43 நீ... நான்...
அது தான் இருவருக்கும் நடந்த முதல் பெரிய சண்டை...
க்ரிக்கெட் விளையாட போய் வந்த வினை அது... பெரும்பாலும் எதாவது சூழ்நிலைக்காக மட்டுமே சண்டை போடுவர்... ஆனால் இதில் மற்றவர்களால் உண்மையிலுமே இருவரும் சண்டையில் குதித்தனர்...
அன்று க்ரிக்கெட் மட்ச்சில் ஆதித் ஒரு அணி... ரித்திக் ஒரு அணி... அதிசயத்தின் அதிசயமாய் ராஜேஷ் ரித்திக்கின் அணியில் இருக்க... இணை பிரியாத சண்டைகாரர்கள் (ஆருயிர் தோழர்கள்) இருவரும் விளையாட்டு ஆரம்பமாகும் முன்னே பார்வை பரிமாற்றம் செய்து கொண்டனர்....
அவர்கள் கனித்ததை போலவே சண்டை ராஜேஷ்ஷால் வெடிக்க... இருவரும் மண்ணில் கட்டி புரண்டு புரண்டு அடித்து கொள்ள எப்படியோ ராஜப்பன் அந்நேரம் வந்து இருவரையும் பிரித்து விட்டார்... தன்னால் பிரிய கூடாதென்பதாலே இருவரும் புரண்டு கொண்டிருக்க.... அந்த இரு அணி பாவி மட சாம்பிராணிகளும் விளையாடுவதில் குறியாய் இருந்து விட்டு இவன்களின் சண்டையில் இடையில் வந்தால் நம் தலை உருளும் என்று அவர்களருகில் கூட செல்லாமல் வேடிக்கை பார்க்க... தெய்வமாக வந்து ராஜப்பன் பிரித்து விட்டார்...
மூச்சை இழுத்து இழுத்து விட்ட இருவரும் அவருடன் அமைதியாய் மருத்துவனைக்கு சென்றனர்... அங்கு ராஜப்பன் இருவருக்கும் தலையில் கட்டு போட சொல்லி விட்டு மருந்து வாங்க சென்ற கேப்பில்... தோழன்கள் இருவரும் நர்ஸையும் டாக்டர்ரையும் முளி பிதுங்க வைத்து விட்டனர்...
ஆதித்தின் தலையை ஆராய்ந்து கொண்டிருந்த மருத்துவரிடம்...
ஆதித் : டாக்டர்.. எனக்கு தலைல லைட்டா தான் அடி... அவன் தலைல கட்டு போடுங்க...
ரித்திக் : டாக்டர் அவன் முழங்கைல ஒரு முல்லு குத்தீர்க்கும் அத முதல்ல எடுத்து ட்ரெஸ்ஸிங் பன்னுங்க...
ஆதித் : நர்ஸ்... அனோட பின் கழுத்துல கல்லு குத்தி கிழிச்சிருக்கும்... அதுக்கு மருந்து போடுங்க..
ரித்திக் : அவன் கை தேஞ்சிருக்கும் அதுக்கு ஆய்ன்மென்ட் போடுங்க...
ஆதித் : அவன் கண்ணுல ஐஸ் க்யூப்ஸ் வைங்க...
ரித்திக் : டாக்டர் டாக்டர்... அவனோட காலுல சரியா கனுக்கால்க்கு மேல பன்ட் கூட கிழிஞ்சிருக்கும்... அங்க கட்டு போடுங்க...
என அவ்விருவரின் உயிரை வாங்கி விட்டனர்.. அந்த மருத்துவரும் செவிலியரும் " இவனுங்க உண்மையாவே இவனுங்களே தான் அடிச்சிக்கிட்டு மண்டைய ஒடச்சிக்கிட்டானுங்களா " என புலம்பியவாறே மருந்து போட்டு அனுப்பி வைத்னர்.....
மருத்துவமனையை விட்டு செல்லும் போது இருவரும் ஒருவரை ஒருவர் முறைத்து விட்டு கள்ளப்பார்வை பார்த்து கொண்டு அவரவர் வீட்டிற்கு சென்றனர்...
இதற்கிடையில் உத்ரா பத்து வயதை தொட்டிருக்க.... ஆதித்திற்கு அடிப்பட்டதை அறிந்ததும் அவனை தேடி ஓடி வந்தாள்... அவள் உள்ளே செல்லும் முன் அன்னம் வழி மறைக்க... முதலில் கெஞ்சி பார்த்தவள் தன் கண்ணீரை அடக்க முடியாது இருந்த நேரம் காலில் அடிப்பட்டதால் சற்றே ஒரு காலை தூக்கி கொண்டு மற்றோரு காலால் குதித்து குதித்து வந்த ஆதித் மாடி படியில் இடறி விட... அதை கண்ட உத்ரா மாமா என கத்தி கொண்டே அன்னத்தை ஒரே பிடியில் தள்ளி விட்டு விட்டு அவன் விழும் முன் சரியாய் பிடித்து தாங்கினாள்...
விழும்போதும் பதறாதவன் உத்ராவின் குரலை கேட்டு பதறி விட... அவள் பிடித்ததும் நிலையடைந்து அக்ஷா என்றவாறு அவளை பார்த்தான்...
ஆதித் : அக்ஷா...
உத்ரா : ஏன் மாமா கீழ வந்த...
ஆதித் : அது வந்து டா... ரொம்ப நேரமா மாடியிலையே இருந்தேன்... அதான் டா...
உத்ரா : நீ வா மாடிக்கு போவோம்.. என மாடிக்கே அழைத்து சென்றவள்... அன்னப்பூரனியை கவனிக்காது அவனுக்கு தண்ணி எடுக்க சமையலறைக்குள் நுழைந்தாள்... அப்போதே அவளை கவனித்த அம்ருதா...
அம்ருதா : உத்ர மா... எப்போ டா வந்த...
உத்ரா : இப்போ தான் அத்த... நா வந்துர்ரேன்... என குவளை நிறைய தண்ணீரை எடுத்து கொண்டவள் சமையலறையை விட்டு வெளியேற... அவள் கண்ணீரை கண்டு அம்ருதாவும் வர.... உத்ரா மாடி படியை நெருங்கும் முன்.... அவளிடமிருந்து தண்ணீர் குவளையை வலுக்கட்டாயமாய் வாங்கிய அன்னம்....
அன்னம் : ஏ வெளிய போ டி...
உத்ரா : ம்ச்... நா ஏன் போகனும்... குடுங்க பெசாம...
அன்னம் : ஏய்... வேலைக்காரியெல்லாம் என் மகன பாக்க தேவையில்ல.... வீட்ட விட்டு வெளிய போ டி...
உத்ரா : நா ஒன்னும் உங்க கிட்ட அனுமதி வாங்கல... குடுங்க ஒழுங்கா.....
அன்னம் : வெளிய போ டி... என சிறு பிள்ளை என்றூம் பாராமல் தள்ளி விட... வந்த கோவத்திற்கு அருகிலிருந்த மாங்காவை அவரை நோக்கி தூக்கி வீசினாள் உத்ரா... நேரே சென்ற மாங்கா அன்னத்தின் நெற்றியை பதம் பார்க்க... அவர் ஆ என கத்தி கொண்டே கீழே விழவும்... உத்ரா அதை சற்றும் கண்டு கொள்ளாமல் மாடி ஏறினாள்...
ஆதித் அன்னத்தின் சத்தத்தை கேட்டு உத்ரா ஏதோ செய்து விட்டாளென யூகிக்க... அடுத்த ஐந்தே நொடியில் கண்ணீரோடே உள் வந்த உத்ரா அவனிடம் நீரை நீட்ட... அவளை பிடித்து அமர வைத்தவன் கண்ணீரை துடைத்து விட...
ஆதித் : ஏன் டி அழர...
உத்ரா : நா அழுவுரேன்... உனக்கென்ன... உனக்கு தா என்ன பத்தி கவலையே இல்லையே...
ஆதித் : அக்ஷாமா... உன்ன பத்தி கவலை இல்லாம தான்... இங்க இருக்கவே பிடிக்காம இங்கையே இருக்கேனா...
உத்ரா : ம்ச்... நீ என் கூட இல்லனா நா எவ்ளோ கவலப்படுவேணோ அதே மாரி உனக்கு அடிப்பட்டா நா அத விட அதிகமா கவலை படுவேன்... பாத்து விளையாட மாட்ட... இப்டி தா தலை காலல்லாம் ஒடச்சிட்டு வருவியா....
ஆதித் : ம்ம்ம் அது சரி... உன் அண்ணனுக்கும் தான அடி பட்டுச்சு... அவனுக்குலாம் திட்டில்லையோ...
உத்ரா : இதுல நல்லா குறியா இரு... தண்ணிய குடி முதல்ல...
ஆதித் : ம்ம் என அமைதியாய் அருந்தினான்...
உத்ரா : கீழ அவங்க கத்துனதுக்கு நீ ஒன்னுமே கேக்கல...
ஆதித் : அவங்க கத்துனா எனக்கென்ன... நீ எதாவது தூக்கி போற்றுப்ப... அது கரெக்ட்டா அவங்கள போய் நல்லா அடிச்சிருக்கும்... தட்ஸ் இட்....
உத்ரா : ம்ம் எல்லாத்தையும் பாத்த மாரியே பேசுறது...
ஆதித் : ஹ்ம் சரி டா.... அக்ஷாமா...
உத்ரா : என்ன மாமா...
ஆதித் : அது... எனக்கு க்லஸெஸ் ஆரம்பிக்கிறாங்க டா...
உத்ரா : அதுக்கு....
ஆதித் : அதுக்கு.... நா சென்னை போனும்...
உத்ரா : சென்னையா... என அவன் சட்டையை இருக்கி பிடிக்க...
ஆதித் : கொலகாரி... உனக்கிருக்குரது ஒரே மாமா டி... என்ன கொன்னுடாத...
உத்ரா : சென்னை போறியா...
ஆதித் : ஆமா டி...
உத்ரா : அப்போ முடிவு பன்னிட்டு தான் என்ட்ட பேசுற.... என முகத்தை சுருக்கி கொள்ள
ஆதித் : சாரி டா பட்டுமா... போய் ஆகனும் டா...
உத்ரா : ம்ம்ம் என முகத்தை இன்னும் சுருக்கி கொள்ள..
ஆதித் : செல்லம்ல... கொஞ்ச நாள் தான் டா மா... நா அப்டீக்கா போய்ட்டு இப்டீக்கா வந்துர்ரேன்... ப்லீஸ்...
உத்ரா : ம்ம்ம்ம்
ஆதித் : அச்சோ... சண்டையாவது போடு... மூஞ்ச தொங்க போடாத....
உத்ரா : ஏன்...
ஆதித் : பாக்க கன்றாவியா இருக்கு... என வாந்தி எடுப்பதை போல் கூற.... தலையணையை தூக்கி மண்டையிலே வீசினாள்...
உத்ரா : எரும... எரும...
ஆதித் : ஹேய்... ஹேய் போதும் டி...
உத்ரா : மவனே... கொன்னுடுவேன்... பத்திரமா போய்ட்டு மரியாதையா சீக்கிரம் வர.... சரியா...
ஆதித் : சரி டா செல்லமே... இரெண்டே வர்ஷம் தான்... சீக்கிரம் வந்துர்ரேன்...
உத்ரா : ஏது... இரெண்டு வர்ஷமா... என வாயை நாழடியிற்கு திறந்தவளின் வாயை மூடி விட்டவன்...
ஆதித் : ஜஸ்ட்டு டூ யியர்ஸ் டா பட்டு...
உத்ரா : டேய் மாமா... என்ன விளையாடுரியா... நீ போவே வேணாம்... இங்கையே இரு...
ஆதித் : அடியே புரிஞ்சிச்சோ டி... நீ அஞ்சாவது தான் படிக்கிர... நா பத்தாவது டி...
உத்ரா : டேய் மாமா... நா 6த் ப்ரொமோட்டட்...
ஆதித் : ஆமா பெரிய ஐஐடி க்ரஜுவேட்டு...
உத்ரா : அப்டினா....
ஆதித் : டாப்பிக் மாறுது டி... நா டென்த் பாசு டி...
உத்ரா : அதுக்கு...
ஆதித் : 11த் 12த் க்குலாம் உடனே டீசி குடுக்க மாட்டாங்க டி...
உத்ரா : அதெல்லாம் எனக்கு தெரியாது... நீ இங்கையே இரு... என மீண்டும் முருங்கை மரமேறினாள்...
ஆதித் : அக்ஷா குட்டி... என் செல்ல குட்டி... என் பட்டு குட்டி... பாப்பு குட்டி...
தீரா : அடேய் அது நானு...
ஆதித் : இவ ஒருத்தி போடி அந்த பக்கம்...
உத்ரா : அவ பேர வச்சு என்ன ஏன் டா கூப்புர்ர...
ஆதித் : அவ என்ன காப்பி ரைட்ஸ்ஸா வாங்கி வச்சிருக்கா...
தீரா : டேய்... தெரியாம வந்துட்டேன்... என்ன வச்சு இழுக்காம உங்க பிரச்சனைய பாருங்க டா...
ஆதித் : ஹப்பா... தன்க்ஸ் டி... அப்டியே போய்டு... நா இவள பாத்துக்குறேன்....
உத்ரா : சரி இப்ப முடிவா என்ன சொல்ற...
ஆதித் : அங்க போய் படிச்சு தான் டி ஆகனும்...
உத்ரா : சரி இரெண்டு வர்ஷத்துல வந்துருவல்ல...
ஆதித் : வந்துருவேன் வந்துருவேன்...
உத்ரா : அப்டினா.... வீக்லி ஒரு முறை என் கிட்ட பேசனும்...
ஆதித் : இப்டி சொல்லிட்டு டெய்லி என் கிட்ட கடல போட்ர ஆள் தான நீ...
உத்ரா : ஷு... குருக்க பேசுனா உன் டென்த் ரிசெல்ட் கார்ட கிழிச்சு போற்றுவேன்..
ஆதித் : அடிப்பாவி... இப்டி என் வாழ்க்கைல கை வக்கிரியே... சரி பேசு...
உத்ரா: ம்ம் நல்லா படி... அதே நேரம் மத்த அக்கா அண்ணா மாரி நெறைய மார்க் எடுக்கனும்னு உடம்பு போட்டு படுத்திக்காத... நிதானமா படி... அப்ரம்... சரியா சாப்டு... படிக்கிறேங்குர பேருல நின்னாவிரதம் இருக்காத...
ஆதித் : மை டியர் முறைப்பெண்ணே... தட் ஈஸ் கால்ட் உன்னாவிரதம்...
உத்ரா : ஏதோ ஒன்னு.... யாரு கூடையும் சண்ட போடாத... முக்கியமா கோவம் வந்தாலும் பெரியவங்க முன்னாடி மரியாதையா நடந்துக்க... மரியைதை குறைவா பேசீர கூடாது... அதான் முக்கியம்... அப்ரம்... சண்ட போட கூடாது... கோவப்படக்கூடாதுன்னு சொன்னதால... அடங்கி போகாத... இது இந்த இரெண்டு வர்ஷத்துக்காக இல்ல... தப்பில்லங்கும் போது அழுத்தமா பேசனு... ஆனா கோவப்படக்கூடாது.. அப்ரம்... என எண்ணி கொண்டே கூறியவள் அவன் அமைதியாய் காணுவதை கண்டு... என்ன என புருவத்தை உயர்த்த...
ஆதித் : அம்மா என்ன விட்டு போய்ட்டாங்களேன்னு நெறைய தடவ யோசிச்சிர்க்கேன் அக்ஷா... ஆனா அம்மாவ நா பாத்ததே இல்லங்குரதுனால அவ்ளோ ஃபீலிங் இல்ல... இப்போ நீ சொல்றதெல்லாம் கேக்கும் போது அம்மா கூட இல்லையேன்னு இத்தன வர்ஷம் களிச்சு இப்போ தோனுது....
உத்ரா : ஏன் டா... உன் கூட பத்து வர்ஷமா ஒருத்தி குப்ப கொற்றேன்... நீ ஏன் இப்போ அத்தைய டிஸ்டர்ப் பன்ற... என இடுப்பில் இரண்டு கையையும் வைத்து கொண்டு கேட்க...
ஆதித் : என்ன டி சொல்ற... என உண்மையாகவே புரியாமல் முளிக்க...
உத்ரா : உனக்கு தா நா இருக்கேனே... உன் அம்மாவா... உன் அத்த பொண்ணா... உன் ஃப்ரெண்டா... எல்லாத்துக்கும் மேல உன் அக்ஷாவா... என கூற....
ஆதித்தின் கண்கள் கண்ணீரில் முதல் முறை நிறம்பியது...
ஆதித் : உண்மையாவா டி... எப்பவுமே எனக்கு எல்லாமுமா நீ இருப்பியா....
உத்ரா : லூசு மாமா... எப்பவுமே இருப்பேன்... அக்ஷு ப்ராமிஸ்... என அவன் கன்னத்தில் முத்தம் கொடுத்தாள்.... அதென்ன இத்தன நாள் களிச்சு அம்மா நியாபகம்....
ஆதித் : ஹ்ம்... என் அம்மாவா நீ தான் இருந்தியே... அதான் இத்தன நாள் நினைப்பில்ல.... சரி சரி நா போகவா...
உத்ரா : இரு இரு நா பட்டியல முடிக்கல... அப்ரம்... நைட்டு ரொம்ப நேரம் கண்ணு முளிச்சிருக்காத... காலைல கிளம்பி கரெக்ட்டா ஸ்கூல் போய்டு...
ஆதித் : தங்கமே... போதும் லிஸ்ட்டு போய்க்கிட்டே இருக்கு... அதோட நீங்க அஞ்சாவது தான் முடிச்சிர்க்கீங்க... ஸஸ்டு நைன் யியர்ஸ் ஓல்டு... இப்டிலாம் பக்குவமா பேச கூடாது...
உத்ரா : ம்க்கும்... உன்ட்ட நா அப்டி தான்.... சரி டைம் ஆச்சு மாமா... அவங்க நெத்திய வேற பன்ச்சராக்கீட்டேன்... மாடிக்கு வந்துர போறாங்க... நா கெளம்புறேன்...
ஆதித் : அதெல்லம் அவங்க நீ என் ரூம்ல இருக்கேன்னு தெரிஞ்சா வர மாட்டாங்க...
உத்ரா : அதுக்குன்னு... நா வீட்டுக்கு போவேணாமா... நீ தூங்கு...
ஆதித் : எனக்கு தூக்கம் வரல... இரு அக்ஷா... நாம பேசிக்கிட்டு இருப்போம்... என அடம்பிடிக்க...
உத்ரா : சரி நா தூங்க வைக்கிறேன்... நீ படு... என அவன் சொல்ல சொல்ல கேட்காமல் படுக்க வைத்து.... கட்டிலில்லிருந்து குதித்து ஜன்னல்களை திறந்து விட்டு.... இவன் அருகில் வந்தமர்ந்து அவன் தலையை கோதியவாறே... ஏதோ சிந்திக்க...
ஆதித் : என்ன பலமான யோசனை... பாட்டு பாட போறியா...
உத்ரா : இல்ல நா தூங்கனும்னா நீ என்ன பன்னுவன்னு யோசிக்கிறேன்... என அவன் கேசத்தை வருடியவாறே கூற... அவனோ அந்த சுகத்திலே அவள் கையை பிடித்தவாறு உறக்கத்தில் ஆழ்ந்திருந்தான்....
அதை கண்டு புன்னகைத்த உத்ரா அங்கிருந்து மெதுவாய் அவள் வீட்டிற்கு ஓடினாள்.... அங்கோ ரித்திக்கை பார்க்க வந்திருந்த தியா அவனை பேசி பேசி தூங்க வைத்து விட்டு அவளும் அவன் மடியிலே படுத்து தூங்கி விட்டாள்....
அடுத்த இரண்டு நாட்களில் ஆதித் சென்னைக்கு கிளம்பினான்.... அவனுடன் இருக்க ராசையாவும் ஊருக்கு கிம்பினார்... ரித்திக் பத்தாம் வகுப்பில் எடுத்த மதிப்பெண்ணிற்கு சென்னையில் ஆதித்துடனே தன் பதினோறாம் வகுப்பை தொடர்ந்தான்....
ரித்திக்கிற்கு ஆதித்தை பற்றிய அனைத்து உண்மைகளும் தெரியும்... உத்ராவின் மீதான ஆதித்தின் காதலை தவிர்த்து... அவன் அதை மாத்திரம் காட்டி கொள்ளவும் இல்லை... சொல்லவும் இல்லை....
சிறு வயதில் அவன் தாய் அவனுக்கு வைத்த பெயரை கற்பித்து கொண்டிருந்த ஆதித்தின் அருகில் அமர்ந்து ரித்திக் அதை பார்த்து கொண்டிருக்க... பெயர் நீலமாய் உள்ளதனால அதை சுருக்கி தயா என ரித்திக் அழைக்க தொடங்கினான்...
அதனால் குடும்பத்தாருமே இவர்களை சந்தேகிக்கவில்லை... ரித்திக்கின் நண்பன் தயா என அறிந்தவர்கள் அது ஆதித்தென அறியவில்லை... அதே போல் ஆதித்தின் நண்பன் ராவ் என அறிந்தவர்கள் அது ரித்திக் என அறியவில்லை...
ஆதித்தின் மனதில் உத்ராவின் மீதான அன்பு அபாரமாய் வளர தொடங்கியது.... அதை அறியாத ரித்திக்கும் அவனுடன் மகிழ்வாய் படிப்பை கடத்தினான்...
தினம் உத்ரா ஆதித்திடம் பத்து நிமிடமாவது அடம் பிடித்து பேசி விடுவாள்... அது ஒன்று தான் அவளை நிம்மதியாய் வாழ வைத்தது... ஆதித்தும் தினம் 23 மணி நேரம் 50 நிமிடத்தை தன் அக்ஷாவிற்காய் பொருமையாய் கடத்துவான்....
ஆதித் ரித்திக்கின் நட்பு அழிக்க இயலா விருட்ச்சமாய் அழகாய் வளர... தங்களின் பனிரெண்டாம் பரிட்ச்சையையும் முடித்து விட்டு... இரண்டு வருடத்தின் பின் முதல் முறையாய் அவர்களின் வீட்டிற்கு ஏதோ ஒரு இணம் புரியா உணர்வுடன் சென்றனர்...
அங்கோ ஊரே விழா கோலம் பூண்டிருக்க... ராசையாவுடன் இருவரும் ஊருக்குள் குழப்பத்துடனே நுழைய... தியா பெரிய மனுஷி ஆகி விட்டாள் என்று பெரியவர்கள் டமாரம் அடித்து கொண்டிருக்க... இதை தங்களுக்கு ஏன் தெரிவிக்கவில்லை என்று குழப்பத்துடன் தோழன்கள் இருவரும் நேராக வீட்டிற்கு செல்ல... அங்கோ தன் தோழிகளுடன் பாவாடை தாவணியில் கண்ணா மூச்சி விளையாடி கொண்டிருந்தாள் தியா...
அவளைபாவாடை தாவணியில் கண்ட ஆதித்திற்கு தன் குட்டி தங்கை வித்யாசமாகவும் அவள் வளர்ந்து விட்டாள் என்பதும் புரிந்தது... இத்துனை நாட்கள் குழந்தையாய் தன்னை சுற்றி வந்த தன் தங்கை இப்போது பெரிய மனுஷியா என சிலாகித்து தொண்டான்...
அவனுடனே வந்த ரித்திக்கிற்கு அவளை கண்டு தலை சுற்றி விட்டது.... இந்த பெண்ணை தான் பதினோறு வருடமாய் கண்டோமா.. இன்றென்ன தன் கண்களுகு புதிதாய் தெரிகிறாள் இவள் என பித்து பிடிக்காத குறையாக அவன் நின்றிருக்க... அப்போது எதற்ச்சையாய் இவர்களின் புறம் திரும்பிய விஷ்வா அண்ணா என்ற கூவலுடன் இருவரையும் அணைத்து கொண்டாள்...
அனைவரும் இவர்களின் திடீர் வரவை கண்டு அதிர்ந்து பின் மகிழ்வுடன் வரவேற்த்து அமர வைக்க... தியா பூப்படைந்ததை ஏன் என்னிடம் தெரிவிக்கவில்லை என ஆதித் கேட்டதற்கு... அது உனக்கு பொது தேர்வு நடந்த காலம் அதான் தெரிவிக்கவில்லை என கூற.... சற்றே சமாதானமடைந்த ஆதித் தன் கண்களை அங்குமிங்கும் சுழல விட.... இரண்டு வருடம் களித்து ஆவலாய் காண வந்தவனுக்கு அவனின் குட்டி காதல் தேவதையின் தரிசனம் கிட்டாமல் போக.... அதை அறியாமலே அவனுக்கு சரியாய் உதவினான் அவனின் ஆருயிர் தோழன்...
ரித்திக் : ஆமா... உத்ரா எங்க... எல்லாரும் இங்க இருக்கீங்க... அவ தனியா இருக்க மாட்டாளே...
அன்கி : அவ வீட்ல இருக்கா அண்ணா... என கூற...
ரித்திக் : ஏன் வீட்ல இருக்கா... இங்க வரேன்னு சொல்லிர்ந்தா வந்துருப்பாளே...
மிரு : அவளால முடியல அத்தான்... அதான் அவ வரல...
ஆதித் : என்னது முடியலையா... ஏன் என்ன ஆச்சு... காய்ச்சலா... இல்ல கீழ எங்கையாவது விழுந்துட்டாளா... கால்ல அடிப்பட்டுடுச்சா.... அதான் ஒரு வாரமா என் கிட்ட பேசலையா.... என இவன் அடுக்கி கொண்டே போக....
அம்ருதா : டேய் டேய் பதறாத... அவளுக்கு ஒன்னும் இல்ல...
ஆதித் : அப்ரம் ஏன் மா அவ இங்க வரல...
அம்ருதா : அதெல்லாம் கேக்க கூடாது... பொண்ணுங்க விஷயம் சும்மா இரு... என கூறிவிட்டு சென்று விட.... ஆதித் குழப்பத்திலும் பயத்திலும் மூழ்க..
தியா : டேய் அண்ணா... இருந்தாலும் உனக்கு அவ மேல இவ்ளோ பாசம் ஆக கூடாது டா... அவளுக்கு ஒன்னும் இல்ல... அவ இன்னும் ஒரு ஒரு வாரத்துக்கு வீட்ட விட்டு வெளிய வர மாட்டா... தனியா தான் இருக்கனும்.... என ஏதோ கொஞ்சம் ஹின்ட் கொடுத்து முடிக்க....
ஆதித் : அதான் தியா குட்டி ஏன்...
தியா : அண்ணா... இதுக்கு மேலையும் உன் கிட்ட புரியிர மாரி சொல்ல முடியாது டா...
ஆதித் : ஒரு வாரம் வர கூடாது... தனியா தான் இருக்கனும்னா... அச்சச்சோ அம்ம போற்றுக்கா என் அக்ஷாக்கு... என அவன் கண்கள் விரிய பயத்தில் கேட்க...
அன்கி : அய்யோ அத்தான்... நீங்க புது கதைய கட்டாதீங்க... அவ ஹைட்டாய்ட்டாளாம்... வெளிய வந்தா நெலைல இடிச்சிக்குவாளாம்... அதா உள்ளையே வச்சிர்க்காங்க... என அவளுக்கு கூறப்பட்ட கதையை அப்படியே கூற....
ரித்திக்கும் ஆதித்தும் " ஹைட்டாய்ட்டாளா " என முளிக்க.... பின்னே அதை தமிழில் மொழி பெயத்து பார்த்தவர்களுக்கு என்னவென்று புரிய.... ஆதித் உள்ளூர அதிர்ந்து விட்டான்....
ஆதித் : வாட்.... உண்மையாவா அன்கி மா
மிரு : ஆமா அண்ணா... எனக்கு கூட டௌட்டா இருக்கு.. ஒரு வாரம் களிச்சு அவ திரும்ப குட்டையாய்டுவா போல... அதான் உள்ள வச்சிர்க்காங்களோ என்னவோ... என யோசித்து கொண்டே கேட்க...
அங்குள்ளவர்கள் அனைவரும் அவள் கூற்றில் க்லுக்கி சிரித்து விட்டனர்.... ஆதித்திற்கு ககை கால் ஓடவில்லை.... கிராம பழக்கத்தின் படி... இனி தன்னிடம் தன் அக்ஷாவை பேச விட மாட்டார்களோ... என்னுடன் விளையாட மாட்டாள்... என்னை பார்க்க வர மாட்டாளா... என்னை பார்க்க விட மாட்டார்களா என இவன் பயத்தில் நடுங்க.... அவன் மண்டையிலே கொட்டு வைத்த அவன் அக்ஷா " நா உன்ன விட்டு எங்கையும் போ மாட்டேன் மாமா... நா எப்பவுமே உன் அக்ஷா தான் "என அவள் முன்பு கூறியது நினைவு வர.... ஆதித்தின் கண்கள் தானாய் தெளிவடைய.... இப்போது அவன் வயதிற்கே உறிய குறும்பும் ஆசையும் அவனுள் துளிர் விட....
தன் குட்டி வாண்டு இப்போது எப்படி இருப்பாள்.... அவளுக்கு வேறு தாவணி கட்டவே வராதே... தனியாக எப்டி சமாளிக்கிறாளோ.... அனைவருடனும் இருந்து விட்டு இப்போது தனி குடிசையுள் எப்படி இருப்பாளோ என இவன் அவளுக்காய் கவலை பட.... அந்த இரண்டு வாரம் அவள் தனியாய் இருந்ததே பத்து வருடத்திற்கு அவள் தனிமையில் வாழ உதவ போகிறதென்பதை அவனும் அறியவில்லை அவளும் அறியவில்லை....
வாழ்விற்கு தேவையான அறிவுரைகளையும் சேர்ப்பதை போல் பல அறிவுரைகள் உத்ராவிற்கு வழங்க பட... ஒரு செவுரின் மறு பக்கம் முட்டியை பிடித்து கொண்டு அமர்ந்திருந்தவள் அனைத்திற்கும் தலையாட்டி கொண்டிருக்க... நாளை ஊருக்கே விருந்தென அறிவுருத்த பட... தியாவின் வழியால் ஆதித் வந்த செய்தியும் அவளை வந்தடைய... இந்த ஒரு வாரமாய் அவள் அனுபவித்த உடல் வலிகள் அவன் பெயரை கேட்டதும் தானாய் மறைந்து விட... அவனை பார்க்க வேண்டிய ஆவலில் உடல் வலியை மறந்தாள் உத்ரா....
நாளை ஆதித்தை காணலாம் என்ற ஆவலில் அவள் விரைவாகவே உறங்கி விட... இரவில் ஏதோ சத்தம் கேட்டு கண்களை திறந்தவள் நிலவொளியில் மிளிர்ந்தவாறிருந்த நிழலை கண்டவாறே உறக்கத்திலே ஆழ்ந்தாள்.... மறுநாள் எழுந்ததும் அந்த குட்டி தேவதைக்கு பட்டு புடவை கட்டி அழைத்து வந்து சந்தனம் குழைத்து இரு கன்னத்திலும் தேய்த்து குங்குமத்தை நெற்றியில் வைத்து விட்டனர்.... அவளுக்கு பூ வைத்து அனுப்பி விட.... ஆதித்தை ஓரக்கண்ணால் அவ்வப்போது பார்த்து கொண்டவள் பாவாடை தாவணி அனிய சொல்லவும் தியாவை அழைத்து கொண்டு அறைக்கு சென்றாள்...
ரித்திக்குடன் மறைவாய் நின்று ஏதோ கதை அளந்து கொண்டிருந்த ஆதித்தை திடீரென யாரோ பிடித்திலுக்க... தடுமாறி திரும்பியவன் உத்ராவை அங்கு எதிர்பார்க்காததால் பேந்த பேந்த விழிக்க... தியாவும் அவளுடன் வந்திருக்க... ரித்திக் நிற்பதை பார்த்து விட்டனரோ என இவன் சிந்திக்கும் போதே ரித்திக் அங்கிருந்து செல்வதாய் கூறி செய்கை செய்து விட்டு நகர்ந்தான்...
உத்ரா :மாமா... மாமா எப்டி இருக்கேன்... என தன் பாவாடையை சுற்றி காண்பித்தவளை அப்போதே கவனித்தான்...
அடர் பச்சையும் ஊதாவும் நிறைந்த பாவாடை தாவணி... அந்த அடர் நிறம் அவளின் வெண்மை நிறத்தை இன்னும் கூட்டி காட்ட... மீன் கண்களுக்கு மையிட்டு அழகு மெருகூட்டப்பட்டிருக்க.... வளையல்கள் கையில் தாளம் போட.... காலில் கொலுசு அவளுக்கேற்றார் போல் மென்மையாய் சினுங்க.... மஞ்சளிட்டதால் மங்களகரமாகவும்... கன்னம் சிவக்க.... ஆசையாய் சுற்றி காட்டியவளை மெய் மறந்து போய் இரசிக்க தொடங்கினான் அவன்.... இன்னும் பதில் கூறாதவனை அவள் போட்டு உலுக்க... நிலையடைந்தவன் சிறு பிள்ளையை போய் இப்படி பார்த்தோமே என தன்னை தானே கடிந்து கொண்டவாறு...
ஆதித் : அழகா இருக்க டா அக்ஷா... நீ எப்டி வெளிய வந்த... யாராவது பாத்தா என்ன ஆகுரது..
தியா : தாவணி கட்டி உன் கிட்ட தா காட்டுவாளாம்.. என் உசுர வாங்குரா... அதான் பின் வாசலுக்கு ஜன்னல் வழியா குதிச்சு வந்தோம்...
ஆதித் : சரி சரி இரெண்டு பேரும் கெளம்புங்க... என அனுப்பி வைக்க.... சிட்டாய் பறந்தாள் உத்ரா....
உத்ரவின் அந்த அழகை தன் மனதில் நிறப்பி கொண்டவன் பெருமூச்சு விட்டு அங்கிருந்து நகர்ந்தான்.....
நீ... நான்...
அடுத்த அத்யாயத்தில் Fb முடிவடைந்து விடும்... பின் இன்னும் சரியாக எட்டு நாட்களில் இக்கதை முடிவடைகிறது.... (முடிஞ்சிரும்னு நம்புறேன்..)
DhiraDhi❤
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro