27 நீ... நான்...
உடனே எழுந்த ரித்திக் தயாவை இருக்கி பிடித்து வீட்டை விட்டு வெளியே இழுத்து சென்றான்... இன்னும் கோவம் துளிர் விடாமல் மரத்தை குத்த முயன்றவனை ஒரே இழுப்பில் இழுத்து.... செவுரில் சாய்த்தான்...
ரித்திக் : தயா... தயா... கெட் பக்... ரிலக்ஸ் டா... ரிலக்ஸ்...
தயா : நடந்தத நீ பாத்தல்ல... நீ பாத்தல்ல... அந்த கெழவி (அன்னம்) எவ்ளோ உரிமையோட வருது... அதுக்கென்ன உரிமை இருக்கு....
ரித்திக் : டேய் எந்த விஷயத்துல கோவ படுரதுன்னு தெரியாம... கோவத்த காட்டியே ஆகனும்னு உனக்கு சம்மந்தமே இல்லாத விஷயத்த இழுக்காத டா... என கெஞ்சுவதை போல் கூற...
தயா : வேற எப்டி டா கோவ பட சொல்ற... அவங்கள கொல்லனும் போல கோவம் வருது... என் முன்னாடியே திமிரா நடமாடீட்டு இருக்கு... அந்த ஆதித்தன....
ரித்திக் : கொஞ்சம் பொருமையா இரு தயா... நமக்கான நேரம் இன்னும் வரல... பொருமை வேணும்...
தயா : பத்து வர்ஷத்துக்கு மேல பொருமையா இருந்தாச்சு டா...
ரித்திக் : ரீல் விடாத... உனக்கு உண்மை அஞ்சு வர்ஷத்துக்கு முன்னாடி தான் தெரியும்...
தயா : ஏதோ ஒன்னு.... இரெண்டால மல்ட்டிப்லை பன்னிட்டேன்... விடேன்....
ரித்திக் : நீ விடு டா....
தயா : எனக்கு எது மேலையாவது கோவத்தை காமிச்சே ஆகனும்.. என தலையை பிய்த்து கொண்டவனின் இரு கைகளையும் பிடித்து செவுற்றிலே அணையிட்டு அசையாதவாறு செய்த ரித்திக் அவன் கையை அவனின் பாக்கெட்டுக்குள் விட்டு துளாவி எதையோ எடுத்து அவன் முன் காட்டினான்...
ரித்திக் : இது மேல கோவத்த காட்டு... என அந்த செய்னை தொங்க விட...
தீரா : செய்ன எடுத்தது இவன் தான் பா...
அதை கண்ட தயாவின் மனம் மெல்ல மெல்ல கோமாவிற்கு போனதோ என்னவோ... காட்சிலாவை போல் முரண்டு பிடித்தவன் இப்போது பொட்டி பாம்பாய் அடங்கினான்....
அந்த செய்னை தன் நடுங்கும் விரல்களால் மெல்ல வருடியவன்... அதை பிடிக்க முயலும் முன் சட்டென பிடுங்கினான் ரித்திக்... உடனே துளிர்விட்ட கோவத்தை கண்களில் தேக்கி அவனை முறைத்தான் தயா...
ரித்திக் : நோ மச்சான்... எந்தளவுக்கு இது உன் கோவத்த குறைக்குதோ அந்தளவுக்கு அதிகமா ஏற வைக்கும்.. அதனால நா குடுக்க மாட்டான்...
தயா : மச்சான் மச்சான்... குடு டா... பன்னெண்டு வர்ஷம் களிச்சு பாக்குறேன் டா.... குடு டா... ஒரே ஒரு முறை தொட்டு பாத்துக்குறேன்... அப்ரம் நான் வச்சுக்க மாட்டேன்... உன்ட்டையே குடுத்துர்ரேன்... ப்லீஸ்... ப்லீஸ்... என இவ்வளவு நேரம் ருத்ரதாண்டவமாடி கொண்டிருந்தவன்.. இப்போது ஐந்து வயது குழந்தை சாக்லேட் தர மாட்டேனென கூறும் அம்மாவிடம் கெஞ்சும் பாணிக்கு சென்று விட்டான்...
ரித்திக் : தருவேன்... தருவேன்.. அப்போ நீ அமைதியா இருக்கனும் சரியா... எதையும் உடைக்க கூடாது... கோவப்படக்கூடாது...
தயா : ஓக்கே ஓக்கே... உடைக்க மாட்டேன்... கோவப்பட மாட்டேன்... கத்த மாட்டேன்... யாரையும் திட்ட மாட்டேன்... சண்ட போட மாட்டேன்... அடிக்க மாட்டேன்... சமத்தா இருக்கேன்.. என ரித்திக் கூறாததை எல்லாம் கூறி ஆவலாய் அவனை பார்த்தான்...
ரித்திக்கின் கண்கள் அவனின் குழந்தை தனத்தை கண்டு கண்ணீரால் தேங்கியது... அதை அவன் காணும் முன்... அந்த செய்னை அவனிடமே கொடுத்தான்...
மெல்லிய சரடு போலான செய்னுடன்.... டாலராய் ஒரு விரிசலிட்ட சில்வர் மோதிரம்... அதனுடனே தைய தக்க தையா என ஆட்டமாய் ஆடி கொண்டிருந்த இன்னொறு மெலிந்த மோதிரம் அவனுக்கு காற்றில் மறைவதை போலிருந்தது... அந்த ஒரு மோதிரத்தை வருடியவன்... மற்றுமோர் மோதிரம் இருக்க வேண்டிய இடம் வெற்றிடமாய் இருப்பதை கண்டு மனம் கனக்க கண்களை மூடினான்....
கட்டிடம் எரிந்து பாதி கீழே இடிந்து விழுந்திருந்தது... அதனருகிலிருந்த மரங்கள் யாவும் எரிந்து கொண்டு மிக பயங்கரமாய் காட்சி அளித்தது... பலர் பயந்து ஓடி கொண்டிருந்த நிலையில்.... சட்டென மாடியிலிருந்து யாருடனே ஓடி வந்து கொண்டிருந்த பெண்ணொருவள் தவறி மேல் மாடியிலிருந்து கீழ் விழுந்தாள்... அந்த பெண்ணை பலர் அந்த அவசரத்தில் காக்காமல் ஓட.... தவறிய வேகத்தில் நொடி பொழுதில் அவள் கீழே விழ... அவள் உடலை சுற்றி இரத்த ஆறு பெறுக்கெடுத்தது... அந்நேரம் அவள் இருக்கி மூடியிருந்த கைகள் தளர.... அவள் கையிலிருந்த மோதிரம் ஒன்று எங்கோ உருண்டோட.... தொலைவில் தெரிந்த அப்பிம்பத்தை கண்டவாறு தன் மூச்சை இழுத்து விட்டு கண்களை மூடினாள் அவள்....
கண்களை தாண்டி வழிந்த கண்ணீர் தடத்துடன் இமைகளை பிரித்த தயா... அந்த செய்னை ரித்திக்கின் கைகளில் கொடுத்து விட்டு.... அவனருகில் அமைதியாய் அமர்ந்தான்.... அவன் கண்கள் மூடி அமர்ந்திருந்த இடைவேளையில் அவன் கைகளில் இருந்த காயங்களுக்கு மருந்திட்டு கட்டு போட்டு இரத்த போக்கை நிறுத்தியிருந்தான் ரித்திக்... நண்பனை தன் தோளில் சாய்த்து கொண்ட ரித்திக் கண்கள் மூடி அமர்ந்தான்....
இருவருக்கும் அந்த வேதனையான நினைவுகள் கண் முன் நிழலாட.... அவர்களின் வேதனையை போக்கவே... தன் சகோதரனை பாடாய் படுத்தி அனுப்பிய மதியவன் மலைமகளின் மடி சாய்ந்திட... உற்சாகத்துடன் எழுந்த சூரியன் நண்பர்கழின் சோகத்தை காண பொருக்காது.... " எழுந்து தொலைங்க டா... " என அவ்வீட்டின் கூரையில் கதிரை செழுத்த.... கண்களை கசக்கி கொண்டே எழுந்த ரித்திக் தன் நண்பன் இல்லாததை கண்டு.... அவனும் அங்கிருந்து நகர்ந்து பைக்கை எடுத்து கொண்டு அவன் வீட்டை நோக்கி சென்றான்....
அடுத்த அரைமணி நேரத்தில் அங்கே வந்த வேலையாள்கள் வீட்டை சுத்தம் செய்து வீடு வந்த புது பொருட்களை இருக்க வேண்டிய இடத்தில் அடுக்கி விட்டு தோட்ட வேலையை முடித்து விட்டு மணி பதினோறை தொடும் முன் அங்கிருந்து கிளம்பியிருந்தனர்...
வழக்கமாய் நடப்பது தான்.... தினம் தயா வீட்டை முற்றிலும் சின்னா பின்ன மாக்கி விடுவான்... மறுநாள் காலையில் " எப்டி இப்டி வீடு அலங்கோலமாகுதுன்னே தெரியல " என தினம் புலம்பும் ரித்திக் அனுப்பிய வேலையாள்கள் வேலையை முடித்து விட்டு கிளம்புவர்....
காலங்காத்தாலையே மொட்டை மாடியில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தான் ஆதித்... அவனின் கட்டளைக்கு இணங்கி தூங்கி எழுந்த சில நிமிடங்களிளே குளித்து விட்டு தலையை துவட்டியவாறு மாடிக்கு வந்தான் ஷியாம்...
தன் அண்ணன் சூரிய நமஸ்காரம் செய்கிறானோ என்று எண்ணியவாறே.... எங்கிருந்தோ வந்திருந்த பயிற்சி பொருட்களை கொண்டு வேலையை தொடங்கினான்....
அப்போது இவர்களின் வீட்டை விடுத்து எதிரில் சில வீடுகள் தள்ளி அமைந்திருந்த வீட்டின் மாடியில் கீழிருந்து திடீரென கண்களை மூடியவாறு எழுந்தான் ரித்திக்..... அவனுடனே ஷியாமை போல் கதியே என பயிற்சி செய்ய வந்த விஷ்வாவும் எழ... தோழன்கள் இருவரின் பார்வையும் சந்தித்துகொள்ள.... இருவருக்கும்.... " விடிஞ்ச விடியல்லையே சனிபகவான் கண்ணு முன்னாடி பலே டன்ஸ் ஆடுரானே... " என அபாய மணி ஒலிக்க....
அண்ணன்கள் மீது இருவரின் பார்வையும் அவர்களறியாது பதிந்து விட்ட வர... இருவரும் கண்களை மூடி மூச்சு பயிற்சியில் இருந்தனர்....
ஏனெனில் இவ்வூரின் நெடு நாள் பழக்கம் அது... குழந்தைகள் பள்ளியில் பயிலும் போதே ஆண் பிள்ளைகள் காலாயில் எழுந்ததும் பள்ளிக்கு சிறப்பு பயிற்சிக்கு வருவர்.... அங்கு மூச்சு பயிற்சி... உடற்பயிற்சி யோகாக்கள்... என பலவை பயிற்சி அளிக்கப்படும்... அதை கணம் தவறாமல் பின் பற்றி வருவர் அவ்வூரின் ஆடவர்கள்....
விஷ்வா : என்னடா இங்க... என அவன் சைகையிலே கேட்க...
ஷியாம் : மார்னிங் எக்சசைன்னு அண்ணா வர சொன்னான் டா...
விஷ்வா : எனக்கும் அதே நிலமை தான்...
ஷியாம் : காலங்காத்தாலையே... பிரச்சனை வந்துருமோ...
விஷ்வா : பிரச்சனை வராதுன்னு நெனக்கிறேன்....
ஷியாம் : சரி நீ கன்ட்டின்யூ பன்னு.... நானும் சைலென்ட்டா கன்டின்யூ பன்றேன்...
விஷ்வா : டன்... என கூறி கண்களை மூடி கொண்டான்...
" மல்லிகையே மல்லிகையே மாலையிடும் மண்ணவன் யார் சொல்லு.... " என்று பாடாத குறையாக... மல்லி பூக்கள் மலர வேண்டி உத்ரா வீட்டின் அருகிலே தவம் கிடந்தான் சூரியன்... சூரியனின் அனலினாலோ... மல்லிகையின் மனத்தினாலோ... எதனாலோ தெரியவில்லை.... தன் பொன் இமைகளை மெல்ல திறந்தாள் உத்ரா....
அன்கி மிரு மற்றும் மேகா உறக்கத்தின் பிடியில் இருக்க... அறை வெறுமையாய் இருந்தது.... சோம்பல் முறித்தவாறு எழுந்தவளின் வதனத்தில் பல நாள் பின் மகிழ்ச்சி இல்லையென்றாலும்... ஏதோ கொஞ்சம் நிம்மதி தெரிந்தது....
தன் அன்னையும் தந்தையும் ஏதோ வரவு செலவு பேசுவதையும்... பாட்டி வெத்தலையை நருக்கி கொண்டிருந்ததையும் பார்த்து கொண்டே குளியலறைக்குள் புகுந்த உத்ரா சிறிது நேரத்தில் முகம் கழுவிவிட்டு வந்தாள்...
கார்த்திகா : உத்ரா... மாடிக்கு போய் பூ பரிச்சிட்டு வா... அஞ்சு பேருக்கும் தொடுக்குறேன்... ஒரு மல்லி சரட தியாட்ட குடுத்துடு....
உத்ரா : சரி மா.. என மாடிக்கு ஓடியவள்.... பக்கத்து வீட்டு மாடியில் தன் அண்ணன் ஒருவன் ஆழ்ந்த மூச்சு பயிற்சியில் இருப்பதும்... இன்னொறுவன் கண்களை மூடுவதும் அதை திறந்து பம்முவதுமாய் இருந்ததை கண்டு.... யோசித்தவாறே மல்லி மலர்களை பறித்தாள்....
சூரியனோ " நா பார்க்க வேண்டிய மலர பாத்துட்டேன்ப்பா... " என பெருமூச்சு விட்டவாறு சற்று நிழலை கொடுத்து விட்டு வேறு பக்கம் சோலி பார்த்து சென்றார்....
அண்ணன்கள் இருவரும் மூச்சை இழுத்து விட்டு கண்களை திறப்பதை கண்டு... சிரித்தவாறு செவுரருகில் சென்றாள்...
உத்ரா : குட் மார்னிங் அண்ணாஸ்...
ரித்திக் விஷ்வா : குட் மார்னிங் அம்மு..
உத்ரா : ஹப்பா.... அண்ணன் தம்பி இரெண்டு பேரும் இப்டி மொட்ட மாடில உக்காந்து காலங்காத்தால ஒன்னா பயிற்சி பன்றத பத்து எவ்ளோ வர்ஷமாச்சு... என விரல்களை உயர்த்தி ஆச்சர்யமாய் கூற...
ரித்திக் : ஹ்ம்... என்ன பன்றது எல்லாம் காலத்தின் மாயம்...
உத்ரா : காலத்தின் மாயமா... என்ன அண்ணா சொல்ற...
தீரா : டேய் உங்களுக்கும் காலத்தோட மாயத்துக்கும் சம்மந்தமே இல்ல டா... நட்டு கலண்டவன் மாரி பேசாத...
ரித்திக் : ஆமால்ல.... சாரி குட்டிமா மறந்துட்டேன்... ஒன்னுமில்ல அம்மு சும்மா
உத்ரா : சரி அண்ணா... சித்தியும் பெரியம்மாவும் எங்க காலைல இருந்தே பாக்கல... இந்நேரம் வீட்டுக்கு வந்துர்க்கனுமே...
விஷ்வா : வேலையா வெளிய போய்ர்க்காங்க அம்மு...
உத்ரா : சரி டீ குடிச்சிர்க்க மாட்டீங்க... வாங்க நா போட்ரேன்...
ரித்திக் : ம்ம்ம் சரி வா டா...
விஷ்வா : நீயும் வா உத்ரா...
உத்ரா : நா பூ பறிச்சிட்டு வரேன் நீங்க போங்க...
இருவரும் : ஓக்கே....
அவர்கள் சென்றதும் மீண்டும் கொடியின் புறம் திரும்பியவள்... அதை பறித்து முடிக்கவும்... அவள் காலருகில் ஒரு சிறு மலர் விழவும் சரியாய் இருக்க.... அதை குனிந்து எடுத்தவள் நிமிரவும்...... அந்த வீதியின் முடிவில் மையமாய் அமைந்திருந்த அந்த வீட்டின் மேல் விரைத்து நின்றவனின் பார்வை இவள் மீது விழவும் சரியாய் இருந்தது...
வெண்பனி மலராய் உறைந்து நின்றவளை தன்னையும் மீறி சென்ற கண்களை கொண்டு ஒரு நொடி கண்ட ஆதித்... அவளை சுற்றியும் கண்டவனுக்கு மெல்ல மெல்ல இதழ் இருக தொடங்க.... அடுத்த நொடி விறுவிறுவென கீழே சென்று விட்டான்....
அதை நினைத்து தன்னையே நொந்து கொண்டே கீழிறங்கி சென்றாள் உத்ரா....
மலர்களை கார்த்திகாவிடம் கொடுத்து விட்டு அனைவருக்கும் டீ போட சென்றாள்... ரித்திக்கும் விஷ்வாவும் வீட்டிற்குள் வந்தனர்.... அவர்களின் தாய்மார்களும் வீட்டில் கூடினர்.... அதே நேரம் அன்கி மிரு மேகா எழுந்து வர... ஒரு ஒருவராய் சென்று ரிஃப்ரெஷ்ஷாகி விட்டு வந்தனர்.... ... கடைசியில் தன் முகத்தை துடைத்து கொண்டே வந்த மிரு டவலை காயப்போட கொள்ளைக்கு சென்றாள்....
டவளை காயப்போட போனவள் வெயிலின் தாக்கத்தால் நிற்க முடியாமல் பின்னோக்கி வந்தாள்....
சரியாக அந்நேரம் காலை இடையில் விட்டு அவளை தடுமாற வைத்து அவள் விழும் முன்.... கைகளை பிடித்தான் விஷ்ஷா....
அம்மா என பயத்தில் சிற்றே அலரிய மிரு கண்களை மெல்ல திறக்க.... தன் முன் சிரித்து கொண்டிருந்த விஷ்வாவை கண்டு... சுருசுருவென ஏரிய கோவத்துடன் துள்ளி எழுந்து நின்றாள்... அவன் இன்னும் சிரித்து கொண்டிருக்க.... அவன் மண்டையில் கொட்ட இயலாமல் தினறியவள் அவன் முடியை பிடித்து இழுத்து... ஆட்டு ஆட்டென ஆட்டி மூளையை கலங்கடிக்க வைத்து விட்டு அவன் " விட்டு தொலடி சதிகாரி " என கத்தும் வரை...
அவன் மண்டையை சிலுப்பி கொண்டிருக்க... அதை கண்டு பலுப்பு காட்டி நகைத்த மிரு அவன் துறத்தும் முன் உள்ளே மறைந்து கொண்டாள்....
தீரா : இந்த லவ்பெர்ட்ஸ் தொல்ல தாங்க முடியல.....
நேற்று வேஷ்டி சட்டையில் மிளிர்ந்த மகன் இன்று வெள்ளை சட்டையிலும்... கருப்பு பன்ட்டிலும்.. கை ககுகிககாரத்தை கட்டாயவாறு முருக்கி மீசையுமாய் இறங்கி வந்தவனை கண்ட தேவரான்.....
தேவராயன் : அம்ருதா... இங்க பாரு உன் மகன... எங்கையோ கெளம்புறான்... சாப்ட வச்சு அனுப்பு.... என கூறினார்...
அதை கேட்டதும் சமையலறையிலிருந்து எட்டி பார்த்த தியா... அவனருகில் ஓடி வந்து நெட்டி முறித்தாள்...
தியா : அண்ணா செம்மையா இருக்க.. எவ விழப்போறாளோ...
அவன் மனசாட்சி : ம்க்கும்... பல வர்ஷம் களிச்சு விழுந்தவள எப்டி எழ வைக்கலாம்னு திட்டம் தீட்டிக்கிட்டு இருக்கவன்ட்ட இப்டி சொல்றியே தியா குட்டி... என குரல் கொடுக்க....
அவன் மூளை : என்ன ஒரு ஆச்சர்யம்... நீ இத்தன நாள் களிச்சு குரல் கொடுக்குர...
மனசாட்சி : நல்லவேளை நீ வந்த.... அவன் வரல... எங்க நீ என்ன பேச விட்ட... பத்து வர்ஷமா என் வாய பூட்டி வச்சிட்ட...
மூளை : நீ பேசி என்னத்த கிளிக்க போற...
மனசாட்சி : எல்லாம் தெரிஞ்ச மாரி பேசாத... என்ன நீ பேச விற்றுந்தா.... இன்னைக்கு அவனும் இவ்ளோ கஷ்ட்டப்பட தேவையில்ல... அவனோட... அக்... என ஆரம்பிக்கும் போதே...
ஆதித் : ஷு.. ஒரு பஞ்சாயத்தும் தேவையில்ல போங்க... என மண்டைமில் கொட்டி அமைதி ஆக்கினான்....
தியா : அண்ணா... ஏன் அமைதியா இருக்க... எங்க போற....பதில் சொல்லு...
ஆதித் : ம்ம் அது ஒரு வேலை தியாமா...
தியா : ம்ம் சரி அம்மி கூப்டுது போ...
ஆதித் : அம்மா...
அம்ருதா : நா கூப்ட்டா நீ என்ன கூப்புர்ரியா... வாடா இங்க...
ஆதித் : அட வா மா...
அம்ருதா : என்னடா சொல்லு...
ஆதித் : நா வர டைம் ஆகும்... ரேஷன் அரிசி இன்னைக்கு குடுப்பாங்க... அது சரியா குடுக்கலன்னா எனக்கு உடனே காள்பன்னுங்க.... வயல்ல வேலை பாக்குரவங்களுக்கு இன்னைக்கு சம்பளம் என் ரூம்ல ஒரு ப்லக் டாக்குமென்ட் குள்ள இருக்கு... அத ஷியாம ராசையாட்ட குடுக்க சொல்லிடு... இன்னைக்கு தோட்ட வேலை பாக்குரவங்களுக்கும் சம்பளம் குடுத்துடு... மாடி வேலைய யாரும் பாக்க வேணாம்னு சொல்லிடு... அவங்களுக்கு பண்ண வீட்ல நாளைக்கு ராசையா வேலை குடுப்பாருன்னு சொல்லிடு... என அடுக்கி கொண்டே போக...
அம்ருதா : டேய் டேய் இரு டா... ஏன் டா இப்டி அடுக்கிக்கிட்டே போற....
ஆதித் : வேற யார்ட்ட சொல்ல சொல்ற தியாவும் மறந்துடுவா... ஷியாம் பிஸ்னெஸ் மீட்டிங்ல இருக்கான்... எனக்கு டைம் இல்ல... நா உன்ட்ட பாதி கூட சொல்லல.... மீதியெல்லாம் அப்பாட்ட தாத்தாஸ்ட்ட சொல்லிட்டு போக போறேன்... நீ இதெல்லாம் மட்டும் செஞ்சிடு... என தாத்தாஸை நோக்கி சென்றான்....
" ஊரோட பாதி வேலை பொருப்ப என் தலைல கட்டீட்டு பாதி கூட இல்லன்னுட்டு போறானே " என புலம்பி கொண்டே சமயலறைக்குள் சென்றார் அம்ருதா... தியா சிரித்தவாறே அவரை பின் தொடர்ந்தாள்...
தந்தைக்கும் தாத்தாக்களுக்கும் வேலையை கொடுத்து கொண்டிருந்தான்.... பாட்டிகள் இருவரும் ஆதித் வேலை கூற கூற... இரு தாத்தாக்களும் மண்டையை மண்டையை ஆட்டும் காட்சியை ஆச்சர்யமாக பார்த்து கொண்டிருந்தனர்... இது வழமை தான் என்றாலும் எத்துனை முறை பார்த்தாலும் தானாகவே ஆச்சர்யம் வந்து விடும் அவர்களுக்கு....
பிறந்ததிலிருந்தே இப்படி தான்.... ஆதித்தின் சொல்லை ஊரின் ஜமீந்தாருமே தட்ட மாட்டார்... அப்படி இருக்கும் அவனின் பேச்சு.... மற்றவர்களை தன் பேச்சிற்கு தலையாட்ட வைக்கும் தாத்தாக்கள் இருவரும் இவனின் பேச்சிற்கு தானாகவே தலையாட்டுவர்.....
இருவரையும் பார்த்து புன்னகைத்து விட்டு சமையலறைக்குள் நுழைந்த ஆதித் அம்ருதா போட்ட காஃபீயை மடமடவென விழுங்கி விட்டு....
ஆதித் : அம்மா மேகா ராமானுஜம் மாமா வீட்ல இருந்து இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துருவா... எந்த கேள்வியும் கேக்காத... அவங்க எதாவது சொன்னா நீ எதாவது சொல்லி சமாளி.... நா கெளம்புறேன்... என வேக நடையுடன் அங்கிருந்து வெளியேறினான்....
அவனின் புல்லட்டை உரும விட்டவன்.... சீரிப்பாய்ந்தான் ஊரின் எல்லைக்கு.... அதையும் தாண்டி ஒரு குடௌனில் போய் நின்றது அவன் புல்லட்.... அதிரடியாய் போய் நின்றவன்... அந்த குடௌனின் இரும்பு கேட்டை காலால் உதைக்க... இடி போன்ற சத்தத்தை கேட்டு உள்ளிருந்தவர்கள் பதறி எழ....
அவர்களின் பயத்தையும் எண்ணத்தையும் பொய்யாக்காது எள்ளும் கொள்ளும் வெடிக்க உள்ளே வந்தான் ஆதித்... அவனை கண்டு நடுங்கினாலும் கத்தி அருவாளுடன் சண்டையிட அவனை நோக்கி ஓடினர்....
வேகவேகமாய் வந்தவன் எதிரில் வருபவர்கள் நெத்தி அடி குடுத்து எழ இயலாதவாறு செய்ய.... அவன் விடும் பன்ச்சில் சிலர் கதிகலங்கி கீழ் விழுந்தனர்.... நடுவில் பரபரவென இருக்கும் முடியுடன்... முகத்தில் ஒரு வெட்டுடன்.... கழுத்தில் கருப்பு கருப்பாய் கயிறுடன் ரௌடிக்கே உறிதான கருகருவென்ற தாடியுடன் நடுக்கத்தை மறைத்தவாறு நின்றான் ஒருவன்.... அவனின் கைகள் அருகிலிருந்த துப்பாக்கியை எடுக்க லைட்டாய் நகர.... அதற்குள் ஆதித் அவன் முதுகில் மறைத்து வைத்திருந்த பிஸ்டலை எடுத்தவன் நேரே நின்ற அவன் கைகளிளே குறி வைத்து சுட்டான்.....
அலரியவாறே கீழே விழுந்தவனை சராமரியாய் தாக்கியவன்.... அவன் தாக்க வரவும் காலில் சுட்டான்...
ஆதித் : அவ நிழல தொட்டாலே வெட்டிடுவேன்னு எச்சரிச்சும் கேக்காம... அவள கண்காணிக்க வேற செய்ரியா நீ.... என முகத்திலே ஒரு குத்து விட....
மூக்கு உடைந்து பொலபொலவென இரத்தம் வலிந்தது....
ஆதித் : உங்க சாவு என் கைல தான் டா.... அவ பின்னாடி உங்க யாரையாவது பாத்தேன்... அனைக்கு தா உங்களோட கடைசி நாள்.... என கர்ஜித்து விட்டு.... அவனை உதைத்து கீழே தள்ளினான்... அங்கிருந்து வந்த தடயில்லாமல் விறுவிறுவென வெளியேறினான் ஆதித்....
ஆதித் அடித்து சுட்டு போட்டவன் யார்???
ரௌடிகளுக்கும் ஆதித்திற்கும் என்ன சம்மந்தம்??
பொருத்தாருந்து பார்ப்போம்....
நீ... நான்...
இதயங்களே.... விரைவில் ஃப்லஷ்பக்கை திறந்து விடும் நோக்கில் இருக்கிறேன்... பார்ப்போம் என்ன நடக்கிறதென்று....
அப்ரம்... என்ன பாத்தா எப்டிபா இருக்கு உங்களுக்கு.... காலத்தின் மாய மரணம் கதைய ஏன் மாரும் படிக்க மாற்றீங்க... இத டெய்லி இருவது பேராவது படிக்கிறீங்க... அத நாழு பேர் கூட படிக்க மாற்றீங்க.... கதையோட ஓட்டத்துல திகில் கம்மியா இருக்கு தான்... அத சொன்னா நா மாத்திக்குவேனே... ஏன் யரும் சொல்ல கூட மாற்றீங்க.... இப்டி தவிக்க விடாதீங்க பா....
DhiraDhi❤
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro