48 நீ... நான்...
தன் கோவத்தை தீர்க்கும் பொருட்டு அங்குமிங்கும் குட்டி போட்ட பூனை போல் நடந்து கொண்டிருந்தாள் ரேகா.... மருதவேல் பலத்த யோசனையில் இருக்க.... அன்னம் தன் ராஜ தந்திரங்கள் அனைத்தும் வீணாகி விட்டதே என்ற பொஷிஷனில் அமர்ந்திருக்க.... ராஜேஷ் தீவிரமாய் பப்ஜி விளையாடி கொண்டிருந்தான்....
முதலில் அதை கண்டு கொள்ளாத ரேகா கோவத்தில் சட்டென வந்து ஃபோனை தூக்கி கீழே போட்டு உடைத்தாள்.... அதில் மற்ற இருவரும் அதிர்ந்து முளிக்க.... அவன் கீழே நொருங்கி கிடந்த ஃபோனை பார்த்து கொண்டிருந்தான்....
ரேகா : என்ன அத பாத்துட்டு இருக்க.... ஹான்... நாங்க இங்க எவ்ளோ டென்ஷன்ல இருக்கோம்.... நீ கொஞ்சம் கூட சீரியஸ்னெஸ் தெரியாம பப்ஜி விளையாடி கிட்டு இருக்க...
ராஜேஷ் : இப்போ என்ன ஆயிப்போச்சுன்னு இந்த கத்து கத்துர....
ரேகா : புல்ஷிட்... எனக்கு தான்டா தெரியும்... நீ தெண்ட சோறு திங்கிரவன் தான.... ஒரு ஐடியா யோசிச்சு சொல்ல முடியுமா உன்னால...
ராஜேஷ் : இடியட்.... இந்த நிச்சயம் வேண்டாம்... ஆதித் வேற மாரி ரியக்ட் பன்னுவான்னு நா ஆரம்பத்துலையே சொன்னேன்.... ஆனா நீங்க எங்க கேட்டீங்க... புதுசா வர போற சொத்து பத்தின கனவுல இருந்த.... கேற்றுந்தா வேற எதாவது பன்னீர்க்கலாம்...
மருதவேல் : ஹே கத்தாம இருங்க... முடிஞ்சத பேசி பிரயோஜனம் இல்ல.... அடுத்து என்னன்னு யோசிங்க...
ராஜேஷ் : இவ்ளோ நாள் அத நீங்க தான பன்னீங்க.... நீங்களே யோசிங்க... என தோளை குலுக்கி விட்டு அமர...
அன்னம் : எனக்கு சொத்து வேணும்... எல்லாம் வேஸ்ட்டா போய்டும்... எவ்ளோ பன்னீர்க்கோம்.... லீலாவ கொன்ன கேஸிருக்கு... இதுல துரை கேஸு வேற...
ரேகா : வாட்.... அப்போ துரை மாமாவ கொன்னதும் நீங்க தானா...
அன்னம் : நாங்களே தான்... உத்ரா இருக்கான்னு தெரிஞ்சு தா கட்டிடத்துக்கு தீ வக்க சொன்னேன்.... வழிய மூட சொன்னேன்.... ஆனா அவரு உத்ராவ கீழ தூக்கி போட்டுட்டாரு... அதுவும் நல்லது தான்... அது பைத்தியமாயு கொஞ்ச நாள் அலஞ்சிச்சு... ஆதித் கோவத்துல அவள மறந்தே போய்ர்ந்தான்னு நெனச்சோம்.. ஆனா இன்னமும் நியாபகம் வச்சிருக்கான்...
ரேகா : இதுல அவன் தான் அவ புருஷனாமாம்... என் கல்யாண கனவு எல்லாம் போச்சு....
ராஜேஷ் : இப்போ என்ன பன்றது.... நீங்க தா லீலா அத்தைய கொன்னீங்கன்னு ஆதித்துக்கு தெரிஞ்சிடுச்சு... அவன் அந்த கேஸ ரீஓப்பன் பன்னா...
ரேகா : லீவிட் மன்.... அவனுக்கு இந்த விஷயம் தெரிஞ்சிருந்தும் இத்தன வர்ஷமா அவன் எதுவும் செய்யல... அது ஏன்....
அன்னம் : அதான.. ஏன் அவன் என்ன ஒன்னும் செய்யல... நிச்சயமா அவன் செய்யாம இருக்க மாட்டானே...
" அவன் எதுவுமே செய்யலன்னு யாரு சொன்னது " என்ற குரலை கேட்டு இவர்கள் திரும்ப.... ராஜேஷ் சென்று வந்தவனை கட்டியணைத்து கூட்டி வந்தான்.... வந்தது சாட்சாத் மன்ஸூர் தான்.... அவனுடன் கந்தர்வனும் வந்திருந்தார்....
மருதவேல் : என்னப்பா சொல்ற....
மன்ஸூர் : பின்ன இரெண்டு நாள் முன்னாடி தான உத்ராவ தரை குறைவா பேசுனதுக்காக துப்பாகிய வச்சு சுட்டான்... ஏதோ அந்த ரித்திக் செஞ்ச புன்னியத்தால தப்பிச்சாங்க.... இன்னைக்கு கூட உத்ரா தடுத்ததால தான் இவங்க தப்பிச்சாஙௌக... என நினைவூட்ட... உத்ரா தான் இவர்களின் பாதுகாப்பு கேடையமென அவர்களுக்கு புலப்பட்டது....
கந்தர்வன் : நீங்க எதுகும் கவலப்பட தேவையில்ல.... நீங்க செஞ்ச கொலைகள் எதுவும் வெளிய வராது.... நாங்க உங்களுக்கு ஆதரவா இருக்கோம்...
ரேகா : என்ன சொல்ல வரீங்க அப்போ....
மன்ஸூர் : எதிரிக்கு எதிரி நண்பன்.... என சினிமா டயலாக் கூற....
ராஜேஷ் : வில்லனுக்கு வில்லனு ஹீ... என ஏதோ கூறவர...
தீரா : ஹீரோன்னு மட்டும் சொன்னன்னு வை.... ஊரடங்குன்னு கூட பாக்காம பரலோகத்துக்கு உனக்கான ட்ரன்ஸ்போர்ட் ரெடி பன்னீடுவேன்....
ராஜேஷ் : நீயா....
தீரா : நானே தான்....
ரேகா : போய்டு ஒழுங்கா...
தீரா : லாஸ்ட்டா உங்களுக்கு வார்னிங் கொடுக்குறேன் டா... அப்டியே ஓடிடுங்க.... ஆல்ரெடி நிறைய இருக்கு... நீங்க போய்ட்டா எனக்கு நிம்மதி...
மருதவேல் : அதெல்லாம் முடியாது...
மன்ஸூர் : நாங்க இங்க தா இருப்போம்...
தீரா : ஓக்கே.... ஆதித் கைல தான் சாவுவேன்னு வாலன்ட்டியரா வரீங்க.... விதிய மாத்த முடியுமா... நா சொல்றத சொல்லிட்டேன்.... வந்து சாவுங்க வாங்க.....
மன்ஸூர் : நாம அவன நெனச்சு பயப்படக்கூடாது... வேற என்னவோ நடந்துருக்கு... சரி அத விடுங்க... இப்போ நமக்கு ஆதித்தன் தேவை... ஆனா அதுக்கு அந்த உத்ரா தடையா இருக்கா... இரெண்டு பேரையும் பிரக்கனும்.... ஆதித்தன் அவள விட்டு போகனும்... என நிமிர.... அங்கு இரை தேடி வந்த எரும்பிலிருந்து எலும்பு புதைக்க வந்த நாய் வரை ஒருமுறை அவனை ஏறஎறங்க பார்த்து விட்டு சென்றது....
அதுகளின் பார்வை புரியாமல் இவன் இவர்களை நோக்க... அவர்களும் அதே பார்வையில் நோக்கி கொண்டிருக்க....
ராஜேஷ் : அது நீ ஏழு ஜென்மம் பிறப்பெடுத்து வந்தாலும் நடக்காது.... என காரி துப்பினான்....
கந்தர்வன் : ஒன்னு அந்த புள்ளையே அவன விட்டு போகனும்... இல்லனா நம்ம போக வைக்கனும்... வேற வழியே இல்ல... ஆதித்த கத்தி முணைல வச்சாலும் அவன் அவள விட்டு போக மாட்டான்...
அன்னம் : ஏதோ வச்ச மாரியே பேசுறீங்களே... என எளக்காரமாய் கேட்க...
மன்ஸூர் : வச்சிட்டு தா பேசுறோம்...
ரேகா : என்ன டா சொல்ற...
மன்ஸூர் : போன வாரம் தான்.... பத்து ரௌடிங்க ரிஃபில் முன்னாடி பினை கைதி மாரி உத்ராவோட நின்னான்.... குண்டடி பட்டது யாரு????
அன்னம் மருதவேல் ரேகா : யாரு... என கோரசாய் இழுக்க...
ராஜேஷ் : அன்.... சுடுறேன்னு போன அந்த பத்து பேரு தான்... என சலித்து கொண்டே கூறினான்...
மூவரும் அதிர்ச்சியில் வாயை பிளக்க...
கந்தர்வன் : ரொம்ப வாயை பிளக்காதீங்க.... அன்னைக்கு உத்ராவ கண்காணிக்க அனுப்புன என் அடியாள அவன் இடத்துக்கே போய் சுட்டு போட்டுட்டு போய்ட்டான்.... இதுல இனிமே அவ நிழல தொட நினைச்சா கூட என்னையும் வெட்டுவேன்னு சொல்லிட்டு....
இதனை அவர்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை... ஆதித்தின் இந்த அவதாரத்தை இன்னும் அவர்கள் பார்க்கவில்லை... அவன் தரிசனம் கொடுக்கவில்லை... அது தான் உண்மை...
ரேகா : அப்போ நாம ரொம்ப கர்ஃபுலா மூவ் பன்னனும்... உத்ராவுக்கு சின்ன கீரல் பட்டாலும் அவன் விட மாட்டான்.... ஆனா அவனுக்கு என்ன ஆனாலும் அவன் ரியக்ட் பன்ன மாட்டான்.... இல்ல....
மன்ஸூர் : கரெக்ட் தான்.....
ரேகா : சோ வாட் இஃப் வி அட்டக் ஆதித் பிஃபோர் உத்ரா... அவன் நிலையாகுரதுக்குள்ள உத்ராவ தூக்கீடலாம்...
ராஜேஷ் : அவனையே நெருங்க முடியாது... இதுல நீ அவள போட போறியா...
ரேகா : நான்னு தெரியாம கொல்லலாம்ல....
ராஜேஷ் : நீ என்ன அந்த மர்ம ஐபீஎஸ்ஸா... மறஞ்சு மறஞ்சு எதிராளிக்கே தெரியாம தாக்கி சாகடிக்கிறதுக்கு....
ரேகா : ம்ச்.... அதுக்கு நா அந்த ஐபீஎஸ்ஸா தான் இருக்கனும்னு அவசியமில்ல.... ஒரு கூட்டத்துல முக்காடு போட்டு முகத்த மறச்ச சராசரி மக்கள்ள உள்ள ஒருத்தியா இருந்தா போதும்....
அன்னம் : இது சரியா இருக்கும்....
மன்ஸூர் : ஆனா நமக்கு அது மட்டும் பத்தாது... உண்மையாவே உத்ராவையும் ஆதித்தையும் பிரிக்கனும்... ஆதித் விட்டு வர மாட்டான்... ஆனா உத்ரா வர வாய்ப்பிருக்குள்ள...
மருதவேல் : அவளும் அவன மாரி இருந்துட்டா....
மன்ஸூர் : கன்ஃபார்ம் அவளும் அவன மாரி தான் இருப்பா... ஆனா நாம அவளோட வீக்னெஸ்ஸ கண்டுப்புடிக்கலாம்ல...
ரேகா : அத நா கண்டுப்புடிக்கிறேன்...
கந்தர்வன் : அதே நேரத்துல உத்ரா ஆதித் இரெண்டு பேர பத்தியும் தப்பா பேச வைக்கனும்....
மற்றவர்கள் : முடியுமா...
கந்தர்வன் : பணமிருந்தா எதுவும் முடியும்...
ராஜேஷ் : வாய்ப்பே இல்ல... ஆதித் பத்தி தப்பா பேசவே மாட்டாங்க... நாம அதுக்கு பதிலா வேற ஒன்னு ட்ரை பன்னலாம்....
மற்றவர்கள் : என்னது.....
ராஜேஷ் அந்த திட்டத்தை அவர்களுக்கு கூறி முடிக்க.... அவர்களுக்கும் அது சரியாய் வருமென தோன்றியதால் ஒத்துக்கொள்ள.... அங்கிருந்து கலைந்து சென்றர்... இப்போது அங்கு மன்ஸூர் ஒரு பஸில் கேமை வைத்து திருப்பி கொண்டிருந்தான்.... அவனை சுற்றி நடந்து கொண்டே சிந்தையிலிருந்த கந்தர்வன்...
கந்தர்வன் : தம்பி.... அந்த தயாதிரன பத்தி தகவல் கெடச்சிதா....
மன்ஸூர் : இல்ல டட்.... இது ஒரு தலவலியா இருக்கு... தயாதிரனுக்கும் ஆதித்க்கும் என்ன சம்மந்தமா இருக்கும்...
கந்தர்வன் : தெரியலப்பா...
மன்ஸூர் : நம்ம கேஸ் வேற அடுத்த வீக் மண்டே ஹியரிங்க்கு வருதுப்பா... நாம சென்னை போக வேண்டியதிருக்கும்...
கந்தர்வன் : ம்ம்ம் இத்தன வர்ஷமும் லண்டன்லையே ஹியரிங் இருந்ததால அவன நாம பாக்கல.... இப்போ தா சென்னைல வச்சிர்காங்களே.... அடுத்த நாள் போட்டு தள்ளீரலாம்... மறுநாள் இவர்களை ஒருவன் போட்டு தள்ள போகிறானென தெரியாமல் அவனுக்கே இவர்கள் திட்டம் தீட்ட... அவனோ அவன் காதல் ராணியின் மடியில் கூலாய் கண் மூடி படுத்திருந்தான்....
மாலை நான்கு மணியை கடக்க.... ரித்திக் தூர்தேஷ் ஷியாம் விஷ்வா பெண்களையூம் அழைத்து கொண்டு சென்றிருக்க... இப்போது அவ்வீட்டில் உத்ராவும் ஆதித் மாத்திரமே இருந்தனர்.... ஆதித் சோபாவில் அமர்ந்திருக்க.... அவன் மடியில் அவன் கையணைப்பில் அமர்ந்து அவன் மீதே சாய்ந்தவாறு வீட்டை நோட்டம் விட்டு கொண்டிருந்தாள் உத்ரா.... ஆதித்தின் ஒரு கரம் அவளை மென்மையாய் அணைத்திருந்தாலும் மறு கரம் அவள் கூந்தலை கோதி கொண்டிருந்தது....
உத்ரா : மூணு மாடி.... ஒரு பெரிய கிட்ச்சன்... மேல உள்ள இரெண்டு மாடியிலையும் மொத்தமா நாழு நாழு ரூமிருக்கு... இங்கையும் ஒரு ஆபீஸ் ரூம்... ஒரு ஜிம் ரூம்... ஒரு ரீடிங் ரூம்... ஒரு லிவிங் ரூம்னு நாழு ரூமிருக்கு... பத்தாததுக்கு மொட்ட மாடி... கூரை... அங்க ஃபுல்லா வெட்ட வெளி... அங்கையும் ஒரு ரூமு.... கன்னாடி மாரியே கதவு... சௌன்ட் ப்ரூஃப்... எல்லாமே கன்னாடி பொருள்... வீட்டுக்கு தேவையான ஃபர்னீச்சர்ஸ்... சோஃபாஸ்... செர்ஸ்... டைனிங்ஸ்... ப்ரிட்ஜ்... வாஷிங் மெஷின்... மிக்ஸி... க்ரைண்டர்... கஸ் ஸ்டௌவ்... என பட்டியல் போட...
தீரா : ஒருவேளை வீட்ட காய்லாங்கடக்காரன்ட்ட போட்டுட்டு சாமான் வாங்க போறாளோ.... ஏன் இவ்ளோ பெரிய லிஸ்ட்டு போடுரா....
உத்ரா : பஃனு... ஒரு ரூம தவிற எல்லா ரூம்லையும் ஏசி... ஒவ்வொரு ரூம்லையும் சரியான பாத்துரூம்னு... இது பன்னை வீடு மாரியா டா மாமா இருக்கு.... அச்சு அசல் மொத்தை வீட்டையுமே கட்டீட்ட டா...
ஆதித் : ஹாஹா உனக்கு புடிச்சிருக்கா இல்லையா...
உத்ரா : ஏன் புடிக்கலன்னு சொன்னா என்ன பன்னுவ...
ஆதித் : ம்ம்ம் வீட்ட இடிச்சிட்டு உனக்கு புடிச்ச மாரி புது வீடு கட்டுவேன்....
உத்ரா : கொன்னுடுவேன்... என் புருஷனோட ஃபர்ஸ்டு ப்ராடெக்ட்.... தொட்ட கைய வெட்டி புடுவேன்.... எனக்கு எப்டி புடிக்காம போகும்... ரொம்ப ரொம்ப ரொம்ப புடிச்சிருக்கு...
ஆதித் : ஹாஹா... இன்னுமா உனக்கு இது எந்த வீடுன்னு தெரியல...
உத்ரா : என்ன ஆதன் கேக்குற....
ஆதித் : நல்லா நினைவு பன்னி பாரு.... இங்க சுத்தி இருக்க தோட்டமும் இங்க இருக்க வீடும்... அதுல இருக்க ஒவ்வொரு ஃபெசிலிட்டீசும் உனக்கு ஃபெமிலியரா இல்ல.... என கேட்க...
அவன் மீதிரிருந்து எழுந்தவள் அவன் முகத்தை பார்த்து கொண்டு....
உத்ரா : எனக்கு நியாபகம் இல்லையேடா மாமா...
ஆதித் : சரி வா என் கூட... என அவளை அமர்ந்தபடியே தூக்கி கொண்டவன்.... அவனின் அலுவலக அறைக்கு சென்றான்.... அங்கு இருந்த ஒரு லாக்கரை திறந்தவன் அதிலிருந்த ஒரு ஃபைலை எடுத்து கொண்டு முதல் மாடிக்கு சென்றான்.... கூரைக்கு அருகிலே... அந்தி வாணம் சாயும் அழகான காட்சி இரம்மியமாய் தெரிய... அதை பார்த்தவாறு அங்கிருந்த ஊஞ்சலில் அவளை அமர வைத்தவன்.... தானும் அமர்ந்து கொண்டு அவள் மடியில் படுத்து கொள்ள.... அந்த ஃபைலை வேகவேகமாக பிரித்தவள் அதிலிருந்த ஒரு பழைய ஷீட்டை எடுத்தாள்.... அதில் கருப்பு ஸ்கெட்ச்சால் ஒரு வீட்டின் வரை படம் வரையப்பட்டிருந்தது.... ( சாரி கிருக்கப்பட்டிருந்தது... )
நாழு மாடி கொண்ட வீடு... அதை சுற்றி தோட்டம்.... ஒவ்வொரு தளத்திலும் நான்கு அறைகள் இருக்க... முதல் தளத்தில் கூரை மறைத்திருந்தது.... உள்ளே ஒரு ஊஞ்சல் தொங்குவதை போலிருக்க.... ஒரு அறையும் இருந்தது... அதை போல் நாழா து தளத்திலும் ஒரு அறை இருந்தது... அருகில் ஒரு ஊஞ்சலும் தொங்கி கொண்டிருந்தது...
அது ஏழு வயதில் உத்ரா ஆதித்திடம் வரைந்து காட்டிய ஓவியம் தான்.... அன்று அவனிடம் அந்த வீடு வேண்டுமென்று அடம் பிடித்தாள்... இன்று அந்த வீட்டில் தான் இருக்கிறோம் என உணர்ந்தவளுக்கு கையும் ஓடவில்லை.... காலும் ஓடவில்லை.... இணம்புரியா உணர்வில் உறைந்து போயிருந்தவளின் கூந்தலை கலைத்து விட்டு நிலைக்கு கொண்டு வந்தான் ஆதித்...
ஆதித் : என்ன பொண்டாட்டி புருஷன் சர்ப்ரைஸ் எப்டி....
உத்ரா : ஓ மை காட் மாமா.... ஐ கான்ட் பிலீவ் திஸ்.... இது இல்ல.... எனக்கு சுத்தமா மறந்து போச்சு.... எனக்கு சந்தோஷத்துல ஒன்னுமே புரியலையே... தன்க் யு சோ மச் டா மாமா என அவன் கன்னத்தில் குழந்தையை போல் முத்தமிட்டாள்.... எழுந்த ஆதித் அவளின் மகிழ்ச்சியை கண்டு தானும் மகிழ்ந்தான்....
உத்ரா : ஹே வெயிட் வெயிட் என திடீரென நின்றாள்...
ஆதித் : என்னாச்சு...
உத்ரா : இதுல மூது மாடி தான இருக்கு... பட் நாழு மாடி இருக்கனுமே... என முகத்தை சுருக்க... ஆதித் அர்த்தமாய் சிரித்தான்...
உத்ரா : டேய் ஒருமாடி குடுக்காம ஏமாத்தீட்டு என்ன டா சிரிக்கிர... என்ன ஏமாத்தீட்ட நா உன் பேச்சு கா... என ஊஞ்சலில் போய் அமர்ந்து கொள்ள...
ஆதித் : ஹே கண்ணம்மா... உன்ன நா எப்டி டி ஏமாத்துவேன்... என் பொண்டட்டி சொல்லி செய்யாம இருப்பேன்.??. என அழகாக் சிரிக்க...
உத்ரா : அப்போ எங்க...
ஆதித் : கண்டுப்பிடி பாப்போம்... என அவளுக்கு அவகாசம் அளிக்க.... அவள் முகம் குழப்பத்திலிருந்து மலர்வதை கண்டவனும் சிரிக்க.... சரியாய் அந்த பேப்பரை அவனிடம் கொடுத்து விட்டு குடுகுடுவென கீழே இறங்கி ஓடினாள்....
ஆதித் அவளை சிரிப்புடுன் பின் தொடர.... வீட்டின் கதவு வரை சென்றவள்.... கதவை முதல் வேலையாக சாத்தி விட்டு அந்த தளத்தையே சுற்று சுற்றி வந்தாள்... ஆதித் இப்போதும் புன்முருவலுடன் வாய் மூடியே தான் இருந்தான்....
காண்டானவள் காலை தரையில் உதைக்க... பின் ஏதோ நினைவு வந்தவளாய் மாடி படி பக்கமே ஓடினாள்.... அங்கு மாடி படியின் பின் வெற்று இடம் இருந்தது.... அங்கு யாரேனும் நின்றாள் கூட யாராலும் கண்டுப்பிடிக்க முடியாது... அங்கு ஓடியவள் சுற்றி சுற்றி பார்க்க.... அங்கு ஒரு கதவிருந்தது... அதை திறந்து படிக்கட்டில் கீழே ஓடினாள்....
எங்கு ஆர்வத்தில் கண்ணு மண்ணு தெரியாமல் விழுந்து விட போகிறாளென ஆதித்தும் சற்றே வேகமாய் பின் தொடர்ந்தான்....
அங்கு ஓடியவள் தரையை அடைந்ததும் இருட்டில் தடுமாற.... கதவு அடைக்கும் சத்தம் கேட்டு விட்டு.... சிறிதும் ஐயமில்லாமல்.... ஸ்விட்ச் போர்டை தேடியவள் ஸ்விட்சை ஆண் செய்ய.... அங்கு ஒளியில் மிளிர்ந்தவாறு அழகாய் ஆடி கொண்டிருந்தது ஒரு கன்னாடி ஊஞ்சல்... பெரிய ஹால் போலிருக்க.... அண்டர் குரௌண்டில் ரூம் கட்டியிருந்தான்....
அதை கண்டு பூரித்து போனவள் அவன் பின்னிருந்து அணைக்கவும்.... திடுக்கிடாமலே.... அவன் கேள்வி கேட்கும் முன்னே..... " ஐ லவ் இட் " என பதிலளித்தாள்....
ஆதித் : அத மட்டும் தானோ.... என இவன் அவள் கழுத்தில் முகம் புதைத்த... அவன் மீசையை கிச்சு கிச்சு மூட்டுவதை போல் அவன் பட்டும் படாமல் வருடவும் நெழிந்தவள் " விடு டா முரடா " என அவனிடமிருந்து துள்ளி ஓடி வந்து அங்கிருந்த அறை முன் நின்றாள்.... அங்கு இரண்டு அறை இருந்தது.... " ஒன்னு தானே நாம வரஞ்சோம் " என இவள் யோசிக்க.... முதல் அறையை திறந்து காட்டினான்.... அது சாதாரண கட்டில் அறையாய் இருக்க.... அடுத்த அறையை காட்டும் முன் அவள் கண்களை கட்டி விட்டான்....
அந்த அறையுள் நுழைவதை காலடி மூலம் உணர்ந்த உத்ரா சட்டெனை அவன் கட்டை அவிழ்க்கவும் வெளிச்சத்தில் கண்களை மூடிவிட்டு மீண்டும் திறந்து பார்த்தவள் கண்களை அகல விரித்து விட்டாள்.... அங்கு ஒரு கட்டில் இருந்தது.... இரண்டே இரண்டு பெரிய பெரிய அலமாரிகள் இருக்க..... மற்ற இடைவேளை அனைத்திலும் உத்ராவின் புகை படம் நிறைந்திருந்தது.... அவள் பிறந்த போது எடுத்தது... அவள் முதல் முறை அழுத போது எடுத்தது... அவனை பபார்த்து சிரித்தபோது எடுத்தது... வளர வளர எடுத்தது... சடங்கன்று எடுத்தது... மறுநாள் கட்டிட திறப்பு விழாவில் அவள் விளக்குடுன் நின்ற போது விளக்கொளியில் ஜொளித்த போது எடுத்தது.... ஆதித் அவளுடன் சேர்ந்து விளக்கேற்றும் போது எடுத்தது... என அவை அனைத்தும் இருக்க.....
நடுவில் நடுனைமாய் அவள் கண்மூடி நிற்க... அவள் கழுத்தில் அவன் செய்னை மாட்டிய அந்நொடி அவனே அறியாமல் அவன் கமெரா க்லிக்கிய புகைப்டம் பெரிதாய் மாட்டப்பட்டிருந்தது....
அவள் சிரித்த போது... முறைத்த போது... அழுத போது... அடம் பிடித்த போது என அனைத்து ஃபோட்டோக்களும் நிறைந்து இருக்க... அவள் பிரிம்மிப்பில் இருந்த போதே... பின்னிருந்து அணைத்தவன்.... அவளை தன் மீது சாய்த்தவாறு...
ஆதித் : இந்த வீடு முழுக்க முழுக்க உனக்காக நா கட்டுனது... இந்த அறை நமக்காக கட்டுனது.... எனக்கு வல்ட்லையெ ரொம்ப ஸ்பெஷலான இடம்... உன் மேல நா எவ்ளோ கோவமா இருந்தாலும் இங்க வந்தா எல்லாமே பறந்து போய்டும்.... இந்த மொத்த வீட்டையும் நம்மளோட ஒவ்வொரு நினைவுகள் கொண்டு கட்டீர்க்கேன்... உணர்ச்சி பூர்வமா... ரொம்ப கஷ்டப்பட்டு... நா பாத்து பாத்து கட்டுனது... என குரலில் காதலும் தன் உயிரை இத்துனை வருடங்கள் பிரிந்திருந்த ஏக்கமும் நிறம்பி வழிந்தது....
உத்ரா : ஐ லவ் யு... ஐ லவ் யு... ஐ லவ் யு டு தி க்ரோர் ஆதன்.... என அவனை கட்டி பிடித்து கொண்டு அழுதாள்.... ஆதித்தின் கண்களில் இருந்து கண்ணீர் கசிந்து கொண்டிருக்க...
ஆதித் : நானும் ..
உத்ரா : தப்பு பன்னீட்டேன் மாமா... உன்ன பேசி இங்க வர வச்சிர்க்கனும்... நா சும்மா இருந்தது தா தப்பு... ஐம் சாரி டா....
ஆதித் : லூசு நான் தான டி தப்பு பன்னேன்...
உத்ரா : ம்ச்... நீ எனக்காக ஏங்குனத தவிற என்னா மாமா பன்ன.... நா உன்ன பேசி கூப்ற்றுந்தா நீ இவ்ளோ ஏங்கியிருக்க மாட்டல்ல....
ஆதித் : அது பெருசு இல்ல டா.... உன்ன விட்டு இருந்தது மட்டும் தா என்னோட கஷ்ட்டமே.... ரொம்ப கஷ்டப்பட்டேன்.... அம்மா நியாபகம் வரல.... நீ வர மாட்டியான்னு தான் டி ஏங்குனேன்... என்னால ஏங்குரத தவிற உன் கிட்ட வர முடியல.... அப்டியொரு நிலமை... எங்க நானே உனக்கு ஆபத்தாகீடுவேணோனு உள்ளுக்குள்ளே செத்துட்டேன்... அழுக அழுகையா வந்துச்சு... ஆனா அழுக முடியல.. நீ அங்க ஹாஸ்ப்பிட்டல்ல மூச்சு பேச்சில்லாம கிடக்கும் போது என் உயிர் என் கிட்டையே இல்ல டி... தயவு செஞ்சி என்ன விட்டு போய்டாத டி.... மொத்தமா செத்துருவேன்..... என திடீரென அடக்கி வைத்திருந்த அனைத்தையும் கொட்டினான்....
உத்ரா : சாரி மாமா... நா நா... இனிமே உன்ன விட்டு எங்கையும் போக மாட்டேன் டா.... உன் அம்மாவாவும் உன் அக்ஷாவாவும் உன் கூடவே இருப்பேன்... ஐ ப்ராமிஸ் யு.... ப்லீஸ் அழாத மாமா.... எனக்கும் அழுக வருது டா...
ஆதித் : போக மாட்டல்ல அக்ஷாமா....
உத்ரா : உன்ன விட்டு போனா அடுத்த நிமிஷம் செத்துருவேன் மாமா... என அவள் கூறி முடிக்கும் முன்னே அவளை இருக்கி அணைத்திருந்தான்....
ஆதித் : உன் மடியில படுத்துக்கவா...
உத்ரா : நானே உன்னோடவள்ங்கும் போது எதுக்கு மாமா... அனுமதி... வா... என அவனை தாயாய் அவள் மடியில் தாங்கினாள்.... உலகை வென்றுவிட்ட நிம்மதி அவனுக்கு....
அவன் கேசத்தை அவள் கோதி விடவும் அவள் மடியிலே கண்ணயர்ந்தான்.... அந்த நிம்மதியான உறக்கத்தில் இது நாள் வரை இருந்திராத மகிழ்ச்சி.... அவனை பார்த்தவாறு இருந்தவளின் கண்கள் தானாகவே அவன் விவரித்த அவன் வலிகளை கேட்டதில் கண்ணீரை ஊற்றெடுத்தது....
" இனிமே உன்ன விட்டு போகவே மாட்டேன் மாமா... " என அவன் நெற்றியில் மென்மையாய் முத்தமிட்டாள்.... அவன் உண்மையில் இந்த பத்து வருடம் அனுபவித்த வலிகளை அறிந்தாள் என் செய்வாளோ....
நீ... நான்...
ஹாய் இதயங்களே... தன்க்ஸ் பார் யுவர் லவ்வபல் சப்போர்ட்... நெக்ஸ்ட் என்னண்டு மூவ் பன்ன போறேன்னே தெரியல... நேத்தே இந்த யூடிய போற்றுப்பேன்... பட் வீட்ல ஒரே திட்டு... ஏன் ஃபோனையே பப்புரேன்னு... அதான் க்லோஸ் பன்னிட்டு படுத்து தூங்கீட்டேன்.... மதியம் நெக்ஸ்ட் யூடி பெரும்பாடு பட்டாவது போட்டுற்றேன்... நோ வரீஸ்... கண்டிப்பா கதை எக்ஸ்டெண் ஆகும்.... ஒரு கன்ட்டன்ட் வக்கலாமா வேணாமான்னு யோசிச்சிட்டு இருந்தேன்.... உங்களுக்கும் கதை எக்ஸ்டெண் ஆகனும்னு ஆசை இருக்கும் போது நா வேணாம்னா சொல்ல போறேன்.... அந்த கான்ட்டென்ட் கன்ஃபார்ம் ட்விஸ்ட்டு தா... ஆனா வலி நிறைந்த ட்விஸ்ட்டு... சோ கத்திய தூக்கிட்டு வந்துர கூடாது... பொருமையா படிக்கனும்.... ஓக்கேவா.... டாட்டா இதயங்களே...
DhiraDhi❤
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro