Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

47 நீ... நான்...

அங்கோ தலையிலிருந்து லிட்டர் லிட்டராய் இரத்தம் ஆன் தி வே டு கால்வாய் என்பதை போல் ஓடி கொண்டிருக்க... தன் நிலை மறந்து சொருகிய கண்களுடன் மரத்திற்கு கீழ் கிடந்தான் ஆதித்.... அவனருகில் மரத்தின் கிளை முறிந்து கொண்டிருந்தது...

அவனை தூக்கி கொண்டு இருவரும் மருத்துவமனைக்கு ஓடினர்... மருத்துவர் சிகிச்சைக்கு தயாராக இருந்ததால் உடனே சிகிச்சை தொடங்கியது...

அவசர சிகிச்சை பிரிவின் வெளியில் தூர்தேஷும் ரித்திக்கும் மாற்றி மாற்றி நடை பயின்று கொண்டிருக்க.... இருவருக்கும் பயத்திலும் வலியிலும் நடுக்கமே வந்து விட்டது...

திக்கு திக்கென இருந்த இதயத்தை இன்னும் ஏற்றுவதை போல் பரபரப்பாய் வந்த மருத்துவர்களும் செவிலியர்களும் வெளியே வருவதும் உள்ளே போவதுமாய் இருக்க... ஒரு கட்டத்தில் இருவருக்கும் கண்ணீர் முட்டி கொண்டு வந்து விட்டது....

உள்ளே ஆதித்தின் தலையை சுத்தம் செய்து கொண்டே தான் இருந்தனர்... ஆனால் இரத்தம் நின்ற பாடில்லை... அவனின் காயம் கிளை விழுந்து உண்டானதை போல் இல்லை... அதை கவனித்தாலும் சிகிச்சையில் தீவிரமாய் இருந்தனர்...

நான்கு மணி நேரம் களித்து முகத்தை தொங்க போட்டவாறு வந்த மருத்துவர்...

மருத்துவர் : அந்த பையன் ரொம்ப சீரியசா இருக்கான்ப்பா.. அவனுக்கு இன்னும் நாழு மணி நேரத்துல சர்ஜெரி பன்னனும்... இல்லனா கோமாக்கு போய்டுவான்.... தோழன்கள் இருவருக்கும் தலையில் இடி விழுந்ததை போலிருந்தது...

ரித்திக் : என்ன டாக்டர் சொல்றீங்க...

மருத்துவர் : எஸ் சைல்ட்... அவன் தலைல பட்ட காயம் கிளை முறிஞ்சு விழுந்த மாரி இல்ல... அவனே தான் அவன காயப்படுத்தியிருக்கனும்... தலைல ரொம்ப பலமான அடி பற்றுக்கு... அவனோட ஸ்ட்ரெஸ் லெவெல் அங்கர்னால இன்னைக்கு ஹை ஆய்ருக்கு.... டிப்ரெஷென்ல ஹார்ட் பீட் ஸ்லோ ஆகுது... மே பி ஹார்ட்டோட சடன் ப்ரேக்னால மயங்கியிருக்கலாம்... ப்லட்டும் லாசாய்ருக்கு... ப்லட் பன்க் நாங்க ரெடி பன்றோம்... சீக்கிரமே அந்த பையனோட பரென்ட்ஸ வர சொல்லுங்க.... வில் ட்ரை அவர் பெஸ்ட்... என கூறி செல்ல...

ரித்திக்கிற்கும் தூர்தேஷிற்கும் உலகம் சுழலவில்லை... என்ன செய்வதென்றும் அவர்களுக்கு புரியவில்லை... அனெஷ்த்தேஷியாவின் வீரியத்தால் மயக்கத்தில் இருந்தான் ஆதித்....

இவர்களால் யாருக்கும் அதை தெரிவிக்கவும் முடியாது... துரை இடம் கூட கூறலாம்... ஆனால் அவரும் இல்லை.. அன்னப்பூரனியிடமும் கூற முடியாது... ஏனெனில் அவரை பற்றி இருவரும் அறிவர்... அம்ருதா தேவராயனிடம் கூறலாம் என்றால்... அதுவும் சிக்கல் தான்... அப்படியே கூறினாலும் அவர்கள் இங்கு வந்து சேர எழு மணி நேரமாகும்... திடீரென அங்கு வந்த மருத்துவர்....

மருத்துவர் : ப்லட் பன்க்ல AB நெகெட்டிவ் ப்லட் அதிகமா இல்ல... இன்னும் வேணும்... எதாவது ஏற்பாடு பன்னுங்க தம்பி... நாங்களும் கேக்குறோம்... பரென்ஸ் வந்தாச்சா...

தூர்தேஷ் : டாக்டர்... அவன் அப்பா இறந்துட்டாரு.... அவன் சித்தி ஹாஸ்பிட்டல்ல இருக்காங்க...

மருத்துவர் : ஹோ காட்... கார்டியனாவது இருக்காங்களா...

இருவரும் இந்த கேள்விக்கு பேந்த பேந்த முளிக்க...

மருத்துவர் : சொல்லுங்கப்பா...

" நான் தான் அந்த பையனோட கார்டியன் " என்ற பெண்ணின் குரலை கேட்டு இவர்கள் திரும்ப... அங்கோ பதினான்கு வயதான கிஷோரும்... அவனருகில் அவன் தாயும் நின்றிருந்தனர்....

ரித்திக்கிற்கும் தூர்தேஷ்ஷிற்கும் சென்னையில் இரண்டு வருடம் படித்ததால் கிஷோரை அறிந்திருந்தனர்.... ஏனெனில் நாழ்வரும் அங்கு ஒன்றாக தான் படித்தனர்.... கிஷோருக்கு ஆதித் என்றால் தனி பிரியம்... ஆதித்திற்கும் அப்படியே தான்... கிஷோர் ஷியாமின் வகுப்பில் பயின்றவன்.... அதனால் இவர்களை நன்கறிவான்....

இருவரும் : கிஷோ... என அவனை பார்க்க... அவனோ அன்னாந்து அவன் தாயை பார்த்தான்.... மாநிறத்தில் மஞ்சளும் கருப்பும் கலந்த புடவையில்... கூந்தலை பின்னலிட்டு அமைதியாய் நின்றிருந்தார் ரமலா....

மருத்துவர் : யார் நீங்க...

ரமலா : ஐம் ரமலா... சென்னைல வொர்க் பன்றேன்... துரை சாரோட ஃபமிலி அட்வைஸர்... ஸர் இறந்துட்டா பையனோட கார்டியன் நான் தான்னு டாக்குமென்ட்ஸ் இருக்கு.... நீங்க சர்ஜெரிய ஆரம்பிங்க.....

மருத்துவர் : ஓக்கே மம்... ப்லட் இன்னும் கிடைக்கல... கிடைச்சதுமே சர்ஜெரிய ஸ்டார்ட் பன்னீடலாம்..

ரமலா : ப்லட் க்ரூப் என்ன...

மருத்துவர் : AB நெகெட்டிவ்...

ரமலா : என் பையனுக்கும் எனக்கும் அதே க்ரூப் தான்... நாங்க குடுக்கலாமா...

மருத்துவர் : சின்ன பையன் வேண்டாம்... நீங்க மட்டும் குடுங்க...

ரமலா : இங்கையே இரு கிஷு... என கூறிவிட்டு அவர்களுடன் சென்றார்....

அடுத்த இரண்டு மணி நேரத்திலே சர்ஜெரியை தொடங்கினர்.... உத்ர இவை எதையும் அறியாமல் தனி அறையில் முடங்கி கிடந்தாள்.... அவளின் மனம் மட்டுமே ஆதன் என ஜெபம் போல் கூறி கொண்டிருந்தது....

தீவிரமாய் சிகிச்சை போய் கொண்டிருந்தது... அவனின் தலை பாகம் முழுவதும் இரத்தத்தில் நிறைந்திருக்க.... விரைவிலே அதை கட்டிட்டு சிகிச்சையை முடித்து வெளியே வந்தனர்.....

மருத்துவர்  சக்சஸ்ஃபுலா சர்ஜெரி முடிஞ்சிடுசச்சு.... பட் டு ஹிஸ் ரெஸ்பான்ஸ்.... மட்டும் தான் நம்மளால முடிவெடுக்க முடியும்... ஒன் டே அப்சர்வேஷன்ல இருக்கட்டும்.... கண் விழிச்சா கௌன்சிலிங் குடுக்கலாம்... இல்லனா எங்ளால ஒன்னும் பன்ன முடியாது என கூறி சென்றனர்.....

ரமலா சிறுவர்கள் மூவருக்கும் ஆறுதல் கூறி அமைதி படுத்தினார்... ஆனால் அடுத்த இருவத்தி நான்கு மணி நேரத்தில் ஆதித் கண்களை ஒரு முறை கூட திறக்கவிலை.... இது பெரும் ஏமாற்றமாக இருக்க.... அவனை பரிசோதித்த மருத்துவர் முகத்தை தொங்க போட்டவாறு வந்தார்....

மருத்துவர் : வி ட்ரைட் அவர் பெஸ்ட்.... பட் ஹி வென்ட்டு கோமா... என கூற... ரித்திக்கின் கண்கள் தானாகவே கண்ணீரில் நிறைந்தது....

ரமலா : என்ன டாக்டர் இப்டி சொல்றீங்க...

மருத்துவர் : ஐம் சாரி.... நாங்க அவரு தலைக்கு பட்ட காயத்த சர்ஜெரி பன்னியாச்சு.... பட் அவரோட நிலை தான் இந்த நிலமைக்கு காரணம்.... ஹி ஈஸ் டூ மச் டிப்ரெஸ்ட்.... இந்த வயசு... வயச விடுங்க.... அந்தந்த வயசுல தா உடம்பு வலி இருக்கனும்... ஸ்ட்ரெஸ் இருக்கனும்னு இல்ல.... பட் இந்த பையனுக்கு வெறும் 16 வயசுல ஒரு பக்குவமான பெரிய மனிஷரோட சராசரி ஸ்ட்ரெஸ்ஸ விட பல மடங்கு அதிகமா இருக்கு... இட்ஸ் அ மிரக்கல்.... பட் ஹி மெனேஜ்ட் இட்... சர்ஜெரி பன்னாலும் உடனே எழுந்துக்க டைம் ஆஹும்னு நெனச்சோம்... பட் ஸ்கன்ல தா.... என இழுக்க.....

ரித்திக் : என்ன ஆச்சு டாக்டர்... தயங்காம சொல்லுங்க ப்லீஸ்....

மருத்துவர் : ஹி ஈஸ் அபெக்டட் பை அ டிசார்டர்... அதாவது மூளை நோய்....

தூர்தேஷ் : டாக்டர் ஆர் யு சீரியஸ்.... என்ன சொல்றீங்க...

மருத்துவர் : எஸ்... இட் ஃபக்கோப் டிஸீஸ்... அரிய மூளை நோய்... தலைல அடிப்பாட்டதாலையும்... அவரோட அளவு கடந்த ஸ்ட்ரெஸ் அன் அங்கெர்னால இப்போ ப்ரெய்ன் அஃபெக்ட்டாயிருக்கு.... இதனால அவரோட ப்லட் செர்க்குலேஷன் அப்பப்போ ஸ்டாப் ஆகும்... அதனால உடல் முழுவதும் செயல் இழந்து போகும்.... இப்டி நெறைய இருக்கு... எப்போ கண்ணு முளிப்பாருன்னு தெரியல.... கண்ணு முளிச்சா மெடிக்கல் மிரக்கல்.. இல்லனா பெய்லியர் மெடிக்கல்.... எல்லாமே அவரு கைல தான் இருக்கு.... என கூறி சென்று விட்டார்...

ஆதித்திற்கு நோய் என கேட்டதிலிருந்தே மூவருக்கும் மற்ற எதுவும் காதில் விழாமல் போனது... ரமலா தான் உண்ணிப்பாய் கவனித்து கொண்டார்....

" இன்னும் இவன் எத்தன கஷ்டத்த தான் அனுபவிக்கனுமோ " என ரித்திக்கும் தூர்தேஷும் கண்ணீர் விட... எப்படியோ அவர்களை சமாதானம் செய்து உறங்க வைத்தார் ரமலா...

நாளுக்கு நாள் ஆதித்தின் நிலை மாறியது... அவனின் மூளை அசைவுகளை மருத்துவர்கள் கவனித்து கொண்டே இருந்தனர்... ரமலா ஆதித்தை ஊட்டியிற்கு மாற்ற அனுமதி வாங்கினார்... ரித்திக் மற்றும் தூர்தேஷும் ஊட்டியில் ஆதித்திற்காய் தங்கள் கல்லூரியை தொடங்கினர்.... அங்கு உள்ள துரையின் வீட்டிலே ஆதித்தை பார்த்து கொண்டனர்....

உத்ராவை அவ்வப்போது ரித்திக் சென்று பார்த்து கொண்டான்... அவள் பித்து பிடித்ததை போலிருக்கவும் ஆதித் கூறியதால் இவள் எழுந்தது... இவள் பெயரை கூறியதும் அவன் தெளிந்ததென அனைத்தும் அவன் நினைவில் வந்து போக.... உத்ராவை பற்றி பேசலாமென நினைத்து ஊட்டிக்கு சென்றவன்... உத்ராவை பற்றி பேச்சு கொடுத்தான்...

அவன் நினைத்ததை போல் இத்துனை நாட்கள் அமைதி காத்த ஆதித்தின் மூளை அசைவு கொடுத்தது... ஆனால் ரித்திக்கே எதிர்பார்க்காத அளவில் ஆதித்தின் இதய துடிப்பு பன்மடங்கானது... அவன் நெற்றியில் கோவத்தின் அடையாளமாய் கோடுகள் விழ தொடங்கியது.... ரித்திக் " தயா தயா " என குரல் கொடுக்க.... தலையின் அதீத வலியாலும் அவன் கட்டுகடங்கா கோபத்தாலும் சட்டென கண்களை திறந்தான் ஆதித்....

அவன் இடது கண் இரத்தமாய் சிவந்திருக்க... வலது கண் தெளிவாய் இருந்தது... சட்டென எழுந்தவன் மீண்டும் படுக்கையில் விழுந்தான்.... உடனே மருத்துவர் வந்து அவனை பரிசோதித்து விட்டு மெடிக்கல் மிராக்கல் என கூறி சென்றார்....

மறுநாள் அவரின் சொல்படியே ஆதித்திற்கு ஸ்கேன் எடுக்க பட்டது... அதை கண்டவர் மீண்டும் தோய்ந்த முகத்துடன் வந்தார்...

மருத்துவர் : ம்ம் நௌ ஹி ஈஸ் ஆல்ரைட்... அவர ரொம்ப ஜாக்கிரதையா பாத்துக்கனும்... முக்கியமா பொருமையா பாத்துக்கனும்... ஆல்ரெடி அவரோட கோவம் அதிகமா இருக்கும்... இனிமே பன்மடங்கா இருக்கும்... ரொம்ப கோவம் வரும்... ஸ்ட்ரெஸ் ஆவாரோ மாட்டாரோ... அவரோட கோவம் ஏறுனா எப்போ வேணா எது வேணா செய்வாரு... தலவலி அதிகமா இருக்கும்... அந்த டிசீசால பாதிக்கப்பட்டவங்க எல்லாருமே இறந்துருவாங்க... கிட்டத்தட்ட கன்செர் மாரி... பட் ஹி ஈஸ் சேஃப்... அந்த அளவுக்கு டென்ஸ் ஆகக்கூடாது... டிசீஸ் க்யுவர் ஆகலாம்... க்யுவர் ஆகமலும் போகலாம்... கீப் ஹிம் கால்ம்... எமோஷன் ஆனா கூட பரவாயில்ல... கோவமாகாம பாத்துக்கோங்க பா... என கூறி சென்றார்...

என்ன செய்வதென்றே அவர்களுக்கு தெரியவில்லை... முதல் ஒரு மாதம் ஆதித் எழுந்த நிற்கவே மிகவும் கடினப்பட்டான்... இதில் வாரம் இரண்டு மூன்று முறை இரத்த வாந்தி எடுத்தான்... இதை மருத்துவரிடம் கூற அவரோ " அவன பொருமையா வச்சிக்கிட்டாலே போதும்ப்பா " என கூற... இவன்களோ " அது நடந்துட்டா தா உலகம் அழிஞ்சிருமேயா " என புலம்பி கொண்டனர்....

பின் அவனை பல்லாயிரம் அறிவுரை கூறி சென்னை அனுப்பி வைத்தனர்... பின் அங்கிருந்தே ஊட்டி வந்தான்.... ரமலா தன்னை பற்றி எதுவும் கூறி இன்னும் அவனை ஆவேச படுத்த வேண்டாமென கூறிவிட்டார்....

ஊட்டிக்கு வந்த ஆதித்தை ரித்திக் குழந்தையை போல் பார்த்து கொண்டான்... பின்னே அவர்களின் வாழ்வில் அர்ஜுன் நுழைந்தான்.... (என் இரண்டாம் கதையான மீண்டும் தொடரும் காதல் இல் உள்ள ஒரு நாயகன்... நகுலர்ஜுனன் ) ஆரம்பித்திலே மூவருக்கும் பிடித்து போனது... கல்லூரியின் முதல் ஆண்டிலே ஆதித்தால் அனைவரும் ஈர்க்கப்பட்டனர்... அவனின் தைரியமும்... அச்சமில்லா வதனமும்... இளகிய புன்னகையும் அனைவரையும் அவன் புறம் ஈர்த்தது....

ஆனால் அந்த மொத்த கல்லூரியும் அவனை பற்றி அறிந்ததை விரல் விட்டு எண்ணிவிடலாம்... எண்ண கூட தேவையில்ல... வெறும் மூன்று விஷயம் தான்... அவன் பெயர் ஆதித்தன்... சூப்பர் சீனியர் .... மற்றும் மகா கோபக்காரன்....

முதல் வருடமே சில பல ஆசிரியர்கள் அவன் கோபத்தில் இருப்பதையும் அவன் கோபத்தையும் பற்றி அறியாது வாங்கி கட்டியுள்ளனர்.... அவர்களையெல்லம் காப்பாற்றியது என்னவோ அர்ஜுன் தான்.... தூர்தேஷும் மருத்துவம் பயின்று கொண்டிருந்தான்.... ஆனாலும் அவன் வகுப்பு நேரத்தை தவிர்த்து மற்ற அனைத்து நேரத்திலூம் ஆதித் ரித்திக் அர்ஜுனுடன் தான் இருப்பான்....

அர்ஜுனும் ஆதித்தை பற்றியும் அவன் பாதிக்கப்பட்டிருக்கும் நோயை பற்றியும் அறிவான்.... ரித்திக் தூர்தேஷிற்கு பெரும் உதவி புரிந்ததும் அர்ஜுனே...

ஆதித் கட்டுகடங்கா கோவத்தில் இருந்தான் என்றால் மருந்தை ஊசியில் ஏற்றி அவனை ஓய்வெடுக்க வைப்பர்... பெரும்பாலும் ஆதித் கோவத்தை காட்டுவது ஆதித்தான அவன் மீதே தான்.... மனநிலை ஊசலாட்டத்தினால் அவன் கோபம் விதவிதமாய் மாறும்...

முதலில் அன்னத்தை கொல்வதை போல் கத்து கத்தென கத்துவான்.... ரித்திக்கும் அன்னத்தின் மீது கோமாய் இருப்பதால் அவனும் கரித்து கொட்ட.... அடுத்ததாக உத்ராவை கொலைகாரி துரோகி என கூறி கத்துவான் புலம்புவான்.... அவன் கொலைகாரி என கூறியது அவன் மனதை கொன்தற்கு... துரோகி என கூறியது அவனிடம் பிடித்ததை போல் காட்டி கொண்டு தூரத்தில் சென்று அந்த சங்கிலியை தூக்கி எறிந்ததற்கு.... ஆனால் அதை ரித்திக்கும் தூர்தேஷும் துரையின் இறப்பை குறிக்கிறான் என நினைத்து கொண்டனர்....

திடீரென அதையே நினைத்து அழுவான்... பின் அவன் மேலே கோவமாகி கத்துவான்.... ரித்திக் ஆதித் இருவருக்கும் அவர்கள் மீதே கோவம் வந்தால் தயா மற்றும் ராவ்வாக மாறி ஆதித் ரித்திக்கென திட்டிக் கொள்வர்... அந்த பழக்கமுள்ளதால் "ஆதித் பொருமையை முன்பே கடைப்பிடித்திருக்க வேண்டும் எல்லாம் அவன் தவறு தான் " என இருவரும் கோவப்பட்டு கொள்வர்... தூர்தேஷ் தான் "இதுல எவன் பாதிக்கப்பட்டவன்னே தெரியலையே " என புலம்புவான்.....

இப்டியே இவர்கள் புலம்பியது தான் " அவனை சும்மா விடமாட்டேன்... அவன் சரியாகட்டும் " என்று முனுமுனுத்துகொள்வர்....

நாட்களும் நகர்ந்தது... ஒரு முறை கல்லூரியின் மாடியிலிருந்து ஒரு பெண் தற்கொலை செய்து கொண்டாள்... அது தற்கொலை தான் என கூறும் போது அவள் தோழிகள் தற்கொலை இல்லை கொலை என கூறினர்... ஆனால் அதற்கு எவரும் ஆதரிக்கவில்லை... ஆதித் அதை பற்றி அப்பெண்களிடம் விசாரித்து இதை கவனிக்காத கல்லூரியின் முதல்வர் மீது கோவமுற்றவன் அதை வெளிகாட்டாது காவல் நிலைத்தில் வழக்கு பதிவு செய்தான்...

இறந்த பெண்ணை ஒருவன் ஒன்றரை வருடமாய் பின் தொடர்ந்துள்ளான் என்பது தெரிய வந்தது... அவன் மீது வழக்கு திரும்பவும்... எக்கௌயரியில் " அப்பெண் தான் என் பின் வந்தாள் நான் நகர்ந்து தான் சென்றேன்... அன்று என்னை காதலிக்கவில்லை என்றால் குதித்து விடுவேன் என மிரட்டினாள்... நான் கேட்கவில்லை... பின் அவள் குதித்து விட்டாள் " என கூறினான்... " ஏன் அன்றே இதை கூறவவில்லை"  என கேட்டதற்கு... " நான் அவள் தற்கொலை எல்லாம் செய்ய மாட்டாளென அப்போதே அங்கிருந்து கிளம்பி விட்டேன்... அவசரமாய் ஊருக்கு சென்றதால் இங்கு நடந்த எதையும் நான் அறியவில்லை"  என்றான்....

அவன் தோழர்களும் அவள் தான் பின் தொடர்ந்து வந்தாளென கூற தொடங்கினர்... ஆனால் ஆதித்தால் அதை நம்ப இயலவில்லை... மொத்த கல்லூரியும் அவளை தவறாய் பேச தொடங்க.... அவள் பின் தொடர்ந்தவனை கண்காணித்ததில் ஒரு நாள் அவன் பயத்தில் ஆதித்திடமே உளறி கொட்டினான்.... காதலுக்கு ஒத்துக்காத பெண்ணை மாடியிலிருந்து தள்ளிவிட்டேன் என்று அவனே ஒத்துக்கொண்ட காணொளியை அக்கல்லூரியில் போட்டு காண்பித்தான்.... அனைவரும் தலை குனிந்தனர்... அந்த குற்றவாளிக்கு கல்லூரி நிர்வாகமே தண்டனை பெற்று தந்ததது....

வருங்களும் சென்றது... மொத்த கல்லூரிக்கும் ஆதித்தின் மீது தனி மரியாதை உண்டாயிற்று... எந்த தவறானாலும் இவன் தட்டி கேட்க வருவானே என அனைவரும் பயந்து பின் வாங்கினர்...

மூன்றாம் வருடத்தில் அக்கல்லூரியின் மாணவர் சங்க முதல்வனாய் தேர்ந்தெடுக்கப்பட்டான்.... பின் அவன் அறிவுரை படி மாணவர்களிடையே இருந்த இரைச்சல்கள் ஒழிந்தது.... ஆதித்தின் கோவம் எகிராமல் மிகவும் பத்திரமாய் பார்த்து வந்தனர்....

திடீரென ஒரு நாள் அர்ஜுன் இறந்து விட்டான் என்ற செய்தி வந்தது... ஆதித்தின் நிலை மாற தொடங்கியது.... ரமலா உடனே அவனை லண்டன் அழைத்து வர கூறினார்.... அதற்கு ஆதித் ஒத்துழைக்காமல் போக.... ரமலாவே பேசினார்.... முதலில் எரிந்து விழுந்தவன் " உன் தந்தை தான் என்னை அனுப்பினார் " என கூறியதும் கிளம்பி லண்டன் வந்தான்....

ரித்திக்கும் லண்டன் வந்து அவனுடனே இருந்தான்.... ரமலாவை இருவரும் பார்க்கவில்லை.... கிஷோர் தான் வந்து ஆதித்தை பார்த்து கொள்வான்... முதல் ஒரு மாதம் சும்மாயிருந்தவன் பின் வேலைக்கு முயற்சி செய்ய தொடங்கினான்... பின் தினம் யாரோ தன்னை கண்காணிப்பதை உணர்ந்தவன் ரித்திக்கிடம் கத்த தொடங்கினான்....

ரித்திக் : டேய் நா ஏன் டா உன்ன கண்காணிக்க போறேன்... நீ நேரா நேராத்துக்கு என்ன பன்னுவன்னு எனக்கு தெரியாதா...

ஆதித் : அப்போ யாரு என்ன ஃபாலோ ன்றது....

ரித்திக் : தெரியல டா... சரி அத போட்டு கொளப்பிக்காத... பேசாம போ... என அனுப்பி வைத்தான்.... ரமலா தான் ஆள் விட்டு அவனை கண்காணித்தார்.... இதனை அறிந்த கிஷோர் ஏன் இப்படி செய்கிறீர்கள் என கேட்டதற்கு அவர் இரண்டு மாதம் கடந்தும் பதிலளிக்கவில்லை.... இவன் கேட்டு கேட்டு அழுத்து போய் கோவத்தில் பேசுவதையே நிறுத்தி கொண்டான்...

மெல்ல மெல்ல ஆதித் ரித்திக்கின் பற்றுடன் கம்ப்பெனியை துடங்கினான்..... அவனின் இரண்டு வருட தீராத உழைப்பினால் AR என்ற சிம்பில் உலகம் முழுவதும் பரவியது...

அடைந்திட இயலா சிகரத்தை தொட்டனர்.... எல்லா துறைகளிலும் நல்முறையில் கால் பதித்தனர்... தூர்தேஷ் படிப்பை முடித்து விட்டு மருத்துவரானதும் அவனே ஆதித்தை பார்த்து கொண்டான்.... அது மட்டுமில்லாமல் AR Medical and Multi Hospitality யின் சீஃபாகவும் பணி புரிகிறான்.... வீட்டிற்கு அவன் ஒரு மென்பொருள் பொறியாளர்

"டாக்டர் பைய" என ஆதித் திட்டுவதும் இவனை தான்.... ஏனெனில் தூர்தேஷ் தான் அவனுக்கு மாத்திரைகளில் சற்றே தூங்குபவன் காலையில் எழும்போது எதற்காக கோபப்பட்டான் என்பதை மறந்து விடுவதை போல் ஒரு மருந்தை மாற்றி வைத்தான்....

பின் நாட்களும் கடந்தது... உத்ராவின் நினைவுகள் அவனை வாட்டி கொண்டே தான் இருந்தது... அன்னத்தை தண்டிக்க வேண்டும் என மலையளவு கோபம் இருந்தாலும் அதை அவளுக்காய் அடக்கி கொண்டான்... எங்கு தான் அங்கு சென்றால் தான் புதைத்த காதல் மீண்டும் எழுந்து அதுவே அவளுக்கு ஆபத்தாகி விடுமோ என்று அவனுக்கு பயம்... அதனால் ரித்திக் அவ்வேலையை பார்த்து கொண்டான்...

என்ன தான் ரமலா அவனை கவனித்தாலும் ரமலாவுக்கே தெரியாமல் தான் அவன் சட்டம் முடித்தது மட்டுமல்லாமல் சென்னையில் வழக்கறிஞர் ஆகவும் வேலை பார்க்க தொடங்கி லண்டனிலும் அவன் பணியை தொடர்ந்து க்ரிமினெல் லாயர் என பட்டமும் பெற்றான்.... ஆதித்தனாய் இல்லாமல் தயாதிரனாய்.... இதை ரித்திக் தூர்தேஷ் மட்டுமே அறிவர்.... எங்காவது இதை பற்றி மூச்சு விட்டால் குத்தி கொலை செய்து விடுவேன் என மிரட்டி வைத்திருந்தான் அவர்களை...

தன்னை யாரோ கொலை செய்ய முயல்வதையும் அவன் அறியாமலில்லை.... அதை பற்றி சிந்திக்க தொடங்கியவனுக்கு அவன் தன் ஊரை சேர்ந்தவன் என்று உறுதியானது... இவை எப்போது பலமானது என யோசிக்க தொடங்கியவனுக்கு லண்டன் வந்ததும் தான் எடுத்த தமிழ் கேஸை பற்றி சிந்திக்க தொடங்கினான்....

அது பணம் அபகரிக்கும் வழக்கு... தஞ்சாவூரிலும் தேனி மாட்டத்திலும் தான் இதே வகையில் பல கேஸ் வந்துள்ளது.... அப்பாவி மக்களிடம் அவர்களின் நிலத்தை எழுதி வாங்கி தொழில் செய்து தருவதாய் கூறிவிட்டு அதை ரியல்எஸ்டேட்காரர்களிடம் வித்துவிட்டு கிடைத்த பணத்தை எடுத்து கொண்டு செல்வர்....

அதை கண்டு கொண்டு எதிர்த்த கேட்ட இரு இளைஞரில் ஒருவனை கழுத்தை வெட்டி கொன்று விட்டனர்.... கொன்றவனுக்கு பதில் அவனின் அடியாள் ஒருவன் சொத்து பிரச்சனையால் கொன்றுவிட்டேன் என சரணடைந்தான்....

இதை ஆராய்ந்த ஆதித் மெல்ல மெல்ல உண்மைகளை கிளரும் போது பலவை வெளி வந்து கொண்டிருக்க... கொலை முயற்சிகளும் தொடர்ந்தது... அனைத்தும் நம் ஊர்காரன் செய்தான் என்பதையும் அவன் விட்ட நூலில் தான் கண்டுபிடித்தான்....

ஏனெனில் அவன் தான் ஆதித்ய தர்ஷன் என்று எவருக்கும் தெரியாது... அதனால் தொழில் எதிரி அல்ல..... அவன் தான் தயாதிரன் என்றும் தெரியாது என்பதால் இந்த வழக்கு எதிரியும் இல்லை என்று உர்ஜிதப்படுத்தியவனுக்கு.... உத்ராவின் பெற்றோரை பார்க்க போனவன் லண்டனுக்கு செல்லும் முன் ஒரு முறை ஊருக்கு தானே சென்று இந்த கேஸ் பற்றி விசாரித்து விட்டு வந்தது நினைவுவில் வர... ஆக தனக்கும் தயாதிரனிற்கும் சம்பந்தம் உள்ளதென நினைத்து என்னை கொல்ல நினைகின்றனர் என யூகித்தான்.....

அவன் அவனின் நிறுவனங்களிலே ஊளியனாய் வேலை பார்ப்பதையும் சிலர் கவனிப்பதை கண்டவன் அது பிடிக்காமல் வெவ்வேறு நிறுவனகளுக்கு மாற தொடங்கினான்.... அவனை பற்றி அனைத்தையும் ரமலா அறிந்து கொள்ள வேண்டி.... இதையே தவறாய் சுட்டி காட்டி கிஷோரை தூண்டி விட்டு அவன் அடுத்து என்ன வேலை பார்க்க போகிறான் என அறிந்து கொள்ளவே ரமலா அப்படி செய்ய.... ஆதித் அதை நாசூக்காய் வென்று அங்கிருந்து அவர் பேச்சையும் மீறி ஊருக்கு கிளம்பி வந்தான்.... ரித்திக்கும் சென்னையிலிருந்து ட்ரைய்னில் வந்தான்.....

ஆனால் அவ்வப்போது அவன் தலை பயங்கரமாய் வலிக்கும்.... வலியில் அவ்விடமே அரண்டு போகும் அளவு கதறுவான்... இல்லையேல் உடைத்து சின்னாபின்னமாக்குவான்... அவன் இரத்த வாந்தி எடுப்பதாலோ என்னவோ கோவத்தில் அவன் பொருட்களை உடைக்கும் போது அவன் காயம் பெற்ற கரத்தில் வரும் இரத்தம் பெரிதாய் தெரியாது.... ஆனால் இரத்த வாந்தி எடுத்தால் அன்று நாள் முழுவதும் அவனால் படுக்கையை விட்டு எழ முடியாது.... மூளைக்கு செல்லும் நரம்பொன்றில் இரத்தம் ஒட்டம் தடைப்பட்டு விடும்.... அதனால் உடல் மறத்து விடும்... அவ்வேளையில் அவன் மயங்கி விடுவான்....

அது கூட வலி தெரியாது... ஆனால் இரத்த வாந்தி எடுக்கும் போது தலையில் நரம்புகள் அனைத்தும் செயலிழக்க போவதாய் மற்ற பாகங்களுக்கு அவன் கண்கள் முளித்திருக்கும் போதே மூளை கட்டளையிடும் போது மத்த பாகங்கள் தரும் வலி பன்மடங்காய் இருக்கும்.... அவன் படும் வேதனையை ரித்திக் தான் பல்லை கடித்து கொண்டு பொருத்து கொள்வான்....

அதன் பின் தான் இங்கு வந்தார்கள்.... முதல் நாள் உத்ராவை இராசி கெட்டவளென அன்னம் கூறும் போது நரம்பு புடைக்க அவரை கொன்று விடும் நோக்குடன் ஆதித் தான் முதலில் வீட்டிற்குள் நுழைந்தான்.... அதற்குள் அவளை அடக்கி விட்டு ரித்திக் உள் வர.... அவன் பேசி கொண்டிருக்கும் போதே உத்ராவும் ஒத்துக்கொள்ளவும்..... கோவத்தில் உள்ளே வந்திருந்தவன் கன்னாடியை உடைத்து ரித்திக்கை முறைத்தான்.....

" இவன் வேற வந்துட்டானே " என ஒரு நொடி யோசித்த ரித்திக் உடனே அவனை போய் ஒரு அறை விட்டான்... இப்போது இருவரும் மாற்றி மாற்றி அடித்து கொள்ள.... உத்ரா மற்றும் தியாவின் கத்தலில் இருவரும் அமைதியடைந்தனர்....

அன்னத்தின் வார்த்தைகளால் கோவமுற்ற ஆதித்தை பெரும்பாடுபட்டு அடக்கி கொண்டிருந்த ரித்திக் சரியாய் ஆதித்துடனே தியாவை பார்த்தான்.... அவர்களின் பார்வையை உணர்ந்து உடனே அவள் இழுத்து சென்று விட்டாள்....

மருதவேல் பேசும் போதே ஆதித் எவரும் அறியாமல்... எங்கு ரித்திக் தனக்கு மருந்து கொடுத்து கோவத்தை மறக்க வைத்து விடுவானோ என யோசித்து ரித்திக்கிற்கே அழைத்து ரெக்கார்டரை ஆன் செய்தான்.... சரியாய் அதே நேரம் மருதவேல் " அவரு இந்த வீட்டு வாரிசு மாரியா பேசுறாரு "என வாயை விட..... அந்த கோவத்தில் உடனே ரித்திக் யோவ் என கத்தி விட்டு ஃபோனில் பேசுவதை போல் திரும்பி கொண்டான்......

பின் அன்றிரவே ஆதித் நினைத்ததை போலவே ரித்திக் அவனுக்கு ஊசி போட்டு உறங்க வைத்தான்.... ஆனால் ரித்திக்கே எதிர்பார்க்காதது மறுநாள் அவன் பொருப்பை ஏற்று கொண்டு வந்து நின்றது தான்....

அன்று ரித்திக் வந்த நாள் உத்ரா காட்டில் மயங்கி கிடந்த போதும் அவளை தூக்கி கொண்டு வந்து வீட்டில் விட்டு விட்டு மறைமுகமாய் சென்றது சாட்சாத் ஆதித் தான்.....

தூர்தேஷ் பெண் கேட்டு விட்டு சென்றதும் ஆதித்தை போய் பார்த்து அவன் அருகாமையில் மயங்கியது கனவென நினைத்த உத்ராவை தூக்கி கொண்டு வந்து வீட்டில் விட்டதும் ஆதித்தே தான்....

அன்று வீட்டையே ரனகலமாக்கி விட்டு தான் ஆதித் சென்றான்..... " என் பொண்டாட்டிக்கு பிடிக்காத எதுவும் நடக்க கூடாது இந்த கல்யாணமும் தான் " என எச்சிரித்து விட்டு சென்றான்.....

பின் தான் ரித்திக் விஷ்வா வந்து அவளை பார்த்தது.... ஆதித்தின் சொற்படியே அவளை தண்டவாளத்திவிருந்து தூக்கி வந்தோம் என பொய்யுரைத்தனர்.... அதன் பின் தான் அனைத்தும் அறிவீர்களே என பெருமூச்சு விட்டு கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்தனர்.... அங்கு மௌனமே சில நிமிடங்களுக்கு ஆட்சி செய்ய...

தூர்தேஷ் : ம்ம்ம் சீக்கிரமே ஆதித் அத விட்டு வெளிய வந்துருவான்டா.... நீங்க கவலப்படாதீங்க... கண்ண தொடச்சிட்டு... வெளிய வாங்க... என முதலில் வெளியே சென்றான்...

அவன் பின் மற்றவர்களும் செல்ல.... நடு கூடத்தில் தோழிகள் பேசி சிரித்து கொண்டிருக்க.... உத்ராவின் மடியில் தலை வைத்து அசதியில் உறங்கும் ஆதித் அவர்களுக்கு குழந்தையாய் தெரிந்தான்....

நீ... நான்...

ஹாய் இதயங்களே.... நைட் கண்டிப்பா ஒரு யூடி குடுக்குறேன்... இப்போ ஒரே ஒரு சஜ்ஜெஷன்.... கதை ஸ்லோவா போகுதா... பாஸ்ட்டா போகுதா... கதைய முடிக்கனும்னும் சொல்லீர்க்கேன்... அதான் கேக்குறேன்.... உங்களுக்கு தோனுனா இதுலையே சீக்கிரம் சொல்லிடுங்க...அப்போ தா அடுத்த யூடி போட எனக்கு ஈசியா இருக்கும்...

அன்ட் கைண்ட் ரெக்வெஸ்ட் டு சம் ரீடர்ஸ்.... நீங்க என்னோட மத்த கதைகள விருப்பப்பட்டா ப்ரத்திலிப்பில படிக்களாம்.... இந்த கதைக்கு மட்டும் சப்போர்ட் பன்னாம எனக்கு சப்போர்ட் பன்னுங்க இதயங்களே.....

DhiraDhi❤

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro