35 நீ... நான்...
சிட்டாக உள்ளே வந்த உத்ராவை கார்த்திகா அதிசயமாய் பார்க்க.... வெத்தலையை உலக்கையில் போட்டு குத்தி கொண்டிருந்த குமரி பாட்டி அருகில் குடுகுடுவென ஓடிய உத்ரா அவரின் கையை பிடித்து ஒரு சுற்று சுற்றி விட்டு அறைக்குள் ஓடினாள்...
குமரி பாட்டி : அடி அடங்காத சிரிக்கி... தலை சுத்துது டி...
உத்ரா : வெத்தலைய தூக்கி வாய்ல போடு ப்யூட்டி தானா சரியாகும்... என கத்தினாள்...
குமரி பாட்டி : என்னாடி இது அதிசயமா இருக்கு....
உத்ரா : வந்து உன்ட்ட பேசுறேன்... பத்து நிமிஷம் இரு.... என கத்திவிட்டு கதைவை அடைத்து விட்டாள்...
அடுத்த பத்து நிமிடத்தில் லெஹான்க்காவின் ஷாலை சரி செய்தவாறே வெளியே வந்தவளை குமரி பாட்டி தாவக்கட்டையில் கை வைத்து ஆவென வாயை பிளந்து பார்த்து கொண்டிருக்க.... கார்த்திகாவின் கண்களோ அவளை கண்ட நொடி கண்ணீரில் நிறைய... அவர் எடுத்து வைத்திருந்த இரண்டு மொளம் மல்லி பூவை தலையில் பின் வைத்தவாறே வந்தவள் தன் பாட்டியின் வாயில் வெத்தலையை தினித்து....
உத்ரா : மூடி பாட்டி வாய... கொசு போய்ட போகுது....
குமரி பாட்டி : ஆஹா... மருமவளே... உன் மொவளுக்கு காத்து கருப்பு அண்டீருச்சு.... நீ இவள புடிச்சு கட்டிவை நா போய் கதவ சாத்திப்புட்டு வாரேன் என உடனே எழ... தலையிலே அடித்து கொண்ட உத்ரா....
உத்ரா : அய்யோ கெழவி... சும்மா இரு... நா நல்லா தான் இருக்கேன்....
குமரி பாட்டி : அடியாத்தி....
உத்ரா : உன் அக்கா மவ பேத்தி... என வாயை இடித்து விட்டு அம்மா நா மிரு அன்கிய அழச்சிட்டு மேகா தியாவையும் அழச்சிட்டு விழாக்கு போறேன்... நீங்களும் வந்துருங்க... என கூறி சென்றாள்....
குமரி பாட்டி அவள் செல்லும் திசையை பார்த்து நெட்டி முரித்து மகிழ்ச்சியாய் சிரித்து கொள்ள... கார்த்திகா நிம்மதியாய் மூச்சை விட்டு மீதி வேலையை பார்க்க சென்றார்.... அவள் இப்படி சுட்டியாய் விளையாடி பத்து வருடம் கடந்திருந்தது..
தன்னை கண்டாள் தன் மாமன் என்ன செய்வான்... முதலில் பார்ப்பானா... பேசுவானா... சிரிப்பானா என யோசித்து கொண்டே வந்தவள் மிருவின் வீட்டிற்குள் செல்ல.... அங்கோ மிரு கிளம்புவதற்காய் காட்டு கத்து கத்தி கொண்டிருந்தாள் அன்கிதா....
அன்கி : அடியே நீ இப்போ வரப்போறியா இல்லையா டி...
மிரு : கொஞ்சம் பொரு டி... என அறையிலிருந்தே குரல் கொடுத்தாள்...
அன்கி : அத்த... என்ன பொண்ணு வளர்த்து வச்சிர்க்க நீ... பாரு இதுக்கே இப்டி கெளம்புரவ... பொரவு கல்யாணத்துல நைட்டு தா கெளம்பி வருவா போல....
அத்திகை : நீயும் உத்ராவும் எதுக்கு டி இருக்கீங்க... அதெல்லாம் உங்க தொல்ல தாங்க முடியாம கெளம்பீடுவா...
உத்ரா : அட நீ வேற அத்த... அவ கல்யாணம்னு சொன்னா... கல்யாணத்துக்கு மொத நாள் நைட்டே கெளம்பி உக்காந்துடுவா... என கூறி கொண்டே வர...
அன்கி : கரெக்ட்டா சொன்ன டி என கூறி கொண்டே திரும்பியவளின் வாய் பேசா இயலாமல் பூட்டு போட்டு கொண்டது...
என்ன இவ சத்தத்த கானும் என வெளியே வந்த அத்திகை உத்ராவை கண்டு மலைத்து போனார்.... அவருக்கே தன் மருமகள் இத்துனை அழகா என்ற கேள்வி எழுந்தது....
உத்ரா : என்ன டி நா வர வரைக்கும் முச்சு விடமா பேசுன.. இப்போ என்ன அமைதியாய்ட்ட...
அன்கி : உத்ரா நீயா டி இது... என கண்களை விரித்து கேட்க...
உத்ரா : ஏன் நான் தான் டி... ட்ரெஸ் நல்லா இல்லையா... என கீழே பார்த்து கொண்டே கேட்க....
அன்கி : அச்சோ... நீ சும்மாவே அழகு தான்... இத்தன வர்ஷமா இந்த பேரழக எங்க டி மறச்சு வச்ச.... என அவளை நெட்டி முரித்து கேட்டாள்....
உத்ரா : சி லூசு... என வெட்கப்பட
மிரு : ஆஹா.... அடியே உத்ரா.... இன்னைக்கு எவனோ ஒருத்தன் கன்ஃபார்மா விழ போறான் டி... என அவளை ரசித்து கொண்டே கூறினாள்....
அன்கி : ஒருத்தன் விழப்போறான்னு சொல்லாத டி.... ஒருத்தனம் எழ மாட்டான்னு சொல்லு... என இருவரும் சேர்ந்து அவளுக்கு சுற்றி போட்டனர்....
உத்ரா : விழ வேண்டியவன் விழுந்தா போதுமே.. அவன் தான் கண்டுக்கவே மாற்றானே... மத்தவனுங்க கால்வாய்ல விழுந்த என்ன.... மலமுகட்டுல விழுந்தா எனக்கென்ன என முனுமுனுக்க...
மிரு : என்ன சொன்ன...
உத்ரா : ஒன்னுமில்ல டி... வாங்க தியா மேகாவ அழச்சிட்டு போகனும்....
அன்கி : சரி சரி வா... என இழுத்து சென்றாள்....
அடுத்த ஐந்து நிமிடத்தில் மூவரும் அங்கு பெரிய வீட்டினுள் நுழைய.... சமத்தாய் அமர்ந்து ஷியாம் ஏதோ டீ குடித்து கொண்டிருக்க.... சமையலறைக்கும் தியாவின் அறைக்கும் மாற்றி மாற்றி நடந்து கொண்டிருந்த அம்ருதா வாயிலில் நின்றவள்களை கண்டு உடனே உள்ளே அழைத்தார்....
அம்ருதா : உத்ராமா... என் கண்ணே பற்றும் போலருக்கே... யாரு கண்ணும் பற்ற கூடாது என கண்ணின் மையெடுத்து அவள் காதின் பின் வைத்தார்....
ஷியாமோ பேப்பர் படிப்பதை போல் அன்கியை கண் இமைக்காமல் பார்த்து கொண்டிருக்க.... அவன் பார்வையில் தக்காளி பழமாய் சிவந்த அன்கி தன் மாமியாருக்கு நல்ல மருமகளாய் உதவி செய்ய சமையலறையில் நுழைந்து கொண்டாள்....
ஹ்க்கும்.. ஹ்க்கும் என செருமி கொண்டே வந்த விஷ்வா செய்தி தாளை திருப்பி விட... அப்போதே இவ்வளவு நேரம் தலை கீழ் படித்து கொண்டிருக்கிறோம் என்பதை உணர்ந்த ஷியாம் ஈஈஈ என இளிக்க.... விஷ்வாவோ வேறு ஒரு உலகில் எப்போதோ நுழைந்திருந்தான்...
அவனை பார்த்து மிரு முறைத்து கொண்டிருந்தாள்.... அவனோ அதையெல்லாம் காணாமல் அவளையே சைட் அடித்து கொண்டிருந்தான்.... அதன் பின் ஷியாம் அவனை இழுத்து கொண்டே வேலையை பார்க்க வெளியேறினான்....
தன் லெஹெங்காவை சரி செய்தவாறு வந்த தியாவை எப்படியோ அறையிலிருந்து காலில் விழாத குறையாக கெஞ்சி கூத்தாடி கீழே இழுத்து வந்தாள் மேகா.... அவ்விருவரும் அதே போல் உத்ராவை புகழ்ந்து தள்ள.... அவளோ " பாக்க வேண்டியவன் இன்னும் பாக்கலையே " என நொந்தவாறிருக்க....
அவள் முகம் லைட்டாய் சுருங்கிய அந்த நொடி தன் கருப்பு சட்டையின் கைகளை மடித்து விட்டவாறு... சுருக்கமில்லாத வெள்ளை வேஷ்டியில் தலை கேசம் அலைபாய... வலது கையில் ஒரு கருப்பு வாட்ச்சுடன்... கழுத்தின் ஒரே ஒரு சங்கிலியுடன்.... கண்களிரண்டும் காந்தமாய்... கம்பீர நடையுடன் இறங்கி வந்தான் ஆதித்....
அவனை கண்டவளின் பார்வை அவன் கண்களும் இவள் கண்களும் சந்தித்த போது உறைந்து விட.... அவனோ இங்கே அவளை எதிர்பார்க்காதவன் கீழிறங்கி வர....
வெள்ளையும் கருப்பும் கலந்த லஹென்க்காவில் ஒற்றை பின்னலிட்டு... இடது புறத்தில் கழுத்தின் முன் தொங்க விட்டு... இடது நெற்றியில் சுருள் சுருளாய் நீண்டிருந்த கற்றை முடியை ஒதுக்கி விட்டு... கைககிள் வளையில் ஜொளிக்க... வதனத்தில் சிறிய புன்னகையே பெரும் அலங்காரமாய் காட்ட... இருள் வாணின் நிலவை போல் அவ்விடத்தின் நிலவாய் தன்னந்தனியாய் தெரிந்தவளை தன்னையும் இழந்து கண்களை இமைக்க கூட இயலாமல் பார்த்தவாறு அதே மோன நிலையில் இறங்கி வந்தான்....
இருவரின் உடையும் ஒரே நிறத்திலிருப்பதை கண்ட தியா அவனை கிள்ளி.... உலகிற்கு வர வைத்து...
தியா : அண்ணா நீயும் உருவும் ஒரே கலர் ட்ரெஸ்...
ஆதித் : ம்ம் ஆமா டா... என எப்படியோ பாடு பட்டு தன் பார்வையை மாற்றி கொண்டு கூற....
அந்நேரம் சரியாய் அம்ருதா தியாவையும் மேகாவையும் அழைக்க.... மிருவும் அவர்களுடன் செல்ல....
ஆதித்தும் உத்ராவும் தனித்து விடப்பட்டனர்.. அவளை பார்க்காமல் இருக்க விரும்பாமல் ஏதோ முக்கியமான காள் பேசுவதை போல் அங்குமிங்கும் பார்ப்பதும் அவளை அவ்வப்போது ஓரக்கண்ணால் பார்ப்பதுமாய் இருந்த ஆதித்தின் அருகில் நெருங்கிய் உத்ரா... அவன் இவளை தவிற்க வேண்டி அவளுக்கு முதுகு காட்டி நிற்கவும்....
உத்ரா : சேம் பின்ச்.... டோன் டச் மி டைம் ஓவர்.... சாக்லேட் குடுத்துடு மாமா... என நறுக்கென கிள்ளி விட்டு.... அவன் " ஆ " என கத்தும் போதே சமையலறைக்குற் குடுகுடுவென ஓடி விட்டாள்....
அவள் கிள்ளிய இடத்தை தேய்த்த ஆதித் அவள் ஓடிய திசையை ஏதோ ஓர் அர்த்தமான உணர்வுடன் கண்டு விட்டு இதழோரம் உறைந்த புன்னகையுடன் வெளியேறினான்....
அம்ருதா : இந்தா மோர்...
தியா : இப்போ இத குடிச்சே ஆகனுமா...
அம்ருதா : ஆமா டி.. இந்தா... இந்தாங்க டி மோர்... உத்ரா இந்தா... என குடுக்க...
அதை ஒரே மொடக்கில் முழுசாய் குடித்த தியா.... பரபரக்க தொடங்கினாள்...
தியா : வாங்க போகலாம்...
மேகா : ஏன் டி இப்டி பறக்குர... நாங்க இப்போ தான குடிக்க ஆரம்பிச்சோம்...
தியா : அதெல்லாம் எனக்கு தெரியாது சீக்கிரம் வாங்க டி....
அன்கி : ஏன் டி இப்போ நீ இவ்ளோ அவசரப்படுர....
தியா : சொன்னா மாட்டிக்குவேன் டி... என தன்னுள்ளே புலம்பினாள்...
தீரா : ஏன் டி நீங்க அவங்கவங்க ஆள பாத்துட்டீங்க... அவ அவ ஆள பாக்க வேண்டாமா...
மிரு : சரி வா இப்போ போவோம்.
தியா : ஹப்பா... வாங்க வாங்க.... என இழுத்து கொண்டு ஓடினாள்....
ஊரின் மையத்தில் நடுநயமாய் அமைக்கப்பட்டிருந்தது புதிய மருத்துவமனை... தேவையான அனைத்து மருத்துவ வசதிகளும் கிடைத்து விட்டதாய் தங்களுக்கு தானாகவே வந்து உதவிய உலகிலே பெரிய கம்பெனியான AR Medical and Multi speciality hospitality யிற்கு.... நன்றி தெரிவித்து ஷியாமும் விஷ்வாவும் மெயில் அனுப்பி கொண்டிருக்க.... அதை படிக்க வேண்டியவனோ அவர்களருகிலே நிற்பதை அறியாமல் லப்பை மூடி வைத்தனர்....
அப்போது சரியாக ராஜேந்திரன் தாத்தாவிடமும் நாராயனன் தாத்தாவிடமும் திருவிழாவின் ஏற்பாட்டை பத்தி கூறி கொண்டே வந்த ரித்திக் எதற்சையாய் பார்வையை திருப்ப... அங்கு அடர்ந்த நீல நிறமும் பளிச்சென்ற வெள்ளை நிறமும் கலந்த லெஹென்க்காவில் தன்னை பார்க்காததை போல் பாவித்தவாறு ஓரக்கண்ணால் பார்த்து கொண்டிருந்த அவனின் யதுவை கண்டவனின் கண்கள் தானாகவே அவளிடம் நிலைபெற்றிருக்க... அதை உணராத தாத்தாக்கள் இருவரும் அங்கு ஃபோனை நோண்டி கொண்டு வந்த ஆதித்தை பிடித்து வைத்து கொண்டு அவனிடம் இவனை புகழ்ந்து தள்ளி கொண்டிருக்க.... அவனோ என்றுமில்லாத அதிசயமாய் அமைதியாய் நின்றிருந்தான்...
தீரா : யாரும் தப்பான முடிவெடுத்துராதீங்க... நல்லா ஜூம் பன்னி பாருங்க....
தாத்தாக்கள் இருவரின் முன் ரித்விக் நின்றிருக்க.... ஆதித் இரு தாத்தாக்களின் பக்கவாட்டில் நின்றிருக்க.... அவர்களின் பின் சில அடி தூரத்தில் உத்ரா தியா மிரு அன்கி மேகா ஐவரும் ஷியாம் மற்றும் விஷ்வாவுடன் அரட்டை அடித்து கொண்டிருந்தனர்....
ஆதித்தின் பார்வை அவனையும் அறியாது அவனின் அக்ஷா மீது பதிந்ததுனாலோ என்னவோ சாருக்கு தாத்தாக்களின் சொற்கள் மூளையில் பதியவில்லை....
லைட்டாய் திரும்பிய தியா... தன்னையே வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டிருந்த ரித்திக்கை பார்த்து ஆதித் கவனிக்கவில்லை என்பதை உறுதி படுத்தி விட்டு சட்டென கண்ணெடிக்க.... அவன் மின்சாரம் பாய்ந்ததை போல் தடுமாறி நின்றான்.... பின்னே சில நிமிடங்கள் முன் அவன் ஃபோன் வைப்ரேட் ஆனது நினைவு வர... அதை எடுத்து பார்த்தனுக்கு... வாட்சப்ப்பில் தயாவிடமிருந்து " பப்லிக் மச்சான் பப்லிக் " என மெஸேஜ் வந்திருக்க... தன்னை அவனும் பர்த்து கொண்டு தானே இருப்பான்... என நினைத்து தலையிலடித்து கொண்டான் ரித்திக்
தன்னை தானே கடிந்து கொண்ட ரித்திக் தலையையே அப்புறம் திரும்பவில்லை... அப்போதே ஆதித்தை கண்டவன் அவனின் கவனம் தாத்தாக்களின் பேச்சிலில்லாது சில அடி தூரத்தில் நின்ற தன் தங்கையின் மேலிருப்பதை கண்டவன்.... என்ன நினைத்தானோ...
ரித்திக் : தாத்தா டைம் ஆச்சு... நா போய் விழாவ ஸ்டார்ட் பன்ன சொல்றேன்... என கூற...
ராஜேந்திரன் தாத்தா : அன்... சரி பா... போ என அனுப்பிவைக்க.... ஆதித்தை கடக்கும் போது சரியாய் அவன் காலை நன்கு மிதித்து விட்டு சென்றான் ரித்திக்...
ஆதித் : ஆ என கத்தி கொண்டே கண்களை மூடி திறக்க.... அப்போதே அவனுக்கு இவ்வளவு நேரமாய் தான் செய்தவை மூளையில் உதிக்க.... சுற்று புறத்தை அப்போதே சரியாய் கவனித்தவன் தன்னை தானே திட்டி கொண்டான்....
ராஜேந்திரன் தாத்தா : என்னச்சு பா.
ஆதித் : ஒன்னு... ஒன்னுமில்ல தாத்தா.... என கூறியவன் திரும்பி தன்னை கடந்து சென்றிருந்த ரித்திக்கை முறைத்து விட்டு... எதுவும் பிரச்சனை வேண்டாமென அங்கிருந்து மருத்துவமனைக்குள் நுழைந்தான்.....
விழாவும் இனிதே தொடங்க.... தாத்தாக்கள் இருவரும் புதிய மருத்துவமனையை திறந்து வைத்து... அனைவரையும் உள் அழைத்து சென்றனர்....
ஆதித்தின் வேலையால் வந்தனக்குரிச்சியிலே மருத்துவத்திற்கு... நர்சிங்கிற்கு... பார்மசிக்கு படித்து வேலை கிட்டாமலோ... அல்ல ஊரை விட்டு வேலைக்கு செல்ல இயலாமல் வீட்டில் இருந்தவர்களை எல்லாம் திரட்டி சரியான வேலைகளை அந்த மருத்துவமனையில் பிரித்து கிடைத்திருந்தது... வந்தனக்குரிச்சியிலிருந்த மருத்துவ கல்லூரி பேராசிரியர்களும் இந்த மருத்துவமனை தங்களின் மருத்துவமனையை புதுப்பிக்க உதவுமென கூறியிருந்தனர்....
ஷியாம் அங்கு குழந்தைகள் நலநிபுனராய் பணியாற்ற... விஷ்வா எலும்பு நல நிபுனராய் பணியாற்றினான்...
திறப்பு விழா முடிந்ததும்... அந்த மருத்துவமனையின் பௌண்டராய் ஊர் தலைவரான நாராயனன் தாத்தா உரை நடத்தியதும்.... ஆதித்தை காரணமே இல்லாமல் மேடைக்கு அழைக்க.... அதுவரை ஆதித்தை சீண்டுவதே தன் தலையாய கடமையாய் அவனை சும்மா இல்லாமல் நச்சரித்து கொண்டு அவன் முறைப்பை கண்டு கொள்ளாது விளாயாடிய உத்ராவின் மனம் நெருடலாய் குமுறியது....
அப்போதே அவ்வீட்டின் பெரியவர்கள் அனைவரின் முகங்களுமே எதனாலோ கலங்கியிருப்பதை கவனித்தாள் உத்ரா... ஏனோ அவர்கள் அனைவரும் பதட்டமாய் உள்ளதாய் அவளுக்கு தோன்ற.... ஆதித் மேடையேறியதும் அவன் பின் தொடர்ந்த அன்னப்பூரனி மற்றும் ரேகாவை கண்டதும் வேகமெடுத்து துடிக்க தொடங்கியது அவளின் இதயம்....
ஆதித் : சொல்லுங்க தாத்தா ஏன் கூப்ட்டீங்க... என கேட்க...
நாராயனன் தாத்தா : உன்னோட அம்மாட்ட கேளுப்பா... என அவனை பார்க்க இயலாது தலை திருப்பி கொண்டு கூற.... அதை கண்டவனின் நேரான புருவங்கள் இரண்டும் சுருங்க.... அவன் இப்பக்கம் அம்ருதாவை தேடி திரும்பவும் அன்னப்பூரனி அவன் முன் நிற்கவும் சரியாய் இருக்க.... சட்டென ஏறிய கோவத்தை அடக்கிய ஆதித் அவர் அருகில் ரேகா அடர் பச்சை நிற பார்ட்டி வியரில் இருப்பதை கண்டு அலட்சியமாய் முகத்தை திருப்ப..... கூடியிருந்த ஊர் மக்கள் அனைவரின் முகங்களுமே அவளின் உடையில் சுருங்க தான் செய்தது....
ஊரை தாண்டி சென்று படித்து வந்தாலும் இக்கிராமத்தின் பெண்கள் இது போலான ஆடைகளை இது வரை உடுத்தியதில்லை....
அன்னப்பூரனி : அண்ணா இங்க வா... டேய் ராஜேஷு... இங்க வா டா... தியா இங்க வா என அழைக்க.... நம் தியா ஆணி அடித்தார் போல் அதே இடத்தில் நிற்க.... அவள் அருகில் வந்த அம்ருதா அவளை வலுக்கட்டாயமாய் மேடை ஏற்றி விட... இப்போது ஆதித்தின் முகம் ஏமாற்றத்தில் கருத்தது....
என்ன தான் நடக்கிறதென்பதை போல் அனைவரும் அவர்களையே கூர்ந்து கவனித்து கொண்டிருக்க...
மருதவேல் : இந்தா ராஜேஷ்.... இத மாப்பிள்ளை கைல குடு... என ஒரு தங்க செய்னை நீட்ட.... ஆதித் சட்டென நிமிர்ந்து அவர்களிருவரையும் முறைப்பதை கண்டு ராஜேஷ் நடுங்கி போய் நிற்க... மருதவேலோ பார்வையை மாற்றி கொண்டார்....
அன்னம் : தியா அத அண்ணன் அண்ணி கழுத்துல போட்டதும் கொக்கி போட்டு விடு... எனை கூறொ....
தியா : வாட்... அண்ணியா.... நா ஏன் கொக்கி போடனும்... அவளுக்கு கை இல்லையா...
அன்னம் : அப்டீலாம் சொல்ல கூடாது தியா.... என் மகனோட தங்கை நீ தான.... அதனால நீ தான் போடனும்..
தியா : அண்ணா ஏன் அவ கழுத்துல செய்ன் போடனும்
கீழ் நின்ற அன்கி மிரு மேகா ஷியாம் விஷ்வா ரித்திக் உட்பட அனைவரின் முகங்களும் தெளிவில்லாமல் இருக்க.... இவ்வளவு நேரம் சிரித்த முகமாகவே இருந்த உத்ராவின் அழகிய வதனம் அன்னப்பூரனியின் வார்தைகளில் இருண்டு போக..... ஆதித்திதோ கோவத்தின் எல்லையில் நின்றிருந்தான்....
அன்னம் : என் மகனுக்கும் என் அண்ணன் மகளுக்கும் நிச்சயதார்த்தம் என கூற.....
அவ்வளவு தான் ஆதித்தின் பொருமை காற்றில் பறந்தது....
ஆதித் : யார கேட்டு இதெல்லாம் பன்னீங்க... என்ற அவன் ஒரே கேள்வியில் அந்த அரங்கமே நடுநடுங்க....
அங்கிருந்த அனைவருமே " இவன் இவனோட குடும்பத்துக்கே மேல இருக்கானே " என அவனின் கோவத்தை எடை போட... அங்கோ அவனின் தாத்தாக்களே அவனை அடக்க வழி அறியாது நடுங்கி கொண்டிருக்க.....
அன்னம் : நா யாரடா கேக்கனும்... நா யார கேக்கனும்....
ஆதித் : என்ன கேக்கனும்....
அன்னம் : நா ஏன் உன்ட்ட கேக்கனும்.... உன்ன பத்து மாசம் சுமந்து பெத்த நா உன்ட்டையும் கேக்கனும்னு அவசியமில்... என கூறி முடிக்கும் முன்னே.... சராமரியாய் வந்தது ஆதித்தின் பதிலடிகள்....
ஆதித் : யாரு சொன்னா நீ என் அம்மான்னு... என்ற கேள்வியில் அங்கிருந்த குடும்பத்தினருடன் மொத்த ஊர் மக்களுமே அதிர்ந்தனர்....
உத்ரா இதையெல்லாம் காதிலே வாங்கவில்லை.... அவளின் செவியை தீண்டாயது என்னவோ அக்ஷா என்ற அவனின் மெல்லிய அழைப்பு மாத்திரமே... அவள் பித்து பிடித்ததை போல் நின்றதை கவனித்த மேகா அவளை போட்டு உலுக்க... உத்ரா அதை உணரும் நிலையில் இல்லை....
அன்னம் : யாரு டா சொல்லனும்.... உன்ன பெத்தெடுத்த நான் தான் சொல்றேன்ல....
ஆதித் : என்ன பேச வைக்காதீங்க... மரியாதையா கண்ல மாட்டாம எங்கையாவது போய்டுங்க.... என ஒரு முறை எச்சரித்து பார்த்தான்....
அன்னம் : நீ என் மருமக கழுத்துல இந்த செய்ன போடு....
ஆதித் : முடியாது முடியாது... முடியவே முடியாது...
அன்னம் : நீ போடலன்னா நா என் கழுத்தறுத்து செத்து போய்டுவேன்.... நொடி தாமதிக்காது....
ஆதித் : செத்துப்போ.. என்றான்.....
இதை எதிர்பார்க்காத அன்னம் திண்டாட.....
அம்ருதா : ஆதித்... என்ன பேச்சு பேசுர நீ... முதல்ல வாய மூடீட்டு அந்த செய்ன எடுத்து அவ கழுத்துல போடு....
ஆதித் : முடியாது..
நாராயனன் தாத்தா : ஆதித்தா.... பேசாம போடுப்பா....
ஆதித் : முடியாதுன்னா முடியாது தான்....
மரகதம் பாட்டி : ஆதித்தா தாத்தா சொன்னா கேக்க மாட்டியா...
ஆதித் : என்ன படைச்சவனே சொன்னாலும் நா கேக்க மாட்டேன்.... என்ன அதிகாரம் பன்ற ஒரு உரிமை.... அவனுக்கும் கிடையாது.... எனக்கு உரிமையானவள தவிற நா யாரு கழுத்துலையும் செய்ன போட மாட்டேன்..... என அத்துனை தெளிவாய் வந்தது அனது வார்த்தைகள்....
அம்ருதா : இப்போபோட போறியா இல்லையா டா நீ....
என இவர்கள் அனைவரும் அவனை வற்புறுத்துவதை கண்ட உத்ராவின் கண்கள் தானாகவே கண்ணீரில் நிறைய.... அவளின் மனமோ.... " அப்போ என் ஆதன் எனக்கு சொந்தமானவன் இல்லையா.... அவன் அவளுக்கு தா சொந்தமா.... அவன் செய்ன போற்றுவானா???" என சிந்திக்க.... அவர்களின் ஊர் வழக்கப்படி.... ஒரு ஆண்பிள்ளை சங்கிலியை ஒரு பெண்ணின் கழுத்தில் போட்டு விட்டாலே அது திருமணத்திற்கு சமம்.... ஏனெனில் அந்த ஊரே ரெஜெஸ்ட்டர் திருமணம் தான் செய்வர்.... அதில் மணமகன் மணமகளுக்கு தங்க சங்கிலி அனிவித்து முழு மனதுடன் தன்னவளாக்கி கொள்வார்....
ஆதித் தன் பொருமை மேலும் பறந்து விடும் முன் அங்கிருந்து செல்ல முடிவெடுக்க.... செல்ல முயன்றவனை ரேகா பிடித்திழுத்தாள்.... அவள் தன் கையை பிடித்த அடுத்த நொடி தீ பார்வை பார்தான் அவன்.. உடனே அவள் கையை எடுத்து விட... பதறிய ரேகா அந்த செய்னை அவன் கழுத்தில் போட முயல... ஆதித் கோவத்தை அடக்க இயலாது திரும்பும் முன்.... பளாரென அவள் கன்னத்தில் விழுந்தது அறை..
கோவமாய் நின்ற தியாவை ரேகா கோவத்தில் அடிக்க கை ஓங்க.... சரியாய் அந்நேரம் மேடையேறிய ரித்திக் அவளின் கையை பிடித்து உதறி விட்டான்....
ரேகா : எவ்ளோ தைரியம் இருந்துர்ந்தா என் மேலையே கை வச்சிருப்ப.... உன்ன..... என ரித்திக்கை அடிக்க கை ஓங்க.... மீண்டும் தியாவே அறைந்தாள்....
ரேகா : என்ன டி உனக்கு கொழுப்பா....
தியா : என் அண்ணன தொட வருவ....என் மாமாவ அறைய வருவ... நா பாத்துட்டு சும்மா இருக்கனுமா... என இன்னோறு அறை விழ....
ராஜேஷ் : ஏய்.... என் தங்கச்சியையே அடிக்கிறியா....
ஆதித் : ஆம்பலையா இருந்தா என் தங்கச்சி மேல கை வை டா பாப்போம்....
ரித்திக் : வச்சன்னா.... அதுக்கப்பரம் உசுரோட இந்த இடத்த விட்டு போக மாட்ட... என அவளின் இரு பக்கத்திலும் நின்று கூற....
ராஜேஷ் பயந்து பின் வாங்கினான்....
அன்னம் : என்ன டி இவனுங்க இருக்காங்கன்னு திமிருல என் மருமகள அடிக்கிரியா.... என கையை ஓங்க...
ஆதித் : என் தங்கச்சி மேல கை வச்சீங்க நா சும்மா இருக்க மாட்டேன்...
அன்னம் : நா உன் அம்மா டா....
ஆதித் : தெரியாத மாரி நடிக்காதீங்க.... என் அம்மா எப்போவோ செத்து போய்ட்டாங்க..... என இழுத்து வைத்த பொருமையை விட்டுவிட்டு கத்த....
அம்ருதா : ஆதி... அப்டிலாம் சொல்ல கூடாது....
ஆதித் : உண்மை தெரியாம பேசாத மா.... என்ன பெத்த என்னோட அம்மா இறந்து 20 வர்ஷமாச்சு.... இவங்க என் அப்பா கட்ன தாலிய தாங்குரவங்க அவ்ளோ தான்..... எனக்கும் இவங்களுக்கும் எந்த சம்மந்தமும் கெடையாது.... என அனைவரின் மனதிலும் தெளிவாய் பதியும் அளவு கத்தினான்....
அவனின் கூற்றில் அனைவரும் அதிர.... அன்னப்பூரனி இவனுக்கு எப்படி தெரிந்தது என அதிர்ந்து போய் நோக்க.... உத்ராவோ அவன் கடைசியாய் கூறியதை கேட்டு தன் கண்ணில் வலிந்த கண்ணீரை துடைத்து கொண்டாள்....
அனைவரும் அதிர்ச்சியிலிருந்த அந்த நேரம் உத்ரா திடீரென மாமா என கத்த.... திடுக்கிட்டு திரும்பிய ஆதித் அவன் கழுத்தை வெட்ட வந்த அருவாளில் இருந்து மயிரிலையில் தப்பித்தான்.....
நீ... நான்...
புடிச்சிருக்கா புடிக்கலையான்னு சொல்லுங்க....
DhiraDhi❤
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro