குரிச்சி.. நாச்சியார்புரம்... அயலூர்... மங்கையூர்... மற்றும் தந்திரகுடி என ஐந்தின கிராம மக்களும் திருவிழாவில் மகிழ்வோடு பங்கு கொண்டனர்... அனைவருக்கும் இலவசமாக பண்ணங்கூழ் வழங்கப்பட்டது..
குழந்தைகளுக்கு விளையாட்டு பொம்மை கடைகள்... இராட்டினங்கள்... பெண்களுக்கு அலங்கார பொருட்களில் இருந்து வீட்டிற்கு தேவையான பொருட்கள் இருக்கும் கடை... என அனைத்தும் வரிசை கட்டி நிற்க... அவை அனைத்தையும் பெரிய வீட்டின் பால்கெனியில் நின்று பார்த்து கொண்டிருந்தாள் உத்ரா...
அவளின் மனம் இன்னும் காணாமல் போன செய்ன் மீதே இருக்க... சரியாக அப்போது ஆதித் அவன் புல்லட்டில் வீட்டிற்குள் வருவதை கண்டு கீழே ஓடினாள்.... வெறுமையான பார்வையுடன் வந்த ஆதித் உத்ரா பட்டுபுடவையில் தங்க தேவதையாய் ஓடி வருவதை கண்டு அப்டியே நிற்க... அவன் அருகில் வந்து மூச்சு வாங்க நின்றவள்...
உத்ரா : மாமா.... என் செய்ன பாத்தியா... அத காணும்...
ஆதித் : உனக்கு உரியது உன் கிட்ட இருக்கும்... உனக்கு தேவையில்லாத எதுவும் இங்க இருக்காது... என அர்த்தமே இல்லாமல் கூறிவிட்டு மாடி ஏறி சென்றான்... அவன் கூறுவதே புரியாமல் நின்ற உத்ரா கண்களில் அவளே அறியாமல் ஊற்றெடுத்த கண்ணீருடன் மாடி படியில் ஏறி கொண்டிருந்தவனை பார்த்து கொண்டிருக்க... அவள் பின் யாரோ தொண்டையை செருமம் சத்தம் கேட்டு கண்களை துடைத்து விட்டு திரும்பினாள்..
கல்யாண அலங்காரத்தில் " சொக்க தங்கம் சொக்க தங்கம் ஜ்வெல்லரி... சொக்க வைக்கும் சொக்க வைக்கும் ஜ்வல்லரி " என விளம்பரம் நடிக்க போவதை போல் அத்துனை நகைகள் அனிந்து கொண்டு எளக்காரமாய் நின்று கொண்டிருந்த ரேகாவை ஏதோ பூமிக்கு புதிய கிரகத்திலிருந்து வந்த ஜந்துவை போல் பார்த்தாள் உத்ரா...
ரேகா : என்ன என் அழகுல மயங்கீட்டியோ...
உத்ரா : அழகா.... அது கொஞ்சம் எங்க இருக்குன்னு சொல்லு... என இவள் அலட்சியமாய் கூற...
ரேகா : ம்ச்... பரவாயில்ல... இன்னும் ஒரு மணி நேரத்துக்கு தான் நிம்மதியா இருக்க போற... சோ இருந்துச்சோ... என பல்லை நறநறவென கடித்து கொண்டே கூறினாள்...
உத்ரா : என் நிம்மதிய நீ என்னடி முடிவு பன்றது... என் புருஷன் என் கூட இருக்குர வர நா எப்பவுவே சந்தோஷமா இருப்பேன் டி... என கூறும் போதே சரியாக மாடி படியில் கீழே இறங்கி வந்தான் ஆதித்...
ரேகா : ஹ்ம்... கூட இருக்குர வர தான...
உத்ரா : என் கடைசி மூச்சுள்ளவர அவன் கூட தான் டி இருப்பேன்.... அவனும் என் கூட தான் இருப்பான்.... என அத்துனை தைரியத்துடனும் நம்பிக்கையுடனும் கூறினாள்...
சரியாய் அப்போது ஆதித் அவளை தாண்டி வாயிலுக்கு சென்றான்.... உத்ரா அவன் பின் செல்ல போக... ரேகா குருக்கே கை விட்டு தடுத்தாள்....
ரேகா : ஹேஹே எங்க போற...
உத்ரா : நா எங்கையோ போறேன்... உனக்கென்ன...
ரேகா : ஒன் ஹவர்க்கு அப்ரம் நீ எங்க வேணா போ... அது வர இங்கையே இரு...
உத்ரா : ம்ச்... ஒரு மணி நேரத்துல என்ன நடக்க போகுது...
ரேகா : என் கல்ணாம்....
உத்ரா : வாட்... என முகத்தை அஷ்டகோணலாய் சுருக்கி வைத்து கேட்க...
ரேகா : எஸ் இன்னைக்கு இன்னும் ஒன் ஹவர்ல எனக்கு கல்யாணம்...
உத்ரா : ஃபூ... தொல்லை இருக்காது... போய்ட்டு வா சந்தோஷம்... என இரண்டு கையையும் தலைக்கு மேல் கும்புடு போட்டு கூறினாள்...
ரேகா : ஹ்ம்... என அலட்சியமாய் தலையை திருப்பினாள்...
உத்ரா : ஓக்கே... கொஞ்சம் தள்ள முடியுமா... நா ஏன் புருஷன பாக்க போகனும்...
ரேகா : யு டோன்ட் வர்ரி... இன்னும் டென் மினிட்ஸ்ல அவன் இங்க இருப்பான்... பட் உன்னால பேச முடியாது...
உத்ரா : ம்ச்... நா எப்போ வேணா என் கணவன்ட்ட பேசுவேன்... அத தீர்மானிக்கிரதுக்கு நீ யாரு....
ரேகா : லிற்றலி... யு ஹஸ்பன்ஸ்... பியான்சி....
உத்ரா : வாட்.....
ரேகா : யா... இன்னும் அரை மணி நேரத்துல நா அவன் மனைவியாக போறேன்... நீ தெருவுல நிக்க போற... என்றதும் உத்ரா அவளை நம்பாத பார்வை பார்த்தாள்...
உத்ரா : ம்ம் சரி நம்பீட்டேன்... வழி விடு... இப்போ உன்ன அடிக்கிர மூட்ல நா இல்ல....
ரேகா : ஹ்ம் நம்பு மா... அப்ரம் கஷ்டம்பட போற...
உத்ரா : தோ பாரு... நா ரொம்பவே தீர்மானமா... நம்பிக்கையோட தைரியமா... திமிரா சொல்லுவேன்.. என் புருஷன்.... என்ன தவிற வேற எந்த பொண்ணையும் என்னோட இடத்துல இருக்க அனுமதிக்கவும் மாட்டான்... வேற பொண்ண தப்பாவும் பார்க்க மாட்டான்... என திமிராகவும் அதே நேரம் பெருமையாகவும் கூறினாள்...
ரேகா : ஹா... அவரு தான் நேத்து என்ன கல்யாணம் பன்னிக்கலாம்னு ப்ரொப்போஸ் பன்னாரு.. தோ இந்த செய்னையும் போட்டு விட்டாரு.. என கழுத்தில் கிடந்த பல நகைகளின் இடையே இருந்த ஏதோ ஒரு செய்னை காட்ட...
உத்ரா : சரி சரி நம்பீட்டேன் கெளம்பு.. இத நீயே மாட்டிக்கிட்டு வந்துர்க்கன்னு பாத்த உடனே தெரியிது....
ரேகா : உன் புருஷன் மேல அவ்ளோ நம்பிக்கையா...
உத்ரா : அஃப்கோர்ஸ்... என் மேல நா வச்சிர்க்க நம்பிக்கைய விட பல மடங்கு அதிகமான நம்பிக்கை எனக்கு இருக்கு...
ரேகா : அந்த நம்பிக்கை இன்னும் கொஞ்ச நேரத்துல உடஞ்சிடும்... நானே எதிர்பாக்கல நேத்து எனக்கு ஆதித் ப்ரொப்போஸ் பன்னுவாருன்னு... டைம் ஆகும்னு நெனச்னேன்... பட் ரொம்ப சீக்கிரமாவே என் வழிக்கு வந்துட்டாரு...
உத்ரா : சரி சரி கெளம்பு.. என அங்கிருந்து நகர்ந்தவளுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாகவே பத்து நிமிடம் முன்பு எங்கோ சென்ற ஆதித்... அவன் புல்லட்டை நிறுத்தி விட்டு... உடல் விரைக்க... வெள்ளை வேஷ்டி அனிந்து... சிவப்பு நிற சட்டையின் கைகளை மடித்து விட்டவாறு... அலையலையாய் அசைந்த கேசத்தை அழுந்த கோதி... கண்களில் அபார அமைதியுடன்... கம்பீர நடை போட்டு வந்தான்....
அதை கண்ட உத்ரா அப்படியே நிற்க.... சொந்தகாரர்கள் பலர் அங்கு கூடியிருந்தனர்.... வீட்டிலே மேடையும் அமைக்கப்பட்டிருந்தது.... ரெஜிஸ்ட்டர் ஆஃபீசிலிருந்து ரெஜிஸ்ட்டர் ஒருவரும் வந்திருக்க... வீட்டினர் எவருக்கும் என்ன நடக்க போகிறதென்று ஒன்றுமே தெரியாது... எல்லாம் ஆதித்தின் வேலை என்பதால் அவனே கூறும் போது கேட்டு கொள்ளலாமென எவரும் அவனிடம் கேட்கவில்லை...
ரித்திக் மாத்திரம் அனைவரிடமிருந்து தனித்து விட பட்டு ஏதோ மார்க்கமாய் சுற்றி கொண்டிருந்தான்... அனைவரிடமிருந்தும் அவன் தப்பி ஓடினாலும் தியாவின் பார்வையிலிருந்து ஒரு அடியேனும் அவனால் நகர இயலவில்லை....
சிறிது நேரத்திலே குடும்பத்தினர் அனைவரையும் மேடையினருகில் வர வைத்த ஆதித்... ரெஜிஸ்ட்டரிடம்...
ஆதித் : ரெடியா... என கரராய் கேட்க...
ரெஜிஸ்ட்டர் : ரெடி ஸர்... பொண்ணு மாப்பிள்ளை கையெழுத்து போட்டதும்... சாட்சி கையெழுத்து இரெண்டு பக்கத்துலையிருந்தும் இரெண்டு பேர் போட்டா போதும்... கல்யாணம் முடிஞ்சிடும்..
ஆதித் : ம்ம் என இவன் இவர்கள் புறம் திரும்ப...
பிருந்தா பாட்டி : என்ன தம்பி யாருக்கு கல்யாணம்...
அன்னம் : என் மருமகளுக்கும் மகனுக்கும் தான்... என வர... அனைவரும் உத்ராவை அவர் மருமகளாய் ஏற்று கொண்டார் போல என நினைத்து கொண்டு...
அம்ருதா : ரொம்ப சந்தோஷம்க்கா... உத்ரா வா டா... என அழைக்க.... உத்ராவிற்கு முன்னே... அவளை தள்ளி கொண்டு முன் வந்து நின்றாள் ரேகா.... அனைவரும் அவளை பார்த்து முகத்தை சுலிக்க.... அவளே மேடை ஏறி வந்து ஆதித்தினருகில் நின்று கொண்டாள்....
தியா : டேய் அண்ணா... என்ன நடக்குது இங்க....
ஆதித் : பாத்தா எப்டி தெரியிது தியா குட்டி கல்யாணம் டா...
நாராயனன் தாத்தா : டேய் ஆதித்தா.... விளையாடுரியா... இவளையா கல்யாணம் பன்னிக்கபோற...
ஆதித் : யாரு சைன் போடுறாங்களோ அவங்க தான தாத்தா என் வொய்ஃப்...
தேவராயன் : ஆதித்... பைத்தியம் புடிச்சிருக்கா உனக்கு... உத்ராவ பத்தி யோசிச்சியா நீ.... அவள கல்யாணம் பன்னிட்டு இப்போ வேற ஒரு பொண்ண கல்யாணம் பன்னுரேன்னு நிக்கிற...
ரேகா : அவ தான் இவரு பொண்டாட்டின்னு என்ன ஆதாரம் உங்க கிட்ட இருக்கு மாமா...
தேவராயன் : என்ன மா இப்டி கேக்குற.... அவன் தான மா சொன்னான்.... அவன் போட்ட செய்ன காட்டி...
அன்னம் : இப்போ அந்த செய்ன் அவ கழுத்துல இருக்கான்னு பாருங்க கொழுந்தனாரே....
ரேகா : அவ தான் நேத்தே இந்த உறவுல இஷ்டம் இல்ல நா விட்டுட்டு போறேன்னு சொல்ற விதமா செய்ன அந்த ரூம்லையே கலட்டி வச்சிட்டு போய்ட்டாளே... என காணாமல் போன செய்னை காட்டி கூறினாள்... அனைவரும் அதிர்ந்து போய் நோக்க... உத்ராவின் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தது...
அன்னம் அவளை பார்த்து விஷமமாய் சிரிக்க... உத்ராவின் கண் முன்... தூக்க மருந்தின் வீரியத்தால் அவள் உறங்கியதும்... அங்கு வந்த ரேகா அவள் கழுத்தில் கொக்கி போடாமல் அருந்ததை போல் கிடந்த செய்னை எடுத்தாள்.... எப்படி அருந்திருக்கும் என சிந்தித்தவளுக்கு அதன் கொக்கியில் சிக்கியிருந்த கூந்தல் தெரிய... இதனால் அருந்திருக்கும்... அதுவும் நல்லது தான் என எடுத்து கொண்டு அங்கிருந்து தப்பி வந்தது கற்பனையாய் முன் ஓடியது....
ஆதித் : பத்து வர்ஷத்துக்கு போடுறதுக்கு முன்னாடி அவளுக்கு பக்குவம் கிடையாது.... ஆனா இப்போ நல்லாவே இருக்கு.... அவளுக்கே இஷ்டம் இல்லங்குரப்ப அவள வர்புறுத்தி வாழ வைக்க எனக்கு உடன்பாடில்ல... அதான் நா என் அம்மாவோட ஆசையான என் மாமன் மகள கட்டிக்க போறேன்... எனக்கு இதுல முழு விருப்பம் என அவனின் கடுமையான குரலில் கர்ஜித்தான்.....
ரேகா : போதுமா..... அவரே ஒத்துக்குட்டாரு பாருங்க....
மேகா : ஏ ரேகா... மரியாதையா கீழ இறங்கி வா... புருஷன் பொண்டாட்டி அவங்க உறவ முடிவு பன்றதுல நீ மூக்க நுழைக்காத....
ரேகா : ம்ச்... வாய மூடு நா உன் அக்கா....
மேகா : பெரிய இவ... வரியா இல்லையா நீ...
ரேகா : முடியாது டி.... நீ பன்றத பன்னிக்கோ....
மேகா : உன்னல்லாம் என கோபத்தில் கையை முருக்கி கொண்டு மேடையேற போனவளை அருகில் சிலையாய் நின்ற உத்ரா பிடித்து நிறுத்தினாள்.... மேகா அவளை திரும்பி முறைக்க.... அவள் கண்களில் தெரிந்த ஏதோ ஒரு உணர்வுடன்.... போகாதே என மறுத்தாள்...
அன்கி : விடு உத்ரா அவள....
உத்ரா : .....
தியா : உரு... விடு அவள... இல்லனா நா போய் அவள தரதரன்னு கீழ இழுத்துட்டு வந்துருவேன்...
மேகா : விடு டி...
உத்ரா : யாரும் போக கூடாது... என்றவளின் அழுத்தமான குரலில் அனைவரும் அதிர.... ரேகாவே அவளின் குரலில் இருந்த அழுத்தத்தையும் நம்பிக்கையையும் உணர்ந்து ஆச்சர்யமடைந்தாள்....
எப்படி ஒரு பெண் தன் கணவன் கண் முன்னே வேறு ஒருவளை திருமணம் செய்ய முழு மனதுடன் ஒத்து கொள்ளும் போது அமைதி காக்கிறாள்... என அதிர்ச்சியிலிருக்க.... ஆதித்தின் முகத்தில் எந்த ஒரு உணர்ச்சியும் தெரியவில்லை...
மிரு : மச்சி... என மெதுவாய் அழைக்க...
உத்ரா : போக கூடாதுன்னா போக கூடாது... அவருக்கு இஷ்டமானத அவரு செய்ரத அவரு பெத்த தாயா இருந்தாலும் தடுக்க கூடாது... இது என் மேல சத்தியம்.... புரிஞ்சிதா.... என தலை நிமிர்த்தாமல் கூறியவளை காண அவளின் பெற்றோருக்கு உள்ளம் வலித்தது....
ஆதித்தின் கைகள் இரண்டும் இருக தொடங்கியது... இருந்தும் கட்டுபடுத்தி கொண்டு அவ்விடத்திலே நின்றான்...
ரெஜிஸ்ட்டர் : ஸர்... சைன் போடுறீங்களா...
ரேகா : இது என்ன கேள்வி... குடுங்க... என முன்னே சென்றாள்... முதலில் ஆதித்தின் கையில் பேனா தரப்பட்டது...
அதை ஒரு முறை பிடித்தவன்... திரும்பி உத்ராவை அர்த்தமாய் பார்த்து விட்டு குனிந்து கையொப்பமிட்டான்.... அடுத்து ரேகா தானாகவே பேனாவை எடுத்து ரெஜிஸ்ட்டர் காட்டிய இடத்தில் உத்ராவை ஏளனமாய் பார்த்து புன்னகைத்தவாறு கையொப்பமிட்டாள்...
உத்ரா இடி இறங்கியதை போல் எந்த உணர்ச்சியும் காட்டாது அப்படியே தான் நின்றாள்.... ஆதித் ரித்திக்கையும் தூர்தேஷையும் காண... அவன்கள் தானாகவே மேடையை நோக்கி வந்து உணர்ச்சி துடைத்த முகத்துடன் ஆதித்தின் பக்கத்திலிருந்து அவன் நண்பர்களாய் இரண்டு சாட்சி கையெழுத்தை போட்டனர்....
ரித்திக்கின் அந்த இணம் மாறிய நடவடிக்கைகள் இப்போது அனைவருக்கும் தானாகவே புரிந்தது...
உத்ரா தரையை வெறித்து கொண்டிருந்தாள்... தோழிகள் மற்றும் ஷியாம் விஷ்வாவின் பார்வை மேல் நின்றவர்களை முறைத்தவாறிருந்தது... குடும்பத்தினர் அவர்களை இயலாமையுன் பார்த்து கொண்டிருந்தனர்....
ரெஜிஸ்ட்டர் : பொண்ணு பக்கத்துல இருந்து இன்னும் ஒரு சைன் போடனும் வாங்க.... என அழைக்க அங்கிருந்த எவரின் கால்களும் அசையவில்லை.... ராஜேஷ்ஷும் மருதவேலும் தீட்டிய திட்டத்தின் படியால் அங்கு இருக்கவில்லை.... மேகா ஒருத்தி மட்டும் தான் இருக்கிறாள்.... ஆனால் மேகா தரையோடு தன்னை பசை வைத்து ஒட்டியதை போல் ஓரடியேனும் நகராமல் அங்கேயே தான் நின்றாள்.....
ரெஜிஸ்ட்டர் : யாராவது ஒருத்தராவது போடனும் ஸர்.... என இழுக்க....
ஆதித் கூட்டத்தை பார்க்க.... ரேகா மேகாவை பார்த்தாள்...
ரேகா : ஏ மேகா.... நீ தான என் தங்கச்சி வந்து ஸைன போடு டி...
மேகா : அதெல்லாம் முடியாது... வேணும்ன்னா அந்த சைனையும் நீயே போட்டுக்கோ....
அன்னம் : அக்காவ எதிர்த்து பேசாத வா டி...
மேகா : உன்னையும் எதாவது பேசீடுவேன் மூடிக்கிட்டு இரு... என பல்லை கடித்தாள்... அன்னம் இவள் இப்படியெல்லாம் கோவத்தை காட்டுவாளா என அதிர்ச்சியில் கப்சிப்பென இருந்து விட்டார்...
ரெஜிஸ்ட்டர் : ஸர்.... கையெழுத்து போடலன்னா கல்யாணம் ரெஜிஸ்ட்டராகாது... இதை கேட்ட உத்ரா தன் கண்ளில் வலிந்த கண்ணீரை துடைத்து விட்டு....
உத்ரா : இஃப்யு டோன் மைண்.... நா போடலாமா.... என்ற கேள்வியில் குடும்பத்தினர் அனைவரும் மாரடைப்பு வராத குறைக்கு நின்றனர்... ரித்திக் தூர்தேஷ் இவரும் சட்டென நிமிர்ந்து அவளை பார்த்து விட்டு ஆதித்தை அதிர்ச்சியோடு பார்த்தனர்.... அவன் அவர்களை பார்த்து கண் சிமிட்டினான்....
ஷியாம் : உரு என்ன காரியம் பன்ற நீ....
விஷ்வா : பைத்தியம் புடிசிடுச்சா உனக்கு...
கார்த்திகா : நீயே உன் வாழ்க்கைய அழிச்சிக்க பாக்குரியே...
உத்ரா : இதுல ஒரு தப்பும் இல்ல... எனக்கு எது தோனுதோ அத நா செய்வேன்... நீங்க சொல்லுங்க... நா போடலாமா...
ரெஜிஸ்ட்டர் : கேக்கனுமா மேடம் வாங்க....
மேடையேறிய உத்ரா அவர் கொடுத்த பேனாவை வாங்கினாள்.... அந்த காகிதத்திலிருந்த ஆதித்தின் கையொப்பத்தை கண்டதுமே கண்களை மூடி கொண்டாள்.... எங்கு தன் கையொப்பமிருக்க வேண்டிய இடத்தில் வேறு ஒருத்தியின் பெயர் தன்னவனின் பெயருடன் இருப்பதை கண்டு கண்ணுக்குள் அடங்கியிருக்கும் கண்ணீர் வெளி வந்து விடபோகிறதென பயத்தில் அவள் மூடி கொள்ள... அதை தவறாய் புரிந்து கொண்ட ரெஜிஸ்ட்டர்...
ரெஜிஸ்ட்டர் : மேடம்... கண்ண திறந்து போடுங்க... மாத்தி போற்ற போறீங்க... என வலியுறுத்த.... வேறு வழியின்றி கண்களை திறந்த உத்ரா ஆதித்தை வெறுமையாய் பார்த்தவாறு விரக்தி புன்னகையுடன் குனிந்து ரெஜிஸ்ட்டர் முழு கையையும் வைத்திருந்த இடத்தின் கீழே பேனாவை வைத்தவள் தன்னை அறியாமல் கண்களை மூடி எப்படியோ கையொப்பமிட்டு விட்டு நிமிர்ந்தாள்....
ரெஜிஸ்ட்டர் : முடிஞ்சிடுச்சு ஸர்... என அவர் புன்னகையுடன் கூற...
ரேகா : இந்தாங்க செய்ன்... இத தான் நீங்க போடனும்.... என வர்புறுத்தி உத்ராவின் கழுத்தில் கிடக்கும் ஆதித்தின் செய்னை நீட்டினாள்....
உத்ரா அதை கண்டு விரக்தியாய் புன்னகைத்து விட்டு கீழே இறங்க போக.... அங்கு ஓரமாய் நின்றிருந்த கேமரா மேன் அவளுக்கு சோதனையளிக்கவே வேதனையாய் வந்தார்...
கேமரா மேன் : மம் மம் அங்கையே நில்லுங்க.... ஸ்டில் எடுக்கனும்....
ரேகா : ஆமா உத்ரா... என் கூடவே நில்லு... எனக்காக சாட்சி கையெழுத்துலாம் போற்றுக்க... நீ தான் மா பொண்ணுக்கு தோழி.... என அவளை பிடித்து நிற்க வைக்க....
ஆதித் செய்னை போட முன்னேறினான்... அன்னம் அக்காட்சியை ஆவலாய் பார்த்து கொண்டிருக்க... ரேகா உத்ராவை கொடுமை படுத்திய திருப்தியிலும்... ஆதித் கிடைக்க போகும் ஆணவத்திலும்.... சந்தோஷத்திலும் ஏளனமாய் புன்னகைத்து கொண்டிருக்க.... ஆதித் செய்னை போட.... அடுத்த நொடி கேட்ட இரண்டு புல்லட்டின் சத்தத்திலும்... அண்ணா என்ற புதிய ஒரு ஆண் குரலையும் கேட்டு அவள் மகிழ்வுடன் திரும்ப.... அக்ஷா என்ற அலரல் அவ்விடமெங்கிலும் எதிரொலில்ல.... அதிர்ச்சியில் கண்களை அகல விரித்து நின்றாள் ரேகா....
அவளுடனே அங்கிருந்த அனைத்து ஜீவன்களும் அதிர்ச்சியின் எல்லையில் இருந்தனர்....
நீ... நான்...
ஹாய் இதயங்களே... ரொம்ப நெர்வசா இருக்கா... இல்ல மொக்கைகா தான் இருக்கோ... எனித்திங்.... நாளைக்கு எப்பாடி பட்டாவது கதைய முடிச்சிடுவேன்... சோ பி கால்ம்... வெயிட் அன் ரீட்...
DhiraDhi❤
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro