51 நீ... நான்...
மூன்றாம் மாடியில் சத்தம் கேட்டு மாடி படியை நோக்கி ஓடினாள் உத்ரா... அவள் ஆதன் என கத்தி கொண்டே ஓட... மாடி படியில் காலை வைக்கும் முன்னே அவசரத்தில் கீழே நொருங்கியிருந்த கன்னாடி துகளில் அவள் கால் பதிய.... அவளின் குரல் கேட்டு உடனே கீழே ஓடி வந்தான் ஆதித்.... சரியாய் அவள் ஆதன் என வீரிட்டு கத்த.... படி என்றும் பாராது தடதடவென இறகியவன் உத்ரா கன்னாடி துகள் நிறைந்த இடத்தில் கீழே விழும் முன் சரியாய் தாங்கி பிடித்தான்....
ஆதித் : அக்ஷா... இங்க எதுக்கு டி நீ வந்த.... என இவன் கோவத்துடன் கலந்த தவிப்பு நிறைந்த குரலில் கேட்க...
உத்ரா : ஆ... என வலியில் இருக்கி மூடியிருந்த கண்களை திறந்தவள் தலையில் இரத்தம் சொட்ட நின்றவனை கண்டு அதிர்ந்தாள்.... ஆதன்...
ஆதித் : நான் தான் ஏன் கத்துர... ஏன் இங்க வந்த.... காலுல இரத்தம் வருது.... வா என் கூட என அவளை கையில் தூகி கொண்டு மாடி ஏறினான்....
உத்ரா : மாமா என்ன கீழ இறக்கி விடு...
ஆதித் : ஆ... சும்மா இரு அக்ஷா.... என இரண்டாம் மாடிக்கு வந்தவன் அங்கிருந்த அவர்களின் அறைக்கு சென்று அவளை மெத்தையில் படுக்க வைத்தான்....
மெத்தையில் கால் பட்டதும் உத்ரா அலர.... பதறி போனவன் அவள் காலை ஒரு கையால் பிடித்து கொண்டு... அவன் ஆடையில் கை குட்டையை தேடினான்... எங்கும் காணாமல் போக... ம்ச் கோவத்தில் அவன் சட்டையை கிழித்து அவள் காலில் கட்டு போட்டான்.... அவள் பல்லை கடித்து வலியை பொருத்து கொண்டு அங்கிருந்து நகர போனவனை பிடித்திழுத்தாள்...
உத்ரா : ஆதன்.... என அவள் காட்டமாய் கத்த.... எங்கு கோவத்தை அவளிடம் காட்டி விடுவோமோ என பயந்து வெளிளே ஓட போனவனை அவள் இழுக்கவும் அவளின் காட்டமான குரலில் அடங்கி அவள் அருகிலே அமர்ந்தான்.... எழுந்தமர்ந்த உத்ரா அருகிலிருந்த ட்ராவை திறந்து முதலுதவி பெட்டியை எடுத்தாள்...
அவன் அமைதியாய் அமர்ந்திருக்க... ஸ்பான்ஜ் எடுத்து மெல்ல அவன் தலையின் கசிந்திருந்த இரத்தத்தை சுத்தம் செய்தவள்... தலையை சுற்றி இரத்தம் நிற்பதை போல் கட்டு போட்டாள்.... அவனின் கைகளிளும் இரத்தம் வலிவதை அர்ச்சித்தவாறே சுற்றி கட்டு போட்டாள்.... ஆனால் அவள் கண்கள் மாத்திரம் கண்ணீரை மழை போல் பொழிந்து கொண்டிருந்தது...
அவள் கண்ணீரில் மனம் வலிக்க... அவளிடம் திரும்பியவன் அவள் தலையை கோத.... முதலில் தலை குனிந்திருந்தவள் பின் அவனை அணைத்து கொண்டு அவன் மார்பில் முகம் புதைத்தாள்.... அவளின் கண்ணீர் அவன் சட்டைடை நனைக்க.... ஆதித்தின் மனமும் இளகியது.... அவள் முன் எக்காரணத்தை கொண்டும் தன் கோவம் வெளிபடக்கூடாதென உறுதி மொழி எடுத்திருப்பதை போல் அவளை உடனே கட்டி கொண்டு கோவத்தையும் வெற்றிகரமாய் அடக்கினான்....
ஆதித் : ஐம் சாரி.... ரொம்ப வலிக்கிதா.... என மெதுவாய் கேட்க....
உத்ரா : ம்ஹூம்... என அவனை விட்டு பிரியாமலே தலையை மட்டும் மறுப்பாய் அசைத்தாள்....
ஆதித் : எதுக்கு இங்க வந்த...
உத்ரா : இது என் வீடு.... சோ நா இங்க தா வருவேன்...
ஆதித் : நானே வந்து கூட்டீட்டு போறேன்னு சொல்லிட்டு தான போனேன்.... நீ ஏன் டா வந்த.. பாரு இப்போ எவ்ளோ பெரிய காயம்ன்னு...
உத்ரா : ம்ம்ம் இந்த காயம் பரவாயில்ல... நா வராம இருந்துர்ந்தா... தலைல பட்ட இந்த காத்தோட நிக்காம... இன்னும் எதையெதையோ உடச்சு நா வர்ரதுக்கு முன்னாடியே ஹாஸ்பிட்டல்ல போய் சேந்துர்ப்ப... என கண்ணீருடனே கூற...
ஆதித் : ஹே... இப்போ உனக்கு பட்ட காம் பெருசா... இல்ல எனக்கு பட்ட காயம் பெருசா...
உத்ரா : உன் காயம் தான்....
ஆதித் : எனக்கு உன் காயம் தான் டி பெருசா தெரியிது....
உத்ரா : அதுக்குன்னு நீ இப்டி மண்டைய உடச்சிட்டு நிக்கும் போ நா அங்க இருக்கனுமா.... என அவன் சட்டையை பிடித்து கொண்டு கோவமாய் கேட்க...
ஆதித் : ம்ச்... கோவத்துல....
உத்ரா : இதோ பார்... கோவம் வந்தா.. அதுக்கு காரணம் யாரோ அவங்கள அடி... எத வேணா தூக்கி கீழ போட்டு உட... ஆனா அதுல உனக்கு ஒரு கீரல் விழ கூடாது... உன் கோவத்த பெரியவங்கட்ட காமிக்காதன்னு நா தான சொன்னேன்... இப்போ நானே சொல்றேன்.... அது பெரிய்வங்களா இருந்தாலும்... அவங்க தப்பு பன்னியிருந்தா... உனக்கு 100 சதவீதம் அவங்க தப்பு பன்னாங்கன்னூ தெரிஞ்சிருந்தா தூக்கி போட்டு விளாசு... நம்மள சுத்தி உள்ளவங்கள இனிமேலும் பொருமையா சமாளிச்சு நாமளே நம்மள வருத்திக்க கூடாது.... வருத்திக்கிட்டா என்ன பிரயோஜனம்.... நீ உன்னையே இத்தன வர்ஷமா வருத்திக்கிட்டு கோவத்த அடக்கீர்க்க.... இத்தன வர்ஷம் நா உன் கூட இல்ல... இப்போ இருக்கேன்... இனிமேலும் இருப்பேன்... சோ யோசிக்காத.... எவன் எத சொன்னாலும் அது தப்புன்னு தெரிஞ்சா தூக்கி உள்ள போடு... நீ லாயர் தான.... உனக்கு தெரியாத சட்டமா.... கோவத்த அடக்காத... நீ கோவத்த காமிக்க மாட்டங்குரதுனால தான் உன்ன ஏத்தி விடுராங்க... முதல்ல அத யோசி... பெரிய தொழிலதிபரரா இருந்தாலும் சரி... பிரச்சனை வரும் போது குட்டி பையனாய்டாத டா.... என நீண்ட விளக்கத்தை தொடுத்து விட்டு அவனை பார்க்க... அவனோ இவளின் பேச்சில் பிரம்மித்து போய் அமர்ந்திருந்தான்...
ஆதித் : எப்டி டி...
உத்ரா : இனிமே அமைதியா இருந்தா அது அவங்களுக்கு சாதகமா போய்டும் மாமா... அவங்க முன்னாடியே ரியக்ட் பன்னு... கோவத்த அவங்க கிட்டையே காட்டு டா... இப்போ நீ கோவத்த உன்மேல காமிச்சிக்கிட்டது இப்போ உன் கோவத்த குறைக்கலாம்... பட் நாளைக்கு இதுவே ஒரு ப்ராப்லமாகலாம்...
ஆதித் : ம்ச் அக்ஷா... என் கோவத்த பத்தி தெரியாது டி உனக்கு.. நா அவங்க மேல கோவத்த காமிச்சா நானே கொன்னுடுவேன்....
உத்ரா : சரி அப்டி உன் கோவத்த காட்டாத... அவங்க செஞ்ச தப்ப நிரூபிக்கிரதுல உன் கோவத்த காட்டு.... நல்லா கேட்டுக்கோ... உன் கோவம் உன்னோட பலம் டா... அது பல நேரத்துல உன் பலவீனமாவும் இருந்துருக்கு... அத மாத்து.... புரியிதா....
ஆதித் : ம்ம் என மண்டையை பூம்பூம் மாடு போல் ஆட்டினான்...
உத்ரா : ரித்திக் அண்ணாவ வர சொல்றேன்... அவன் கூட போய் ஹாஸ்பிட்டல்ல ட்ரெஸ்ஸிங் பன்னிட்டு என்ன பிரச்சனையோ அதெல்லாத்தையும் பேசி முடிச்சிட்டு வா... என ஃபோனை எடுத்து கொண்டு தட்டு தடுமாறி வெளியேறினாள்.... அவள் அடி பட்ட கால் கீழே படும் முன் தன் கரங்களில் அவளை ஏந்தி கொண்டான் ஆதித்....
அப்புறம் ரித்திக் ஃபோனை எடுத்ததும்...
ரித்திக் : ஹலோ தயா...
உத்ரா : அண்ணா... நா உத்ரா பேசுறேன்..
ரித்திக் : சொல்லு டா அம்மு...
உத்ரா : நீ உடனே வீட்டுக்கு வாண்ணா.. வந்து இவன கூட்டீட்டு போ...
ரித்திக் : ஏன் அம்மு எதாவது ப்ராப்லமா...
உத்ரா : இப்போ எதுவும் இல்ல... நா நகந்ததும் திரும்ப அத நினைச்சு கோவமா வெடிப்பான்.... சோ நீ வந்தா தான் ப்ராப்லமில்லாம இருக்கும்...
ரித்திக் : சரி டா அம்மு... டென் மினிட்ஸ்ல நா அங்க இருப்பேன்.... என ஃபோனை வைத்து விட்டு திரும்ப... அவன் பின் தியா நின்றிருந்தாள்...
தியா : ரிது...
ரித்திக் : முக்கியமான வேலை யது... நா போகனும் வந்து பேசுறேன்...
தியா : என்னையும் கூட்டீட்டுபோ....
ரித்திக் : நீ எதுக்கு...
தியா : நீ ஆது அண்ணன கூட்டீட்டு போய்ட்டா உரு தனியா இருப்பால்ல... சோ... என இழூக்க...
ரித்திக் : சரி வா... என அழைத்து கொண்டு அவன் புல்லட்டை எடுத்தான்...
அங்கு உத்ராவை சோபாவில் அமர வைத்த ஆதித்... தன் இரத்தம் படிந்த டீ ஷர்ட்டை மாற்றி விட்டு வந்து... வீட்டை சுத்தம் செய்தான்....
அவை அனைத்தையும் உத்ரா ஆச்சர்யமாய் பார்த்து கொண்டிருக்க.... ஒரு குட்டி கன்னாடி துகளும் இல்லாது அனைத்தையும் பார்த்து பார்த்து சுத்தம் செய்து பத்தாததற்கு வக்யூம் வைத்தும் அனைத்தையும் பெருக்கி அள்ளினான்....
ஒன்றுக்கு மூன்று முறை ஏதேனும் இருக்கிறதா என ஆராய்ந்து கொண்டவன் உள்ளே சென்று ஒரு காட்டன் செருப்புகளை எடுத்து வந்து உத்ராவின் காலில் மாட்டி விட்டான்.... அதற்கு முன்னே அவள் காயத்திற்கு முதலுதவி செய்திருந்ததால் வலி குறைந்திருந்தது.... அவள் அனைத்தையும் அமைதியாய் பார்த்து கொண்டிருக்க.... அவன் கீழே அமர்ந்து அவள் காலை அவன் மடி மீது வைத்து அமைதியாய் காயம் ஆழமா என ஆராய்ந்து கொண்டிருந்தான்...
உத்ராவிற்கு தெள்ளத்தெளிவாய் தெரிந்தது... இப்போதும் கூட அவன் கோபம் இன்னும் குறையவில்லை என்றும்... தனக்காய் மறைத்து வைத்திருக்கிறான் என புரிந்து கொண்டவள்.... பெருமூச்சை விட... சரியாய் ரித்திக்கின் பைக் வந்து வெளியே நின்றது....
அவர்களிருவரும் உள்ளே வர... ஆதித்தின் தலை கட்டையும் கை கட்டையும் கண்ட இருவரும் பதறி போயினர்....
ரித்திக் : டேய் என்ன டா தலைல அடி.... யாராவது அடிச்சாங்களா.... அட்டக் நடந்துச்சா...சொல்லு டா.... எவன் அடிச்சது.. என இவன் ஆவேசத்தில் அவன் முதுகில் என்றும் மறைந்திருக்கும் பிஸ்ட்டலை வெளியிலெடுத்தான்.... அதை கண்ட உத்ராவும் தியாவும் அதிர.... ஆதித்தோ...
ஆதித் : டேய் டேய் டேய்... ஏன் டா இப்போ ஆவேசப்படுர... சும்மா இரு.... யாரும் அடிக்கல... மொதல்ல பிஸ்ட்டல தூக்கி உள்ள வை... என பிடுங்கி... அவனை சுற்றி விட்டு அவன் முதுகில் சொருகி விட்டு மீண்டும் திருப்பி விட்டான்...
ரித்திக் : ஏன் டா சர்க்கஸ் காற்ற... டேய் என கத்தி கொண்டே த
திரும்பியவன்.... அப்போ எப்டி அடிப்பட்டுச்சு.... யாரும் அடிக்காம...
உத்ரா : அடி படனும்னை வேற யாராவது தான் அடிக்கனும்னு இல்ல அண்ணா... அவங்களே கூட அடிச்சிக்கலாம்... என கூற...
ரித்திக் : அ.... அவனே அடிச்சிருந்தா இந்த வீடு இவ்ளோ அழகா இருக்காதே அம்மு மா...
உத்ரா : போய் மூனாவது மாடிய பாத்துட்டு வந்து பேசு... என கூற... ஆதித் நாக்கை கடித்தான்....
ரித்திக்கும் தியாவும் மூன்றாம் மாடிக்கு ஓட... அங்கோ அனைத்தும் தலை கீழாய் கடந்தது.... தியா காலை எடுத்து வைக்க போக... சட்டென ரித்திக் அவளை பிடித்து இழுத்தான்.. தரை முழுவதும் ஏதோ பூவால் அலங்கரிக்கப்பட்டிருப்பதை போல் கன்னாடியால் அலங்கரிக்கப்பட்டிருந்தது....
தீரா : அதான் பா கொட்டி கிடந்தது...
தியா : அடப்பாவி அண்ணா.... உன் கோவம் இவ்ளோ தூரத்துக்கு வருமா டா...
உத்ரா : இதுக்கே என்ன டி வாய பொளந்துட்ட... உங்க அண்ணனோட கோவம் இன்னும் விதவிதமா ஏறும்...
ரித்திக் : சரி நீங்க இரெண்டு பேரும் இங்யே இருங்க.... தயா வா என் கூட.... என அவனை இழுத்து கொண்டு சென்றான்.....
ரித்திக் அனை புல்லட்டில் அமர வைத்து ஊரில் எல்லையிலிருக்கும் ஆற்றங்கரைக்கு சென்றான்... அங்கு பைக்கை நிறுத்தியதும் விருவிருவென இறங்கிய ஆதித் கோவத்தை காட்ட நேரம் கிடைத்ததாய் ரித்திக் எதிர்பார்த்ததை போல் கை முஷ்டியை முருக்கி அங்கிருந்த மரத்தில் குத்த போக... சரியாய் அவன் கையை பின்னிருந்து பிடித்திழுத்து நிறுத்தினான்....
ரித்திக் : என்ன டா ஆச்சு... ஏன் இவ்ளோ கோவமா இருக்க... போகும் போது நல்லா தான போன....
ஆதித் : ம்ச் ஆத்திரமா வருது டா... அந்த கெழவி அக்ஷாவ பத்தி என் கிட்டையே வந்து தப்பு தப்பா பேசுது... எனக்கு பத்திக்கிட்டு வருது...
ரித்திக் : யாரு சசிக்கலாவா... என்ன சொன்னாங்க...
ஆதித் : அவளுக்கு ஏதோ குறை இருக்காம்... அதனால அவ என் கூட வாழ்ந்தா என் வாழ்க்க கெட்டு போயிருமாம்...
ரித்திக் : சரி ஓக்கே கூல்...
ஆதித் : என்ன ஓக்கே கூல்.?? அவள அப்டி பேசும் போது அதுவும் என் கிட்டையே பேசும் போது எப்டி டா சும்மா இருக்க சொல்ற...
ரித்திக் : தயா... கூல்... தலைல திரும்ப அடி பற்றுக்கு டா... இந்த நேரத்துல உனக்கு ஸ்ற்றோக் வந்தா உத்ரா தாங்க மாட்டா டா... அவ கிட்ட உண்மைய வேற இன்னும் சொல்லல...
ஆதித் : எதுவும் ஆகாது டா... அவ வந்ததும் கோவத்தையும் காட்ட முடியில... நா கோவமா இருக்கேன்னு தெரிஞ்சும் ஏன் அவள அனுப்பி வச்சீங்க... அவ மாடிக்கு வர்ரதுக்கு முன்னாடியே கால்ல கன்னாடி குத்தீருச்சு....
ரித்திக் : எல்லாம் க்லீனா தான டா இருந்துச்சு...
ஆதித் : அது நா க்லீன் பன்னது டா... அவ கால்லையோ கைலையோ எதாவது குத்தீர்ந்தா என்ன ஆகுறது.... அதனால தான் நீ வரேன்னு தெரிஞ்சதால அமைதியா இருந்தேன்...
ரித்திக் : பரவால்ல டா டப்லெட் இல்லாமையே கோவத்த அடக்க ஆரம்ச்சிட்டியே.... நைஸ் இம்ப்ருமென்ட்...
ஆதித் : ரொம்ப முக்கியம்.... அவன வர சொல்லு...
ரித்திக் : ம்ம் உனக்கு இன்னைக்கு சங்குதான் டி மாப்ள... என பேசி கொண்டே தூர்தேஷிற்கு ஃபோன் செய்தான்.... அடுத்த ஐந்தாவது நிமிடம் தூர்தேஷ் அவன் பைக்கில் வந்திறங்கினான்....
வந்தவன் முதல் வேலையாய் ஆதித்தின் தலை காயத்தை ஆராய்ந்தான்.... பெரும் பாதிப்பில்லை என அவன் கூறிய பின்... அவனை போட்டு மொத்தி எடுத்தான்... உத்ராவை அழைத்து வந்து விட்டதற்கு... அதற்கு பின் எப்படியோ தூர்தேஷ் தப்பித்து கொண்டான்....
ஆதித் : லிஸென்... அந்த சசிக்கலா அக்ஷாவ பாக்கவே கூடாது... அது எதாவது " உனக்கு குறை இருக்கு... நோயிருக்கு "ன்னு பேசுனா அவ நம்புனாலும் நம்பீடுவா... அந்த சசிக்கலாவ எதாவது பன்னி வீட்டுக்குள்ளையே அடக்கனும்....
ரித்திக் : ஒரு நிமிஷம் இரு டா.... என தனியாய் சென்றவன்... மீண்டும் இங்கு வர.... அடுத்த ஐந்தே நிமிடத்தீல் ஷியாமும் விஷ்வாவும் அங்கு வந்தனர்.... இருவரும் ஆதித்தின் காயத்தை பற்றி கேட்க.... அதை விவரித்து விட்டு.....
ரித்திக் : டேய் பசங்களா... சசிக்கலா பாட்டிய கொரோனா அஃபெக்ட் ஆய்ருக்குன்னு சந்தேகப்படுரதா... அவங்கள ஹோம் க்வாரன்ட்டைன் பன்னனும்.... உங்களால எதுவும் ஆகாம பாத்துக்க முடியுமா... என னேட்க..
ஷியாம் விஷ்வா : டண் ப்ரோ... அவங்களுக்கு எதுவும் ஆகாம நாங்க பாத்துக்குறோம்...
தூர்தேஷ் : டேய் மச்சான்... செம்ம ஐடியா டா.... என சிரித்து கொண்டே கூறினான்....
ஆதித் : ஏன் டா.... என யோசனையோடே அழைக்க...
ரித்திக் : என்னடா...
ஆதித் : அப்டியே இந்த ரேகா அதோட அத்த... அப்பா அண்ணன் நாழு பேரையும் இப்டி வீட்டுல அடச்சிடுவோமா....
தீரா : நீ அவங்கள சும்மா விட்டா போதும் டா... நம்ம ரீடர்ஸே சைனாக்கு பார்சல் பன்னி விற்றுவாங்க....
ஆதித் : அப்டி இருந்தா கஷ்டப்படுரது பாக்க முடியாதே... அதனால அத கொஞ்சம் வெய்ட்டிங் லிஸ்ட்ல வைப்போம்...
தீரா : யோசிங்க யோசிங்க... நா கடைசி ஆப்ப எக்ஸ்ஸிக்யூட் பன்றேன்...
அனைவரும் : என்ன சொன்ன....
தீரா : ஒன்னும் இல்ல.... சீக்கிரம் வீட்டுக்கு போங்க....
தூர்தேஷ் : டேய் சொல்ல மறந்துட்டேன் டா... நா உத்ராவ அழைக்க அவசர அவசரமா வீட்டுக்கு போகும் போது பெரியஊட்டம்மா ஏதோ நா வருவேன்னு எதிர்பார்த்து காத்திருந்த மாரி வெளிய நின்னு பாத்துச்சு.... நா வந்ததும் உள்ள போய்டுச்சு.... சோ கொஞ்சம் நாம ஜாக்கிரதையா இரக்கனும் டா....
ஆதித் : ம்ம் சரி டா....
ரித்திக் : சரி வாங்க வீட்டுக்கு போவோம்.... டேய் தயா வா டா... அப்டியே உன் தங்கச்சிய கூட்டிட்டு போய் விடனும்...
மற்றவர்கள் கிளம்பி விட... ஆதித் ரித்திக் பன்னை வீட்டை நோக்கி சென்று கொண்டிருந்தனர்....
ஆதித் : டேய் மச்சான்.... என அழுத்தி அழைக்க...
ரித்திக் : என்ன டா...
ஆதித் : ஏன் டா இப்டி இருக்க...
ரித்திக் : எப்டி இருக்கேன்....
ஆதித் : தெரியாத மாரி நடிக்காத.... நம்ம தம்பி தங்கச்சிங்களே மாத்தி மாத்தி புடிச்சிட்டு சுத்துரானுங்க... நீ ஏன் டா நீ புடிச்ச முயலுக்கு மூணு காலுன்னு நிக்கிற....
ரித்திக் : டேய்.... நா யரையும் லவ் பன்னல டா...
ஆதித் : நா என்ன உன் தங்கச்சியா... சொல்றதெல்லாம் நம்புறதுக்கு...
ரித்திக் : ம்க்கும்... அவ நம்புனா நீ பாத்த..
தீரா : கூடிய சீக்கிரத்துல நம்புவா பாரு...
ஆதித் : ம்ச் டாப்பிக்க மாத்தாத... எதுக்கு என் தங்கச்சிய ரிஜெக்ட் பன்ற....
ரித்திக் : அடேய் அவ சின்ன பொண்ணு டா..
ஆதித் : டேய்... உன் தங்கச்சி இரெண்டு பேரு.... என் தங்கங்சிங்க இரெண்டு பேரு.. நாழு பேருக்கும் ஒரே வயசு தான்... சொல்லப்போனா அக்ஷாக்கு அப்ரம் தியா தான டா பொறந்தா...
ரித்திக் : ம்ச்... மச்சான்... நா அவளுக்கு செட்டாக மாட்டேன் டா...
ஆதித் : ஏன் செட்டாக மாட்ட... ஒரு காரணம் சொல்லு....
ரித்திக் : நா ஏன் செட்டாவேன்னு நீ ஒரு காரணம் சொல்லு...
ஆதித் : டேய் மொதல்ல நீ பதில் சொல்லு டா...
ரித்திக் : நீ மொதல்ல சொல்லு...
ஆதித் : வெரி சிம்ப்பில்... இரெண்டு பேரும் ஒருத்தர ஒருத்தர் மறைமுகமாவே உள்ளுக்குள்ள விரும்புறீங்க... என அசால்ட்டாய் கூற... ரித்திக் சட்டென ப்ரேக் போட்டு புல்லட்டை நிறுத்தினான்... கன்னாடி வழியே அவன் பேய் முளியை ஆதித் பார்த்து வாய் விட்டு சிரித்தான்....
ரித்திக் : அடேய்...
ஆதித் : சௌண்டு போடாத டா... நா உன் ஃப்ரெண்டு... உன்ன பத்தி எனக்கு தெரியாதா...
ரித்திக் : அ... அ..அது...
ஆதித் : ஏன் டா தினர்ர.. நா இப்போ உன் ஃப்ரெண்டு தான்... ஏன் டா என் தங்கச்சிய லவ் பன்னன்னு சட்டைய புடிச்சு கேக்க வந்த அவ அண்ணன் இல்ல....
ரித்திக் : ஃபூ.... என மூச்சை இழுத்து விட்டவன் பைக்கை உயிர் பித்தான்...
ஆதித் : சரி சொல்லு ஒத்துக்குரியா இல்லையா...
ரித்திக் : ஓக்கே டா... ஐ அக்ரி... நா யதுவ சின்ன வயசுல இருந்தே காதலிக்கிறேன் தான்....
ஆதித் : அம்ரம் ஏன் டா அவள வாட்டி எடுக்குர...
ரித்திக் : உனக்கு தெரியாததா டா...
ஆதித் : அதெல்லாம் ஒன்னும் ஆகாது டா...
ரித்திக் : தயா....
ஆதித் : இழுக்காத டா... எதுவும் ஆகாது... மரியாதையா சீக்கிரம் என் தங்கச்சி கிட்ட லவ்வ பேசி ஓக்கே பன்னு... அப்ரம் அந்த பெரியஊட்டம்மா இதான் சாக்குன்னு மேகாவ ஷியாம்க்கு கட்டி குடுக்க முயற்சிக்கிர மாரி அந்த டம்மி ராஜேஷ்ஷ தியாக்கு கட்டி வச்சிடபோது.....
ரித்திக் : அடப்பாவி டேய் என உடனே வண்டியை நிறுத்தி விட்டு திரும்பி பார்த்தான்....
ஆதித் : ம்ம் அட்டக் வருதா... நீ உன் லவ்வ ஒத்துக்கலன்னா எப்டியும் அவ வேற ஒருத்தன கட்டிக்கிட்டு தான டா ஆகனும்..
ரித்திக் : டேய் அதுக்கு உனக்கு வேற ஆளே கிடைக்கலையா டா... போயும் போயும் என் யது கூட அந்த எரும பைய ராஜேஷ கம்ப்பர் பன்ற....
ஆதித் : இப்போ வருது பாரு உண்மை.... இதே உணர்வோட போய் என் தங்ககசி கிட்ட ப்ரொப்போஸ் பன்னிடு... என வண்டியை விட்டு இறங்கினான்...
ரித்திக் : அதுக்கு எதுக்கு நீ வண்டிய விட்டு இறங்குர... வீட்டுக்கு போகனும்ல வா...
ஆதித் : வீடு வந்துருச்சு டா... என மாந்தோப்பினை காட்டினான்.... ஈஈஈ என ரித்திக் இழிக்க... உத்ராவுடன் பேசியவாறே தியாவும் வெளியே வந்தாள்...
தியா : ஓக்கே டா அண்ணா குட் நைட்... நா கெளம்புறேன்... டாட்டா...
ஆதித் : வா தியா குட்டி...
ரித்திக் : வரேன் அம்மு.... வரேன் டா டேய்.... என பைக்கை எடுத்து கொண்டு தியா அமர்ந்ததும் மாந்தோப்பினை தாண்டி சென்றான்.... ஆதித் உத்ராவை பார்த்து புன்னகைக்க... அவள் முருக்கி கொண்டு உள்ளே சென்றாள்...
ஆதித் : அடியே அக்ஷா... அக்ஷுமா... பட்டுமா... அடியே பொண்டாட்டி என இவன் கத்தி கொண்டே உள்ளே சென்றான்....
அவள் திரும்பியும் பார்க்காது செல்ல... கதவை மூடிவிட்டு உள்ளே ஓடியவன் அவள் அறை கதவை அடைக்கும் முன்னே உள்ளே நுழைந்து அவள் கைகளை பிடித்திழுத்தான்... அவன் மீதே வந்து மோதியவள் அவனை முறைக்க.... கெஞ்சி கொஞ்சி சமாதானம் செய்த பின்னே இருவரும் ஒருவர் மற்றவரின் அணைப்பில் கண்ணயர்ந்தனர்...
மறுநாள் காலை விடிந்தும் விடியாமல் இருந்த நேரம் நம் நாயகனும் நாயகியும் துயில் கலைந்து எழுந்ததே வெளியே கேட்ட போலீஸ் ஜீப்பின் சத்தத்தில் தான்....
நீ... நான்...
DhiraDhi❤
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro