Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

31 நீ... நான்...

அறையில் ஏதோ திட்டம் தீட்டி கொண்டிருந்த ரேகா மற்றும் அன்னம் மேகா உள் வருவதை கண்டு லேசாய் முறைக்க... அதை கண்டும் காணாமல் டீ கப்புகள் இரண்டையும் அவர்களருகில் வைத்து விட்டு " டீ " என பொதுவாய் கூறி விட்டு கீழிறங்கி சென்றாள்...

கீழ் கூடத்திலோ பாட்டிகள் தாத்தாக்கள் அம்ருதா மற்றும் தேவராயன் ரசித்து ருசித்து டீயை குடித்து கொண்டே உத்ராவை பாராட்டி கொண்டிருந்தனர்....

தீரா : சேதாரமில்லாம தியா வந்தாளா இல்லையா...

தேவராயன் : ஹ்ம்.... என நீண்ட ஹம்மை இழுத்து.... அசத்தீட்ட மா... ப்பா... என்ன மணம் என்ன சுவை... செம்ம போ...

பிருந்தா பாட்டி : ஆமா டா கண்ணு... டீ போட்டே எங்கள மயக்கீட்ட... நாங்க கூட இப்டி மணமா டீ போட்டதில்ல...

அம்ருதா : ஆமா டா செல்லம்.... வாசனை ஆளை தூக்குது....

ராஜேந்திரன் தாத்தா நாராயனன் தாத்தா : எங்க பேத்தியாச்சே...

உத்ரா : ஹாஹா நன்றி மாமா பாட்டீஸ் அத்தை தாத்தாஸ்....

அம்ருதா : சரி எப்டி இவ்ளோ வாசனையா இருக்கு.... குடிக்கும் போது கூட தனி சுவை தெரியிதே... அச்சு வெள்ளத்துல மட்டும் இப்டி சுவை வராதே..

உத்ரா : அது தான என் சமையல் சீக்ரெட்... என கண்ணடித்தாள்....

மரகதம் பாட்டி : உன் இரகசியம் தெரிஞ்சாலும் உன்ன மாரி டீ போட முடியாது டி என் ராசாத்தி....

ஷியாம் : ஆஹா.... வீட்டுக்கண்ணெல்லாம் உத்ரா மேல தான்.... சீக்கிரம் சுத்தி போடனும்...

மிரு : போட்டுட்டா போச்சு... என அவளை நெட்டி முரித்தாள்.....

அதை கண்டு அனைவரும் சிரிக்க.... உத்ரா தியாவை தேடி மாடியேறினாள்.... அவர்கள் சிரிப்பதை கேட்டு கொண்டிருந்த அன்னமும் ரேகாவும் காண்டானவாறே டீ கப்பை தூர எறிய பார்க்க... ஆனால் " என்னை சுவைத்து தான் பாரேன் "என அந்த டீயின் மணம் அவர்களையும் மயக்க அவர்களையும் மறந்து ஒரு சிப் விழுங்கியவர்கள் யாரை பாராட்டுகிறோமெனவே மறந்து " மாஸ்டர் குக் " என பட்டம் குடுக்கும் அளவு சென்றிருந்தனர்....

ரேகா : அய்யோ அத்த... மொத்தமா குடிச்சிடாதீங்க...

அன்னம் : ஏன் டி டேஸ்ட் செம்மையா இருக்கே..

ரேகா : என்னாலையும் குடிக்காம இருக்க முடியல தான்... ஆனா குடிக்க கூடாது... இத வச்சு எதாவது சீன் க்ரியேட் பன்னனும் வாங்க...

அன்னம் : அன்... நல்ல திட்டம் வா வா... என அழைத்து செல்ல....

அந்த நேரம் சரியாக மூன்றாம் மாடியில் ஏதோ உடைந்து நொருங்கும் சத்தம் தெள்ளத்தெளிவாய் கேட்க.... அதோடு கதவு அறைந்து சாத்தப்படும் சத்தமும் கேட்டது...

அனைவரும் உடனே பதறியடித்து கொண்டு மேலே ஓட... அங்கோ பித்து பிடித்ததை போல் கைகளை பின் கட்டி கொண்டு ஆதித்தின் அறை கதவருகில் நின்றிருந்தாள் தியா.... அவளுக்கு நேரெதிரே கதவை வெறித்தவாறு திரும்பி நின்றிருந்தாள் உத்ரா.... அவளின் காலருகில் முன் ஆதித்தின் கடுப்பை கிளரி இறைவனின் அருளால் தப்பித்த மடிக்கணினி கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தது....

தீரா : இதுக்கு கொஞ்சம் கொழுப்பு அதிகம் தான்... அதான் ஒரே நாள்ள அல்பாயுசுல போய்டுச்சு..

ஷியாமும் விஷ்வாவும் ஒரு அடி முன்னே நகர... ஏதோ காலடியில் நொருங்கும் ஓசை கேட்டு கீழே பார்க்க.... அங்கோ காவாசி உடைந்திருந்த கன்னாடி டம்ளர் ஒன்று நொருங்கியிருந்தது...

அன்கி : எல்லாரும் பாத்து நடங்க... கன்னாடி க்லஸ் முன்னாடியே உடஞ்சிருக்கு.... என கூற... அங்கங்கு கன்னாடி தூள்கள் மினுமினுவென பல்லை இளித்தது.... அவளின் குரலில் சுயநினைவை அடைந்த உத்ரா கண்களை துடைத்து விட்டு சாதாரணமாய் திரும்பினாள்...

நாராயனன் தாத்தா : என்ன ஆச்சு டா கண்ணு.. ஏன் பயந்து போயிருக்க...

உத்ரா : நானா இல்ல தாத்தா... நா நல்லா தான் இருக்கேன்...

அம்ருதா : உண்மைய சொல்லு டா... ஆதித் எதாவது கோவத்துல சொல்லிட்டானா...

உத்ரா :அச்சோ இல்ல அத்த... அவரு என்ன என்ன சொல்ல போறாரு... நா வரும் போதே இந்த லப்டப் கீழ உடஞ்சி கெடந்தது என அபாண்டமாய் பொய்யுரைத்தாள்...

மேகா : ஏ தியா... ஏ தியா... தியா... எனை அவளை பிடித்து உலுக்க.... சுயநினைவடைந்தவள் பேந்த பேந்த முளித்து விட்டு உத்ராவை இளுத்து கொண்டு ஒரு அறைக்குள் நுழைந்தாள்.... அவள் முளியில் அனைவருக்கும் சிரிப்பு வந்து விட... பெரியவர்கள் விளையாட்டு புள்ளைங்க என கூறியவாறு செல்ல.... அன்கி மிரு மேகா அவள்களை பின் தொடர.... இதில் ஏனோ உள்ளே செல்ல நினைக்காத ஷியாமும் விஷ்வாவும் வெளியே சென்று விட்டனர்.....

ரேகாவும் அன்னமும் எதுவும் செய்யாமலே நடக்க வேண்டியது நடந்து விட்டதென குதூகலித்தவாறு வேஸ்ட் செய்ய நினைத்த டீயை குடித்தனர்.....

அறையுள் தன் தலையை இரு கரம் கொடுத்து தாங்கியவாறு பெட்டில் காலை முட்டுக்கு கொடுத்து அமர்ந்தாருந்தான் ஆதித்... சில மணி துளிகள் அதே பொஷிசனில் இருந்தவன் பின் ஃபோனை எடுத்து கிஷோருக்கு டயல் செய்தான்.... காள் ஏற்க்கப்பட... இவன் வாயை திறக்கும் முன்னே....

கிஷோர் : குட் ஈவ்னிங் பாஸ்... இன்னைக்கான சாஃப்ட்வர் கம்ப்பெனீஸோட மீட்டிங்ஸ் உங்க அஃபீஷியல்ஸாலையே முடிஞ்சிடுச்சு பாஸ்... கொரோனா சம்மந்தமான விழிப்புணர்வு நம்மளோட எல்லா அசோஷியேஷன்லையும் பரப்பியாச்சு... நம்மளோட ஹோம்ஸ் எல்லாமே சேஃப் அன்ட் செக்யூர்ட் பாஸ்... மெடிக்கல் வசதியும் எல்லா ஹோம்லையும் பன்னியாச்சு... நீங்க சொன்ன மாரி ஸ்டஃப்ஸ்க்கு பலமா ஒர்க் குடுக்கல.... 5 ஹர்ஸ் அ டே மட்டும் தான்.... மத்த நேரம் ஃப்ரியா இருக்காங்க... இன்ட்டர்னேஷ்னல் க்லைன்ட்ஸ்ஸோட மீட்டிங்ஸ் கன்செல் பன்னியாச்சு.... அக்ரி அசோசியேஷன்ல... தேவையான ஃபுட் ப்ராடெக்ட்ஸ் இன்னும் பஞ்சமில்லாம குடுத்துக்குட்டு தா இருக்காங்க.... க்ரீன்ஸ்க்கு மட்டும் தா கொஞ்சொ கஷ்ட்டமா இருக்கு.... தென்.... ஆட்டோமொபைல் கன்ஸ்ட்ரக்ட்டர்ஸ் எல்லாருக்குமே லீவ் கொடுத்து அனுப்பியாச்சு.... அவங்கவங்க டிஸைன்ஸ மட்டும் செய்ய சொல்லீர்க்கோம்... உங்களோட பைக்ஸ் பர்மிஷென் குடுத்தா உடனே டெலிவெரி ஆய்டும்... உங்களோட ந்யூ லப்டப் ரெடி ஆய்டுச்சு... நாளைக்கு மார்னிங் உங்க டேபில் முன்னாடி இருக்கும்... என அவன் அங்கிருந்து வந்ததிலிருந்து இப்போது உடைத்த மடிக்கணினிக்கு அடுத்து வாங்க வேண்டிய புது மடிக்கணினி வரை மடப்பாடம் செய்ததை போல் மூச்சு விடாமல் அடுக்கி கொண்டே போனவனை நினைக்க ஆதித்திற்கு கோவதத்திற்கு பதில் சிரிப்பு தான் வந்தது... வெகு நேரம் அப்புறதிலிருந்து பதிலில்லாததை உணர்ந்த கிஷோர்....

கிஷோர் : பாஸ் என இழுக்க...

ஆதித் : நா எந்த நம்பர்ல இருந்து கால் பன்னீர்க்கேன்னு கொஞ்சம் பாருங்க என அமைதியாய் கூற...

இந்த அமைதியை எதிர்பார்க்காத கிஷோர் அரண்ட விழியுடன் ஸ்க்ரீனை செக் செய்ய... அதிலோ அவனின் பர்ஸ்னல் நம்பர் ஒளிர்ந்தது...

கிஷோர் : சாரி அண்ணா.... உங்க பேர பாத்த உடனே....

ஆதித் : அதுக்கு தா பர்ஸ்னல் நம்பரையும் அஃபீஷியல் நம்பரையும் தனி தனியா சேவ் பன்னுன்னு சொல்றது... இரெண்டுத்தையும் அண்ணான்னு சேல் பன்னா கொழப்ப தா செய்யும்...

கிஷோர் : ஈஈ சரி அண்ணா... சொல்லுங்க...

ஆதித் : மார்ச் 4 அன்னைக்கே நா ஊருக்கு வன்ட்டன்னு உனக்கு தெரியும்.. அன்னைக்கு ஊர்ல உள்ள ஹோம்க்கு தனி விருந்து எற்பாடு பன்ன சொன்னனே செஞ்சியா இல்லையா...

கிஷோர் : ம்ம் எஸ் அண்ணா... அன்னைலேந்து இன்னை வர டெய்லி அத்யாவஸ்யமான உணவு தேவைகள்ள இருந்து எல்லாமே சரி வர நடக்குது...

ஆதித் : ம்ம் குட் கிஷு...

கிஷோர் : ஏன் அண்ணா இத பத்தி திடீர்னு கேக்குறீங்க...

ஆதித் : அது ஒரு டீ... என ஆரம்பித்தவன் நறுக்கென நாக்கை கடித்து கொண்டான்...

கிஷோர் : என்ன டீ அண்ணா...

ஆதித் : ம்ம் ஒன்னும் இல்ல கிஷு... நா அப்ரமா கால் பன்றேன்... என சட்டென வைத்து விட்டான்...

ஃபோனை குழப்பமாய் பார்த்த கிஷோர் தோளை குலுக்கி விட்டு வேலையை பார்க்க சென்றான்....

அறைக்குள் திடுதிபுவென உள்ளே நுழைந்த தியா.... உத்ரா பிடித்து கொண்டு உலுக்க தொடங்கினாள்...

உத்ரா : அடியே... ஏன் டி இந்த உலுக்கு உலுக்குர... என அமைதியாகவே கேட்க...

தியா : அண்ணா வந்தது உனக்கு எப்டி டி தெரியும்... எப்டி... அந்த கப்பு இவ்ளோ வர்ஷமா எங்க இருந்துச்சுனு தெரியாது.... லப்டப் உடையும் போது கூட நீ ஏன் ஒரு ரியாக்ஷனும் குடுக்கல.... உண்மைய சொல்லு டி....

உத்ராவின் நினைவுகளில் அந்த கரெட்டும் ஜீரா தண்ணியும் வந்து போனது....

உத்ரா : தனிப்பட்ட முறைலாம் இல்ல டி... கீழ புல்லட் இருந்தத பாத்தேன்... அத வச்சு தா சொன்னேன்....

மிரு : உண்மையா தா சொல்றியா....

உத்ரா : ஆமா டி...

அன்கி : எங்கள்ட்ட என்ன டி மறைக்கிர... தயவு செஞ்சி சொல்லுடி...

உத்ரா : ஒன்னும் இல்லன்னு சொல்றேன்ல... எதுக்கு டார்ச்சர் பன்றீங்க... என கத்த...

தியா : எத மறைக்கிர சொல்லு ஒழுங்கா... அவளின் கத்தலை இவள்கள் பொருட்படுத்தியதாய் தெரியவில்லை...

உத்ரா : நா எதையும் மறைக்கில.... நா வீட்டுக்கு போறேன் வந்து சேருங்க டி... என கூறி விட்டு விருவிருவென நடந்தாள்....

மேகா : கெர்ள்ஸ்.... உத்ரா பத்து வர்ஷத்துக்கு முன்னாடி நடந்தத மறந்துட்டான்னு நெனச்சு தான் நாம என்ன நடந்ததுன்னு கேக்கல... ஆனா அவளுக்கு எல்லாமே நியாபகம் இருக்கு.... அத தான் மறைக்கிறா...

அன்கி : உங்க யாருக்காவது அன்னைக்கு என்ன நடந்ததுன்னு தெரியுமா டி...

தியா : ம்ஹ்ம்... தெரியாது டி...

மிரு : இப்போ நாம என்ன பன்னனும்....

மேகா : சுத்தமா தெரியல....

அன்கி : தியா...

தியா : ம்ம்ம்

அன்கி : ஆதித் அத்தான்க்கு எடுத்துட்டுபோன டீ... என இழுக்க...

இவ்வளவு நேரம் பின் மறைத்து வைத்திருந்த கப்பை முன் எடுத்து காண்பித்தாள்....

விருவிருவென கண்களில் வலிந்த கண்ணீருடன் வீட்டை நோக்கி சென்று கொண்டிருந்த உத்ராவின் நினைவுகள் அனைத்தும் பின்னோக்கி சென்றது....

உத்ரா : எனக்கு தெரியும் ஆதன் மாமா... நீ அங்க தா இருந்த... ஆனா என் முன்னாடி வரல... எல்லாருமே நா உன்ன மறந்துட்டதா நெனக்கிலாம்... ஆனா நா எதையும் மறக்கல... ஜீரா தண்ணிய நா குடிக்க மறுக்குரதுக்கு காரணம் ஒரப்புனாலன்னு எல்லாரும் நெனச்சாங்க... ஆனா அதுக்கு காரணம் கசப்புன்னு யாருக்கும் இது வர தெரியல.. ஆனா உனக்கு தெரியும்.. அதனால தான் எப்பவுமே ஜீரா தண்ணில சக்கரை கலந்து தருவ... இன்னைக்கு கரெட்ட சாப்ட வச்சதும் நீ தான்னு தெரிஞ்சிடுச்சு... அதனால இருமல் வரண்டு நா தண்ணிய தேடுவேன்னு தெரிஞ்சே தா தண்ணிய பக்கத்துல வச்சிர்க்க... என்னால அத வெளிபடையா காம்ச்சிக்க முடியல டா... ஏன் இப்டிலாம் நடக்குது... என் மேல ஏன் நீ அக்கரை காற்ற... இதுக்கு மேலையும் நா சும்மா இருக்க போறதில்ல.... என வீட்டிற்குள் நுழைந்தவளை அதிர்ச்சியாக்கியது அங்கிருந்தவர்களின் திடீர் வரவு...

உத்ராவை அதிர்ச்சியாக்கியது யாரின் வரவு???

ஆதித் இன்னும் உத்ராவின் மீதான நேசத்தை வளர்க்கிறானா...?? அல்ல மறைக்கிறானா? ????

நீ... நான்...

அடத்த யூடி நைட்டே தரேன் இதயங்களே...

DhiraDhi❤

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro