Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

53 நீ... நான்...

அழுது அழுது ஓய்ந்து போன உத்ரா அமைதியாய் யாரிடமும் கூறாமல் அவள் வீட்டிற்கு சென்று விட்டாள்...

மன்ஸூரும் கந்தர்வனும் புதிய திட்டத்திற்காய் அடித்தளம் போட்டு கொண்டிருக்க... ஆதித்தின் வேலையால் தயாதிரன் தமிழ் நாட்டிற்கு இன்று மதியம் வந்து விட்டானாம் என்ற புரளி கிளம்பியிருந்தது... அன்னமும் ரேகாவும் அங்கு வந்த சிறு நிமிடங்களிளே மருதவேலும் ராஜேஷும் அங்கு ஆஜாராகினர்...

மன்ஸூர் : ப்லன் என்ன ஆச்சு..

அன்னம் : எல்லாம் சொதப்பிக்கிச்சு... ஐஜின்ன உடனே அந்த போலீஸ்காரனுங்க ஓடீட்டானுங்க...

மருதவேல் : அப்போ என்ன தா பன்றது..

ரேகா : நாங்க வேற ஒரு வேலையும் பன்னீர்க்கோம்.... இன்னைக்கு உத்ராவ குழப்பிட்டோம்... அவளுக்கு இருக்க குறைய என் கிட்ட சொல்ற மாரி அத்த சொன்னாங்க... அத அவ கேட்டுட்டு அழுதுட்டே வெளிய ஓடீட்டா... சோ நிச்சயமா அவளே ஆதித்த விட்டு போய்டுவா...

ராஜேஷ் : ஹே செம்ம ஐடியா.... கண்டிப்பா உத்ரா ஆதித்த விட்டு போய்டுவா..

கந்தர்வன் : ஆனா ரொம்ப நாள் நாம காத்திருக்க கூடாது... நாளை மறுநாள் வெள்ளி கிழமை... வைபவம் நடக்க போகுது... இவங்க அணைய திறக்க கூடாது... திறந்தா விவசாயத்துக்கு தண்ணி கெடச்சிடும்... விவசாயிங்க நிலத்த விக்க மாட்டாங்க... எங்க தொழிலுக்கே பெரிய பிரச்சனயாய்டும்....

அன்னம் : அதுக்கு என்ன பன்னனும்...

கந்தர்வன் : இந்த வைபவத்தோட முழு பொருப்புமே ஆதித் கைல தான் இருக்கு... வைபவம் முடிஞ்சு... திருவிழா ஆரம்பமாகி.. சாய்ங்காலம் தான் அணைய திறப்பாங்க... அதனால திருவிழாவுக்கும் அணை திறப்புக்கும் உண்டான இடைவேளைல நாம ஆதித்த எதாவது பன்னனும்...

மருதவேல் : அவன கொல்ரதோ கடத்துரதோ அசாத்தியமான காரியம்... யாரையும் கடத்தி வச்சு அவன மெரட்டவும் முடியாது...

அன்னம் : ஏன் முடியாது...

மருதவேல் : அவன தொடுரதே பெரிய விஷயம்... அவன் பின்னாடி உள்ளவங்கள எப்டி தூக்க முடியும்...

அன்னம் : ம்ம் அப்போ இவன தூக்கீடுவோம்னு அவன் பின்னாடி உள்ளவங்கள மெரட்டுனா...

ராஜேஷ் : நீ தூக்குன இரெண்டாவது நிமிஷம் அவன் உன்ன தூக்கீருவான்னு போய்ட்டே இருப்பாங்க...

ரேகா : சரி ஆதித்த பிசிக்கலா எந்த வழியிலையுமே தாக்க முடியாது... ஆனா மென்ட்டலா பாதிக்க பட வைக்கலாம்ல..

மன்ஸூர் : அதான் உத்ரா விட்டு போறாளே...

ரேகா : அது பத்தாது... இவன் எதாவது பேசியே அவள கூட்டீட்டு வந்துருவான்.... சோ நிறந்தரமாவே அவங்கள பிரிக்கனும்... ஆதித்த காயப்படுத்த இருக்க ஒரே வாய்ப்பு உத்ரா தான்... நம்மளால ஆதித் அவ கூட இருக்கும் போது அவள ஒன்னுமே பன்ன முடியாது... சோ உத்ராவ ஆதித்த விட்டு வர வைக்கிறோம்... அப்ரமா ஆதித் முன்னைடியே அவள கொல்லனும்... இது மட்டும் நடந்துட்டா போதும்... ஆதித் மொத்தமா உடஞ்சு போய்டுவான்... உத்ர விட்டுட்டு டோனாலும் இந்த பத்து வர்ஷம் இருந்த மாரிரே அவ எங்கையோ நிம்மதியா இருக்கான்னு அவன் இருந்துருவான்... நாம அவள கொன்னுட்டா அந்த நிம்மதி அவனுக்கு இருக்காதுல்ல...

அன்னம் : சரி உத்ராவ ஆதித்த விட்டு எப்டி வர வைக்கிறது...

ரேகா : நா அவங்களுக்குள்ள போகனும்...

மன்ஸூர் : என்ன சொல்ல வர...

ரேகா : வெரி சிம்ப்பில்... இந்த மாரியான நேரத்துல உத்ரா தெளிவா இருக்கமாட்டா... அவனோட சந்தோஷத்த மட்டும் தா யோசிப்பா... ஒரு குழந்தை இல்லைன்னா ஊரே அவன தப்பா பேசும்... அவன் சந்தோஷமா இருக்க மாட்டானேன்னு ரொம்ப கஷ்டப்படுவா... அப்போ நாம இன்னும் கொஞ்சம் எண்ணைய ஊத்தனும்....

தீரா : ஆதித் உன் மேல அசிட உத்த போறான்னு மட்டும் எனக்கு நல்லா தெரியும்....

மருதவேல் : அந்த புள்ள நம்ம பேச்ச நம்புமா கண்ணு...

ரேகா : கண்டிப்பா... இந்த நேரத்துல அவ யோசிச்சு முடிவெடுக்க மாட்டாப்பா... அவ மனசு நிலையா இருக்காது... நாம கொளப்பி விடனும்... அப்டியே " ஆதித்த ரேகாக்கே கல்யாணம் பன்னி குடுத்துருந்தா அவன் வாழ்க்கை நல்லா இருந்துருக்கும்னு " அவள நம்ப வைக்கனும்.. அவன் மேல உள்ள அதீத காதல்ல அவ மூளை குளம்பி போய் அவன் சந்தோஷமா இருக்கனும்ங்குரதுக்காகவே ஆதித்த வர்புறத்த ஆரம்பிப்பா...... அப்போ அவ கையாலையே எனக்கு ஆதித்துக்கும் கல்யாணம் நடக்ககும்...

தீரா : ஆதித் கையால உனக்கு கருமாதி தான் நடக்கும்....

அன்னம் : என் மருமகன்னு நிரூபிக்கிர டி ராசாத்தி.... என நெட்டி முறித்தார்....

ரேகா : இன்னைக்கு அந்த ஆதித் அவள கட்டி புடிச்சு கொஞ்சி நா ஆத்திரமாகுரத பாத்து சந்தோஷப்பட்டான்ல... அவ பிரிஞ்சு அதாவது அவள சாகடிக்கும் போது அவன் சரியா என் பிடியில வந்துருக்கனும்... நா அவன் கஷ்டப்படுரத பாத்து சிரிக்கனும்....

மன்ஸூர் : நிச்சயமா... நாளை மறுநாள் ஆதித்த உனக்கு சைன் போட வைக்கிறோம்... அதே நேரம் உத்ராவ அங்கையே கொல்லுறோம்... சரியா...

மற்றவர்கள் : டன்...

பலத்த யோசனையினில் மூழ்கியிருந்த உத்ரா இறுதியில் " அவன் மகிழ்ச்சிக்காய் எதையும் செய்வேன் " என கூறி ஒரு முடிவெடுத்தவளாய் ஆதித் வரும் முன்னே உறங்கி இருந்தாள்....

ஆஷ்ரமத்திற்கு சென்ற தோழிகள் இன்னும் உத்ரா இங்கு வரவில்லையென ஆதித்திற்கு ஃபோன் போட.... அவள் வீட்டிற்கு சென்றிருப்பாளென சமாதானம் கூறி தன் தவிப்பை காட்டாது செய்த வேலையை போட்ட படி போட்டு விட்டு உடனே அவர்களின் வீட்டிற்கு சென்றான்.....

அவளை காணாது இவன் மொத்த வீட்டையும் அலச.... பின் அண்டர் குரௌண்டின் படிகளை நோக்கி கீழே ஓடினான்... அங்கு அவன் எதிர் பார்த்ததை போலவே கன்னாடி ஊஞ்சலில்.... தன்னை சுருக்கி கொண்டு படுத்தவாறு உறங்கி கொண்டிருந்தாள் அவன் மனையாள்....

அவளை அங்கு கண்டவனுக்கு அப்போதே உயிர் வர.... அவளருகில் சென்று அவளை மென்மையாய் தூக்கி தன் மார்பில் சாய்த்து கொண்டு அங்கிருந்த அவர்களின் அறைக்கு தூக்கி சென்று படுக்க வைத்தன்.... அவளின் முகத்தை மறைத்திருந்த கூந்தலை மென்மையாய் விலக்கி விட்டு அவளின் பிறை போன்ற நெற்றியில் பட்டும் படாமல் இதழ் பதித்து நகர.... அவள் கையில் ஏதோ இருப்பதை கண்டு எடுத்தான்... ஒரு புகைப்படமும் அவளின் ரிப்போர்ட்டுகளும் இருந்தது....

அந்த புகைபடத்தை கண்டு அழகாய் புன்முறுவலிட்டவன் தன் ஃபோன்னில் ஒரு ஃபோட்டோ எடுத்து கொண்டு அந்த ரிப்போர்ட்டை புரட்டி பார்க்க... அதை படித்து பார்த்தவன் அதிர்ச்சியுடனும் கண்களில் வலியுடனும் உத்ராவை பார்த்தான்...

அவளின் வாடிய முகமும் கண்ணீர் துளிகள் காயாதிரந்த இமையும் உண்மைக்கு வலுவூட்ட.... அதை அங்கேயே வைத்து விட்டு விருட்டென வெளியேறினான்....

மறுநாளும் விடிந்தது... உத்ரா மனசோர்வின் காரணமாய் நன்கு உறக்கத்திலிருந்தாள்.... விடிந்ததையும் அறியாமல் உறக்கத்திலிருந்தவளை அங்கு காணக்கூட யாரும் இல்லை....

காலை பதினோறு மணி இருக்கும் தருவாயிலில் விடாமல் ஒலித்த காலிங்பெல்லின் சத்தத்தில் கண் விழித்தாள் உத்ரா... தான் அறையில் கிடத்தப்பட்டிருப்பதை கண்டு முதலில் சாதாரணமாய் எழுந்தவள் திடீரென கண்களை விரித்து அந்த ரிப்போர்ட்டை தேடினாள்... அது அருகிலிருக்கவும் ஆதித் இதை பார்த்திருப்பானா என சிந்தித்தவளை மீண்டும் காலிங்பெல் ஓசை கலைக்க.... உடனே அந்த ரிப்போர்ட்டை அலமாரியில் போட்டு அடைத்து விட்டு கதவை திறந்து கொண்டு மாடிக்கு ஓடினாள்.... வீட்டின் வெளியே ஓயாமல் காலிங்பெல்லை அழுத்தி கொண்டு பராக்கு பார்த்து கொண்டிருந்தான் விஷ்வா.... உத்ரா ஓடி சென்று கதவை திறக்க...

விஷ்வா : எங்க அம்மு போன எவ்ளோ நேரமா பெல்லடிச்சிட்டு இருக்கேன் தெரியுமா...

உத்ரா : சாரி அண்ணா... தூங்கீட்டேன் அதான் கேக்கல....

விஷ்வா : ம்ம்ம் சரி வா பெரிய வீட்டுக்கு போகலாம்...

உத்ரா : அது அண்ணா... அவரு எங்க...

விஷ்வா : எவரு... என தெரிந்து கொண்டே நக்கலாய் கேட்க..

உத்ரா : உன் அத்தான் தான்... எங்க...

விஷ்வா : அத்தானும் வீட்ல தா இருக்கான் வா... அவன் தான் உன்ன அழச்சிட்டு வர சொன்னான்...

உத்ரா : ஓ என சுரத்தே இல்லாமல் கூறியவள்... வீட்டை பூட்டி விட்டு விஷ்வாவுடன் பெரிய வீட்டிற்கு சென்றாள்....

அங்கு அனைவரும் அமர்ந்து உரையாடி கொண்டிருக்க ஆதித்தும் அங்கு அமர்ந்து அவன் மடிக்கணினியில் ஏதோ வேலை செய்து கொண்டிருந்தான்...

உத்ரா வந்ததும்... அனைவரும் ஏன் அங்கு சென்றாய் என வினவியதற்கு ஏதோ கூறி சமாளித்து வைத்தாள்.. அவள் வந்து அரை மணி நேரம் கடந்தும் அவன் அவளை ஏரெடெத்தும் பார்க்கவில்லை.... மதியம் உணவு பரிமாறும் போதும் அவன் இவளை பார்க்கவில்லை... இவள் ஏதேனும் பேச்சு கொடுக்க சென்றாலும் மற்றவர்கள் அந்த வாய்ப்பையே அவளுக்கு கொடுக்கவில்லை.... அவன் பாட்டிற்கு வழக்கு விஷயமாக மடிக்கணினியிலே தான் இருந்தான்.... அவன் பல வேலையை பார்த்து கொண்டே தன்னை அதே நேரத்தில் கவனித்து கொள்வான் என உத்ரா நன்கறிவாள்... ஆனால் இப்போது அவன் எதையும் கண்டுகொள்ளாமல் இருப்பது ஏதோ செய்ய.... குழப்பத்திலே அவன் இரவு உணவை மறுத்ததை கேட்டதும்.... எதை பற்றியும் சிந்திக்காமல் உணவை தட்டையில் எடுத்து கொண்டு அவன் அருகில் சென்று அமர்ந்தாள்....

அவள் அமர்ந்த இரு வினாடிகளின் பின் ஆதித் தானாய் வாயை திறந்தான்.... அவள் அமைதியாய் ஊட்டி விட.... முழுதையும் உண்ட பின்.... அவ்விடத்தை விட்டு எழுந்தவளை கரம் பிடித்து நிறுத்தியவன்... மடிக்கணினியிலிருந்து பார்வையை அகற்றாமல்.... அவன் பக்கவாட்டிலிருந்த தட்டை எடுத்து வேலையை காதால் கேட்டு கொண்டும்... கண்ணால் பார்த்து கொண்டும் அவளை அமர வைத்து ஊட்டி விட்டான்....

கணவன் மனைவி இருவரும் அது ஹாலென்று கண்டு கொள்ளவே இல்லை.... அவள் உண்டு முடித்ததும் கையை கழுவி விட்டு வந்து அதே போல் அமர்ந்து கொண்டான்.... இப்போது கூட அவன் இவளை பார்க்கவில்லை... அவனின் பாராமுகம் இவளை ஏதோ செய்ய... ஆதித் மடிக்கணினியை மூடும் நேரம் அதை தாங்க இயலாமல் அவன் அறைக்கு சென்றாள்.....

அவன் அறைக்கு சென்றவள் தன்னையும் அறியாது மடை திறந்த வெள்ளம் போல் அழுது கரைய.... கதவு திறக்குக் சத்தம் கேட்டு மாமா என ஆவலாய் திரும்பியவள் அங்கு ரேகாவை கண்டு ஏமாற்றமடைந்தாள்... உடனே உத்ரா திரும்பி கொள்ள.... வேண்டுமென்றே வான்ட்டடாய் வந்தாள் ரேகா...

ரேகா : என்ன டி உன் மாமன் வருவான்னு நெனச்சியோ... அவன் இனிமே வர போறதில்ல... அவன் வந்தும் என்ன பிரயோஜனம்... நீ தான் அவன முழுசா ஏமாத்தீட்டியே...

உத்ரா : வாய மூடு... நா எதுவும் ஏமாத்தல...

ரேகா : புழுகாத... நீ கொறஉள்ளவன்னு தெரிஞ்சும் சொல்லாம மறைச்சிட்டல்ல... எல்லாம் அவன் பணத்துக்காக தான...

உத்ரா : என் கண்ணு முன்னாடி நிக்காத வர்ர ஆத்திரத்தக்கு வெட்டி வீசீடுவேன்...

ரேகா : என்ன டி உன் இரகசியத்த கண்டுப்புடிச்சிட்டோம்ங்குர ஆவேசத்துல பேசுரியா...

உத்ரா : ஜஸேட் ஷட்டப்... எனக்கே இந்த விஷயம் இனனைக்கு தா தெரியும்...

ரேகா : உன்ன நா நம்புவேன்னு நினைக்கிரிய...

உத்ரா : நீ நம்பனும்னு நா நிச்சயமா என்னைக்குமே எதிர்பார்க்க மாட்டேன்...

ரேகா : மொத்தமா அவன் வாழ்க்கைய கெடுத்துட்டல்ல.... எனக்கே அவன கட்டி கொடுத்துருந்தா அவன் வாழ்க்க நல்லா இருந்துருக்கும்... நீ தான் குருக்க வந்துட்ட... என்ற அடுத்த நொடி உத்ர அவளை அறைந்திருந்தாள்...

உத்ரா : அவன் இவன்னா கொன்னுடுவேன்... அடுத்தவ புருஷனுக்கு ஆசை படாத டி... அதுலையும் என் புருஷன தப்பா பாத்த.... கொன்னுடுவேன்... என எச்சிரித்து விட்டு அவள் வேகமாய் வெளியேற போக..

ரேகா : என்னையே அறஞ்சிட்டல்ல.... நீ இப்போ புருஷன்னு ஒருத்தன.... என கூறும்போதே உத்ரா அவளை குரோதமாய் முறைப்பதை கண்டு மாற்றி கொண்டாள்... ஒருத்தர சொல்றியே... அவருக்கு இந்த விஷயம் தெரிஞ்சா நிச்சயமா உன்ன விட்டு மோய்டுவாரு.... நா போக வச்சு காற்றேன் டி.... அதே இடத்துல நா வருவேன் பாரு....

உத்ரா : அது புருஷன் பொண்டாட்டியான எங்க பிரச்சனை டி.... அது மட்டும் இல்லாம உயிரே போனாலும் என் புருஷன் என் இடத்துல வேற ஒருத்திய கனவுலையும் நினைக்க மாட்டான்... வீணா பேசி பேசி என் கிட்ட வாங்கி கட்டிக்காத.... ஸ்டே அவே ஃப்ரம் மி.... என மாஸ் காட்டி விட்டு அங்கிருந்து வெளியேறியவள் கார்டனில் சென்றமர... அவளின் கண்கள் தானாகவே கண்ணீரை பொழிந்து கொண்டிருந்த நேரம்... ஏதோ நிழலாடுவதை கண்டு நிமிர்ந்து பார்த்தாள்....

வெறுமையான பார்வையுடன் நின்ற ஆதித்தை கண்டதும் ஓடி சென்று அவனை கட்டி கொண்டு அழுது தீர்த்தாள்... அவன் அவளை எதுவும் கூறாமலே அங்கிருந்து அவர்களின் வீட்டிற்கு அழைத்து சென்றான்....

அவள் இன்னும் அழுதவாறிருக்க... அவள் அழுகை குறைந்ததும் பாலை அருந்த வைத்து அவளை படுக்க வைத்து விட்டு நிமிர்ந்தவன்... அங்கிருந்து அமைதியாய் நகர.... உத்ரா குழப்பத்துடன் மாமா என அழைக்க.... அவளை திரும்பி பார்க்காமல் " என் கிட்ட இவ்ளோ பெரிய விஷயத்த மறைச்சு தப்பு பன்னிட்ட... " என கூறியவன் அங்கிருந்து வெளியேறினான்....

இதை கேட்ட உத்ரா என்ன செய்வதென தெரியாமேல் இருந்த நேரமே ஆதித் அவள் குடித்த பாலில் கலந்த தூக்க மாத்திரையின் வீரியத்தால் நித்ரா தேவியின் பிடியில் ஆழ்ந்தாள்...

மறுநாளும் வேகமாய் விடிந்தது... ஊரின் மையத்தில் வைபவத்திற்கான ஏற்பாடுகாள் நடந்து கொண்டிருந்தது... ஆதித் விடியற்காலையிலே அதை பாக்க கிளம்பி சென்று விட்டான்.... எட்டு மணி போல் தானாக எழுந்தமர்ந்த உத்ரா எதற்சையாய் கழுத்தை தேய்த்தவள் ஏதோ உணர்ந்தவளாய் அதிர்ச்சியுடன் கன்னாடி முன் ஓடி சென்று நின்றாள்... அவள் கழுத்தில் என்றுமே இரு சங்கிலி கிடக்கும்... ஒன்று ஆதித் அனிவித்த டாலருடன் கூடிய செய்ன்... மற்றொன்று சாதாரண தங்க சங்கிலி....

இப்போது ஆதித் அனிவித்த செய்னை காணாது அதிர்ந்தவள் மொத்த அறையையும் தேடி அலசினாள்... அவள் கூந்தலையும் அலசி பார்த்தாள்... எங்குமே அந்த செய்ன் இல்லை... உத்ராவின் கண்கள் கணீரில் நிறைய தொடங்கியது... உடனே லன்லைன் வழியே ஆதித்திற்கு ஃபோன் செய்தாள்.... ஆனால் அவன் எடுக்கவில்லை.... அங்கு ஊரின் அனைத்து ஆண்களும் அந்த வைபவத்தில் இருந்தனர்.... ஆதித்தும் ரித்திக் தூர்தேஷுடன் அங்கு நின்றிருந்தான்....

அழுது கொண்டிருந்த உத்ரா " நாமே கிளம்பி செல்வோம் " என முடிவெடுத்து அலமாரியை திறந்தாள்... அதில் அவள் கண்களுக்கு நேராகவே சிகப்பு நிற பட்டில் ... அழகான தங்க நிற பாடரிட்டு... வெள்ளை கற்கல் பதித்து ஜொளித்து கொண்டிருந்த புடவையை கண்டவள் அதை எடுத்து கொண்டு குளியலறைக்குள் சென்றாள்....

அடுத்த அரை மணி நேரத்தில் தேவதையென வெளியே வந்த உத்ரா தலையை உளர்த்திவிட்டு திரும்ப... அலமாரியிலே அவளுக்கேற்ற அனைத்து வகையான நகையுமிருக்க... அவளுக்கு ஏற்றார் போல் சிகப்பு கல் பதித்த ஒரு பெண்டென்ட் செய்னை போட்டு கொண்ட உத்ரா இரண்டு வளையல்களை போட்டு கொண்டு ஏற்றார் போல் காதணியும் அனிந்து கொண்டு... ஒரு முறை தன்னை சரி பார்த்தாள்...

அனைத்தும் பக்காவாய் இருந்தாலும் ஏதோ சரியில்லை என்பதாய் அவள் அப்படியே நிற்க.. அந்த கன்னாடியில்.. அவள் பின்னே தன் வசீகரிக்கும் புன்னகையுடன் நெருங்கிய ஆதித் அவளை பின்னிருந்தே அணைத்து.... ஸ்மைல் என இதழை விரித்து காட்ட.... அவளின் இதழ்கள் அனிச்சையாகவே விரிய.... இருவரின் கண்காளும் கன்னாடியில் சங்கமிக்க... ஆதித் அவனின் மீசையால் அவள் தோளில் குருகுருப்பூட்ட... அதில் இமைகளை மூடி நெழிந்த உத்ரா கண்களை திறக்கவும் கன்னாடி முன் அவள் மட்டுமே நின்றிருந்தாள்....

பிரம்மை என நொந்து கொண்டு அங்கிருந்து வெளியே வந்தாள்... கீழே யாருமில்லாமல் வீடே வெருச்சோடி கிடக்க... டீ போட்டு குடித்து விட்டு பெரிய வீட்டிற்கு கிளம்பினாள்... தன் செய்னை காணாமல் குழப்பி கொண்டே வெளியே வந்த உத்ரா ராசையா அமர்ந்திருப்பதை கண்டு அவரருகில் சென்றாள்...

உத்ரா : ராசப்பா...

ராசையா : வந்துட்டியா கண்ணு... உனக்காக தான் காத்துட்டு இருந்தேன்... வா போவோம்...

உத்ரா : ஏன் ராசப்பா இங்க உக்காந்துருகீங்க... உள்ள வந்துர்க்கலாம்ல... எங்க போறோம்....

ராசையா : பரவால்ல கண்ணு... இப்போ தா வந்தேன்... தம்பி தான் மாா உன்ன பெரிய வீட்டிக்கு கூட்டியார சொல்லுச்சு...

உத்ரா : என் அவரு வரமாட்டாரோ...

ராசையா : புரியல மா...

உத்ரா : ம்ம் ஒன்னும் இல்ல ராசப்பா... அவரு வந்ததும் நா கெளம்பி வரேன்... நீங்க வீட்டுக்கு போய்ட்டு வாங்க...

ராசையா : தம்பிக்கு வேலை அதிகமா இருக்கு கண்ணு... மதியம் தான் வரும்... அதான் என்ன அனுப்ச்சுச்சு உன் பாதுகாப்புக்கு...

உத்ரா : ம்ம்ம் எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு ராசப்பா... நீங்க கெளம்புங்க... நா ஒரு பன்னெண்டு மணி போல வரேன்... என அவனை நேரில் பார்த்தே ஆக வேண்டுமென்ற போசனையுடன் கூற...

ராசையா : நா இங்கையே வேணாலும் இருக்கேன் கண்ணு... நீ வேலைய முடிச்சிட்டு வா...

உத்ரா : நா தனியா வந்துக்குவேன் ராசப்பா... நீங்க இப்டி இங்க வெயில்ல உக்காராதீங்க..

ராசையா : கண்ணு... நா உன்ன தனியா வர விட்டேன்னு தெரிஞ்சா தம்பி சும்மா இருக்காது மா... அதனால என்ன வேலையா இருந்தலும் நீ முடிச்சிட்டு வா... நா காத்திருந்து அழச்சிட்டு போறேன்... என பொருமையாய் கூற....

" ஆமா வாணத்துக்கும் பூமிக்கும் குதிப்பான்... " என ஆதித்தை பொரிந்தவாறு ராசப்பாவை காத்திருக்க வைக்க வேண்டாமென....

உத்ரா : வாங்க ராசப்பா போலாம்... என முன் நடந்தாள்...

ராசப்பா : விளையாட்டு புள்ள.... என அவள் பின் தொடர்ந்து அவளை அழைக்க வந்த காரின் முன் ஏறினார்....

தியா குழப்பமாகவே வீட்டை அளந்து கொண்டிருந்தாள்.... முழு வீடும் ஏதோ திருமண வீடு போல் அலங்கரிக்கப்பட்டிருந்தது...

மேகா : ஏன்டி இப்டி வீட்ட உன் பாவாடையால கூட்டிக்கிட்டு இருக்க...

தியா : எனக்கு ஒரே குழப்பமா இருக்கு டி... எதுக்கு இப்டி மொத்த வீட்டயும் அலங்கரிச்சுருக்காங்க...

மேகா : அதான் டி எனக்குமே தெரியல... ஊருல நடக்க போற திருவிழாக்கு நம்ம வீட்ட ஏன் அலங்கரிக்கனும்...

தியா : அதான...

மேகா : அதுல இந்த ரேகா வேற மைதா மாவ முகத்துல அப்பி வச்ச மாரி மேக்கப் போட்டுட்டு கல்யாண அலங்காரத்துல சுத்தி கிட்டு இருக்கா டி... இன்னுமே ரூம விட்டு வெளிய வரல...

தியா : எவன் கூடையாவது ஓட போறாளோ...

மேகா : ஓடீட்டா நமக்கு நிம்மதி... ஆனா அந்த எரும நம்ம பீப்பி லெவல தான டி ஓட விடுவா...

தியா : எனக்கென்னமோ இன்னைக்கு அந்த பீப்பி வேற லெவல்ல இருக்கும்னு நெனக்கிறேன் டி மச்சி...

அன்கி : எது டி வேற லெவல்ல இருக்கும்... என கேட்டு கொண்டே மிருவுடன் உள்ளே வந்தாள் ...

தியா : சும்மா பேசிக்கிட்டு இருந்தோம் டி...

மிரு : ம்ம்ம் ஏன் டி விடெல்லாம் அலங்கரிச்சு வச்சீர்க்கீங்க...

மேகா : அதான் டி எங்களுக்கே இன்னும் தெரியல...

அன்கி : என் மாமியார புடிச்சு வச்சுகேக்க வேண்டியது தான...

தியா : ம்க்கும்... உன் மாமியார் தான் ஏதோ தலைல சைரன் கட்டி விட்ட மாரி வீடு பூரா அத செய்ங்க இத செய்ங்கன்னு சொல்லி  சுத்திக்கிட்டு இருக்காங்க...

மிரு : சரி எப்டியும் தெரிய தானே போகுது.. அப்ரமென்ன விடுங்க...

அன்கி : உத்ரா எங்க டி....

தியா : இன்னும் வரல டி...

உத்ரா : வன்ட்டேன் டி... என கூறி கொண்டே உள்ளே வந்தாள்...

மேகா : வாவ் ப்யூட்டிஃபுல்... இன்னைக்கு செம்ம கார்ஜியசா இருக்க டி.... என உடனே நெட்டி முறித்தாள்....

மிரு : எங்க அண்ணன் ஃப்லட்டு தான் போ...

உத்ரா : லூசுங்களா... போங்க டி... அவள் சினுங்குவதை கண்டு இவள்கள் சிரிக்க... உத்ராவும் இணைந்து கொண்டாள்.. தியா உத்ராவின் முகத்தில் அந்த மகிழ்ச்சி இரேகை இல்லாததை சந்தேகமாய் பார்க்க.... தியாவின் பார்வை தன்னை அளவிடுவதை கண்ட உத்ரா அங்கிருந்து நழுவி ஓடினாள்....

நீ... நான்...

எல்லாரும் உடனே முடிவெடுத்துராதீங்கோ... டிஃப்ரென்ட்டா யோசிச்சு வச்சிற்கேன்... நேத்தே கதை முடிஞ்சிருக்கும் இதயங்களே... நா நேத்து யூடி போட்டுட்டு தா யோசிச்சேன்... ஏன்னா நம்ம கிட்டத்தட்ட எண்ட நெருங்கீட்டோம்... பட் இனிமே ஃபோன் ரொம்ப யூஸ் பன்ன கூடாதுன்னு வீட்ல சொல்றாங்க.... சோ என்ன நடக்கும்னு தெரியல.... இன்னைக்கு வேற யூடி குடுக்க முடியாது... பட் நிச்சயமா நாளைக்கு குடுக்குறேன்... டாட்டா....

DhiraDhi❤

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro