50 நீ... நான்...
மதியம் வருகிறேன் என கூறி சென்ற ஆதனை இன்னும் காணாமல்... செய்து வைத்த உணவை வெறித்து கொண்டிருந்தாள் உத்ர... திடீரென அவள் பின் வந்து யாரோ அவள் கண்களை மறைக்க...
உத்ரா : ஏன் சாப்ட நாளைக்கு மதியம் வர வேண்டியது தான.... என கோவமாய் கேட்க..... ஈஈஈ என முன் வந்து இழித்தான் ஆதித்...
ஆதித் : சாரி அக்ஷாமா... ஹெவி வொர்க்...
உத்ரா : உக்காரு பேசாம...நா உன் கிட்ட பேசுர மூட்ல இல்ல... என தட்டையை எடுத்துகொண்டே கூற.... அவன் அவள் அருகிலிருந்த கதிரையை இழுத்து போட்டு அமர...
ஆதித் : அச்சோ கோவமாயிருக்கியா பட்டு...
உத்ரா : இல்ல.... ரொம்ப ஹப்பியா இருக்கேன்.... என வெண்டிக்காய் பொரியலை எடுத்து வைத்து கொண்டு கூறினாள்...
ஆதித் : என் செல்லம்ல... என கெஞ்சும் போதே அவன் வாயில் உணவை வைத்தாள்... அதை மென்று விழுங்கியவன்... ஓய் சூப்பர் டி... என கூற....
உத்ரா : போதும் போதும்.... பேசாம ஒழுங்கா சாப்டு... என மறுவாய் ஊட்ட...
ஆதித் : நீ எப்டி அக்ஷாமா சமைக்க கத்துக்குட்ட.... அவ்ளோ சூப்பரா இருக்கு டி... என இரசித்து ருசித்து கூற...
உத்ரா எவ்ளோ ஐசு வச்சாலும் கோவத்த மறக்க மாட்டேன்.... ஒழுங்கா பேசாம சாப்டனும்... அப்போ தான் சாப்ட்ட சாப்பாடு உடம்புல ஒட்டும்...
ஆதித் : அது ஒட்டுனா என்ன ஒட்டுலன்னா எனக்கென்ன...
உத்ரா : இம்யூனிட்டி இருக்காது சாப்டு டா ஒழுங்கா... என அவனை பேசவே விடாமல் அவள் ஊட்ட...
அவன் அப்போதும் உணவு வாங்கும் சைடு கேப்பில் பேசி கொண்டே தான் இருந்தான்.... அதெற்கெல்லாம் இவள் கடிந்து கொண்டு மண்டையில் கொட்டு வைக்க... அவன் உதட்டை பிதுக்குவதை காணும் போதெல்லாம் ஏதோ குழந்தை தன் அம்மாவிடம் பள்ளியில் நடந்த அனைத்தையும் அவர் உணவு ஊட்டும் போது பட்டியல் இடுவதை போல் அவர் " பேசாம சாப்புடு " என கூறியும் விடாமல் பேசி கொண்டே இருப்பதை போல் தான் தெரிந்தது....
அவன் சரியாய் உண்டு முடித்ததும் அவள் எழ போக....
ஆதித் : எங்க போற... உக்காரு... என அமர வைத்தவன்... அருகிலே கை கழுவி விட்டு அவளுக்கு ஒரு தட்டில் உணவை போட்டு ஊட்டி விட்டான்.... முதலில் வாங்க மாட்டேனென அவள் அடம்பிடிக்க... அதற்கு அவன் கெஞ்சி கொஞ்சி ஊட்டவும்... கோவம் போனதாய் சிரித்து கொண்டே வாங்கி கொண்டாள்...
இருவரும் உணவுண்டு முடித்ததும் உத்ரா பாத்திரங்களை எல்லாம் கழுவி அடுக்கி விட்டு வர... ஆதித் அவன் மடிக்கணினியில் ஏதோ தீவிரமாய் தட்டி கொண்டிருந்தான்....
அவள் அவன் அருகில் சென்று அவன் தோள் மீது சாய்ந்தவாறு அதை எட்டி பார்க்க.... அதில் ஒரு புறத்தில் எதோ எழுத்துக்களாய் இருக்க.... அதை இவன் இதழ்கள் வாசித்து கொண்டிருந்தது....
அதற்கு கீழே எதோ இவன் இடது டைப் செய்து கொண்டிருக்க..... அதற்கு அருகில் ஏதோ ஆடியோ ஓடுவதாய் ரெக்கார்டிங் காட்ட.... அவன் காதிலிருந்த ப்லூட்டூத்தில் ஆடியோ கேட்டுகொண்டிருக்க.... வலது கை அருகிலிருந்த பேப்பரில் ஏதோ தான் பாட்டிற்கு கிருக்கி கொண்டிருந்தது...
" என்ன பன்றான் இவன் " என்பதை போல் மலைத்து போய் பார்த்து கொண்டிருக்க.... அந்த பேப்பரில் மைண் மேப் போல் எதையோ வரைந்து வைத்திருந்தான்....
உத்ரா : டேய் மாமா என்ன டா பன்ற...
ஆதித் : வேலை பாத்துக்குட்டு இருக்கேன் டி....
உத்ரா : என்ன வேலை...
ஆதித் : ம்ம் ன்யு டீல் பத்தின டாக்குமென்ட்ஸ கிஷு அனுப்பியிருக்கான்... அத பாத்துக்குட்டே ரிவ்யு ஈமைல் டைப் பன்னிக்கிட்டே... வாய்ஸ் மெயில் கேட்டு கிட்டு இருக்கேன்...
உத்ரா : ஏதோ கிருக்கிக்கிட்டு இருக்கியே அது என்ன...
ஆதித் : ஓ அது வா... அது நெஸ்ட் வீக் மண்டே ஒரு கேஸ் வாய்தாத்கு வருது... அத பத்தின மப் போட்டுக்குட்டு இருக்கேன்.... அப்டியே உனக்கு அன்சர் பன்னிக்கிட்டு இருக்கேன்...
உத்ரா : டேய் பைத்தியமாய்ட போறடா... எத்தன வேலைய ஒரே நேரத்துல பாப்ப....
ஆதித் : அதெல்லாம் ஒன்னும் ஆகாது டி... அஞ்சு வர்ஷமாவே நா இப்டி தான்...
உத்ரா : ஓ மை காட்.... சரி அத மூடி வை....
ஆதித் : சரி.... என உடனே அனைத்தையும் ஷட் டௌன் செய்து மூடி வைத்து விட்டு அவள் புறம் திரும்பி அவளை சுற்றி தன் கையை போட்டுகொண்டான்...
உத்ரா : என்ன மாமா... உடனே க்லோஸ் பன்னீட்ட...
ஆதித் : நீ சொல்லி எத மீறிருக்கேன்...
உத்ரா : ஆஹான்....
ஆதித் : கண்டிப்பா டி.... நீ எது சொன்னாலும் மீற மாட்டேன்...
உத்ரா : ப்ராமிஸ்???..
ஆதித் : உயிரையே குடுன்னு சொன்னாலும் நிச்சயம் குடுப்பேனே தவிற மீற மாட்டேன்.. ப்ராமிஸ் என கூற.... இதுவே அவனுக்கும் இவளுக்குமான காதலை முற்று புள்ளி வைக்க அவன் மனையாளுக்கு உதவுமென அப்போது அவள் அறியவில்லை....
உத்ரா : லூசு பையா.... கல்யாணமாகி இப்போ தான் டா உன் கூட சேந்துர்க்கேன்... இப்போ போய் லூசு மாறி பேசுர...
ஆதித் : உண்மையா டி.... நீ சொன்னா நா மீற மாட்டேன்.... பட் அது நீ சொன்னா மட்டும் தான்....
உத்ரா : சரி சரி வா தாத்தா வீட்டுக்கு போவோம்...
ஆதித் : ஏன் டி திடீர்னு...
உத்ரா : மிஸ்டர் புருஷா என்ன தா இருந்தாலும் நா அந்த வீட்டோட இளைய பரம்பரையின் முதல் மருமகள்... சோ நா என் கடமைய செய்யனும்ல...
ஆதித் : அப்டி என்ன கடமைங்க மிஸ்ஸஸ் பொண்டாட்டி...
உத்ரா : கல்யாணமானதும் புகுந்த வீட்ல சமைக்கனும்ல...
ஆதித் : ரொம்ப பெரிய கடமை தான்...
உத்ரா : இப்போ நீ வரியா இல்ல நா மட்டும் போய் சமைக்கட்டுமா...
ஆதித் : இப்டி புருஷன் இல்லாம சடங்கு தனியா பன்ன கூடாது செல்லக்குட்டி...
உத்ரா : அப்போ வா....
ஆதித் : நா எப்போ டி வரலன்னு சொன்னேன்.... வா... என அவளை அழைத்து சென்றான்.....
மகனும் மருமகளும் ஜோடியாய் வந்து இறங்கும் கண் கொள்ளா காட்சியை அம்ருதா மகிழ்ச்சியாய் காண... இருவரின் ஜோடி பொருத்தத்தை பார்த்து அவர்களே அவர்களை மறந்து இரசிக்க.... உள்ளே ஓடி தியா ஆரத்த தட்டை எடுத்து வந்தாள்....
இருவருக்கும் ஆரத்தி எடுத்து உள்ளே வரவேற்க்க பட.... அம்ருதா உத்ராவை அணைத்து அவள் நெற்றியில் முத்தம் வைத்து..... " நீ என் மகன் வாழ்கைய ஒளிமையமாக்க வந்த தேவதைடா.... ரொம்ப நன்றி மா " எனகூற...
உத்ரா : என்ன அத்த.... பெரிய பெரிய வார்த்தைலாம் சொல்றீங்க....
ஷியாம் : ரொம்ப நன்றிங்குரது சின்ன வார்த்தை தான் அண்ணியாரே....
உத்ரா : அது எனக்கு பெரிய வார்த்தை தான் என் முன்னாள் அத்தானுமான இப்போதைய கொழுந்தனாரே என அதே நேரத்திற்கு பதிலடி கொடுக்க...
ஷியாம் : ப்பா.... வாட் அ ரிப்லை.... உத்ரா மா டோட்டலா ஃபார்ம்க்கு வன்ட்ட நீ....
ஆதித் : வராம இருப்பாளா டா தம்பி....
தியா : நீயும் வன்ட்ட டா அண்ணா...
ஷியாம் : ஹப்பா.. இனி அந்த டெரர் அண்ணன பாக்க தேவையில்ல.... என பெருமூச்சு விட.... ஆதித் அவன் கழுத்தை நெரிப்பதை போல் கையை மடக்கி அணைத்து கொண்டான்...
அம்ருதா : என் புள்ளைங்க எப்பவுமே இப்டி சந்தோஷமா இருக்கனும்...
மேகா : நிச்சயமா இருப்பாங்க அத்த....
ஆதித் : அம்மி அம்மி...
அம்ருதா : என்ன டா...
ஆதித் : தேவ்ப்பா வன்ட்டாரா... என ஹஸ்கி வாய்சில் கேட்க...
தேவராயன் : நா நேத்தே வன்ட்டேன் டா மகனே.... என கடுமையாய் கூறி கொண்டே இறங்கி வர...
ஆதித் : ஆஹா.... அக்ஷாமா... நீ உன் மாமியார் மாமனார் கொழுந்தனார் நாத்தனார் தங்கச்சி தாத்தா பாட்டிக்குளாம் சமைச்சு குடு.... நா அப்டியே தோட்டத்த சுத்தி பாத்துட்டு வந்துர்ரேன்.... என நழுவ போனவனின் காதை பிடித்து திருகி...
தேவராயன் : படவா எங்க டா ஓட பாக்குர...
ஆதித் : ஈஈஈ ஜாக்கிங் போக மறந்துட்டேன் பா... அதான்....
தேவராயன் : பங்குனி வெயில் பல்ல இளிக்கிர மதியானத்துல ஜாக்கிங் போற ஒரே ஆளு நீ தான் மகனே.... இப்போ நீ ஜாகிங் போனன்னு வச்சுக்க.... அப்ரம் என் முன்னாடி ரன்னிங் ஓட வேண்டியது இருக்கும்... என மிரட்ட...
ஆதித் : சரா சரி எங்கயும் போகல...
தேவராயன் : அவசரக்காரா.... பதினாறு வயசுலையே உனக்கு கல்யாணம் கேக்குதா டா...
ஷியாம் : நல்லா கேளுப்பா... எனக்குலாம் அப்போ கழுத்துல செய்ன் போட்டா கல்யாணம்னு கூட தெரியாது...
ஆதித் : மவனே ரொம்ப நடிச்சன்னா.... என் மச்சினிச்சி காதல இங்க அவுத்துவுற்றுவேன்... என அவனுக்கு மட்டும் கேட்பதை போல் கூற....
ஷியாம் : அடப்பாவி அண்ணா... உனக்கு தெரியுமா டா...
ஆதித் : ம்ம் நா உன் அண்ணன் டா தம்பி....
நாராயனன் தாத்தா : என்ன டா அங்க தனியா பேசிக்கிறீங்க....
அண்ணன் தம்பி இருவரும் " ஈஈஈஈ ஒன்னும் இல்லையே " என கோரஸ் பாட...
தேவராயன் : நீ பதில சொல்லு டா.... என மீண்டும் ஆதித்தின் காதை திருக....
ஆதித் : ஈஈஈஈ
தேவராயன் : இளிக்காத பாக்க சசிக்கல... என்ட்டையாவது சொன்னியா....
ஆதித் : அப்பா... நானே என் கல்யாணம் முடிஞ்சு ஒன்ற வர்ஷம் களிச்சு தா உங்கள பாத்தேன்.... இதுல எங்க சொல்றது....
தேவராயன் : ம்ம்ம் விளக்கம் குடுக்குறதுல குறியா இரு.... கல்யாணம் ஆய்டுச்சு... இனிமே வீட்ல ஒருத்தி இருக்காங்குரத மறந்துட்டு வேலை வேலைன்னு அலையக்கூடாது நீ... சரியா..
உத்ரா : நல்லா சொல்லுங்க மாமா... இப்போ கூட ஒரே லப்ல மூணு விதமான வேலைய பாத்துக்குட்டு இருக்கான்... எனக்கு தா தலை சுத்துது...
தேவராயன் : இனிமே என் மக கம்ப்லைன்ட் பன்ன கூடாது டா.. கரெக்ட்டா இருக்கனும்....
ஆதித் : சரிங்க தந்தையாரே....
தேவராயன் : அதோட என் மக கண்ணுல இருந்து உன்னால கண்ணீர் வந்துச்சு....
ஆதித் : அவளால என் கண்ணுல கண்ணீர் வராம இருந்தா சரி... என முனுமுனுக்க.... அவன் இடுப்பிலே உத்ரா கிள்ளி வைத்தாள்.... அவன் அவ்ச் என கத்த.... ஒருங்கே சிரிப்பொலியும் எழுந்தது....
இவர்களை ரேகொவும் அன்னமும் கோவமாய் பார்த்து கொண்டிருக்க.... ஆதித் உத்ராவை அவ்வப்போது பார்க்கும் போது அவன் கண்களில் தெரியும் காதலும்... அவள் பதில் பார்வையில் தெரியும் காதலும் அவர்களையே உலுக்க.... ரேகா உள்ளுக்குள்ளே குமுறி கொண்டிருந்தாள்....
பிருந்தா பாட்டி : போதும் போதும் பேச்சு.... வந்த புள்ளைங்கள இப்டி கதவுக்கிட்டையே வச்சு பேசிக்கிட்டு இருக்கீங்க.... உள்ள வாங்க பசங்களா... என உள்ளே அமர வைக்க.... உத்ராவோ அடம் பிடித்து " நா டீ போடுறேன் " என சமையலறைக்குள் நுழைந்தாள்...
இப்போதும் தவறாமல் அவர்கள் உத்ராவை புகழ்ந்து தள்ள.... ஆதித் அவனின் அந்த A என்ற எழுத்து அச்சிடப்பட்டிருக்கும் கப்பிலே இரசித்து ருசித்து குடித்தான்....
சில மணி நேரத்தில் ரித்திக் அன்கி மிரு விஷ்வாவும் வர.... அன்கி மிரு உத்ரா மூவரும் இருக்கி கட்டி கொண்டனர்.... அவர்கள் இப்படி தனிதனியாய் இருந்ததே இல்லை.... உத்ரா கோமாவில் இருந்த போது கூட அவள் உடனே தா இருந்தாள்கள்.....
பெரியவர்கள் அவரவர் வேலையை பார்க்க சென்று விட.... உத்ரா யோசனையினூடே " அன்னைக்கு நீ நா குடுத்தனுப்புன டீய குடுச்சியா இல்லையா மாமா " என நேராகவே கேட்க....
ஆதித் : நா எப்டி டி குடிக்காம இருப்பேன்.... நா அப்பவே குடிச்சிட்டேன்.... அப்போ நீ சரியா வந்தியா.... ஆல்ரெடி இருந்த டென்ஷென்ல லப்ப உடச்சிட்டு உள்ள போய்ட்டேன்....
விஷ்வா : அன்னைக்கு நாங்க முளிச்ச முளி எங்களுக்கு தா அண்ணா தெரியும்...
ஆதித் : அடேய் நா உனக்கு மாமா முறை டா... அண்ணன்னு கூப்ட்டு முறைய மாத்தாதடா...
விஷ்வா : அட போ அண்ணா... எனக்கு இப்டியே கூப்டு பழகிப்போச்சு.... அதோட மாமான்னு கூப்ட்டா அப்ரம் அம்மு எனக்கு போட்டியா வரியான்னு என்ன அவ அண்ணன்க்கு கூட பாக்காம தொவச்சு தொங்க போற்றுவா...
அன்கி : அப்போ அத்தான்னு கூப்டு டா.... முறை மாறுதுல்ல...
தீரா : இவளுக்கு இவ பிரச்சனை...
விஷ்வா : ஓக்கே அண்ணா ட்ரை பன்றேன்...
ஷியாம் : ஆது அண்ணா... நானும் ரித்திக் அண்ணன அண்ணான்னு தா கூப்புர்ரேன்... சோ நா எப்டி கூப்டனும்...
ஆதித் : அவனும் உனக்கு மாமா தான்டா... மச்சான்னு வரலாம்... பட் உன்ன விட பெயரியவன்ங்குரதுனால மாமான்னே கூப்டு.... என ரித்திக்கை அர்த்தமாய் பார்த்து சிரிக்க....
ரித்திக் : டேய் ஷியாம்... நீ எப்பவும் போல கூப்டுடா... என உள்ளுக்குள் ஆதித்தை வசைபாடியபடியே கூற...
தியா : அதெப்படி கூப்டலாம்... முறை மாறுச்சுன்னா என்ன ஆகுறது.... டேய் ஷியாம் அண்ணா... அத்தான்னு கூப்டுடா...
ஷியாம் : நா மாமான்னு தா கூப்டுவேன்... போ டி...
தியா : கொன்னுடுவேன்... மரியாதையா அண்ணான்னு கூப்டு... என கூறிவிட்டு திரும்ப.... அவள் தோழிகள் " அப்டி போகுதா ட்ரக்கு " என அவளை நக்கலாய் பார்த்து சிரிக்க.... அவளோ ஈஈஈஈ என இழித்து சமாளித்தாள்......
தூர்தேஷ் : ஏன் டா இங்க நா ஒருத்தன் இருக்குரது உங்களுக்கு தெரியிதா தெரியலையா...
உத்ரா : வொய் சர்வதேசமரம்... நல்லா தெரியிரியே... என சிரிக்காமல் கூற....
தூர்தேஷ் : இன்னும் நீ இந்த பேர விடலையா உத்ராமா... நா சர்வதேச மருந்து கண்டுப்புடிக்கிர அளவுக்கு வன்ட்டேன்... என்ன இன்னும் அந்த மரத்த கண்டுப்புடிக்கல..
அன்கி : அதுக்கு எதுக்கு அத்தான் கஷ்டப்படுர.. ரொம்ப ஈசி... போய் கன்னாடி முன்னாடி நில்லு தானாவே தெரியும்...
தூர்தேஷ் : எல்லாருக்கும் வாய் கூடி போச்சு வேற ஒன்னும் இல்ல.... பிசாசுங்களா....
மேகா : சரி சரி உன் பேர வச்சு எங்கள கூப்டாத... உன் ஃபோன குடு... என சைடு கேப்பில் அவனை கலாய்த்து விட்டு அவன் ஃபோனுடன் அவன் " அடிங்கு " என துரத்த வரும் முன்னே ஓடி விட்டாள்...
இவர்கள் பேசியவாறே பொழுதை களிக்க... ஏதோ வேலையிருப்பதாய் சொல்லி விட்டு தூர்தேஷுடன் பக்கத்து ஊர் வரை சென்றிருந்தான் ஆதித்.... இங்கு சிறிய ஜோடிகள் கலாய்த்து கொண்டும் அரட்டை அடித்து கொண்டும் இருக்க... தியா பார்வையாலே ரித்திக்கை நச்சரித்து கொண்டிருந்தாள்....
ஏனோ மனம் நெருடலாய் உணர்ந்த உத்ரா அந்த சாயும் மாலை நேரத்தை வெறுமையாய் பார்த்து கொண்டிருந்தாள்... உத்ராவை நாளை முழு நாள் அம்ருதா சமைக்க கூறியதால் அவள் எந்த வேலையுமின்றி உரையாடி கொண்டிருந்தாள்...
ஏதோ ஒரு ஃபைல் தேடி பன்னை வீட்டிற்கு சென்ற ஆதித் உள்ளே செல்ல.... தூர்தேஷ் வெளியே வேடிக்கை பார்த்து கொண்டிருந்தான்....
வீட்டை பூட்டி விட்டு திரும்பிய ஆதித் தூர்தேஷுடன் சண்டை போட்டு கொண்டிருந்த சசிக்கலாவை கண்டு தன் கோவத்தை அடக்க பெரும்பாடு பட்டான்....
அவனை காணாத தூர்தேஷ் அவரை உள்ளே விடாது தடுத்து கொண்டிருக்க... ஆதிதை கண்டதும் தைரிமிருமிருப்பதை போல் முன்னே வந்தார்.... தூர்தேஷ் அவன் கோவப்படக்கூடாது என தெரிந்த எல்லா இறைனுக்கும் அப்லிக்கேஷன் போட.... அதை அனைவரும் ரிஜெக்ட் செய்து விட்டனர்...
சசிக்கலா : இந்த பாருங்க தம்பி... சொன்னா கேளுங்க... அவ உங்களுக்கு பொருந்துரவ கெடையாது... நீங்க அவ கூட வாழ்ந்தா உங்க வாழ்க்க தான் கெட்டு போகும்.... பெரியஊட்டம்மா சொல்ற மாரி அவளுக்கு கெட்ட ராசி.... அவ கூட யாரு இருந்தாலும் நல்லாவே இருக்க மாட்டாங்க...
ஆதித் : இத்தோட நிறுத்திக்கோங்க... இதுக்கு மேல பேசுனீங்கன்னா... உங்க உயிருக்கு நா உத்திரவாதம் இல்ல...
சசிக்கலா : சொன்னா கேளுங்க தம்பி.... அவ கொறை உள்ளவ... அதனால வாழ்கைய வாழ முடியாது... உங்க அம்மா காற்ற பொண்ண கட்டிக்கங்க....
ஆதித் : வாய மூடிட்டு போய்டுங்க... என் வாழ்க்கைய பார்த்துக்க எனக்கு தெரியும்....
சசிக்கலா : அட சொன்னா கேளு தம்பி...
ஆதித் : மச்சான்... இத போக சொல்லு.... இல்ல அடிச்சு துறத்தீருவேன்...
தூர்தேஷ் :எம்மா... அவன் தான் சொல்றான்ல... போயேன்...
சசிக்கலா : நீ சும்மா இருப்பா... தெரிஞ்சே ஒரு நல்ல பையனோட வாழ்கைய நா கெடுக்க விரும்பல... அவ கொற உள்ளவ சாமி...
ஆதித் : அவ குறையோடையே இருந்தாலும் அவ தான் என் பொண்டட்டி... போதுமா... இந்த இடத்து விட்டு காலி பன்னுங்க... என உடனே பூட்டிய கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்றான்... சசிக்கலா பத்த வச்சாச்சு என ஏளனமாய் சிரித்து கொண்டே அங்கிருந்து சென்றார்.... தூர்தேஷ் ஆதித்தை பின் தொடர்ந்து ஓடினான்...
ஆதித் அங்கு கடுங்கோபத்தில் பார்ப்பதையெல்லாம் தட்டி விட்டு கொண்டிருந்தான்.... கன்னாடி பொருட்கள் கீழே விழுந்து சல்லி சல்லியாய் நொருங்க.... ஆதித்தின் கோப அளவு அதில் தெரிய...
தூர்தேஷ் : டேய் ஆதித்... கோவப்படாத டா...
ஆதித் : என்ன தனியா விடு டா... கோவத்துல உன்னையும் பாக்காம எதாவது செஞ்சிடுவேன்.... இங்க இருந்து போ.... என்ன தனியா விடு... என அவனை சும்மா கூட விடாமல் வீட்டை விட்டு தள்ளி கதவை அடைத்து விட்டு உள்ளே மிருகம் போல் கத்தினான்....
இவனை அடக்க உத்ரா தேவையென ஆதித்தின் புல்லட்டை எடுத்து கொண்டு அங்கு விரைந்தான்.... வீட்டிற்கு சென்றவன் அவசர அவசரமாய் உள்ளே செல்ல... இவனை எதிர்பார்த்ததை போல் நின்று கொண்டிருந்த அன்னம் அவன் பார்க்காததற்குள் அறைக்குள் சென்று விட்டார்... ஆனால் அதை தூர்தேஷ் அப்போதே கவனித்துவிட்டான்.... அப்போது அதை பற்றி எதுவும் கூறாமல் மற்ற அனைவரையும் விட்டு விட்டு உத்ராவை மட்டும் விவரம் கூறி உடனே இங்கு அழைத்து வந்தான்...
அங்கு வீடே அலங்கோலமாய் கிடக்க.... தூர்தேஷை வலுக்கட்டாயமாய் அனுப்பி வைத்து விட்டு கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தாள் உத்ரா.... மூன்றாம் மாடியில் கைகளில் இரத்தம் சொட்ட சொட்ட.... தலையில் முன்பு அடிப்பட்ட அதே இடத்தில் குத்தி இரத்தம் கசிந்து கழுத்து வழி வலிவதை கூட பொருட்படுத்தாமல் எதையோ உடைத்து கொண்டிருந்தான் ஆதித்....
நீ... நான்...
DhiraDhi❤
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro