21 நீ... நான்...
ரம்பம் போல் அறுத்திடும் மனவலியே...
அர்த்தம் புலப்பட செய்வாயா...
மூளை திறன்தான் வையகத்தை அளவிட்டாலும்...
இரு மனங்களின் இடையே
இருந்திடும் உணர்வறிய தோனாமலிருப்பதற்கு
நீ செய்த மாயம் தான் காரணமா...
அல்ல...
என்னாலே என்னை அறியாமல்
அவன் மனதில் ஏற்பட்ட காயத்தின் வீரியமா....
ஓடோடி வந்த தோழியை கண்ட மிருவும் அன்கியும் முகத்தை திருப்ப... மண்டையை சொரிந்த உத்ரா... காலில் விழாத குறையாக அவள்களிடம் கெஞ்ச கொஞ்ச... எதற்கும் மசியாதவள்கள்... அவளின் " மாங்கா எனக்கு மட்டும் தான் "என கூறியதிலே... சரண்டராகினர்....
அதன் பின் அன்கியும் மிருவும் அவளை பொரட்டி எடுத்து விட்டனர்... அதன் பின்... அங்கிருந்து மூவருமாய் தியாவை காண பெரிய வீட்டிற்கு நடையை தொடங்கினர்...
காலையில் அறையில் நுழைந்த மகன் இன்னும் வெளியேறாததை உணர்ந்து கவலை பட்ட தாய் மனம்... எவ்வளவு நேரம் தான் பொருக்கும்... எது நடந்தாலும் நடக்கட்டுமென.... ஆதித்தின் அறைகதவை தள்ளினார்... அறை தானாய் திறந்து கொண்டது...
பால்கெனியில் நின்று உச்சியிலிருந்த சூரியனை.... " நீ ரொம்ப நேரம் என்ன பாக்குரியா... இல்ல நா உன்ன ரொம்ப நேரம் பாக்குறனான்னு பாத்துடுவோம் " என்பதை தொப்பலாய் நனந்தை உடையுடன் போல் அதை வெரித்து கொண்டிருந்தான்.... எவ்வளவு நேரம் ஷவரின் கீழிருந்தானோ தெரியவில்லை... அப்படியே வந்து வெளியேவும் நின்றிருக்கிறான்....
அவனருகில் சென்ற அம்ருதா அவன் தோளில் கை வைக்க... மெல்ல திரும்பியவன்... காலையில் எப்படி வந்தானோ... அப்படியே தான் இருந்தான்.... அதை கண்டு அதிர்ந்தவர்... அவனின் சிவந்த கண்கள்.... அவனின் கோவத்தையும்... எவரிடமோ சத்தியாகமாக சண்டை போட்டு விட்டு தான் வந்திருக்கிறான் என்பதையும் அடித்து கூறியது....
அம்ருதா : என்ன கண்ணா ஆச்சு... என மெதுவாய் கேட்க...
ஆதித் : ஏன் மா எனக்கு மட்டும் எல்லாம் சோதனையாவே இருக்கு... இதுக்காக தான் நான் பொறந்தேனா... எனக்குன்னு யாருமே எப்பவும் இருக்க மாட்டாங்களா.... என இவன் பிறந்த இந்த 26 வருடத்தில் அவர் கண்டிராத அந்த ஏதோ ஒரு ஏக்கத்தை கண்களில் அவனறியாமல் ஒளிரவிட்டு கேட்டான்... அதை கண்டவரின் தாயுள்ளம் பதறியது....
அம்ருதா : என்ன டா கண்ணா பேசுர... உன் கூட நா எப்பையும் இருப்பேன் டா... தாத்தா பாட்டி... அப்பா ஷியாம் தியான்னு நாங்க எல்லாருமே இருப்போம் டா
ஆதித் : எவ்ளோ நாள்க்கு மா...
அம்ருதா : எப்பவும் இருப்போம் பா... நீ என்ன சோதனைய பாத்துட்டேன்னு இப்டி பேசுற...
ஆதித் : நா என்ன சோதனைய மா பாக்கல... என்றவனின் குரலில் என்றும் இருக்கும் அந்த இருக்கம் இல்லை...
எவ்வளவு பெரிய வித்தகாரனாய் இருந்தாலும் அவன் தாயின் முன் தவறு செய்து மறைத்ததாய் நினைத்து தாயறிந்ததை அறியாத குழந்தை தானே....
அம்ருதா : நீ எவ்ளோவோ கடந்து வந்துட்ட கண்ணா... நடந்தது நினைச்சா ஒன்னுமே ஆகாது... அத விட்டு தள்ளு டா...
ஆதித் : எவ்ளோவோ மனச விட்டு அளிச்சிட்டேன் மா... ஆனா சிலத மறக்கவும் முடியல... மறைக்கவும் முடியல....
அம்ருதா : எத ப்பா சொல்ற...
ஆதித் : நேரம் வரும் போது நானே சொல்றேன் மா... அதுக்கான நேரம் இது இல்ல... நா கண்டுப்பிடிக்க வேண்டியத தெரிஞ்சிட்டு அப்ரமா சொல்றேன்...
அம்ருதா : சரி வா கண்ணா... கொஞ்சம் தூங்கு...
ஆதித் : வேண்டாம்மா.... வேலை இருக்கு...
அம்ருதா : நேத்து நீ செஞ்ச வேலையே ஒரு வாரத்துக்கு போதுமானது கண்ணா... அப்டியே வேலை வந்தாலும்.. பெரிய மாமாவோ இல்ல சின்னமாமாவோ பாத்துப்பாங்க... அவங்களால முடியலன்னா... வெட்டியா இருக்க உன் அப்பாவ அனுப்பி வச்சிர்ரேன்...
இதழோரம் பூத்த புன்னகையுடன் அவரை ஏரிட்டான்...
அம்ருதா : இதான் கண்ணா எனக்கு வேணும்... தூங்கு... என கட்டிலில் படுக்க வைத்து விட்டு அவன் உறங்கும் வரை அவனருகிலே அமர்ந்திருந்தார்... அவன் உறங்கியதும் அங்கிருந்து எழுந்து கீழே சென்றார்... அவர் சென்று விட்டதை அரை உறக்கத்திலே அறிந்து கொண்ட ஆதித்.... கண்களை இருக்கி மூடி உறக்கத்திலிருந்து எழ முயன்றும் அவன் உடல் வலி அதை தடுத்தது....
காலமதனை ஏற்காமல்
சுழன்றிடும் ஆணவனின்
கதறலும் அலரலும்
அவன் மனதோடு
மறைகிறது அவன் தாயின் முன்.....
திடுதிபுவென உள்ளே நுழைந்த தோழிகள்.... தாத்தாக்களை மரியாதையாய் வணக்கமளித்து விட்டு... பாட்டிகளை வம்பிழுத்து விட்டு... அன்னப்பூரனியை அவருக்கே தெரியாமல் பலிப்பு காட்டி விட்டு சமையலறைக்குள் நுழைந்தனர்....
மணக்க மணக்க சமையல் செய்து கொண்டிருந்த அம்ருதாவின் பின் சென்ற உத்ரா... அவரின் கழுத்தில் கை போட்டு " அத்த " என அழைக்க....
உத்ரா : அடடே... உத்ரா மா... வா வா.. எப்போ வந்த... அழகா இருக்கியே... என அணைத்து கொள்ள....
அன்கி : நான்லாம் உங்களுக்கு தெரிய மாட்டனா அத்த...
அம்ருதா : நீ தெரியாமலா... வா வா என அவளையும் இணைத்து கொள்ள...
மிரு : மம்மி அப்போ மீ... என உதட்டை பிதுக்க...
அம்ருதா : நீ கேக்கனுமா வா செல்லம்... என அணைத்து... அழகா இருக்கீங்க மூணு பேரும் என நெட்டி முரித்து நெற்றியில் முத்தமிட்டார்....
உத்ரா : நா போய் தியாவ பாக்குறேன்... என கூறியவள்... நைசாய் அங்கிருந்து நழுவி ஓடினாள்... அவளை கவனிக்காத மற்ற இருவரும் அம்ருதாவுடன் அரட்டை அடித்து சிரித்தவாறு இருந்தனர்...
முதலில் ஹாலிற்குள் நுழைந்த உத்ரா பெரியவர்களுக்கு தெரியாமேல் அங்குமிங்கும் ஓடி ஓடி எதையோ தேடினாள்... அவள் தேடியது அங்கு எங்குமே இல்லை...
தீரா : எத தேடுரா இவ... வீட்டுக்குள்ள சமையலறைய தவிற வேற எங்கையும் மாங்கா இருக்காதே... சரி அவள்ட்டையே கேப்போம்... அடியே உத்ரா...
உத்ரா : என்னடி...
தீரா : நானும் பாக்குறேன்... இங்க வரும் போதெல்லாம் என்னாத்த கண்ண உருட்டி உருட்டி தேடுர... இன்னைக்கு பூந்து விளையாடி தேடிக்கிட்டு இருக்க....
உத்ரா : எல்லாம் உன் சதியால தான்...
தீரா : ங... நா என்ன செஞ்சேன்...
உத்ரா : நீ பாட்டுக்கு என் மாமாவ வெளியூர்லையே வேலை பாக்க வச்சிட்ட... பத்து வர்ஷயா திரும்ப அவன பாக்காததால அவன் முகம் சுத்தமா எனக்கு மறந்து போச்சு...
தீரா : ஆமா நீ பாத்த... ஏதோ நா அவன ஊருக்கே வராதன்னு சொன்ன மாரி... அந்த லூசு பயல நா எத்தன வர்ஷமா உசுர வாங்கி கிட்டு இருக்கேன்... என் மேல இரக்கம் வந்து இப்போ தான் வந்தான்....
உத்ரா : என்னமோ போ
தீரா : சரி நீ எத தேடுரன்னு சொல்லேன்...
உத்ரா : என் மாமாவோட ஃபோட்டோவ தான்... நானும் பத்து வர்ஷமா இந்த வீட்டுக்குள்ள வரும் போதெல்லாம் அலசி பாத்துட்டேன்... அவனோட ஒரு ஃபோட்டோ கூட கிடைக்கல.. சும்மா போட்டுவாங்க பாத்தா.... "என் பேரன் மேல கண்ணு பற்றக்கூடாதுன்னு போட்டோ எல்லாத்தைதும் எடுத்துட்டேன் " னு டயலாக் விடுது பாட்டி... அந்த பெரியஊட்டம்மா பத்தாததுக்கு என்ன வீட்டுக்குள்ளையே சரியா வாடாது... இன்னைக்கு கிடச்ச சான்ஸ விடமாட்டேன்... அவன் போட்டோவ கண்டுப்புடிச்சி அவன பாக்காம விட மாட்டேன்...
தீரா : கிருக்கு பயபுள்ள.... மே மாடில இரெண்டாவது ரூம தொறந்தா அவன நேர்லையே பாக்க போற... இதுக்கு அவன் ஃபோட்டோவ ஊர் ஊரா தேடிக்கிட்டு இருக்கியே...
உத்ரா : என்ன சொன்ன...
தீரா : அச்சச்சோ... உலரீட்டனா... மே மாடில....
உத்ரா : மேமாடில தான் அவன் ரூமிருக்கு... அதுல நிச்சயமா அவன் போட்டோ இருக்கும்.... என மாடியை நோக்கி ஓடினாள்....
ஓடோடி சென்ற உத்ரா எதற்கும் முதல் தளத்திலும் பார்த்து விடுவோமென அங்கும் அலசி ஆராய்ந்தாள்... அங்கும் அவனின் துண்டு சீட்டளவு படம் கூட கிடைக்கவில்லை...
இரண்டாவது மாடிக்கு ஓடினாள் அங்கு நான்கறைக்கு மேலாக இருக்கு... சலிப்பு தட்டாமல் ஒவ்வொரு அறையிலும் சென்று தேடினாள்.... அதன் பின் அங்கும் ஒன்றும் கிடைக்காமல் அனைத்து படத்தையும் மறைத்து வைத்த மரகதம் பாட்டியை அர்ச்சித்து கொண்டே நேரே மேமாடியை அடைந்தாள்... அங்கு இருந்தது வெறும் இரண்டு அறைகள் தான்....
அதில் முதலாமதை திறக்க முயன்று அது பூட்டப்பட்டிருப்பதை கண்டு முகத்தை சுழித்தாள்... அவளறிவாள் அது தான் அவள் ஆதனின் அறை என்று... அது பத்து வருடம் முன்பு அவனால் தான் பூட்டப்பட்டது... அவன் கர்ஜனையை மீறி இதுவரை அக்கதவை ஜமீந்தாரும் தொட்டதில்லை... அதில் தட்டி கொண்டே சாய்ந்தவள்... எதையோ உன்னிப்பாய் கவனித்தாள்... அடுத்த நொடி ஏதோ நினைவு வந்தவளாய் அடுத்த அறை கதவை பட்டென திறந்தாள்....
அவள் முன்... ஆதித்தனின் அதே பருவ வயது புகைப்படம்... அதை கண்டவளின் மான்விழிகள் இரண்டும் அவளை மறந்து கண்ணீரை சுரந்தது... அதனருகில் உடனே ஓடியவள்... அதிலிருந்த அவனின் முகத்தை தன் வெண்டை விரல்களால் மெல்ல வருடினாள்... அவர்களின் நினைவுகளனைத்தும் கண் முன் காட்சியாய் ஓடியது... அவை அனைத்திலும் ஆதித்தின் வசீகரமான வதனம் தெள்ளத்தெளிவாய் தெரிந்தது...
அதை கண்டு ஆனந்தத்தில் நேற்றைய நிகழ்வையும் நினைவு கூர்ந்தாள்... அவளின் ஆதன்... அவளை அறைந்தது அவளை அணைத்தது... தள்ளி விட்டு சென்றது... என அனைத்தையும் நினைத்து கண்ணீருடன் சிரித்தாள்.... ஒரு நொடி அவன் தன் மேல் கொண்ட கோபத்தை நினைத்து வருந்தினாள்.. ஆனால் ஒரு நொடி தான் அடுத்த நொடியே... தன் இருமலினால் அதை கலைத்தான் ஆதித்....
அதில் சட்டென நிலையடைந்தவள் திரும்ப.... அவளின் ஆதனின் வதனம் மிக அருகில்... அவனை கண்டவளுள் பல உணர்வுகள் வந்து சென்றது... அப்போது திடீரென அன்கியின் அழைப்பை கேட்டு... தன் கண்ணீரை சரசரவென துடைத்து விட்டு கதவை மெதுவாய் மூடி வெளியே சென்றாள்.... கீழே அம்ருதா மிரு அன்கி மரகதம் பாட்டி மற்றும் பிருந்தா பாட்டியும் மேலே அன்னாந்து பார்த்தவாறு இருந்தனர்....
உத்ரா : என்ன அத்த... எங்க கெளம்பீட்டீங்க...
அம்ருதா : வந்து இரெண்டு நாள்க்கு மேல ஆச்சுல்ல உத்ரா... அதான் அண்ணனுங்க வீட்டுக்கு போக போறோம்... அப்டியே சந்தைக்கும் போகனும்... நீயும் வா...
உத்ரா : நம்ம வீட்டுக்கு தான...
பிருந்தா பாட்டி : ஆமா டா... நீயும் வா...
ஏதோ யோசித்தவள்....
உத்ரா :எனக்கு கால் வலியா இருக்கு பாட்டி... நீங்க கெளம்புங்க... நான் தியா வந்ததும் வரேன்...
மரகதம் பாட்டி : வீட்ல எப்டி டா தனியா இருப்ப... அன்னம் ரேகா மேகான்னு யாருமே இல்லையே...
அன்கி : ஏன் அவங்கலாம் எங்க பாட்டி...
பிருந்தா பாட்டி : ஊர் சுத்தி பாக்க போய்ர்க்காங்க... பெரிய தாத்தா சின்ன தாத்தா இரெண்டு பேரும் மில்லு வர போய்ர்க்காங்க.... மாமாவும் வேலையா போய்ர்க்கான்....
உத்ரா : சரி நீங்க போங்க... நா இங்கையே இருக்கேன்....
மரகதம் பாட்டி : சரி டா பாத்து இரு....
நீ... நான்...
DhiraDhi❤
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro