22 நீ... நான்...
அவர்களை வழி அனுப்பி வைத்து விட்டு கதவை மூடி உள்ளே வந்த உத்ரா... கடகடவென மாடிக்கு ஏறினாள்... ஆதித்தின் அறைக்குள் நுழைந்தவள்... ஏதோ முனகியவாறு இருந்தவனை மெல்ல நெருங்கினாள்.... அவனின் கோவத்தை கண்டு விலக துடிக்கும் மனம்... இப்போது ஏதோ அவனை நெருங்க வலியுறுத்தியது....
தன்னையும் அறியாமல் அவன் கண்ணத்தை பட்டும்படாமல் வருடியவளின் கண்கள் நொடியில் அகல விரிந்தது.... அவன் இதழ்கள் எதையோ விடாமல் முனகிக் கொண்டிருந்தது... அவளின் விரல்களை அவன் நாசியிலிருந்து வெளியேறிய அனல் போன்ற மூச்சு காற்று தீண்டி சென்றது... உடனே சுதாரித்த உத்ரா... அவனின் நெற்றியில் எதையும் சிந்திக்காமல் புறங்கையை வைத்து பார்த்தாள்.... தீ போல் சுட... அவளின் கண்கள் தானாகவே கண்ணீரால் நிறம்பியது... அவனின் கழுத்தில் அங்கங்கு சீராய்ப்புகள் இருந்தது....
இரண்டு நாட்கள் முன்.... ஸ்விம்மிங் பூலில் நாழு மணி நேரத்திற்கும் மேலாக இருந்த தாக்கமும்... இரு நாட்களாய் அவனை அவனே பார்த்து கொள்ளாமல் உண்ணாமல் உறங்காமல் இருந்த உடல் சோர்வும்... இன்று வந்த உடனே பல மணி நேரம் உடல் உஷ்னத்தை அடக்க தண்ணீரினடியில் பல மணி நேரம் நின்ற குளிரும் இணைந்து கடும் காய்ச்சலில் கிடந்தான் ஆதித்....
அவன் என்ன உச்சரிக்கிறான் என்று புரியாமல் தன் செவியை அவனின் இதழ் அருகில் வைத்து கேட்டாள்... அவனையும் அறியாமல் அந்நிலையில் குழந்தையின் மனம் யாரை தேடுமோ... அதே நிலை தான் அவனிற்கும்....ஆதித் மட்டும் என்ன விதிவிலக்கா... " அம்மா அம்மா "என முனகி கொண்டிருந்தவனை காண பொருக்காமல் உடனே அவ்விடத்திலிருந்து எழுந்தாள் உத்ரா... அவளின் கண்கள் இப்போது தாரை தாரையாய் கண்ணீரை சிந்தியது.... திடீரென மீண்டும் கீழே ஓடி வந்தாள்...
தீரா : இவளுக்கு கால் வலி... இத நாம நம்பனும்...
சமையலறையில் நுழைந்த உத்ரா... அடுத்த பத்தே நிமிடத்தில்... ஒரு சட்டியையும்.... கூடவே ஒரு துணியையும் எடுத்து கொண்டு மாடி ஏறினாள் (ஓடினாள் )....
அவனருகில் ஓடி சென்று கீழே அமர்ந்தவள்... துணியை தண்ணீரில் நனைத்து... அவனின் நெற்றி மீது வைத்தாள்... இதையே ஒரு அரை மணி நேரம் தொடர்ந்தவள்... வேறு ஒரு துணியை எடுத்து நனைந்த துணியை அகற்றிவிட்டு அவன் நெற்றியில் வைத்தாள்.... சுடு நீரை எடுத்து கொண்டு மீண்டும் கீழே சென்றவள்... உடனே சமையலில் இறங்கினாள்....
ஒரு படி அரிசி போட்டு தண்ணியில் ஊர வைத்தவள்... கருவேப்பிலை சுக்கு மிளகு போட்டு தாளித்து இரசம் வைத்தாள்.... அடுத்த அரை மணி நேரத்தில் இரசமும்... கஷாயமும் சேர்ந்து தயாராக... முதலில் ஒரு தட்டையில் கொஞ்சமாய் சாதம் வைத்து அதனுடன் இரசத்தை சேர்த்து... ஒரு குவளையில் சுடு நீரை எடுத்து கொண்டே பறபறப்பாய் மாடி ஏறினாள்...
ஆதித்தின் நெற்றியை தொட்டு பாத்தவள்... முன்பிருந்ததற்கு இப்போது கொஞ்சம் பராவாயில்லை என்பதை உணர்ந்து... பெருமூச்சை இழுத்து விட்டாள்... அவளின் இதயம் இப்போதே சீராய் துடிக்க தொடங்கியது... நீர் வீழ்ச்சியையும் தாண்டி ஊற்றெடுத்த அவளின் கண்கள் சற்று அழுகையை பாடு பட்டு நிறுத்தியது.... சாதாரண காய்ச்சலிற்கே துடித்து போகிறவள்.... அவன் இன்னும் சிறிது நாளிளே சந்திக்க போகும் பேராபத்தை காணும் பொழுது என் செய்வாளோ....
அவனை வாகாய் எழ வைத்தவள்... அவன் கண்களை திறக்க இயலாமல் இருக்கும் நிலையை நினைத்து கொஞ்சம் நிம்மதி அடைந்தாள்...
தீரா : கண்ணு தொறந்துருந்தா... கதை முடிஞ்சிருக்குமே...
இன்னும் எதையோ முனுமுனுத்தவனை கண்டு அவளின் மனம் ஊமை கண்ணீர் வடித்தது... பத்து வருடத்திற்கு முன்... தனக்காக மட்டுமாவது புன்னகை பூக்கும் இவ்விதழ்கள் இன்று என்னை கண்டதும் இருகியல்லவா போகிறது... கனிவை மட்டுமே காட்டும் அந்த வசீகர கண்கள் என்னை கண்டாலே கோவத்தையல்லவா பறைசாற்றுகிறது.... என்னை என்றும் மென்மையாய் தாங்கும் அதே கரங்கள் தானே... அழுத்தமாய் பிடித்து தள்ளி விட்டது.... என நினைத்தே கண்ணிர் சிந்தினாள்....
அவனின் இருமலில் வெளிவந்தவள்... தன் சிந்தையை ஒதுக்கி வைத்து விட்டு.... ஆழ்ந்த உறக்கத்திலிருந்தவனுக்கு ஊட்ட தொடங்கினாள்... இரெண்டு நாட்களாய் எதையும் உட்கொள்ளாத அவனின் நா அவளின் கை கொண்டு ஊட்டப்பட்ட அமிர்தத்தை உள் வாங்கியது...
அதை விழுங்கியவனின் கண்மணிகள் அவனையும் மீறி அந்த ஆழ்ந்த உறக்கத்திலிருந்து எழ முயற்சித்து அங்குமிங்கும் சென்றது... அதை உணர்ந்தவள் அவளின் இடது கையை அவனை சுற்றி போட்டவள்... அவன் தலையை தன் தோள் மீது சாய்த்து... வலுது கையால் உணவை ஊட்டி கொண்டே... இடது கையால் அவன் கேசத்தை வருடி விட்டாள்... அந்நிலையில் அவள் மனம் ஏனோ ஆனந்தமானாலும் கண்கள் அவன் படும் வேதனையை கண்டு தானாய் கண்ணீரை சிந்தியது...
அவை அனைத்தையும் நிறுத்தினான் அவளின் ஆதன்.... வெறும் ஒரு வார்த்தையில்.....
அந்த ஆழ்ந்த உறக்கத்திலும்.... அந்த உணவின் சுவையில்.... அவளை உணர்ந்தானோ என்னவோ.... இவ்வளவு நேரம் பெற்ற தாயை தேடிய அவன் மனம் இப்போது அவனவளை உணர்ந்து அவனின் தாயுமாவளை தேடி.... " அக்ஷா " என மென்மையாய் உச்சரித்தது.....
அதை செவி சாய்த்தவளின் எண்ண ஓட்டங்கள் அனைத்தும் தூர வீசி எறியப்பட.... அவனின் "அக்ஷா " என்ற அழைப்பிலே.... உள்ளூர சிலிர்த்தடங்கினாள் பெண்ணவள்.... அவளின் இதழ்கள் கண்ணீரினூடே புன்னகைத்தது...
தன்னை எவ்வளவு வெறுத்தாலும் இன்னும் அவனின் ஆழ்மனதில் தான் புதைந்து கிடக்கிறோம் என்பதை உணர்ந்ததும் காரணமே இல்லாமல் குத்தாட்டம் போட்டு மகிழ்ந்தது பெண்ணவளின் மனம்....
அவன் நெற்றியை வருடியவள்... உணவை முழுதாய் ஊட்டினாள்.... முழுதையும் அவன் எழாமல் உண்டதே அவளுக்கு நிம்மதியாய் இருக்க.... சுடுநீரை ஊதி ஊதி அவனுக்கு புகட்டினாள்.... சற்றே வலுவேறியது அவன் உடலில்.... அவனை மெல்ல கட்டிலிலே சாய வைத்து விட்டு தட்டையையும் குவளையையும் எடுத்து கொண்டு கீழே ஓடினாள்....
மீண்டும் கஷாயத்தை எடுத்து கொண்டு மாடி ஏறினாள்.....
அவனை மீண்டும் தன் தோளில் சாய வைத்து கஷாயத்தை புகட்டினாள்... முதல் முடக்கிலே முகத்தை சுழித்து குடிக்க மாட்டேனென தள்ளி விட்டான்.... இதை முன்பே எதிர் பார்த்தவள்... எடுத்து வந்த இன்னோறு குவளையை கெட்டியாய் பிடித்து கொண்டு.... அவனின் கேசத்தை மெல்ல வருடியவாறே.....
உத்ரா : ஆதன்.... என அழைக்க....
அவ்வழைப்பில் என்ன உணர்ந்தானோ.... கஷாயத்தினில் சுழித்திருந்த அவன் முகம் சீராக.... ம்ம் கொட்டினான்....
உத்ரா : நா தான் உன் அக்ஷா.... என்கையில் அவளையும் மறந்து அவள் கண்கள் கண்ணீர் அணையை திறந்தது....
ஆதித் : ம்ம் என முனக...
உத்ரா : இந்த கஷாயத்த குடிச்சா தான்... உடம்பு சரியாகும்... எனக்காக குடியேன்.... ப்லீஸ்....
அவனிடம் எந்த பதிலும் வரவில்லை... மனதை திடப்படுத்தி கொண்டு கஷாயத்தை அவன் வாயருகில் கொண்டு சென்று புகட்டினாள்.... அமைதியாய் குடித்து முடித்தான்....
உத்ரா : குட் மாமா... என்றவள் அவளையும் மறந்து அவன் நெற்றியில் இதழ் பதித்து படுக்கையிலே படுக்க வைத்தாள்....
தான் என்ன செய்தோம் என்றதை உணர்ந்து அதிர்ச்சியாய் அவள் அவன் புறம் திரும்ப.... அவனோ பல வருடம் களித்து அவனுக்கே தெரியாமல் அவன் இருகிய இதழில் பூத்த நிறைவான உறைந்த புன்னகையுடன் உறக்கத்தில் ஆழ்ந்தான்.....
அவனின் புன்னகை பூத்த முகத்தை கண்ட உத்ரா.... வாய் மூடி அழுதாள்.... அங்கிருந்து உடனே எழுந்தவள் திரும்பி ஓட போக.... அவள் கரம் உடன் வர மறுப்பதை உணர்ந்து சட்டென நின்றாள் .... அவளின் கரம் அவன் வசத்தில்....
அதே கண்ணீர் பொங்கிய கண்களுடன் திரும்பியவள்... தன் கரத்தை அந்த ஆழ்ந்த நித்திரையிலும் இருக்கி பிடித்திருப்பவனை கண்டு உள்ளூர அதிர்ந்தாள்....
உத்ரா : மனசுக்குள்ள இவ்ளோ ஏக்கத்த வச்சிட்டு ஏன் டா என்ன விட்டு விலகி போற.... நா என்ன டா செஞ்சேன்... இந்த ஊரு நம்புறத தான் நீயும் நம்புரியா... நா எப்டி தா நிரூபிப்பேன்.... எனக்கு அதிர்ஷ்டமே இல்லையா... நா ஏன் டா உன்ன பாத்தேன்.... உன் நிம்மதியையும் கெடுத்துட்டேனே.... என கதறி அழ....
" என் அதிர்ஷ்டமும் நிம்மதியும் எப்பவும் நீ தான் அக்ஷா " என்ற
குரலை கேட்டு இவள் அதிர்ந்து நிமிர.... அவனோ இன்னும் அவள் கரத்தினை விடாது... உறக்கத்தில் முனகி கொண்டிருந்தான்....
மேலும் அங்கு இருக்க இயலாத உத்ரா... உடனே வீட்டை விட்டே ஓடினாள்.... அடுத்த நொடியே..... உயிரே தன்னை விட்டு பிரிந்து செல்வதை உணர்ந்த ஆதித்.... " அக்ஷா " என கத்தி கொண்டே எழுந்தான்....
அவனின் பார்வை மங்களாய் இருந்தது... எதையும் அவனால் தெளிவாய் காண இயலவில்லை.... அவன் கண்களில்.... ஏதோ ஒரு பிம்பம்.... ஓடுவது மட்டும் தான் தெரிந்தது.... அதற்கு மேலும் தாங்காதவன்... கட்டிலிலே விழுந்தான்....
வீட்டை விட்டு வெளியேறி ஓடி வந்த உத்ரா... தோட்டத்தில் அமர்ந்து கதறி அழுதாள்.... அவளின் கண்ணிரை துடைக்கவும் அங்கு எவரும் இல்லை.... ஏன் அழுகிறோமென்றே அறியாது கதறி கதறி அழுதவளின் அழுகை நொடியில் தடைப்பட்டது... அவனின் அக்ஷா என்ற அழைப்பில்.... அடுத்த நொடியே மாடி படியில் ஏறி கொண்டிருந்தாள் உத்ரா.....
எத்துனை முறை தான் அவனை நெருங்க கூடாதென பாலாப்போன மனதை அடக்கினாலும்... அவனின் ஓரழைப்பில்... அவள் மனதிற்கும் முன்னே... அங்கு சென்றடைந்து விடுகிறாள் இவள்....
அவனருகில் ஓடி சென்று விழுந்தவள்.... அவன் கண்களை திறக்க இயலாமல்.... பெட்ஷீட்டை பிடித்து இழுப்பது... அருகில் உள்ள பொருளை தள்ளி விடுவது... எழ முயற்சிப்பதென செய்யும் அட்டூழியங்களை கண்டு தலையில் அடித்து.... " இன்னும் மாறவேயில்ல ஆதன் நீ. " என கூறியவாறே.... கீழே அமர்ந்து.... அவன் நெற்றியில் அலைமோதி கொண்டிருந்த கற்றை முடிகளை ஒதுக்கி விட்டு வருடினாள்...
உத்ரா : ஷ்ஷ்ஷ்ஷ்... இங்க தா இருக்கேன்... எங்கையும் போகல... என மெதுவாய் கூற.... அதை செவி வழி கேட்டவன்.... அவளின் கரங்களை இருக்கி பிடித்தவாறு உறக்கத்தில் ஆழ்ந்தான்.....
அவன் முகத்தை கண்டவாறு ஒரு கரத்தால் அவன் கேசத்தை வருடி கொண்டு... அவனருகிலே சாய்ந்தாள் உத்ரா....
இரு இதயங்களும்.... பத்து வருடங்களின் பின்... அவரவர் மனதால் அவர்களையும் மறந்து விரும்பியவர்களின் அருகில்.... என்றுமில்லாத நிம்மதியுடன்.... நித்திரையில் ஆழ்ந்தது....
அப்போது இக்காட்சியை அதிர்ச்சியுடன் அசையாது கண்டதுடன்.... அங்கிருந்து எவரும் அறியாமல் வீட்டை விட்டு வெளியேறியது ஒரு ஜோடி கண்கள்....
தீரா : கண்ண முளிச்சதும்... இந்த ஆதித் என்ன என்னலாம் பன்ன போறானோ... தெரியலையே...
உத்ரா ஆதித்தின் மீதுள்ள அவன் காதலை உணர்வாறா...???
யாரந்த கண்கள்...???
நீ... நான்...
இன்று காலத்தின் மாய மரணம் அத்யாயம் உண்டு....
DhiraDhi❤
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro