Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

29 நீ... நான்...

திறப்பு விழாவிற்கான வேலைகள் அனைத்தும் அமோகமாய் சென்று கொண்டிருந்தது... மேகாவும் காலை உணவை உண்டு விட்டு வீட்டிற்கு சென்றாள்... ரேகா அவளிடம் எந்த வம்பும் வைத்து கொள்ள வில்லை... நேற்று அவள் கொடுத்த அடியே இன்றுவரை எரிந்து கொண்டிருந்தது...

அன்னத்தின் பார்வை மட்டும் அவளை எரிப்பதை போல் தீண்டி விட்டு வந்தது... அவரை கண்டு கொள்ளாமல் வீட்டிற்குள் நுழைந்தவள் ஃபோனை எடுத்து கொண்டு பாட்டு கேட்டவாறு அமர்ந்து விட்டாள்...

வீட்டிற்குள் திடுதிபுவென உள்ளே நுழைந்தாள் அன்கி... முற்றத்திலே அமர்ந்து பூ தொடுத்து கொண்டிருந்த பாட்டிகள் இருவரையும் காணாது சென்றவளை...

மரகதம் பாட்டி : அடியே அன்கிதா... எங்க டி போற....

அன்கி : ஒரு முக்கியமான வேலை பாட்டி...

பிருந்தா பாட்டி : ஏன் டி அப்டி என்ன தலை போற வேலை...

அன்கி : இப்போ நா அந்த வேலைய பாக்கலன்னா... தலை என்ன ஆளே போய்டும்....

மரகதம் பாட்டி : என்னடி ஒலருர...

அன்கி : உன் இரெண்டாவது பேரன் எங்க...

மரகதம் பாட்டி : அவன் விஷ்வா கூட தான் இருக்கான்...

அன்கி : எங்க...

பிருந்தா பாட்டி : வெளிய தான் டி இருக்கான்....

அன்கி : அவன சும்மா விட மாட்டேன் பாருங்க...

" அட போடி கிருக்கி " என அவர்கள் வேலையை பார்க்க சென்று விட்டனர்.... இவளின் சத்தம் கேட்டு கீழே வந்தாள் மேகா...

மேகா : என்னடி ஆச்சு... இப்போ தா பாத்தோம்... அதுக்குள்ள வந்துருக்க....

அன்கி : நா உன்ன தேடி வந்தேன்னு சொன்னனா டி...

மேகா : பின்ன யார தேடி வந்த...

அன்கி : அன்.... உன் வருங்கால அக்கா புருஷன....

மேகா : அவன் தான் இங்க இல்லையே...

அன்கி : அடிங்கு ஓடி போய்டு எங்கையாச்சும்.... ஆதித் அத்தான இல்ல...

மேகா : அப்போ என் வருங்கால புருஷன தேடி வந்தியா... என மெதுவாய் கேட்க...

அன்கி : கொலகாரி ஆய்டுவேன் மவளே... கை கால கட்டி காட்டுக்குள்ள தூக்கி போட்டுட்டு வந்துருவேன்... அக்கான்னு சொன்னது என்ன....

மேகா : ஹாஹா.. அப்போ நா உனக்கு தங்கச்சின்னு சொல்லு...

அன்கி : வந்து வச்சிக்கிறேன் டி உன்ன...

மேகா : அ... அப்போ என் அக்கா புருஷனோட தம்பிக்கு யாரு பதில் சொல்லுவா...

தீரா : இவ ரேகாவ சொல்றாளா.. இல்ல அன்கிய சொல்றாளா...

அன்கி : உன்ன கொல்லாம விட மாட்டேன் டி... என துரத்தி கொண்டு ஓடினாள்.... மாடிக்கு ஓடினாள் மேகா... இடையில் ஏதோ பாட்டு பாடி கொண்டே வந்த தியாவை இருவரும் தள்ளி விட்டு ஓட...

தியா : வாலில்லாத நாய்களா... ஓடாம போங்க டி...

மேகா : ஏ.. தியா... உன் அண்ணிய புடி டி...

தியா : இரெண்டு பேரும் என் அண்ணி தான்.. நீ எந்த அண்ணிய புடிக்கனும்னு சொல்ற...

இப்போது அன்கியின் வெறி தியா பக்கம் திரும்பியது...

அன்கி : ஏன் டி சண்டாளி... உனக்கு அவ வேற அண்ணியா... இரெண்டு பேர் போதாதா டி உனக்கு... என துரத்தி துரத்தி அடித்தாள்....

தியா : நா என்ன சொல்லிட்டேன்னு இப்போ இப்டி அடிகிற டி... கிராதகி.... விட்டு தொல டி...

அன்கி : நீ என்ன சொல்லல....

தியா : ஏன் டி உண்மையாவே அவ என் அண்ணி தான டி....

அன்கி : எப்டி டி அவ உன் அண்ணியாவா... நா இங்க இருக்கும் போது...

தியா : நீ தான் என் அண்ணனுக்கு ஒரு பதிலும் சொல்லலைல... அதான் அவன் வேற ரூட் போட்டுட்டான் போல...

அன்கி : அந்த கருவா மண்டையன அப்ரமா பாத்துக்குறேன்... இப்போ உன்ன பிரிச்சு மேயாம விட மாட்டேன்...

மேகா : என்ன காப்பாத்துனதுக்கு ரொம்ப நன்றி டி...

தியா : கொன்னுடுவேன் மவளே... உன் அக்கா ரேகாவ என் ஆது அண்ணாக்கு பேசுனதுனால உன்ன அண்ணின்னு சொன்னேன்... அத புரிஞ்சிக்காம இந்த எரும துரத்தி துரத்தி அடிக்கிது... இப்போ நீ காப்பாத்தல... நீ தான் அண்ணின்னு சொல்ல சொன்னேன்னு போய் ஆது அண்ணாட்டையே சொல்லிடுவேன்...

மேகா : அய்யோ தாயே... ப்லீஸ் விற்று...

அன்கி : அப்போ ஷியாம வச்சு சொல்லலையா...

தியா : இல்ல டி... ரேகா என் அண்ணிங்குரதுனால இவள அண்ணின்னு சொன்னேன்.... என கூற.... அப்போது சரியாய் தியாவின் மண்டையிலே வந்து விழுந்த ஒரு தலையணை.... இவள் அதிர்ந்து திரும்பி பார்க்க... அங்கோ மிரு அதிர்ச்சியாய் நிற்க... உத்ரா காளியாய் நின்றாள்....

தியா : உரு குட்டி...

உத்ரா : வாயிலையே போடுவேன்... ஏன் டி அவ உனக்கு அண்ணியா அவ உனக்கு அண்ணியா டி... என வாயிலே விடாமல் அடிக்க...

தியா : அடி.. யே.. அடியே... அ..டியே ஏன் டி அடிக்கிற விட்ரி மொதல்ல... எனை அவளின் அடியில் இடையே பேசி கைகளை இருக்கி பிடித்தாள்...

உத்ரா : அந்த மேனாமினிக்கிக்கு என் மாமா கேக்குதா... இதுல நீ அதுக்கு சப்போர்ட்டு...

மேகா மிரு தியா : மேனாமினிக்கி...???? என அதிர்ச்சியாய் கேட்க

உத்ரா : என்ன மேனாமினிக்கி... குரங்குமூஞ்சி அவளுக்கு... என் மாமாவா....

தியா : அச்சச்சோ.... தெரியாம சொல்லிட்டேன் விடு டி..

உத்ரா : எப்டி டி நீ தெரியாம சொல்லலாம்... இதுல அண்ணி ஒரு கொரச்சல்.... அவளல்லாம் நீ அண்ணான்னு கூப்டுர... நாயே எருமையே... என திட்டி கொண்டே போக....

மேகா தியா மிரு மூவரும்.... " இவ தியாவ திற்றாளா... இல்ல ரேகாவ திற்றாளா " என குழப்பி கொண்டு பார்த்திருக்க.... அன்கி எப்போதோ அகிருந்து எஸ்கேப் ஆகியிருந்தாள்...

மேகா : ஏ ஏ இரு டி... ஏன் இப்போ நீ இந்த குதி குதிக்கிர...

உத்ரா : இதுக்கு நீயும் கூட்டா டி...

மிரு : ஏ ஏ... கொஞ்ச பொருமையா இரு டி...

தியா : நா என் ஆது அண்ணாவ சொல்லல டி... சேகர் சித்தப்பா பையன்க்கு ககல்யாணம் பன்ன போறாங்க டி... அதுக்கு தா அண்ணின்னு சொன்னேன்... என அந்த நேரத்திற்கு உண்மையை அறியாமல் எதையோ அடித்து விட்டாள்....

உத்ரா : அப்டியா.... என முகத்தை சுருக்கி சந்தேகமாய் கேட்க...

மூவரும் : ஆமா டி...

உத்ரா : ஈஈஈ அப்ப ஓக்கே...

தியா : நாயே... உனக்கு அவள புடிக்காதுன்னு கோவத்துலையும் என் அண்ணன் கூட சேக்க மாற்றியே டி... ஆனா எனக்கே வாமிட் வருது... அந்த குரங்க என் அண்ணன் கூட சேக்குரதுக்கு...

மேகா : ம்க்கும்.... நான்லாம் தூக்கு மாட்டி தொங்க வேண்டியது தான்.... என உண்மையை எதனாலோ மறைத்ததற்கு என்ன பாடு பட போகிறாளோ....

மிரு : இந்த அன்கி எங்க டி போனா.... இடைல எங்கையோ எஸ்கேப் ஆய்ட்டா...

உத்ரா : அவ இந்நேரம் ஷியாம் அத்தான போட்டு உலுக்கிக்கிட்டு இருப்பா டி...

தியா : ஆமா... என் அண்ணன் என்ன நிலமைல இருக்கானோ.... என சிரித்து கொண்டே கூற.....

அங்கோ... " அடியே விட்டு தொல டி " என அன்கியின் குலுக்கலில் ஆடி கொண்டே கத்தி கொண்டிருந்தான் ஷியாம்.... அன்கியோ கொலை காண்டில் அவனை போட்டு உலுக்கி எடுத்து கொண்டிருந்தாள்..

ஷியாம் : அடியே அடியே என்ன டி ஆச்சு... ஏன் டி இந்த உலுக்கு உலுக்குர... நா எதையும் ஒளிச்சு வைக்கல டி...

அன்கி : ஏன் டா உனக்கு நா ஒருத்தி பத்தாதுன்னு.... இன்னோறுத்தி வேற கேக்குதோ.... இந்த... இந்த கருவா மண்டைக்கு இரெண்டு சோக்கு கேக்குதா...

ஷியாம் : அய்யோ நா ராமன் டி... இப்டிலாம் சந்தேகப்படாத...

அன்கி : சந்தேகப்பட்டன்னு எவ சொன்னா... கன்ஃபார்மே பன்னிட்டேன்.. நா வாய தொறக்கலன்னு மேகா பக்கம் போறியா....

ஷியாம் : மேகாவா... அடியே என்ன டி சொல்ற...

அன்கி : என்ன என்ன சொல்ற... அதான் உன் பெரியாத்தா... உனக்கும் என் அருமதோழிக்கும் மாமா வேலை பாக்குதே...

ஷியாம் : அய்யோ பெரியாத்தாக்கும் எனக்கும் பேச்சு வார்த்தையே நடந்ததில்ல டி....

அன்கி : நா உன்ன நம்பமாட்டேன் டா... நீ இன்னும் என்ன என்னலாம் பன்னி வச்சிர்க்கியோ.... சென்னைல எவக்கூடையாவது சுத்துரியா நீ...

ஷியாம் : என்ன பேச விடு டி....

அன்கி : என் பேசி பேசி மறைக்க பாக்குரியா... என கத்த....

சுற்றி முற்றி பார்த்தவன் யாருமில்லாததை உணர்ந்து.... தன் சட்டை காலரை பிடித்திருந்தவளின் இரு கைகளையும் பிடித்து.... கீழே தள்ளினான்... அவனின் அசைவில் இவள் நகர... அதில் தவறுதலாய் ஷியாம் கீழ் விழ... அவன் மேல் அன்கி விழுந்தாள்....

அவள் எழும் முன்.... இடையோடு சேர்த்து அணைத்தவன்.... அவள் அதிர்ச்சியில் கண்களை விரிக்கவும்.....

ஷியாம் : இப்போ பேசு பாப்போம்... என நக்கலாய் சிரித்தான்....

அன்கி : விடு டா.. என்றவளின் வாயிலிருந்து காத்து தான் வந்தது...

ஷியாம் : இவ்ளோ நேரம் சென்னை எக்ஸ்ப்ரெஸ் மாரி பாஸ்ட்டா போனியே... இப்போ பேசு பாக்கலாம்.... என ஒரு கையை அவளை சுற்றி அணைத்தவாறு போட்டு விட்டு மறுகையால் அவளின் கூந்தலை ஒதுக்கி விட்டு கொண்டே கூறினான்..

அன்கி : ம்ச் விடு டா என்னைய... என எழ பார்த்தவளை மீண்டும் பிடித்திழுத்தவன்...

ஷியாம் : இதோ பாரு... என் பெரியாத்தா எதாவது பன்னா நா எப்டி டி அதுக்கு பொருப்பாவேன்... நா என்னைக்குமே உன் கருவாயன் தான் டி பொண்டாட்டி.... மேகா எனக்கு தியா மிரு உத்ரா மாரி...

அன்கி : அப்போ அந்த ரேகா... என கண்கள் சிவக்க கேட்க...

ஷியாம் : அவளல்லாம் நா லிஸ்ட்லையே சேக்க மாட்டேன்...

அன்கி : சேத்து பாரு.... என்ன தவிற வேற பொண்ண ஏரெடுத்தும் பாத்த... அங்கையே நீ காலி டா.... என அவன் மேல் படுத்து கொண்டே எச்சரித்தாள்...

ஷியாம் : ம்ம்ம் பட் தன்க்ஸ்டு மை பெரியாத்தா...

அன்கி : எதுக்கு.... என முறைக்க.....

ஷியாம் : முறைக்காத டி முசக்குட்டி... என் பெரியாத்தாவால தான இன்னைக்கு என் பொண்டாட்டி அவ லவ்வ தானாவே ஒத்துக்குட்டா... என ஏட்க....

அப்போதே தான் இவ்வளவு நேரம் அனைத்தையும் உளறி விட்டோம் என்பது அன்கியின் மண்டையில் பல்பாய் எரிய... அந்த பல்பை தூக்கி எறிந்த ஷியாம்.... அவளை உலுக்க...

அன்கி : நா எப்போ சொன்னேன்...

ஷியாம் : அதான் இவ்ளோவும் சொன்னியே... உன்ன தவிற வேற யாரையும் பாக்க கூடாது.... நீ இருக்கும் போது வேற ஒருத்தியா... ஆ... அப்ரம் என யோசிக்க..... அன்கியோ அவளையும் மீறி வந்த வெட்கத்தை தடுத்து கொண்டிருந்தாள்...

அன்கி : கருவாயா விடு டா....

ஷியாம் : இவ்ளோ நேரம் சும்மா தான இருந்த... இப்போ என்ன திடீர்னு...

அன்கி : நா எவ்ளோ நேரம் இப்டி உன் மேலையே கெடப்பேன்...

ஷியாம் : வாழ்க்க முழுக்க....

அன்கி : அதுக்கின்னும் டைம் இருக்கு ராசா.... இப்போ விடு என்னைய....

ஷியாம் : என்ன எவ்ளோ அழையவிற்றுப்ப... இப்போ அனுபவி... என வாகாய் அணைத்தவாறு படுத்து கொள்ள... அன்கி தான் தவிதவித்து போனாள்....

அன்கி : புருஷா... ப்லீஸ்.... விட்ரா... என அவன் காதருகில் குனிந்து கூற....முன்பை போலவே இம்முறையும் அவன் மெய்மறந்து போன கப்பில் விட்டால் போதுமென ஓடினாள் அன்கி.... தன்னை அப்படியே விட்டு விட்டு ஓடிய காதலியை இவன் நோக்க.... அவளோ..... " லவ் யு டா கருவாயா " என கத்திவிட்டு ஓடினாள்....

அவள் வாய் மொழி கேட்ட காதலை... மகிழ்ச்சியுடன் கேட்ட ஷியாம்... அவளை துரத்தி கொண்டே ஓடினான்....

பலர் குண்டு குண்டாய் உடலுடன்... பெரிய பெரிய அறுவாள் கத்தியுடன்... ஒரு சேரை சுற்றி நின்றிருந்தனர்.... காலையில் ஆதித்தின் பிஸ்டலால் பன்ச்சரான தன் காலை தூக்கிதூக்கி நடந்தவாறு வந்தான் அந்த ரௌடி....

அவன் : மன்னிச்சிடுங்க அண்ணா... அந்த பொண்ண ஃபாலோ பன்ன அன்னைக்கு தா போனேன்... ஆனா... அவன்... எப்டி கண்டுப்புடிச்சான்னே தெரியல... நா வந்த அரைமணி நேரத்துல என் இடத்துக்கு வந்து... நம்ம ஆளுங்க எல்லாரையும் அடிச்சு போட்டு என் கால சுட்டு மெரட்டீட்டு போய்ட்டான்....

" அவனுக்கு அவ்ளோ திமிறாய்டுச்சா... அவன் தாத்தன்... என் அப்பனோட இடத்த புடிச்சான்... அவன் அப்பன்... என் இடத்த புடிச்சான்... இப்போ இவன் திரும்ப அந்த இடத்த புடிச்சிட்டான்... என்ன தைரியம் அவனுக்கு... இந்த கந்தர்வன என்ன நெனச்சான் அவன் " என அந்த சேரை தூக்கி போட்டு உடைத்தார்.... சேகரநாதனின் தம்பி கந்தர்வநாதன்...

கந்தவநாதன் : டேய் செல்வா... என கத்த...

ஆதித்திடம் பன்ச்சரான அந்த கருகருதாடி... தான் செல்வா...

தீரா : செல்வாங்குரது எனக்கு மட்டும் ஏன்... சேவாங்குர மாரி இருக்கு....

செல்வா : சொல்லுங்கண்ணா...

கந்தர்வன் : அவன போட்டு தள்ளுங்க டா... அவன் தப்பிக்கவே கூடாது.... ஒரேடியா அவன போட்டு தள்ளுரது உன் பொருப்பு...

செல்வா : அண்ணா....

கந்தர்வன் : இழுக்காத செல்வா... நீ கொன்னே ஆகனும்... அவன் செத்ததும் ஒன்னுமே தெரியாத மாறி நா போப் ஒப்பாரிவச்சி நடிப்பேன்... அந்த தேவராயன் அத நம்பி அவன் அப்பனுங்க எனக்கு பதவிய குடுத்துடுவாங்க... அவன் பொணத்த என் காலடில தூக்கி போடுங்க டா... இந்த வைபவம் முடியிரதுக்கு முன்னாடி அவன் உயிரில்லா உடல்ல இங்க வரனும்... என்னையேவா தலையாட்ட வக்கிறான்....

தீரா : நீயா தானயா தலையாட்டுன.... இப்போ அவன சொல்ற...

ஆம்... இவ்வளவும் செய்வது அவரே... ஆதித்திற்கு கண்ணில் அகப்படாத மகாஎதிரி... பிறந்ததிலிருந்தே வன்மம் கொண்டு வளர்ந்தவர்... பரம்பரை படி நாராயனன் தாத்தா ஜமீந்தார் வாரிசாக ஊர் தலைவரானார்... ஆனால் கந்தர்வனின் தந்தை நாராயனன் தாத்தாவிற்கு அம்மா வழி தம்பி... அப்படி இருக்கையில் அவருக்கும் ஜமீந்தார் பதவிக்கும் சம்மந்தமே இல்லாத போது... நடுத்தரவர்கமென்பதை சரியாய் புரிந்து கொள்ளாமல் இருந்த சொத்தையெல்லாம் எது எதற்கோ செலவழித்த கந்தர்வன் இறுதியில் அவருடன் ஒன்றும் அறியா சேகரநாதனையும் கடனாளி ஆக்கினார்...

அங்கங்கு கடன் வாங்கியது... அவராய் இருக்கையில்... அவர் நடுத்தெருவில் நின்றதற்கு நாராயனன் தாத்தாவும் ராஜேந்திரன் தாத்தாவும் அவர்களின் வாரிசுகளும் தான் காரணமென கண் மூடி தனமாய் பழி மோட்டு இப்போது பழிவாங்க துடித்து கொண்டிருக்கிறார்....

தங்கதுரை இறந்ததும் அப்பதவியில் சதி திட்டம் தீட்டி அமர நினைத்தார்... ஆனால் ஊர் மக்களும் நினைக்க வேண்டுமல்லவா... அனைவரும் ஆதித் ஊர் தலைவராக வேண்டுமென விரும்பினர்... ஆனால் அவன் அப்போது 16 வயது சிறுவன் மாத்திரமே....

ஊருக்கும் வர மாட்டேனென வீம்பாய் சென்றமையால் நாராயனன் தாத்தாவே பொறுப்பிற்கு வந்தார்...

அந்த பதவி ஆதித்திற்கு செல்ல கூடாதென அவன் லண்டனுக்கு சென்றதிலிருந்தே ஆள் வைத்து கொல்ல முயற்சித்து கொண்டிருக்கிறார்... அனைத்திலும் அவன் லாவகமாய் தப்பித்து அமைதியாகவே இருந்தான்... எப்போது உத்ரா அவர்களால் மயங்கினாளோ... அன்று தான் கொதித்தெழுந்து விட்டான்.... இது நாள் வரை அடித்து துவைத்திருக்கிறான்.... ஆழமாய் இறங்காமல் காலை ஆட்டி விட்டு வருவான்...

அவர் தன்னை அவன் கண்டுகொள்ளவில்லை என ஒரு கணக்கு போட்டிருக்க... நம் ஆதித்தின் விழிகள் செய்யும் மாயையை அவனவளே அறியாத போது இவர் அறிய சாத்தியமில்லை தான்....

மாலைப்பொழுதின் செம்மையான நேரத்தில்.... என்றுமில்லாமல்... ஹீரோயினை சைட்டடிக்க ஹீரோவிடமிருந்து ஓடி ஒளியும் சூரியனை முறைக்குமவன்... இன்று வெறுமையாய் பார்த்து கொண்டிருந்தான்.... அவனின் கூர் விழிகளால் பயம் கொண்ட சூரியன்.... மறுபக்கம் திரும்பி மேகதேவதையை துணைக்கு அழைத்து... மறைந்து கொண்டான்... ஹ்ம்... என சூரியனை ஒதுக்கி தள்ளிய தயா தன்னை தேடி வந்த தோழனின் புறம் திரும்பினான்....

தயா : வா டா...

ரித்திக் : என்ன வாடா.... என்னடா நடக்குது இங்க...

தயா : இங்க என்னையும் உன்னையும் தவிற யாரு நடக்க போறா...

ரித்திக் : தயா...

தயா : நான் தான் ... நான் தான்...

ரித்திக் : கடுப்பேத்தாத டா... என்னால இதுக்கு மேலையும் சும்மா இருக்க முடியாது... அந்த அன்னப்பூரனியோட முகத்திறைய சீக்கிரமே கிழிக்கனும்...

தயா : கிழிக்கலாம் கிழிக்கலாம்

ரித்திக் : ஏனோ தானோன்னு பேசாத... உனக்கு அதுல ஈடுபாடு இல்லன்னு எனக்கு தெரியும்....

தயா : ஐ நோ மச்சான்.... ஏன்னா... இப்போ என் ஃபோக்கஸ் எல்லாமே.... அந்த கந்தர்வநாதனோட மகன் " சர்வதேசமரம்" மேல தா இருக்கு.....

தீரா :  இப்டிலாமா பேரு வப்பாங்க....

ரித்திக் : டேய்... அவன் தூர்தேஷ்பரண் டா... சர்வதேசமரம் இல்ல....

தயா : ஏதோ ஒன்னு...

ரித்திக் : உனக்கும் இந்த ஆதித்தனுக்கும் இதே வேலை தான்... என கடுகடுக்க...

தயா : இப்போ ஏன் அவன இழுக்குர நீ...

ரித்திக் : இதுக்கு மட்டும் நல்லா வாரி கட்டிக்கிட்டு வந்துடு...  ஆனா அவனும் பாதி உன்ன மாரி தான்.... தூர்தேஷ அவனும் சர்வதேஸ்னு தா கூப்டுவான்.... நீயும் அப்டிதான்

தயா : அதுக்கு காரணம்.... என ஏதோ கூற வந்தவன் எதனாலையோ இவ்வளவு நேரம் குளிர்ந்திருந்த வதனம் இருகிட திரும்பி நின்றான்....

ரித்திக் : அதையும் சொல்லலாமே டா.... என் தங்கச்சினால தான்னு....

தயா : தேவையற்றத என் கிட்ட பேசாத ரித்திக்....

ரித்திக் : சரி... இரெண்டு நாளைக்கு சேஃபா இரு...

தயா :ஏன்...

ரித்திக் : உலகத்துல கொரானா.... வந்துருவேணான்னு... அங்க இங்கன்னு சுத்திக்கிட்டு கடக்கு.... அதனாலையே ஊரடங்கு உத்தரவுகளும் அதிகமாயிருக்கு.... நீ வீட்ல இருக்காம இங்க வந்துருவ.... யாரு கிட்டையும் சிக்கிக்காத.... அதே மாரி நம்ம எதிரிகள் நெருங்குராங்கன்னு தகவல் வந்தது.... சோ ஜாக்கிரதையா இருக்கனும்.... நீ மருதவேல பாத்துத்த... நா அன்னப்பூரனிய பாப்புக்குறேன்....

தயா : ம்ம்ம்ம் சரி

தயா மற்றும் ரித்திக்கின் நோக்கம் தான் என்ன....???

கந்தர்வநாதனால் ஆதித்திற்கு ஆபத்தேர்ப்படுமா???

பொருத்திருந்து பார்ப்போம்....

நீ... நான்...

ஹாய் இதயங்களே.... எல்லாரும் எப்டி இருக்கீங்க... எல்லாரும் சேஃபா வீட்ல நிம்மதியா இருக்கீங்கன்னு நெனக்கிறேன்... அதே மாரி வீட்ல சேஃபா இருங்க.... ஃபாலோ தி ரூல்ஸ் அன் ரெகுலேஷன்ஸ்... ஸ்டே ஸேஃப்... அன் ஸ்டே ஹப்பி.... சூன் கொரோனா க்கு டாட்டா காமிச்சிடலாம்.... வர்ரி பன்னிக்காதீங்க....

சரி... இப்போ நாம டாப்பிக்குக்கு வருவோம்... எனக்கு தெரிஞ்சு நா யூடி போட்டு ஒரு வாரத்துக்கு மேல ஆகுதுன்னு நெனக்கிறேன்.... ரொம்ப பிசி இதயங்களே.... நேத்தே வேலைய முடிச்சிருப்பேன்... ஆனா கொஞ்சம் மக்கர் பன்னீடுச்சு... (எதுன்னு சொல்ல மாட்டேனே 😜😜) இன்னுமே என் வர்க் முடியல.... நாளைக்கு யூடி குடுக்கலாம்னு நெனச்சேன்..ன்ன் பட் முடியாது போல அதான்.... இப்பவே யூடி குடுத்துர்க்கேன்.... கதை மறந்துருக்காதுன்னு நெனக்கிறேன்.ன்.. சர்ப்ரைஸ் என்னன்னு வேலை முடிஞ்சு ஃபீரியானதும் அடுத்த யூடி போடும் போது கண்டிப்பா சொல்றேன்.... டாட்டா.... குட் நைட்....

DhiraDhi❤

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro