36 நீ... நான்...
அருவாளை கண்ட ஆதித் உடனே அதை கையிலெடுத்து திரும்ப... அவ்விடத்தில் ஆதித் மற்றும் ஊர் நிர்வாகத்தால் நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் மக்களை அப்புரப்படுத்த.... அடுத்த சில நொடிகளில் அங்கே துப்பாக்கி சூட்டின் ஓசை அதிகரிக்க தொடங்கியது... அனைவரும் கீழ் குனிந்து தெரிந்த திசையில் ஓட.... ஆதித்தின் கட்டளைக்கு இனங்க அவனின் கார்ட்ஸ் அனைவரும் அவன் குடும்பத்தை அங்கிருந்து அப்புரப்படுத்தினர்... ஏனெனில் அங்கு அவர்களை தவிர்த்து மற்ற அனைவரையுமே காவல் அதிகாரிகள் வேறு இடத்திற்கு அப்புரப்படுத்தி இருந்தனர்....
ஆதித் அருவாளை எடுத்த தன்னை தாக்க வந்தவர்களை வெளாச துடங்கி இருந்தான்.... குடும்பத்தின் ஆண்மகன்களாய் ஷியாம் மற்றும் விஷ்வா களத்திலிறங்க... அதை வன்மையாய் கண்டித்து அங்கிருந்து குடும்பமிருக்கும் இடத்திற்கு செல்ல கூறினான்....
ரித்திக் முதலில் ஆதித்தை நோக்கி அருவாளை வீசியவனை துறத்தி கொண்டு காட்டில் ஓடி கொண்டிருந்தான்....
இன்னும் சிறியவர்கள் அங்கேயே பயந்தவாறு நின்று கொண்டிருக்க.... தன்னை சுற்றி வளைத்த ஐவரை சில நுனுக்கமான கலையினால் மயக்க மடைய வைத்த ஆதித் இவர்களை நோக்கி வந்தான்....
ஷியாம் : அண்ணா என்ன நடக்குது இங்க...
ஆதித் : அத பத்தி பேச டைம் இல்ல ஷியாம்.. உனே இவங்க எல்லாரையும் கூட்டிக்கிட்டு நம்ம பன்னை வீட்டுக்கு போ... ஊர் மக்கள் யாரும் வெளிய வர வேண்டாம்னு சொல்லி அவங்கவங்க வீட்ல இருக்க சொல்லு...
விஷ்வா : உங்கள விட்டுட்டு எப்டி அண்ணா போறது....
ஆதித் : விஷ்வா.... இத நா பாத்துக்குறேன்.... இரெண்டு பேரும் போங்க... என துரிதப்படுத்த....
ஷியாம் விஷ்வாவின் பாதுகாப்பில் பெண்கள் அங்கிருந்து நகர.... தான் நின்ற இடத்திலிருந்து தியா இழுத்த இழுப்பிற்கு சென்ற உத்ராவின் கண்கள் ஆதித்தின் மீதே இருக்க.... அதை உணர்ந்தவன் அடிப்பட்ட பார்வையுடன் அவளை அங்கிருந்து கண்களாலே செல்ல கட்டளையிட... திமிறாமல் அங்கிருந்து நகர்ந்தாள் உத்ரா....
அங்கிருந்து அனைவரும் சென்றிருக்க.... மூச்சு வாங்க நின்ற ஆதித்தின் ஃபோனில் அவனின் கார்ட்ஸிடமிருந்து அனைவரும் பத்திரமாய் இருப்பதாய் அறிவிப்பு வந்திருக்க.... அதை கண்டு பெருமூச்சு விட்ட ஆதித்... அருவாளை போட்டு விட்டு திரும்ப.... அவனை சுற்றியிருந்த மரங்கள் பின் மறைந்திருந்த சிலர் அருவாள் விழுவதை கண்டு அவரவர் ஆயுதங்களுடன் விஷமமாய் சிரித்து கொண்டு எழுந்து வர.... ஆதித் முன் வந்த அடுத்த நொடியே அவர்களின் புன்னகை மறைந்து பயத்தின் இரேகை படர்ந்திட.... அவர்கள் முன் நின்ற ஆதித்தின் இதழ்கள் ஏளனமாய் விரிந்து கோவத்துடன் இருக... அவனின் கையிலிருந்த ரிஃபிலில் புல்லட்கள் லோட் செய்திருந்தது.....
தலையை சிலுப்பி கொண்ட அந்த ரௌடிகள் பத்து பேர் ஆதித்தை சுற்றி வளைத்தனர்.... அதை பெரிதாய் எடுத்து கொள்ளாத ஆதித் தன் கன்னை அவர்களை நோக்கி குறி வைத்து கொண்டிருக்க... கன்னை தூக்கி முதுகில் சொருகியவன்.... வேட்டியை மடித்து கட்ட.... ரௌடிகளுக்கு திக்திக்கென இருந்தாலும் சமாளித்து கொண்டு கட்டையை ஓங்கி கொண்டு அவனை தாக்க ஓடினர்....
கட்டைகளை கையால் தட்டி விட்ட ஆதித் தன்னை தாக்க வருபவர்களின் தாடையில் குறி வைத்து அடித்தான்... அதில் கதி கலங்கிய அந்த ரௌடிகள் முளி பிதுங்கி கீழ் விழ... மற்றவர்கள் சுதாரித்து கட்டைக்கு பதில் அருவாளையும் கத்திகளையும் தேர்ந்தெடுத்தனர்....
காட்டில் ஓடி கொண்டிருந்த ரித்திக் அவனை பிடிக்க முயலும் போதெல்லாம் வேகத்தை கூட்டி ஓடினான் அவன்.... அவனின் வேகம் அதிகமாயிருந்தாலும் பயத்தால் அங்கங்கு தடுமாறி ஓடி கொண்டிருந்தான்.... ஊரை தாண்டி வெகு தூரம் வந்து விட்ட நிலையில் அவன் ஓடி கொண்டே இருப்பதை கண்டு அருகிலிருந்த மரத்தில் ஏற தொடங்கினான் ரித்திக்.. பின் வந்த ரித்திக் காணாமல் போகவும் மூச்சை வாங்கியவாறு நின்ற அந்த ரௌடி வேர்த்து விருவிருக்க சுற்றி முற்றி பார்த்தவாறு நின்றாஜ்... அவன் எதிபாரா நேரம் மரத்திலிருந்து அவன் மேல் குதித்த ரித்திக் அவன் கழுத்தை பிடித்து கீழே தள்ளினான்...
ரித்திக் : டேய் யாரு டா நீ... யாரு உன்ன அனுப்ச்சது... உண்மைய சொல்லு... என கன்னத்திலே ஒரு குத்தி விட்டான்.... கழுத்து அந்த பக்கம் லாக் ஆகி கொள்ள.... வலியில் அலரினான் அவன்....
ரித்திக் : சொல்றியா இல்ல அந்த பக்கம் கழுத்தையும் உடைக்கவா.... என கையை ஓங்க....
அவன் : இல்ல... இல்ல சொல்லீர்ரேன்.... சொல்லீர்ரேன்... என கத்த....
ரித்திக் : சொல்லு ஏன் அவன வெட்ட வந்த... யாரு சொல்லி வந்த....
அவன் : எனக்..கு... எனக்கு காசு குடுத்தாங்க... அதனால தான் வெட்ட வந்தேன்... மத்தபடி எனக்கு ஒன்னும் தெரியாது....
ரித்திக் : டேய் உண்மைய சொல்லு டா.... என மீண்டும் ஒரு குத்து விட....
அவன் : நா கூளிக்கு வேலை பாக்குரவன் மட்டும் தான்... நா உண்மைய தான் சொல்றேன்....
ரித்திக் : சரி யாரு உனக்கு பணம் குடுத்தது... யாருன்னு சொல்லு...
அவன் : அது.. அது...
ரித்திக் : சொல்ல மோறியா இல்லையா....
அவன் : க..கந்தர்வநாதன் ஐயாவோட அடியாள் செல்வா தான்....
ரித்திக் : சரி என்ன ப்லன் பன்னீர்க்கீங்க.... இன்னும் எத்தன பேரு இந்த மாரி இருக்கீங்க...
அவன் : இரு.. இருவது பேருக்கு மேல வந்துர்க்கோம்.... இந்நேரம் எல்லாரும் அவன சுத்தி வளச்சிருப்பாங்க....
ரித்திக் : அவன் அவ்ளோ சீக்கிரம் தோல்வியையும் மரணத்தையும் ஒத்துக்குரவன் கிடையாதுன்னு உன் மொதலாளிக்கு தெரியாதா.... என கேட்க...
அவன் : அதுக்குதான் அவன ஒரேடியா சாவடிக்க ப்லன் போற்றுக்காரு... என பயந்தவாறே கூறியவனை ரித்திக் அலட்சிய பார்வை பார்க்க....
ரித்திக் : நீ வெட்ட வந்த இடத்துல எத்தன பேரு இருந்தாங்க... வெட்டு தப்பி தவறி வேற யாரு மேலையாவது விழுந்துர்ந்தா உன்ன என்ன செய்ரது....
அவன் : நா குடுத்த காசுச்கு வேலை பாத்தேன் அவ்ளோ தான்....
ரித்திக் : சரி அவன கொல்ல என்ன திட்டம் போட்டான்னு சொல்லு....
அவன் : அது... அது... என உத்ராவை கடத்த கூறியது திருமணம் செய்ய திட்டம் தீட்டியதை இவன் கூற.... இவையை கேட்டு ரித்திக் ஏன் இவர்கள் உத்ராவை இதில் இழுக்க வேண்டுமென குழப்பமடைய... இறுதியாய் அவன் குழை நடுங்க கூறியதை கேட்டு அதிர்ச்சியின் உச்சிக்கே சென்று விட்டான் ரித்திக்....
அவனின் தாவக்கட்டையிலே ஓங்கி ஒரு அடி அடித்தான் அதிலே அவன் மயங்கி விட.... உடனே அங்கிருந்த ஒரு மரத்தின் வேரில் அவனை கட்டியவன் ஊரை நோக்கி ஒட தொடங்கினான் ரித்திக்....
தன் முன் நின்ற ஒருவன் அருவாளால் தன்னை தாக்க முன்னேறுவதை கண்ட ஆதித் அவனை முழங்கையை பிடித்து முருக்கி அருவாளை விழ செய்து முதுகு புறம் மடக்கி விட்டு கீழே தள்ளி விட்டான்.... மெல்ல ஆயுதமில்லாமல் அடித்தே விழ வைத்து கொண்டிருந்த ஆதித்.... திடீரென கேட்ட உத்ராவின் மாமா என்ற அலரலை கேட்டு இவன் திரும்ப.... அவன் கழுத்தை வெட்ட வந்த அருவாள் வலது தோளை கிழித்து விட்டு செல்ல.... தன் தோளில் எவனோ ஒருவன் அருவாளால் வெட்டியதை உணர்ந்த ஆதித் தடுமாற... உத்ரா அழுது கொண்டே ஓடி வருவதை கண்டவன் தன் வலியை மறைத்து.... கீழே கிடந்த அருவாளை அவளை தோக்கி வீசினான்.....
விஷ்வா ஷியாமிற்கு தெரியாமல் பயத்தில் இவனை தேடி ஓடி வந்திருந்தாள் உத்ரா...
அப்போதும் உத்ரா தைரியமாய் முன்னேற.... சரியாய் அவளை நெருங்கிய அருவாள் அவள் ஆதித்தை நெருங்க ஐந்தடி தூரம் இருக்கும் தருவாயிலிலே அவள் பின் அருவாளை ஓங்கிய தடியன் ஒருவனின் கையை வெட்டி விட்டு போய் தொலைவில் விழுந்தது...
ஓடி வந்த உத்ரா ஆதித்தினை பிடிக்க வர.... அதற்குள் தன் இடது கரத்தால் அவள் இடையை வளைத்து பிடித்த ஆதித் அவன் மாரோடு ஒன்றி நிற்க வைத்து வலித்த இடது கையை பொருட்படுத்தாது மடக்கி முதுகிலிருந்து கன்னை எடுத்தான்.....
உத்ராவின் இதயம் நொடிக்கு நொடி ஆதன் ஆதன் என துடிக்க.... இதுவரை தன்னை தாக்கியவர்களுக்கு பெரும் காயமில்லாமல் மயங்கி விழ வைத்த ஆதித் இப்போது சற்றும் யோசிக்காமல் தன் அருகில் நின்ற உத்ராவின் பாதுகாப்பிற்காய் அவனை தாக்க வந்தவர்களை சுட்டு விழ வைத்தான்...
ஐந்திற்கும் மேற்பட்டோர் மயங்கி விழுந்ததும்.... உத்ராவை இழுத்து கொண்டு பன்னை வீட்டை நோக்கி ஓடினான்... அங்கு சிறியவர்கள் அனைவரும் இருப்பதை நினைவு கூர்ந்தவன் அங்கிருந்து பாதையை மாற்றி மாந்தோப்பின் புறம் ஓடினான்..... உத்ரா அவனை பின் தொடர்ந்து ஓடினாள்.... அவர்கள் பின் அந்த ரௌடிளும் அதிவேகமாய் பின் தொடர... அந்த அழகிய மாந்தோப்பினை அடைந்தவன் நடுவிலிருந்த வீட்டிற்குள் உத்ராவை விட்டுவிட்டு கதவை சாற்றி வெளியே வந்தான்... இதை எதிர்பார்க்காத உத்ரா எழுந்து வரும் முன் கதவை அடைத்திருந்தான்.... அவள் கதவை திறக்க முயல....
ஆதித் : நா சொல்ற வர நீ வெளிய வர கூடாது.... என கத்தினான்....
அவன் வார்த்தையை தட்ட இயலாத உத்ரா அப்படியே நின்று அழுது தீர்க்க.... தன்னை தாக்க வந்தவர்களை வீட்டில் நுழைய விடாது கன்னை வைத்து சுட்டு கீழே விழ வைத்தான்.... அங்கிருந்த பலரும் வீழ்ந்திருக்க... இறுதியாய் ஒருவன் மாத்திரம் கத்தியை தூக்கி கொண்டு ஆதித்தின் மார்பில் இறக்க போக.... அதை லாவகமாய் பிடித்த ஆதித் இடது காலால் அவன் வலது கனுக்காலில் மிதித்து கழுத்தை திருப்ப.... அதே நிலையில் கீழே விழுந்தான் அவன்....
மூச்சை இழுத்து இழுத்து வாங்கிய ஆதித்... அவனை பார்த்து கொண்டிருக்க.... உணர்ச்சி வசத்தில் உத்ரா கதவை திறந்து கொண்டு வர.... அதே நேரம்.... மருத்துவமனை முன் ஓடோடி வந்து நின்ற ரித்திக் மூச்சை இழுத்து இழுத்து வாங்க.... அவனின் நினைவலைகளில்.... " அவன் எல்லாரையும் அடிச்சிடான்னு நெனக்கும் போது.... ஒரு அஞ்சு பேர் விஷம் தடவிய கத்திய வச்சு அவன குத்தி கொலை பன்ன போறாங்க.... அந்த கத்தி குத்துன அரை மணி நேரத்துல அவன் செத்துடுவான்.... காப்பாத்த யாருமே இருக்க மாட்டாங்க " என அந்த ரௌடி கூறியது வந்து போக.... அவ்விடத்தில் எவரையும் காணாது.... கத்தி அலுத்து போனவன் ஏதோ நினைவு வந்தவனாய் அந்த பன்னை வீட்டின் புறம் ஓடினான்....
ஆதித் : அங்கையே இரு வராத...
உத்ரா : ஆனா மாமா... என கண்ணீரோடு கத்த...
ஆதித் : சொன்னா கேளு... எதுவும் பேசாத.... என கண்களை மூடி கத்தினான்...
அவன் வலியை காட்டாது மறைப்பதாய் நினைத்த உத்ராவின் கண்கள் தாரை தாரையாய் கண்ணீரை சிந்த வாய் தானாய் மூடி கொண்டது....
மூச்சு வாங்கிய ஆதின் கதவை திறக்க வர.... அதன் பிரதிபலிப்பில் ஏதோ கண்டவன் உத்ராவின் கண்கள் விரிவதை கண்டு சட்டென திரும்ப.... சரியாய் அவன் தலைக்கு மிக அருகில் வந்து செவுரில் குத்தீட்டு நின்றது அந்த கூரான கத்தி....
ஆதித் : இவனுங்க அடங்க மாட்டானுங்க போல.... என கத்தியவாறு அசுர வேகத்தில் அவர்களை தாக்க தொடங்கினான்... இடையிடையே உத்ராவை கண்காணிப்பதற்காய் சுதாரிக்காமல் கழுத்திலும் இடையிலும் வெட்டு வாங்கி இருந்தான்....
அது பெரிய காயமில்லாததனால் அதை பொருட்படுத்தாதவன் தாக்குதலில் குறியாய் இருக்க... அவனின் கழுத்தில் வலிந்த இரத்தத்தை கண்ட உத்ரா எதையும் பொருட்படுத்தாது அந்த வீட்டை விட்டு வெளியேறினாள்.....
அவளின் கொலுசு சினுங்கும் ஒலியில் அதை கனித்த ஆதித் அதிர்ச்சியுடன் அவளை திரும்பி பார்க்க.... அதை சரியாய் உபயோகித்த அந்த ரௌடிகளில் இருவர் அவனை பிடித்து கொள்ள.... ஒருவன் கத்தியை அவன் நெஞ்சின் மீது ஓங்கினான்.... அவர்களிடமிருந்து தப்பிக்க முயன்ற ஆதித் காலால் அவர்களை இடிக்க... அவனை பிடித்திருந்தவனில் ஒருவன் விழ... மற்றவனை கட்டையால் அடித்து தள்ளி விட்டாள் உத்ரா....
கத்தியை ஓங்கியவனை தன் காலால் அவன் மாரில் உதைத்த தள்ளி வீசிய ஆதித் உத்ராவை காண திரும்ப.... அந்த நேரம் அவன் பின் ஒருவன் விஷம் தடவிய கத்தியை ஓங்க... அதை லாவகமாய் பிடித்தவன்.... அவனை தள்ளி விட.... அதே நேரம் நொடி தாமதிக்காது ஆதித்தை நெருங்க போன இன்னோறுவனை திடீரென எங்கிருந்தோ ஓடி வந்த ரித்திக் எட்டி உதைக்க....
ரித்திக் : தயா.... என கத்தி கொண்டு கீழே விழப்போன ஆதித்தை அணைத்து கொண்டான்.... அவனின் தயா என்ற அழைப்பில் திரும்பியவன் தன்னவளை ஒருவன் கத்தியால் குத்துவதை கண்டு அதிர்ச்சியின் எல்லையில் இருந்தான் ஆதித்ய தர்ஷனும் ரித்திக்கின் ஆருயிர் தோழன் தயாதிரனுமாகிய நம் கதையின் நாயகன் ஆதித்தன்....
தங்களின் திட்டம் நிறைவேறாத ஆவேசத்தில் அதை முதலில் இருந்தே தடுத்த உத்ராவின் மீது கொலை வெறியான அந்த கூட்டத்தில் தலைவன்.... உத்ரா ரித்திக் ஆதித்தை தயா என அழைத்து கட்டி அணைத்ததில் அதிர்ச்சியில் இருந்தமையால் அந்த நேரத்தில் விஷம் தடவிய கத்தியை அவளின் வையிற்றில் இறக்கினான்....
உத்ரா : ஆதன்.... என பெருங்குரலெடுத்து கத்த....
இதை எதிர்பார்த்திராத இருவரும் பித்து பிடித்ததை போலே நிற்க.... அந்த ரௌடி மீண்டும் கத்தியை ஓங்குவதை கண்டு ரித்திக் அவனை எட்டி உதைக்க.... ஆதித் உத்ரா கீழே விழும் முன் அக்ஷா என அலரியவாறே அவளை தாங்கி பிடித்தான்....
தன்னவனின் மடியில் விழுந்த உத்ராவின் வயிற்றிலிருந்து இரத்தம் பீரிட்டு வலிய தொடங்க.... அவளின் வெள்ளை தாவணி நொடியில் சிவப்பு நிறத்தால் மாற தொடங்க.... அவன் இப்போதாவது தன்னிடம் பேசுகிறானே... என புன்னகைத்த அவனின் அக்ஷா...
உத்ரா : மா..மா... என்.ன.. வெ..றுக்கு..ரியா டா.... என அந்நிலையிலும் அதை பற்றி கேட்க....
ஆதித் : அக்ஷா... பே..சாத... டி... நா.. நா உன்ன காப்பா..தீருவேன்.... நா... நா தப்பு செஞ்சிட்டேன்... மா... எது நடக்க கூடாதுன்னு உன்ன விட்டு பிரிஞ்சேனோ... அது நடந்துருச்சு டி.. என்ன மன்னிச்சிடு...
உத்ரா : நிறு..த்து... மாமா... விதிய மாத்த முடியாது.... நான்... ரொம்ப லேட்..டா. தா.ன் டா... புரிஞ்சிகிட்டே...ன்... என்..ன மனிச்சிடு... மாமா... உன..க்கு.... வாழ்..க்க. மு..ழு.க்.க... என்..னா..ல வே..தன மட்..டும் தான்.... இனி.மே அ... அ.. அது வேண்..டாம்.... நான் போ...ய்டு..றேன்... மா...மா... நிறந்திர..மா போய்டுறே...ன்....
ஆதித் : அக்ஷா... அக்ஷா... என்ன பேச்சு டி பேசுற.... நீ... நீ எனக்கு வேணும் டி.. என்ன விட்டு போய்டாத ப்லீஸ்.... அக்ஷா கண்ணதிற.... கண்ண திற டி என கன்னத்தில் தட்ட.... மெல்ல மெல்ல விஷத்தின் வீரியத்தால் சொருகிய தன் கண்களை அகல விரித்து அவனின் விம்பத்தை தன் கண்களுள் நிறப்பி...
உத்ரா : இனிமே எ....ன் தொ...லை உ...ன் வாழ்க்கைல இல்..ல டா... மாமா.... ஐ லவ் யு ஆதன்.... என எம்பி அவன் நெற்றியில் இதழை பதித்தவாறே அவன் மீது முழுதாய் கண் மூடி சாய்ந்தாள் அவனின் அக்ஷா....
ரித்திக் உடனே அவர்களருகில் ஓடோடி வர.... ஆதித்தின் " அக்ஷா " என வெறி பிடித்த அலரலில் அதிர்ந்து நின்றான் அவன்....
நீ... நான்...
ஏதோ என்னால முடிஞ்ச அக்ஷன் சீக்வென்ஸ்... கேவலமா இருந்தா பொருத்துக்கோக... சீக்கிரமெ அடுத்த யூடி குடுக்குறேன்... போன அத்யாயத்துக்கு நிறைய பேரு கமென்ட் பன்னீர்ந்தீங்க... ரொம்ப சந்தோஷம்...
அப்ரம் காலத்தின் மாய மரணம் கதையையும் பதிவிற்றுக்கேன்.... பாத்துட்டு சொல்லுங்க...
அப்ரம்..... எல்லாரும் என் மேல கொலைவெறில இருக்கீங்கல்ல.... உத்ராவ கொன்னதுக்கே... டுன்க்கு ஸ்லிப்பாய்டுச்சு... உத்ராவ குத்துனதுக்கே என்ன ஜெயில்ல போடலாம்னு யோசிச்சிற்பீங்க... இதுல தயாவும் தித்தும் ஒன்னு தான்னு தெரிஞ்சதும் என்ன குழி தோண்டி புதைக்கலாம்னு குழி தோண்ட ஆரம்பிச்சிருந்தாலும் ஆச்சர்யத்துக்கு இல்ல.... ஈஈஈ
ஆனாலும் நா பாராட்டுறேன் இதயங்களே... நெறைய பேரு லைட்டா கெஸ் பன்னீங்க... ஆனா ஒருவேளை ஒருவேளைன்னு தா பன்னீங்க... ஒருவேளை எனக்கு தெரியாம அவங்க இரெண்டு பேரும் ஒரே ஆளு தான்னு யாராவது கண்டுப்புடிச்சிர்ந்தீங்கன்னா.... என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...
பரிசெல்லாம் ஒன்னும் கிடையாது.... கண்டுப்புடிக்கலன்னாலும் சந்தோஷம் தான்... நெக்ஸ்ட் யூடி சீக்கிரமே குடுக்கோறேன் டாட்டா...
DhiraDhi❤
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro