42 நீ... நான்...
இவர்களின் உறவும் இதே போல் நகர... அன்றோடு ஆதித் ரித்திக் பத்து வயதை அடைய... ஷியாம் விஷ்வா எட்டு வயதையடைய... தோழிகள் ஐந்து வயதடைந்தனர்...
வீட்டில் இருந்த போதே ஆதித்தை ஒரு வழி படுத்தும் உத்ரா வெளியே விளையாட தொடங்கியதும்... ஆதித்தின் கழுத்தின் மீது தான் அமர்ந்திருப்பாள்.... அவளை தூக்கி கொண்டு சுற்றுவது தான் அவனுக்கு இருக்கும் ஒரே வேலை...
அவன் கழுத்தில் அமர்ந்து அவன் தலையை இரண்டு கையாலும் பிடித்து கொள்வாள்... சில சமயம்... மாலை ஆறு மணியை தாண்டினாள்.. ஜொய்ன்... ஜொய்ன் என தூக்கத்தில் சொக்கி சொக்கி... அலையலையாய் இருக்கும் மென்மையான அவன் கேசத்தில் தலையணை போல் தலையை வைத்து கொண்டு அப்படியே உறங்கி விடுவாள் உத்ரா... அப்படி அவள் உறங்கும் போதெல்லாம் ஆதித்தின் கரங்கள் அவள் கால்களை கெட்டியாகவும் அதே சமயம் மென்மையாகவும் பிடித்திருக்கும்...
பெரும்பாலும் இவ்விருவரின் ஒற்றுமையை ஊரே அதிசயமாய் காணும்... ஒரு ஞாயிறன்று... விடயற்காலையிலே எழுந்த உத்ரா கண்ணை கசக்கி கொண்டே எழுந்தமர்ந்தவள்.... கட்டிலில் இருந்து இறங்க.... ஆழம் பார்த்து விட்டு.... இரு தலையணையை கீழே போட்டு அதில் கால் வைத்து ஒரே ஓட்டமாய் ஓடி... கதவருகில் நின்று திரும்பி பார்த்தாள்... கட்டிலுக்கு கீழ் பேய் போல் எதுவும் இல்லை என்று உறுதியானதும் தலையணையை தள்ளாடியவாறு தூக்கி கட்டிலில் எக்கி எக்கி போட்டு விட்டு வெளியே ஓடினாள்....
வீட்டின் வெளி புறத்திலுள்ள திட்டுக்களில்... ரித்திக் மிருவை தன் கால் பாததித்தில் நிற்க வைத்து விளையாட்டு காட்டி கொண்டிருக்க.... ஷியாம் விஷ்வா அன்கி வீதியில் விளையாடுவதை கண்காணித்தவாறு ஏதோ ஒரு வகுப்பு புத்தகத்தில் மூழ்கி இருந்தான் ஆதித்...
அவன் அருகில் ஓடிய உத்ரா... மாமா என சினுங்கியவாறு அவன் மடியில் அமர்ந்து கொண்டாள்... புத்தகத்தை மூடி வைத்தவன்... அக்ஷாமா என அவளை சரியாய் அமர வைக்க... அவளோ சற்றே அசைந்து அந்த புத்தகத்தை கரடி பொம்மை போல் கட்டி பிடித்து... அவன் மடியில் படுத்து கண் மூடி கொண்டாள்...
ஆதித் : ஓய்... இப்போ தான எழுந்த... என்ன அதுக்குள்ள திரும்ப தூக்கம்...
உத்ரா : தூக்கம் வடுது மாமா... என கண்களை திறக்காமல் சினுங்கி கொண்டே கூற....
மிரு : உரு டூங்க மூஞ்சி ஆதுண்ணா... என ரித்திக்கின் கரங்களை பிடித்தவாறு சில்லரை காசை சிதற விட்ட ஒசையுடன் சிரிக்க... அதில் பட்டென கண்களை திறந்த உத்ரா... அவன் மடியிலிருந்து எழாமலே... முகத்தை சுருக்கி...
உத்ரா : நா தூங்கல... கண்ண மூடி இருந்தேன்...
ரித்திக் ஆதித் : நம்பீட்டோம் நம்பீட்டோம்...
உத்ரா : தியு எங்க மாமா....
தியா : வந்துட்டேன்... என ஓடோடி வந்தவள்... திடீரென கல் தடுக்கி கீழே விழுந்தாள்....
உத்ராவை கீழே இறக்கி விட்ட ஆதித் " தியா குட்டி " என கத்தி கொண்டே அவளிடம் நெருங்க... அதற்குள் அவளை தூக்கியிருந்த ரித்திக் வீட்டின் வெளி திடலில் அமர வைக்க... உத்ரா ஓடி சென்று ஒரு கின்னத்தில் தண்ணீரை எடுத்து வர....
கொஞ்சம் கீழே ஊற்றி... பாதி மேலே ஊற்றி.... மீதி அங்குமிங்கும் சிதற.... ஒரு பெரிய கின்னத்தில் காவாசி நீர் எடுத்து வந்தவளிடமிருந்து அதை வாங்கிய ஆதித்.... துணி எடுக்க ஓடிய மிருவை தேடி திரும்ப.... அவளும் வர.... அவள் பின் துணியும் வந்து கொண்டே இருந்தது....
ரித்திக்கும் ஆதித்தும் என்னாடா இது என திரும்பி பார்க்க.... துணியின் நுனியை பிடித்திருந்த மிரு அதை ரித்திக்கிடம் தராமல்.... வெளியில் ஓடினாள்.... துணியும் அவளை பின் தொடர்ந்தது... ஆனால் துணியின் மற்றுமோர் நுனி வந்த பாடில்லை.... வலியில் அழுது கொண்டிருந்த தியாவும் கண்ணை கசக்குவதை விட்டு விட்டு அவளை கவனிக்க.... வீதியை இரெண்டு மூன்று முறை சுற்றி விட்டு மற்றுமோர் நுனி வீட்டின் வாயிலை வந்தடைந்ததை கண்டு மீண்டும் இங்கு ஓடி வந்து... இரண்டு நுனியையும் சேர்த்து ஆதித்திடம் மூச்சு வாங்க குடுத்தாள் மிரு...
ஆதித் அவளை சிரித்து கொண்டே ஏறிட... சுற்றி கிடந்த கட்டில் விரிப்பை முழுதாய் தூக்க இயலாமல் முதல் நுனியை மட்டும் எடுத்து வந்தால் இரண்டாம் நுனியும் கிடைக்குமென எதிர்பார்த்தவளுக்கு அது மிகப்பெரிய விரிப்பென தெரியாமல் போக... எப்படியோ இறுதியில் இரண்டையும் சேர்த்து ஆதித்திடம் நீட்ட... அவள் தலையில் வலிக்காமல் கொட்டு வைத்த விஷ்வா இரண்டு நுனியையும் விட்டு விட்டு அதை சிறிதாய் கிழித்து நீரில் நனைத்து தியாவின் காலில் கட்டினான்...
முகத்தை சுருக்கி கொண்ட மிரு தியா சிரிப்பதை கண்டு அவளும் சிரித்தாள்.... சிறிது நேரம் களித்தூ.....
தியா : ரிது ரிது ரிது என தன் காலில் கட்டப்பட்ட துணியை அகற்றும் ரித்திக்கை நச்சரிக்க...
ரித்திக் : சொல்லு யது குட்டி...
தியா : என்ன பன்ற...
ரித்திக் : துணிய மாத்த போறேன்...
தியா : எனக்கு ஒன்னு தெரியனும்.....
ரித்திக் : என்ன தெரியனும்..
தியா : நேத்து ராணிக்கு அடிபட்டு இரத்தம் வந்ததும் தூங்கி விழுந்துச்சு... எனக்கு தூக்கமே வரல... என ஆச்சர்யமாய் கேட்க..
ரித்திக் : ராணியா.... என முதலில் பேந்த பேந்த முளித்தவன் நேற்று ஓடிய நாடகத்தில் உள்ள கதாபாத்திரத்தை கூறுகிறாளென புரிந்ததும்... தலையிலே அடித்து கொண்டான்...
தியா : சொல்லு ரிது
ரித்திக் : யது குட்டி... நாடகம் பாத்து இப்பவே கெட்டு போய்ட்ட டி... அத்த கிட்ட சொல்லி டீவி கனெக்ஷன கட் பன்ன சொல்லனும்... என கூறி கொண்டு எழுந்து செல்ல... நம் தியாவிற்கு தான் ஒன்றும் புரியவில்லை...
மாலை ஆனதும் தியா மற்றும் ஷியாமை அழைத்து கொண்டு பெரிய வீட்டிற்கு சென்றான் ஆதித்... நடு கூடத்தில் கால் மேல் கால் போட்டவாறு அன்னம் அமர்ந்து அம்ருதாவை அதிகாரம் செய்து கொண்டிருக்க... தரையில் ரேகா மேகா மற்றும் ராஜேஷ் ஏதோ சில விளையாட்டு பொருட்களை வைத்து விளையாடி கொண்டிருக்க.... இவர்கள் வந்ததை கண்ட மேகா தியாவுடன் வந்து ஐக்கியமாகி கொண்டாள்...
அன்னத்தின் ஃபோன் அடிக்கவும் அவர் அதை எடுத்து கொண்டு அங்கிருந்து நகர.... அதை எதர்ச்சையாய் கண்ட ஆதித் அவரை பின் தொடர்ந்தான்.... வீட்டின் பின் கொள்ளைக்கு சென்ற அன்னம் யாருக்கோ காத்திருக்க... சற்று நேரத்தில் பம்மி பம்மி வந்த ஒரு வேளையால் நடுங்கியவாறே ஏதோ ஒரு பாட்டிலை அவரிடம் கொடுத்து விட்டு தவிப்பாய் திரும்பி திரும்பி பார்த்தவாறு சென்றார்....
அன்னமறியாமல் மறைந்து கொண்ட ஆதித்... அன்னம் அந்த பாட்டிலில் உள்ள திரவத்தை தியா என்றும் குடிக்கும் பாலில் கலப்பதை கண்டு புருவத்தை சுருக்கியவாறு அந்த வேலையாள் முன் போய் நின்றான்....
அவரோ ஆதித்தை எதிர்பார்க்காதவர் அதிர்ந்து போக.... ஆதித்தோ கொலைவெறியில் அவரை முறைத்து கொண்டிருந்தான்.... அவன் கோவத்தை கண்டதில்லை என்றாலும் அன்னத்தையே எதிர்த்து பேசும் ஒரு ஜீவன் என்று அறிந்திருந்த அந்த வேலையாள் நடுநடுங்கி போக...
ஆதித் : இப்போ என்ன வாங்கீட்டு வந்து அவங்கள்ட்ட குடுத்துட்டு போறீங்க...
அவர் : அ... அது... வ... வந்துங்க சின்னையா...
ஆதித் : பயப்புடாம சொல்லுங்க ப்லீஸ்...
அவர் : மன்னின்னிருங்க சின்னையா... பெரியம்மா... பூச்சி மருந்து வாங்க சொன்னாங்க ஐயா... ஆனா நேத்தே வீட்டுக்கு தோட்டத்துக்கு பூச்சி மருந்தெல்லாம் அடிச்சாச்சு சின்னயா... அத வச்சு என்ன பன்ன போறாங்கன்னு தெரியலங்கையா... என மண்டியிட்டு பயத்தில் கூற....
ஆதித் அதிர்ந்து போய் வீட்டிற்குள் ஓடினான்.... அங்கோ அம்ருதா அனைவருக்கும் டீயை கொடுத்து விட்டு மேகா ரேகா ஷியாம் ராஜேஷ்ஷிற்கு போர்ன்வீட்டாவை கொடுக்க... தியா மற்றும் ஆதித்திற்கு பால் எடுத்து வரப்பட.... தியா தனக்கான க்லஸ்ஸை எடுத்தவள் இன்று அம்மா கேசரி போட்டுறிக்கேன் என ஆசை காட்டியது நினைவு வர.... ஆர்வமாய் அவள் வாயை வைக்க போக.... அந்த க்லஸை பிடிங்கி கீழே போட்டு உடைத்தான் ஆதித்....
அதில் அதிர்ந்த அனைவரும் ஆதித்தை நோக்க.... அவனோ அவன் பால் க்லஸையும் எடுத்து கீழே போட்டு உடைத்தான்.... தியா உடைந்த அதிர்வில் அவனை கட்டி கொண்டு வெடித்து அழுதாள்...
அம்ருதா : ஆதித்... என்ன பன்னி வச்சிர்க்க...
ஆதித் : மா... அத பாப்பாக்கு குடுக்காதீங்க...
அம்ருதா : ஏன் டா... ஏன் இவ்ளோ வேகமா ஓடி வந்து அத போட்டு உடைச்ச...
ஆதித் : அத தியா பாப்பா குடிக்க கூடாது...
நாராயனன் தாத்தா : ஏன் டா பேராண்டி...குடிச்சா என்ன....
ஆதித் : அது... அதுல பல்லி விழுந்துடுச்சு....
துரை : பல்லியா .. என்ன டா சொல்ற...
ஆதித் : அதெல்லாம் தெரியாது... அத தித்தா பாப்பா குடிக்க கூடாது... என அவளை அழைத்து கொண்டு மாடிக்கு சென்றான்.... உடனே ஷியமும் மேகாவும் சென்றனர்...
அவளை அமைதிபடுத்தி உறங்க வைத்தவன்... ஷியாமையும் மேகாவையும் அங்கேயே விட்டுவிட்டு அன் அறைக்கு வந்து கதவை அடைத்தான்...
அம்மாவின் டைரியை எடுத்தவன் கடகடவென அனைத்து பக்கங்களையும் புரட்ட தொடங்கினான்... அதில் அன்னத்தை பற்றி தவறாய் எதுவுமில்லை... அம்மாவின் டைரிகள் அனைத்தும் சென்னையில் இருப்பதை நினைவு கூர்ந்தவன் அங்கு செல்ல முடிவெடுத்தான்... ஆனால் என்ன சொல்லி செல்வதென அவனுக்கு ஒன்றும் தெரியவில்லை... பத்து வயது சிறுவன் சொன்னால் நம்ப மாட்டார்கள் என்பதால் தான் " பல்லி விழுந்தது " என பொய் கூறினான்...
என்ன செய்வதென தெரியாமல் தலையை பிய்த்து கொண்டவனுக்கு அன்னப்பூரனி ஏன் இப்படி செய்தாரென்று சிறிதும் பொரி தட்டவில்லை... அந்தளவுக்கு சிந்திக்க அவன் பக்குவமும் வளரவில்லை என்பதே உண்மை... ஏனெனில் எத்துனை முதிர்ந்த அறிவை கொண்டிருந்தாலும் அன்பென்று வருகையில் மேதாவியே தன் பொருமையை இழக்கும் போது சிறுவன் அவன் என் செய்வான்...
ஏன் தியாவை கொல்ல முயல வேண்டும் என யோசித்தவனுக்கு ஒன்றும் புலப்படவில்லை... இதையே யோசித்து யோசித்து தலையை பிய்த்து கொண்டவனுக்கு தலைவலி பின்னி எடுக்க தொடங்கியது... மதிய உணவை கூட எடுத்து கொள்ளாமல் அந்தி மாலை சாயும் நேரம் வரை அம்ருதா ஆதித்தை அழைத்து கொண்டிருக்க.... அவன் கதவை திறந்த பாடில்லை... மாலை முழுவதும் தன் மாமனை காணாத உத்ரா பெரிய வீட்டிற்கே ஓடி வந்து விட்டாள்....
தனியாய் வந்து அந்த வீட்டின் வாசலில் நின்றவள் ராசையாவை கண்டு சிரித்தாள்... இவளை இங்கு எதிர்பார்க்காதவர் தூக்கி கொண்டு... ஒரு பூவை பறித்து கையில் குடுத்தார்...
ராசையா : ஏன் டா கண்ணு இந்த நேரத்துல இங்க வந்த தனியாவா வந்த...
உத்ரா : தனியா தான் வந்தேன் ராசப்பா...
ராசையா : ஏன் கண்ணு இங்க வந்த... பெரியஊட்டம்மா எதாவது சொல்லுவாங்கல்லை...
உத்ரா : அவங்க சொல்லிப்பிட்டு போறாங்க... நான் என் மாமாட்ட சொல்லிடுவேன்..
ராசையா : சரி ஏன் வந்தீங்கன்னு சொல்லவே இல்லையே..
உத்ரா : நா என் மாமாவ தான் பாக்க வந்தேன்னு சொல்ல மாட்டனே.... என வெகுளியாய் பலிப்பு காட்ட.... வாய் விட்டே சிரித்த ராசையா...
ராசையா : சரி சரி... சொல்லாதீங்க... வேற யாராவது கேட்டாலும் சொல்லாதீங்க... சரியா... என கீழே இறக்கி விட்டார்..
உத்ரா : சரி ராசப்பா... என டாட்டா காட்டி விட்டு வீட்டிற்குள் ஓடியவள் மாடி படியின் பிடியை பிடித்தவாறு மேலே ஓடி.... ஆதித்தின் அறை கதவை தன் பிஞ்சு கைகளால் தட்டினாள்...
அதை கவனிக்காமல் சாய்ந்திருந்த ஆதித்... உத்ராவின் குரல் கேட்டதும் பதறி போய் கதவை திறந்தான்.... அவன் முட்டி அளவு இருந்து கொண்டு... அழகாய் சிரித்தவளை தூக்கியவன்.... உள் அழைத்து சென்று அமர வைத்தான்...
ஆதித் : அக்ஷா தனியாவா வந்த....
உத்ரா : ஆமா மாமா... நீ ஏன் வீட்டுக்கு வரல...
ஆதித் : அது அக்ஷாமா மாமாக்கு தல வலி அதான்...
உத்ரா : இது வலிக்கிதா.... என தலையை சுட்டி காட்டி கேட்க...
ஆதித் : ஆமா டா...
உத்ரா : ஏன் வலிக்கிது...
ஆதித் : ம்.ம் அது... அ மதியானம் சாப்டாம தூங்கிட்டேனா... அதான் வலிக்கிது...
உத்ரா : அப்டியா... அப்போ உனக்கு பசிக்கல...
ஆதித் : ம்ம் பசிக்கிதே...
உத்ரா : அம்மி அத்த உனக்கு சாப்பாடு குடுக்கலையா... பட் அத்த... இரு நா போய் அம்மி அத்தட்ட சண்ட போடுறேன்.... வாரி கட்டிகொண்டு போனவளை பதறி போய் இழுத்தவன்...
ஆதித் : இங்க இருக்கு... நா தான் சாப்டல...
உத்ரா : ஏன் சாப்புல்ல...
ஆதித் : பசிக்கல மா
உத்ரா : கொஞ்சி நேரத்துக்கு முன்னாடி.... பச்சிச்சதுன்னு சொன்ன.... என கண்களை விரித்து கேட்க...
ஆதித் : உன் கிட்ட பேசி சரி கட்ட முடியாது... சாப்புர்ரேன் குடு என வாங்க....
அந்த அறையிலே இருக்கும் குளியலறைக்கு சென்று கையை கழுவி விட்டு வந்த உத்ரா....
உத்ரா : மாமா என்ன தூக்கு...
ஆதித் : ஏன் டி என அவன் இதழ்கள் கேட்டாலும்... கரங்கள் அவளை தூக்கி மெத்தையில் நிற்க வைக்க.... உணவு தட்டை எடுத்தவள் தன் பிஞ்சு கரங்களாளே அவனுக்கு ஊட்டி விட்டாள்.... அத்துனோண்டு கையில் ஒரு நாளைந்து பருக்கு அரிசியே வர... அதையும் மகிழ்வாகவே வாங்கி கொண்டான்.... ஆதித் பெட்டில் சமனம் போட்டு அமர்ந்திருக்க... அவன் முன் பெட்டில் நின்று கொண்டு உணவு ஊட்டினாள் உத்ரா...
அந்த அழகிய காட்சியை அவ்வழியே வந்த துரை கண்டதும்.... கண்களில் கண்ணீர் வலிய அதை ஒரு புகைபடமாய் எடுத்து அங்கிருந்து நகர்ந்தார்....
உணவு ஊட்டி முடிந்ததும்....
உத்ரா : மாமா என்ன எறக்கிவுடு என கத்த...
ஆதித் : இரு இரு வரேன்... என கை கழுவ சென்றவன் தன் மேல் அவன் குட்டி தேவதையினால் இரைத்திருந்த பருக்கையெல்லாம் சுத்தம் செய்து விட்டு வந்து அவளை இறக்கி விட்டான்....
குடுகுடுவென ஓடி சென்று கை கழுவி விட்டு வந்து அவனை பிடித்து கொண்டு கட்டிலில் ஏறி அவன் மடியில் ஜம்மென அமர்ந்து கொண்டாள்...
ஆதித் : அக்ஷா குட்டி... மாமா இந்த வாரம் ஊருக்கு போறேன்...
உத்ரா : எந்த ஊருக்கு... சந்திரினகருக்கு என பக்கத்து தெரு பெயரை தன் வாயில் வந்த சொற்களை கொண்டு கேக்க...
ஆதித் : அங்க இல்ல.... சென்னைக்கு...
உத்ரா : அது எங்க இருக்கு...
ஆதித் : இங்கேந்து ரொம்ப தூரத்துல
உத்ரா : ரொம்ப டூரத்துல இர்ந்தா நீ எப்டி போவ...
ஆதித் : நா போவேன்.... நீ இங்க சமத்தா இருப்பியா...
உத்ரா : நா நல்ல பாப்பா... சமத்தா இருந்ப்பேன்....
ஆதித் : ப்ராமிஸ்...
உத்ரா : ப்ராம்ஸ்...
ஆதித் : ஹாஹா... சரி இப்போ வீட்டுக்கு கெளம்புவோமா...
உத்ரா : ம்ஹும்.... என தலையை ஆட்டி மறுக்க...
ஆதித் : ஏன் வேணாம்....
உத்ரா : மாங்கா சாப்ட்டுட்டு போலாம்... என கண்களை சுருக்கி ஆசையாய் கூற...
ஆதித் : சரி வா... மாங்கா எடுத்துட்டு... நேரா வீட்டுக்கு போவோம்... என சமயலறையிலிருந்து மாங்காவை எடுத்து ருசித்தவாறு இருவரும் வீட்டிற்கு சென்றனர்...
மறுநாள் ஆதித் சொன்ன படியே சென்னைக்கு செல்ல வேண்டிய ஏற்பாடுகளை செய்ய தொடங்கினான்.... அப்போது அனைவருக்கும் முழு ஆண்டு பரிட்சை முடிந்து விடுமுறை விட்டிருந்தனர்.... ஆதலால் அதையே சாக்காய் வைத்து அம்ருதா தேவராயனுடன் எப்படியோ அடம்பிடித்து தியா மற்றும் ஷியாமை அழைத்து கொண்டு சென்னை புறப்பட்டான்....
ஏன் செல்ல வேண்டுமென மொத்த குடும்பமும் கேட்டதற்கு எந்த பதிலையும் அவன் அளிக்கவில்லை.... அன்னம் ஒரு முறை அதட்டி பார்த்ததற்ககு அவன் பார்த்த தீ பார்வையில் அன்னம் அடங்கி விட்டார்...
தன் மகன் ஏதோ முடிவோடு தான் இவை அனைத்தையும் செய்கிறான் என புரிந்து துரை அவனை சென்னைக்கு அனுப்பினார்....
அவன் சென்ற ஒரு நாள் அவனை தேடாமல் இருந்த உத்ரா மறுநாள் தன் ஆர்பாட்டத்தை வீட்டு வாசலில் நின்றே துடங்கி வைத்தாள்....
அவளை அடக்க அக்குடும்பமே படாது பாடு பட.... ரித்திக் ஏதேதோ பேசி ஐஸ் வைத்து கெஞ்சி கொஞ்சி அவளை தூங்க வைத்தான்....
அங்கு ஆதித்தின் நிலையோ தலை கீழாய் இருந்தது... அவன் உணர்வுகளை காட்ட இயலாமல் தினறி கொண்டிருந்தான்....
அதன் பின் எப்படியோ லன்லைன் மூலமாய் ஆதித் வந்தனக்குரிச்சியில் உள்ள ரித்திக்கை தொடர்பு கொண்டான்.... ஆதித்தின் குரலை கேட்டு தான் உத்ரா அமைதியானாள்... எப்படியோ அவனும் கெஞ்சி கொஞ்சி அவளை சமாதானம் செய்து தான் விரைவில் வருவதாய் கூறினான்....
ஆனால் ஒரு வருடம் கடந்தும் அவன் வராமல் போக.... உத்ராவோ தினம் ஃபோனில் சண்டை தான்.... அதையும் அசராமல் சமாளிப்பான் நம் நாயகன்.... திடீரென ஒரு நாள் அனைவரும் ஊரிற்கு திரும்பினர்.... அன்று ஆதித் ஊருக்கு செல்ல அடம்ப்பிடித்ததன் காரணமும் தெரியவந்தது அனைவருக்கும்....
அன்று ரித்திக்குடன் மாந்தோட்டத்தினில் பேசி கொண்டிருந்த ஆதித் உத்ராவை காண அவனுடனே வீட்டிற்கு சென்றான்... அப்போது அங்கு வந்த அன்னம் எவரும் அறியாமல் தியாவை இழுத்து செல்வதை கண்டவன் கொதித்தெழுந்து விட்டான்...
அவள் அதிக சேட்டை செய்கிறாளென குழந்தையென்றும் பாராமல் அவளை அடித்தார்... அதை பொருக்க முடியாத தியா அவரை ஏதோ எதிர்த்து பேசி விட... அதில் தன் மானம் மரியாதை அனைத்தும் இந்த குழந்தையால் பறிபோய் விட்டதெனை கூப்பாடு போட்டவாறு அவளை தறதறவென இழுத்து சென்று இருட்டு அறையில் போட்டு கதவை பூட்ட....
அப்போது அதிரடியாய் உள்ளே வந்த ஆதித் சாவியை பிடுங்கி கதவை திறந்தான்.... பயத்தில் அழுது கொண்டே வந்து அவனை கட்டி கொண்டாள் தியா....
தியா : அண்ணா... என அவள் கத்தி அழ.... அன்னமோ முளி பிதுங்கி நின்றார்....
ஆதித் : யார கேட்டு என் தங்கச்சிய இந்த ரூம்குள்ள பூட்டுனீங்க.... என அவன் கத்திய கத்தில் தியா அழுகையை நிறுத்தியிருந்தாள்.... அன்று தான் முதல் முறை ஆதித்தின் கோவம் அனைவரின் முன்னும் வெளி பட்டது....
தீரா : அன்னைக்கு ஆரம்பிச்சது தான் இன்னைக்கு வர மறையல....
இது வரை குடும்பத்தார் அவன் கோவத்தை கண்டதில்லை.... பலர் வந்து கூறுவர்.... பள்ளியில் அவன் ஹெச் எம் இடமே கத்துகிறான் என்றும்.... அவனை கண்டாள் அவனை விட பெரிய மாணவர்களும் பயத்தில் நடுங்குகின்றனர் என்றும்....
ஆனால் இது வரை இது சரியென்றால் இது சரியென அவன் குடும்பத்திடம் அழுத்தமாய் கூறியிருக்கிறானே ஒழிய.... கோபத்தில் கூறியதில்லை.... ஏனெனில் அவர்கள் அவன் கோவத்தை அதற்கு முன் காண வாய்ப்பு அமையவில்லை...
அவனின் அசத்தலான அதட்டலில் அன்னம் பேயறைந்து போய் நிற்க... அம்ருதாவும் பாட்டிகளும் அதிர்ந்து போய் நிற்க.... தாத்தாக்களும் அப்பாக்களும் ஓடோடி வந்தனர்.....
உடல் விரைத்து தன் வலக்கையில் தியாவை பிடித்தவாறு கொலை வெறி கண்களில் தெரிய நின்றான் பதினோறு வயது மட்டுமே ஆன ஆதித்தன்...
துரை : ஆதித்... என்ன பா ஆச்சு...
ஆதித் : வாங்க மிஸ்டர் தங்கதுரை... உங்க அருமை வொய்ஃப் என்ன பன்னீர்க்காங்கன்னு பாருங்க.... என் ஆறு வயசு தங்கச்சிய வலுக்கட்டாயமா இழுத்துட்டு வந்து இந்த ரூம்ல அடச்சு வச்சிர்க்காங்க.... ஹவ் டர் டு டூ திஸ்... என்ன தைரியத்துல இப்டி பன்னாங்க.... என்றதில் துரையே ஒரு நொடி ஆடி போனார்....
அன்னம் : ஆதித்தா.... என்ன வார்த்தை பேசுற.... நா உன் அம்மா...
ஆதித் : ஜஸ்ட் ஷட் அப்.... இந்த ரீலெல்லாம் எந்த கேனைட்டயாவது போய் சொல்லுங்க... நாட் எவர் டு மீ... தாத்தா
தாத்தாஸ் : சொல்லு ப்பா...
ஆதித் : இனிமேலும் இவங்க என் தம்பியையோ தங்கச்சியையோ எதாவது பன்ன நெருங்குனா ஒரு வர்ஷத்துக்கு முன்னாடி போன மாரியே இப்பவும் என் தம்பி தங்கச்சிய கூட்டிக்கிட்டு சென்னைக்கே போய்டுவேன்.... என் கிட்ட ஜாக்கிரதையா இருக்க சொல்லுங்க.... வர்ர கோவத்துக்கு பக்கத்துல உள்ள ஜாடி இரத்தமாய்டும்.... என ஜாடியை எடுத்து அன்னத்தின் மண்டையை உடைத்து விடுவே என சிம்பாளிக்காய் காட்டு கத்து கத்தி விட்டு அரண்டு போய் நின்றிருந்த தியா மற்றும் ஷியாமை அழைத்து கொண்டு மாடி ஏறினான்....
இவன் இந்தளவு கோபப்படுவான் என எதிர்பார்த்திராத மொத்த குடும்பமும் அதிர்ச்சியில் உறைந்து நிற்க... ஒரு வருடம் முன் தியா ஷியாமை எப்படியாவது கொன்றுவிட்டு முழு சொத்தும் ஆதித் பேருக்கு வர வேண்டுமென திட்டமிட்ட அன்னம்.... தியாவின் பாலில் பூச்சி மருந்தை கலக்க... அதை ஆதித் தட்டி விட்டதும் அதிர்ந்து போனார்.... அடுத்த ஒரு வருடம் அவர்களிருவரையும் நெருங்க முடியாத படி ஆதித் இருவரையும் சென்னை அழைத்து சென்றிருக்க.... இன்றைய இவனின் செயலும்... கடுங்கோபமான உத்தரவும்... தான் அன்று பூச்சி மருந்து கலந்ததை இவன் பார்த்துவிட்டானோ என அன்னத்திற்று இருந்த சந்தேகத்தை உண்மை தான் என வலுவூட்டியது...
இதனால் இனி அவர்களை நெருங்கும் வேலையை விட்டார் அன்னம்.... ஏனெனில் சல்லி காசை பொருக்க போய் பொக்கிஷத்தை விட கூடாதல்லவா... அவரை பொருத்தவரை ஆதித் அலிபாபா குகையை திறக்க உள்ள தங்கசாவி.... அதை இழந்து விட அவருக்கு மனயில்லை....
தீரா : இருந்தாலும் நானே... என் ஹீரோவ அலிபாபா குகை அளவுகு எடை போட கூடாது....
மற்ற அனைவரும் " இவன் மகா கோபக்காரனா வருவான் போலயே " என எதிர்காலத்தை சரியாய் கனித்த படி செல்ல.... தன் மகனின் இந்த கோபத்தை கண்ட துரை உடனே பள்ளிக்கு சென்றார்....
அங்கு தன் மகனை பற்றி விசாரித்தவருக்கு... எதுவும் தப்பாய் கிடைக்காமல் அனைத்தும் உயர்வாகவும்... அதே சமயம்.... பயத்தோடும் வெளி வந்தது....
அவன் அடிப்பான் என்றெல்லாம் எவருக்கும் பயமில்லை... ஆனால் அவன் பேச்சிலிருக்கும் அந்த அதிகாரம் தான் குற்றம் செய்பவர்களை நடுங்க வைக்கிறது... அங்கு சாதாரணமாய் இருப்பவர்களெல்லாம் அவனை பற்றி புகழ.... பள்ளியில் ரௌடி தனம் செய்யும் மாணவர்களும் அவன் வகுப்பு ஆசிரியரும் தான் அவனை பற்றிய உண்மைகளை கூறினர்...
அனைவர் முன்னும் அமைதியாகவும் அழுத்தமாகவும் இருப்பவன்.... எந்த தவறையவநு கண்டால் தைரியமாய் எதிர்த்து கேட்பான்....
அப்படித்தான் ஒருமுறை அவன் நான்காம் வகுப்பின் தொடக்கத்தில் இருந்த போது யூகேஜி படித்து கொண்டிருந்த உத்ராவை அழ வைத்த அவன் வகுப்பில் உள்ளசக மாணவனை சராமரியாய் அடித்தது தெரிய வந்தது.... அடி வாங்கியவன் வீட்டில் அடிவாங்கியதை மறந்தும் சொல்லவில்லை... ஆனால் மறுநாள் ஆதித் நேராக மேலாளர் அறைக்கு சென்று தான் செய்தவையை கூறி தண்டனை பெற்று கொண்டான்.... இதை அந்த மேலாளர் துரையிடம் கூற.... துரைக்கோ ஆதித் புரியாத புதிராய் தெரிந்தான்.....
அடுத்த இரண்டு வருடம் சாதாரணமாய் செல்ல.... ஆதித் மற்றும் ரித்திக்கின் நட்பு விருட்ச்சமாய் வளர்ந்தாலும் அவர்களின் பதினான்காவது வயதில் வந்தது அந்த சண்டை....
நீ... நான்...
DhiraDhi❤
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro