39 நீ... நான்...
ஆதித் : என் பொண்டாட்டிய என்ன சொல்லி விட்டுட்டு போனேன்... என்றவனின் கர்ஜனைனில் அவனின் உயிர் தோழன் ரித்திக்கே அதிர்ந்து நின்றான்...
தூர்தேஷ் : பொண்டாட்டியா... கொழந்த எந்த ஸ்கூல்ல டா படிக்கிது... என கேட்டவாறே வந்தான் தூர்தேஷ்... ஆதித் அவனை கொலை வெறியுடன் முறைக்க...
ரித்திக் அவனை வெட்டவா குத்துவா என்பதை போல் பார்க்க... அவன் காதருகில் சற்றே சாய்ந்த தூர்தேஷ்...
தூர்தேஷ் : ஏன் டா இப்டி முறைக்கிறான்... தப்பான நேரத்துல வந்துட்டனா என்ன...
ரித்திக் : மவனே இப்போ நீ வாய தொறந்தன்னா அவன் உன் பல்ல கலட்டி கைல குடுத்துருவான்... மூடிக்கிட்டு அவன் கொஞ்ச நேரங்களிச்சு சொல்ல போற ஃப்லஷ்பக்க கேளு...
தூர்தேஷ் : ஓ மை காட்... வெரி சீரியஸ்... என வாயை மூடி கொண்டான்...
ஆதித் : நா என்ன சொல்லி விட்டுட்டு போனேன்னு கேட்டேன்... என அவன் கத்தியதில் அங்கு எதர்ச்சைையாய் வந்த நர்ஸ் ஒன்று தொபக்கடீர்ரென என கையிலிருந்த ட்ரேவை கீழே விட்டது...
உடனே அவருக்கு உதவிய தூர்தேஷ் சிறிய புன்னகையுடன் மீண்டும் வந்து நின்று கொண்டான்.... அந்த பெண்ணோ இவர்களையே வைத்த கண் வாங்காமல் பார்த்து விட்டு அங்கிருந்து நகர்ந்தது...
அம்ருதா : டேய் என்ன டா நடக்குது இங்க... அவள எதுக்கு டா பொண்டாட்டின்னு சொல்ற.... தெளிவா சொல்லு டா....
ஆதித் : அவ புருஷன் நான் தான் அவள பொண்டாட்டின்னு சொல்ல முடியும்....
அப்போது சரியாய் வம்பை விலை குடுத்து வாங்கவே ரேகாவை இழுத்து கொண்டு ஒப்பாரி வைத்தவாறு வந்தார் அன்னம்...
தீரா : இதுக்கு எவ்ளோ பட்டாலும் சொரணை வராது போலையே... இறைவா... என் ஹீரோவ கொல கேசுன்னு கோர்ட்டுக்கும் வீட்டுக்கும் அலைய கூடாது... இப்போ தான் ஹீரோயின் கூட சேர்ந்துருர்க்கான்... நிம்மதியா வீட்ல வாழனும்...
அன்னம் : என் ராசா... என்ன டா பேசுற.... உனக்கு நிச்சயம் பன்னவ இங்க இருக்கா... நீ எவளையோ உன் பொண்டாட்டின்னு சொல்ற...
தியா : உங்களுக்கு வெக்கம் மானம் சூடு சொரணை எதுவுமே இருக்காதா.... இரெண்டு நாள் முன்னாடி தான என் அண்ணன் உங்கள கொல்ற அளவுக்கு போனான்.... இப்போ திரும்பவும் அதே பல்லவிய பாடிக்கிட்டு வரீங்க... நிச்சயமாச்சா.... கணவு மட்டும் தான்.... மரியாதையா போய்டுங்க இங்க இருந்து... என எச்சரிக்க...
அன்னம் : போடி அந்த பக்கம் பெத்த தாயோட வைத்தெரிச்சல் உனக்கெங்க டி புராய போகுது...
தியா : அவங்க காதல பத்தி தெரியாம பேசாதீங்க...
அன்னம் : என்ன டி பொல்லாத காதலு...
தியா : என்புள்ள என் புள்ளங்குரியே... அன்னைக்கு என் அண்ணனுக்கு காய்ச்சலுல மூச்சு கூட விட முடியாம இருந்தப்ப... எங்க யாருக்குமே தெரியவும் இல்ல.... அப்போ இவ எங்கிருந்து வந்தான்னு தெரியல.... என் அண்ணனுக்கு எல்லாம் பாத்து பாத்து செஞ்சா தெரியுமா.... அவன கஷாயம் குடிக்க வைக்கிறது எவ்ளோ பெரிய விஷயம்னு குடும்பத்துக்கே தெரியும்... ஆனா இவ குடுக்க அவன் குடிச்சான்... தூக்கத்துல அம்மாவ தேடுனவன்... அவ பக்கத்துல வந்ததும் அவள தான் கூப்ட்டான்.... அந்த மயக்கத்துல கூட அவங்க உறவ பிரிக்க முடியாத புரிதல் தான் அங்க இருந்துச்சு.... அவன் லைட்டா இருமுனதுக்கே அவ சிந்துன கண்ணீர் எவ்ளோன்னு தெரியுமா உனக்கு.. அன்னைக்கு அவன் எக்கேடு கெட்டா எனக்கென்னன்னு நீ உன்ன காப்பாத்திக்க முத ஆளா அங்க இருந்து ஓடீட்ட... எங்க எல்லாரையும் என் அண்ணன் தான் கட்டாய படுத்தி அனுப்பி வச்சான்... அப்போ கூட எங்க கிட்ட சொல்லாம தான் உயிர கூட பத்தி யோசிக்காம எங்கள விட்டுட்டு அவன தேடி போனவ அவ.... இந்த இரெண்டு நாள் அவ எந்த நிலமைல இருந்தான்னு தெரியுமா உனக்கு... தெரியுமா..... மூணு வர்ஷத்துக்கு முன்னாடி வர எப்டி பைத்தியம் மாரி ஒரே ரூம்ல அடஞ்சி கிடந்து கண்ணீர் சிந்துனாளோ... அப்படி தா இப்பவும் இருந்தா.... அவனுக்காக தான் நொடிக்கு நொடி அழுதா... நைட்டு கூட அவன் முளிப்பானோன்னு முளிச்சு முளிச்சு பாத்து தூங்காம இருந்தா தெரியுமா.... இதுல எதாவது ஒன்னு நீ பன்னீர்க்கியா... இதுன்னு இல்ல.... அவன் பொறந்த குழந்தையா இருந்த போது அம்மாவ தேடுனப்போ நீ அம்மாங்குர பேருக்கு அவன தூக்கி சமாதனமாவுது படுத்துனியா... இல்ல.... அம்மா அம்மான்னு சொல்ல தான் லாயிக்கு... ஆனா என் உரு... அத செயல்ல காற்றவ.... என கூற.... அவை அனைத்தையும் கேட்ட அனைவரும் உத்ரா இவ்வளவு அனுபவித்தாளா என்பதாய் அதிர்ச்சியடைய.... ரித்திக் இதை கவனிக்காமல் போனதை எண்ணி தனக்குள்ளே குமுறி கொள்ள.... ஆதித் தன்னவள் அனுபவித்த வேதனைகளை எண்ணி மொனமாய் கண்ணீர் வடிக்க.... அவன் கைகளை இருக்கி பிடித்த உத்ரா " உன் பாக்காம இருந்தத விட இதெல்லாம் எனக்கு பெருசா இல்ல மாமா " என கண்ணீரை துடைத்து விட்டு கூறினாள்.....
அன்று உத்ரா மற்றும் ஆதித்தை சேர்த்து கண்டு விட்டு அமைதியாய் அங்கிருந்து வெளியேறியது நம் தியாவே தான்....
ஆதித் : தாத்தா... தயவு செஞ்சி அவங்கள அமைதியா இருக்க சொல்லுங்க... அன்னைக்கு தப்பிச்சவங்க இன்னைக்கு என் கைல மாட்டி செத்துர போறாங்க...
அன்னம் : உனக்கு ட்ரீட்மென்ட் நடக்குதுன்னு எவ்ளோ துடிச்சேன் தெரியுமா... பெத்த அம்மாவ இப்டி சொல்றியே டா.... என அவரை நெருங்க... ஆதித்தின் முன் வந்து அவனுக்கு அரணாய் நின்றாள் உத்ரா...
உத்ரா : தேவையில்லாம பேசாதீங்க... அவன் பேச ஆரம்ச்சான்னா நீங்க தாங்க மாட்டீங்க...
அன்னம் : நீ என்ன டி அம்மா புள்ளைக்கு நடுவுல வரது... அவன் கிட்ட இருக்க ஜமீன் சொத்த பாத்து மயங்குனவ தான டி நீ... என்ன மந்திரம் போட்டா டா அவ...
உத்ரா : வேணாம் சொன்னா கேளுங்க... என அவள் முடிப்பதற்குள்ளே ஆதித் அவனின் துப்பாக்கியை ரித்திக் பாக்கெட்டிலிருந்து உருவியிருந்தான்... அதை கண்ட உத்ராவும் ரித்திக்கும் பதற.... அன்னம் அதிர... சட்டென உள் வந்தார் நாராயனன் தாத்தா...
நாராயனன் தாத்தா : ஆதித்தா... பொருமையா இரு... ஏன் டா இப்டி ஆவேசப்படுர....
ஆதித் : என் முன்னாடியே அந்த ஜென்மம் என் பொண்டாட்டிய தரை குறைவா பேசும்... நா பாத்துட்டு சும்மா இருக்கனுமா... என அவரிடம் உரும... அவரோ எச்சிலை வாழுங்கினார்...
மரகதம் பாட்டி : அவங்க உன் அம்மா பா...
ஆதித் : நீங்க சொல்ற பொய்ய ஊரு நம்பலாம்... நா நம்ப மாட்டேன்....
பிருந்தா பாட்டி : ஏன் யா இப்டி பேசுற...
ஆதித் : ம்ச்... சும்மா பேசாதீங்க பாட்டி... எனக்கு எல்லா உண்மையும் தெரியும்... அதனால தான் பத்து வயசுலையே இவங்க மூஞ்ச பாக்கவே கூடாதுன்னு இங்க இருந்து போனேன்...
அன்னம் : உனக்கென்ன டா தெரியும்... அ... என்ன தெரியும்...
ஆதித் : நீ என்ன பெத்தவரோட இரெண்டாவது மனைவின்னும்... என்ன பெத்த என் அம்மாவ கொன்ன கொலகாரின்னும் எனக்கு மட்டும் தான் தெரியும்... என அவ்விடமே அதிர கத்தினான்... உத்ரா அவன் கரத்தை உடனே இருக்கி பிடித்து கொண்டாள்...
உத்ரா : மாமா ப்லீஸ்...
ஆதித் : சும்மா இரு டி... எத்தன வர்ஷத்துக்கு இத மறைக்க சொல்ற.... என்ன வளத்தவங்கல்லேந்து என்ன பாக்குர எல்லாரும் நா இதோ... இங்க நிக்கிதே இது புள்ளன்னு நெனக்கிறாங்க... ஆனா நா.... தங்கதுரை ராம்லீலாவோட புள்ளன்னு இங்க யாருக்கு தான் தெரியும்....
அன்னத்தின் முகம் வெளிரியது... குடும்பமே இதை கேட்டு அதிர்ந்தனர்.... இதை எவரும் எதிர்பார்க்கவில்லை.... ராம்லீலா என்ற பெயரை கேட்டதுமே உத்ராவின் தாய் கார்த்திகா கண்ணீருடன் சட்டென நிமிர்ந்து பார்த்தார்...
ஆதித் : எனக்கு அப்பாவும் கெடையாது... அம்மாவும் கிடையாது... இரெண்டு பேரும் செத்துட்டாங்க.... போதுமா... என்றதுமே
உடனே வேறு ஓர் திட்டத்தை தீட்டினார் அன்னம்...
அன்னம் : அப்போ... உன் அப்பா என்ன ஏமாத்தீட்டாரா.... நீ எனக்கு பொறந்தவன்னு தான சொன்னாரு... அப்போ நீ யாருக்கோ பொறந்தவனா... தோ நிக்கிறாளே... இந்த இராசி கெட்டவ... அவளால தான டா நீ இவ்ளோ பேசுற... நா பெத்தவன் நீ இல்லல்ல... யாரோ ஒருத்திக்கு பொறந்த உன்ன உன் அப்பா என் கிட்ட குடுத்துட்டாரா... யாரும் இல்லாத அனாதை நீ... என்ன எதிர்க்க துனிஞ்சிட்டல்ல.... என கூறிய அடுத்த நொடி அன்னத்தின் கன்னம் பழுத்திருந்தது...
ஆதித்தின் முன் ருத்ரகாளியாய் நின்று கொண்டாருந்தாள் உத்ரா.... இந்த அறையை ஆதித்தே எதிர்பார்க்கவில்லை.... அங்கிருந்த அனைவரும் உத்ராவை கண்டு அதிர்ச்சியின் எல்லையில் இருந்தனர்.....
உத்ரா : அறிவிக்கெட்ட ஜென்மமே.. தொடப்பக்கட்ட பிஞ்சிடும்... எவ்ளோ சொன்னாலும் திருந்த மாட்டிடா நீ... யார பாத்து அனாதைன்னு சொன்ன.... என்ன பாக்க உனக்கு எப்டி தெரியிது... என் புருஷன பத்தி பேச உனக்கெந்த அருகதையும் இல்ல... என் மாமா... தங்கதுரை மாமாக்கும் ராம்லீலா அத்தைக்குமான புனிதமான காதலுக்கு அடையாளமா பொறந்தவன்... என் அத்த இறந்ததும் கட்டாயத்தால உன்ன கல்யாணம் பன்னிக்கிட்டு அவங்க பையன உன்ன வளக்க சொன்னாங்க மாமா... ஆனா நீ என்ன பன்ன... அவருக்கே தெரியாம.... " வாடகத்தாயால எனக்கும் என் புருஷனுக்கும் பிறந்த குழந்தை தான் இவன் " னு சொன்ன.... ஆனா உண்மை... மாமாவோட முதல் மனைவியான என் அத்தை இறந்தத நீ தான சந்தர்ப்பமா உபயோகிக்ச்சிக்கிட்ட... நீயே பேசுறியா... மரியாதையா இங்க இருந்து போய்டு... அப்ரம் என் பெரிய மாமாவோட மனைவிங்குர மரியாதை கூட இல்லாம போய்டும்... என அவள் கத்திய கத்தில் அரண்டு போன அன்னம் ரேகா இழுத்த இழுப்பிற்கு அங்கிருந்து வெறித்தவாறே நகர்ந்தார்....
அவர் ஆதித் கோபப்படுவான் என எதிர்பார்த்தார்... ஏனெனில் அவன் கத்தினால் அதை கேட்டு மாரடைப்பு வந்தமாதிரியும்.... மருத்துவரை கரெக்ட் செய்து " எந்த அதிர்ச்சியாகும் விஷையத்தையும் அவரிடம் கேட்க வேண்டாம் " என கூற சொல்லி தப்பிக்கலாமென திட்டம் தீட்டியிருக்க.... ஆனால் அவர் கூறிய வார்த்தைகளில் உத்ரா பொங்கி விட்டாள்....
குடும்பத்தார் அதிர்ச்சியின் எல்லையில் இருக்க...
ராஜேந்திரன் தாத்தா : ஆதித்தா... என்ன பா இது... இதெல்லாம் உண்மையா...
ஆதித் : ஆமா தாத்தா... எல்லாமே உண்மை தான்....
உத்ரா : தாத்தா இனிமே இத பத்தி பேச வேண்டாம்... என்ன தா இருந்தாலும் அவங்களுக்கு பெரிய மாமா புருஷன்... அவங்களுக்கு இருக்க வேண்டிய உரிமை அப்படியே இருக்கனும்.... அதுல யாரும் இடையூறா இருக்க வேண்டாம்... இந்த பேச்ச இப்டியே விடுங்க... என் மாமாட்ட எதுவும் கேட்காதீங்க... என அவனை அழைத்து கொண்டு போக போனவளை மீண்டும் தடுத்தார் சசிக்கலா....
சசிக்கலா : என்ன டி... அவனுக்கு ஆதரவா பேசி அவன மயக்குரியா.... இப்போ தெரியிதே இவனோட சுயரூபம்... இவன் சரியா பொறந்துர்ந்தாளோ... இல்ல அம்மா சரியா வளத்துருந்தா ஏன் உன் கிட்ட மயங்க போறான்... ஓ... அனாதைல... அது மறந்துருச்சே.... என கூறவும்... இப்போது அருகிலிருந்த கன்னாடி ட்ரேயிலிருந்த ஆப்ரேஷனிற்கு உபயோகிக்கும் கத்தியை எடுத்து அவர் கழுத்தில் வைத்து விட்டாள் உத்ரா....
கார்த்திகா : உத்ரா... என அதிர்ச்சியில் கத்த....
ஆதித்தோ அவளை மனம் குளிர பார்த்து கொண்டிருந்தான்...
சசிக்கலா பாட்டி பேயறைந்த முளியுடன் அவளை பார்த்து கொண்டிருக்க.... உத்ராவோ தன் பல்லிடுக்கில் வார்த்தைகளை துப்பினாள்.... அவளின் கண்களில் தெரிந்த கோவத்தை அவள் தோழிகளே ஆச்சர்யமாய் பார்த்து கொண்டிருந்தனர்....
உத்ரா : உனக்கு கடைசியா வாய்ப்பு குடுக்குறேன்... என்ன பத்தி என்ன வேணா சொல்லிக்கோ.... ஆனா அவன பத்தி எதாவது சொன்ன..... நா சும்மா இருக்க மாட்டேன்.... என்ன கொலகாரியாக்கீடாத... நா அவனோட பொண்டாட்டி.... அவனுக்காக நான் இருக்கேன்.... என் மொத்த உலகமும் அவன் தான்... இனிமே அவன அனாதைன்னு சொல்லி பாரு... சொல்ற வாய அருத்துருவேன்....
சசிக்கலா : என்ன டி மெரட்டுரியா... என திக்கி தினறி கேட்க....
உத்ரா : நம்பமாட்ட???
சசிக்கலா : மாட்டேன் டி... பொண்டாட்டி பொண்டாட்டிங்குரியே... என்ன டி ஆதாரம் இருக்கு... என்ன அவன் கூட காசு வாங்கீட்டு படுத்தத நிரூபிக்க போறியா... என மீண்டும் வாயை விட....
ஆதித் இப்போது பொங்கி விட்டான்....
ஆதித் : ஏய்...
உத்ரா : ஆதன்... அமைதியா இரு... என்ற அவளின் வார்த்தையில் ஏதும் செய்ய இயலா நிலையை எண்ணி அவன் அருகிலிருந்த கன்னாடி கதவை உடைக்க போக.... அவனை பிடித்திழுத்து தூர்தேஷும் ரித்திக்கும் அமைதி படுத்தினர்....
உத்ரா : இந்த நேரத்துல ஆவேசபட கூடாது... நிரூபிக்கனும்... அப்ரம் இது மூஞ்சிய தூக்கி எங்க வைக்கிதுன்னு பாக்குறேன்... என கூறியவள் அவளின் விரித்து விட பட்டிருந்த கூந்தலை ஒதுக்கி... அவள் ஆடையிலே.... அவள் இத்துனை காலமும் மறைத்து வைத்திருந்த அந்த தங்க சங்கிலியை எடுத்து வெளியே போட்டாள்.... அவள் கழுத்திலே அதே போல் வேறு ஒரு சங்கிலி கிடுக்க... அதை கலட்டி ஆதித்திடம் கொடுத்தாள்..
அவன் அவளையும் அதையும் மாற்றி மாற்றி பார்க்க.... புன்னகைத்த உத்ரா... அதை எடுத்து அவன் கழுத்திலே போட்டு விட்டாள்.... அறைவரும் நேற்று இதை ஆப்பரேஷன் முடிந்ததும் ஆதித்தின் பொருட்களென அவனின் செய்ன் வாட்ச்சை கொடுத்தது நினைவில் வந்து போனது...
அவள் கழுத்தில் கிடந்த சங்கிலியை காட்டியவள்...
உத்ரா : போதுமா... இது என் ஆதன்... எனக்கு பத்து வர்ஷத்குக்கு முன்னாடி மார்ச் மாசம் 4 ஆம் தேதி 5 மணிக்கு தீவிபத்து நடந்து நா கோமாக்கு போனதுக்கு சரியா இரெண்டு மணி நேரத்துக்கு முன்னாடி... ஆதாவது தங்கதுரை மாமா கடைசியா உரை நடத்தீட்டு என்ன என் மாமாவ அழைக்க அனுப்ச்சப்ப... 3:46 க்கு தா இத என் கத்துல போட்டான்... நா இந்த சங்கிலிய அவன் கழுத்துல போட்டேன்... இத்தன நாளா இத சும்மா போட்டான்னு நெனச்சு தா யார்ட்டையும் சொல்லல... அவன் நியாபகமா இருந்ததால கலட்டவும் இல்ல.... ஆனா அன்னைக்கு அந்த மேடைல அவன் சொல்லும் போது " எனக்கு உரிமையானவள தவிற வேற யாருக்கும் போட மாட்டேன் " னு சொல்லும் போது அவன் பார்வை என்ன தீண்டுச்சு... அதுலையே தெரிஞ்சிக்கிட்டேன் அது நான் தான்னு.... போதுமா.... என அச்சு பிசகாமல் நேரம் நொடி காலமென கூறுபவளை இமைக்க மறந்து பார்த்தனர் அனைவரும்....
ஆதித் : அக்ஷா... என்ற அவனின் உருமலில் அவள் உடனே அவன் புறம் ஓட.... சசிக்கலா அவனை நடுக்கத்தை மறைத்து கொண்டு பார்க்க...
உத்ரா : சொல்லு ஆதன்...
ஆதித் : சாரி டி... நீ இந்த செய்ன தூக்கி போட்டுட்டன்னு நெனச்சி தான் டி நா அன்னைக்கு கோவப்பட்டு.... என கூற முடியாமல் தினற....
உத்ரா : ம்ம் இது என் உயிரு டா... நா எப்டி தூக்கி போடுவேன்...
ஆதித் : சாரி டி...
உத்ரா : ப.... நீ என் மாமா கிடையாது... அவன் இப்டி அழுவ மாட்டான்.... நீ அழுமூஞ்சியா இருக்க....
ஆதித் : ஏன் டி கோவமா இருந்தா சிடுமூஞ்சிங்குர... அழுதா அழுமூஞ்சிங்குர... என்ன எப்டி டி இருக்க சொல்ற....
உத்ரா : என் ஆதனா இரு... என அவள் பட்டென கூற....
ஆதித் : ஆஹான்....
உத்ரா : ஆமா... எனக்கு அவன தான் புடிக்கும்... அவன பாத்தா ஊரே நடுங்கும்... அவன் அழுது எவனும் பாத்ததில்ல.... அவன் யார்ட்டையும் தலை குனிஞ்சு நின்னதே இல்ல... நிமிர்ந்து நிக்கிறது தான் அவன் பாலிசி.... எதுவா இருந்தாலும் ஃபேஸ் பன்னுவான் சோ.... நீ.. நீயா இரு.... என கண்ணடிக்க... கன்னத்தில் குழி விழ அழகாய் சிரித்து அவள் நெற்றியோடு தன் நெற்றியை முட்டினான் ஆதித்....
தன் மகன் பத்து வருடம் களித்து நிறைவாய் சிரித்து இப்போது தான் பார்க்கிறார் அம்ருதா... அவருக்கு உத்ரா விண்ணிலிருந்து இறங்கிய தேவதை போல் தெரிந்தாள்....
ஆதித் : மாமா...
ராமானுஜம் : தம்பி....
ஆதித் : என் பொண்டாட்டிய இனிமே நானே பாத்துக்குறேன்... உங்க வீட்ல இருந்தா இந்த மாரியான பிறவிங்க அவள வாழ விடாது.... இத்தன வர்ஷமா அவள பாத்துக்குட்டதே போதும்... உங்க மகங்குர உரிமைய நா பறிக்க மாட்டேன்... எப்போ வேணா அவள நீங்க பாக்க வாங்க... அவ கூடவே மாசக்கணக்கா வேணும்னாலும் தங்குங்க.... ஆனா இனிமேலும் புருஷன் உயிரோட இருந்தும் என் பண்டாட்டி அப்பா வீட்ல இருக்க மாட்டா..... நா எதாவது தப்பா சொல்லிட்டேனா.... என பணிவாக கூற....
இராமனுஜம் : இல்ல தம்பி... நீ சொன்னதெல்லாம் சரி தான்.... இப்போ எங்க மகளுக்கு முழுசா தானாவே முடிவெடுக்குர பக்குவம் வந்துருச்சு... நாங்க அவளுக்கு கல்யாணம் பன்ன பாத்தது... அவ எந்த மறுப்பும் தெரிவிக்கலன்னு தான்... ஆனா அவ நீங்க மனசுல இருக்கீங்கங்குரதையே அறியாமே எங்க வாய் மூடீட்டா.... நீங்க அழச்சிட்டு போறதுல தப்பே இல்ல....
அம்ருதா : நீங்க கவலப்படாதீங்க அண்ணா.... உங்க பொண்ணு நா என் மகளா பாத்துக்குவேன்... என்க... அந்த பெற்றோருக்கு மனம் நிறைந்தது.....
ஆதித் : ம்ம்ம்
இராமானுஜமும் கார்த்திகாவும் உத்ராவை ஏக்கமாய் பார்க்க....
ஆதித் : மன்னிச்சிருங்க மாமா.... அவ உங்கள மன்னிக்க காலமாகும்... நேத்து அவங்க பேசுனதெல்லாம் கேட்டும் நீங்க அவளுக்கு ஆதரவா பேசாதது அவ மனசுல வடுவா பதிஞ்சிடுச்சு... அதுக்கு மருந்து போட்டாலும் ஆருரதுக்கு டைம் வேணும்... அவள கட்டாயப்படுத்தாதீங்க..... என தன் உணர்வை தெளிவாய் கூறியவனை கண்களில் கண்ணீருடன் அவன் அணைப்பிலிருந்தவள் நிமிர்ந்து பார்க்க.... அவன் குனிந்து புன்னகைத்ததும் அவன் மாரோடு ஒன்றி கொண்டாள்...
அவர்களின் இடையேயான புரிதலை கண்ட மற்ற ஜோடிகள் உள்ளுக்குள்ளே சிலிர்த்து போயினர்.....
அப்பெறோர் தங்கள் மகளின் மனதை கூறாமலே புரிந்து கொள்ளும் மாப்பிள்ளை கிடைத்ததில் நெகிழ்ந்து போயினர்.... இனி மகளின் வாழ்க்கை மகிழ்ச்சியாய் இருக்குமென நிம்மதிடைந்தனர்....
சசிக்கலா அங்கிருந்து எப்போதோ தன் உயிருக்கு உத்திரவாதம் இல்லையென ஓடியிருக்க.... சற்றே குழப்பத்துடனும்.... நிம்மதியுடனும் இவர்களை பார்த்திருந்த பெரியவர்களை அங்கிருந்து அழைத்து சென்றார் அம்ருதா....
இன்னும் ஒருவரை ஒருவர் அணைத்தவாறு நின்றிருந்த ஆதித்தையும் உத்ராவையும் இன்னும் நம் சிறிய பட்ச்சினர் இமைக்காது பார்த்து கொண்டிருக்க.... அவர்களின் பார்வையில் தன் சிரிப்பை அடக்க முடியாத ரித்திக்... சிரித்து கொண்டே...
ரித்திக் : டேய் தயா.... சின்ன புள்ளைங்க இருக்க இடத்துல என்ன டா பன்ற.... என அவனை போட்டு உலுக்க... நிலையடைந்தவன் அவளை கை அணைப்பிலே வைத்தவாறு...
ஆதித் : கரடியா பொறந்தவனே... நா நிம்மதியா இருந்தா பொருக்காதா டா உனக்கு...
ரித்திக் : பொருக்குர மாரியான விஷையத்தையா டா நீ பன்னீர்க்க... பத்து வர்ஷமா நா உன்ன விட்டு இம்மியளவும் நகரலையே டா... என் தங்கச்சியயே கௌத்துருக்கன்னு என்ட்ட சொல்லவே இல்ல....
ஆதித் : அ.... தங்கச்சிய லவ் பன்னேன்னு அண்ணன்காரன்ட்ட வந்து சொல்ல சொல்றியா.... போ டா...
ரித்திக் : இத முன்னாடியே சொல்லீர்ந்தா எப்பையோ இவள உன் கூட அனுப்பி வச்சிர்ப்பேன்....
ஆதித் : ஹான்... எனக்குளாம் கட்டி வைக்க மாட்டேன்னு சொன்ன....
ரித்திக் : அதான்... நீயே கட்டிக்கிட்டியே... அப்ரம் நா என்னாத்த கட்டி வைக்கிறது...
தியா : டேய்... எங்கள போட்டு பைத்தியமாக்காதீங்க... என்ன நடக்குது இங்க...
ரித்திக் : நாம எல்லாம் நின்னுக்குட்டு தா இருக்கோம்...
ஷியாம் : இருக்குர கொழப்பத்துல வச்சு மொத்தி எடுத்துருவோம் அண்ணா... மரியைதாயா எங்களுக்கு வெளக்கி சொல்லுங்க....
அன்கி : எங்களுக்கு இப்பவாவது பேச சான்ஸ் கெடச்சிச்சே... இதெல்லாம் எப்போ நடந்துச்சு... கொஞ்சம் எல்லைத்தையும் வெளக்குங்க...
ஆதித் : நா அக்ஷா மேல கோவமா இருந்தேன்... அட் தி சேம் டைம் அவள காப்பாத்தனும்ங்குரதுக்காக ஊர விட்டு போனேன்...
மிரு : என் கோவம் அண்ணா..
உத்ரா : அதான என்ன கோவம்....
விஷ்வா : உத்ரா தான் பெரியப்பா இறந்ததுக்கு காரணம்னு அது (அன்னம்) ஊரு ஃபுல்லா டமாரம் அடிச்சதாலையா....
ஆதித் : உலகத்த பொருத்தவர அதான் உண்மை... என்க... உடனே உத்ரா அவனை நீயும் என்ன நம்பலல்ல... என்பதை போல் பார்க்க...
ஆதித் : உடனே மூஞ்ச தூக்கா வச்சிக்காத... ஒழுங்கா கேளு... ஆனா அப்பா இறந்ததுக்கு நீ காரணமில்லன்னு எனக்கு தெரியும்... அத கோவமா காமிச்சாட்டு உண்மையாவே... நீ நா போட்ட செய்ன தூக்கி போட்டுங்குர கோவத்துல தான் போனேன்... நீ தூக்கி போடுறத பாத்தேன்... ஆனா நீ தூக்கி போட்டது... இந்த செய்ன... என ரித்திக் எடுத்த அந்த வளையம் டாலராய் இருக்கும் செய்னை காண்பித்தான்.... அதுவும் உத்ராவின் கழுத்திலிருந்த செய்னும் ஒரே போலிருந்தது.... என இவன் மீண்டும் தொடர போக...
தீரா : டேய் நிறுத்து டா...
ஆதித் : நீ ஏன் குட்டிமா இங்க வந்த...
தீரா : அறிவிப்புக்கு தா வேற எதுக்கு... நீ பொறந்ததுல இருந்தே யாருக்கும் தெளிவில்ல... அதனால எல்லைத்தையும் வெளக்கி சொல்லு..
ஆதித் : சரி சரி... நீ ஓடு முதல்ல....
தீரா : ஏன்...
ஆதித் : ஏதோ உன்னால இப்போ என் அக்ஷா கூட இருக்கான்னு ஒன்னும் பன்னாம இருக்கேன்.... Fb சொல்றதுல எல்லாம் திரும்ப நியாகம் வர... கோவத்துல உன்ன கொல பன்னிட்டேன்னா....
தீரா : அதெல்லாம் நீ பன்ன மாட்ட... சீன் நோடாம போய் Fb ய போடு...
ஆதித் : நீ மொதல்ல ஓடு...
ரித்திக் : நம்ம வீட்டுக்கு போய்டலாம்... அங்க எல்லைத்தையும் சொல்றோம்...
மிரு : அப்போ உனக்கும் எல்லா தெரியுமா அத்தான்...
ரித்திக் : அச்சோ இல்ல டா மிரு மா.... பல விஷயத்த பாவி பய என் கிட்டையுமே சொல்லல....
உத்ரா : மத்ததெல்லாம் கூட ஓக்கே டா... ஆனா நீங்க இரெண்டு பேரும் பாகுபலி பல்வாள்தேவன் கணக்கா போரு நடத்தீட்டு இப்போ ஆஃப் ஸ்க்ரீன்ல பிரபாஸ் ரானா மாரி இருக்குரத தான் நம்பவே முடியல...
ரித்திக் : அதான் நீயே சொல்லிட்டியே டா அம்மு... ஆன் ஸ்க்ரீன்ல நாங்க பாகுபலி பல்வாள்தேவன்... ஆஃப்ஸ்க்ரீன்ல பிரபாஸ் ரானா என அவனுடன் ஹைஃபை போட்டு கொண்டான்...
மேகா : சரி சரி வாங்க போவோம்... என அங்கிருந்து ஆதித் ஆகிய தயாவின் பன்னை வீட்டிற்கு சென்றனர்.... அது கிட்டதட்ட பத்து பேர் தங்குமளவு அனைத்து வசதிகள் கூடிய விசாலமான வீடு... அது தான் நம் ஆதித் முதல் முதலில் அவன் சம்பாத்தியத்தில் கட்டிய வீடு...
அனைவரும் அமர்ந்ததும்... ஆதித்தை சாய்ந்து அமர வைத்த உத்ரா அவன் அருகில் சென்று அமர்ந்து கொள்ள.... ஆதித்தும் தன் வாழ்க்கையை பற்றி கூற தொடங்கினான்....
தீரா : ஹப்பா... ஃப்லஷ்பக் ஆரம்ச்சிருச்சு
30 வருடங்கள் முன்பு
வந்தனக்குரிச்சியின் ஜமீந்தாராய் தன் பணியை சிறப்புர ஆற்றி வந்தார் நாராயனன் தாத்தா.... அவரின் மகன் தங்கதுரை அன்று தான் மேற்படிப்பை முடித்து விட்டு ஊரிலிருந்து வந்தான்... அவரை குடும்பமே கூடி நின்று தாங்க... ஊரே மட்டற்ற மகிழ்ச்சியில் திலைத்தது....
நிமிர்ந்த உடலுமாய்.... கம்பீரமாய்... மரியாதை கூடியேறிய வதனத்துடன் என்றும் சிரித்த முகமாய் இருப்பான் தங்கதுரை.... நேர்மையானவன்... எதையும் மறைத்து செய்ய மாட்டான்... மிகவும் நல்ல உள்ளம் கொண்டவன்.. தவறாயிருந்தால் அதை சரியான முறையில் அனுகும் குணம்... அன்பான மகன்.... நண்பன் போன்ற அண்ணன்.... உயிரான தோழன்....
அப்போது வெயிலுக்கு அன்னக்கூடையை தலையில் கௌத்தவாறு.... காலால் மண்ணில் கோலம் போட்டு கொண்டு... கையில் ஏதோ புக்கை வைத்து படித்தவாறே வந்த அவள்... முன் வந்த துரையை கவனிக்காது சரியாய் இடிக்க... ஏதோ பேசி கொண்டே வந்த துரை தன்னை யாரோ இடித்ததும் தடுமாறி விட.... அவனின் கை இடித்து அவளின் தலை மேலிருந்த கூடை கீழே விழ.... அது விழுந்த வேகத்திற்கு தன்னை குழப்பமான பார்வை பார்த்த அழகான கருப்பு விழிகளை தன்னையும் மறந்து பார்த்து கொண்டிருந்தான் துரை....
அவன் முன்.... நீல நிற தாவணியனிந்து.... முந்தானையை இடுப்பில் சொருகி.... அலைந்தாடும் கருங்கூந்தலை பின்னலிட்டு.... கண்களிரண்ணும் ஊசியாய் இதயத்தை தைக்க.... ஏதோ முனுமுனுத்தவாறு நின்றாள் ராம்லீலா....
அமைதியான குணம்.... வெளுத்த தோல்.... அழகான விழி... கூர்மையான புத்தி... ஒரே பார்வையில் ஒருவரை அறியும் அனுகுமுறை.. கோவமே வந்ததில்லை.... வெறுமென முறைப்பு மட்டும் தான்.... இளகுவான மனம் கொண்டவள்.... உதவி என்று கேட்டால் தன் உயிரையும் கொடுத்து அதை நிறைவேற்றுபவள்...
பின் அவனை யாரென கண்டு கொண்ட லீலா... சிறிய புன்னகையுடன்....
லீலா : அட பெரியையா மகனா.... வெளியூரு போய் படிச்சிட்டு வாராருன்னு சொன்னாகளே.... நல்லா இருக்கீங்களா... என கேட்க...
துரை : ம்ம் ஆமா... நல்லா இருக்கேன்... ஏ புள்ள... உன்ன எங்கையோ பாத்த மாரியே இருக்கே...
லீலா : அப்டியா... இருக்காதுங்கையா...
துரை : அட.... பாத்துர்க்கேன் புள்ள... உன் பேரென்ன...
லீலா : ராம்லீலா...
துரை : புடிச்சிட்டேன்.... வெங்கடேசன் மாமாவோட தம்பி மக தான...
லீலா : ஆமாங்க ஐயா...
துரை : ம்ம் என்ன படிச்சிற்க
லீலா : நா ###### படிச்சிருக்கேன் ஐயா... இப்போ சும்மா தா இருக்கேன்....
துரை : அட... அப்ரம் ஏன் சும்மா இருக்க....
லீலா : எங்கையா... என்ன மாரி பொண்ணுங்க... வெளிய போக போறாங்க... நீங்க வேற....
துரை : ம்ம் நா உன் அப்பாட்ட பேசுறேன்...
லீலா : அதெல்லாம் வேணாங்கையா... நா வேலைக்கு போய் என்ன பன்ன போறேன்... சரிங்கையா... நா கெளம்புறேன்... என அங்கிருந்து சென்று விட.... துரைக்கு லீவாவின் அமைதியான குணமும்... அடக்கமான பேச்சும்... அதில் அங்கங்கு எட்டிபார்த்த குறும்பும் அவளை ரசிக்க தூண்டியது....
ஏனென்றே தெரியாமல் லீலாவை இரசிக்க தொடங்கியிருந்தான துரை.... நாட்கள் கடக்க கடக்க லீலாவின் அமைதியான பேச்சில் தன்னையே இழந்தான் துரை.... மாதங்களும் கடக்க.... இனி மேலும் நட்பென நினைத்து பழகும் அவளுக்கு உண்மையை மறைக்க கூடாதென அடுத்த நாளே சென்று லீலாவிடம் தன் காதலை தெரிவித்தான்.... இதை எதிர்பார்க்காத லீலா அங்கிருந்து உடனே அவள் வீட்டிற்கு ஓடி விட்டாள்....
அடுத்த இரண்டு நாட்களும் லீலா துரையின் கண்களில் சிக்காது போக.... அவளின் நினைவுகள் இவனை ஏதோ செய்ய..... இதை தவிர்க்க வேண்டி அவன் லீவாவை பார்ப்பதையே தவிர்க்க... ஆனால் லீவாவோ காரணமில்லா விஷயங்களையெல்லாம் எடுத்து கொண்டு பெரிய வீட்டிற்கு வந்து அவனின் தாயிடமோ கதை அளப்பதும் அவனை ஓரக்கண்ணால் பார்ப்பதும்... அவன் கண் முன்னே சுற்றுவதும்.... முகத்தை திருப்புவதுமாய் இருக்க.... அதை கண்டு தனக்குள்ளே சிரித்து கொண்ட துரை லீலாவை சரியாய் மடக்கி காரணத்தை வினவ... அதற்கு லீலாவோ முகத்தை திருப்பிக்கொள்ள....
துரை : அட சொல்லு ராமா...
லீலா : ம்க்கும்... இதுக்கும் ஒன்னு கொறச்சலில்ல...
துரை : சரி சரி என்ன பிரச்சனை....
லீலா : நீங்க ஏன் என்ன காதலிக்கிறேன்னு சொல்லி ஏமாத்துனீங்க...
துரை :நா எப்போ ஏமாத்துனேன்...
லீலா : பின்ன.... உங்க அத்த மக அன்னம் நீங்க அவள கட்டிக்க தான் ஊருக்கே வந்தீங்கன்னு சொல்க்கிட்டு அலையிரா.... என கூற....
துரை : ஹ்ம்... அவ சொன்னா உனக்கென்ன...
லீலா : ம்ச்... அது எப்புடி என் முன்னாடியே அவ அப்டி சொல்லலாம்...
துரை : வாயால தான்... என குறும்பாய் கூற...
லீலா : ச்ச... விளையாடாதீங்க...
துரை : சரி உனக்கு என்ன கல்யாணம் பன்னிக்க சம்மதமா..
லீலா : நா எத பத்தி பேசிக்கிட்டு இருக்கேன்... நீங்க என்ன கேக்குறீங்க...
துரை : மொதல்ல சொல்லு....
லீலா : விருப்பமில்லாம தா இப்போ இங்க வந்து சொல்லிக்கிட்டு இருக்கேனா... என குறை பட்டு கொண்டே தன் சம்மதத்தை மறைமுகமாய் தெரிவிக்க....
துரை : இது போதும்.... வா என வீட்டினுள் இழுத்து சென்றான்.... லீலா பயத்தில் நடுங்க அங்கிருந்து ஓட முற்பட.... அவனோ லீலாவை இழுத்து கொண்டு அவன் தந்தை அன்னை அருகில் சென்று.... " நான் லீலாவை விரும்பிகிறேன்.. எங்களுக்கு திருமணம் செய்து வையுங்கள் " என கூற.... உள்ளம் குளிர்ந்த பெற்றோர் மகிழ்ச்சி அடைய.... மரகதம் லீலாவை கட்டிகொண்டு நெற்றியில் முத்தம் வைத்தார்....
தேவராயன் : டேய் அண்ணா.... சூப்பர் டா... என வந்து அணைத்து கொண்டார்...
அடுத்த வேளையாக உடனே லீலாவின் வீட்டிலும் பேச பட.... அடுத்த ஒரே மாதத்தில் ஊரறிய லீலாவை தன் சரிபாதியாய் ஏற்று கொண்டார் துரை.....
அவர்களை ஊரே நல்வாழ்க்கை வாழ ஆசி வழங்க.... அன்னப்பூரனியின் கோபம் அனைத்தும் லீலாவின் மீது வெறுப்பாய் மாறியது....
நீ... நான்...
எ
ப்பா... மீதிய அடுத்த யூடில சொல்றேன் இதயங்களே....
DhiraDhi❤
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro